Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 30.01.23

 

30-01-2023  காலைமுரளி  ஓம்சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



சாராம்சம்:

இனிய குழந்தைகளே, நீங்கள் கடவுளின் குழந்தைகள், இது உங்களுடைய பெறுமதிமிக்க வாழ்வாகும். உங்களது இறை குலம் அதிமேன்மையானது. கடவுளே உங்களைத் தத்தெடுத்துள்ளார் என்ற போதையைப் பேணுங்கள்.

கேள்வி:

உங்கள் சரீர உணர்வைத் துண்டிப்பதற்கு, நீங்கள் எதனைப் பயிற்சி செய்வது அவசியம்?

பதில்:

1. நடந்தும் உலாவியும், திரியும்பொழுதெல்லாம், நீங்கள் உங்களுடைய தற்போதைய சரீரத்தில் ஒரு குறுகிய காலத்திற்குப் பெயரளவில் மாத்திரமே இருக்கின்றீர்கள் என்ற விழிப்புணர்வில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். தந்தை ஒரு குறுகிய காலத்திற்கு ஒரு சரீரத்திற்குள் பிரவேசித்திருப்பதைப் போல், ஆத்மாக்களான நீங்களும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம்; பாரதத்தைச் சுவர்க்கமாக்குவதற்கு, இந்தச் சரீரங்களை ஏற்றிருக்கின்றீர்கள். தந்தையையும், ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள், அப்பொழுது உங்கள் சரீர உணர்வு துண்டிக்கப்படும். இதுவே ஒரு விநாடியில் ஜீவன்முக்தி அடைதல் என அழைக்கப்படுகின்றது. 2. அமிர்த வேளையில் விழித்தெழுந்து, தந்தையுடன் இனிமையானதோர் உரையாடலை மேற்கொண்டால், உங்கள் சரீர உணர்வு முடிவடையும்.

பாடல்:  ஓம் நமசிவாய.

ஓம் சாந்தி. கடவுள் ஒரேயொருவரே, அத்துடன் அவர் தந்தையும் ஆவார். ஓர் ஆத்மாவின் வடிவம் பெரிய, நீள்கோள வடிவமான (இலிங்கம்) ஒளியல்ல என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஓர் ஆத்மா சின்னஞ்சிறிய புள்ளியாவார்; ஓர் ஆத்மா ஒரு நட்சத்திரத்தைப் போன்று நெற்றியின் நடுவில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றார். ஆலயங்களில் காட்டியிருப்பதைப் போன்று, ஆத்மா பெரிய நீள்கோள வடிவான ஒளியல்ல. இல்லை. ஆத்மா எவ்வாறோ, பரமாத்மாவான தந்தையும் அவ்வாறானவரே. ஓர் ஆத்மாவின் வடிவம் மனிதர்களுடையதைப் போன்றதல்ல. ஆத்மா மனித சரீரத்தின் ஆதாரத்தைப் பெறுகின்றார்; ஆத்மாவே அனைத்தையும் செய்கின்றார். ஒவ்வோர் ஆத்மாவிலும் சம்ஸ்காரங்கள் உள்ளன. ஓர் ஆத்மா ஒரு நட்சத்திரம் ஆவார். ஓர் ஆத்மா தனது நல்ல, தீய சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப பிறப்பெடுக்கின்றார். ஆகவே, நீங்கள் இவ்விடயங்களை மிகவும் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் ஆலயங்களில் ஓர் இலிங்கத்தை வைக்கின்றார்கள். எனவே, அவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்கே, நாங்களும் ஒரு சிவலிங்கத்தைக் காட்டுகின்றோம். அவர் சிவன் என்றழைக்கப்படுகின்றார். பெயரும், வடிவமும் இல்லாமல் எதுவுமே இருக்க மாட்டாது. அனைத்திற்கும் நிச்சயமாக ஏதோவொரு வடிவம் உள்ளது. தந்தை பரந்தாமவாசியாவார். பரமாத்மாவான தந்தை கூறுகின்றார்: ஓர் ஆத்மா ஒரு சரீரத்தில் பிரவேசிப்பதைப் போன்றே, நரகத்தைச் சுவர்க்கம் ஆக்குவதற்கு, நானும் ஒரு சரீரத்திற்குள் பிரவேசிக்க வேண்டும். தந்தையின் புகழ் தனித்துவமானது. உங்கள் பாகங்களை நடிப்பதற்காகவே நீங்கள் இங்கே வந்திருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இது ஓர் அநாதியான, அழிவற்ற, எல்லையற்ற நாடகம். அது என்றுமே முடிவடைவதில்லை; அது தொடர்ந்தும் சுழல்கின்றது. ஒரேயொரு படைப்பவரும், ஒரேயொரு படைப்புமே உள்ளன. இது எல்லையற்ற உலகச் சக்கரமாகும். நான்கு யுகங்கள் உள்ளன. மற்றைய யுகமானது தந்தை வந்து, தூய்மையற்ற உலகைத் தூய உலகமாக்குகின்ற சக்கரங்களின் சங்கமம் ஆகும். இச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. ஆத்மாக்கள் அனைவருமே பரந்தாம வாசிகள் என்பதையும், உங்கள் பாகங்களை நடிப்பதற்கே இந்தக் கர்மஷேத்திரத்திற்கு வந்தீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இந்த எல்லையற்ற நாடகம் மீண்டும் சுழல வேண்டும். தந்தையே எல்லையற்றதன் அதிபதி. அந்தத் தந்தைக்கு எல்லையற்ற புகழ் உள்ளது. இப் புகழ் வேறு எவருக்கும் உரியதாக இருக்க முடியாது. அவரே மனித உலக விருட்சத்தின் விதையும் ஆவார். அவரே அனைவரதும் தந்தை ஆவார். தந்தை கூறுகின்றார்: நான் இராவணனின் அந்நிய உலகிற்குள் பிரவேசிக்கின்றேன். ஒருபுறம், அசுர குணம் கொண்ட சமுதாயமும், மறுபுறம், தெய்வீகக் குணங்களையுடைய சமுதாயமும் உள்ளன. இது கம்சனின் (அசுரனின்) பூமி என்று அழைக்கப்படுகின்றது. கம்சன் அசுரன் என்றும், கிருஷ்ணர் தேவர் என்றும் அழைக்கப்படுகின்றார்கள். உங்களைத் தேவர்கள் ஆக்கி, திரும்பவும் அழைத்துச் செல்லவே தந்தை இப்பொழுது வந்துள்ளார். இதனைச் செய்வதற்கான சக்தி வேறு எவரிடமும் இல்லை. தந்தை இங்கமர்ந்திருந்து, உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுத்து, தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதற்கு உங்களைத் தூண்டுகின்றார். இது தந்தையின் கடமையாகும். தந்தை கூறுகின்றார்: அனைவரும் தமோபிரதானாகும்பொழுது, என்னை மறந்து விடுகின்றார்கள். அவர்கள் என்னை மறப்பது மட்டுமல்ல, என்னைக் கற்களிலும் கூழாங்கற்களிலும் இடுகின்றார்கள். அவர்கள் இந்தளவிற்கு என்னை அவதூறு செய்யும்பொழுதே, நான் வருகின்றேன். நான் அவதூறு செய்யப்படுமளவிற்கு வேறு எவரும் அவதூறு செய்யப்படுவதில்லை. இதனாலேயே நான் உங்களுக்கு விடுதலையளிப்பவராக வருகின்றேன். நான் உங்கள் அனைவரையும் நுளம்புக் கூட்டத்தைப் போன்று மீண்டும் அழைத்துச் செல்வேன். வேறு எவராலும் கூற முடியாது: உங்கள் மனதைப் பரமாத்மா, பரமதந்தையான என் மீது செலுத்தினால் (மன்மனாபவ), உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். கிருஷ்ணரால் இதனைக் கூற முடியாது. தந்தையின் புகழைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவரே சந்தோஷக் கடலான, ஞானக் கடல். அதன்பின்னர் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் இரண்டாம் இலக்கத்தினர் ஆவார்கள். பிரம்மாவினூடாக ஸ்தாபனையை மேற்கொள்பவர் யார்? ஸ்ரீ கிருஷ்ணரா? முதலில், அவருக்குப் பிராமணர்கள் தேவை என்பதால், தான் பிரம்மாவினூடாக வாய்வழித் தோன்றல்களான, பிராமணர்களை உருவாக்குவதாக பரமாத்மாவான பரமதந்தை, இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். அந்தப் பிராமணர்கள் பாவத்தினூடாகப் பிறப்பெடுக்கின்ற படைப்பு ஆவர். சங்கம யுகத்தில் நீங்கள் பிரம்மாவின் குழந்தைகள். தந்தை வந்து, உங்களைச் சூத்திரர்களிலிருந்து பிராமணர்களாக மாற்றுகின்றார். இந்நேரத்தில், நீங்கள் இறை குலத்திற்கு உரியவர்கள். கடவுள் அசரீரியானவர், ஆனால், பிரம்மாவோ சரீரதாரியாவார். முதலில், தந்தை பிராமணர்களை உருவாக்குகின்றார், அதன்பின்னர் தேவர்களையும், பின்னர் சத்திரியர்களையும் உருவாக்குகின்றார். இச்சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. ஏனைய சமயங்கள் பின்னர் தோன்றுகின்றன. பாரதமே பிரதான இடமாகும். இந்தப் பாரதமே தந்தை வந்து, சுவர்க்கத்தை உருவாக்குகின்ற, அழிவற்ற தேசமாகும், அவரே தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். அவர் எவ்வாறு சர்வவியாபியாக இருக்க முடியும்? அவர் உங்கள் தந்தை. பிராமணர்களாகிய உங்களைத் தவிர உலகில் வேறு எவரும் முக்காலமும் அறிந்தவர்களாக இருக்க முடியாது. நீங்கள் பரமாத்மாவான பரமதந்தையுடன் பரந்தாமத்தில் வசிக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அதன்பின்னர் இந்தக் கர்ம சேத்திரத்திற்கு வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வருகின்றீர்கள், உங்கள் 84 பிறவிகளை நிறைவுசெய்த பின்னர், நீங்கள் அங்கே திரும்பிச் செல்கின்றீர்கள். சக்கரம் தொடர்ந்தும் சுழலும்பொழுது, எப்படி நீங்கள் வெவ்வேறு குலங்களினுள் செல்கின்றீர்கள் என்பதையும், எத்தனை பிறவிகளை எடுக்கின்றீர்கள் என்பதையும் தந்தை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இப்பொழுது கடவுளின் சமுதாயத்திற்கு உரியவர்கள். இது உங்கள் பெறுமதிமிக்க வாழ்வாகும். நீங்கள் இப்பொழுது கடவுளின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். தந்தை வந்து, பிரம்மாவினூடாக உங்களைத் தத்தெடுக்கின்றார். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர் என்பதால், அவரே வந்து, உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். முழு உலகிலும் அமைதியை ஸ்தாபிப்பது தந்தை ஒருவரின் பணி மாத்திரமே. தந்தை கூறுகின்றார்: இது எனது பாகம். மீண்டும் ஒருமுறை நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்க வந்துள்ளேன், அதன்மூலம் நீங்கள் என்றென்றும் ஆரோக்கியமானவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் தேவர்கள் ஆகுகின்றீர்கள், அதன்பின்னர் அனைத்தும் மீண்டும் இடம்பெறுகின்றது. இந்த மரக்கன்று நாட்டப்பட்டுள்ளது. தந்;தையே பூந்தோட்டத்தின் அதிபதி, அவரே இவரினூடாக மரக்கன்;றை நாட்டுகின்றார். தந்தை நேரடியாக உங்களுடன் அமர்ந்திருந்து, கூறுகின்றார்: எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட எனது குழந்தைகளே, என்னிடமிருந்து நீண்டகாலம் பிரிந்திருந்த எனது குழந்தைகளே, நான் உங்களை எவ்வாறு சுவர்க்கத்திற்கு அனுப்பினேன் என்பதையும், நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்தீர்கள் என்பதையும் இப்பொழுது நினைவுகூருகின்றீர்களா? இப்பொழுது நீங்கள் என்னிடம் வந்திருக்கின்றீர்கள். ஆகவே, இப்பொழுது உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்கள் தந்தையான, என்னை நினைவுசெய்யுங்கள். நீங்கள் நிச்சயமாக வீடு திரும்ப வேண்டும். நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நான் உங்களை நிச்சயமாகத் திரும்பவும் அழைத்துச் செல்வேன். முதலில் ஆதி சனாதன தேவதேவியர் தர்மம் உள்ளது, அதன்பின்னர் அசுர இராச்சியமும் உள்ளது. தேவ இராச்சியம் முடிவடைந்தபொழுது, தூய்மையும் அற்றுப் போய் விட்டது. ஆகவே, நீங்கள் ஒற்றைக் கிரீடம் சூடியவர்கள் ஆகினீர்கள். இப்பொழுது இது மக்களாட்சி ஆகும். தேவர்களின் இராச்சியம் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது. இப்பொழுது இந்த யாகத்திலிருந்து விநாசச் சுவாலை ஏற்றப்படுகின்றது. நீங்கள் தூய்மையற்ற ஓர் உலகை ஆட்சிசெய்ய மாட்டீர்கள். இப்பொழுது இது சங்கம யுகமாகும். சத்திய யுகத்தில் இவ்வாறு நீங்கள் கூற மாட்டீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முயற்சி செய்கின்றீர்கள். உங்களைத் தூண்டுபவர் யார்? உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுப்பவர் ஆவார். ஒரேயொரு தந்தையே அதி சக்திவாய்ந்தவரும், மேன்மையானவரும் ஆவார். அவர் பிரம்மாவினூடாக ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். தந்தை கூறுகின்றார்: நானே பாரதத்தின் அதிகீழ்ப்படிவான சேவகர். நான் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றேன். அங்கே, அரசர்கள், பிரஜைகள் ஆகிய அனைவருமே சந்தோஷமாக உள்ளார்கள். அங்கே இயற்கை அழகு உள்ளது. இலக்ஷ்மியும், நாராயணனும் எவ்வளவு அழகாக உள்ளார்கள் என்று பாருங்கள்! தந்தையான சுவர்க்கக் கடவுளே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர். கடவுள் ஸ்ரீ கிருஷ்ணராலேயே கீதை பேசப்பட்டது என்று முழு உலகினரும் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும், ‘மன்மனாபவ, சதா என்னை மாத்திரமே நினைவுசெய்தால் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்என்று ஸ்ரீ கிருஷ்ணரால் கூற முடியாது. வேறு வழிமுறையேதும் இல்லை. கங்கை நீர் தூய்மையாக்குபவரல்ல. ‘என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள்என்று கங்கையினால் கூற முடியாது. ஒரேயொரு தந்தையே இங்கமர்ந்திருந்து, இவ்வாறு கூறுகின்றார். தந்தை ஆத்மாக்களுடன் உரையாடுகின்றார். தந்தை மாத்திரமே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். அவருக்கு ஆலயங்கள் உள்ளன. ஞாபகார்த்தங்கள் அனைத்துமே துவாபர யுகத்திலிருந்தே கட்டப்பட்டுள்ளன. சோமநாதர் ஆலயமும் உள்ளது, ஆனால் அவர் இங்கே என்ன செய்தார் என்பதையோ அல்லது அவர் எப்பொழுது இங்கே வந்தார் என்பதையோ எவரும் அறியார். அவர்கள் சிவனையும், சங்கரரையும் ஒன்றாக்கி விட்டார்கள். பரந்தாம வாசியான சிவனிற்கும், சூட்சும உலகவாசியான சங்கரரிற்கும் இடையில் அதிகளவு வேறுபாடுள்ளது. அவர்கள் எதனையும் புரிந்துகொள்;வதில்லை. தந்தை கூறுகின்றார்: மக்கள் எத்தனை சமயநூல்களையும், வேதங்களையும் கற்றாலும் அல்லது அவர்கள் எத்தனை கிரிகைகள், தபஸ்யா போன்றவற்றைச் செய்தாலும் அவர்களில் எவராலும் என்னைச் சந்திக்க முடியாது. பக்தியில் அவர்களது அன்பான பக்தி உணர்வுகளின்; (பாவனா) பலனை அனைவருக்கும் நான் கொடுத்தபொழுதிலும்;, அவர்கள் கடவுளை, பிரம்மத்தின் முடிவற்ற ஒளியென்றே கருதுகின்றார்கள். அவர்களுக்குப் பிரம்மத்தின் காட்சி கிடைத்தாலும் கூட அதனால் அவர்கள் எதனையும் அடையப் போவதில்லை. நான் சிலருக்கு அனுமனின் காட்சியையும், சிலருக்குக் கணேசர் போன்றவர்களின் காட்சியையும் அருளி, அவர்களது தற்காலிக ஆசைகளை நிறைவேற்றுகின்றேன். அவர்கள் குறுகிய காலத்திற்குச் சந்தோஷம் அடைகின்றார்கள், எனினும் அனைவருமே இன்னமும் தமோபிரதானாக வேண்டும். அவர்கள் கங்கைக்குச் சென்று, நாள் முழுவதும் அமர்ந்திருந்தாலும், மேலும் தமோபிரதானாகவே வேண்டும். தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, தூய்மையானவர்கள் ஆகினால், நீங்கள் 21 பிறவிகளுக்குத் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். அதிகளவு பேறுகள் பெறப்படுகின்ற, வேறெந்தச் சற்சங்கமும் இல்லை. தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கவே வருகின்றார். ஆகவே, நீங்கள் அவரது ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் கற்பதில் கவனம் செலுத்த வேண்டும். தந்தை உங்களுக்கு அதிமேன்மையான வழிகாட்டல்களைக் கொடுப்பதுடன், அவரின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகின்றீர்கள். நீங்கள் நாடகத்தின் இரகசியங்களை மிகவும் தெளிவாகப் புரிந்துகொண்டு, முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் முயற்சி செய்து, தகுதியானவர்களாக வேண்டும். நீங்கள் தந்தையுடன் இணைந்து சுவர்க்கத்தை ஸ்தாபிக்கவே இங்கு வந்திருக்கின்றீர்கள் என்ற போதை குழந்தைகளாகிய உங்களுக்கு இருக்க வேண்டும். நீங்கள் அவ்விடத்து வாசிகள். நீங்கள் இப்போதைய சரீரங்களில் குறுகிய காலத்திற்கு பெயரளவிலேயே இருக்கின்றீர்கள். பாபாவும் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே இங்கே வந்துள்ளார். இந்தச் சரீரங்களின் உணர்வு துண்டிக்கப்பட வேண்டும். தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். இதுவே ஒரு விநாடியில் ஜீவன்முக்தி என்று அறியப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: நான் அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்லவே வந்துள்ளேன். இப்பொழுது உங்களை ஆத்மாக்கள் என்று கருதி, அதிகாலையில் விழித்தெழுந்து, பாபாவை நினைவுசெய்யுங்கள். அவருடன் பேசுங்கள். உங்கள் 84 பிறவிகளும் இப்பொழுது முடிவடைகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். நாங்கள் இப்பொழுது கடவுளின் குழந்தைகள் ஆகியுள்ளோம், பின்னர் தேவர்களின் குழந்தைகள் ஆகுவோம், அதன்பின்னர் சத்திரியர்களின் குழந்தைகள் ஆகுவோம். பாபா எங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார். அமர்ந்திருந்து, தந்தையைப் புகழுங்கள்: பாபா, நீங்கள் அற்புதங்கள் செய்துள்ளீர்கள். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, எங்களுக்குக் கற்பிக்கின்றீர்கள். பாபா, நீங்கள் எங்களுக்குக் கொடுக்கின்ற இந்த ஞானம் மிகவும் அற்புதமானது! சுவர்க்கம் மிகவும் அற்புதமானது! அந்த அற்புதங்கள் பௌதீகமானவை, ஆனால் இந்த அற்புதமோ ஆன்மீகத் தந்தையால் ஸ்தாபிக்கப்படுகின்றது. தந்தை ஸ்ரீ கிருஷ்ண தாமத்தை ஸ்தாபிக்கவே வந்துள்ளார். யாரிடமிருந்து இலக்ஷ்மியும், நாராயணனும் தமது வெகுமதியைப் பெறுகின்றார்கள்? தந்தையிடமிருந்தே ஆகும். உலகத் தாயுடனும், உலகத் தந்தையுடனும் குழந்தைகளும் இருக்க வேண்டும்; அவர்கள் பிராமணர்கள். உலகத் தாய் (ஜெகதாம்பாள்) ஒரு பிராமணர் ஆவார். அவர் (ஜெகதாம்பா) காமதேனு (அனைவரதும் ஆசைகளை நிறைவேற்றுகின்ற பசு) ஆவார். அவர் அனைவரதும் ஆசைகளை நிறைவேற்றுகின்றார். இவர் ஜெகதாம்பாள், பின்பு அவர் சுவர்க்கத்தின் சக்கரவர்த்தினி ஆகுகின்றார். இது அத்தகைய அற்புதமான இரகசியம்! தந்தை உங்கள் ஸ்திதியை உறுதியாக்குவதற்கு, உங்களுக்குப் பல்வேறு வழிமுறைகளைக் கொடுக்கின்றார். இரவில் விழித்திருந்து, பாபாவை நினைவுசெய்தால், உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். நீங்கள் முழுமையாக முயற்சி செய்தால், உங்களால் நினைவில் நிலைத்திருக்க முடியும். நீங்கள் திறமைச்சித்தியைப் பெற்ற பின்னரே வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். எட்டுப் பேர் மட்டுமே இப் புலமைப்பரிசிலை வெல்கின்றனர். நீங்கள் அனைவருமே இலக்ஷ்மி அல்லது நாராயணனைத் திருமணம் செய்வீர்கள் என்று கூறுகின்றீர்கள். ஆகவே, நீங்கள் நிச்சயமாக முதலில் சித்தியடைய வேண்டும். உங்களிடம் எந்தவொரு குரங்கு நடத்தையும் இல்லாதிருக்கின்றதா என்று சோதியுங்கள். தொடர்ந்தும் அதனை அகற்றுங்கள். நாள் முழுவதும் நீங்கள் எவரையும் சந்தோஷமற்றவர் ஆக்கவில்லை என்பதைச் சோதித்துப் பாருங்கள். தந்தை மாத்திரமே அனைவருக்கும் சந்தோஷத்தை அருள்பவர். குழந்தைகளாகிய நீங்களும் அவரைப் போலாக வேண்டும். உங்கள் வார்த்தைகளினாலோ அல்லது செயல்களினாலோ எவருக்கும் நீங்கள் துன்பம் கொடுக்கக்கூடாது. அனைவருக்கும் உண்மையான பாதையைக் காட்டுங்கள். அந்த ஆஸ்திகள் எல்லைக்குட்பட்ட தந்தையரிடமிருந்து பெறப்படுகின்றன, ஆனால் இந்த எல்லையற்ற ஆஸ்தியோ எல்லையற்ற தந்தையிடமிருந்து பெறப்படுகின்றது. அதனைப் பெறுபவர்களால் மாத்திரமே அதனைப் பற்றி உங்களுக்குக் கூற முடியும். உங்கள் தர்மத்தைச் சேர்ந்தவர்கள் உடனடியாகவே இதனால் தொடப்படுவார்கள். தந்தை கூறுகின்றார்: நான் தேவர்களின் இராச்சியத்தை ஸ்தாபிக்கவே, பிரம்மாவின் சரீரத்திற்குள் மீண்டும் ஒருமுறை பிரவேசிக்கின்றேன். இந்த நேரத்தில் நீங்கள் பிராமணர்கள் என்பதும், பின்னர் நீங்கள் தேவர்கள் ஆகுவீர்கள் என்பதும் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. முதலில், நீங்கள் சூட்சும உலகிற்கும் பின்னர், அமைதி தாமத்திற்கும் செல்வீர்கள். அங்கிருந்து கருப்பை என்ற மாளிகையினூடாக நீங்கள் புதிய உலகிற்குச் செல்வீர்கள். இங்கே நீங்கள் கருப்பை என்ற சிறையினூடாகவே வருகின்றீர்கள். ‘மாயையும் பொய்யே, சரீரமும் பொய்யே….’ என்று கூறப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: மக்கள் தர்மத்தை அதிகளவு அவதூறு செய்துள்ளனர்! அவர்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடியபொழுதும், சிவன் எப்பொழுது வந்தார் என்பதோ அல்லது யாரினுள் அவர் பிரவேசித்தார் என்பதோ அவர்களுக்குத் தெரியாது. நரகத்தைச் சுவர்க்கமாக மாற்றுவதற்கு அவர் நிச்சயமாக எவரோ ஒருவரின் சரீரத்திற்குள்ளேயே பிரவேசிக்க வேண்டும். தந்தை மிகவும் தெளிவாக விளங்கப்படுத்தி, குழந்தைகளாகிய உங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றார்: நாள் முழுவதிலும் தந்தையை எவ்வளவு நேரம் நினைவுசெய்தீர்கள் என்பதற்குரிய உங்கள் அட்டவணையை வைத்திருங்கள். அதிகாலையில் விழித்தெழுந்து, தந்தையையும், உங்கள் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். நாங்கள் பாரதத்தை மறைமுகமான வழியில் சுவர்க்கமாக மாற்றுவதற்கு எல்லையற்ற தந்தையிடம் வந்துள்ளோம். நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். திரும்பிச் செல்லும் முன்னர், நாங்கள் நிச்சயமாக எங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்தில் இருக்கின்றீர்கள். ஆனால் முழு உலகமும் கலியுகத்தில் உள்ளது. நீங்கள் சங்கம யுகப் பிராமணர்கள். தந்தை முக்தியும், ஜீவன்முக்தியும் என்ற வெகுமதியைக்; குழந்தைகளாகிய உங்களுக்காகவே கொண்டு வந்துள்ளார். ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் முக்திதாமத்தில் இருக்கும்பொழுது, சத்திய யுகத்தில், பாரதத்தைச் சேர்ந்தவர்கள் ஜீவன்முக்தியைப் பெற்றிருப்பார்கள். தந்தை உங்களுக்காகவே தனது உள்ளங் கையில் சுவர்க்கத்தைக் கொண்டு வருவதால், நிச்சயமாக அவர் உங்களை அதற்குத் தகுதியுடையவர்கள் ஆக்குவார். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. தந்தையுடன் இணைந்து சுவர்க்கத்தை ஸ்தாபிப்பதற்குக் கருவிகளாக உள்ள போதையில் சதா நிலைத்திருங்கள். தந்தை உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றார்.
  2. தந்தையைப் போல் சந்தோஷத்தைக் கொடுப்பவர் ஆகுங்கள். நீங்கள் எவருக்கும் துன்பம் விளைவிக்கக்கூடாது. உண்மையான பாதையை அனைவருக்கும் காட்டுங்கள். சுய முன்னேற்றத்தை அனுபவம் செய்வதற்கு, உங்களுக்காக, ஓர் அட்டவணையை வைத்திருங்கள்.

ஆசீர்வாதம்:

நீங்கள் ஒரு கருவியாகவும், பணிவாகவும் இருக்கின்ற உங்கள் சிறப்பியல்பைப் பயன்படுத்தி, விரைவாகச் சென்று, சேவையில் முதல் இலக்கத்தில் வந்து, ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

சேவையில் முன்னேறிச் செல்லும்பொழுது, ஒரு கருவியாகவும், பணிவாகவும் இருக்கின்ற உங்கள் சிறப்பியல்பை அறிந்திருங்கள், அப்பொழுது நீங்கள் ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்கள். சேவை செய்வதற்கு, சுற்றிலும் ஓடிச் செல்வதில் நீங்கள் திறமைசாலிகளாக இருப்பதைப் போன்று, அதேவிதமாக, இவ்விரு சிறப்பியல்புகள் மூலமும் திறமைசாலிகள் ஆகுங்கள். நீங்கள் இதனைச் செய்யும்பொழுது, விரைவாகச் சென்று, சேவையில் முதலாவதாக வருவீர்கள். பிராமண வாழ்க்கையின் மரியாதைக் கோட்பாடுகள் எனும் கோட்டினுள் இருப்பதுடன், உங்களை ஓர் ஆன்மீக சேவகராகவும் கருதி, சேவை செய்யுங்கள், நீங்கள் ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்கள். நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியதில்லை.

சுலோகம்:

எப்பொழுதும் ஞான இரத்தினங்களைக் கிரகிக்கின்ற புத்தியை உடையவர்களே, உண்மையான புனித அன்னங்கள் ஆவார்கள்.

 

---ஓம் சாந்தி---

Download PDF

Post a Comment

0 Comments