07-03-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே
- வெற்றி இரத்தினம்
ஆக வேண்டும்
என்றால், உயிருடனே
இறந்து, (தேஹீ
அபிமானி) ஆத்ம
உணர்வுடையவராக ஆகி,
தந்தையின் கழுத்தில்
மாலை ஆவதற்கான
முயற்சி செய்யுங்கள்.
கேள்வி:
சுயதரிசன சக்கரத்தின்
இரகசியம் தெளிவாக இருந்தும் கூட குழந்தைகளில்
தாரணை வரிசைக்கிரமமாக
ஆகிறது ஏன்?
பதில்:
ஏனெனில் இந்த நாடகம் மிகவுமே நியமப்படி அமைக்கப்பட்டுள்ளது. பிராமணர் கள் தான் 84 பிறவிகளைப் புரிந்து கொண்டு நினைவு செய்ய முடியும். ஆனால் மாயை பிராமணர்களுக்கு நினைவில் தடையை ஏற்படுத்துகிறது. அடிக்கடி யோகத்தைத் துண்டித்து விடுகிறது. ஒரு வேளை ஒன்று போல தாரணை ஆகி விட்டது என்றால், எல்லாரும் சுலபமாக தேர்ச்சி அடைந்து விடுவார்கள். பின் இலட்சங்களின்
மாலை ஆகி விடும். எனவே இராஜதானி ஸ்தாபனை ஆகும் காரணத்தினால்
வரிசைக்கிரமமாக தாரணை ஆகிறது.
பாடல்: இறந்தாலும் உனது வழியிலே.. .
ஓம் சாந்தி.
குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். இது மறு வாழ்வினுடைய பிறவி ஆகும்.
மனிதர்கள் சரீரம் விடும் பொழுது அவர்களைப் பொருத்தவரை உலகம் அழிந்து விடுகிறது. ஆத்மா தனியாக ஆகி விடும் பொழுது மாமா, சித்தப்பா யாருமே இருப்பதில்லை.
இவர் இறந்து விட்டார் என்று கூறப்படுகிறது. அதாவது ஆத்மா போய் பரமாத்மாவைச் சேர்ந்து விட்டது. உண்மையில் யாரும் செல்வது இல்லை. ஆனால் மனிதர்கள் ஆத்மா திரும்பிப் போய் விட்டது அல்லது ஜோதி ஜோதி யுடன் கலந்து விட்டது என்று நினைக்கிறார்கள். இப்பொழுது தந்தை வந்து புரிய வைக்கிறார்
- ஆத்மா மறுபிறவி எடுக்கவே வேண்டி உள்ளது என்பதையோ குழந்தைகள் அறிந்துள்ளார்கள். மறுபிறவிக்குத் தான் பிறப்பு, இறப்பு என்று கூறப்படுகிறது. கடைசியில் வரக் கூடிய ஆத்மாக்கள் ஒரு பிறவி தான் எடுக்க வேண்டி இருக்கலாம்.
அவ்வளவு தான்!
அதை விட்டு திரும்பிச் சென்று விடுவார். புனர்ஜென்மம் எடுப்பதற்கான கணக்கு வழக்கு கூட மிகப் பெரியது ஆகும். கோடிக்கணக் கான மனிதர்கள் உள்ளார்கள். ஒவ்வொருவருடைதையும் விரிவாகக் கூற முடியாது. ஹே பாபா, எங்களது தேகத்தின் அனைத்து சம்பந்தங்களையும் தியாகம் செய்து இப்பொழுது நாங்கள் உங்களது கழுத்தின் மாலை ஆக வந்துள்ளோம்,
அதாவது உயிருடனிருந்தே உங்களுடையவராக ஆக வந்துள்ளோம் என்று இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள். முயற்சியோ சரீரத்தில் இருந்து செய்ய வேண்டி இருக்கும்.
தனியாக ஆத்மா புருஷார்த்தம் (முயற்சி)
செய்ய முடியாது.
ருத்ர யக்ஞம் படைக்கும் பொழுது அங்கு சிவனின் உருவம் பெரியதாக மண்ணைக் கொண்டு அமைக்கிறார்கள். மேலும் அநேக சாலிகிராமங்களின் உருவங்களையும் மண்ணினால் அமைக்கிறார்கள் என்று தந்தை வந்து புரிய வைக்கிறார்.
இப்பொழுது இது போல உருவாக்கி பின் அதற்கு பூஜை செய்யக் கூடிய அந்த சாலிகிராமங்கள் யார்?
சிவனை அவர் பரமபிதா பரமாத்மா என்று புரிந்திருப்பார்கள். சிவனை முக்கியமாக வைக்கிறார்கள். ஆத்மாக்களோ ஏராளமாக உள்ளன.
எனவே அவர்களும் சாலிகிராமங்கள் நிறைய அமைக்கிறார்கள். 10,000 அல்லது 1 இலட்சம் கூட சாலிகிராமங்கள் அமைக்கிறார்கள். தினமும் அமைத்தார்கள். பிறகு உடைத்தார்கள். மீண்டும் அமைத்தார்கள். மிகவுமே முயற்சி தேவைப்படுகிறது. இப்பொழுது இவர்கள் யார் என்பது பூசாரிகளுக்கும் தெரியாது.
யக்ஞத்தை வளர்ப்பவர்களுக்கும் தெரியாது. இத்தனை அனைத்து ஆத்மாக்களும் பூஜைக்குரியவர்களா என்ன?
இல்லை. நல்லது.
பாரதவாசிகளின் 33 கோடி சாலி கிராமங்கள் அமைத்தார்கள் என்று வைத்து கொள்வோம்.
அது கூட இருக்க முடியாது.
ஏனெனில் எல்லாருமோ தந்தைக்கு உதவி அளிப்பதில்லை. இது மிகவுமே புரிந்து கொள்ள வேண்டிய ஆழமான விஷயங்கள் ஆகும். ருத்ர யக்ஞம் இயற்றுவதில்
4-5 இலட்ச ரூபாய்கள் செலவு செய்கிறார்கள். நல்லது. இப்பொழுது சிவனோ பரமபிதா பரமாத்மா ஆவார் என்பது சரி.
மற்றபடி பூஜிக்கப்படும் சாலிகிராமங்களான இத்தனை குழந்தைகள் யார்?
இச்சமயத்தில் குழந்தைகளாகிய நீங்கள் தான் தந்தையை அறிந்துள்ளீர்கள் மற்றும் உதவியாளர்களாக ஆகிறீர்கள். பிரஜைகள் கூட உதவி செய் கிறார்கள் அல்லவா? யார் சிவபாபாவை நினைவு செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கத் திலோ வந்து விடுவார்கள்.
ஞானம் யாருக்குமே கொடுக்கவில்லை என்றாலும் கூட சொர்க்கத்தில் வந்து விடுவார்கள்.
அவர்களோ எவ்வளவு அதிகமானோர் இருப்பார்கள்!
ஆனால் முக்கிய மானவர்கள் 108 பேர் ஆவார்கள். மம்மா கூட பாருங்கள் எவ்வளவு வலிமையான இரத்தினம் ஆவார்!
எவ்வளவு பூஜிக்கப்படுகிறார்! இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஆத்ம உணர்வுடைய வராக அவசியம் ஆக வேண்டும். முந்தைய ஒவ்வொரு பிறவியிலும் நீங்கள் (தேக அபிமானி) தேக உணர்வுடையவராக இருந்துள்ளீர்கள். நான் ஆத்மா,
பரமபிதா பரமாத்மாவின் குழந்தை ஆவேன் என்று எந்த ஒரு மனிதனும் கூற மாட்டார்.
குழந்தைகள் ஆவோம் என்றால், அவரது முழு வாழ்க்கை சரித்திரம் தெரிந்திருக்க வேண்டும். பரலௌகீக தந்தையின் வாழ்க்கை சரிதம் என்பது மிகவுமே வலிமையானது ஆகும். எனவே இப்பொழுது உயிருடனே இருந்து, இறந்து பாபா, நாங்கள் உங்களது கழுத்தின் மாலையாக அவசியம் ஆகிடுவோம் என்று குழந்தைகள் கூறுகிறார்கள். ஆத்மாக்களுடையதும் பெரிய பெரிய மாலை ஆகும். பிரஜாபிதா பிரம்மா முக்கிய மானவர் ஆவார்.
அவருக்கு ஆதாம்,
ஆதி தேவன்,
மகாவீர் என்றும் கூறுகிறார்கள். இப்பொழுது இது மிகவுமே ஆழமான விஷயம் ஆகும்.
ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் ஒரு நிராகார தந்தையின் குழந்தைகள் ஆவோம் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். மேலும் இது மனித சிருஷ்டியின் முழு பரம்பரை ஆகும்.
இதற்கு ஜீனியலாஜிகல் ட்ரீ - வம்சாவளியின் மரம் என்று கூறப்படுகிறது. எப்படி அகர்வால் போன்ற அடைப்பெயர்கள் உள்ளன அல்லவா? பிறகு அவர்களது குழந்தைகள் பேரன்கள் அகர்வால் என்றே இருப்பார்கள்.
பரம்பரை அமைக்கிறார்கள் அல்லவா? ஒன்றி லிருந்து பிறகு அதிகரித்து அதிகரித்து பெரிய மரமாகி விடுகிறது. யாரெல்லாம் ஆத்மாக்கள் இருக்கிறார்களோ அவர்கள் சிவபாபாவின் கழுத்தின் மாலை ஆவார்கள். அவர்களோ அவினாஷி ஆவார்கள்.
பிரஜாபிதா பிரம்மாவும் கூட இருக்கிறார்.
புதிய உலகம் எப்படி படைக்கப்படுகிறது? பிரளயம் ஆகி விடுகிறதா என்ன?
இல்லை, உலகமோ நிலையாக இருக்கிறது.
பழையதாக ஆகி விடும் பொழுது மட்டும் தந்தை வந்து அதைப் புதியதாக ஆக்குகிறார்.
நாம் புதியதிலும் புதியதாக இருந்தோம் என்று இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர் கள். நமது ஆத்மா தூய்மையாக புதியதாக இருந்தது.
தூய தங்கமாக இருந்தது. அதன் மூலம் ஆத்மாக்களாகிய நமக்கு நகை
(சரீரம்) கூட தங்கமானதாக கிடைத்தது.
அதற்கு காய கல்பதரு - முழுமையான ஆயுள் உடைய உடல் என்று கூறுகிறார்கள். இங்கோ மனிதர்களுடைய சராசரி ஆயுள் 40-45 வருடங்கள் இருக்கிறது.
ஒரு சிலருக்கு
100 வருடங்கள் கூட இருக்கலாம். அங்கோ உங்களது ஆயுள் சராசரி 125 வருடங்களுக்குக் குறைவாக இருக்காது.
உங்களது ஆயுளை கல்ப விருட்சத்திற்கு சமமாக ஆக்குகிறார்.
ஒரு பொழுதும் அகால மரணம் ஏற்படாது. ஆத்மாக் களாகிய நீங்கள் சிவபாபாவின் குழந்தை கள் ஆவீர்கள்.
பிரம்மா மூலமாக அவசியம் பிராமணர்கள் பிறக்கக் கூடும்.
அவர்கள் மூலமாக பிறகு பிரஜைகள் உருவாக்கப்படுகிறார்கள். முதன் முதலில் நீங்கள் பிரம்மா முக வம்சாவளி பிராமணர்கள் ஆகிறீர்கள். சிவபாபாவோ ஒருவர் ஆவார்.
பிறகு மாதா எங்கே? இது மிகவும் ஆழமான இரகசியம் ஆகும்.
நான் வந்து இவர் மூலமாக குழந்தை களாகிய உங்களை தத்து எடுக்கிறேன். ஆக நீங்கள் பழைய உலகத்திலிருந்து உயிருடனிருந்தே இறக்கிறீர்கள். அவர்கள் தத்து எடுப்பது பணம் கொடுப்பதற்காகச் செய்கிறார்கள். தந்தை சொர்க்கத்தின் ஆஸ்தியை வழங்குவதற்காகத் தத்து எடுக்கிறார். தகுதி ஆக்குகிறார். கூடவே அழைத்துச் செல்வார்.
எனவே இந்த பழைய உலகத்திலிருந்து உயிருடனிருந்தே இறக்க வேண்டும். இல்லற விவகாரங்களில் இருக்கையிலும் தூய்மையாக ஆகி,
தந்தையினுடைய வராக ஆக வேண்டும்.
நாம் அங்கு இருப்பவர்கள் ஆவோம்.
பிறகு சத்யுகத்தில் சுகத்தின் பாகம் ஏற்று நடித்தோம்.
இந்த விஷயங்களை தந்தை புரிய வைக்கிறார். சாஸ்திரங்களிலோ இவை இல்லை.
இப்பொழுது தந்தை வந்து ஆத்மாக்களாகிய உங்களை தூய்மை ஆக்குகிறார். ஆத்மாவின் அழுக்கை நீக்குகிறார்.
உங்களுக்கு ஞானத்தின் மூன்றாவது கண் கிடைக்கிறது. அவர்கள் பின்னர் மூன்றாவது கண்ணின் கதை என எழுதியுள்ளனர். உண்மையில் விஷயம் இங்கு இருப்பதாகும்.
உங்களுக்கு பிரம்மாண்டம் முதற் கொண்டு முழு சிருஷ்டியின் முதல், இடை,
கடை பற்றிய முழு சமாச்சாரம் கிடைத்து விடுகிறது.
தந்தை ஒரே ஒரு முறை வந்து புரிய வைக்கிறார். சந்நியாசிகளோ மறு பிறவி எடுத்துக் கொண்டே இருப்பார்கள். இவரோ வந்தார். மேலும் குழந்தைகளுக்குக் கற்பித்தார்.
அவ்வளவே! இதுவோ புதிய விஷயம் ஆகி விடுகிறது.
சாஸ்திரங்களில் இந்த விஷயங்கள் கிடையாது.
இது மிகவும் பெரியதிலும் பெரிய கல்லூரி ஆகும்.
ஒரு வாரமோ நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டும். பட்டியில் அமர வேண்டும் என்ற நியமம் உள்ளது. கீதையின் பாடம் அல்லது பாகவதத்தின் பாடம் கூட ஒரு வாரம் வைக்கிறார்கள் அல்லவா? எனவே
7 நாள் பட்டியில்
(சூளை) அமர வேண்டி இருக்கும்.
விகாரியாகவோ எல்லாரும் இருக்கிறார் கள்.
சந்நியாசிகள் வீடு வாசல் விட்டு நிர்விகாரி ஆகிறார்கள் என்றாலும் கூட பிறகும் விகாரத்தில் ஜென்மம் எடுத்து மீண்டும் நிர்விகாரி ஆவதற்காக சந்நியாசம் செய்கிறார்கள். ஒரு சிலர் மறுபிறவியையும் ஏற்றுக் கொள்கிறார்கள். ஏனெனில் உதாரணங்களைப் பார்க்கிறார் கள்.
ஒரு சிலர் நிறைய வேத சாஸ்திரங்களைப் படித்து படித்து சரீரம் விடுகிறார்கள் என்றால்,
அந்த சம்ஸ்காரங்களுக்கு ஏற்ப பிறகும் ஜென்மம் எடுக்கிறார்கள். ஆக, சிறு வயதிலேயே சாஸ்திரங் களைப் பயின்று கொண்டு விடுகிறார்கள். ஜென்மம் எடுத்து தங்களை தூய்மையற்றவர்கள் என்று உணர்ந்து பிறகு தூய்மை ஆவதற்காக சந்நியாசம் செய்கிறார்கள். நீங்களோ ஒரே ஒரு முறை தூய்மையாக ஆகி தேவதை ஆகிறீர்கள். நீங்கள் பிறகு சந்நியாசம் செய்ய வேண்டி இருக்காது. எனவே அவர்களது சந்நியாசம் அரைகுறை ஆகியது அல்லவா? இந்த விஷயங்களை சுயம் நீங்களும் புரிய வைக்க முடியாமல் இருப்பீர்கள். பாபா வந்து புரிய வைக்கிறார். அவர் உத்தமத் திலும் உத்தமமான தந்தை.
அவருக்கு நீங்கள் குழந்தைகளாக ஆகி உள்ளீர்கள். இது பள்ளிக் கூடமும் ஆகும். தினமும் புதுப் புது குறிப்புக்கள் வெளிப்படுகின்றன. இன்று ஆழத்திலும் ஆழமான விஷயங்களைக் கூறுகிறேன் என்பார்.
கேட்கவில்லை என்றால் தாரணை எப்படி ஆகும்? இப்பொழுது தந்தை வந்து புரிய வைக்கிறார்
- நீங்கள் என்னுடையவராக ஆகி உள்ளீர்கள் என்றால், சரீர உணர்வை விட்டு விடுங்கள். திரும்பி அழைத்துச் செல்வதற்காக நான் (கைடு)
வழிகாட்டியாகி வந்துள்ளேன்.
நீங்கள் பாண்டவ சம்பிரதாயம் ஆவீர்கள்.
அவர்கள் உலகீய வழிகாட்டிகள். நீங்கள் ஆன்மீக வழிகாட்டிகள்.
அவர்கள் ஸ்தூல யாத்திரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். உங்களுடையது ஆன்மீக யாத்திரை ஆகும். அவர்கள் பாண்டவர்களுக்கு ஆயுதங்களைக் கொடுத்து யுத்த மைதானத் தில் இருப்பதாகக் காண்பித்துள்ளார்கள். இப்பொழுது குழந்தை களாகிய உங்களிடம்கூட பலம் தேவை.
நிறைய பேர் ஆகிக் கொண்டே போகும் பொழுது பலமும் அதிகரித்து கொண்டே போகும்.
எனவே நான் இந்த பிரம்மா மூலமாக உங்களை மடியில் எடுத்துள்ளேன். எனவே இவருக்கு மாதா பிதா என்று கூறப்படுகிறது என்று தந்தை வந்து புரிய வைக்கிறார். தந்தையும் நீயே, தாயும் நீயே, நாங்கள் உங்கள் பாலகர்கள் என்றோ எல்லாரும் கூறுகிறார்கள். நல்லது.
அவருக்கோ காட்ஃபாதர் என்று கூறப்படுகிறது. காட்மதர் என்று கூறப்படுவதில்லை. காட் மதர் எனவே மதர் (தாய்)
என்று எப்படி கூறுகிறார்கள்? மனிதர்கள் பிறகு ஜகதாம்பாவை மதர் என்று நினைத்து கொண்டு விடு கிறார்கள்.
ஆனால் இல்லை.
அவருக்கு தாய் தந்தை இருக்கிறார்கள். நல்லது. அவருடைய தாய் யார்?
இது மிகவும் ஆழமான விஷயங்களாகும். பாடலோ இருக்கிறது.
ஆனால் நிரூபித்து யார் புரிய வைப்பது? இவர் தான் தந்தையாக இருக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். முதலில் மாதா ஆவார். மிகச் சரியாக நீங்கள் இந்த பிரம்மா மாதாவிடம் முதலில் வரவேண்டி உள்ளது.
இவருக்குள் பிரவேசம் செய்து உங்களை தத்து எடுக் கிறேன். எனவே இவர் மாதா பிதா ஆகிறார்.
இந்த விஷயங்கள் எந்த சாஸ்திரத்திலும் இல்லை. இதனை தந்தை வந்து புரிய வைக்கிறார்.
எப்படி நீங்கள் முகவம்சாவளி ஆகிறீர்கள்?
நான் பிரம்மா வாய் மூலமாக உங்களைப் படைக்கிறேன்.
ஒரு இராஜா இருக்கிறார் என்றால் நீ என்னுடையவன் ஆவாய் என்று வாயால் உனக்குக் கூறுகிறேன் என்பார்.
இது ஆத்மா கூறுவது. ஆனால் பிறகும் அவரை மாதா பிதா என்று கூற முடியாது. இது மிகவும் அதிசயமான விஷயம் ஆகும்.
நாம் சிவபாபாவினுடையவராக ஆகி உள்ளோம்.
எனவே இந்த தேக உணர்வை விட வேண்டி உள்ளது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தன்னை அசரீரி ஆத்மா என்று உணருவது உழைப்பினுடைய வேலை ஆகும்.
இதற்கு இராஜயோகம் மற்றும் ஞானம் என்றே கூறப்படுகிறது. இரண்டு வார்த்தைகள் வருகின்றன. மனிதர்கள் இறக்கும் பொழுது இராம் இராம் என்று கூறுங்கள் என்று அவர்களுக்குக் கூறுவார்கள் அல்லது குருமார்கள் தங்களது பெயரைக் கொடுத்து விடுவார்கள். குரு இறந்து விட்டார் என்றால் அவரது குழந்தையை குருவாக்கி விடுவார்கள். இங்கோ தந்தை சென்றார் என்றால், எல்லாருமே போக வேண்டி உள்ளது. இது மரண உலகத்தின் கடைசிப் பிறவி ஆகும். பாபா நம்மை அமரலோகத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
முக்தி தாமம் வழியாகச் செல்ல வேண்டும்.
விநாசம் ஏற்படும் பொழுது இந்த கலியுகத்தின் உலகம் கீழே போய் விடுகிறது. சத்யுகம் மேலே வந்து விடுகிறது மற்றது சமுத்திரத்திற்குள் ஒன்றும் போய் விடுவதில்லை.
இங்கு குழந்தை களாகிய நீங்கள் புத்துணர்வு (ரிஃப்ரெஷ்)
பெறுவதற்காக கடலிடம் வரு கிறீர்கள்.
இங்கு நீங்கள் நேரிடையாக ஞான நடனம் பார்க்கிறீர்கள். கோப கோபியர்கள் கிருஷ்ணரை நடனம் செய்வித்தார்கள் என்று காண்பிக்கிறார்கள். இந்த விஷயம் இச்சமயத் தினுடையதாகும். சாதகப் பட்சி போல ஏங்கும் குழந்தைகளுக்கு முன்னால் தந்தையின் முரளி நடக்கிறது.
குழந்தைகள் கூட கற்றுக் கொள்ள வேண்டும். பின் யார் எவ்வளவு கற்றுக் கொள்கிறார்களோ, எல்லையில்லாத தந்தையிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெற்று கொள்ளுங்கள் என்று புரிய வைக்க வேண்டும்.
ஹே! பகவான்!
என்று கூறுகிறீர்கள். அவரோ படைப்புக்கர்த்தா ஆவார். அவசியம் சொர்க்கத்தைத் தான் படைப்பார். இந்த ஒரே ஒரு தந்தை தான் சொர்க்கத்தைப் படைக்கிறார்.
அது பிறகு அரைக் கல்பம் நடக்கிறது. பாபா உங்களுக்கு எவ்வளவு இரகசியத்தைப் புரிய வைக்கிறார். குழந்தைகள் உழைப்பு செய்து தாரணை செய்ய வேண்டும். சுயதரிசன சக்கரத்தின் இரகசியம் கூட பாபா எவ்வளவு தெளிவாகக் கூறி உள்ளார்.
84 பிறவிகளின் சக்கரத்தை பிராமணர்கள் தான் நினைவு செய்ய முடியும். இது புத்தியின் யோகத்தை ஈடுபடுத்தி சக்கரத்தை நினைவு செய்வது ஆகும். ஆனால் மாயை அடிக்கடி யோகத்தைத் துண்டித்து விடுகிறது. தடைகளை ஏற்படுத்துகிறது. சுலபமாக இருந்திருந்தது என்றால் பின் அனைவரும் தேர்ச்சி அடைந்து விடுவார்களே! இலட்சங்களின் மாலை அமைந்து விடுமே! இதுவோ நாடக நியமப்படி அமைந்துள்ளது. முக்கிய மானவர்கள் 8 பேர் ஆவார்கள். அதில் வித்தியாசம் ஏற்பட முடியாது. திரேதாவின் கடைசியில் எத்தனை இளவரசர்கள் இளவரசிகள் இருப்பார்களோ அவர்கள் அனைவரும் சேர்ந்து அவசியம் இங்கு தான் படித்துக் கொண்டிருக்கக் கூடும்.
பிரஜைகளும் படித்து கொண்டிருக்கக் கூடும்.
இங்கு தான் இராஜதானி ஸ்தாபனை ஆகிறது. தந்தை தான் இராஜதானி ஸ்தாபனை செய்கிறார்.
வேறு எந்த மத குருவும் இராஜ்யம் ஸ்தாபனை செய்வதில்லை. இது மிகவுமே அதிசயமான இரகசியம் ஆகும்.
சத்யுகத்தில் இலட்சுமி நாராயணரின் இராஜ்யம் எங்கிருந்து வந்தது?
கலியுகத்திலோ இராஜ்யம் இல்லை. அநேக தர்மங்கள் உள்ளன.
பாரதவாசிகள் ஏழைகளாக உள்ளார்கள். கலியுகத்தின் இரவு முடிவடைந்து பகல் ஆனதோ இல்லையோ, அரசாட்சி நடக்க ஆரம்பமாகி விட்டது. இது எப்படி! அலாவுதீனின் நாடகம் காண்பிக்கிறார்கள் இல்லையா! ஆக அளவற்ற பொக்கிஷங்கள் வெளிப்படுகிறது. நீங்கள் ஒரு நொடியில் திவ்ய திருஷ்டி மூலமாக வைகுண்டத்தைப் பார்த்து விட்டு வருகிறீர்கள். நல்லது.
மாதா பிதா, பாப்தாதா குழந்தைகள், முழு குடும்பம் ஒன்றாக அமர்ந்துள்ளீர்கள். இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1.
தந்தைக்குச் சமானமாக அனைவரையும் புத்துணர்வு பெறுமாறு செய்வதற்கான சேவை செய்ய வேண்டும். சாதகப் பட்சி போல ஆகி, ஞான நடனம் செய்ய வேண்டும் மற்றும் செய்விக்க வேண்டும்.
2.
இந்த சரீர உணர்வை விடுத்து பழைய உலகத்திலிருந்து உயிருடன் இருந்தே இறக்க வேண்டும்.
அசரீரி ஆகி இருப்பதற்கான அப்பியாசம் செய்ய வேண்டும்.
சுயம் தங்களை சொர்க்கத்தின் ஆஸ்திக்கு தகுதி உடையவராகவும் ஆக்க வேண்டும்.
வரதானம்:
ஹோலி என்ற
வார்த்தையின் பொருளின்
சொரூபத்தில் நிலைத்திருந்து
உண்மையான ஹோலி
கொண்டாடக் கூடிய
ஹையெஸ்ட் ஹோலியெஸ்ட்
- மிக உயர்ந்தவரும்
மின புனிதமானவரும்
ஆவீர்களாக.
ஹோ-லி என்றால் எது நடந்ததோ அது முடிந்து விட்டது, ஆகி விட்டது. எந்த காட்சி நடந்ததோ ஹோ-லி அதாவது கடந்து விட்டது. கடந்து விட்டதை கடந்து விட்ட தாக ஏற்றுக் கொள்வதற்காக எப்பொழுதும்
டிராமா என்ற கேடயத்தை பயன்படுத்துங்கள். ஒவ்வொரு கணமும் ஹோ-லி, அதாவது எது கழிந்து விட்டதோ, அது முடிந்து விட்டது என்பது நினைவில் இருக்கும் பொழுது தான், ஹோலியின் சாயம் பக்குவமாக படிந்து விடுகிறது. அவர்கள் ஒரு பொழுதும் நாடகத்தின் எந்தவொரு காட்சியை பார்க்கையிலும்
ஏன் என்ன எப்படி போன்ற கேள்விகளில்
குழம்ப மாட்டார்கள்.
எப்பொழுதும் ஞான மனனம் செய்து தங்களது ஹோலியெஸ்ட் மற்றும் ஹையெஸ்ட் ஸ்டேஜ் மிகவும் புனிதமான மற்றும் மிகவும் உயர்ந்த நிலையை அமைத்துக் கொண்டு விடுகிறார்கள்.
சுலோகன்:
யாரிடம் தூய்மையினுடைய
தலைசிறந்த பொக்கிஷம் இருக்கிறதோ, அவர்களே எல்லோரையும்
விட பெரிய செல்வந்தர்கள் ஆவார்கள்.


0 Comments