25-04-2023 காலை
முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே!
நீங்கள் வீட்டில்
இருந்த படியே
அதிசயமான ஆன்மீக
யாத்திரையில் உள்ளீர்கள்.
உங்களுடையது புத்தியின்
யாத்திரை ஆகும்.
கர்மம் செய்தபடியே
இந்த யாத்திரையில்
முன்னேறிக் கொண்டே
சென்றீர்கள் என்றால்
தூய்மை ஆகி
விடுவீர்கள்.
கேள்வி:
இந்த ஞான மார்க்கத்தில் எந்த துல்லியமான மற்றும் நுணுக்கமான விஷயங் களை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தான் கேட்கின்றீர்கள்?
பதில்:
நாம் அனைவரும் ஆண்களாகட்டும், பெண்களாகட்டும் ஒரு சிவ பரமாத்மாவின் நாயகிகள் ஆத்மாக்கள் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நாயகன் ஒரு பரமாத்மா ஆவார். பிறகு சரீரத்தின் கணக்குப்படி நாம் சிவபாபாவின் பேரன் மற்றும் பேத்திகள் ஆவோம். நமக்கு அவரது சொத்தின் மீது முழு உரிமை உள்ளது. நாம் 21 பிறவிகளுக்கு சதா சுகத்தின் சொத்தை பாட்டனாரிடமிருந்து பெறுகிறோம். இவை எல்லாம் மிகவும் நுணுக்கமான விஷயங்கள் ஆகும்.
பாடல்: நமது தீர்த்தம் தனிப்பட்டது.....
ஓம் சாந்தி! ஸ்தூல யாத்திரை மற்றும் ஆன்மீக யாத்திரை மீது இந்த பாடல் எழுதப் பட்டுள்ளது. பக்தி மார்க்கத்தினர் எழுதியுள்ளனர். எது கடந்து விட்டுள்ளதோ அதற்கு பாடல் பாடுகிறார்கள். முழு மனித குலத்திற்கும் ஸ்தூல யாத்திரை பற்றியே தெரியும்.
பல பிறவிகளாக சக்கரம் சுற்றிக் கொண்டே வந்துள்ளோம். அவர்களது புத்தியில் பத்ரி நாத், ஸ்ரீநாத் போன்றவை தான் நினைவு இருக்கும்.
குழந்தைகளாகிய உங்களுக்கும் இந்த ஸ்தூல யாத்திரை ஆகியவை நினைவு இருந்தது மற்றும் இப்பொழுதும் நினைவு இருக்கிறது. நீங்கள் பல பிறவிகளாக யாத்திரைகள் செய்திருக்கிறீர்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் ஆன்மீக யாத்திரையின் ஞானம் உள்ளது.
மனிதர்களின் புத்தியோகம் ஸ்தூல சரீர யாத்திரையை நோக்கி உள்ளது.
உங்களது புத்தியோகம் ஆன்மீக யாத்திரை பக்கம் உள்ளது.
இரவு பகலுக்கான வித்தியாசம் ஆகும்.
இப்பொழுது நீங்கள் ஆன்மீக யாத்திரையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த அதிசயமான யாத்திரையை வீட்டில் அமர்ந்த படியே செய்கிறீர்கள். யாராவது இந்த யாத்திரையை புரிந்து கொள்ள முடியுமா?
தொழில் ஆகியவற்றில் ஈடுபடும் பொழுது அவ்வளவு நினைவு இருப்பதில்லை. ஆனால் ஞான மனனம் செய்ய அமர்ந்தீர்கள் என்றால் நாம் யாத்திரையில் இருக்கிறோம் என்பது நன்றாகவே நினைவிற்கு வரும்.
ஞானம் மிகவும் சுலபமானது உண்மையில் பதீத பாவன தந்தை என்ன செய்திருப்பார் என்பதை குழந்தைகள் அறிந்தும் இருக்கிறீர்கள். தூய்மையாக்கு வதற்காக அவசியம் யாத்திரை இருக்கும்.
அது இனிமையான நிர்வாண தாமம் ஆகும். அதை எல்லா பக்தர்களும் நினைவு செய்கிறார்கள். பகவான் நம்மிடம் வர வேண்டி உள்ளதா? இல்லை நாம் பகவானிடம் செல்ல வேண்டுமா?
என்பது யாருக்குமே தெரியாது. நமது குரு அல்லது எங்களுடைய பெரியவர் நிர்வாண தாமம் அல்லது தனது நிராகாரி வதனம் சென்று விட்டார் என்று நினைக்கிறார்கள். சரி பின் அங்கு என்ன செய்தார்? போய் உட்கார்ந்து விட்டாரா?
என்ன ஆயிற்று?
அது எதுவுமே தெரியாது. அப்பால் உள்ள நிர்வாணம் சென்றார், ஜோதி ஜோதியுடன் கலந்து விட்டது. அலை கடலுடன் கலந்து விட்டது என்று மட்டும் கூறிவிடுகிறார்கள். இந்த சிருஷ்டியின் சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பது பற்றி எதுவுமே தெரியாது. இப்பொழுது தந்தை இந்த ஆன்மீக யாத்திரை இந்த கடைசி பிறவியில் ஒரே ஒரு முறை நடக்கிறது என்று விளக்குகிறார். ஆன்மீக யாத்திரை அல்லது ஆத்மாக்களின் யாத்திரை என்று கூறலாம்.
முதல் முதலிலோ நாம் ஆத்மாக்கள் ஆவோம் என்ற நிச்சயம் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஜீவ ஆத்மா துக்கம் அடைகிறது என்று கூறப்படுகிறது. ஆக இச்சமயம் ஆத்மா சரீரத்துடன் இருக்கும்பொழுது பிரியதரிசினி ஆகும்பொழுது தந்தையை தேடுகிறது.
ஆண், பெண் எல்லாருமே மணமகள்கள் ஆவார்கள் பார்க்கப்போனால் ஆண்களை யாராவது மணமகள்கள் என்று கூறுவார்களா என்ன?
ஆனால் இவை மிகவும் ஆழமான துல்லியமான விஷயங்கள்.
நீங்கள் உங்களை சிவ பாபாவின் பேரன்கள் என்று நினைக்கிறீர்கள். சரீரத்தில் இருக்கும் பொழுது அந்த கணக்குப்படி பேரன் பேத்திகளே ஆகிறீர்கள்.
உங்களுக்கு பாட்டனாரின் சொத்தின் மீது உரிமை உள்ளது என்று பாபா புரியவைக்கின்றார். யாராவது தந்தை செல்வந்தராக இருந்து பையன் தகுதியற்றவர் என்பதற்காக சொத்து அளிக்காமல் இருக்கலாம் ஆனால் பாட்டனாரின் சொத்து பரம்பரையாக ராஜாக்களின் குலத்தில் கிடைத்துக் கொண்டேதான் இருந்திருக்கிறது. சத்யுக திரேதாவில் நீங்கள் பாட்டனாரின் சொத்தை அனுபவிப்பீர்கள். இப்பொழுது நீங்கள் பாட்டனாரிடமிருந்து சொத்து பெறுகிறீர்கள். பாட்டனாரின் சொத்து எவ்வளவு பெரிய சக்தி மிக்கது. 21 பிறவிகளுக்கு நீங்கள் சதா சுகத்தின் சொத்தைப் பெறுகிறீர்கள். பரம பிதா பரமாத்மா பாட்டனார் ஆவார்.
பிரம்மாவை பாபா என்று கூறுவீர்கள்.
இந்த சொத்தை நாங்கள் பாட்டனாரிடமிருந்து எடுத்துக் கொண்டி ருக்கிறோம் என்று கூறுகிறீர்கள். நீங்கள் எந்த அளவு புருஷார்த்தம் செய்வீர்களோ அந்த அளவு பாட்டனாரின் சொத்து கிடைக்கும். எப்படி இந்த தாய் தந்தை ஜெகதாம்பா ஜெகத்பிதா புருஷார்த்தம் செய்கிறார்களோ அதே போல நாமும் இந்த புருஷார்த்தத்தினால் இவ்வாறு உயர்ந்தவர் ஆகிறோம். பாட்டனாரிடமிருந்து முழு சொத்தைப் பெறுகிறோம். அரசாட்சி பெற்று விடுகிறோம்.
அந்த அரசாட்சி பின் எவ்வளவு காலம் நடக்கும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இது சம்மந்தமான குறிப்புக்களோ ஏராளமாக உள்ளன.
இவ்விதமாக நீங்கள் யாருக்காவது விளக்கினீர்கள் என்றால் சட்டென்று புரிந்து கொண்டு விடுவார்கள். இரண்டு தந்தைகள் நிச்சயம் இருக்கிறார்கள். பிரஜாபிதா பிரம்மாவை தந்தை என்றோ எல்லாரும் கூறுகிறார்கள்.
காட் பாதர் என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்கிறார்கள். அவர் பெரியவர் பாட்டனார், பிரம்மா அவரது குழந்தை ஆகிறார். பிரம்மாவின் பெயரோ பிரசித்த மானது. விஷ்ணு அல்லது சங்கரரை பிரஜா பிதா என்று கூறமாட்டார்கள். சூட்சும வதனத்திலோ படைப்பு படைக்க மாட்டார்கள். பிரம்மா தான் அவசியம் இங்கு பிராமணர்களை படைத் திருக்கக்கூடும். பிரம்மாவின் கமலத் திருவாய் மூலமாக பரமபிதா பரமாத்மா பிராமண சம்பிரதாயத்தைப் படைத்தார். இப்ராஹிம்,
இஸ்லாமிய சம்பிரதாயத்தை படைத்தார். பெயர் வருகிறது அல்லவா?
சங்கராச்சாரியார் கூட படைப்பை படைத்தார்.
ஒவ்வொரு மரத்திலும் கிளைகளும் இருக்கும்.
இது எல்லையில்லாத மரம் ஆகும்.
இதன் படைப்பு கர்த்தா அல்லது விதை ரூபமாக இருப்பவரே பிரசித்தமானவர் பிரபலமானவர். அஸ்திவாரம் மேலே உள்ளது.
விதையும் மேலே உள்ளது. மற்றது கிளைகள் அனைத்தும் இப்பொழுதும் இங்கு தான் உள்ளது என்று கூறுவோம்.
அவை அனைத்துமே மனிதர்களால் படைக்கப்பட்ட படைப்பு ஆகும்.
இந்த பிரம்மாகுமாரி ஸ்தாபனத்தை சுயம் விதை ரூபமான தந்தை படைத்துள்ளார். அந்த விதை ரூபமான பரமபிதா பரமாத்மா மேலே இருக்கிறார். அப்படி இன்றி எல்லா கிளைகளின் விதை ரூபம் மேலே இருக்கிறார்கள் என்பதல்ல.
இவை மிகவும் நுணுக்கமான விஷயங்கள்.
பரமபிதா பரமாத்மா எப்போதும் மேலே நினைவு செய்யப்படுகிறார். கிறிஸ்துவை மேலே நினைவு செய்வதில்லை பரமபிதா பரமாத்மாவின் பெயர், ரூபம்,
தேசம், காலமோ ஒன்றே ஒன்று தான். அது ஒருபொழுதும் மாறுவதில்லை.
எனவே இதை தந்தை அமர்ந்து நல்ல முறையில் புரிய வைக்கிறார்.
நாம் இப்பொழுது தூய்மை இழந்துள்ள நிலையிலிருந்து தூய்மையாக ஆகிக் கொண்டிருக்கிறோம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். எப்பொழுதும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை.
முதலில் 16 கலை சம்பூர்ணமாக இருக்கிறோம்.
பிறகு 14 கலை,
பிறகு கலைகள் குறைந்து கொண்டேபோகின்றன.
சத்யுகத்திற்குப் பிறகு நாம் கீழே வந்து கொண்டே இருக்கிறோம். இச்சமயம் நாம் முற்றிலும் மேலே செல்கிறோம்.
இது மேலே செல்வதற்கான வழி ஆகியது. அது கீழே வருவதற்கான வழி ஆகும்.
இவருடைய மகிமை மிகவும் உயர்ந்தது.
பதீத பாவனர் ஒருவர் ஆவார்.
நினைவு கூட எல்லோரும் ஒருவரை நினைவு செய்கிறார்கள். ஆனால் முழுமையாக அறியாத காரணத்தால் தேகதாரிகளை நினைவு செய்து கொண்டு வருகிறார்கள். ஏனெனில் பதீத பாவனர் யார் என்பதை மறந்து விட்டுள்ளார்கள். அவசியம் ஒருவரைத்தான் கூற வேண்டி உள்ளது. குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாருடைய புத்தியிலும் வர முடியாது. உங்களிடையேயும் நம்பர் பிரகாரம் இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் நாம் பாட்டனாரின் பேரன்கள் ஆவோம் மற்றும் பாபாவின் வீட்டில் அமர்ந்துள்ளோம் என்பதை அறிந்துள்ளீர்கள். இங்கு பாட்டனாரும் ஆஜராகி உள்ளார். அவதாரம் கூட அவசியம் இங்கே தான் எடுப்பார் அல்லவா.
இங்கு எங்களது பாட்டனார் எங்களுக்கு கற்பிக்கிறார் என்று நீங்கள் கூறுவீர்கள்.
அவர் பரந்தாமத்திலிருந்து வருகிறார். அவர் நமது ஆன்மீக பாட்டனார் ஆவார்.
மற்ற எல்லாரும் சரீரத்திற்கு பாட்டனாராக இருப்பார்கள் எனவே பாட்டனார் என்று கூறும்பொழுதே குஷியில் ஒரேயடியாக துள்ளிக் குதிக்க வேண்டும்.
ராஜாக்கள் எல்லாம் நிறைய செல்வந்தராக இருக்கலாம். ஆனால் அந்த பாட்டனார் நமக்கு என்ன தருகிறார்? சொர்க்கத்தின் அரசாட்சி. இந்த விஷயங்களை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். சத்யுகத்தில் இந்த விஷயங்கள் மறந்து போகின்றன. அங்கு இந்த லட்சுமி,
நாராயணர் ஆகியோருக்கு கூட சொர்க்கத்தின் சுகம் நமக்கு யார் கொடுத்தார் என்பது தெரிந்திருக்குமா என்ன? அது தெரிந்திருந்தது என்றால் அதற்கு முன்பாக நாம் யாராக இருந்தோம் என்பது கூட தெரிந்திருக்க வேண்டும். மிகவும் அவசியமான விஷயங்கள் ஆகும். இந்த ராஜதானியை நமக்கு யார் கொடுத்தார் என்பது லட்சுமி,
நாராயணருக்கு தெரிந்திருக்காது. பிராமணர்களாகிய உங்களுடைய பதவி தேவதைகளை விடவும் உயர்ந்தது.
இங்கு உங்களுக்கு பாட்டனா ரிடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது.
உண்மையில் இவர் பிரம்மா தந்தை ஆவார். இவரது உடலில் தாதா
(பாட்டனார்) வருகிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். இல்லாவிட்டால் தூய்மை இழந்தவர்களை தூய்மைபடுத்த எப்படி வருவது? எல்லா ஆத்மாக்களும் சரீரம் தாரணை செய்ய மேலிருந்து கீழே வருகின்றன. அவருக்கு
(பாபா) தனக்கென்று சரீரம் கிடையாது.
இந்த எல்லா விஷயங்களும் குழந்தை களாகிய உங்களது புத்தியில் உள்ளது.
அவர் பரம ஆத்மா என்று அழைக்கப்படுகின்றார். இதன் பொருள் பரமாத்மா ஏதோ பெரியது ஆத்மா சிறியது என்பதல்ல. பரமாத்மா மற்றும் ஆத்மாவில் எந்த வித்தியாசமும் இல்லை அப்படி இன்றி பரமாத்மா ஏதோ (உருவத்தில்)
சிறியது பெரியது என்பதல்ல. நான் எவ்வளவு சாதாரணமாக உள்ளேன் என்று தந்தை கூறுகிறார்.
எனது மகிமை மிகவும் உயர்ந்தது.
ஏனெனில் எல்லோரையும் வந்து தூய்மை இல்லாத நிலையிலிருந்து தூய்மையாக ஆக்குகிறேன்.
இருப்பதோ நானும் ஆத்மாவாகத்தான். எனக்குள் இருக்கும் ஞானத்தை உங்களுக்கு அளிக்கிறேன்.
அவ்வாறின்றி ஆத்மா ஏதோ சிறியது பெரியது ஆகிறது என்பதல்ல. ஆத்மாவில் ஞானம் இல்லாத காரணத்தால் அது அழுக்கடைந்து விடுகிறது.
வாடிப் போய் விடுகிறது. தீபம் அணைந்து விடுகிறது.
பிறகு அதில் ஞானம் என்ற எண்ணெய் ஊற்றப் படும்பொழுது தீபம் ஏற்றப்படுகிறது. மற்றபடி ஆத்மா என்பது என்ன? ஏதோ நெருப்பு போன்றது என்பதல்ல. எப்படி பரமாத்மா குளிர்ச்சியாக உள்ளாரோ அதே போல் ஆத்மாவும் குளிர்ச்சி உடையது.
அவர் எல்லோரையும் குளிர்விப்பவர். யாருடைய உடல் குளிர்ந்ததோ.......
என்று பாடலும் பாடப்படுகிறது. அவர் பிரவேசமாகும் பொழுது இவரது (பிரம்மா)
உடல் குளிர்ந்ததாக ஆகிவிடுகிறது. யாருக்குள் பிரவேசிக்கிறாரோ அவரையும் எவ்வளவு குளிர்ந்த வராக ஆக்குகிறார். பாபா எவ்வளவு குளிர்ச்சி உடையவர் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். குளிர்ச்சி மற்றும் வெப்பம், அவர்கள் காமச் சிதையில் எரிந்து விட்டுள்ளார்கள் - கேட்கவே வேண்டாம்
! ஒரு சிலரோ எப்பேர்பட்ட பாவ ஆத்மாவாக உள்ளார்கள்.
என்றால் எவ்வளவுதான் ஞானத் துளிகளைத் தெளித்தாலும் குளிர்ந்தவராக ஆவதே இல்லை.
ஒவ்வொருவருக்காகவும் எவ்வளவு உழைக்க வேண்டி உள்ளது. நீங்கள் குளிர்ந்தவராக ஆகி உள்ளீர்களா என்று பாபா கேட்கிறார்.
சாது, சந்நியாசி,
ஆகியோர் எப்பொழுதாவது இவ்வாறு கேட்கிறார்களா என்ன? மாயைதான் எல்லோரையும் தூய்மை இல்லாதவர்களாக ஆக்கி விடுகிறது. காம சிதையில் எரிந்து கொண்டே இருக்கிறார்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் நாம் பிரஜா பிதா பிரம்மாவிற்கு குழந்தைகள் ஆவோம் என்பதை அறிந்துள்ளீர்கள். சிவ பாபா பாட்டனார் ஆவார்.
எனவே ஆஸ்தி கிடைக்க வேண்டும் அல்லவா? ஒருவர் பாபா, ஒருவர் தாதா அவரிடமிருந்து சொத்து அநேக குழந்தைகளுக்கு கிடைக்கிறது.
வேறு எந்த மனிதரையும் பிரஜாபிதா என்று கூறமாட்டார்கள். சிவபாபா ஆத்மாக்களின் தந்தையாக இருக்கவே இருக்கிறார் இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் முன்னால் அமர்ந்திருக்கும் பொழுது நாம் சிவபாபாவுடன் கூட அமர்ந்துள்ளோம் என்பதை அறிந்துள்ளீர்கள். சொர்க்கத்தைப் படைக்கும் அவர் நமது பாட்டனார்.
அவரிடமிருந்து நாம் இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம். பாட்டனாரிடமிருந்து நமக்கு சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைப்பதின் மூலம் நாம்
21 பிறவிகளுக்கு ஒரு பொழுதும் ஏழை ஆகமாட்டோம். நீங்கள் மிகுந்த செல்வந்தர் ஆகிறீர்கள். பூஜிக்கத்தக்க தேவி தேவதையாக இருந்த நீங்களே பிறகு பூஜாரி ஆகிறீர்கள். நாம் பாபாவிடமிருந்து 21 பிறவிகளுக்கு சுகத்தை அனுபவிக்கும் ஆஸ்தி பெறுகிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். எத்தனை முறை ஆஸ்தி பெற்றீர்கள் மற்றும் இழந்தீர்கள். முந்தைய நாள் ஆஸ்தி எடுத்திருந்தீர்கள். நேற்று இழந்தீர்கள் பிறகு இன்று எடுக்கிறீர்கள். நாளை பிறகு இழந்து விடுவீர்கள்,
இந்த விஷயங்களை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். இச்சமயம் ஞானம் நிறைந்த,
ஞானக்கடலான தந்தை மூலமாக நீங்கள் கூட மாஸ்டர் ஞானக்கடல் ஆகிறீர்கள்.
ஞானம் கிடைக்கிறது.
மற்றபடி ஏதோ மின்னும் ஒளிமயமானவர்களாக ஆகிவிடுகிறீர்கள் என்பது ஒன்றும் கிடையாது இது எல்லாம் பெருமைப் படுத்துதல்.
எப்படி கிருஷ்ணருக்கு - அவர் பிறக்கும் பொழுது முழு வீட்டில் பிரகாசமே பிரகாசம் ஆகிவிடுகிறது என்று பெருமைப்படுத்துகிறார்கள். அவர் பிறந்த அச்சமயமோ சொர்க்கமாக அதாவது பகல் - வெளிச்சமாக இருந்திருக்கும். மற்றபடி ஏதாவது (பிரகாசமான)
ஒளி வெளிப்படுமா என்ன? இது கூட வெறுமனே மகிமை செய்யப்படுகிறது. அதேபோல பரமபிதா பரமாத்மா கூட பரம ஆத்மா ஆவார். மற்றபடி மகிமை முழுமையாக காரியத்தைப் பொறுத்தது ஆகும். மகிமையோ நிறைய பேரினுடையது வெளிப்பட்டுள்ளது. மனிதர்கள் கூறுகிறார்கள் - இன்னார் இறந்து விட்டார்,
சொர்க்கம் சென்றார்.
ஆக சொர்க்கம் மேலே உள்ளதா என்ன? தில்வாலா கோவிலில் கூட கூரையில் வைகுண்டம் காண்பிக் கிறார்கள்.
கீழே ஆதிதேவன் ஆதி தேவி,
ஜெகத்பிதா மற்றும் ஜெகதம்பா காண்பித்துள்ளார்கள். எனவே அவசியம் இங்கு கீழே நரகத்தில் அமர்ந்துள்ளார்கள். சொர்க்கம் செல்வதற்காக இராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். இது மிகச்சரியான அதே போன்ற நினைவார்த்தம் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். நாமும் இங்கு வந்து அமர்ந்துள்ளோம். எவ்வளவு அதிசயமான விஷயங்கள் ஆகும்.
குழந்தைகள் வந்து பாட்டனாரினுடையவர் ஆகி உள்ளீர்கள் அந்த அளவு கடந்த குஷி இருக்க வேண்டும். நாம் தூய்மையான உலகத் திற்கு எஜமானர் ஆகிறோம். உழைப்பு இன்றி உலகத்திற்கு எஜமானராக யாராலும் ஆக முடியாது.
அந்த உழைப்பு ஸ்தூலமானது.
இது சூட்சுமமானது.
ஆத்மா உழைப்பு செய்ய வேண்டி உள்ளது. ரொட்டி தயாரிப்பு தொழில் ஆகியவை செய்வது.
இவை எல்லாமே ஆத்மா செய்கிறது.
இப்பொழுது பாபா ஆத்மாக்களை இந்த ஆன்மீக தொழிலில் ஈடுபடுத்துகிறார்.
கூடவே ஸ்தூல தொழிலும் செய்ய வேண்டும்.
அப்படி இன்றி பாபா நாங்கள் உங்களுடையவர் இந்த குழந்தைகள் ஆகியோரை நீங்கள் பராமரிக்க வேண்டும் என்பதல்ல.
எல்லோரையும் பாபா பராமரிக்க வேண்டும் என்றால் பிறகு அவ்வளவு பெரிய வீடு கூட கிடைக்க முடியாது.
டில்லியின் கோட்டைபோல ஆயிரக்கணக்கான கோட்டைகள் இருந்தாலும் கூட இத்தனை குழந்தைகளை எங்கு வைப்பது?
முடியாது. பிறகோ இந்த வீட்டிற்கும் சக்தி இல்லை.
இல்லறத்தில் இருந்தபடியே புருஷார்த்தம் செய்யுங்கள் என்பது தான் சட்டம். இத்தனை எல்லா குழந்தைகளும் இங்கு வந்து விட்டால் எப்படி நடத்த முடியும்?
எனவே தந்தை கூறுகிறார் என்னை நினைவு செய்யுங்கள்.
பாட்டனாரிடமிருந்து அளவற்ற கஜானா கிடைக்கிறது.
எவ்வளவு குஷியினுடைய விஷயம்! இராமன் போனால் என்ன?
இராவணன் போனால் என்ன? என்று பாடப்பட்டுள்ளது. காலம் ஒன்றும் அதிகமாக இல்லை. இனிமேற்கொண்டு போகப்போக இதற்கு பின்னால் என்ன நடக்கக் கூடும் என்று சாட்சாத்காரம் ஆகிக் கொண்டே இருக்கும் - தங்கள் வீட்டிற்குப் பக்கத்தில் வரும் பொழுதும் அந்த மரம் ஆகியவை தென்படுகின்றன. நீங்கள் கூட நெருக்கத்தில் வந்து கொண்டே இருக்கும் பொழுது அடுத்து என்னென்ன ஆகப்போகிறது என்பதை தெரிந்து கொள்வீர்கள். பாபா ஞானமும் கொடுத்துக் கொண்டே இருப்பார்.
நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுத்த குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1.
தந்தைக்குச் சமமாக குளிர்ந்தவர் ஆகி ஞானத் துளிகளை தெளித்து மனித ஆத்மாக் களையும் குளிர்ந்தவர் ஆக்கும் சேவை செய்ய வேண்டும்.
2.
பாட்டனாரின் சொத்தை நினைவு செய்து அளவற்ற குஷியில் இருக்க வேண்டும்.
ஆன்மீக தொழில் செய்து உலக
(சக்கரவர்த்தி) இராஜ்ய பதவியைப் பெற வேண்டும்.
வரதானம்:
சமீப சம்பந்தம்
மற்றும் சர்வ
பிராப்திகள் மூலமாக
சகஜயோகி ஆகி
விடக் கூடிய
சர்வ சித்தி
சொரூபம் ஆவீர்களாக.
எந்த குழந்தைகள் எப்பொழுதும் சமீப சம்பந்தத்தில்
இருக்கிறார்களோ, மேலும் சர்வ பிராப்திகளின் அனுபவம் செய்கிறார்களோ, அவர்களுக்கு சகஜயோகத்தின்
அனுபவம் ஆகிறது. அவர்கள் எப்பொழுதும் நான் இருப்பதே தந்தையினுடையவனாக என்றே அனுபவம் செய்வார்கள். அவர்களுக்கு நான் ஆத்மா ஆவேன், நான் தந்தையின் குழந்தை ஆவேன் என்பதை நினைவூட்ட வேண்டி இருப்பதில்லை.
ஆனால் எப்பொழுதுமே
இதே போதையில் பிராப்தி சொரூபத்தை அனுபவம் செய்வார்கள், எப்பொழுதுமே சிறந்த ஊக்கம் உற்சாகம் மற்றும் குஷியில் ஒரே ரசனையில் இருப்பார்கள். எப்பொழுதும் சக்திசாலி நிலையில் இருப்பார்கள். எனவே சர்வ சித்தி சொரூபமாக ஆகி விடுகிறார்கள்.
சுலோகன்:
ஆன்மீக பெருமையில் நிலைத்திருப்பவர்கள் ஒரு பொழுதும் எல்லைக்குட்பட்ட மதிப்பு மற்றும் கௌரவத்தில் வர மாட்டார்கள்.
0 Comments