01-02-2023 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்களுடைய பார்வை சரீரதாரிகளின்
மீது ஈர்க்கப்படக்கூடாது. ஏனெனில் அசரீரியான, ஞானக் கடலான தந்தையே உங்களுக்கு கற்பிக்கின்றார்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன்
வாழும்பொழுதும், ஓர் உயர்ந்த அந்தஸ்தை அடைவதற்கு உங்களால் செய்யக்கூடிய முயற்சி என்ன?
பதில்:
வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்;பொழுதும், ஞான வாளைப் பயன்படுத்துங்கள்.
சுயதரிசனச் சக்கரதாரிகளாகி,
தொடர்ந்தும்; சங்கை ஊதுங்கள். நடந்தும், உலாவியும் திரியும்பொழுதும், எல்லையற்ற தந்தையை நினைவுசெய்து, அந்தச் சந்தோஷத்தில்
நிலைத்திருங்கள். நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். நீங்கள் இந்த முயற்சியையே செய்ய வேண்டும்.
கேள்வி:
யோகத்தின் மூலம் நீங்கள் பெறுகின்ற இரட்டை நன்மைகள் என்ன?
பதில்:
ஒன்று, இந்நேரத்தில்
நீங்கள் பாவச்செயல்கள்
எதையும் செய்வதில்லை.
மற்றையது உங்கள் கடந்த காலப் பாவங்கள் அழிக்கப்படுகின்றன.
பாடல்: தாயே, தாயே, நீங்களே அனைவருக்கும் பாக்கியத்தை
அருள்பவர்.
ஓம் சாந்தி.
உங்களுக்குக் கற்பிப்பவர் யார் என்பதை ஆன்மீக ஒன்றுகூடல்களிலும், கல்லூரிகளிலும் உங்களால் பார்க்க முடியும்.
உங்கள் பார்வை அந்தச் சரீரத்தின் மீதே வீழ்கின்றது.
கல்லூரிகளில் இன்ன பேராசிரியர் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என நீங்கள் கூறுவீர்கள்.
ஓர் ஆன்மீக ஒன்றுகூடலில் இன்ன இ கல்விமான் அந்த ஞானத்தைக் கூறுகின்றார் என நீங்கள் கூறுவீர்கள்.
உங்களுடைய பார்வை மனிதர்களின் மீதே வீழ்கின்றது. இங்கே உங்களது பார்வை ஒரு சரீரதாரியின் மீது வீழ்வதில்லை.
அசரீரியான பரமாத்மாவான பரமதந்தையே இந்தச் சரீரத்தின் மூலமாக உங்களுடன் பேசுகின்றார் என்பது உங்கள் புத்தியிலுள்ளது. உங்கள் புத்தி தாய்,
தந்தையான, பாப்தாதாவை நோக்கிச் செல்கின்றது.
குழந்தைகள் ஏதோவொன்றைக் கூறுகின்றபொழுது, அவர்கள் ஞானக் கடலான தந்தையிடமிருந்து செவிமடுத்தவற்றையே கூறுகின்றார்கள் என்று கூறப்படுகின்றது. அதில் ஒரு வித்தியாசம் உள்ளது. ஆன்மீக ஒன்றுகூடல்களில் அவர்கள் எதைச் செவிமடுக்கின்றனரோ, அவற்றை வேதங்களிலிருந்தே இன்னார் கூறுவதாக அவர்கள் நம்புகின்றனர். மனிதர்களின் அந்தஸ்து,
குலம், கொள்கைகளின் மீதே மக்களின் பார்வை செல்கின்றது.
இவர் ஓர் இந்து, இவர் ஒரு முஸ்லீம்;,
அவர்களுடைய பார்வை அதன் மீதே செல்கின்றது. இங்கே உங்களுடைய பார்வை சிவபாபாவின் மீதே செல்கின்றது; சிவபாபா உங்களுக்குக் கற்பிக்கின்றார். எதிர்காலப் புதிய உலகம் எனும் ஆஸ்தியை உங்களுக்குக் கொடுப்பதற்கே தந்தை இப்பொழுது வந்துள்ளார்.
குழந்தைகளே, சுவர்க்கத்திற்காகவே நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன் என வேறு எவராலும் கூறமுடியாது.
நீங்களும் அந்தப் பாடலைக் கேட்டீர்கள்.
அந்தப் பாடல் கடந்த காலம் பற்றிய பாடலாகும்;.
ஜெகதாம்பா அவ்வாறு இருந்தார். அவர் நிச்சயமாகத் தனது பாக்கியத்தை உருவாக்கினார், ஏனெனில் அவரது ஆலயங்கள் உள்ளன,
ஆனால் மக்கள் அவர் யார் என்றோ, எவ்வாறு அவர் வந்தார் என்றோ, என்ன பாக்கியத்தை அவர் உருவாக்கினார் என்றோ அறியார்கள். எனவே இந்தக் கல்விக்கும்,
அந்தக் கல்விகளுக்கும் இடையில் பகலுக்கும் இரவுக்குமிடையிலான வித்தியாசமுள்ளது. இங்கே ஞானக்கடலான பரமாத்மாவான பரமதந்தை பிரம்மாவின் வாயினூடாக உங்களுக்குக் கற்பிக்கின்றார் என நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை வந்துள்ளார். கடவுள் நிச்சயமாகப் பக்தர்களிடம் வரவேண்டும். வேறு எதற்காகப் பக்தர்கள் கடவுளை நினைவுசெய்கின்றனர்? அனைவரும் கடவுள் எனக் கூறுவது தவறாகும். சர்வவியாபி என்ற கருத்தில் நம்பிக்கை கொண்டவர்கள் தங்கள்; கருத்தை நிரூபிப்பதற்கு, முழு வலிமையையும் பயன்படுத்துவர். உங்களுடைய விளக்கம் வித்தியாசமானது. எல்லையற்ற தந்தையிடமிருந்து குழந்தைகள் மாத்திரமே ஆஸ்தியைப் பெறுகின்றார்கள். சந்நியாசிகள் துறவறப் பாதையான,
விருப்பமின்மைக்கான பாதையைக் கொண்டுள்ளனர், நீங்கள் என்றுமே அவர்களிடமிருந்து சொத்துக்கான உரிமையைப் பெற முடியாது.
அவர்களுக்குச் சொத்து வேண்டியதில்லை. நீங்கள் சதா சந்தோஷம் எனும் சொத்தை வேண்டுகின்றீர்கள். நரகத்தின் செல்வத்திலும், சொத்திலும் துன்பமே உள்ளது.
சிலர் செல்வந்தர்களாக இருந்தபொழுதிலும் அவர்களுடைய நடவடிக்கைகள் மிகவும் அசுத்தமாக உள்ளன,
அவர்கள் தொடர்ந்தும் தங்களுடைய பணத்தைப் பயனற்ற விடயங்களில் அள்ளி வீசுகின்றனர்,
பின்னர் அவர்களது குழந்தைகள் பசியால் மரணிக்கின்றனர், அவர்கள் தங்களையும், தங்களது குழந்தைகளையும் சந்தோஷமற்றவர்கள் ஆக்குகின்றனர். அவர் எல்லையற்ற தந்தையாவார்,
அவர் இங்கமர்ந்திருந்து, குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அங்கே நீங்கள் தற்காலிகமான ஆஸ்தியைக் கொடுக்கின்ற,
பல்வேறு தந்தையரைக் கொண்டிருக்கின்றீர்கள். அங்கே அரசர்கள் இருந்தபொழுதிலும், அவர்கள் எல்லைக்குட்பட்டவர்கள். அவர்களது சந்தோஷம் எல்லைக்குட்பட்டதும், தற்காலிகமானதுமாகும். இந்த எல்லையற்ற தந்தை உங்களுக்கு அழிவற்ற சந்தோஷத்தைக் கொடுப்பதற்கு,
வருகின்றார். இரட்டைக் கிரீடம் அணிந்த பாரத மக்கள் சுவர்க்கத்தின் அதிபதிகளாக இருந்தார்கள், அவர்கள் இப்பொழுது நரகத்தின் அதிபதிகளாகி விட்டார்கள் என அவர் விளங்கப்படுத்துகின்றார். நரகத்தில் துன்பமே உள்ளது,
ஆனால் அவர்கள் கருட புராணத்தில் காட்டியுள்ளவாறு ஆழ்நரகத்தில் அத்தகைய ஆறுகளோ அல்லது நச்சாறுகளோ இருப்பதில்லை. அது அனுபவம் செய்யப்பட வேண்டிய, தண்டனை ஆகும். ஆகவே,
அவர்கள் அந்தப் பயங்கரமான கதைகளை எழுதியுள்ளார்கள். முன்னைய நாட்களில், ஒரு குற்றம் செய்தவரின் பௌதீக அங்கம் வெட்டப்படும். அவர்கள் மிகவும் கடுமையான தண்டனையைப் பெற்றார்கள்.
இப்பொழுது தண்டனை அந்தளவு கடுமையாக இருப்பதில்லை. தூக்கிலிடுகின்ற தண்டனை கடுமையானது அல்ல. அது மிக இலேசானது.
மக்கள் மிக இலகுவாகத் தற்கொலையும் செய்கின்றனர். அவர்கள் தங்களை விரைவில் சிவனுக்கோ அல்லது தேவர்களுக்கோ அர்ப்பணம் செய்கின்றனர். ஓர் ஆத்மா சந்தோஷமற்றிருக்கும்பொழுது, தனது சரீரத்தை நீக்கி,
வேறொன்றை எடுக்க விரும்புகிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
தற்கொலை செய்பவர்கள் அவ்வாறு சிந்திப்பதில்லை. அவர்கள் இங்கேயே தங்களது சரீரங்களை நீக்கி, பின்னர் இங்கேயே வேறு தீய பிறவிகளை எடுக்கின்றனர். அவர்களிடம் ஞானம் இல்லை.
அவர்கள் துன்பத்தின் காரணமாகத் தங்கள் சரீரங்களை அழிக்கின்றனர், இருந்தபொழுதிலும் அவர்கள் ஒரு சந்தோஷமற்ற பிறப்பையே எடுக்கின்றனர். நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்குத் தகுதியானவர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள்.
தற்கொலை செய்பவர்களிலும் பல வகையினர் உள்ளனர். சில மனைவியர் தங்கள் கணவன் மரணிக்கும்பொழுது, தங்கள் சரீரங்களையும் அர்ப்பணிப்பது வழக்கமாக இருந்தது; இது ஒரு வேறுபட்ட விடயம். தங்களுடைய கணவன் சென்றுள்ள அதே இடத்திற்கே தாங்களும் செல்வார்கள் என அவர்கள் நம்புகின்றனர், ஏனெனில் அவர்கள் அவ்வாறு செவிமடுத்துள்ளதுடன், பலரும் ஏற்கெனவே அவ்வாறு செய்துள்ளனர். அவளது கணவன் சென்றுள்ள இடத்திற்கே அவளும் செல்வாள் எனச் சமயநூல்களில் எழுதப்பட்டும் உள்ளது. ஆயினும் அந்தக் கணவன் விகாரங்களில் ஈடுபட்டுள்ள ஒருவர், எனவே,
அவர் இந்த மரண பூமிக்கே திரும்பி வந்திருப்பார். இங்கே ஞானச் சிதையில் அமர்வதன் மூலம், நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள்.
ஸ்தாபனைக்குக் கருவிகளாகிய ஜெகதாம்பாவும், ஜெகத்பிதாவும் சுவர்க்கத்தைப் பராமரிப்பவர்கள் ஆகுவார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள்.
விஷ்ணுவின் குலம் என்றால் என்ன என்பதை மக்கள் அறிய மாட்டார்கள்.
விஷ்ணு சூட்சும உலகவாசி, எனவே எவ்வாறு அவரது குலம் இருக்க முடியும்? விஷ்ணுவின் இரட்டை ரூபமான இலக்ஷ்மி, நாராயணனே அங்கு ஆட்சிசெய்வதுடன், பராமரிப்பையும் வழங்குகின்றார்கள் என்பதை இப்பொழுது நீங்கள் அறிவீர்கள்.
இது ஞானச் சிதையாகும். நீங்கள் அந்த ஒரேயொரு கணவருக்கெல்லாம் கணவனானவருடன் யோகம் செய்கின்றீர்கள். அவர் கணவருக்கெல்லாம் கணவரும், தந்தையருக்கெல்லாம் தந்தையுமான சிவபாபா ஆவார். அவரே அனைத்தும் ஆவார்.
உறவுமுறைகள் அனைத்தும் அவருடனேயே இணைக்கப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்:
இப்பொழுது நீங்கள் கொண்டுள்ள தாய்வழி,
தந்தைவழி மாமன்மார் அனைவரும் இந்நேரத்தில் துன்பத்துக்கான அறிவுரைகளையே உங்களுக்குக் கொடுக்கின்றார்கள். இந்நேரத்தில், அவர்கள் தவறான பாதைக்கான அசுர வழிகாட்டல்களையே உங்களுக்குக் கொடுப்பார்கள். எல்லையற்ற தந்தை வந்து, குழந்தைகளாகிய உங்களுக்குச் சரியான வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். உதாரணமாக உங்கள் லௌகீகத் தந்தை உங்களைக் கல்லூரியில் கற்று, ஒரு சட்டநிபுணர் ஆகுமாறு வினவக்கூடும். அந்த வழிகாட்டல்கள் தவறானவை அல்ல. அவை உங்களின் சரீரங்களிற்கான ஜீவனோபாயத்துக்குச் சரியானவை.
நீங்கள் அந்த முயற்சியைச் செய்ய வேண்டும். அத்துடன்,
நீங்கள் உங்களுடைய எதிர்கால 21 பிறவிகளுக்கான சரீரங்களின் ஜீவனோபாயத்திற்கான முயற்சியையும் செய்ய வேண்டும். உங்கள் சரீரங்களின் ஜீவனோபாயத்திற்காக நீங்கள் கற்கின்றீர்கள். சமயநூல்களின் கல்வியானது துறவறப் பாதையில் உள்ளவர்களின் ஜீவனோபாயத்திற்கு உரியது. அவர்கள் அதைத் தங்களின் சொந்த ஜீவனோபாயத்திற்காகவே கற்கின்றனர். சந்நியாசிகளும் தங்களது ஐPவனோபாத்துக்காகச் சம்பாதிக்கின்றனர். சிலர் 50 ரூபாய்களையும், சிலர் 100 ரூபாய்களையும், சிலர் 1000 ரூபாய்களையும் கூட சம்பாதிக்கின்றனர். காஷ்மீர் அரசர் இறந்தபொழுது,
ஆரிய சமாஜியைச் சேர்ந்தவர்கள் அதிகளவு பணத்தைப் பெற்றார்கள்.
அவர்கள் அவை அனைத்தையும் தமது சொந்தத் தேவைகளுக்காகவே செய்கின்றனர். செல்வம் இல்லாமல் சந்தோஷம் இருக்க மாட்டாது.
ஒருவரிடம் செல்வம் இருக்கும்பொழுது, அவரால் மோட்டார் வண்டியில் பயணம் செய்ய முடியும். முன்னர்,
சந்நியாசிகள் பணத்துக்காகத் துறவை மேற்கொள்வதில்லை; அவர்கள் வெறுமனே காட்டுக்குச் சென்று விடுகின்றனர். அவர்கள் இந்த உலகில் களைப்படைந்து, தங்களை விடுவித்துக் கொள்கின்றனர்.
ஆயினும் அவர்களால் அவ்வாறு விடுபட முடியாது. ஆம்,
அவர்கள் தூய்மையாக இருக்கின்றனர்; அவர்கள் தங்களுடைய தூய்மையின் சக்தியால் பாரதத்திற்குச் ஆதாரம்; கொடுக்கின்றனர். அவ்விதமாக பாரதத்திற்கு அவர்கள் சந்தோஷத்தைக் கொடுக்கின்றனர். அவர்கள் தூய்மையாக இருக்கவில்லையெனில், பாரதம் அதிகளவுக்கு விலைமாந்தர் இல்லமாக ஆகியிருக்கும். ஒன்று துறவறப் பாதைக்குச் சொந்தமானவர்களினதும், மற்றையது தூய்மையைக் கற்பிக்கின்ற தந்தையினதுமாகும். அவர்களது தூய்மை துறவறப் பாதைக்கு உரியது.
இந்தத் தூய்மை இல்லறப் பாதைக்குரியது. பாரதத்திலேயே தூய இல்லறப் பாதை இருந்தது. தேவர்களான நாங்கள் தூய்மையாக இருந்தோம். ஆனால் இப்பொழுது நாங்கள் தூய்மையற்றவர்களாகி விட்டோம்.
ஐந்து விகாரங்களினால் கல்பத்தின் அரைப் பகுதி முழுவதும் நாங்கள் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளோம். சிறிதுசிறிதாக மாயை உங்களை முற்றிலும் தூய்மையற்றவர்களாகவும், பாவகரமானவர்களாகவும் ஆக்கி விட்டாள்.
இவ்வுலகம் தூய்மையற்றது என்பதை அவர்கள் புரிந்து கொண்டாலும்,
எவ்வாறு நாங்கள் தூய்மையானவர்களிலிருந்து தூய்மையற்றவர்கள் ஆகுகிறோம் என உலகிலுள்ள எந்த மனிதருமே அறியார்.
உதாரணமாக, ஒரு கட்டடத்தின் ஆயுட்காலம்
100 வருடங்களாக இருந்தால்,
50 வருடங்களுக்கு அது புதியது என்றும்,
50 வருடங்களுக்கு அது பழையது என்றும் கூறப்படுகின்றது. அது தொடர்ந்தும் படிப்படியாகப் பழையதாகுகின்றது. இந்த உலகமும் அவ்வாறே ஆகும். முற்றாகவே புதியதான உலகில் சந்தோஷம் உள்ளது,
அதன்பின்னர் அரைக் கல்பத்துக்குப் பின்னர்,
அது பழையதாகுகின்றது. சத்திய யுகத்தில் எல்லையற்ற சந்தோஷம் உள்ளது என்பது நினைவுகூரப்படுகின்றது. பின்பு உலகம் பழையதாகும்பொழுது, துன்பம் ஆரம்பிக்கிறது. இராவணன் துன்பத்தை விளைவிக்கிறான். பின்னர் தங்களைத் தூய்மையற்றவர்களாக்கிய இராவணனின் கொடும்பாவியை மக்கள் எரிக்கின்றனர். அவனே மாபெரும் எதிரியாவான்.
இராவணன் எரிக்கப்படக்கூடாது என ஒருவர் அரசாங்கத்துக்கு விண்ணப்பம் செய்தார், ஏனெனில் மக்கள் துன்பத்தை அனுபவம் செய்கின்றனர்.
அவர்கள் இராவணனை ஒரு பெரிய கல்விமானாகக் காட்டுகின்றார்கள். அமைச்சர்கள்; போன்ற எவருமே இதைப் புரிந்துகொள்வதில்லை. துவாபர யுகத்திலேயே இராவண இராச்சியம் ஆரம்பிக்கின்றது என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள்.
பாரதத்தில் மாத்திரமே மக்கள் இராவணனின் கொடும்பாவியை எரிக்கின்றனர். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: அறியாமைப் பாதையான, இந்தப் பக்தி மார்க்கம் துவாபர யுகத்திலேயே ஆரம்பமாகுகின்றது. ஞானத்தின் மூலம் பகலும்,
பக்தியின் மூலம் இரவும் உள்ளன.
மக்கள் nஐகதாம்பாவைப் பற்றிப் பாடுகின்ற பாடல்களைப் பாருங்கள்,
ஆனால் அவர் எவ்வாறு பாக்கியத்தை அருள்கின்றார் என அவர்கள் புரிந்துகொள்வதில்லை. அவ்வாறான பெரிய ஒன்றுகூடல் இடம்பெறுகின்றது, ஆனால் nஐகதாம்பா யார் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். வங்காளத்தில்,
அவர்கள் காளி மீது பெருமளவு நம்பிக்கை வைத்துள்ளார்கள், ஆனால் அவர்கள் காளிக்கும், nஐகதாம்பாவுக்கும் இடையில் என்ன வேறுபாடு உள்ளது என்பதை அறிய மாட்டார்கள். அவர்கள்
nஐகதாம்பாவை வெண்ணிறத்திலும் காளியைக் கருமையாகவும் காட்டுகின்றார்கள். nஐகதாம்பா,
இலக்ஷ்மி ஆகுகின்றபொழுது, அவர் அழகானவர் ஆகுகின்றார், 84 பிறவிகளின் பின்னர் அவர் அவலட்சணமானவர் ஆகுகின்றார்.
மக்கள் மிகவும் குழப்பமடைந்துள்ளனர். உண்மையில் காளியும், அம்பாளும் ஒருவரே. அவர்கள் எதையுமே அறிய மாட்டார்கள், இதுவே குருட்டு நம்பிக்கை என அழைக்கப்படுகின்றது. கடந்த காலத்தில்
nஐகதாம்பாவாக இருந்தவரே,
பாரதத்தின் பாக்கியத்தை உருவாக்கினார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிவீர்கள்.
நீங்களும் பாரதத்தின் பாக்கியத்தை உருவாக்குகின்றீர்கள். தாய்மார்களின் பெயர்களே பிரதானமானவை.
தாய்மார்கள் சந்நியாசிகளையும் ஈடேற்ற வேண்டும்.
இதுவும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பரமாத்மாவான பரமதந்தை ஒரு வழிகாட்டலைக் கொடுத்துள்ளார்: அவர்கள் மீது ஞான அம்புகளை எய்யுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் சந்நியாசிகள் போன்றோரைச் சந்திக்கும்பொழுது, ஞானக் கடலான பரமாத்மாவான, பரமதந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என விளங்கப்படுத்த வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் எல்லைக்குட்பட்ட சந்நியாசிகள்,
ஆனால் நாங்களோ எல்லையற்றவர்கள். உங்களுடைய ஹத்தயோகம் முடிவடைகின்ற நேரத்திலேயே, தந்தை எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். ஹத்தயோகமும்,
இராஜயோகமும் ஒரேநேரத்தில் இருக்க முடியாது.
எனவே இப்பொழுது பெருமளவு நேரம் இல்லை; மிகச்சொற்ப நேரமே இப்பொழுது உள்ளது. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே,
வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுதும், தாமரை மலர் போன்று வாழுங்கள்.
பிராமணர்களே தாமரை மலர் போன்று வாழ வேண்டும்.
எவ்வாறாயினும், குமாரிகள் தாமரை மலர் போன்று தூய்மையானவர்கள். விகாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு பாபா கூறுகின்றார்:
தூய்மையாகுங்கள்! வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுதும், தாமரை மலர் போன்று ஆகுங்கள்! நீங்கள் ஒவ்வொருவரும் சுயதரிசனச் சக்கரதாரிகளாக வேண்டும்.
சங்கை ஊதுங்கள்!
ஞான வாளைப் பயன்படுத்துங்கள், உங்கள் படகு அக்கரையைச் சென்றடையும். இதற்கு முயற்சி தேவை.
முயற்சி செய்யாமல் உங்களால் அத்தகைய உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர முடியாது.
நடக்கும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும் அந்தச் சந்தோஷத்தைப் பேணுங்கள்.
தந்தையை நினைவுசெய்யுங்கள்! பெருமளவு சந்தோஷத்தைக் கொடுப்பவர்கள் இயல்பாகவே நினைவுசெய்யப்படுகின்றனர். நீங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் அவரது அறிமுகத்தைப் பிறருக்குக் கொடுக்க வேண்டும். நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்: இந்தப் பிறவியில் லௌகீகக் கல்வியைக் கற்பதனால்,
இப்பொழுது நீங்கள் சட்டநிபுணர் ஆகுவீர்கள்.
அச்சா, உதாரணமாகக் கற்கின்றபொழுதோ அல்லது உங்கள் பரீட்சையில் சித்தியெய்திய பின்னரோ உங்கள் வாழ்க்கை முடிந்து, நீங்கள் சரீரத்தை விட்டு நீங்கினால், அந்தக் கல்வியும் இங்கேயே முடிவடைந்து விடும்.
சிலர் தங்களது பரீட்சையில் சித்தியடைந்து, இலண்டனுக்குச் சென்று,
அங்கே மரணிக்கின்றார்கள்; அந்த நிலையில் அந்தக் கல்வி அங்கேயே அப்பொழுதே முடிவடைகின்றது. அந்தக் கல்வி அழியக்கூடியது, இந்தக் கல்வி அழிக்க முடியாதது;
அது ஒருபொழுதும் அழிவதில்லை. நீங்கள் சென்று புதிய உலகில் ஆட்சிசெய்வீர்கள் என்பதை அறிவீர்கள்.
அது தற்காலிகச் சந்தோஷமாகும். அதுவும் கூட உங்கள் பாக்கியத்தில் அது இருந்தாலே, நீங்கள் அதைப் பெறமுடியும்.
அது எவ்வளவு காலம் நீடிக்கும் என உங்களால் கூற முடியாது.
இங்கே இது நிச்சயமானது. உங்கள் பரீட்சை முடிந்ததும்,
நீங்கள் சென்று,
21 பிறவிகளுக்கான உங்கள் இராச்சிய பாக்கியத்தைக் கோருவீர்கள். நீங்கள் எல்லைக்குட்பட்ட ஆஸ்தியை மட்டுமே ஓர் எல்லைக்குட்பட்ட தந்தை,
ஆசிரியர், குருவிடமிருந்து பெறுகின்றீர்கள். தங்களுடைய குருவிடமிருந்தே தாங்கள் அமைதியைப் பெறுவதாக மக்கள் எண்ணுகின்றனர். ஆயினும் அமைதி இங்கே இருக்க முடியாது. ஓர் ஆத்மா தனது அங்கங்கள் மூலம் செயல்கள் செய்து களைப்படைகின்றபொழுது, அவர் தனது சரீரத்திலிருந்து விடுபடுகின்றார். தந்தை கூறுகின்றார்: உங்கள் ஆதிதர்மம் அமைதியாகும்.
இவை அங்கங்களாகும். நீங்கள் எதுவும் செய்ய விரும்பவில்லை எனில்;, அமைதியாக அமர்ந்திருங்கள். எங்கள் பாவங்கள் அழிக்கப்படக் கூடிய வகையில்,
நாங்கள் சரீரமற்றவராகி, தந்தையுடன் யோகம் செய்கின்றோம். நீங்கள் ஒரு சந்நியாசியிடமிருந்து அமைதியைப் பெறக்கூடும், ஆனால் உங்கள் பாவங்கள் அதனால் அழிக்கப்பட மாட்டாது. இங்கே தந்தையை நினைவுசெய்வதால், நீங்கள் தொடர்ந்தும் பாவச் செயல்களை வென்றவர்கள் ஆகுவீர்கள்.
அச்சா. அம்மக்;கள் அமைதியில் அமர்ந்திருக்கின்றனர், ஒருவேளை அவர்களது பாவங்கள் அழிக்கப்படலாம்; இரட்டை நன்மையுள்ளது. கடந்த காலப் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. எந்தச் சூழ்நிலையிலும், யோக சக்தியில்லாமல், எவரது கடந்த காலப் பாவங்களும் அழிக்கப்பட முடியாது. பாரதத்தின் புராதன யோகம் நினைவுகூரப்படுகின்றது. இதன் மூலமாகவே பல பிறவிகளின் பாவங்கள் அழிக்கப்படுகின்றன் வேறு எந்த வழியுமில்லை.
இந்த விரிவாக்கம் இப்பொழுது முடிவடைய வேண்டும். அரசாங்கமும் கூட அதிகளவு விரிவாக்கத்தை விரும்புவதில்லை. வெகுசிலரே மீதமிருக்க,
மீதி அனைவரும் நீங்கிச் செல்லும் வகையில், நாங்கள் விரிவாக்கத்தை மிகவும் சிறியதாக்குகின்றோம். விநாசம் இடம்பெறும் என்பதை மக்கள் புரிந்துகொள்கின்றார்;கள்,
ஆனால் அவர்கள் சண்டை நிறுத்தப்பட்டதைப் பார்த்ததும், அது இடம்பெறுமா, இல்லையா என்று ஆச்சரியம் அடைகின்றார்கள். ஆகவே,
அவர்கள் அமைதியாகி விடுகின்றனர். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே,
மிகச்சொற்ப நேரமே எஞ்சியுள்ளது. ஆகவே,
எந்தத் தவறும் செய்யாதீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான,
அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய்,
தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும்,
நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- உங்கள் சரீரத்திலிருந்து பற்றற்றவராகி, சரீரமற்றவர்களாகி, உண்மையான அமைதியை அனுபவம் செய்யுங்கள். தந்தையின் நினைவில் இருப்பதனால், உங்களைப் பாவச் செயல்களை வென்றவர்கள் ஆக்குங்கள்.
- உங்களின் வெகுமதியை அழிவற்றதாக்குவதற்கு, இந்த அழிவற்ற கல்வியில் முழுக் கவனம் செலுத்துங்கள். பிழையான வழிகாட்டல்கள் அனைத்தையும் பின்பற்றுவதைத் துறந்து, ஒரே தந்தையின் சரியான வழிகாட்டல்களை மாத்திரம் பின்பற்றுங்கள்
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு
மேன்மையான ஸ்திதியில்
நிலைத்திருந்து, சடப்பொருளின்
குழப்பத்தின் தாக்கம்
எதற்கும் அப்பால்
இருந்து, சடப்பொருளை
வென்றவர் ஆகுவீர்களாக.
நீங்கள் மாயையை வெல்பவர்கள் ஆகுகின்றீர்கள், ஆனால் நீங்கள் இப்பொழுது சடப்பொருளை வெல்பவர்களாகவும் ஆகவேண்டும், ஏனெனில் இப்பொழுது சடப்பொருளின் குழப்பம் பெருமளவில் உள்ளது. சிலசமயங்களில்,
கடல்நீர் தனது தாக்கத்தைக் காட்டும், சிலசமயங்களில்,
பூமி தனது தாக்கத்தைக் காட்டும், நீங்கள் சடப்பொருளை வென்றவர் எனில், சடப்பொருளின் குழப்பம் எதனாலும் உங்களை அசைக்க முடியாது. ஒரு பற்றற்ற பார்வையாளராக
நீங்கள் அனைத்து விளையாட்டையும் அவதானிப்பீர்கள். தேவதைகளை மேலே மலைகளில் காட்டியுள்ளதைப்
போல், அவ்விதமாகவே,
தேவதைகளாகிய நீங்களும் ஒரு மேன்மையான ஸ்திதியில் நிலைத்திருக்க வேண்டும். அதனால் நீங்கள் மேலே இருக்கும்பொழுது,
இயல்பாகவே குழப்பம் எதற்கும் அப்பால் நிலைத்திருப்பீர்கள்.
சுலோகம்:
சகல ஆத்மாக்களுக்கும்
உங்கள் மேன்மையான அதிர்வலைகள் மூலம் ஒத்துழைப்பின்
அனுபவத்தைக் கொடுப்பதும்
கூட தபஸ்யாவே ஆகும்.
---ஓம் சாந்தி---
0 Comments