29-01-2023 ஓம் சாந்தி அவ்யக்த பாப்தாதா மதுவனம் 02/12/1993
Listen to the Murli audio file
முதலாம் இலக்கத்தவர் ஆகுவதற்கு, நற்குணங்களைத் தானம் செய்யும் மகாதானியான, நற்குணங்களின் சொரூபம் ஆகுங்கள்.
இன்று, எல்லையற்ற தாயும் தந்தையும் நானா திசைகளிலும் உள்ள விசேடமான குழந்தைகளைப் பார்க்கிறார்.
என்ன சிறப்பியல்புகளைப் பார்க்க முடிகிறது?
எந்தக் குழந்தைகள் சதா ஞானிகளாக இருக்கிறார்கள், எந்தக் குழந்தைகள் மாற்ற முடியாத சுய இராச்சியத்தின் உரிமையைக் கோருகிறார்கள், எந்தக் குழந்தைகள் சதா தடைகளில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள், எந்தக் குழந்தைகள் சதா யோகிகளாகவும் சதா மகாதானிகளாகவும் இருக்கிறார்கள்? பலமில்லியன்களில் கையளவான ஆத்மாக்கள் மட்டுமே இத்தகைய விசேடமான ஆத்மாக்கள் ஆகியுள்ளார்கள். நீங்கள் எல்லோரும் ஞானிகளாகவும் யோகிகளாகவும் மகாதானிகளாகவும் ஆகியுள்ளீர்கள். ஆனால் ஒருசிலர் மட்டுமே சதா இப்படி ஆகுகிறார்கள்.
முடிவற்ற, மாற்ற முடியாத, நிலையாக இருப்பவர்களால் வெற்றி மாலையின் வெற்றி இரத்தினங்கள் ஆக முடியும். சங்கமயுகத்தில், பாப்தாதா ஒவ்வொரு குழந்தைக்கும் அசைக்க முடியாதவராகவும் நிலையாகவும் இருக்கும் ஆசீர்வாதத்தைக் கொடுக்கிறார். ஆனால்,
இந்த ஆசீர்வாதங்களைத் தமது வாழ்க்கைகளில் சதா கிரகிப்பதில் அவர்கள் வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். முதலாம் இலக்கத்தவர் ஆகுவதற்கான இலகுவான வழிமுறை,
சதா மகாதானி ஆகுவதாகும். சதா மகாதானி ஆகுதல் என்றால், நிலையான,
இலகுவான சேவையாளர் ஆகுதல் என்று அர்த்தம். ஏனென்றால்,
இலகுவாக இருப்பவர்களாலேயே நிலையானவர்கள் ஆகமுடியும்.
சதா சேவையாளர் என்றால், சதா மகாதானியாக இருத்தல் என்று அர்த்தம்.
நீங்கள் அருள்பவரின் குழந்தைகள். நீங்கள் சகல பொக்கிஷங்களாலும் நிறைந்துள்ள மேன்மையான ஆத்மாக்கள் ஆவீர்கள்.
நிறைந்திருப்பதன் அடையாளம்,
சதா மகாதானியாக இருப்பதாகும். ஒரு விநாடியேனும் தானம் செய்யாமல் உங்களால் இருக்க முடியாது.
பல பக்த ஆத்மாக்களும் துவாபர யுகத்தில் இருந்து தானி ஆத்மாக்கள் ஆகியுள்ளார்கள். ஆனால்,
அவர்கள் தானம் செய்வதில் எத்தனை மகத்தானவர்களாக இருந்தாலும்,
அவர்கள் எல்லையற்ற பொக்கிஷங்களின் தானிகள் ஆகுவதில்லை. அவர்கள் அழிகின்ற பொக்கிஷங்களினதும் பொருட்களினதும் தானிகளாகவே ஆகியுள்ளார்கள். சங்கமயுகத்தில், மேன்மையான ஆத்மாக்களான நீங்கள் முடிவற்றவர்களாகவும் சதா மகாதானிகளாகவும் ஆகியுள்ளீர்கள் உங்களையே கேட்டுப் பாருங்கள்:
நீங்கள் சதா மகாதானியா? அல்லது,
காலத்திற்கேற்பத் தானம் செய்பவரா? அல்லது,
நீங்கள் பெறுகின்ற வாய்ப்புகளுக்கேற்பத் தானம் செய்பவரா?
சதா மகாதானிகள் மூன்று வழிமுறைகளில் தானம் செய்வதில் எல்லா வேளையும் மும்முரமாக இருப்பார்கள்.
முதலாவது தானம்,
மனதின் மூலம் சக்திகளைக் கொடுத்தல்.
இரண்டாவது தானம்,
வார்த்தைகளால் ஞானத்தைக் கொடுத்தல். மூன்றாவது தானம், செயல்களால் நற்குணங்களைக் கொடுத்தல்.
இந்த மூன்று வகையான தானங்களையும் கொடுப்பவர்களால் இலகுவாக மகாதானிகள் ஆகமுடியும்.
எவ்வாறாயினும், இங்குள்ள பெறுபேறு என்னவென்றால்,
உங்களில் பெரும்பாலானோர் தொடர்ந்து வார்த்தைகளால் ஞானத்தைத் தானம் செய்கிறீர்கள். உங்களின் கொள்ளளவிற்கேற்ப உங்களின் மனதால் சக்திகளைத் தானம் செய்கிறீர்கள். ஆனால் வெகு சிலரே செயல்களால் நற்குணங்களைத் தானம் செய்கிறார்கள். தற்சமயம்,
இரண்டு வகையான ஆத்மாக்களுக்கும், அவர்கள் ஞானம் அற்றவர்களோ அல்லது பிராமணர்களோ,
அவர்களுக்கு நற்குணங்களின் தானமே அவசியமாக இருக்கிறது. தற்சமயம்,
குறிப்பாக இந்த வழிமுறையை உங்களுக்கும் பிராமணக் குடும்பத்திற்கும் தீவிரப்படுத்துங்கள்.
இந்தத் தெய்வீகக் குணங்களே அதிமேன்மையான
‘பிரபு பிரசாத்’
ஆகும் (இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட புனிதமான உணவு). எனவே,
இப்போது இந்தப் பிரசாதத்தை (புனித உணவு) அதிகளவில் பகிர்ந்தளியுங்கள். நீங்கள் யாரையாவது சந்திக்கும்போது, அவருக்கு ஏதாவது தோளியைக் கொடுப்பதே மற்றவர்களுக்கான உங்களின் அன்பின் அடையாளம் ஆகும். உங்கள் எல்லோருக்கும் தோளி விருப்பம்தானே? அதேபோல்,
ஒருவருக்கொருவர் நற்குணங்களின் தோளியை ஊட்டுங்கள்.
இந்த வழிமுறையைப் பயன்படுத்துவதன் மூலம்,
சங்கமயுகத்தின் இலட்சியமான
‘தேவதையாக இருந்து தேவராகுதல்’ என்பது எல்லோருக்கும் இலகுவாக வெளிப்படுத்தப்படும். சதா இந்தப் பயிற்சியை உங்களின் விழிப்புணர்வில் வைத்திருங்கள்: அருள்பவரின் குழந்தையான நான்,
சதா மகாதானியாக இருக்கிறேன். நீங்கள் ஞானமற்ற ஆத்மாக்களுக்கும் பிராமண ஆத்மாக்களுக்கும் தானம் செய்ய வேண்டும். ஆனால்,
பிராமண ஆத்மாக்களுக்கு ஏற்கனவே ஞானம் உள்ளது. எனவே,
உங்களால் இரண்டு வழிமுறைகளால் தானிகள் ஆகமுடியும்.
1.
உங்களின் மனதால் ஓர் ஆத்மாவிற்கு என்ன சக்தி தேவைப்படுகிறதோ, அதைக் கொடுங்கள். அதாவது,
அவர்களுக்குச் சக்திகளைக் கொடுங்கள். அதாவது,
தூய மனோபாவத்தின் மூலமும் அதிர்வலைகளின் மூலமும் அவர்களுக்கு ஒத்துழைப்பைக் கொடுங்கள்.
2.
சதா உங்களின் நடைமுறை வாழ்க்கையில் உங்களின் செயல்களால் நற்குணங்களின் சொரூபம் ஆகுங்கள். புலப்படும் மாதிரியாகி அவர்களுக்கு நற்குணங்களைத் தானம் செய்வதன் மூலம் இலகுவாக அவர்களுக்கு ஒத்துழைப்பைக் கொடுங்கள்.
இதுவே நற்குணங்களைத் தானம் செய்தல் எனப்படுகிறது.
தானம் செய்தல் என்றால் ஒத்துழைத்தல் என்று அர்த்தம்.
ஏனென்றால், தற்காலத்தில்,
கேட்பதற்குப் பதிலாக,
பிராமண ஆத்மாக்கள் ஏதாவது நடைமுறை அத்தாட்சியையே பார்க்க விரும்புகிறார்கள். யாராவது ஒருவருக்கு அவருக்குள் சக்தியை அல்லது நற்குணங்களைக் கிரகிப்பதற்கான வழிகாட்டலைக் கொடுக்கும்போது, சிலர் தமது இதயத்தில் அதைப் பதித்துக் கொள்வார்கள்.
சிலரோ, ‘யார் இத்தகைய நற்குணங்களின் சொரூபம் ஆகியது?’
என நினைப்பார்கள். அவர்கள் அதன் நடைமுறை அத்தாட்சியைப் பார்க்க விரும்புவார்கள். அவர்கள் வெறுமனே எதையும் கேட்க விரும்புவதில்லை. நீங்கள் ஒருவருக்கொருவர் இப்படிச் சொல்கிறீர்கள்: யார் இப்படி ஆகியது?
நாங்கள் எல்லோரையும் பார்த்திருக்கிறோம்! ஏதாவது நடந்து விட்டால்,
‘யாரும் இன்னமும் இப்படி ஆகவில்லை,
எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது’ என நீங்கள் சொல்கிறீர்கள். எவ்வாறாயினும், இவை கவனயீனமான வார்த்தைகளாகும். அவை மிகச்சரியான வார்த்தைகள் இல்லை.
மிகச்சரியானது என்றால் என்ன? தந்தை பிரம்மாவைப் பின்பற்றுதல்.
தந்தை பிரம்மா சதா தன்னை ஒரு கருவி உதாரணமாகவே கருதினார்.
அத்துடன் அவர் இந்த இலட்சியத்தைச் சதா நடைமுறைத் தகைமை ஆக்கினார்.
யார் பொறுப்பை எடுத்துக்கொள்கிறார்களோ அவர்களே அர்ஜூனர் ஆவார்கள்.
அதாவது, நடைமுறை அத்தாட்சி ஆகுவதற்கு யார் தங்களைக் கருவிகள் ஆக்கிக் கொள்கிறார்களோ அவர்கள் அர்ஜூனர்கள் ஆவார்கள்.
அதாவது, அவர்கள் முதலாம் இலக்கத்தவர் ஆகுகிறார்கள். நீங்கள் தந்தையைப் பின்பற்ற விரும்பினால், மற்றவர்களைப் பார்ப்பதனால் நீங்கள் முதலாம் இலக்கத்தவர் ஆக மாட்டீர்கள்.
அதற்குப் பதிலாக,
நீங்கள் வரிசைக்கிரமம் ஆகுவீர்கள்.
முதலாம் இலக்க ஆத்மாவின் அடையாளம் என்னவென்றால், அவர் தன்னை ஒவ்வொரு மேன்மையான பணியிலும் கருவியாகவும், மற்றவர்களுக்கு எளிமையாக்குவதற்கு ஒரு மாதிரியாகவும் கருதுவார்.
யாராவது ஒருவரைப் பார்த்து, அவர்கள் உங்களுக்கு மூத்தவரோ,
இளையவரோ அல்லது சமமானவராகவோ இருந்தாலும்,
இன்னொருவரைப் பார்த்து,
‘அவர் இப்படி ஆகினால், நான் இப்படி ஆகுவேன்’
என நினைத்தால்,
அவர் ஏற்கனவே முதலாம் இலக்கத்தவர் ஆகிவிடுவார். அப்போது நீங்கள் இயல்பாகவே வரிசைக்கிரமமாக இருப்பவர்களின் பட்டியலில் வந்துவிடுவீர்கள். எனவே, சதா மகாதானி என்பவர் மூன்று வழிமுறைகளில் ஏதாவதொரு முறையில் ஒவ்வொரு வினாடியும் தானம் செய்வதில் தன்னை மும்முரமாக வைத்திருப்பார். காலத்திற்கேற்ப சேவை செய்வதில் அவர் சதா ஈடுபட்டிருப்பார். அவருக்கு வீணான எதையும் பார்ப்பதற்கோ அல்லது கேட்பதற்கோ நேரமே இருக்காது. எனவே,
நீங்கள் இத்தகைய மகாதானிகள் ஆகிவிட்டீர்களா? இப்போது இதைக் கீழ்க்கோடிடுங்கள். நீங்கள் நிலையானவர் ஆகிவிட்டீர்களா? அருள்பவராக இருக்கும்போது, மீண்டும் மீண்டும் அங்கு உடைவு ஏற்படுமாயின், உடைந்து போன எதையும் சம்பூரணமானது என்று அழைக்க முடியாது.
எனவே, தற்சமயம்,
விசேடமான செயலைச் செய்வதன் மூலம் நீங்கள் நற்குணங்களை அருள்பவர்கள் ஆக வேண்டியது அவசியமாகும்.
நீங்கள் சதா நற்குணங்களின் சொரூபம் ஆகுகின்ற விசேடமான பணியைச் செய்வதுடன் மற்றவர்களையும் நற்குணங்களின் சொரூபங்கள் ஆக்க வேண்டும் என நீங்கள் ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.
எனவே, நீங்கள் ஒவ்வொருவரும் உங்களிலும் மற்றவர்களிலும் உள்ள பலவீனங்களை முடிப்பதற்கு இந்த வழிமுறையைப் பயன்படுத்தும் முதலாம் இலக்கக் கருவியாக உங்களைக் கருதிக் கொள்ளுங்கள். உங்களிடம் அதிகளவு ஞானம் உள்ளது. ஆனால் இப்போது நற்குணங்கள் வெளிப்பட வேண்டும்.
நற்குணங்கள் எல்லாவற்றாலும் நிறைந்தவராகும் ஓர் உதாரணம் ஆகுங்கள்.
அத்துடன் மற்றவர்களையும் அவ்வாறே ஆக்குங்கள்.
அச்சா.
சதா யோகி ஆத்மாக்களுக்கும், சதா சகல நற்குணங்களின் சொரூபமாக இருக்கும் ஆத்மாக்களுக்கும், ஒவ்வொரு விநாடியும் ஒவ்வோர் எண்ணத்திலும் மகாதானிகளாகவும் ஒத்துழைக்கும் ஆத்மாக்களாக இருக்கும் விசேடமான ஆத்மாக்களுக்கும், மேன்மையாக இருப்பதில் மாதிரிகளாக இருப்பவர்களுக்கும், மற்றவர்களைத் தூண்டுவதில் எளிமையான உதாரணங்களாக இருப்பவர்களுக்கும், தங்களை முதலாம் இலக்கக் கருவிகளாகக் கருதியவண்ணம் அதற்கான நடைமுறை அத்தாட்சியைக் கொடுப்பவர்களுக்கும், தந்தைக்குச் சமமான ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.
தாதி ஜான்கி அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை முடித்தபின்னர் மதுவனத்திற்கு வந்திருந்தார்.
எல்லோருடைய நினைவும் இங்கு வந்து சேர்ந்துள்ளது. நான்கு திசைகளிலும் உள்ள குழந்தைகள் சதா தந்தையின் முன்னால் இருக்கிறார்கள். இதன் நடைமுறை அத்தாட்சி என்னவென்றால், நீங்கள் தந்தையை நினைவு செய்யும்போதெல்லாம், அவர் உங்களுக்கு நெருக்கமாக இருப்பதையும் அவர் உங்களுடன் இருப்பதையும் நீங்கள் அனுபவம் செய்கிறீர்கள். உங்களின் இதயபூர்வமாக நீங்கள்
‘பாபா’ எனச் சொல்கிறீர்கள். இதயங்களுக்கு சௌகரியம் அளிப்பவரும் உங்களின் முன்னால் பிரசன்னம் ஆகுகிறார்.
இதனாலேயே, பிரபுவானவர் உங்களின் முன்னால் இருக்கிறார் எனச் சொல்லப்படுகிறது. அவர் உங்களின் முன்னால் எப்போதும் பிரசன்னமாகவே இருக்கிறார். நீங்கள் எங்கே இருந்தாலும்,
யாருடன் இருந்தாலும்,
அவர் எல்லோரின் முன்னாலும் பிரசன்னம் ஆகுகிறார். இதனாலேயே,
பிரபு உங்களின் முன்னால் எப்போதும் இருக்கிறார். இந்த அன்பின் வழக்கத்தை மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது.
பிராமண ஆத்மாக்களுக்கு மட்டுமே இது தெரியும். இதை அனுபவித்தவர்களுக்கே இந்த அனுபவத்தைப் பற்றித் தெரியும். விசேடமான ஆத்மாக்களான நீங்கள் எல்லோரும் எப்படியோ ஒன்றிணைந்தவர்களாகவே இருக்கிறீர்கள், அப்படித்தானே? உங்களைப் பிரிக்க முடியாது.
‘எங்கு நான் பார்த்தாலும், உங்களை மட்டுமே நான் பார்க்கிறேன்’ என மக்கள் சொல்கிறார்கள். ஆனால் நீங்களோ,
‘நான் என்ன செய்தாலும், எங்கே நான் சென்றாலும்,
தந்தை என்னுடனேயே இருக்கிறார்’ என்றே சொல்கிறீரகள். ‘அதாவது,
நான் எங்கே சென்றாலும், நீங்கள் அங்கே இருக்கிறீர்கள்’. உங்களின் பணி உங்களுடன் இருப்பதைப் போல், அந்தப் பணியைச் செய்யத் தூண்டுகின்ற ஒரேயொருவரும் சதா உங்களுடன் இருக்கிறார். இதனாலேயே,
அவர் கரன்கரவன்ஹார் என நினைவு செய்யப்படுகிறார். எனவே,
நீங்கள் ஒன்றிணைந்தவர்களாக இருக்கிறீர்கள்தானே? செய்பவரும்,
அதைச் செய்யத் தூண்டுகின்ற ஒரேயொருவரும்.
தூண்டுகின்ற ஒரேயொருவர் உங்களில் இருந்து பிரிந்திருக்கவில்லை. இதுவே ஒன்றிணைந்த ஸ்திதி எனப்படுகிறது. நீங்கள் எல்லோரும் ஏனைய ஆத்மாக்களின் முன்னால் மாதிரிகளாக இருக்கும் மிக நல்ல பாகங்களை நடிக்கிறீர்கள். அத்துடன் அவர்களுக்கு அதை எளிமையானது ஆக்குகிறீர்கள். அப்படி உணருகிறீர்கள்தானே? கஷ்டமானதை இலேசாக்குவதே தந்தையைப் பின்பற்றுவதாகும். இது இப்படித்தானே? நீங்கள் நல்லதொரு பாகத்தை நடித்தீர்கள், அப்படித்தானே?
விசேடமான நடிகர்கள் எங்கிருந்தாலும், விசேடமான பாகங்களை நடிக்காமல் அவர்களால் இருக்க முடியாது. இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அச்சா.
சுற்றுப்பயணம் சென்று வருவது மிகவும் நல்லது. நீங்கள் சுற்றுப்பயணம் செய்து,
மீண்டும் உங்களின் இனிமையான வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளீர்கள். சேவை செய்யும் சுற்றுப்பயணம் என்பது ஏனைய ஆத்மாக்களுக்கு விசேடமான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுக்கும் விசேடமான சுற்றுப்பயணம் ஆகும். எல்லாம் மிக நன்றாக இருக்கிறதுதானே? எல்லாமே நன்றாக உள்ளது.
நாடகத்தின் விதி நிச்சயமாக உங்களை இழுக்கிறது. நீங்கள் இங்கே தங்கியிருக்க விரும்பினாலும், நாடகத்தில் அது இல்லாவிட்டால், உங்களால் என்ன செய்ய முடியும்?
நீங்கள் அதைப்பற்றி நினைத்தாலும், செல்லவே வேண்டியிருக்கும். சேவை என்ற விதி நிச்சயிக்கப்பட்டுள்ளது. அது தனக்கேயுரிய பணிகளைச் செய்ய வைக்கிறது.
வருகின்ற மற்றும் போகின்ற வழக்கம்.
அச்சா. ஒன்றுகூடல் நல்லது.
(தயவுசெய்து இதைக் கருத்தில் கொள்ளுங்கள்:
பாபா ‘அகண்ட்’
என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அதன் அர்த்தம், முடிவற்றது,
துண்டிக்கப்படாமல் இருப்பது,
தொடர்ந்து செல்வது.
ஆனால் இவற்றுக்குப் பொருந்தும் வகையில் சதா என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது)
அவ்யக்த பாப்தாதாவுடன் தனிப்பட்ட சந்திப்புக்கள்.
1)
இறைவனின் அன்பை அனுபவம் செய்வதற்கு, துன்ப அலைகளில் இருந்து பற்றற்றவர் ஆகுங்கள்.
சங்கமயுகத்தில், பாப்தாதா உங்களுக்குப் பல பொக்கிஷங்களைக் கொடுத்துள்ளார். இந்தப் பொக்கிஷங்கள் அனைத்திலும் அதிமேன்மையான பொக்கிஷம், சதா சந்தோஷம் என்ற பொக்கிஷம் ஆகும்.
எனவே, இந்தச் சந்தோஷம் என்ற பொக்கிஷம் எப்போதும் உங்களுடன் இருக்கிறதுதானே? என்ன வகையான சூழ்நிலைகள் வந்தாலும்,
உங்களின் சந்தோஷம் உங்களை விட்டுச் செல்ல முடியாது.
ஏதாவது துன்ப அலைகளுக்கான சூழ்நிலை வருமாக இருந்தால்,
அப்போதும் நீங்கள் சந்தோஷமாக இருப்பீர்களா அல்லது ஏதாவது அலைகள் காணப்படுமா?
இது ஏனென்றால் நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள், அப்படித்தானே?
எனவே, ஒருபுறம் துன்ப பூமி.
மறுபுறம் சந்தோஷபூமி.
எனவே, துன்ப அலைகளின் சில சூழ்நிலைகள் உங்களின் முன்னால் வரும்.
ஆனால், அந்தத் துன்ப அலைகள் உங்களுக்குள் எந்தவிதமான துன்பத்தையும் ஏற்படுத்தக்கூடாது. உதாரணமாக, சூடான காலநிலையின்போது, வெப்பமாக இருக்கும். ஆனால் உங்களைப் பாதுகாத்துக் கொள்வது உங்களைப் பொறுத்தவிடயமாகும். எனவே,
நீங்கள் துன்பமான சூழ்நிலைகளைப் பற்றிக் கேள்விப்படுவீர்கள். ஆனால்,
உங்களின் இதயத்தில் அவை ஆதிக்கம் செலுத்த அனுமதிக்காதீர்கள். இதனாலேயே, பற்றற்றவராகவும் இறைவனால் நேசிக்கப்படுபவராகவும் இருங்கள் எனச் சொல்லப்படுகிறது. நீங்கள் துன்ப அலைகளில் இருந்து பற்றற்றவராக இருந்தால் மட்டுமே இறைவனால் நேசிக்கப்படுவீர்கள். நீங்கள் பற்றற்றவராக இருக்கும் அளவிற்கு, அதற்கேற்ப நேசிக்கப்படுவீர்கள். நீங்கள் எந்தளவிற்குப் பற்றற்றவராக இருக்கிறீர்கள் என்பதைச் சோதித்துப் பாருங்கள்.
நீங்கள் பற்றற்றவராக இருக்கும் அளவிற்கு,
இலகுவாகத் தொடர்ந்தும் இறையன்பை அனுபவம் செய்வீர்கள். எனவே,
எந்தளவிற்கு நீங்கள் பற்றற்றவராகவும் எந்தளவிற்கு நேசிக்கப்படுபவராகவும் இருக்கிறீர்கள் எனத் தினமும் சோதித்துப் பாருங்கள்.
ஏனென்றால், இதுவே இறையன்பாகும். இதை வேறெந்த யுகத்திலும் பெற முடியாது.
நீங்கள் எவ்வளவற்றைப் பெற விரும்புகிறீர்களோ, அதை இப்போது மட்டுமே பெற முடியும். இப்பொழுதில்லையேல், வேறெந்த நேரத்திலும் அதை ஒருபோதும் பெற முடியாது.
அத்துடன் நீங்கள் இத்தகைய குறுகிய காலத்திற்கே இறையன்பைப் பெறுகிறீர்கள்! எனவே,
குறுகிய நேரத்தில் நீங்கள் அதிகளவை அனுபவம் செய்ய வேண்டும். எனவே,
நீங்கள் அப்படிச் செய்கிறீர்களா? உலகிலுள்ள மக்கள் சந்தோஷத்தை அனுபவிப்பதற்கு அதிகளவு நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறார்கள். ஆனால் நீங்களோ இலகுவாக அழியாத சந்தோஷப் பொக்கிஷத்தைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் எதையாவது செலவிட்டீர்களா? சந்தோஷத்தின் முன்னால் வேறு எதை நீங்கள் செலவிடப்போகிறீர்கள்? எனவே,
இந்த சந்தோஷப் பாடல்களைத் தொடர்ந்து பாடுங்கள்: நான் எதை விரும்பினேனோ அதை அடைந்துவிட்டேன். நீங்கள் அதைப் பெற்றுவிட்டீர்கள்தானே? நீங்கள் எதையாவது பெற்றதும்,
சந்தோஷத்தில் நடனம் ஆடுகிறீர்கள். தொடர்ந்து இந்தச் சந்தோஷத்தை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள். எந்தளவிற்கு அதிகமாகப் பகிர்கிறீர்களோ, அந்தளவிற்கு அது அதிகரிக்கும். ஏனென்றால்,
பகிர்ந்து கொள்ளுதல் என்றால் அதிகரித்தல் என்று அர்த்தம்.
உங்களுடன் தொடர்பில் வருகின்ற எவரும் நீங்கள் சந்தோஷமாக இருப்பதை அனுபவம் செய்ய வேண்டும்.
ஏனென்றால், உங்களிடம் மேன்மையான பேறுகள் உள்ளன. உலகிலுள்ள மனிதர்களுக்கு எல்லா வேளையும் துன்பமே உள்ளது. ஆனால் உங்களுக்கோ எல்லா வேளையும் சந்தோஷமே உள்ளது. சந்தோஷம் இல்லாமல் இருக்கும் ஒருவருக்கு சந்தோஷத்தைக் கொடுப்பதே சகல புண்ணியங்களிலும் மகத்தான புண்ணியமாகும். எனவே,
நீங்கள் எல்லோரும் தடைகளில் இருந்து விடுபட்டு, முன்னால் பறந்து செல்கிறீர்களா? அல்லது சிறிய தடைகள் உங்களைத் தடுக்கின்றனவா? வருவது தடைகளின் கடமையாகும்.
வெற்றியாளர் ஆகுதல் உங்களின் கடமையாகும்.
தடைகள் தமது பணியை மிக நன்றாகச் செய்வதனால்,
மாஸ்ரர் சர்வசக்திவான்களான நீங்களும் வெற்றியாளராகும் உங்களின் பணியில் சதா வெற்றியாளர் ஆகவேண்டும். எப்போதும் நினைவில் வைத்திருங்கள்: நாங்கள் தடைகளை அழிக்கின்ற ஆத்மாக்கள்.
தடைகளை அழிப்பவராக இருப்பதன் ஞாபகார்த்தத்தை நீங்கள் நடைமுறையில் அனுபவம் செய்கிறீர்கள்தானே? அச்சா.
2.
உங்களின் ஸ்திதியை அசைக்க முடியாதது ஆக்குவதற்கு, மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற உங்களின் பட்டத்தை நினைவு செய்யுங்கள்.
நீங்கள் எப்போதும் உங்களைச் சகல பொக்கிஷங்களும் நிறைந்தவர்களாக, எப்போதும் நிரம்பியுள்ள ஆத்மாக்களாக அனுபவம் செய்கிறீர்களா? நிரம்பி இருப்பவர்களின் அடையாளம் என்னவென்றால், அவர்கள் அசைக்க முடியாதவர்களாக இருப்பார்கள், அவர்கள் தளம்பல் அடைவதில்லை.
ஏதாவதொன்று எந்தளவிற்கு வெறுமையாக இருக்கிறதோ,
அந்தளவிற்கு அங்கே குழப்பம் இருக்கும்.
எண்ணங்களிலோ, வார்த்தைகளிலோ, உறவுமுறைகளிலோ அல்லது தொடர்புகளிலோ எந்த வகையான குழப்பம் இருந்தாலும், நீங்கள் சகல பொக்கிஷங்களாலும் நிறைந்திருக்கவில்லை என்பதையே அது காட்டுகிறது.
உங்களின் எண்ணங்களில் அசைக்க முடியாதவர் ஆகுங்கள். உங்களின் கனவுகளிலேனும் அசைக்க முடியாதவர் ஆகுங்கள்.
மாஸ்ரர் சர்வசக்திவான் என்ற உங்களின் ரூபம் வெளிப்பட்டிருப்பதை எந்தளவிற்கு நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களோ, அந்தளவிற்கு இந்தக் குழப்பம் அமிழ்ந்து போய்விடும்.
மாஸ்ரர் சர்வசக்திவானாக இருக்கும் விழிப்புணர்வு நடைமுறையில் வெளிப்பட்டு இருக்க வேண்டும்.
உங்களின் சரீரத்தால் செய்யும் தொழில் வெளிப்பட்டிருக்கிறது. அது மறைந்து போகாது,
அதேபோல், பிராமண வாழ்க்கையின் தொழிலும் வெளிப்பட்டிருக்க வேண்டும்.
எனவே, சோதித்துப் பாருங்கள்: அது வெளிப்பட்டிருக்கிறதா அல்லது அமிழ்ந்து போயுள்ளதா?
அது வெளிப்பட்டிருக்கும்போது, நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் போதையை உணர்வதும், மற்றவர்கள் உங்களைச் சக்திவாய்ந்த ஆத்மாக்களாக உணர்வதுமே அதன் அடையாளமாகும்.
இதுவே அசைக்க முடியாதவராகவும் குழப்பங்களிற்கு அப்பாற்பட்டவராகவும் இருத்தல் எனப்படுகிறது. அச்சல்கார்
(ஸ்திரத்தன்மையின் வீடு)
உங்களின் ஞாபகார்த்தம் ஆகும். எனவே,
எப்போதும் உங்களின் தொழிலை நினைவு செய்யுங்கள்: நான் ஒரு மாஸ்ரர் சர்வசக்திவான். ஏனென்றால் தற்காலத்தில் சகல ஆத்மாக்களும் முற்றிலும் பலவீனமாகவே இருக்கிறார்கள். பலவீனமான ஆத்மாக்களுக்குச் சக்தி தேவை.
யார் அவர்களுக்குச் சக்தியைக் கொடுப்பார்கள்? மாஸ்ரர் சர்வசக்திவான்களாக, சகல சக்திகளையும் கொண்டிருப்பவர்களே. நீங்கள் ஏனைய ஆத்மாக்களைச் சந்திக்கும்போது, அவர்கள் உங்களுடன் எதைப் பகிர்ந்து கொள்கிறார்கள்? அவர்கள் தமது பலவீனங்களைப் பற்றி மட்டுமே சொல்கிறார்கள், அப்படித்தானே? அவர்களால் தாம் உண்மையில் செய்ய விரும்பியதைச் செய்ய முடியாமல் உள்ளது. அதனால் அதன் பெறுபேறாக அவர்கள் பலவீனம் அடைகிறார்கள். ஆனால் நீங்களோ உங்களுக்குள் என்ன எண்ணங்கள் தோன்றுகின்றனவோ, அவற்றை நடைமுறைப்படுத்துகிறீர்கள். எனவே,
மாஸ்ரர் சர்வசக்திவான்களின் அடையாளம், அவர்களின் எண்ணங்களும் செயல்களும் ஒன்றாகவே இருக்கும்.
அவர்களிடம் மிக மேன்மையான எண்ணங்கள் இருந்து, செயல்களைச் செய்தல் என்று வரும்பொது, அவர்களால் அந்த மேன்மையான எண்ணங்களை நினைக்க முடியவில்லை என்பதாக இருக்கக்கூடாது. அதை ஒரு மாஸ்ரர் சர்வசக்திவானாக இருத்தல் எனச் சொல்ல முடியாது. எனவே,
சோதித்துப் பாருங்கள்:
உங்களிடம் உள்ள மேன்மையான எண்ணங்களை நடைமுறையில் போட முடிகிறதா அல்லது உங்களால் அப்படிச் செய்ய முடியவில்லையா? மாஸ்ரர் சர்வசக்திவானின் அடையாளம், எப்பொழுதெல்லாம் ஒரு குறிப்பிட்ட சக்தி தேவைப்படுகிறதோ, அந்த வேளையில் அந்த சக்தியைப் பயன்படுத்துவதாகும். அல்லது,
அதை நீங்கள் அழைத்துச் சிறிது நேரத்தின் பின்னரே அது வருகிறதா?
அந்தச் சூழ்நிலை கடந்து சென்ற பின்னரே அது நினைவு செய்யப்படுகிறதா? அது அப்படி இருந்திருக்கக்கூடாது, ஆனால் இப்படி இருக்க வேண்டும்? தேவைப்படும் நேரத்தில் அது பயன்படுத்தப்படவில்லை என்பதே இதன் அர்த்தமாகும்.
உங்களின் பௌதீக அங்கங்களால் உங்களின் கட்டளைகளைப் பின்பற்றக்கூடியதாக இருக்கின்றது. அதாவது,
உங்களால் உங்களின் கைகளை நீங்கள் விரும்பியபோது, விரும்பியபடி பயன்படுத்த முடியும்.
அதேபோல், நீங்கள் விரும்பியபோது, விரும்பிய சக்தியைப் பயன்படுத்தக்கூடிய வகையில், இந்தச் சூட்சும சக்திகள் உங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டும்.
எனவே, இத்தகைய கட்டுப்படுத்தும் சக்தி உங்களுக்கு இருக்கிறதா?
நான் அதைச் செய்ய விரும்பவில்லை, ஆனால் அது நடந்து விட்டது என நீங்கள் நினைக்கவில்லைத்தானே? எனவே,
சதா உங்களின் கட்டுப்படுத்தும் சக்தியைச் சோதித்துத் தொடர்ந்து சக்திசாலி ஆகுங்கள்.
நீங்கள் எல்லோரும் பறக்கும் ஸ்திதியில் இருக்கிறீர்களா? அல்லது,
உங்களில் சிலர் ஏறுகின்ற ஸ்திதியிலும் மற்றவர்கள் பறக்கும் ஸ்திதியிலும் இருக்கிறீர்களா? அல்லது, சிலவேளைகளில் பறக்கும் ஸ்திதி,
சிலவேளைகளில் ஏறுகின்ற ஸ்திதி, சிலவேளைகளில் நடக்கின்ற ஸ்திதி காணப்படுகிறதா? அது மாறிக் கொண்டே இருக்கிறதா அல்லது அது சதா முன்னேறிக் கொண்டே இருக்கிறதா? ஏதாவதொரு தடை வரும்போது,
நீங்கள் வெற்றியாளர் ஆகுவதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்?
அதற்கு நேரம் எடுக்குமா? இது ஏனென்றால், நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள்தானே? உங்களிடம் தடைகளைப் பற்றிய ஞானமும் இருக்கிறது. நீங்கள் உங்களின் ஞான சக்தியைப் பயன்படுத்தும்போது, தடைகள் உங்களைத் தாக்காது. ஆனால் அவை தோல்வி அடைந்துவிடும். இது மாஸ்ரர் சர்வசக்திவானாக இருத்தல் எனப்படுகிறது.
எனவே, இந்தத் தொழில் அமிர்தவேளையில் வெளிப்பட வேண்டும்.
அதன்பின்னர் நீங்கள் நாள் முழுவதும் சோதித்துப் பார்க்க வேண்டும். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின்
சகித்துக் கொள்ளும்
கவசத்தை அணிந்து
கொள்வதன் மூலம்,
தடைகளை வென்றவராகி,
உங்களின் சம்பூரண
ஸ்திதியைத் திருமணம்
செய்வீர்களாக, அதாவது,
உங்களின் சம்பூரண
ஸ்திதியை அடைவீர்களாக.
திருமணம் செய்வதற்கு, அதாவது, உங்களின் சம்பூரண ஸ்திதியை அடைவதற்கு, எந்தவிதமான கவனயீனத்தின் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுக்களைக் கைவிட்டு, சகித்துக் கொள்ளும் சக்தியால் பலசாலி ஆகுங்கள். சகித்துக் கொள்ளும் சக்தியே உங்களைச் சகல தடைகளில் இருந்தும் பாதுகாக்கின்ற
கவசம் ஆகும். இந்தக் கவசத்தை நீங்கள் அணிந்து கொள்ளாவிட்டால், நீங்கள் பலமற்றவர் ஆகிவிடுவீர்கள். அதன்பின்னர்
தந்தை உங்களுக்குச்
சொன்ன விடயங்களை நீங்கள் அவருக்குச் சொல்வீர்கள்.
சிலவேளைகளில், உங்களுக்குள்
அதிகளவு ஊக்கமும் உற்சாகமும் காணப்படும். ஏனைய வேளைகளில் நீங்கள் மனச் சோர்வு அடைவீர்கள். இப்போது, மேலேயும் கீழேயும் ஏறி இறங்குகின்ற ஏணியைக் கைவிட்டு, சதா ஊக்கத்தையும் உற்சாகத்தையும்
கொண்டிருங்கள். உங்களின் சம்பூரண ஸ்திதி உங்களுக்கு நெருக்கமாகும்.
சுலோகம்:
நினைவினதும் சேவையினதும்
சக்திகளால் ஆத்மாக்கள் பலரின்மீது கருணை கொள்ளுவதே, கருணைநிறைந்தவர் ஆகுவதாகும்.
--ஓம் சாந்தி---
0 Comments