Header Ads Widget

Header Ads

TAMIL MURLI 22.01.23

 

22-01-2023  காலை முரளி  ஓம் சாந்தி  "அவ்யக்த பாப்தாதாரிவைஸ் 25.11.1993


Listen to the Murli audio file



சகஜ வெற்றியை அடைவதற்கு ஞான சொரூப பிரயோகி ஆத்மா ஆகுங்கள்

இன்று ஞானத்தை வழங்கும் வள்ளல், வரத்தை வழங்கும் வள்ளல் தன்னுடைய ஞான சொரூப ஆத்மா, யோக சொரூப ஆத்மா, குழந்தைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார். ஒவ்வொரு குழந்தையும் ஞான சொரூபம் மற்றும் யோகயுக்த்தாக எந்தளவு ஆகியிருக்கின்றீர்கள்? ஞானத்தைக் கேட்பது மற்றும் சொல்வதற்கு நிமித்தமாகி இருக்கின்றீர்களா அல்லது ஞான சொரூபம் ஆகியிருக்கின்றீர்களா? சமய அனுசாரம் யோகம் செய்பவர்கள் ஆகியிருக் கிறீர்களா அல்லது சதா யோகி வாழ்க்கை அதாவது ஒவ்வொரு கர்மத்தில் யோகயுக்த் (யோக சொரூப நிலை), யுக்தியுக்த் (ஞான சொரூப நிலை), இயல்பான மற்றும் சதா கால யோகி ஆகியிருக்கின்றீர்களா? எந்தவொரு பிராமண ஆத்மாவிடமும் யாராவது நீங்கள் ஞானி மற்றும் யோகியா என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? அனைவரும் ஞானி மற்றும் யோகிகள் தானே? ஞான சொரூபம் ஆகுவது என்றால் ஒவ்வொரு சங்கல்பம், வார்த்தை மற்றும் செயல் சக்திசாலியாக இருக்கும். வீணானது சமாப்தி ஆகிவிடும். ஏனென்றால், எங்கே சக்தி உள்ளதோ, அங்கே வீணானது இருக்க முடியாது. வெளிச்சம் மற்றும் இருள் சேர்ந்து இருக்க முடியாது. ஞானம் என்பது வெளிச்சமாகும், வீணானது என்பது இருளாகும். நிகழ்கால சமயத்தில் வீணானவற்றை முடிப்பதற்கான கவனம் வைக்க வேண்டும். அனைத்தையும் விட முக்கிய மான விசயம் சங்கல்பம் என்ற விதையை சக்திசாலியானதாக ஆக்குவது. ஒருவேளை, சங்கல்பம் என்ற விதை சக்திசாலியாக இருந்ததென்றால் வார்த்தை, செயல், சம்பந்தம் சகஜமாகவே சக்திசாலி யாக இருக்கும். எனவே, ஞான சொரூபம் என்றால் ஒவ்வொரு சமயமும், ஒவ்வொரு சங்கல்பமும், ஒவ்வொரு நொடியும் சக்திசாலியானதாக இருக்கும்.

அனைவரும் யோக சொரூப ஆத்மாவாக ஆகியிருக்கின்றீர்கள், இருப்பினும் ஒவ்வொரு சங்கல்பமும் தானாகவே யோகயுக்த்தாக, யுக்தியுக்த்தாக இருப்பதில் வரிசைக்கிரமமாக இருக்கின்றீர்கள். எதனால் வரிசை உருவாகியுள்ளது? விதியை உருவாக்குபவரும் (விதாதா) ஒருவர் தான், விதியும் ஒன்று தான், பிறகு வரிசை ஏன்? யோகியாகவோ ஆகியிருக்கின்றீர்கள், ஆனால், பிரயோகியாக குறைவாகவே ஆகியிருக்கின்றீர்கள் என்பதை பாப்தாதா பார்த்தார்கள். யோகம் செய்வது மற்றும் செய்விப்பது இரண்டிலுமே அனைவரும் புத்திசாலியாக இருக்கின்றீர் கள். யோகா செய்விப்பதற்கு வரவில்லை என்று கூறுபவர் எவராவது இருக்கின்றீர்களா? எவ்வாறு யோகம் செய்வது மற்றும் செய்விப்பதில் தகுதியானவர்களாக இருக்கின்றீர்களோ, அவ்வாறே பிரயோகம் (பயன்படுத்துவதில்) செய்வதில் தகுதியானவர்களாக ஆகவேண்டும் மற்றும் ஆக்கவேண்டும் - இதை யோகி வாழ்க்கை அதாவது யோக யுக்த் வாழ்க்கை என்று கூறப்படுகிறது. இப்பொழுது பிரயோகி வாழ்க்கை அவசியமானதாக இருக்கிறது. யோகத்தைப் பற்றிய விளக்கம் என்ன அறிந்திருக்கின்றீர்களோ, வர்ணனை செய்கின்றீர்களோ, அந்த அனைத்து விசேஷத்தன்மைகள் பயன்பாட்டில் வருகிறதா? தன்னுடைய சமஸ்கார பரிவர்த் தனையில் எந்தளவு பிரயோகி ஆகியிருக்கின்றீர்கள்? என்று அனைத்திற்கும் முன்னதாக தனக்குள் இந்த சோதனை செய்திடுங்கள். ஏனென்றால், உங்கள் அனைவருடைய சிரேஷ்ட சமஸ்காரம் தான் சிரேஷ்ட உலகத்தின் படைப்பிற்கான அஸ்திவாரம் ஆகும். ஒருவேளை, அஸ்திவாரம் உறுதியானதாக இருக்கிறதென்றால் மற்ற அனைத்து விசயங்களும் தானாகவே உறுதியானதாக ஆகிவிடுகின்றன. சமஸ்காரம் சமயத்தில் ஏமாற்றம் கொடுக்கவில்லை தானே? என்பதைப் பாருங்கள். சிரேஷ்ட சமஸ்காரத்தை மாற்றும்படியான எப்படிப்பட்ட மனிதனா கட்டும், பொருளாகட்டும், சூழ்நிலை ஆகட்டும், யோகத்தின் பிரயோகம் செய்யக்கூடிய ஆத்மாவை, சிரேஷ்ட தன்மையிலிருந்து சாதாரண தன்மைக்கு கொண்டு வரமுடியாது. விசயமே அப்படி இருந்தது, மனிதனே அப்படி இருந்தார், சூழ்நிலை அப்படி இருந்தது, ஆகையினால், சிரேஷ்ட சம்ஸ்காரத்தை மாற்றி சாதாரணமானதாக அல்லது வீணானதாக ஆக்கி விட்டது, எனில், இத்தகையவர்களை பிரயோகி ஆத்மா என்று சொல்ல முடியுமா என்ன? ஒருவேளை, தக்க சமயத்தில் யோகத்தின் சக்திகள் பயன்படவில்லை எனில், அவர்களை என்னவென்று சொல்வது? எனவே, சமயத்திற்கேற்ப எந்தளவு பிரயோகி ஆகியிருக்கின்றேன்? என்ற இந்த அஸ்திவாரத்தை முதலில் பாருங்கள். ஒருவேளை, சுயத்தின் சமஸ்காரத்தை மாற்றுபவராக ஆகவில்லை எனில், புதிய உலகத்தை மாற்றுபவராக எவ்வாறு ஆகுவீர்கள்?

சமஸ்காரத்தின் மீதான பிரயோகத்தில் எப்பொழுதும் வெற்றியாளராக இருப்பதுவே பிரயோகி ஆத்மாவின் முதல் அடையாளம் ஆகும். இயற்கை மூலம் வரக்கூடிய பிரச்சனைகள் மீது யோகத்தின் பிரயோகம் மூலம் வெற்றியாளர் ஆகுவது இரண்டாவது அடையாளம் ஆகும். சில நேரங்களில் இயற்கையின் கொந்தளிப்பு கூட யோகி ஆத்மாவை தன் பக்கம் கவர்ச்சி செய்கிறது. அத்தகைய நேரத்தில் யோகத்தின் விதி பயன்பாட்டில் வருகிறதா? எப்பொழுதாவது யோகி ஆத்மாவிற்கு அல்லது புருஷோத்தம ஆத்மாவிற்கு இயற்கையானது தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை தானே? ஏனெனில், பிராமண ஆத்மாக்கள் புருஷோத்தம ஆத்மாக்கள் ஆவீர்கள். இயற்கை புருஷோத்தம ஆத்மாக்களின் பணியாள் ஆகும். எஜமானன் பணி யாளுடைய பிரபாவத்தில் வந்துவிட்டால் அவரை என்னவென்று சொல்வது? தற்காலத்தில் புருஷோத்தம ஆத்மாக்களை இயற்கையானது சாதனங்கள் மற்றும் வசதிகளின் ரூபத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சாதனம் அல்லது வசதிகளின் ஆதாரத்தில் யோகி வாழ்க்கை உள்ளது. சாதனம் அல்லது வசதி குறைவாக இருக்கிறதென்றால் யோக சொரூப நிலையும் குறைந்து விடுகிறது, இதையே தாக்கம் ஏற்படுவது என்று சொல்லப்படுகிறது. யோகி அல்லது பிரயோகி ஆத்மாவினுடைய சாதனைக்கு (யோகா) முன்னால் சாதனங்கள் சுயம் தானாகவே வந்துவிடுகின்றன. சாதனம் சாதனைக்கான ஆதாரமாக இருக்கக்கூடாது, ஆனால், சாதனை சாதனங்களை தானாகவே ஆதாரமாக ஆக்கிவிடும், இப்பேற்பட்டவர்களை பிரயோகி ஆத்மா என்று சொல்லப்படுகிறது. சமஸ்காரத்தை மாற்றம் செய்யும் வெற்றியாளர் மற்றும் இயற்கை யினுடைய தாக்கத்தின் மீது வெற்றியாளராக எந்தளவு ஆகியிருக்கிறேன்? என்று சோதனை செய்யுங்கள். விகாரங்கள் மீது வெற்றியாளர் ஆகுவதே மூன்றாவது அடையாளம் ஆகும். யோகி மற்றும் பிரயோகி ஆத்மாவிற்கு முன்னால் இந்த பஞ்ச விகாரங்கள், எது பிறருக்கு விஷம் நிறைந்த பாம்பாக உள்ளதோ, அந்தப் பாம்புகள் யோகி, பிரயோகி ஆத்மாவாகிய உங்களுக்கு கழுத்து மாலையாக ஆகிவிடுகின்றன. பிராமணர்களாகிய உங்களுடைய மற்றும் பிரம்மா பாபாவினுடைய அசரீரி தபஸ்வி சங்கரர் சொரூபத்தின் நினைவுச்சின்னத்தை இப்பொழுதும் பக்தர்கள் பூஜிக்கின்றனர் மற்றும் மகிமை பாடுகின்றனர். இரண்டாவது நினைவுச் சின்னம் - இந்த பாம்பு நீங்கள் மகிழ்ச்சியில் நடனமாடுவதற்கு மேடையாகும் அளவிற்கு அடிமை ஆகிவிடுகிறது. எப்பொழுது வெற்றியாளர் ஆகிவிடுகின்றீர்களோ, அப்பொழுது என்ன அனுபவம் செய்கின்றீர்கள்? என்ன ஸ்திதி உள்ளது? குஷியில் நடனம் ஆடுகின்றீர்கள் அல்லவா. இந்த ஸ்திதி மேடையாக (ஸ்டேஜ்) காண்பிக்கப்பட்டுள்ளது. ஸ்திதியையும் ஸ்டேஜ் என்று சொல்லப்படுகிறது. இவ்வாறு விகாரங்கள் மீது வெற்றி பெற வேண்டும், இதையே பிரயோகி என்று சொல்லப்படுகிறது. எந்தளவு பிரயோகி ஆகியிருக்கின்றேன்? என்று சோதனை செய்யுங் கள். ஒருவேளை, தக்கசமயத்தில் யோகத்தின் பிரயோகம் இல்லை, யோகத்தின் விதிப்படி தக்கசமயத்தில் வெற்றி கிடைக்கவில்லை எனில் யதார்த்தமான விதி என்று சொல்ல முடியுமா? சமயமானது தன்னுடைய தீவிர வேகத்தை அவ்வப்போது காண்பித்துக் கொண்டு இருக்கிறது. வேற்றுமை, அதர்மம், தமோபிரதான தன்மை ஒவ்வொரு இடத்திலும் தீவிர வேகத்தில் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. அத்தகைய சமயத்தில் உங்களுடைய யோகத் தினுடைய விதியின் விருத்தி அல்லது விதியினால் கிடைக்கும் ஸித்தியில் விருத்தி தீவிர வேகத்தில் இருக்க வேண்டியது அவசியமாகும். பிரயோகி ஆகுவதற்கான சகஜ விதியே நம்பர் முன்னால் வருவதற்கான ஆதாரம் ஆகும். ஆக, பாப்தாதா என்ன பார்த்தார்கள் - சரியான நேரத்தில் பிரயோகம் செய்வதில் தீவிர வேகத்திற்குப் பதிலாக சாதாரண வேகம் உள்ளது. இப்பொழுது இதை அதிகப்படுத்துங்கள். அப்பொழுது என்ன ஆகும் - ஸித்தி சொரூபத்தின் அனுபவத்தை செய்து கொண்டே செல்வீர்கள். உங்களுடைய ஜடச்சித்திரங்களின் மூலம் வெற்றி கிடைப்பதை அனுபவம் செய்துகொண்டு இருக்கின்றார்கள். சைத்தன்யத்தில் வெற்றி சொரூபமாக ஆகியிருக்கின்றீர்கள், ஆகையினாலேயே, இந்த நினைவுச்சின்னம் இருந்து வருகிறது. ரித்தி, சித்தி செய்பவர்கள் அல்ல, விதி மூலம் ஸித்தி பெறுபவர்கள். என்ன செய்ய வேண்டும் என்பது புரிந்ததா? அனைத்தும் உள்ளன, ஆனால், தக்க சமயத்தில் பிரயோகம் செய்வது மற்றும் பிரயோகம் வெற்றி அடைவது - இப்பேற்பட்டவர்களை ஞான சொரூப ஆத்மா என்று சொல்லப்படுகிறது. அப்பேற்பட்ட ஞான சொரூப ஆத்மாக்கள் மிகவும் நெருக்க மானவர்களாக மற்றும் மிகவும் பிரியமானவர்களாக உள்ளனர். நல்லது.

சதா யோகத்தின் விதி மூலம் சிரேஷ்ட வெற்றியை அனுபவம் செய்யக்கூடிய, சதா சாதாரண சமஸ்காரத்தை சிரேஷ்ட சமஸ்காரமாக மாற்றக்கூடிய, சமஸ்கார பரிவர்த்தக் ஆத்மாக்களுக்கு, சதா இயற்கையின் மீது வெற்றி அடையக்கூடிய, விகாரங்கள் மீது வெற்றி அடையக்கூடிய வெற்றியாளர் ஆத்மாக்களுக்கு, சதா பிரயோகத்தின் வேகத்தை தீவிரமாக அனுபவம் செய்யக் கூடிய ஞான சொரூப, யோகயுக்த் யோகி ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

(24ஆம் தேதி நவம்பர் அன்று இரண்டு குமாரிகளின் சமர்ப்பண விழாவிற்குப் பிறகு இரவு 10 மணிக்கு தாதி ஆல்ரவுண்டர் அவர்கள் தனது பழைய ஆடையை விடுத்து பாப்தாதா வின் மடிக்குச் சென்றுவிட்டார்கள். 25ஆம் தேதி மதியம் அவர்களது இறுதிச் சடங்கு நடை பெற்றது. மாலை முரளிக்குப் பிறகு தாதிகளுடன் சந்திப்பு செய்யும் சமயத்தில் பாப்தாதா என்ன மகாவாக்கியம் அருளினார்களோ, அது பின் வருமாறு)

விளையாட்டில் விதவிதமான விளையாட்டைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றீர்கள். சாட்சியாகி விளையாட்டைப் பார்ப்பதில் மகிழ்ச்சி ஏற்படுகிறது அல்லவா. உற்சவமாக இருக்கட்டும், யாராவது சரீரம் விடுவதாக இருக்கட்டும் இரண்டுமே எப்படித் தோன்றுகிறது? விளையாட்டில் விளையாட்டாகத் தோன்றுகிறது. எவ்வாறு விளையாட்டு நடக்கிறது மற்றும் சரியான நேரத்தில் முடிவடைந்துவிடுகிறதோ, அதுபோன்றே தோன்றுகிறது அல்லவா. எது நடந்ததோ சகஜமாக முடிவடைந்து விட்டது எனில், அது விளையாட்டு எனத் தோன்றுகிறது அல்லவா. ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அவரவருக்கான பாகம் உள்ளது. அனைத்து ஆத்மாக் களுடைய சுபபாவனையைப் பெறுவது என்பது கூட ஒவ்வொரு ஆத்மாவினுடைய பாக்கியத் தின் சித்தி ஆகும். எனவே, என்ன நடந்ததோ, அதில் என்ன பார்த்தீர்கள்? விளையாட்டைப் பார்த்தீர்களா அல்லது மரணத்தைப் பார்த்தீர்களா? ஒருபுறம் அங்கேயே அலௌகீக சுயம் வரத்தைப் பார்த்தீர் கள், மற்றொருபுறம் ஆடை மாற்றும் விளையாட்டைப் பார்த்தீர்கள். ஆனால், இரண்டும் எப்படித் தோன்றியது? விளையாட்டில் விளையாட்டு. வித்தியாசம் உள்ளதா என்ன? ஸ்திதியில் வித்தியாசம் உள்ளதா? அலௌகீக சுயம்வரத்தைப் பார்ப்பதில் மற்றும் ஆடை மாற்றுவதைப் பார்ப்பதில் வித்தியாசம் தெரிந்ததா? கொஞ்சம் அலை மாறியுள்ளதா, இல்லையா? சாட்சியாகி விளையாட்டைப் பார்த்தீர்கள் என்றால் அது தனி விதி மற்றும் இது தனி விதி என்பது தெரியும். எளிதாக மோகத்தை வென்றவராகுவது என்பது நீண்டகால யோகத்தின் விதிக்கான ஸித்தி ஆகும். எனவே, மோகத்தை வென்ற நிலை, சகஜ மரணத்தின் விளையாட்டைப் பார்த்தீர்கள். இந்த விளையாட்டின் இரகசியம் என்ன பார்த்தீர்கள்? தேகத்தின் நினைவில் இருந்து கூட விடுபட்ட நிலை இருந்தது. வியாதியோ, விதியோ எதன் மூலமும் எந்தக் கவர்ச்சியும் இறுதி நேரத்தில் கவர்ச்சிக்கக் கூடாது. இதையே சகஜமாக ஆடை மாற்றுவது என்று சொல்லப் படுகிறது. எனவே என்ன செய்ய வேண்டும்? மோகத்தை வென்றவர் ஆகவேண்டும், சென்டர் கூட நினைவு வரக்கூடாது (டீச்சர்களைப் பார்த்துக் கொண்டே) யாராவது மாணவர் நினைவுக்கு வந்தார், சென்டரின் ஏதாவது பொருள் நினைவுக்கு வந்தது, விட்டுவிட்டு வந்த ஏதாவது நினைவுக்கு வந்தது . . . என்பது கூடாது. அனைத் திலிருந்தும் விடுபட்டவர் மற்றும் தந்தைக்கு அன்பானவர் ஆகவேண்டும். முன்னதாகவே பிடிமானத்தை விட்டிருக்க வேண்டும். விட்டுவிட்ட எதையும் ஆதரவாக ஆக்கக் கூடாது. இலக்கைத் தவிர வேறு எந்தப் பற்றும் இருக்கக் கூடாது. நல்லது.

நிர்மல் சாந்தா தாதியுடனான சந்திப்பு: குழு நன்றாக உள்ளதா? குழுவினுடைய விசேஷமான அழகு ஆவீர்கள். அனைவருடைய பார்வையும் எவ்வளவு அன்போடு உங்கள் அனைவரின் மீதும் விழுகிறது. எதுவரை எவ்வளவு சேவை உள்ளதோ, அவ்வளவு சேவை சரீரத்தின் மூலம் செய்தே ஆகவேண்டும். எவ்வாறேனும் சரீரம் செயல்பட்டுக் கொண்டே இருக்கும். சரீரத்தை நடத்தும் முறை தெரிந்துவிட்டது அல்லவா. நன்றாக இயங்கிக் கொண்டு இருக்கின்றது, ஏனெனில், தந்தையினுடைய மற்றும் அனைவருடைய ஆசீர்வாதங்கள் உள்ளன. குஷியாக இருக்க வேண்டும் மற்றும் குஷியை கொடுக்க வேண்டும், வேறு என்ன வேலை உள்ளது! அனைவரும் பார்த்து பார்த்து எவ்வளவு மகிழ்ச்சி அடைகின்றார்கள். குஷியை கொடுத்துக் கொண்டு இருக்கின்றீர்கள் அல்லவா. சாப்பிட்டுக் கொண்டும் இருக் கின்றீர்கள், கொடுத்துக் கொண்டும் இருக்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் காட்சி காட்டும் மூர்த்தி ஆவீர்கள். அனைவரின் பார்வையும் நிமித்த ஆத்மாக்களின் பக்கம் செல்கிறது, ஆதலால், காட்சி காட்டும் மூர்த்தி ஆகிவிட்டீர்கள் அல்லவா. நல்லது.

அவ்யக்த பாப்தாதாவினுடைய தனிப்பட்ட சந்திப்பு

1) பிராமண வாழ்க்கையின் ஆதாரம் - நினைவு மற்றும் சேவை: நாடகத்தின் அனுசாரம் பிராமண வாழ்க்கையில் அனைவருக்கும் சேவையினுடைய வாய்ப்பு கிடைத்துள்ளது அல்லவா, ஏனென்றால், பிராமண வாழ்க்கையின் ஆதாரமே நினைவு மற்றும் சேவை ஆகும்.. ஒருவேளை, நினைவு மற்றும் சேவை பலவீனமாக இருக்கிறதென்றால், எப்படி சரீரத்தின் ஆதாரம் பலவீனம் ஆகிவிடுகிறதென்றால் சரீரம் மருந்துகளின் உந்துதலுடன் இயங்குகிறது அல்லவா. பிராமண வாழ்க்கையில் ஒருவேளை நினைவு மற்றும் சேவைக்கான ஆதாரம் உறுதியாக இல்லை, பலவீனமாக இருக்கிறது என்றால், அந்த பிராமண வாழ்க்கை கூட சில நேரம் வேகமாக செல்லும், சில நேரம் மந்தமாக செல்லும், சில நேரம் உந்துதலால் செல்லும். ஏதாவது சகயோகம் கிடைத்தால், யாருடைய துணையாவது கிடைத்தால், சூழ்நிலை அமைந்த தென்றால் நடப்பார்கள், இல்லையென்றால் தளர்ந்துவிடுவார்கள், ஆகையினால், நினைவு மற்றும் சேவையின் விசேஷ ஆதாரம் சதா சக்திசாலியாக இருக்க வேண்டும். இரண்டுமே சக்தி சாலியாக இருக்க வேண்டும். சேவை அதிகமாக இருக்கிறது, நினைவு பலவீனமாக உள்ளது அல்லது நினைவு மிகவும் நன்றாக இருக்கிறது, சேவை பலவீனமானதாக இருக்கிறது என்றாலும் கூட தீவிரவேகம் இருக்க முடியாது. நினைவு மற்றும் சேவை இரண்டிலுமே தீவிர வேகம் வேண்டும். சக்திசாலியாக இருக்க வேண்டும். எனவே இரண்டுமே சக்திசாலியாக உள்ளனவா அல்லது வித்தியாசம் ஏற்பட்டுவிடுகிறதா? சில நேரம் சேவை அதிகமாகிவிடுகிறது, சில நேரம் நினைவு அதிகம் ஆகிவிடுகிறது, இவ்வாறு உள்ளதா? இரண்டும் இணைந்தே இருக்க வேண்டும். நினைவு மற்றும் சுயநலமற்ற சேவை. சுயநலமுடைய சேவை அல்ல, சுயநலமற்ற சேவை இருக்கிறதென்றால் மாயாவை வெற்றி அடைவது மிகவும் சகஜமாக இருக்கும். ஒவ்வொரு கர்மத்திலும், கர்மம் முடிவடைவதற்கு முன்பே சதா வெற்றி தென்படும், வெற்றியோ நிச்சயிக்கப்பட்டுள்ளது என்ற அனுபவம் ஏற்படும்படியாக உறுதியான நம்பிக்கை இருக்கும். ஒருவேளை, பிராமண ஆத்மாக்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்றால் வேறு யாருக்கு கிடைக்கும்? சத்திரியர்களுக்கு கிடைக்குமா என்ன? பிராமணர்களுடைய வெற்றி அல்லவா. கேள்விக்குறி எழ முடியாது. செய்து கொண்டு இருக்கின்றோம், நடந்துகொண்டு இருக்கின்றோம், பார்க்கலாம், நடந்துவிடும், நடக்கத் தானே வேண்டும் . . . என்ற இந்த சப்தம் வராது. என்னவாகும் என்பது தெரியவில்லை, நடக்குமா அல்லது நடக்காதா . . . இது நம்பிக்கையின் வார்த்தைகளா? நிச்சயபுத்தி உடையவர்கள் வெற்றி அடைவார்கள் என்ற மகிமை உள்ளது அல்லவா? நடைமுறையில் இருந்துள்ளது, ஆகையினாலேயே மகிமை உள்ளது. உறுதியான வெற்றியே நிச்சயபுத்தியின் அடையாளம் ஆகும். எப்படி ஒருவரிடம் எந்த விதமான சக்தி இருந்தாலும், அது செல்வத்தின் சக்தியோ, புத்தியின் சக்தியோ, சம்பந்தம், தொடர்பினுடையதோ, அவர்களுக்கு இது என்ன பெரிய விசயம், இது ஒரு விசயமே அல்ல என்ற நம்பிக்கை இருக்கும். உங்களிடமோ அனைத்து சக்திகளும் இருக்கின்றன. செல்வத்தின் சக்தி உள்ளதா அல்லது செல்வத்தின் சக்தி கோடீஸ்வரர்களிடம் உள்ளதா? அனைத்தையும் விட பெரிய செல்வம் அழிவற்ற செல்வம், அது சதா கூடவே இருக்கின்றது. எனவே, செல்வத்தினுடைய சக்தியும் இருக்கின்றது, புத்தியினுடைய சக்தியும் இருக்கின்றது. பதவியின் சக்தியும் இருக்கின்றது. என்னவெல்லாம் சக்திகள் பாடப்பட்டு இருக்கின்றனவோ, அவை அனைத்தும் உங்களிடம் இருக்கின்றன. இருக்கின்றனவா அல்லது சில நேரங்களில் மறைந்து விடுகின்றனவா? இவற்றை வெளிப்படையான (எமர்ஜ்) ரூபத்தில் அனுபவம் செய்யுங்கள். ஆம், நானோ சர்வசக்திவானின் குழந்தை ஆனால், அனுபவம் ஏற்படுவதில்லை, என்பது கூடாது. அனைவரும் நிறைந்து இருக்கின்றீர்களா? அல்லது கொஞ்சம் கொஞ்சம் காலியாக இருக்கின்றீர் களா? தக்க சமயத்தில் விதியின் மூலம் வெற்றி கிடைக்க வேண்டும். தக்க சமயத்தில் (சக்திகள்) வரவில்லை, ஆனால், அதிக சக்திகள் உள்ளன என்ற போதை மட்டும் உள்ளது என்பது இருக்கக் கூடாது. ஒருபொழுதும் தன்னுடைய சக்திகளை மறக்கக்கூடாது, பயன்படுத்திக் கொண்டே செல்லுங்கள். ஒருவேளை, தனக்காக காரியத்தில் பயன்படுத்த வருகிறதென்றால் பிறருடைய காரியத்தில் கூட பயன்படுத்த முடியும். பாண்டவர்களிடத்தில் சக்தி வந்துவிட்டதா அல்லது சில நேரம் கோபம் வருகின்றதா? கொஞ்சம் கொஞ்சம் கோபம் வருகிறதா? சிலர் கோபப் படுத்தினால் கோபம் வருகிறது, யாராவது அவமானப்படுத்தினால் கோபம் வருகிறதா? இது எதிரி வரும்பொழுது தோல்வி ஏற்பட்டுவிடுவது என்பதாகும். தாய்மார்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் மோகம் வருகிறதா? பாண்டவர்களுக்கு தன்னுடைய ஒவ்வொரு கல்பத்தினுடைய வெற்றியின் குஷி சதா வெளிப்படையாக (எமர்ஜ்) இருக்க வேண்டும். எப்பொழுதாவது யாராவது பாண்டவர்களை நினைவு செய்தார்கள் என்றால் பாண்டவர் என்ற வார்த்தையிலேயே வெற்றி முன்னால் வரும் அல்லவா. பாண்டவர் என்றால் வெற்றியாளர். பாண்டவர்களின் கதையினுடைய இரகசியமே என்ன? வெற்றி அல்லவா. ஆகவே, ஒவ்வொரு கல்பத்திலும் வெற்றியாளர். வெளிப்படையான ரூபத்தில் போதை இருக்க வேண்டும். அமிழ்ந்துவிடக் கூடாது. நல்லது.

2) அனைவரிடமிருந்தும் மரியாதையை அடைவதற்காக பணிவானவர் ஆகுங்கள்: அனைவரும் தன்னை எப்பொழுதும் கோடியில் ஒருவர் மற்றும் அந்த ஒருவரிலும் ஒரு சிரேஷ்ட ஆத்மா என்று அனுபவம் செய்கின்றீர்களா? அல்லது கோடியில் ஒருவர் என்று என்ன பாடப்பட்டுள்ளதோ, அந்த ஒருவர் வேறு யாரோ ஒருவரா? அல்லது அது நீங்கள் தானா? ஆகையினால், எந்தளவு ஒவ்வொரு ஆத்மாவிற்கும் மகத்துவம் உள்ளது அதாவது ஒவ்வொரு ஆத்மாவும் மகான் ஆவார். எனவே, ஒருவர் எந்தளவு மகானாக இருக்கின்றாரோ, அந்தளவு பணிவானவராக இருப்பார் என்பது மகான் தன்மையின் அடையாளம் ஆகும். ஏனென்றால், அவர் எப்பொழுதும் நிறைந்திருக்கும் ஆத்மாவாக இருக்கின்றார். எப்படி மரத்தைப் பற்றி சொல்லும்பொழுது, மரம் எந்தளவு நிறைந்திருக்குமோ அந்தளவு குணிந்து இருக்கும் மற்றும் அந்தப் பணிவு தான் சேவை செய்கின்றது என்று சொல்கின்றார்கள் அல்லவா. மரத்தினுடைய பணிவு சேவை செய்கின்றது, ஒருவேளை, பணிவாக இல்லையென்றால் சேவை செய்யாது. எனவே, ஒருபுறம் மகான் தன்மை உள்ளது மற்றும் மற்றொரு புறம் பணிவுத்தன்மை உள்ளது. மேலும், யார் பணிவானவராக இருக்கின்றாரோ அவர் அனைவரிட மிருந்தும் மரியாதையைப் பெறுகின்றார். சுயம் தான் பணிவானவராக இருந்தால் மற்றவர் மரியாதை அளிப்பார்கள். யார் அபிமானத்தில் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு யாரும் மரியாதை கொடுப்பதில்லை. அவரிடமிருந்து தூரமாக ஓடிவிடுவார்கள். மகானாக மற்றும் பணிவானவராக இருக்கின்றாரா அல்லது இல்லையா - இதன் அடையாளம் - பணிவானவர் அனைவருக்கும் சுகம் கொடுப்பார். எங்கு சென்றாலும், என்ன செய்தாலும் அவர் சுகம் கொடுப்பவராகவே இருப்பார். இதைக் கொண்டு நான் எவ்வளவு மகானாக இருக்கின்றேன்? என்பதை சோதனை செய்திடுங்கள். யாரெல்லாம் சம்பந்தம், தொடர்பில் வருகின்றார்களோ, அவர்கள் சுகத்தின் அனுபவம் செய்ய வேண்டும். அப்படி இருக்கின்றீர்களா அல்லது சில நேரம் துக்கம் கூட கிடைத்துவிடுகிறதா? பணிவுத்தன்மை குறைவாக இருந்ததென்றால் சுகம் கூட எப்பொழுதும் கொடுக்க முடியாது. எனவே, சதா சுகத்தை வழங்கி, சுகத்தை அடைகின்றீர்களா அல்லது சில நேரம் துக்கத்தை வழங்கி, துக்கத்தை அடைகின்றீர்களா? கொடுப்பது இல்லை, ஆனால், பெற்றுவிடுகின்றீர்களா? கொஞ்சம் ஃபீல் (துக்க உணர்வு) ஆகிறது என்றால் பெற்றுவிட்டீர்கள் அல்லவா? ஒருவேளை, ஒருவருடைய ஏதாவது ஒரு விசயம் ஃபீல் ஆகிறது என்றால் இதையே துக்கத்தைப் பெறுவது என்று சொல்லப்படுகிறது. ஆனால், யாராவது கொடுக்கின்றார்கள் மற்றும் நீங்கள் எடுக்கவில்லை, இதுவோ உங்கள் கையில் தான் உள்ளது அல்லவா. ஒருவரிடம் இருப்பதே துக்கம் தான் எனில் அவர் என்ன கொடுப்பார்? துக்கம் தான் கொடுப்பார் அல்லவா. ஆனால், உங்களுடைய வேலை சுகத்தைப் பெறுவது மற்றும் சுகத்தைக் கொடுப்பது ஆகும். யாராவது துக்கம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றார் என்றால் நான் என்ன செய்வேன்? என்று கூறமாட்டீர்கள் தானே. நான் கொடுக்கவில்லை ஆனால் அவர் கொடுத்தார். எதைப் பெற வேண்டும் மற்றும் எதைப் பெறக்கூடாது என்று தன்னை சோதனை செய்திடுங்கள். பெறுவதில் கூட புத்திசாலித்தனம் வேண்டுமல்லவா. எனவே, சுகக் கடலினுடைய குழந்தைகள், சுக சொரூபமான சுகதேவனே என்று பிராமண ஆத்மாக்களுக்கு மகிமை உள்ளது. எனவே, சுக சொரூப சுகதேவ ஆத்மாக்கள் ஆவீர்கள். துக்கமான உலகத்தை விட்டுவிட்டீர்கள், ஒதுக்கி விட்டீர்களா அல்லது இப்பொழுது வரை ஒரு கால் துக்கதாமத்திலும் ஒரு கால் சங்கமயுகத் திலும் உள்ளதா? கொஞ்சம் கொஞ்சம் புத்தி அங்கு இருக்கின்றது, இப்படி இல்லை தானே? கால் அங்கு இல்லை ஆனால், கொஞ்சம் விரல் அங்கு இருக்கின்றதா? எப்பொழுது துக்கதாமத்தையே விட்டுவிட்டீர்களோ அப்பொழுது துக்கத்தைப் பெறவும் கூடாது, துக்கத்தைக் கொடுக்கவும் கூடாது. நல்லது.

வரதானம்:

பறக்கும் கலை மூலம் தந்தைக்கு சமமாக ஆல்ரவுண்ட் நடிப்பு நடிக்கக்கூடிய சக்கரவர்த்தி ஆகுக.

எப்படி தந்தை ஆல்ரவுண்ட் நடிகராக இருக்கின்றார், நண்பனாகவும் ஆகமுடிகிறது, தந்தையாகவும் ஆகமுடிகிறது, அதுபோன்று பறக்கும் கலையில் உள்ளவர்கள் எந்த நேரம் எந்த சேவையின் அவசியம் ஏற்படுமோ, அதில் முழுமையான நடிப்பு நடிப்பார்கள். ஆல்ரவுண்ட் பறக்கும் பறவை என்று இவர்களைத் தான் சொல்லப்படுகிறது. எங்கு சேவை இருக்குமோ, அங்கு சென்றடைந்துவிடுமளவிற்கு .அவர்கள் பந்தனமற்றவர்களாக இருப்பார்கள். அனைத்து விதமான சேவையிலும் வெற்றி மூர்த்தி ஆகுவார்கள். சக்கரவர்த்தி, ஆல்ரவுண்ட் நடிகர் என்று இவர்களைத் தான் சொல்லப்படுகிறது.

சுலோகன்:

ஒவ்வொருவருடைய விசேஷத்தன்மைகளை நினைவில் வைத்து நம்பிக்கையுடையவர் ஆனீர்களென்றால் குழு ஓற்றுமையானதாக ஆகிவிடும்.

 Download PDF

Post a Comment

0 Comments