02-02-2023 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, கடவுளின் வழிகாட்டல்களே அதி மேன்மையானவை என்பதால் அவற்றைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் நிஜத் தங்கம் ஆகுகின்றீர்கள்.
ஏனைய வழிகாட்டல்கள்
உங்களைப் பொய்யானவர்கள்
ஆக்குகின்றன.
கேள்வி:
எந்த மனித ஆத்மாவிலும் பதிவு செய்யப்படாத
எப் பாகம், ஞானக்கடலான ஒரேயொரு தந்தையின் பாகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது?
பதில்:
பாபா கூறுகின்றார்:
பக்தர்களைப் பராமரித்து, அனைவருக்கும் சந்தோஷத்தை அருள்தல் என்ற பாகம் ஆத்மாவாகிய எனக்குள் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஞானக்கடலும் தந்தையுமான நான் அனைவரின் மீதும் அழியாத ஞானத்தைப் பொழிகின்றேன்.
இந்த ஞான இரத்தினங்களுக்கு எவராலும் ஒரு பெறுமதியைக் கொடுக்க முடியாது. முக்தியளிப்பவரான நான் ஆன்மீக வழிகாட்டியாகி, ஆத்மாக்களாகிய உங்களை அமைதிதாமத்திற்கு மீண்டும் அழைத்துச் செல்கின்றேன். இவை அனைத்தும் எனது பாகமாகும். நான் எவருக்கும் துன்பம் விளைவிக்காததாலேயே அனைவரும் என்னைத் தமது கண்களில் ஒத்திக் கொள்கின்றனர். எதிரியான இராவணன் துன்பத்தை விளைவிப்பதால், மக்கள் அவனின் கொடும்பாவியை எரிக்கின்றார்கள்.
பாடல்: ஞான மழை அன்பிற்கினியவருடன் இருப்பவர்களுக்காகும்.
ஓம் சாந்தி.
‘ஓம்’ என்பதன் அர்த்தத்தைத் தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். ‘ஓம்’
என்றால் ஆத்மாவாகிய நான் என்று அர்த்தமாகும். அவ்வளவே.
இதன் அர்த்தம் மிகவும் சிறியது.
‘நான் கடவுள்!’
என்பதல்ல. பண்டிதர்களிடம் ‘ஓம்’ என்பதன் அர்த்தம் என்னவென்று வினவினால் அவர்கள் மிகவும் நீண்ட,
குழப்பம் நிறைந்த அர்த்தத்தையே கொடுப்பார்கள். அவர்களால் மிகச்சரியான அர்த்தத்தை உங்களுக்குக் கொடுக்க முடியாது.
மிகச்சரியானதும் தவறானதும்,
உண்மையும் பொய்யும்.
ஒரேயொரு தந்தை மாத்திரமே சத்தியமானவர்.
எனினும், இந்த நேரத்தில், இது பொய்ம்மையின் இராச்சியமாகும். இராம இராச்சியம் உண்மையின் இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றது. இராவண இராச்சியம் பொய்ம்மையின் இராச்சியம் என்று அழைக்கப்படுகின்றது. அவர்கள் உங்களுக்குக் கூறுவன அனைத்தும் தவறானவையாகும். தந்தை சத்தியமானவர். அவர் உங்களுக்குக் கூறுகின்ற அனைத்தும் உண்மை நிறைந்ததும் உங்களை நிஜத் தங்கம் ஆக்குவதுமாகும். பின்னர் மாயை உங்களைப் பொய்யானவர் ஆக்குகின்றாள். மாயை இடையூறு செய்வதால், மக்கள் கூறுகின்ற அனைத்தும் பொய்யாக இருப்பதுடன்,
அவை அசுர வழிகாட்டல்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. தந்தையின் வழிகாட்டல்கள் இறை வழிகாட்டல்கள் ஆகும்.
அசுர வழிகாட்டல்களைப் பின்பற்றுபவர்கள் பொய்யையே கூறுவார்கள். எண்ணிக்கையற்ற அசுர வழிகாட்டல்கள் உள்ளன. எண்ணிக்கையற்ற குருமார்களும் உள்ளனர்.
அவர்களின் வழிகாட்டல்கள் ஸ்ரீமத் என்று அழைக்கப்படுவதில்லை. கடவுளின் வழிகாட்டல் மாத்திரமே ஸ்ரீமத்தாகும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், நீங்கள் மேன்மையானவர் ஆகுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அனைவரிலும் அதிமேலானவர் பரமாத்மாவான பரமதந்தை, அவரின் வசிப்பிடமும் அனைத்திலும் அதிமேலானது ஆகும்.
பக்தர்கள் அனைவரும் அவரை நினைவு செய்கின்றார்கள். பக்தர்கள் நிச்சயமாக அசுர வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றார்கள் என்பதாலேயே அவர்கள் ஸ்ரீமத்தை நினைவு செய்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் மேன்மையானவர் ஆகுகின்றீர்கள். எனவே,
அங்கே கடவுளை நினைவு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதில்லை. தேவர்களுக்கு எத் துன்பமும் இருப்பதில்லை என்பதால் அவர்கள் கடவுளை நினைவு செய்வதில்லை.
பக்தர்களுக்கே அளவற்ற துன்பம் உள்ளது.
இப்பொழுது, மேலும் மலையளவு துன்பம் வர உள்ளது.
மகா யுத்தமே மனிதர்களுக்கான மலையளவு துன்பமாகும், ஆனால் குழந்தைகளாகிய உங்களைப் பொறுத்தவரையில், அது சந்தோஷ மலையாகும்.
துன்பத்தின் பின்னர்,
நிச்சயமாக சந்தோஷம் இருக்கும். இவ் விநாசத்தின் பின்னர்,
உங்கள் இராச்சியம் இருக்கும். எண்ணிக்கையற்ற சமயங்கள் அழியும் போது, இப்பொழுது மறைந்துள்ள தர்மம் ஸ்தாபிக்கப்படும். அதாவது இந்த மகாயுத்தத்தின் மூலம் சுவர்க்க வாசல் திறக்கப்படும் என்று அர்த்தமாகும்.
இவ் வாசலை யாரால் கடந்து செல்ல முடியும்?
இராஜயோகம் கற்பவர்களினால் ஆகும். தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார். அன்பிற்கினியவருடன் இருப்பவர்களின் மீதே இந்த ஞான மழை பொழிகின்றது. தந்தை அன்பிற்கினியவர் என்று அழைக்கப்படுகின்றார். அந்த மழை நீர்நிறைந்த கடலிலிருந்து வெளிப்படுகின்றது. இது அழியாத ஞான இரத்தினங்களின் மழையாகும். ஞானக்கடலான அன்பிற்கினியவருடன் இருப்பவர்கள் மீதே, அழியாத ஞான இரத்தின மழை பொழியப்படுகின்றது. நீங்கள் இந்த அழியாத ஞான இரத்தினங்களை உங்கள் புத்தியில் கிரகித்துக் கொள்கின்றீர்கள். கல்வி புத்தியின் மூலமே கிரகிக்கப்படுகின்றது. ஆத்மாவிலேயே மனமும் புத்தியும் இருப்பதால், அனைத்தையும் ஆத்மாவே கிரகிக்கின்றார். ஓர் ஆத்மாவிற்கு ஒரு சரீரம் இருப்பதைப் போன்றே,
ஓர் ஆத்மாவிற்கு மனமும் புத்தியும் உள்ளது. அவர் புத்தியினால் கிரகிக்கின்றார். யோகம் இருந்தால் மாத்திரமே அவரால் கிரகிக்க முடியும்.
தந்தை இங்கே அமர்ந்திருந்து மிகவும் இலகுவான விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். மக்கள் பல சிரமமான விடயங்களையே கூறியுள்ளார்கள். சமயநூல்களில் பல அபிப்பிராயங்கள் உள்ளன.
கீதையின் ஞானம் எங்கும் பரவியுள்ளது.
பலரும் கீதையில் இருந்து அர்த்தங்களை எடுத்துக் காட்டுகின்றார்கள். அவர்கள் பல வகையான கீதைகளை உருவாக்கியுள்ளார்கள். ‘இன்னாருடைய சமயநூல், இன்னாருடைய வேதம்’ என வேறு எந்த சமயநூல்களையிட்டும் கூறப்படுவதில்லை. கீதையை பொறுத்தவரையில், அவர்கள் கூறுகின்றார்கள்: காந்தி கீதை,
தாகூர் கீதை,
ஞானேஸ்வர் கீதை,
அஷ்டவர்கா கீதை போன்றன உள்ளன.
அவர்கள் கீதைக்குப் பல தலைப்புகளைக் கொடுத்துள்ளார்கள். வேதங்கள் அல்லது வேறு எந்தச் சமயநூல்களுக்கும் இத்தனை தலைப்புகள் கொடுத்திருப்பதை நீங்கள் என்றுமே கேள்வியுற்றிருக்க மாட்டீர்கள். எவ்வாறாயினும், மக்கள் எதனையும் அறவே புரிந்து கொள்வதில்லை. இந்த ஞானம் மறைந்து விடும். எனவே,
நீங்கள் எங்கிருந்து தேவ இராச்சியத்தைப் பெறுவீர்கள்? நிச்சயமாக சுவர்க்கத்தைப் படைப்பவரே அதனை உங்களுக்குக் கொடுக்கின்றார். தந்தை இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தை, அதுவும்
21 பிறவிகளுக்கான இராச்சியத்தைக் கொடுக்கவே வந்துள்ளார்.
ஒரு குமாரி
21 குலங்களை ஈடேற்றுபவர் என்று நினைவு கூரப்படுகின்றது. இப்பொழுது,
அந்தக் குமாரி யார்? நீங்கள் அனைவருமே குமார்களும்,
குமாரிகளும் ஆவீர்கள்.
ஸ்ரீமத்தை அல்லது தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதனால், 21 பிறவிகளுக்கான இராச்சிய பாக்கியத்தை எவரேனும் அடைய உங்களால் அவர்களுக்கு உதவ முடியும்.
ஒரு பாடசாலையில் கற்பவர்களுக்குத் தாம் மாணவர்கள் என்பது தெரியும். ஏனைய சத்சங்கங்களிலுள்ளவர்கள் தம்மை மாணவர்களாகக் கருதுவதில்லை.
மாணவர்கள் தமது புத்தியில் தமது இலக்கையும் இலட்சியத்தையும் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் கடவுளின் மாணவர்கள்.
கடவுள் பேசுகின்றார்:
நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பித்து,
உங்களை மனிதர்களில் இருந்து தேவர்களாக மாற்றுகின்றேன். தேவர்களின் இராச்சியம் நிலவியது.
தேவர்களான அரசனும் அரசியும் எவ்வாறோ,
அவர்களின் பிரஜைகளும் அவ்வாறே இருந்தனர்.
அவர்கள் சாதாரண மனிதரில் இருந்து நாராயணன் ஆகினார்கள்.
இந்த இலக்கும் இலட்சியமுமே முதலாவதாகும்.
அவர் (சிவபாபா)
அரசர் இராமரையோ அல்லது அரசி சீதையையோ உருவாக்குவார் என்றில்லை. இது இராஜயோகம் என்பதால் அவர் இராஜாக்களையும் இராணிகளையுமே உருவாக்குவார். நீங்கள் இழந்த இராச்சியத்தை மீண்டும் உங்களுக்குக் கொடுப்பதற்கே ஒவ்வொரு சக்கரத்திலும் நான் மீண்டும் ஒருமுறை வருகின்றேன்.
உங்கள் இராச்சியத்தை உங்களிடமிருந்து அபகரித்தவர் ஒரு மனிதர் அல்ல. மாயையே உங்களிடமிருந்து அதனை அபகரித்தாள் என்பதால் இப்பொழுது நீங்கள் மாயையை வெற்றி கொள்ள வேண்டும்.
அது ஒருவரையொருவர் வெற்றி கொள்வதற்காக அரசர்களுக்கு இடையில் இடம்பெறும் யுத்தமாகும்.
இப்பொழுது இது மக்களை மக்கள் ஆளும் ஆட்சியாகும்.
எல்லைக்குட்பட்ட அரசர்களுக்கிடையில் எண்ணிக்கையற்ற யுத்தங்கள் இடம்பெற்றன. அவற்றினூடாக அவர்கள் எல்லைக்குட்பட்ட இராச்சியங்களைக் கைப்பற்றினார்கள். எனினும், இந்த யோக சக்தியினூடாக,
நீங்கள் உலக இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். இது அகிம்சை யுத்தம் எனப்படுகின்றது. இவ் யுத்தத்தில் நீங்கள் கொல்கின்றீர்கள் என்றோ கொலை செய்யப்படுகின்றீர்கள் என்றோ இல்லை. ஏனெனில் இது யோக சக்தியாகும். இது மிகவும் இலகுவானதாகும்! பாபாவுடன் யோகம் செய்வதால், நாங்கள் பாவச் செயல்களை வெற்றி கொள்கின்றோம்.
அப்பொழுது மாயையினால் எங்களைத் தாக்க முடியாது. அவர்கள் ஹத்தாம்;தாய் பற்றி ஒரு நாடகம் நிகழ்த்துவதுண்டு, அதில் அவரின் வாயில் ஒரு முத்தை இடுவதனால் மாயை அகன்று விடுகின்றாள். அதன் பின்னர் முத்து வெளியில் எடுக்கப்பட்டவுடன் மாயை மீண்டும் வருகின்றாள். அல்லா அலாவுதீன் பற்றியும் ஒரு நாடகம் உள்ளது. ஏதோ ஒன்றைத் தட்டும் போது, சுவர்க்கம் தோன்றுகின்றது. அது சுவர்க்கம் ஆகும்.
ஆகையால், தந்தை இங்கமர்ந்திருந்து பிரம்மாவினூடாகச் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். பரமாத்மாவான பரமதந்தை நரகத்தை ஸ்தாபிக்க மாட்டார். அவ்வாறு ஸ்தாபிப்பாராயின், அவரின் கொடும்பாவியையும் அவர்கள் உருவாக்குவார்கள். எவ்வாறாயினும், இராவணனன் அனைவரதும் எதிரி என்பதால்,
அவர்கள் அவனின் கொடும்பாவியை உருவாக்குகின்றார்கள். சுவர்க்கத்தைப் படைப்பவரான தந்தையை உங்கள் கண்களில் நீங்கள் ஒத்திக் கொள்ள வேண்டும்.
தந்தை கூறுகின்றார்:
வந்து தம்மைத் துன்பத்திலிருந்து விடுவிக்குமாறு பக்தர்கள் என்னை நினைவு செய்கின்றார்கள், ஆகையாலேயே நான் வந்து, அவர்களை துன்பத்திலிருந்து விடுவிக்கின்றேன். தந்தையே முக்தியளிப்பவரும் ஆன்மீக வழிகாட்டியும் ஆவார். அவர் உங்கள் அமைதிதாமத்திற்கு உங்களை மீண்டும் அழைத்துச் செல்கின்றார்.
அன்பிற்கினியவருடன் இருப்பவர்கள் மீது அழியாத ஞான இரத்தினங்களின் மழை பொழிகின்றது.
இந்த ஞான இரத்தினங்களிற்கு உங்களால் விலை மதிப்பிட முடியாது. பாபா ஞானக்கடலாவார். ஆகையால் அப்பாகம் நிச்சயமாக ஆத்மாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பரமாத்மாவான பரமதந்தையே கூறுகின்றார்:
கடவுள் என்று உங்களால் அழைக்கப்படும் ஆத்மாவான நான்,
பக்தர்களைப் பராமரித்து அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கின்ற பாகத்தின் பதிவையும் கொண்டுள்ளேன்.
மாயையே அனைவருக்கும் துன்பத்தை விளைவிக்கின்றாள். பக்தர்களுக்குத் தற்காலிகச் சந்தோஷத்தைக் கொடுக்கும் பாகமும் என்னுடையதாகும். நான் மாத்திரமே அவர்களுக்குக் காட்சிகளை அருளி, அவர்களுக்குத் தெய்வீகப் புத்தியையும் கொடுக்கின்றேன். இதுவே ஞானம் என்ற மூன்றாவது கண் என அழைக்கப்படுகின்றது. அதனூடாகவே உங்கள் புத்திகளிலுள்ள கோத்ரெஜ் பூட்டுக்கள் திறக்கப்படுகின்றன. எனக்கும் ஒரு பாகம் உள்ளது.
தந்தையுடன் இருப்பவர்களின் மீது ஞான மழை பொழிகின்றது.
இப்பொழுது, எவ்வாறு அத்தனை குழந்தைகளும் அவருடன் இருக்க முடியும்? நீங்கள் தொடர்ந்தும் தந்தையை நினைவு செய்தால்,
நீங்கள் அவருடனேயே இருக்கின்றீர்கள் என்பதே அதன் அர்த்தமாகும்.
சிலர் இலண்டனிலும் ஏனையோர் வேறெங்கேனும் இருக்கக்கூடும், எனவே பௌதீகமாக அவரின் சகவாசம் இருக்க மாட்டாது. அவர்களுக்கும் முரளி அனுப்பப்படுகின்றது. புத்திசாலிகளும், விவேகமானவர்களும் ஒரு வாரத்திலேயே அனைத்தையும் மிகவும் நன்றாகப் புரிந்து கொள்வார்கள். அதன் பின்னர் நான் அவர்களைச் சுயதரிசன சக்கரதாரிகள் ஆக்குகின்றேன். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது 84 பிறவிகளின் சக்கரத்தின் இரகசியங்களைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். இந்தச் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுவதால், நீங்கள் மாயையான இராவணனின் தலையை வெட்டுகின்றீர்கள். அதாவது நீங்கள் அவனை வெற்றி கொள்கின்றீர்கள். எனினும் எவரதும் தலையை வெட்டுதல் என்று எதுவுமே இல்லை.
மக்கள் வன்முறைக்காக ஆயுதங்கள் போன்றவற்றைக் காட்டியுள்ளார்கள். உண்மையில்,
உங்கள் வாயே சங்காகும். சுயதரிசனச் சக்கரம் புத்தியினால் சுழற்றப்பட வேண்டும்.
எனவே, பக்தி மார்க்கத்தில் அவர்கள் அவ்வாறான பல சின்னங்களைக் கொடுத்துள்ளார்கள். பக்தி மார்க்கத்தில் தொடரும் அதே சமயநூல்கள் அனைத்தும்,
நாடகத்திற்கு ஏற்ப,
தொடரும். இந்த உண்மையான கீதை ஒருவரின் கையில் கிடைக்கும் போது,
அவர்கள் இங்கிருந்து எதையாவது எடுத்து,
இன்னுமொன்றில் இடும் சாத்தியம் உள்ளது.
எவ்வாறாயினும் அவை அனைத்தும் ஒரேமாதிரியாகவே இருக்கும். இங்கிருந்து எடுத்த சில வார்த்தைகள் அந்த கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளன. ‘கடவுள் பேசுகின்றார்’ என்பது சரியாகும். ‘இராஜயோகம்’
என்பதும் சரியாகும்.
தந்தை கூறுகின்றார்:
நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். உங்கள் சரீரம் உட்பட அனைத்தையும் மறந்து விடுங்கள். அதற்கு மாறாக நீங்கள் தூய சரீரம் ஒன்றைப் பெறுவீர்கள்.
ஆத்மாவும் தூய்மையாக்கப்படுகின்றார். உங்களிடம் அதிகளவு செல்வமும் இருக்கும். நீங்கள் அதன் மீது அதிகளவு பேராசை கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் அது தூய பேராசை எனப்படுகின்றது. அதனூடாக முழுப் பாரதமும் தூய்மை ஆகுகின்றது. பாரதமக்கள் ஒரே அரசாங்கமும்,
ஒரே தேசமும்,
ஒற்றுமையும், பிரிவினையற்ற வழிகாட்டலுமுள்ள இராம இராச்சியம் வேண்டும் என்று விரும்புகின்றார்கள். ‘பிரிவினையற்ற’ என்றால் தேவர்கள் என்று அர்த்தமாகும். மற்றையது அசுர வழிகாட்டல் ஆகும். ஸ்ரீமத் தவிர்ந்த ஏனைய அனைத்தும் அசுர வழிகாட்டல்களே ஆகும்.
அதனால் அவர்கள் தொடர்ந்தும் ஒருவரோடொருவர் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகின்றார்கள். கடவுளின் குழந்தைகள் அல்லாததால்,
அவர்கள் அநாதைகள் ஆகியுள்ளார்கள். சத்திய உலகில், தேவர்கள் பிரபுவிற்கும் அதிபதிக்கும் உரியவர்களாவார்கள். அங்கே,
மிருகங்களுமே என்றுமே சண்டையிடுவதில்லை. இங்கே,
அனைவரும் தொடர்ந்தும் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுகின்றார்கள். சத்தியயுகத்;தில், அனைவரும் எல்லையற்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றார்கள். உங்கள் இறை பிறப்புரிமையை நீங்கள் இப்பொழுது தந்தையிடமிருந்து பெறுகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்.
கடவுள் இப்பொழுது உங்கள் நேர் முன்னிலையில் உள்ளார்.
அவர் கூறுகின்றார்:
நான் ஒவ்வொரு கல்பமும் சுவர்க்கத்தை ஸ்தாபிக்க வருகின்றேன்.
நான் குழந்தைகளாகிய உங்களுக்கு ஓர் அற்புதமான பரிசை என்னுடன் எடுத்து வருகின்றேன். தந்தை கூறுகின்றார்: எனது அன்பிற்கினிய நீண்ட நாட்கள் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே, நீங்கள்
5000 வருடங்களின் பின்னர் என்னைச் சந்திக்க மீண்டும் வருகின்றீர்கள். வேறு எவராலும் இவ்வாறு கூறமுடியாது.
அவர்கள் தம்மை பிரம்மா, விஷ்ணு,
சங்கரர் என்று அழைத்த போதிலும் அவர்கள் எவருக்கும் இவ்விடயங்களை எவ்வாறு கூறுவது எனத் தெரியாது. இவ்விடயத்தில் எவருக்கும் பாபாவைப் பிரதிசெய்ய முடியாது.
தந்தை கூறுகின்றார்:
எனது நீண்ட நாள் தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளே, நீங்கள் மாத்திரமே 5000 வருடங்களின் பின்னர் வந்து என்னைச் சந்தித்தீர்கள். பல குழந்தைகள் தொடர்ந்தும் வந்து என்னைச் சந்திப்பார்கள். ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு அதிகளவு முயற்சி தேவைப்படுகின்றது. ஓர் அரசனும் அரசியும் பின்னர் அவர்களுடைய குழந்தைகளும் அங்கிருப்பார்கள். எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கின்றது. அங்கு பல இளவரசர்களும் இளவரசிகளும் இருப்பார்கள்.
குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு இலட்ச அளவினரும்,
நான்கு அல்லது ஐந்து மில்லியன் பிரஜைகளும் இருக்க வேண்டும். ஆகவே இலக்கு மிகவும் உயர்ந்தது. இது தந்தையின் கல்லூரி என்பதால், நீங்கள் மிகவும் நன்றாக முயற்சி செய்யவேண்டும். தந்தை உங்களைப் பிரஜைகளாக அன்றி அரசர்களுக்கெல்லாம் அரசர்களாக ஆகுமாறு கூறுகின்றார்.
சென்ற கல்பத்தில் இவ்வாறு ஆகியவர்கள் மீண்டும் இவ்வாறு ஆகுவார்கள். நாம் பற்றற்ற பார்வையாளராகவிருந்து யார்,
என்ன ஆஸ்தியைப் பெறுகின்றார்கள்; என்று அவதானிப்போம். சிலர் இதை மிக நன்றாகப் புரிந்து கொள்வார்கள். தந்தையே மிகவும் அன்பிற்குரியவர். ஊசிகள் காந்தத்தால் கவரப்படுகின்றன. சில மற்றையதை விட மிகவும் துருப்பிடித்துள்ளன. நெருக்கமாக இருப்பவர்கள் பாபாவை மிகவும் அருகில் வந்து சந்திப்பார்கள். ஒரு சுத்தமான ஊசி மிகவும் விரைவில் ஈர்க்கப்படுகின்றார். நீங்கள் தந்தையுடன் அங்கு வசிக்கும் வகையில் அவர் துருவை அகற்றி ஆத்மாவைப் பிரகாசிக்கச் செய்கின்றார்.
நீங்கள் உருத்திர மாலையில் கோர்க்கப்படவுள்ளீர்கள். இது நினைவு கூரப்பட்ட போதிலும், எவருக்கும் யாருடைய மாலை உருவாக்கப்படுகின்றது என்பது தெரியாது. தந்தை கூறுகின்றார்: எனது மாலையில் ஒருவர் ஆகுபவர்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவார்கள்.
நீங்கள் பக்தர்களின் மாலையைப் பற்றியும் புரிந்து கொண்டுள்ளீர்கள். அது இராவணனுடைய மாலையாகும். இராவணனுடைய மாலையில் முதன்முதலாக இடம்பெறுவது யார்?
பூஜிக்கத் தகுதிவாய்ந்தவரிலிருந்து பூஜிப்பவராக ஆகுவது யார்?
பூஜிக்கத்தகுதியான தேவர்கள் பின்னர் பூஜிப்பவர்களாக மாறுகின்றனர். இவை புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஆழமான விடயங்கள் ஆகும்.
நீங்கள் கொடையாளிகள்.
நீங்கள் உங்கள் சரீரம் உட்பட,
அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றீர்கள். சந்நியாசிகள் கொடையாளிகள் ஆகுவதில்லை.
அவர்கள் தமது வீட்டையும் குடும்பத்தாரையும் துறந்து காட்டிற்குச் செல்கின்றனர். நீங்கள் அனைத்தையும் கடவுளுக்கு அர்ப்பணம் செய்கின்றீர்கள். அனைத்தும் தந்தையாகிய கடவுளுக்காகும். தந்தை பின்னர் கூறுகின்றார்:
எனக்குரிய அனைத்தும் குழந்தைகளாகிய உங்களுக்கே உரித்தாகும். ஒருவர் மரணித்த பின்னர்,
அவருடைய அனைத்து உடைமைகளும் ஒரு விசேஷ பிராமணக் குருவிற்குக் கொடுக்கப்படுகின்றன. தந்தை கூறுகின்றார்;:
நானும் பிராமணக் குருவே (கானிகர்)
ஆவேன். உங்களிடம் உள்ள அனைத்தும் பழைய வைக்கோலைப் போன்றதாகும், நீங்கள் அவை அனைத்தையும் தானம் செய்கின்றீர்கள். நீங்கள் உங்களைத் தந்தையிடம் அர்ப்பணிக்கின்றீர்கள். எவ்வாறாயினும் பின்னர் அது உங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றது. பாபா கட்டடங்களையும் தனக்காகக் கட்டுவதில்லை. சிவபாபாவே அருள்பவர். அவர் உங்களிடம் முழுச் சுவர்க்கத்தின் இராச்சியத்தையும் கொடுக்கின்றார் என்பதாலேயே அவர் வியாபாரி எனவும் அழைக்கப்படுகின்றார். இவை மிகவும் இனிமையான விடயங்கள் ஆகும். பரீட்சைகள் இப்பொழுது முடிவை அண்மித்துக் கொண்டிருக்கின்றன. பாபா, இறுதியாக எப்போதுதான் பரீட்;சைகள் முடிவுபெறும்?
பாபா கூறுகின்றார்:
நீங்கள் மரணிக்க இருக்கும்போதும் ஞானம் முடிவிற்கு வரும்பொழுதும் விநாசம் ஆரம்பிக்கும்.
பின்னர் நீங்கள் உங்கள் வாயில் தங்கக்கரண்டியைக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் பிறப்பெடுப்பதுடன், ஒரு கரண்டியையும் பெறுவீர்கள். இங்கு மக்கள் 30-40 வருடங்கள் வரை கற்கின்றனர் ஆகையால் அதன் பலனை அவர்கள் இங்கேயே பெறுகின்றனர். உங்களுடையது எதிர்காலத்திற்காகும். நீங்கள் ஓர் எதிர்காலப் பிறவியைப் பெறுவதோடு ஓர் இளவரசனாகவும் ஆகுவீர்கள். ஆகவே விநாசம் ஆரம்பிக்கும்பொழுது பரீட்சை முற்றுப்பெறும். ஒரு பக்கம் கல்வி முடிவடையும்,
மறுபக்கம் விநாசம் ஆரம்பமாகும். இருப்பினும் ஒத்திகைகள் தொடந்தும் இடம்பெறும். நீங்கள் இந்தக் கற்றலின் பலனைப் புதிய உலகில் பெறுவீர்கள்.
அங்கு சரீரங்கள்,
ஆத்மாக்கள், இராச்சியம் அனைத்தும் புதியவையாக இருக்கும். இவை ஆழ்ந்த தாரணைக்குரிய விடயங்கள் ஆகும்.
நீங்கள் கற்பதை ஒருபொழுதும் நிறுத்திவிடக்கூடாது. இந்த அற்புதமான விடயங்களைத் தந்தை இங்கமர்ந்து விளங்கப்படுத்துகின்றார். காலம் தாழ்த்தி வருபவர்களும் விரைவில் ஞானத்திலும் யோகத்திலும் ஈடுபட்டு அவர்களும் ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய்,
தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும்,
நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- ஆத்மா, சரீரம் இரண்டையும் தூய்மையாக்குவதற்கு, அப் பழைய சரீரம் உட்பட அனைத்தையும் மறந்து விடுங்கள். உங்கள் சரீரத்துடன் உங்களை முற்றாக அர்ப்பணித்து, முழுமையான ஒரு கொடையாளி ஆகுங்கள்.
- தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுங்கள். தூய பேராசை கொண்டு, தூய்மையற்ற பேராசையைத் துறந்து விடுங்கள். அதன் மூலம் முழு உலகமும் சந்தோஷமாக இருக்க முடியும்.
ஆசீர்வாதம்:
அமிர்தவேளையின் முக்கியத்துவத்தை
அறிந்து கொள்வதன் மூலம், ஒரு விசேட சேவையாளர் ஆகுவதுடன் மகத்துவமானவராகவும் ஆகுவீர்களாக.
தனது கண்களை திறந்தவுடனேயே, தந்தையுடன், தான் இருக்கின்ற அனுபவத்தையும் அத்துடன் தந்தைக்குச் சமமாக இருக்கின்ற ஸ்திதியின் அனுபவத்தை பெறுபவரே ஒரு சேவையாளர் ஆவார். விசேட ஆசீர்வாதங்களுக்கான நேரத்தை அறிந்;திருப்பதுடன், அந்த ஆசீர்வாதங்களை அனுபவம் செய்பவர்களே
விசேட சேவையாளர் ஆவார்கள். இதனை நீங்கள் அனுபவம் செய்யாது விட்டாhல், நீங்கள் ஒரு சாதாரண சேiயாளரே ஆவீர்கள், ஒரு விசேடமானவர்
அல்ல. அமிர்தவேளைக்கும்,
தமது எண்ணங்களுக்கும்,
நேரத்திற்கும், சேவைக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களும், அனைத்தினது முக்கியத்துவத்தை அறிந்திருப்பவர்களும் மகத்துவமானவர்கள்
ஆகுவதுடன், அனைத்தினதும்
முக்கியத்துவத்தை பற்றிப் பிறருக்குக் கூறுவதால்; பிறரையும் மகத்துவமானவர்கள் ஆக்குகிறார்கள்.
சுலோகம்:
சத்தியத்தின் சக்தியே வாழ்வின் மகத்துவமாகும், அதற்கு ஆத்மாக்கள் அனைவருமே தலைவணங்குகிறார்கள்.
---ஓம் சாந்தி---
0 Comments