Header Ads Widget

Header Ads

TAMIL MURLI 27.01.23

 

27-01-2023  காலை முரளி ஓம் சாந்தி  பாப்தாதா  மதுபன்

 



Listen to the Murli audio file



இனிமையான குழந்தைகளே! தங்க புத்தியுள்ளவராக ஆவதற்காக தந்தை என்ன புரிய வைக்கின்றாரோ அதை நல்ல முறையில் புரிந்து கொள்ள வேண்டும், தனக்குள் தாரணை செய்து மற்றவர்களுக்கு செய்விக்க வேண்டும்.

கேள்வி:

எந்த ஒரு இரகசியம் மிகவும் ஆழமானது, அழகானது மற்றும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்?

பதில்:

நிராகார தந்தை அனைவருக்கும் தாய், தந்தையாக எவ்வாறு ஆகின்றார்? அவர் எந்த விதியின் மூலம் உலகை படைக்கின்றார்? என்பது மிகவும் ஆழமானது மற்றும் இரகசியமான தாகும். நிராகார தந்தை தாயின்றி உலகை படைக்க முடியாது. அவர் எப்படி சரீரத்தை தாரணை செய்து, அவரிடத்தில் பிரவேசமாகி, அவரது வாயின் மூலம் குழந்தைகளை தத்தெடுக் கின்றார்! இந்த பிரம்மா தந்தையாகவும் இருக்கின்றார், தாயாகவும் இருக்கின்றார் - இந்த விசயம் நன்றாகப் புரிந்து கொண்டு சிந்தனை செய்ய வேண்டிய அல்லது நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

பாடல்:  நீங்கள் தான் தாயும், தந்தையுமாக.......

ஓம்சாந்தி. யாரை தாய், தந்தை என்று கூறுகிறீர்களோ அவசியம் அந்த தந்தை தான் கட்டளை யிடுவார்! இந்த விசயங்கள் மனிதர்கள் புரிந்து கொள்வது மிகவும் கடினமாகும். மேலும் புரிந்து கொள்வதற்கும் இதுவே முக்கிய விசயமாகும். எந்த நிராகார பரம்பிதா பரமாத்மாவை தந்தை என்று கூறுகிறோமோ, அவரை தாய் என்றும் கூறுகிறோம். இது ஆச்சரியமான விசயமாகும். பரம்பிதா பரமாத்மா மனித சிருஷ்டியை படைப்பார் எனில் அவசியம் தாய் வேண்டும். இந்த விசயம் மிகவும் ஆழமானது, இது வேறு யாருடைய புத்தியிலும் ஒருபோதும் வரவே முடியாது. அவர் அனைவருக்கும் தந்தையாவார், தாயும் அவசியம் தேவை. அந்த தந்தை நிராகாரமானவர், பிறகு தாயாக யாரை வைப்பது? திருணம் செய்திருக்கமாட்டார். இது மிகவும் ஆழமான, இரகசியமான, புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். புதிதாக வருபவர்கள் புரிந்துக் கொள்ள முடியாது. பழையவர்களும் கஷ்டப்பட்டு புரிந்து கொள்கின்றனர் மற்றும் நினைவில் வைத்துக் கொள்கின்றனர். குழந்தைகள் தான் தாய் தந்தையின் நினைவில் இருப்பார்கள் அல்லவா! பாரதத்தில் லெட்சுமி-நாராயணனையும் நீங்கள் தான் தாய், தந்தை.... என்று கூறிவிடுகின்றனர். இராதை-கிருஷ்ணரின் முன் சென்றும் நீங்கள் தான் தாய், தந்தை.... என்று கூறுகின்றனர். அவர்கள் இளவரசன், இளவரசி ஆவர். அவர்களை தாய், தந்தை என்று எந்த புத்தியற்றவர்களும் கூட கூறமாட்டார்கள். மனிதர்களுக்கு சொல்லக் கூடிய பழக்கம் ஏற்பட்டு விட்டது. ஆனால் இந்த விசயமே தனிப்பட்டது. லெட்சுமி-நாராயணனை அவர்களது குழந்தைகள் தான் தாய், தந்தை.... என்று கூறுவர். யாரிடத்தில் அதிக செல்வம் இருக்கிறதோ, மாளிகை இருக்கிறதோ அவர்கள் சொர்க்கத்தில் இருப்பதாக மனிதர்கள் நினைக் கின்றனர். அவர்களது குழந்தைகள் நமது தாய், தந்தையிடம் அதிக சுகம் இருப்பதாக கூறுவர். அவசியம் முந்தைய பிறவியில் சிறிது நல்ல காரியங்கள் செய்திருப்பர். நல்லது, நீங்கள் தான் தாய், தந்தை.... என்று பாடுகின்றனர். பரம்பிதா பரமாத்மா படைப்பவர் ஒரே ஒருவர் தான், அவருக்கு நாம் குழந்தைகளாக இருக்கிறோம், அவரும் நிராகாரமானவர், ஆத்மாக்களாகிய நாமும் நிராகாராக இருக்கிறோம். ஆனால் நிராகாரமானவர் பிறகு உலகை எப்படி படைக்கின்றார்? தாயின்றி உலகை படைக்க முடியாது? உலகை படைக்கும் விதம் ஆச்சரியமானது! ஒன்று பரமாத்மா புது உலகை படைப்பவர் ஆவார். பழைய உலகில் வந்து புது உலகை படைக்கின்றார். ஆனால் எப்படி படைக்கின்றார்? இது மிகவும் ஆழமான விசயமாகும். அந்த நிராகாரமானவரை தான் நாம் தாய், தந்தை என்று கூறுகிறோம். நான் குழந்தைகளை தத்தெடுக்கிறேன் என்று தந்தை சுயம் புரிய வைக்கின்றார். வயிற்றிலிருந்து குழந்தை உருவாவதற்கான விசயமே கிடையாது. இவ்வளவு குழந்தைகள் வயிற்றின் மூலம் எப்படி உருவாக முடியும்? ஆக நான் இந்த சரீரத்தை தாரணை செய்து இவரது வாயின் மூலம் குழந்தைகளை தத்தெடுக்கிறேன் என்று கூறுகின்றார். இந்த பிரம்மா தந்தையாகவும் இருக்கின்றார், மனித சிருஷ்டியை படைப்பதால் தாயாகவும் இருக்கின்றார். இவரது வாயின் மூலம் குழந்தைகளை தத்தெடுக் கிறேன். இந்த முறையில் குழந்தைகளை தத்தெடுப்பது - இது ஒரு தந்தையின் காரியமாகும். சந்நியாசிகள் செய்ய முடியாது. அவர்களுக்கு மனிதர்கள் பின்பற்றுபவர்களாக, சீடர்களாக இருக்கின்றனர். இங்கு படைப்பிற்கான விசயமாகும். ஆக பாபா இவரிடம் பிரவேசம் செய்கின்றார், இது வாய்வழி வம்சமாகும். இவர்கள் நீங்கள் தான் தாயாக, தந்தையாக. என்று கூறுகின்றனர். ஆக தாய் என்பது நிரூபணம் ஆகிவிடுகிறது. அந்த தந்தை இவரிடத்தில் பிரவேசமாகி விடுகின்றார். இந்த வயோதிகர் பிரஜாபிதாவாக ஆகின்றார், பிறகு தாயும் இந்த வயோதிகர் தான். வயோதிகர் தான் தேவை அல்லவா! இப்போது குழந்தைகள் தாய், தந்தையை நினைவு செய்ய வேண்டும். இவருக்கென்று சொத்துக்கள் கிடையாது. நீங்கள் வாரிசாக ஆகிறீர்கள், அதனால் தான் இவரை பாப்தாதா என்று கூறுகிறோம். உங்களுக்கு பிரஜாபிதா பிரம்மாவிடமிருந்து சொத்துக்கள் அடைய முடியாது. இந்த தாதாவும் (பிரம்மாவும்) அவரிடமிருந்து தான் அடைகின்றார். இவர் தாதா என்றும், தாய் என்றும் கூறப்படுகின்றார். இல்லையெனில் தாய், தந்தை என்பது எப்படி நிரூபணம் ஆகும்? தாய், தந்தையின்றி குழந்தைகள் எப்படி பிறக்கும்? இது மிகவும் ஆழமாகப் புரிந்துக் கொள்ள வேண்டிய மற்றும் சிந்தனை செய்ய வேண்டிய விசயமாகும். பாபா, நீங்கள் தந்தையாக இருக்கிறீர்கள், இந்த தாயின் மூலம் நாம் பிறப்பு எடுத்திருக்கிறோம். உண்மையில் ஆஸ்தியின் நினைவும் வருகிறது. அந்த தந்தையைத் தான் நினைவு செய்ய வேண்டும். தந்தை எவ்வாறு தூய்மையற்ற உலகில் வருகின்றார்? என்பதை ஞானத்தின் மூலம் நீங்கள் புரிந்து கொள்ளவும் முடியும். யாரிடத்தில் நான் பிரவேசிக்கின்றேனோ அவர் எனது குழந்தையாகவும் இருக்கின்றார், உங்களது தந்தையாகவும் இருக்கின்றார், பிறகு தாயாகவும் இருக்கின்றார். நீங்கள் குழந்தைகள். ஆக தந்தையை நினைவு செய்தால் ஆஸ்தி கிடைக்கும். தாயை நினைவு செய்தால் ஆஸ்தி கிடைக்காது. நிரந்தரமாக அந்த தந்தையை நினைவு செய்ய வேண்டும். மற்றபடி இந்த சரீரத்தை மறக்க வேண்டும். ஞானத்தின் இந்த விசயங்கள் புரிந்துக் கொள்ள வேண்டியவை ஆகும்.

தந்தை பழைய உலகில் வந்து புது உலகை படைக்கின்றார். பழையதை அழித்து விடு கின்றார். இல்லையெனில் யார் அழிப்பது? சங்கர் மூலம் பழைய உலகம் விநாசம் என்றும் பாடப்பட்டிருக்கிறது, இது நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. அதனால் தான் கூறப்பட்டிருக்கிறது. நமக்காக புது இராஜ்யம் உருவாகிக் கொண்டிருக்கிறது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். விநாசத்திற்கான முழு ஏற்பாடும் நடக்கிறது. நீங்கள் இவ்வளவு பேர் இருக்கிறீர்கள், அனைவரும் இராஜ்ய பதவி அடைந்து கொண்டிருக்கிறீர்கள். குருட்டு நம்பிக்கையுடன் ஏற்றுக் கொண்டோம் என்று கிடையாது. இராமரின் சீதை அபகரிக்கப்பட்டார் என்று யாரோ கூறினர், சத்தியம். ஏதாவது விசயம் புரியவில்லையெனில் புரிந்து கொள்வதற்கு முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் புத்தியற்றவர்களாகவே இருந்து விடுவீர்கள். பக்தி மார்க்கத்தில் அல்ப காலத் திற்கான சுகம் கிடைக்கிறது. அதற்கான பலன் அதே பிறவியில் அல்லது அடுத்த பிறவியில் அல்ப காலத்திற்கு கிடைத்து விடுகிறது. தீர்த்த யாத்திரைக்கு செல்கின்றனர், சிறிது காலத்திற்கு தூய்மையாக இருக்கின்றனர், பாவம் செய்வது கிடையாது. தானம், புண்ணியமும் செய்கின்றனர். இது காக்கை எச்சத்திற்கு சமமான சுகம் என்று கூறப்படுகிறது. இதை குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும், ஏனெனில் நீங்கள் குரங்கிலிருந்து மாறி (பூஜைக்கு) கோவில்களில் மூர்த்திகளாக தகுதியானவராக ஆகியிருக்கிறீர்கள். சத்யுகத்தில் நீங்கள் தங்க புத்தியுடையவர்களாக இருந்தீர்கள், ஏனெனில் பாரஸ்நாத், பாரஸ்நாதினியின் இராஜ்யம் இருந்தது. தங்க மாளிகை இருந்தது. இப்போது கற்களாக இருக்கிறது. தங்கபுத்தியிலிருந்து கல்புத்தியாக ஆக்கியது யார்? 5 விகாரங்கள் என்ற இராவணன். எப்போது அனைவரும் கல்புத்தி யாக ஆகிவிடுகிறார்களோ அப்போது தான் மீண்டும் தங்க புத்தியுடையவர்களாக ஆக்குவதற் காக தந்தை வருகின்றார். எவ்வளவு எளிமையாகப் புரிய வைக்கின்றார். விதை மற்றும் மரம். மற்றபடி விரிவாக புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார், புரிய வைத்துக் கொண்டே இருப்பார். சுருக்கமாக என்னை நினைவு செய்யுங்கள், ஆஸ்தி கிடைக்கும் என்று கூறுகின்றார். தாயை நினைவு செய்ய வேண்டிய அவசிமில்லை. என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார் எனில் குழந்தைகள் அவசியம் தாயின் மூலம் பிறப்பு எடுத்திருக்க வேண்டும்? ஆஸ்தி அடைவதற்காக பிறப்பு எடுத்திருக்கிறீர்கள். ஆக இந்த தாயையும் மட்டுமின்றி அனைத்து தேகதாரிகளையும் விட்டு விடுங்கள். ஏனெனில் இப்போது தந்தை யிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். நாம் ஆத்மாக்கள், ஆன்மீக தந்தையின் குழந்தைகள், மேலும் மனித உருவிலுள்ள தாய், தந்தையின் குழந்தையாகவும் இருக்கிறோம் என்பதை இப்போது குழந்தைகள் புரிந்து கொண்டீர்கள். அந்த எல்லையற்ற தந்தை புது உலகை படைக்கின்றார். பாரதம் சொர்க்கமாக இருந்தது. இந்த லெட்சுமி- நாராயணன் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக இருந்தனர், இப்போது கிடையாது. நீங்கள் ஒவ்வொரு பிறவியிலும் எல்லைக்குட்பட்ட ஆஸ்தி அடைந்து வந்தீர்கள் என்று எல்லையற்ற தந்தை புரிய வைக் கின்றார். நரகத்தில் இருப்பதோ எல்லைக்குட்பட்ட ஆஸ்தி. சொர்க்கம் என்ற ஆஸ்தி எல்லைக்குட்பட்டது என்று கூற முடியாது. அது எல்லையற்ற ஆஸ்தியாகும், ஏனெனில் எல்லையற்றது என்றால் முழு உலகிற்கும் அதிபதிகளாக இருப்பீர்கள் மற்றும் வேறு எந்த தர்மமும் கிடையாது. துவாபரத்திலிருந்து எல்லைக்குட்பட்ட ஆஸ்தி ஆரம்பமாகிறது. சத்யுகத்தில் எல்லையற்றது. நீங்கள் பலனை அனுபவிக்கிறீர்கள். அங்கு உங்களுக்கு எல்லை யற்ற இராஜ்யம் இருக்கும். அரசரைப் போன்றே மக்களும் இருப்பர். நாம் முழு உலகிற்கும் எஜமானர்கள் என்று பிரஜைகளும் கூறுவர். இப்போது பிரஜைகள் நாம் முழு உலகிற்கும் எஜமானர்கள் என்று கூறமாட்டார்கள். இப்போது எல்லைக்குட்பட்டதில் இருக்கின்றனர். நமது நீரின் எல்லையில் வரக் கூடாது, இந்த பாகம் எங்களுடையது என்று அவர்கள் கூறு கின்றனர். அங்கு பிரஜைகளும் நாம் உலகிற்கு எஜமானர்கள் என்று கூறுவர். நமது மகாராஜா, மகாராணி யாகிய லெட்சுமி-நாராயணனும் உலகிற்கு எஜமானர்கள். அங்கு ஒரே ஒரு இராஜ்யம் தான் இருந்தது என்பதை இப்போது தான் நாம் புரிந்திருக்கிறோம். அது எல்லையற்ற இராஜ்ய மாகும். பாரதம் எப்படி இருந்தது! என்பது யாருடைய புத்தியிலும் கிடையாது. எல்லையற்ற தந்தையிட மிருந்து ஆஸ்தி அடையுங்கள் என்ற அறிவுரை குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது கிடைக்கிறது. நாம் அவசியம் அடைந்து கொண்டிருக்கிறோம் என்று கூறுகிறோம். எல்லையற்ற தந்தையோ சொர்க்கத்தை படைப்பவர். 21 வம்சத்திற்கான இராஜ்ய பாக்கியம் என்று பாடப் பட்டிருக்கிறது. வம்சம் என்று ஏன் கூறுகின்றனர்? ஏனெனில் அங்கு வயோதி கராகி இறப்பார்கள். அங்கு அகால மரணம் இருக்காது. தாய்மார்கள் ஒருபோதும் விதவைகளாக ஆகமாட்டார்கள். அழுது புரள்வது இருக்காது. இங்கு எவ்வளவு அழுது கண்ணீர் விடுகின்றனர்! அங்கு குழந்தைகளும் அழ வேண்டிய அவசியம் இருக்காது. இங்கு வாய் திறக்க வைப்பதற்காக குழந்தைகளை அழ வைக்கின்றனர். அங்கு இந்த மாதிரியான விசயம் கிடையாது. நாம் இப்போது எல்லையற்ற தந்தையிடமிருந்து முந்தைய கல்பத்தை போன்று ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம் என்பதை அனைத்து குழந்தைகளும் அறிவீர்கள். 84 பிறவிகள் முடிந்து விட்டது, இப்போது செல்ல வேண்டும். நிரந்தரமாக தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்வதன் மூலம் விகர்மங்கள் விநாசமாகும். மன்மனாபவ என்பதன் பொருள் எவ்வளவு எளிதாக இருக்கிறது! கீதை பொய்யானதாக இருக்கலாம், ஆனால் அதில் சிறிதளவு உண்மை இருக்கிறது அல்லவா! தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் என்னிடத்தில் வர வேண்டும் என்று கிருஷ்ணர் கூற முடியாது. பரமாத்மா இப்போது அனைத்து ஆத்மாக்களுக்கும் கூறுகின்றார் - அனைத்து ஆத்மாக்களாகிய நீங்கள் கொசுக்களைப் போன்று வர வேண்டும். ஆக அவசியம் ஆத்மா வானது பரமாத்மாவைத் தான் பின்பற்றும். கிருஷ்ணர் தேகதாரி ஆகிவிடுகிறார். அவர் கூற முடியாது. ஆத்மாவாகிய என்னை நினைவு செய்யுங்கள் என்று அவர் கூற முடியாது. அவரது பெயரே கிருஷ்ணர். எந்த ஆத்மா வினாலும் கூற முடியாது. ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர் கள். இதை தந்தை தான் கூறுகின்றார் - நான் நிராகாரராக இருக்கிறேன், பரம் ஆத்மாவாகிய எனது பெயர் சிவன். ஆக கிருஷ்ணர் எப்படி கூற முடியும்! அவருக்கு சரீரம் இருக்கிறது. சிவ பாபாவிற்கு தனக்கென்று சரீரம் கிடையாது. சிவபாபா கூறுகின்றார் - குழந்தைகளே! உங்களுக்கு முதலில் தனக்கென்று சரீரம் இல்லாமல் இருந்தது. ஆத்மாக்களாகிய நீங்கள் நிராகாராக இருந்தீர்கள், பிறகு சரீரம் எடுத்தீர்கள். இப்போது உங்களுக்கு நாடகத்தின் முதல், இடை, கடையின் நினைவு வந்திருக் கிறது. தந்தை உலகை எப்படி? எப்போது? மற்றும் எப்படி படைத்தார்? உலகம் இருக்கிறது அல்லவா! பிரம்மாவின் மூலம் புது உலகை படைக்கிறார் என்றும் பாடப்பட்டிருக்கிறது. ஆக அவசியம் பழைய உலகிலிருந்து கொண்டு புது உலகை படைத்திருக்கக் கூடும். மனிதனை தேவதையாக ஆக்கினார் என்றும் கூறுகின்றனர். நான் உங்களை இந்த படிப்பின் மூலம் மனிதனிலிருந்து தேவதையாக ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகின்றார். தேவதைகள் பூஜைக்குரியவர்களாக இருந்தனர், பிறகு பூஜாரிகளாக ஆகிவிட்டனர். 84 பிறவிகள் எப்படி எடுக்கிறோம்? என்பதை மனிதர்கள் புரிந்து கொள்வது கிடையாது. அனைவரும் 84 பிறவிகள் எடுப்பார்களா? உலகம் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது. ஆக அனைவரும் 84 பிறவிகள் எப்படி எடுக்க முடியும்? தாமதமாக வருபவர்கள் அவசியம் குறைவான பிறப்பு எடுப்பர். 25-50 ஆண்டுகளுக்குள் 84 பிறவிகள் எப்படி எடுக்க முடியும்? இது சுயதரிசன சக்கர மாகும். இந்த சுயதரிசன சக்கரத்தை அவர்கள் ஒரு ஆயுதமாக உருவாக்கி விட்டனர். இப்போது ஆத்மாக்களாகிய உங்களுக்கு இந்த நினைவு வந்திருக்கிறது - நாம் 84 பிறவிகள் இப்படி யெல்லாம் எடுத்திருக்கிறோம். இப்போது சக்கரம் முடிவடைகிறது. திரும்பவும் நாடகத்தில் நடிக்க வேண்டும். மறைந்து விட்ட அந்த ஆதி சநாதன தேவி தேவதா தர்மம் முதன் முதலில் அவசியம் தேவை.

ஹே கடவுளே! கருணை காட்டுங்கள் என்ற மனிதர்கள் கூறுகின்றனர். நல்லது, உங்களை துக்கத்திலிருந்து விடுவித்து சுகமானவர்களாக ஆக்குகிறேன் என்று தந்தை கூறுகின்றார். தந்தையின் வேலையே அனைவரையும் சுகமானவர்களாக ஆக்குவதாகும், ஆகையால் நான் கல்ப கல்பத்திற்கும் வருகிறேன், வந்து பாரதத்தை வைரம் போன்று ஆக்குகிறேன். மிகவும் சுகமானவர்களாக ஆக்குகிறேன். மற்ற அனைவரையும் முக்திதாமத்திற்கு அனுப்பி விடுகிறேன். பக்தர்கள் விரும்புவதே பகவானை சக்திக்க வேண்டும், ஏனெனில் சுகத்தைப் பற்றி, சந்நியாசி கள் அது காக்கையின் எச்சத்திற்கு சமமான சுகம் என்று கூறிவிட்டனர். மேலும் இந்த நாடகத்தின் விளையாட்டில் வரவே கூடாது, மோட்சம் அடைய வேண்டும் என்றும் கூறு கின்றனர். மோட்சம் அடைய முடியாது. இது ஏற்கெனவே உருவாக்கப்பட்ட நாடகமாகும். முழு உலகின் சரித்திர, பூகோளத்தை குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அறிவீர்கள். இந்த சக்கரம் எவ்வாறு சுற்றுகிறது? இதுவே சுயதரிசன சக்கரம் என்று கூறப்படுகிறது. சுயதரிசன சக்கரத்தின் மூலம் அனைவரின் தலையும் துண்டிக்கப் பட்டதாக காண்பிக்கின்றனர். கம்ச வதம் நாடகம் காண்பிக்கின்றனர். இவ்வாறு எதுவும் கிடையாது. இங்கு இம்சைக்கான விசயமே கிடையாது. இது படிப்பாகும். படிக்க வேண்டும், தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைய வேண்டும். தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைவதற்காக யாரையாவது கொலை செய்கிறீர்களா என்ன? எல்லைக்குட் பட்ட ஆஸ்திக்காக அவ்வாறு நடக்கும், இங்கு எல்லையற்ற தந்தை யிடமிருந்து எல்லையற்ற ஆஸ்தி அடைய வேண்டும். கீதையில் யுத்தத்திற்கான விசயம் எவ்வளவு எழுதி வைத்து விட்டனர்! அவ்வாறு எதுவும் கிடையாது. உண்மையில் பாண்டவர் களின் யுத்தம் யாருடனும் நடைபெறவில்லை. இங்கு யோக பலத்தின் மூலம் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற புது உலகிற்கான ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறீர்கள். இதில் யுத்தத்திற்கான விசயம் எதுவும் கிடையாது. நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமாக குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நன்ஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) தந்தையிடமிருந்து 21 தலைமுறை (சந்ததிகள்)களுக்கான ஆஸ்தி அடைவதற்காக நிரந்தரமாக தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்வதற்கான முயற்சி செய்ய வேண்டும். எந்த தேகதாரியையும் நினைவு செய்யக் கூடாது.

2) புத்தியில் சுயதரிசன சக்கரத்தை சுற்றிக் கொண்டே இருக்க வேண்டும். நாம் பூஜைக்குரியவர்களாக இருந்தோம், பிறகு பூஜாரிகளாக ஆனோம், 84 பிறவிச் சக்கரம் முடித்து விட்டோம். மீண்டும் நாடகம் நடைபெற வேண்டும், நாம் பூஜாரியிலிருந்து பூஜைக்குரியவராக ஆக வேண்டும் - இந்த நினைவு தான் சுயதரிசன சக்கரமாகும்.

வரதானம்:

சமநிலையின் மூலம் நெருக்கம் (சமீபம்) என்ற இருக்கையை அடைந்து முதல் டிவிசனில் வரக் கூடிய வெற்றி இரத்தினம் ஆகுக.

நேரத்தின் நெருக்கத்தின் கூடவே இப்பொழுது தன்னை பாபாவிற்குச் சமமாக ஆக்குங்கள். சங்கல்பம், வார்த்தை, செயல், சன்ஸ்காரம் மற்றும் சேவை அனைத்திலும் பாபா போன்று ஆக வேண்டும், அதாவது நெருக்கத்தில் வர வேண்டும். ஒவ்வொரு சங்கல்பத்திலும் தந்தையின் துணை, சகயோகம், அன்பின் அனுபவம் செய்யுங்கள். சதா தந்தையின் துணை மற்றும் கை மீது கையின் அனுபவம் செய்யும் போது முதல் டிவிசனில் வந்து விடுவீர்கள். நிரந்தர நினைவு மற்றும் சம்பூர்ன அன்பு ஒரு தந்தையின் மீது இருக்கும் போது வெற்றி மாலையின் வெற்றி இரத்தினமாக ஆகிவிடுவீர்கள். இப்பொழுதும் வாய்ப்பு இருக்கிறது, மிகவும் தாமதம் (டூ லேட்) என்ற பலகை மாட்டப்படவில்லை.

சுலோகன்:

சுக தாதா ஆகி பல ஆத்மாக்களை துக்கம், அசாந்தியிலிருந்து விடுவிக்கும் சேவை செய்வது தான் சுகதேவன் ஆவதாகும்.

 Download PDF

Post a Comment

0 Comments