27-04-2023 காலை
முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே!
யோகத்தின் மூலம்
தான் சக்தி
கிடைக்கும். அநேகப்
பிறவிகளின் பழைய
பழக்கங்கள் நீங்கும்.
சர்வ குணங்கள்
தாரணையாகும். அதனால்
முடிந்த வரை
பாபாவை நினைவு
செய்யுங்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எந்த ஓரு ஓட்டப் பந்தயம் செய்து கொண்டிருக் கிறீர்கள்? அந்தப் பந்தயத்தில்
களைப்பு எப்போது வரும்?
பதில்:
குழந்தைகளாகிய நீங்கள் இப்போது வெற்றி மாலையின் மணியாக ஆவதற்கான ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டிருக்கிறீர்கள். இந்தப் பந்தயத்தில் சிலர் மிக நன்றாக ஓடுகிறார்கள். சிலர் களைத்து விடுகிறார்கள். களைத்துப் போவதற்கான காரணம் படிப்பின் மீது கவன மின்மை யாகும். நடத்தையை சீர்திருத்திக்
கொள்வதில்லை. அத்தகைய குழந்தைகள் மீது சந்தேகம் ஏற்படுகிறது. அதாவது நாளை இந்தக் குழந்தை இருக்காது. காமம் அல்லது கோப வசமாகிற காரணத்தால் தான் களைப்பு வருகின்றது. பிறகு சொல்கிறார்கள், இப்போது மேலே செல்ல இயலவில்லை, எது நடக்க வேண்டுமென்று இருக்கிறதோ அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று. இதுவும் கூட ஆச்சரியமளிக்கிறது இல்லையா?
பாடல்: யாரோ என்னைத் தம்முடையவராக்கி,
புன்சிரிக்கக் கற்றுத் தந்தார்...
ஓம் சாந்தி.
பகவான் வாக்கு,
மனிதரை அல்லது தேவதையை ஒருபோதும் பகவான் என்று சொல்ல முடியாது.
இது குழந்தைகளுக்குப் புரியவைக்கப் பட்டுள்ளது...
பரமாத்மா ஒருவரே.
அவருக்குக் கோவில்களும் கட்டிக் கொண்டே இருக்கின்றனர். அவரைத்தான் சிவன் என்றும் சோமநாதர் என்றும் சொல்கின்றனர். அவர் வந்து குழந்தைகளுக்குச் சொல்கிறார்... இனிமை யிலும் இனிமையான குழந்தைகளே! என்னை அந்த வீட்டில் இருப்பதாக நினைவு செய்யுங்கள், நான் பரந்தாமநிவாசி. (வசிப்பவன்)
நான் இங்கே இந்த சரீரத்தில் வந்து சொல் கின்றேன், நீங்கள் எங்கே போகவேண்டுமோ அங்கே உங்களது நினைவு செல்ல வேண்டும். இங்கே இந்த உலகை நினைவு செய்வதெல்லாம் கூடாது. நான் இங்கே வந்திருக்கிறேன், குழந்தைகளாகிய உங்களின் புத்தியோகத்தை அங்கே ஈடுபடுமாறு செய்வதற்காக.
ஏ குழந்தை களே! என்னை எனது பரந்தாம் வீட்டில் நினைவு செய்யுங்கள். இதையோ நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், இந்த தமோகுணம் நிறைந்த உலகில் ஒவ்வொருவரின் சம்ஸ்காரமும் ஒவ்வொரு விதமாக இருக்கும்.
யார் நல்லபடி தாரணை செய்கிறார்களோ, அவர்களை நிச்சயமாக நல்லவர் என்றே சொல்வார்கள். ஆனால் சிலரோ எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் சீர்திருந்துவதே இல்லை. ஸ்ரீமத் படி நடப்பதே இல்லை. அவர்களுக்காகச் சொல்லப்படுகிறது, அதாவது இவர்கள் அஜாமில் போன்றவர்களை விடவும் மோசமானவர்கள். படிக்கவில்லையென்றால் போய் மிகத் தாழ்ந்த பதவி அடைவார்கள்.
உத்தமம், மத்யம்,
கனிஷ்டம் (உயர்ந்தது,
இடைப்பட்டது, தாழ்ந்தது)
என்று மூவகைப் பதவிகள் உள்ளன.
ஆக, யார் ஸ்ரீமத் படி நடப்பதில்லையோ, அவர்களைப் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும் இவர்களோ அஜாமிலைக் காட்டிலும் மிக மோசமான அஜாமில்
(கொடுமையான பாவிகள்).
ஜென்ம ஜென்மாந்தரமாக (பல பிறவிகளாக)
இப்படி ஏதாவது பாவம் செய்தே வந்திருக் கின்றனர்.
சிலருக்கு இது நல்ல பிறவியாக இருக்கலாம். சிலருக்கு இது நல்ல பிறவியாக இல்லாது போனாலும் படிப்பின் மூலம் உயர்ந்து செல்ல முடியும்.
இப்போது குழந்தைகள் நாம் 84 பிறவிகளை எப்படிக் கடந்து வந்துள்ளோம்? என்று அறிவீர்கள், நாம் வருங்காலத்தில் உயர்ந்த பதவி அடைவதற்காகப் படித்துக் கொண்டிருக்கிறோம். பாபா சொல்கிறார்,
உங்களது மனம் என்ற கண்ணாடியில் உங்கள் நடத்தை நடவடிக்கைகளைப் பாருங்கள்.
பாபா அடிக்கடி குழந்தைகளுக்குச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்,
உங்களது நடத்தையைச் சீர்திருத்திக் கொள்ளுங்கள்.
நாம் சொர்க்கத்திற்குத் தகுதியானவராக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை யார் புரிந்து கொள்கிறார்களோ அவர்கள் மற்றவர்களையும் தகுதியுள்ளவராக ஆக்குவார்கள். அவர்களுடைய நடத்தையில் மிகுந்த வேறுபாடு இருக்கும்.
இங்கே தேவதைகளுக்குரிய தன்மையைக் காட்ட வேண்டும். அசுரத்தன்மையைக் காட்டுவதன் மூலம் பதவி கீழானதாக ஆகிவிடும். உண்மையில் நாமெல்லாம் சுடுகாட்டில் வசித்திருந்தோம். இராவணன் சுடுகாடாக ஆக்கிவிட்டான். தந்தை வந்து சுடுகாட்டி-ருந்து மீட்கின்றார் முழு உலகமுமே இச்சமயம் சுடுகாடாக உள்ளது.
அதிலும் நம்பர் ஒன் பாரதம்.
முதன் முதலில் நம்பர் ஒன் பரிஸ்தானாக (தேவதா லோகமாக) இருந்தது.
இப்போது கபிரிஸ்தான்
(சுடுகாடு).
பாபா சொல்லிப் புரிய வைக்கிறார்,
உங்கள் முகத்தைப் பாருங்கள் நீங்கள் தெய்வீக நடத்தை யில் செல்வதற்குத் தகுதியானவர்களா? நாம் ஸ்ரீமத் படி நடந்து கொண்டிருக்கிறோம் என நினைக்கிறீர்களா? மம்மா பாபா மற்றும் தன்னை அர்ப்பணித்துள்ள குழந்தைகள் போல் குணங்கள் வந்து கொண்டே இருக்கின்றனவா? காமத்தையோ விட்டாயிற்று, நல்லது,
கோபம் என்ற பூதம் என்னிடம் இல்லையே? இந்த பூதங்களும் மிகவும் கெட்டவை. கோபத் தினாலோ ஒருவர் மற்றவரை எரித்து விடுவார்கள். இது மிகப் பெரிய விரோதி. இதையும் கூட விரட்ட வேண்டும். எனக்குள் எந்த ஒரு அவகுணமும் இல்லாதிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். நான் ஸ்ரீமத்படி நடக்கவில்லை யென்றால் முழுமையாக அழிவு நேர்ந்து விடும். அதுவும் நிலையானதாக ஆகவேண்டும் ஆகவே ஆத்மா நல்லதாக ஆகவேண்டும்,
ஸ்ரீமத் கிடைக்கின்றது. எதுவரை யோகா இல்லையோ, அதுவரை சீர்திருந்த முடியாது.
எவ்வளவு பாபாவை நினைவு செய்கிறீர்களோ அவ்வளவு சக்தி வரும். நற்குணங்களை தாரணை செய்ய வில்லை என்றால் மாயா ஒவ்வொரு அடியிலும் அடி கொடுக்கும். நான் கோபப்பட மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள்.
ஆனால் 5 நிமிடத்திலேயே கோபப்பட்டு விடுவார்கள்.
அசல் பழக்கங்கள் ஜென்ம ஜென்மாந்தரமாக இருந்து வந்தவை என்றால் அவற்றை நீக்குவதில் சிறிது காலமாகிறது. இந்த பூதங்களை முழுமையாக வசப்படுத்த வேண்டும்.
பேராசை, மோகம் இவையெல்லாம் அவற்றின் சிறுசிறு குழந்தை குட்டிகள். விகாரங்களின் பூதங்களும் கூட நம்பர்வார் உள்ளன.
முதலில் அசுத்த அகங்காரம், பிறகு காம, குரோதம்....
இந்த போதனை வேறு யாரும் தரமுடியாது. ஆகவே குழந்தைகளே! ஆத்ம அபிமானி ஆகுங்கள்.
ஆத்மாவை நினைவு செய்யுங்கள். சந்நியாசிகளோ தங்களைப் பரமாத்மா என நினைத்துக் கொண்டுள்ளனர். ஆத்மாவே பரமாத்மா எனச் சொல்கின்றனர். பாபா சொல்கிறார், நீங்கள் தேகி, ஆத்மா,
(தேகி) ஆத்மாவே பரமாத்மா அல்ல.
இவ்வளவு பேரும் பரமாத்மாவாக எப்படி இருக்க முடியும்?
பரமாத்மாவோ பிறப்பு இறப்பு இல்லாதவர்.
அவர் பரமபிதா பரமாத்மா எனச் சொல்லப்படுகிறார். அவர் அமர்ந்து குழந்தைகளாகிய உங்களுக்குச் சொல்லிப் புரிய வைக்கிறார்.
இப்போது தீவிரமாகப் புருஷார்த்தம் செய்யுங்கள்.
மரணம் எந்த நேரமும் ஏற்பட்டு விடும். பிறகு எதுவுமே செய்ய முடியாது. அநேக விதமான விபத்துகள் நடந்து கொண்டே இருக்கும். ஆபத்துகள் இதோ வந்தேவிட்டன.
இன்று நாளை,
இன்று நாளை என்று சொல்லியே இறந்து விடுவார்கள்.
பிறகு பதவி பெறமுடியாது. கடமை தவறாத நல்ல குழந்தைகளோ சிவபாபாவின் சொல்படி கேட்கிற உண்மையுள்ளவர்களாக உள்ளனர்.
பாபா, குழந்தைகள் அனைவரையும் அறிவார்.
இராவணன் அனைவரையும் அழுக்காக்கி விட்டுள்ளான்.
இதன் பெயரே டெவில் வேர்ல்டு
- அசுர உலகம்.
இப்போது பாபா உங்களை தேவதைகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். ஸ்ரீமத் படி நடந்தால் அப்படி ஆவீர்கள். பாட சாலையில் கற்பிக்கவும் செய்கிறார்கள், நன்னடத்தையைக் (மேனர்ஸை) கற்றுத் தரவும் செய்கிறார்கள். இங்கும் கூட மேனர்ஸ் கற்றுக் கொள்கிறீர்கள். முக்கியமானது தெய்வீக நடத்தை.
அசுத்த அகங்காரம் மிகவும் அழுக்கானது.
இது அனைவரையும் வீழ்த்தி விடும்.
அடிக்கடி தேக அபிமானம் வந்து விடுகின்றது. பாபா சொல்கிறார், தன்னை ஆத்மா என உணர்ந்து என்னை நினைவு செய்வீர்களானால் நீங்கள் என்னிடம் வந்து விடுவீர்கள்.
மாயாவோ அனைவருடைய இறக்கை களையும் வெட்டிப் போட்டு விட்டது. யாரும் திரும்பிச் செல்ல முடியாது. இல்லையென்றால் ஆத்மா பறப்பதில் எவ்வளவு வேகமானது!
ஆனால் பரந்தாமத்திற்கு யாரும் போக முடியாது. பதீதபாவன் பாபாவைத் தவிர வேறு யாரும் தூய்மை யான சரீரமற்ற உலகத்திற்கு அழைத்துச் செல்ல முடியாது, தூய்மையான சரீரமுள்ள தேவதைகள் உலகத்திற்கு (சத்யுகத்திற்கு) வரவும் முடியாது.
மனிதர்களுக்கு வருவது போவது பற்றியும் கூடப் புரிந்து கொள்ள முடியவில்லை.
அழிவு சமயத்தில் கொசுக் கூட்டத்தைப் போல அனைவரையும் பாபா அழைத்துச் செல்வார், பிறகு என்னவாகும்? எதையுமே புரிந்து கொள்வ தில்லை. புதிய உலகம், ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காகவே பாபா வந்துள்ளார்.
கீதையின் பகவான் வந்து இலட்சுமி-நாராயண இராஜ்யத்தை ஸ்தாபனை செய்தார் என்பதை யாரும் புரிந்து கொள்ள வில்லை. மகாபாரத யுத்தம் நடந்த போது நிச்சயமாக ருத்ரன் வந்து ஞான யக்ஞத்தை ஸ்தாபித்திருந்தார். அதன் மூலம் வினாச ஜுவாலை வெளிப் பட்டது, உலகம் வினாசமானது. யாருக்கு இராஜ யோகம் கற்பித்தாரோ அவர்கள் ராஜாவுக் கெல்லாம் மேலான ராஜாவாக,
இலட்சுமி-நாராயணராக ஆனார்கள். நீங்கள் அறிவீர்கள், நாம் பகவானிடம் படிக்கிறோம்.
படித்து சொர்க்கத்தின் எஜமான் ஆகிக்கொண்டிருக்கிறோம். இதற்கு முன்பு கிறிஸ்தவர்களின் இராஜ்யம் இருந்தது.
இப்போது பாரதவாசிகள் நாம் எஜமான் என்று புரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நாம் முழு உலகிற்குமே எஜமான் ஆகிறோம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள்,. பாபா தான் வந்து மனிதர்களை தேவதைகளாக மாற்று கின்றார்.
மனிதரை தேவதையாக எப்படி மாற்றினார்?
எப்போது மாற்றினார்...
இது யாருடைய புத்தியிலும் இல்லை.
கிரந்தத்தைப் படிக்கின்றனர், ஆனால் எதையும் புரிந்து கொள்ளவில்லை.
இப்போது நீங்கள் சொல்ல முடியும்.
ஆக, குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீக குணங்களை தாரணை செய்ய வேண்டும்.
ஸ்ரீமத் படி நடக்க வேண்டும்,
இல்லையெனில் இறக்கைகள் துண்டிக்கப்பட்டு விடும்.
ஞானத்தின் தாரணை முழுமையாக இருந்தால் தெய்வீக நடத்தை கூட வரும்.
மனிதர்களோ அனைவருமே தேக அபிமானிகளாக உள்ளனர், ஏதாவது அவகுணம் இருக்கத் தான் செய்கிறது.
பாபா மிக நன்றாகச் சொல்லிப் புரியவைக்கிறார். கீதையிலும் பகவான் வாக்கு என்பது இருக்கின்றது.
சொல்கிறார்... ஏ குழந்தைகளே! நான் உங்களுக்குப் படிப்பு சொல்லிக் கொடுப்ப தற்காக வந்துள்ளேன்.
நீதிபதி, வக்கீல் என்றெல்லாம் மற்றவர்கள் ஆகிக் கொண்டு தான் இருக்கிறார்கள். நான் உங்களை சொர்க்கத்தின் எஜமானராக மீண்டும் ஆக்குவதற்காக வந்திருக் கிறேன்.
நான் சொர்க்கத்தைப் படைப்பவராக உள்ளேன்.
நான் கல்ப-கல்பமாக வந்து உங்களை சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆக்குகிறேன்.
நீங்கள் இச்சமயம் மிக உயர்ந்த பாக்யசாலிகளாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த விளையாட்டே அப்படித் தான் உள்ளது.
மாயா துர்பாக்யசாலி ஆக்கிவிடுகிறது. நம்பரோ,
சிலர் 100 சதவிகிதம்,
சிலர் 90 சதவிகிதம்,
சிலர் 80 சதவிகிதம் என்று எவ்வளவு படிக்கிறார்களோ, அவ்வளவு முன்னேற்றத்தைக் காட்டுவார்கள். நினைவு வைக்க வேண்டும், நாம் ருத்ரமாலையில் நம்பர் ஒன்றாக வர வேண்டும். எப்படி அந்த மாணவர்கள் வகுப்பு மாறிச் செல்லும் போது ஒரு வகுப்பிலிருந்து அடுத்த வகுப்பில் போய் அமர்ந்து கொள்கின்றனர். மதிப்பெண்கள் வெளிப்படும், அதன் படி நம்பர் கிடைக்கும். பிறகு அப்படியே வரிசைப்படி மாற்றமடைவார்கள். இங்கேயும் ஆத்மாக்களாகிய நீங்கள் படித்து ருத்ர மாலை யில் வரிசைப்படி வருவீர்கள்.
அந்த வம்சாவளி மிகப்பெரியது இல்லையா?
பிறகு அங்கிருந்து விஷ்ணுவின் விஜய மாலையில் வரிசைப்படி வந்து சிம்மாசனத்தில் அமர்வீர்கள்.
நீங்கள் பிரம்மாகுமார் குமாரிகள், ஆனால் இச்சமயம் உங்களுக்கு மாலை இல்லை.
ஏனெனில் பந்தயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று மிக நன்றாக ஓடிக்கொண்டிருக் கின்றனர். நாளை பிறகு நின்று விடுகின்றனர். இன்று யாரைத் தந்தை என்கிறார்களோ, நாளை அவரைக் கைவிட்டு விடுகிறார்கள். அநேகருக்கு சந்தேகம் வந்து விடுகிறது, படிப்ப தில்லை, நன்னடத்தையை தாரணை செய்வதில்லை.
பிறகு சலிப்படைந்து ஓடிப்போவதற்கு முயற்சி செய்கின்றனர். விவாகரத்து செய்து விடுகின்றனர்.
நிறைய சென்டர்களில் நாம் களைத்து விட்டோம் என்று நினைக்கின்ற குழந்தைகள் உள்ளனர். இப்போது நம்மால் மேலே முன்னேறிச் செல்ல முடியாது, என்ன நடக்கவிருக்கிறதோ, நடக்கட்டும் பார்க்கலாம் என நினைக்கின்றனர். நம்பர் ஒன் விரோதியாகிய காம விகாரம் மிகவும் தொந்தரவு செய்கின்றது. கோபக்காரர்களும் சலிப்படைந்துபோய் கையை விட்டுச் சென்றுவிடுகின்றனர். அதிசயம் இல்லையா?
நாயகன் அல்லது பக்தர்களின் பகவான் வந்து மணமுள்ள மலர்களாக ஆக்குவதற்காகப் படிப்பு சொல்லித் தருகின்றார். அவரது கையைவிட்டுச் சென்று விடுகின்றனர். தந்தை அதாவது நாயகன் யாரையும் ஒருபோதும் விவாகரத்து செய்வதில்லை.
நாயகிகள் விவாகரத்து செய்து விட்டு ஓடிப்போய் விடுகின்றனர்.
பிறகு பாபா என்ன செய்ய முடியும்? துரோகி ஆகிவிடு கின்றனர்.
பாபாவோ சொல்கிறார்,
நான் உங்கள் நாயகன், சொர்க்கத்தின் மகாராணி ஆக்குவதற் காக வந்திருக்கிறேன். இந்த இராவணனின் சிறையிலிருந்து விடுவித்து சோகமில்லாத (துயரமில்லாத)
உலகிற்கு அழைத்துச் செல்ல வந்திருக்கிறேன். பிறகும் ஸ்ரீமத் படி நடக்காமல் இராவணனின் பக்கம் போய்விடுகிறார்கள். எப்படி தீர்த்தங்களுக்குச் சென்று விட்டுத் திரும்பி வருகின்றனர், உண்மையான மனதுடன் செல்வதில்லை.
இப்போது உங்களை ஆன்மீக யாத்திரையில் அழைத்துச் செல்கிறேன்.
நீங்கள் அறிவீர்கள்,
இந்த சரீரத்தை விட்டு ஆத்மாக்கள் பரந்தாமம் சென்று விடுவார்கள். பிறகு புருஷார்த்தத்தின் படி வந்து பதவி பெறுவார்கள். நம் நடத்தையின் அனுசாரம் நாம் என்ன பதவி பெறுவோம் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். அஞ்ஞான காலத்திலும் கூடச் சில குழந்தைகள் கீழ்ப்படிதலான, உண்மையான குழந்தைகளாக உள்ளனர்.
சிலரோ கீழ்ப்படியாதவர்களாக உள்ளனர். இங்கும் கூட அப்படிப் பட்டவர்கள் உள்ளனர்.
எவ்வளவு தான் சொல்லிப் புரிய வைத்தாலும் தங்கள் பிடிவாதத்திலிருந்து இறங்குவதில்லை. அப்படியும் கூடக் கெட்ட குழந்தைகளாக இருக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் நமக்கு என்ன பதவி கிடைக்கும் என்று புரிந்து கொள்வதில்லை.
பாபா அடிக்கடி சொல்லிப் புரிய வைக்கிறார். பிறகும் கூட மறந்து விடுகின்றனர். எப்படி கர்ப்ப ஜெயிலில் வாக்குறுதி கொடுக்கின்றனர், நான் எதுவும் செய்ய மாட்டேன் என்று, பிறகு வெளியில் வந்ததும் முன்பு இருந்த மாதிரியே ஆகிவிடு கின்றனர். இங்கே குழந்தைகளும் அதுபோல் உள்ளனர். புத்தியில் கொஞ்சமும் தங்குவதில்லை.
வரிசைப்படி உள்ளனர்,
இவர்கள் கடவுüன் மென்மையான குழந்தைகளா? இல்லையா?
என்பது தெரிந்து விடும். எப்போதும் சொல்படி கேட்டு நடக்கின்ற, சேவையில் ஈடுபடுகின்ற நல்ல குழந்தைகளே மனதில் இடம் பிடிக்கின்றனர். நாம் சரீரத்தை அர்ப்பணம் செய்துவிட்டோம், இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்கிறார்கள். இரவும் பகலும் சேவை செய்யுங்கள் என்று தாய்-தந்தையர் சொல்ல மாட்டார்கள்.
வேண்டுமானால் 8 மணி நேரம் ஓய்வெடுங்கள்,
8 மணி நேரம் சேவை செய்யுங்கள்,
மீதி 8 மணி நேரம் பாபாவை நினைவு செய்யுங்கள்.
யாருக்கும் சித்திரங்களை வைத்துச் சொல்லிப் புரியவைப்பதில் அதிக நேரமா காது.
இவர் சிவபாபா உங்கள் தந்தை,
நாம் நிராகாரி ஆத்மாக்கள் அவருடைய குழந்தைகள். பரமபிதா பரமாத்மாவின் பெயரை எப்போதாவது கேட்டிருக்கிறீர்களா? நிச்சயமாக பிரஜாபிதா பிரம்மா மூலம் பரமபிதா பரமாத்மா வந்து புதிய மனித சிருஷ்டியை ஸ்தாபனை செய்கிறார்.
பழையதைப் புதியதாக மாற்றுகின்றார். அந்தத் தாத்தாவிடமிருந்து உங்களுக்கு ஆஸ்தி கிடைக்கின்றது. அவர் சொல்கிறார்,
என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்.
அந்தத் தந்தையைத் தான் எங்களை இந்த துக்கத்திலிருந்து விடுவியுங்கள் என்று பக்தர்கள் அனைவரும் நினைவு செய்கின்றனர்,
பிரம்மா உடலில் பிரவேசமாகிக் குழந்தைகளுக்கு ஆஸ்தி தர வருகின்றார். சொல்கிறார்,
நான் இவர் மூலம் ஆத்மாக்களை தூய்மையானவர்களாக ஆக்கி,
இராஜ்யத் திற்காக ஞான, யோகத்தைக் கற்பித்து உடனழைத்துச் செல்வேன். பிறகு அங்கிருந்து உங்களை சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். யார் செய்கிறார்களோ அவர்கள் பலன் அடைவார்கள்.
பாபா எவ்வளவு சொல்லிப் புரியவைக்கிறார்! பாபாவின் வழியும் முறையும் தனிப்பட்டது.
அனைவருக்கும் சத்கதி எப்படி அளிக்கின்றார்! எப்படி இராஜதானியை ஸ்தாபனை செய் கின்றார்! அதனால் தான் அவருக்கு மகிமை செய்கின்றனர்.
உலகம் இதை முற்றிலும் அறிந்திருக்கவில்லை. பாபா எப்படி ஸ்ரீமத் தருகின்றார்,
எதிலிருந்து என்னவாக மாற்றுகின்றார்! ஆகவே அப்படிப்பட்ட தந்தையை நினைவு செய்ய வேண்டும். அவருடைய ஸ்ரீமத்படி நடப்பதன் மூலமே நீங்கள் இதுபோல் இலட்சுமி-நாராயணர் ஆவீர்கள்.
சொல்லப் பட்டிருக்கிறது இல்லையா, பிரம்மாவும் கூட இறங்கி வரவேண்டும், இங்கும் அதுபோலத் தான்.
யாருமே சிவபாபாவைப் பற்றி அறிந்திருக்கவில்லை. வெறுமனே மம்மா பாபா எனச் சொல்வதால் அவர் மனதில் இடம் பிடித்து விட முடியாது. மம்மா பாபாவுக்குத் தெரியும்,
யார் நம்முடையவர்கள், என்னென்னவாக ஆவார்கள்.
படிப்பதில்லை என்றால் என்ன ஆவார்கள்?
ஒவ்வொருவரின் நடத்தையிலிருந்து தெரிந்துவிடும். நாம்
84 பிறவிகள் எப்படி எடுக்கிறோம் என்பது பற்றி வேறு எந்தப் படிப்பின் மூலமும் தெரிந்து கொள்ள முடியாது.
வருங்கால இளவரசர் இளவரசி ஆவதற்காக உங்களுக்கு இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறேன். இந்தத் தந்தையும் சொல்கிறார் என்றால் முயற்சி செய்ய வேண்டும். இந்த முழு இராஜதானியும் இப்போது உருவாக வேண்டும். தேர்வில் ஒரு முறை தவறிவிட்டால் பிறகு படித்துக் கொள்ளலாம் என்பதில்லை. இங்கோ இராஜதானி ஸ்தாபனையாகிக் கொண்டிருக்கிறது, அனைத்துப் பதவிகளின் சாட்சாத்காரத்தையும் செய்விக்கின்றார். அதனால் ஸ்ரீமத் படி நடக்க வேண்டும்.
பிரம்மாவின் வழி முறை கூட புகழ் பெற்றது இல்லையா? ஸ்ரீ சிவனுடைய ஸ்ரீமத்.
கிருஷ்ணருடைய வழி கிடைக்காது. அங்கோ பிராலப்தத்தை அனுபவிக்கின்றனர். அங்கே அனைவருக்கும் நல்ல வழி உள்ளது. வெறுமனே உயர்ந்த பதவி மற்றும் தாழ்ந்த பதவி என்ற வேறுபாடு மட்டும் உள்ளது. ராஜா,
ராஜா தான்.
பிரஜை பிரஜை தான். கடமை தவறாத நல்ல குழந்தை யாரென்றால் ஸ்ரீமத் படி நடந்து முழு புருஷர்த்தம் செய்து பாபாவின் பெயரை விளங்கச் செய்து காட்டுபவர்கள். நல்லது.
பாப்தாதாவின் இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப் பட்ட செல்லக் குழந்தை களுக்கு அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம்.
அன்பு நினைவுக்குப் பின் பிராமணகுல பூஷணர்கள், சுயதர்சன சக்கரதாரி குழந்தைகளிடம் கேட்கிறேன், சொல்லுங்கள்,
சிவபாபாவை ஆகாய அளவுக்கு நேசிக்கிறீர்களா, அல்லது பிரம்ம தத்துவ அளவுக்கு நேசிக்கிறீர்களா? ஒவ்வொரு குழந்தையும் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள், சொல்லுங்கள். நல்லது
-ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1.
கடவுüன் வானம்பாடி பறவை போன்ற குழந்தைகளாக ஆகி பாபாவின் பெயரை விளங்கச் செய்ய வேண்டும்.
ஞானத்தை தாரணை செய்து தன்னுடைய நடத்தையை நல்லதாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
2.
விஜய மாலையில் வருவதற்கான பந்தயத்தில் ஓட வேண்டும்.
ஒருபோதும் குழப்பமடைந்து பிராமண வாழ்க்கையில் களைத்துப் போகக் கூடாது. ஸ்ரீமத் படி சதா நடக்க வேண்டும்.
வரதானம்:
நல்ல எண்ணங்கள்
என்ற யந்திரத்தின்
மூலம் அமைதி
சக்தியை பயன்படுத்தக்கூடிய
வெற்றி சொரூபம்
ஆகுக.
அமைதியினுடைய சக்திக்கான விசேஷமான யந்திரம் - சுபமான (நல்ல) எண்ணங்களாகும். இந்த எண்ணங்கள் என்ற யந்திரத்தின்
மூலம் எதை விரும்புகின்றமோ, அதை வெற்றி சொரூபத் தில் பார்க்க முடியும். இதை முதலில் தன்னிடம் பயன்படுத்தி பாருங்கள். உடலில் இருக்கும் நோயின் மீது பயன்படுத்தி பார்த்தீர்கள்
என்றால் அமைதியின் சக்தி மூலம் கர்மபந்தனம்,
இனிமையான சம்மந்தத்தில்
மாறிவிடும். கர்மவினை - கர்மத்தினுடைய கடுமையான பந்தனம் அமைதியின் சக்தி மூலம் தண்ணீரில் போட்ட கோடாக அனுபவம் ஆகும். எனவே உடல் மீது, மனதின் மீது, சம்ஸ்காரத்தின் மீது அமைதியின் சக்தியை பயன்படுத்துங்கள்,
மேலும் வெற்றி சொரூபம் ஆகுங்கள்.
சுலோகன்:
குல விளக்கு ஆகி தனது நினைவு என்ற ஜோதியின் மூலம் பிராமண குலத்தின் பெயரை மெருகேற்றுங்கள்.
0 Comments