24-04-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே!
நான் ஞானத்தின் நறுமணத்தை பரப்பக் கூடிய மணமுள்ள மலராக இருக்கின்றேனா என்று தன்னுடைய மனதில் கேளுங்கள்,
எப்போதும் நல்ல நறுமணத்தை பரப்பிக் கொண்டே இருங்கள்
கேள்வி:
எந்தக் குழந்தைகளின் மனநிலை மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கும்? வேகமாக பறந்தோடு வதற்கான ஆதாரம் என்ன?
பதில்:
நல்ல-நல்ல மலராக யார் இருக்கின்றார்களோ அவர்களின் புத்தியில் ஞானச் சிந்தனை நடந்து கொண்டே இருக்கும் அவர்களின் மனநிலை மிகவும் மகிழ்ச்சி நிறைந்த போதையுடன் இருக்கும். ஞானம் மேலும் யோகத்தின் கல்வியைத் தந்து நல்ல நறுமணத்தைப் பரப்பக் கூடிய குழந்தைகள் மிகவும் மலர்ந்த (புன்னகை) முகத்தோடு இருப்பார்கள். வேகமாக பறந்தோடு வதற்கான ஆதாரம் உண்மையான விளக்குபூச்சிகளாக (விட்டில் பூச்சிகளாக) ஆக வேண்டும்.
பாடல்: கூட்டத்திற்கு நடுவில் எழுந்தது ஒரு பேரொளி..
ஓம்சாந்தி. சைத்தன்ய விட்டில்பூச்சிகளாக இருக்கும் நீங்கள் பாடலைக் கேட்டீர்களா.
விட்டில் பூச்சிகள் என்றுச் சொன்னாலும் மலர்கள் என்றுச் சொன்னாலும் பொருள் ஒன்று தான். நாம் உண்மையான விட்டில்பூச்சிகளாகி இருக்கின்றோமா என்றுப் பாருங்கள் அல்லது வலம் வந்துவிட்டு சென்று விடுகிறோம் என்றால் ஒளியை மறந்து விடுகிறோம் என்பதாகும். நான் எதுவரை மணமுள்ள மலராக ஆகியுள்ளேன்? மேலும் ஞானத்தின் நறுமணத்தை பரப்பு கின்றேனா? தன்னைப் போன்ற மலராக எவரை உருவாக்கினேன்?
என்று ஒவ்வொரு வரும் தன்னைத் தான் கேளுங்கள். ஞானக்கடலாக தந்தை இருக்கின்றார் என்பதை குழந்தை களாகிய நீங்கள் அறிவீர்கள். அவருக்குள் எவ்வளவு நறுமணம் இருக்கிறது! எவர் நல்ல மணமுள்ள மலராக மட்டுமல்ல விட்டில்பூச்சிகளாக இருக்கின்றார்களோ அவரிடமிருந்து அவசியம் நல்ல நறுமணம் வரும். அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியோடு இருப்பார்கள்,
தனக்குச் சமமாக மலராக வும் மேலும் விட்டில் பூச்சிகளாக பிறரையும் உருவாக்குவார்கள். மலராக இல்லையென்றாலும் மொட்டாக உருவாக்குவார்கள். முழுமையான விளக்குப்பூச்சிகளாக இருப்பவர்கள் உயிருடன் வாழ்ந்தாலும் இறந்து இருப்பார்கள். பலி ஆகுவது என்றால் ஈஸ்வரிய குழந்தைகளாக இருப்பார்கள். ஒரு பணக்காரர் ஒரு ஏழைக் குழந்தையை தத்து எடுக்கிறார் என்றால் அந்தக் குழந்தை பணக்கார பெற்றோர்களின் மடியில் வந்தவுடன் அந்த தாய்- தந்தையின் நினைவு தான் வரும் பின்னர் ஏழ்மையை மறந்து விடுவார்கள். தன்னுடைய ஏழையாக இருக்கும் தாய்-தந்தை இருந்தாலும் கூட பணக்கார பெற்றோர்களைத் தான் நினைப்பார், அவரிடம் இருந்துதான் செல்வம் கிடைக்கிறது. சாது-சன்னியாசிகள் கூட முக்தி தாமத்திற்குச் செல்வதற்காக சாதனைகள் செய்கின்றார்கள்.
அனைவரும் முக்திக்குச் செல்வதற் காக தான் முயற்சிச் செய் கின்றார்கள் ஆனால் அதன் அர்த்தத்தை அறிவதில்லை. ஜோதி- ஜோதியோடு கலந்துவிடும் என்று சிலர் கருதுகின்றார்கள், சிலர் நிர்வாணத்தை அடைகின்றோம் என்று கருதுகின்றார்கள்.
நிர்வாண தாமத்திற்குச் செல்வது என்றால் ஜோதியோடு கலப்பது அல்லது சந்திப்பது என்று பொருளல்ல. நாம் துôரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கருதுகின்றார்கள். இந்த அழுக்கான உலகத்தில் இருந்து கொண்டு என்னச் செய்வது.
குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார், எப்போதும் ஒருவரை சந்தித்தாலும் இது முன்பே பதிவாக்கப்பட்ட நாடகம் என்று புரிய வைக்க வேண்டும். சத்தியயுகம், திரேதா, துவாபர, கலியுகம், இது சங்கமயுகமாக இருக்கிறது. சத்தியயுகத்திற்கும் திரேதாயுகத்திற்கும் இடையே கூட சங்கமயுகம் வருகிறது. அங்கே யுகம் மாறுகிறது இங்கே கல்பம் மாறுகிறது. மனிதர்கள் புரிந்துள்ளது போன்று பாபா ஒவ்வொரு யுகத்திலும் வருவதில்லை. எப்போது அனைவரும் தமோபிரதானம் ஆகி விடுகின்றார்களோ, கலியுகத்தின் இறுதியாகிறதோ, அப்போது கல்பத்தின் சங்கமத்தில் நான் வருகிறேன் என்று தந்தை கூறுகின்றார்.
சத்யுகம் முடிகிறது என்றால் இரண்டு கலைகள் குறைந்து விடுகிறது. எப்போது முழு கிரகணம் பிடித்து விடுகிறதோ அப்போது நான் வருகிறேன். ஒவ்வொரு யுகம் முடிவிலும் நான் வருவதில்லை. இதை தந்தை வந்து அமர்ந்து விட்டில் பூச்சிகளுக்குப்
(குழந்தைகளுக்கு) புரிய வைக்கிறார். தந்தை அமர்ந்து விளக்கு பூச்சிகளாக இருப்பவர்களுக்குப் புரிய வைக்கின்றார்.
விளக்கு பூச்சிகளிலும் வரிசைக் கிரமமாக இருக்கிறார்கள்.
சிலர் உடனடியாக விளக்கில் விழுந்து எரிந்து இறந்து விடுகிறார்கள் சிலர் வலம் வந்து விட்டு சென்று விடுகிறார்கள். ஸ்ரீமத்படி நடப்பதில்லை அதனால் மாயா அடித்து வீழ்த்தி விடுகிறது. ஸ்ரீமத்திற்கு அதிகமான மகிமை உள்ளது. ஸ்ரீமத் பகவத் கீதை என்று கூறப்படுகிறது.
சாஸ்த்திரங்கள் பின்னர் தான் உருவாக்கப்பட்டது. அந்த சமயத்தில் மனிதரின் புத்தி ரஜோ தமோ நிலையில் இருந்த காரணத்தால் கிருஷ்ணர் துவாபர யுகத்தில் வந்தார் என்று கருதுகிறார்கள். எப்போது ஆதி சனாதன தேவி தேவதா தர்மத்தைச் சேர்ந்த மனிதர்கள் மறைந்து விட்டார்களோ அப்போது நான் வருகிறேன் என்று தந்தை கூறுகிறார். ஆனால் நாம் தான் தேவி- தேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை மறந்துவிட்டோம்.
தன்னை இந்து தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்ல ஆரம்பித்து விட்டோம். இது மிகப்பெரிய தவறாகும். பாரதவாசியாக இருந்த தேவதா தர்மத்தை பூஜிக்கும் பூஜாரிகளிடம் நீங்கள் எந்தத் தர்மத்தைச் சேர்ந்தவர்கள் என்று கேளுங்கள். நாங்கள் இந்து தர்மத்தைச் சேர்ந்தவர்கள் உடனடியாக சொல்வார்கள்.
நீங்கள் யாரை பூஜிக்கின்றீர்கள்? பாரதவாசிகள் தனது தர்மத்தைக் கூட அறிய வில்லை. இதுவும் நாடகத்தில் பதிவாகியுள்ளது. நீங்கள் மறந்ததினால் தான் நான் மீண்டும் வந்து தேவி- தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்ய வேண்டியுள்ளது. சத்தியயுகத்தில் ஒரு தர்மம் மட்டும் தான் இருக்கும். இவ்விசயங்களை தந்தை அமர்ந்து தெளிவாகப் புரிய வைக் கின்றார். யார் உலகத்திற்கு எஜமானராக இருந்தாரோ அவரே தன்னை மறந்துவிட்டார் என்றால் மற்றவர்களைப் பற்றி என்னக் கூறுவது.
இவர் ஒருவர் தான் தந்தையாக இருக்கிறார் அவர் வந்து துக்கமான உலகத்தை நீக்கி சுகமான உலகத்திற்கு எஜமானராக ஆக்குகின்றார்.
இப்போது நாங்கள் நரகத்திற்கு எஜமானராக இருக்கின்றோம் என்று சொல்கின்றீர்கள். உலகம் கட்டாயமாக தமோபிரதானம் ஆகியே தீர வேண்டும். அனைவரும் தூய்மை இல்லாதவர்களாக இருக்கின்றார்கள் அதனால் தூய்மையாக இருப்பவர் முன் தலைவணங்குகிறார்கள். மனிதர்கள் சன்யாசிகளை குருவாக கருதுகிறார்கள் ஏனெனில் அவர்கள் துôய்மையாக இருக்கிறார்கள், குரு மூலமாக துôய்மை அடைய வில்லை என்றால் நாம் எப்படி சத்கதி அடைவோம் என்று கருதுகிறார்கள்.
ஆனால் அவரை பின்பற்று வதில்லை. நீங்கள் என்னை எங்கே பின்பற்றுகிறீர்கள், எங்கே துôய்மை அடைகிறீர்கள் என்று குருவும் கேட்பதில்லை. ஆனால் இங்கே ஒருவேளை நீங்கள் தூய்மையான நிர்விகாரி ஆனால் தான் நீங்கள் என்னை பின்பற்றுபவர் ஆக முடியும் இல்லையெனில் நீங்கள் என்னை பின்பற்றுபவர் ஆக முடியாது. உன்னத நிலையை அடைய முடியாது. சன்யாசிகள் என்னைப் பின்பற்றுங்கள் என்று வலியுறுத்த மாட்டார்கள். நீங்கள் என்னை பின்பற்றவில்லை என்றால் தண்டனை அடைய வேண்டிவரும் என்றுச் சொல்லமாட்டார்கள். ஆனால் இங்கே தந்தை கூறுகின்றார்- ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால் ஐயோ-ஐயோ என்று சொல்ல வேண்டிவரும் என்கிறார். அவர்கள் ஆத்மா ஒன்றும் ஒட்டுவதில்லை
(நிர்லேப்) என்கிறார்கள்,
அவ்வாறு கிடையாது. ஆத்மா தான் சுகம்- துக்கத்தைப் பார்க்கின்றது. இதை எவரும் அறிவ தில்லை. ழந்தைகளே உங்கள் இலட்சியம் மிகவும் உயர்ந்தது என்று பாபா அடிக்கடி புரிய வைக்கின்றார்- இந்த நேரத்தில் நீங்கள் புருஷார்த்தம் செய்கின்றீர்கள் ஏனெனில் இங்கே துன்பத்தில் இருக் கிறீர்கள். சத்தியயுகத்தில் நாம் மிகவும் சுகமாக இருப்போம் என்பதை தெரிந்து கொண்டீர்கள். நாம் மீண்டும் துக்கமான உலகத்திற்குப் போவோம் என்று அங்கே எவருக்கும் தெரியாது. நாம் சுகமான உலகத்திற்கு எப்படி வந்தோம், எத்தனை பிறவி எடுப்போம் இவை ஒன்றும் அறிவ தில்லை. உயர்ந்தவர் யார் என்று இப்போது நாம் அறிந்து கொண்டோம். நாம் ஈஸ்வரனின் குழந்தை ஆனதால் ஈஸ்வரன் எவ்வாறு ஞானம் நிறைந்த வராக இருக்கின்றாரோ அதுபோன்று நீங்களும் ஞானம் நிறைந்தவராக இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் ஈஸ்வரனின் குழந்தைகள். தேவதைகள் ஈஸ்வரனின் குழந்தை என்றுச் சொல்லமாட்டார்கள். இப்போது நீங்கள் ஈஸ்வரனின் குழந்தைகளாக இருந்தாலும் வரிசைக் கிரமமாக உள்ளீர்கள். ஒரு சிலர் மிகவும் ஆனந்தமாக இருக்கிறார்கள்.
நாங்கள் தந்தையின் வழிப்படி நடக்கின்றோம் என்று நினைக் கின்றார்கள். எவ்வளவு அவர் கூறும் பாதையில் செல்வீர்களோ அந்தளவு சிரேஷ்டமாக ஆகுகின்றீர்கள்.
பாபா எதிரில் அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார்- குழந்தைகளே, தேக- அபிமானத்தை விடுத்து, ஆத்மா-அபிமானி ஆகுங்கள், என்னை நிரந்தரமாக நினையுங் கள் என்கிறார். ஆனால் நிரந்தரமாக நினைக்க முடிவதில்லை. நினைவு என்பது புருஷார்தத்தின் அனுசாரமாக வரிசைக்கிரமமாகத் தான் அமைகிறது. இருப்பினும் தேர்வின் ரிசல்ட் இறுதியில் தான் வெளிப்படும்.
தந்தை சுகத்தை தரும் வள்ளலாக இருக்கின்றார்.
துன்பத்தையும் தந்தை தான் தருகின்றார் என்பதில்லை. குழந்தைகள் தனது தவறான நடத்தையால் துன்பத்தை அடைகிறார்கள்.
பாபா துன்பத்தை தருவதில்லை. ஹே பகவானே, எங்கள் குலம் வளர வாரிசைத் தாருங்கள் என்று வேண்டி கேட்கிறார்கள். குழந்தைகளை அனைவரும் மிகவும் நேசிக்கின்றார்கள். மற்றபடி துன்பம் என்பது தனது கர்மத்தின் பலனாக அடைகிறார்கள். இப்போது பாபா குழந்தைகளுக்கு மிகவும் சுகம் தருகின்றார். ஸ்ரீமத்படி செல்லுங்கள் என்கிறார். அசுர வழியில் செல்வதால் துன்பத்தை அடைகிறீர்கள் என்கிறார். குழந்தைகள் தந்தை மற்றும் ஆசிரியரின் கட்டளைப்படி நடக்காததால் துன்பத்தை அடைகிறார்கள். துக்கத்தை தானே உருவாக்கிக் கொள்கிறார்கள். மாயாவுடையவராகி விடுகிறார்கள். ஈஸ்வரனின் வழி இப்போது தான் உங்களுக்கு கிடைக்கிறது. ஈஸ்வரனின் பாதையில் செல்வதால் 21 பிறவிக்கு பலன் இருக் கிறது. பின்னர் அரைக்கல்பம் வரை மாயாவின் பாதையில் செல்கிறீர்கள். மாயாவின் பாதையில் செல்வதால் நுôறு சதவிகிதம் துர்பாக்கியசாலி ஆகிவிடுகிறீர்கள்.
யாரெல்லாம் நல்ல-நல்ல மலர்களாக இருக்கின்றார்களோ அவர்கள் எப்போதும் இந்த மகிழ்ச்சியில் ஆனந்த மாக இருக்கிறார்கள். வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள் அல்லவா. விளக்குப்பூச்சிகளாக இருப்பவர்கள் தந்தையின் குழந்தைகளாகி ஸ்ரீமத்படி நடக்கின்றார்கள். ஏழைகள் தான் தனது முழு பதிவேட்டையும் எழுதுகின்றார்கள். பணக்காரர்கள் எனது முழு செல்வத்தையும் வாங்கிவிடுவார்களோ என்று அஞ்சுகின்றார்கள்.
பணக்காரர்களுக்கு இந்த பாதையில் செல்வது கடினமாக உள்ளது. நான் ஏழைப்பங்காளனாக இருக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். தானமும் கூட எப்போதும் ஏழைகளுக்குத் தான் கொடுக்கப்படுகிறது. சுதாமா கதை உதாரணமாக உள்ளது. ஒருபிடி அவுலைக் கொடுத்து மாட மாளிகையைப் பெற்றதாக கதையில் கூறப்படுகிறது. நீங்கள் ஏழைகள், உதாரணமாக ஒருவரிடம் 25-50 ரூபாய் உள்ளது என்றால் அதில் ஒன்றிரண்டு ரூபாய் தருகிறார்கள். அது பணக்காரர் 50 ஆயிரம் தருவதற்குச் சமமாகும், ஆகையால் ஏழைப்பங்காளன் என்று சொல்லப்படுகிறது. பணக்காரர்கள் எங்களுக்கு நேர மில்லை என்கிறார்கள் எனெனில் நிச்சயம் இல்லை. நீங்கள் ஏழைகளாக இருக்கிறீர்கள்.
ஏழைகளுக்கு செல்வம் கிடைத்தால் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
இங்கே ஏழைகளாக இருப் பவர்கள் அங்கே பணக்காரராக இருப்பார்கள். இங்கே பணக்காரராக இருப்பவர் அங்கே ஏழை யாக வருவார். நாங்கள் யக்ஞத்தை கவனிப்பதா அல்லது குடும்பத்தை கவனிப்பதா என்று ஒரு சிலர் கேட்கின்றார்கள். நீங்கள் தன்னுடைய குடும்பத்தை நல்ல விதமாக கவனித்துக் கொள்ளுங்கள் என்று பாபா தெரிவிக்கின்றார். நீங்கள் இப்போது ஏழை யாக இருப்பது நல்லது. பணக்காரராக இருந்தால் பாபாவிடம் இருந்து முழு ஆஸ்தியை பெற முடியாது. சன்யாசிகள் இவ்வாறு கூற முடியாது, அவர்கள் செல்வத்தை வாங்கி தனக்கு எஸ்டேட் ஆகியவை உருவாக்குகிறார்கள். சிவபாபா அவ்வாறு உருவாக்குவதில்லை. இந்த மாளிகை கட்டடங்கள் கூட குழந்தைகள் உங்களுக்காகக் கட்டப்படுகிறது. இங்கே எவருக்கும் எஸ்டேட் எதுவும் இல்லை. இது அனைத்தும் தற்காலத்திற்குத் தான் ஏனெனில் இறுதி நேரத்தில் குழந்தைகள் இங்கே தங்குவதற்காக கட்டப் படுகிறது. நமது நினைவுச்சின்னம் கூட இங்கே தான் உள்ளது. இறுதியில் இங்கே வந்துதான் ஓய்வு எடுப்பார்கள்.
யார் யோகத் தில் ஆழ்ந்து இருக்கிறார்களோ இறுதியில் அவர்கள் பாபாவிடம் ஓடி வருவார்கள். அவர்களுக்கு உதவியும் கிடைக்கும். தந்தையின் உதவி மிகவும் கிடைக்கும். நாம் இங்கு அமர்ந்து தான் வினாசத்தை பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள் எவ்வாறு ஆரம்பகாலத்தில் குழந்தைகளை பாபா மகிழ்வித்தார் அதே போன்று இறுதியில் வருபவருக்கும் அந்த உரிமை கிடைக்கும். அந்த நேரத்தில் நாம் வைகுண்டத்தில் இருக்கிறோம் என்பது போன்று உணர்வீர்கள்.
மிகவும் அருகாமையில் இருப்பதை உணர்வீர்கள்.
நாம் யாத்திரையில் இருக்கின்றோம் என்பதை அறிந்துள்ளீர்கள்.
சிறிது காலத்திற்கு பிறகு வினாசம் ஏற்படும். நாம் சென்று அரச குமாரன் அரச குமாரி ஆகுவோம். பல்வேறு விதமான மலர்கள் இருக்கிறது. நான் எத்தனை பேருக்கு ஞானத்தின் நறுமணத்தை தந்து கொண்டிருக் கின்றேன் என்று ஒவ்வொரு குழந்தைகளும் பார்க்க வேண்டும். எவருக்கு ஞானம் மேலும் யோகத்தின் கல்வியை கற்பிக்கின்றேன்!
யார் சேவை செய்கின்றார்களோ அவர் களுக்குள் மகிழ்ச்சியின் குதூகலம் ஏற்படும். இவர் எந்த மனநிலையில் இருக்கிறார் என்பதை தந்தை அறிகின்றார். இவர்களின் நிலை எதுவரை வேகமாக சென்றடையும் யார் விளக்கு பூச்சிகாளகி
(விட்டில் பூச்சி) விட்டார்களோ அவர்களின் நிலை வேகமாகப் பாய்ந்து செல்லும். மாயாவின் புயல் அவசியம் வரும், அதிலிருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று தந்தை எச்சரிக்கை செய்கிறார். ஆண்-பெண் குடும்பத்தில் இருந்து கொண்டே துôய்மை யாக இருந்து காட்டுங்கள் என்று சன்யாசிகள் ஒருபோதும் வலியுறுத்த மாட்டார்கள். அவர்கள் அவ்வாறு சன்யாசம் செய்விக்க முடியாது. அவர்கள் ரஜோபிரதான சன்யாச துறவர மார்க்கமாகும். ஹடயோக சன்யாசத்தை மனிதர், மனிதருக்கு கற்பித்து வருகிறார்கள். இப்போது இராஜ யோகத்தை பரமபிதா பரமாத்மா வந்து கற்பிக்கின்றார்.
ஆத்மாவில் ஞானம் உள்ளது- நான் ஆத்மா எனது இந்த (ஆத்மா) சகோதரனுக்குப் புரிய வைக்கின்றேன்.
நாமும் ஆத்மாக்கள். பாபா நமக்கு கற்பிக்கின்றார்.
பின்னர் நான் இந்த ஆத்மாவிற்குப் புரிய வைக்கின்றேன். ஆனால் ஆத்மா என்பதின் மீது நம்பிக்கை இல்லாததன் காரணத்தால் தன்னை மனிதனாக நினைத்து மனிதனுக்குப் புரிய வைக்கின்றனர். நான் ஆத்மாக்களிடம் தான் பேசுகின்றேன் என்று தந்தை கூறுகிறார். நான் பரம ஆத்மா ஆத்மாக்களாகிய உங்களிடம் உரையாடுகின்றேன்.
நான் ஆத்மா கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் புரிந்து கொண்டீர்கள்.
இவ்வாறு ஆத்மா உணர்வில் இருந்து எவருக்குச் சொன்னாலும் அம்பு போல் பாயும், உடனடியாகப் புரியும். ஒருவேளை தானே ஆத்மா அபிமானியாக இருக்க முடியவில்லை என்றால் பிறருக்கு எப்படி தாரணை ஆகும். இது மிகப்பெரிய இலட்சியம் ஆகும். நான் இந்த இந்திரியங்கள் மூலமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்பது புத்தியில் எப்போதும் இருக்க வேண்டும். நான் ஆத்மாக்களுடன் உரையாடுகின்றேன் என்று தந்தை கூறுகிறார். நாங்கள் ஆத்மாக் களாகிய சகோதரர்களோடு பேசிக் கொண்டிருக்கிறோம் என்று குழந்தைகள் கூறுவார்கள். தந்தை கட்டளையிடுகிறார்- குழந்தைகளே, அசரீரி அதாவது ஆத்மா-அபிமானி ஆகுங்கள். தேக-அபிமானத்தை விடுத்து, என்னை நினைவுச் செய்யுங்கள் என்கிறார். நான் ஆத்மாவுடன் உரையாடுகிறேன் உடலோடு அல்ல என்பதை புத்தியில் நினைக்க வேண்டும். பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களும் ஆத்மா என்று கருதி உரையாட வேண்டும். நாங்கள் தான் பாபாவின் குழந்தைகளாகி விட்டோமே என்று குழந்தைகள் நினைக்கிறார்கள் ஆனால் இல்லை, இதில் சூட்சுமமாக புத்தியில் பயிற்சி செய்ய வேண்டும். நான் ஆத்மா என்று புத்தி செல்கிறது. இவர்களும் நமது சகோதரர் இவர்களுக்கு பாதை காட்ட வேண்டும் என்றுக் கருதி ஆத்மா நினைவில் புரிய வைத்தால் ஆத்மாவிற்கு அம்பு பாயும், தேகத்தை பார்த்து கூறினால் ஆத்மா கேட்காது.
நான் ஆத்மாவிடம் உரையாடுகிறேன் என்று முதலிலேயே எச்சரிக்கை கொடுத்து விடுங்கள். ஆத்மாவை பெண் என்றோ, ஆண் என்றோ சொல்வதில்லை.
ஆத்மா தனிப் பட்டது. ஆண், பெண் என்று உடலுக்கு தான் பெயரிடப்படுகிறது. எவ்வாறு பிரம்மா- சரஸ்வதிக்கு ஆண்-பெண் என்கிறார்கள். சங்கரர் பார்வதிக்கு ஆண்-பெண் என்கிறார்கள்.
சிவபாபாவை ஆண் என்றோ பெண் என்றோ கூறுவதில்லை. தந்தை ஆத்மாக்களுக்கு புரிய வைக்கின்றார்- இது மிகப்பெரிய இலட்சியம் ஆகும். பாபாவின் ஆத்மா இவருக்குப் புரிய வைக்கின்றது. ஆத்மாவிற்கு ஊசி போட்டால் தேக-அபிமானம் விடுபட்டு விடுகிறது. இல்லை யெனில் நறுமணம் வெளிப்படாது, வலிமை இருக்காது. நாம் ஆத்மாவுடன் உரையாடுகின்றோம்.
ஆத்மா கேட்கிறது. நீங்கள் திரும்ப வீட்டிற்குச் செல்ல வேண்டும் ஆகவே ஆத்மா அபிமானி ஆகுங்கள், மன்மனாபவ பிறகு தானாகவே மத்யாஜீத்பவ வந்துவிடும் என்று தந்தை அறிவுரை கூறுகிறார். மன்மனாபவ என்பது தான் முக்கியமான விசயமாகும். தந்தையை நினைவுச் செய்யுங்கள். அனைவரும் பகவானை நினைவுச் செய்யுங்கள் என்று கூறுகிறார்கள் ஆனால் அறிவதில்லை. முக்கியமாக ஈஸ்வரனை நினைவுச் செய்யுங்கள் என்று அறிவிக்கிறார்கள். கிருஷ்ணனையோ அல்லது மற்ற தேவதைகளையோ நினைவு செய்ய வேண்டாம். இருப்பினும் மனிதர்களின் புத்தி கிருஷ்ணர், இராமர் என்று போய் விடுகிறது. அனால் அவர்கள் பகவான் கிடையாது. இப்போது குழந்தைகளாகிய உங்களுக்கு சூட்சும புத்தி கிடைத்துள்ளது. அதிகாலையில் எழுந்து ஞானச் சிந்தனை செய்யுங்கள். பகலில் சேவை செய்யுங்கள் ஏனெனில் நாம் கர்மயோகிகள் அல்லவா. துôக்கத்தை வென்றவர்கள் ஆகுங்கள் என்று எழுதிப் போடுகிறோம். இரவில் கண்விழித்து வருமானம் செய்யுங்கள். பகலில் மாயாவின் பெரிய சூழலாக இருக்கும். அமிர்தவேளையில் சுற்றுப்புற சூழல் நன்றாக இருக்கும். நான் இந்த நேரத்தில் எழுந்து ஞானச்சிந்தனை செய்கிறேன் என்று பாபாவிற்கு கடிதம் எழுதுவதில்லை.
இதில் அதிக முயற்சி தேவை. உலகத்திற்கு எஜமானன் ஆக வேண்டுமென்றால் அவசியம் சிறிது உழைக்க வேண்டிவரும். நல்லது!
இனிமையிலும் இனிமையான, வெகுகாலம் கழித்து, காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாய்,
தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும்.
ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே
தாரணைக்கான முக்கியச் சாரம்:-
1)
தேகி-அபிமானி (ஆத்ம அபிமானி) ஆகுவதற்கான பயிற்சி செய்ய வேண்டும், நான் ஆத்மா, ஆத்மா(சகோதரன்)வோடு உரையாடிக் கொண்டிருக்கின்றேன், ஆத்மா தான் பேசுகிறது, ஆத்மா தான் இந்த கர்மேந்திரியங்கள் மூலமாக கேட்கின்றது இந்தப் பயிற்சி செய்ய வேண்டும்.
2)
உன்னதநிலை அடைவதற்காக தூய்மை நிர்விகாரி (விகாரத்தில் ஈடுபடாதவர்களாக) ஆக வேண்டும், உயிருடன் வாழ்ந்து கொண்டே இறந்து முழுமையான விளக்குப் பூச்சிகளாக வேண்டும்.
வரதானம்:
தைரியம் என்ற ஒரே ஒரு விசேஷத்தன்மையின் மூலம் அனைவருடைய உதவியையும் அடைந்து முன்னேறக்கூடிய விசேஷ ஆத்மா ஆகுக.
எந்த குழந்தை தைரியம் வைத்து, பயமற்றவராக முன்னேறிக் கொண்டே இருக்கிறார் களோ, அவர்களுக்கு பாபாவின் உதவி தானாகவே கிடைத்துக் கொண்டே இருக்கும். தைரியம் என்ற விசேஷத்தன்மை மூலம் அனைவருடைய உதவியும் கிடைத்து விடும். இந்த ஒரு விசேஷத் தன்மை மூலம் மற்ற அனைத்து விசேஷத் தன்மைகளும் தானாகவே வந்து விடும். ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தால் பலமடங்கு உதவிக்கு அதிகாரி ஆகிவிடலாம். இந்த விசேஷத்தன்மையை மற்றவர்களுக்கும் தானமாகவும் வரதானமாகவும் கொடுத்துக் கொண்டே இருங்கள், அதாவது விசேஷத்தன்மையை சேவையில் ஈடுபடுத்தினீர்கள் என்றால் விசேஷ ஆத்மா ஆகிவிடுவீர்கள்.
சுலோகன்:
பாபா தன்னுடைய கண் இமைகளில் அமர வைத்து கூடவே அழைத்து செல்லும் அளவிற்கு இலேசானவர் ஆகிவிடுங்கள்.
0 Comments