Header Ads Widget

Header Ads

TAMIL MURLI 21.01.23

 

21-01-2023  காலை முரளி  ஓம் சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



இனிமையான குழந்தைகளே! தந்தையிடமிருந்து ஆசிர்வாதம் அடைய வேண்டுமெனில் ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத் படி நடந்து கொள்ளுங்கள், நடத்தையை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள்.

கேள்வி:

சிவபாபாவின் உள்ளத்தில் யார் அமர முடியும்?

பதில்:

இந்த குழந்தை சேவாதாரியாக இருக்கிறது, இவர் அனைவருக்கும் சுகம் கொடுக் கின்றார், எண்ணம், சொல், செய-னால் யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை என்ற உத்திரவாதம் யாருக்கு பிரம்மா பாபா கொடுக்கின்றாரோ அப்போது சிவபாபாவின் உள்ளத்தில் அமர (இடம் பெற) முடியும்.

கேள்வி:

இந்த நேரத்தில் ஆன்மீக சேவாதாரியாகிய நீங்கள் பாபாவுடன் சேர்ந்து என்ன சேவை செய்கிறீர்கள்?

பதில்:

முழு உலகம் மட்டுமின்றி 5 தத்துவங்களையும் தூய்மையாக்கக் கூடிய சேவை ஆன்மீக சேவகர்களாகிய நீங்கள் செய்கிறீர்கள். ஆகையால் நீங்கள் தான் உண்மையிலும் உண்மையான சமூக சேவகர்கள்.

பாடல்: தாய், தந்தையிடமிருந்து ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ளுங்கள் .......

ஓம்சாந்தி. குழந்தைகள் பாட்டு கேட்டீர்கள். லௌகீக தாய், தந்தையிடமிருந்து பல முறை ஆசிர்வாதம் பெறுகின்றீர்கள். குழந்தைகள் தாய், தந்தையின் பாதம் தொட்டு வணங்கு கின்றனர் எனில் ஆசிர்வாதம் செய்வர். ஆக இந்த பாட்டு (பறை சாற்றுதல்) லௌகீகத் தாய், தந்தைக்காக பாடப்படுவது கிடையாது. பாட்டு (பறை, சாற்றுதல்) என்றால் அதை பலர் கேட்க வேண்டும். இது எல்லையற்ற தந்தைக்காக பாடப்படுகிறது - நீங்கள் தான் தாய், தந்தையாக இருக்கிறீர்கள், நாங்கள் உங்களது குழந்தைகளாக இருக்கிறோம்...... உங்களது கருணை அல்லது ஆசிர்வாதத் தின் மூலம் மிக அதிக சுகம் அனுபவிக்கிறோம். பாரதத்தில் தான் இந்த மகிமை பாடப்படுகிறது. அவசியம் பாரதத்தில் தான் இது ஏற்பட்டிருக்கிறது, அதனால் தான் பாடப்படுகிறது. விரைவாக எல்லைக்கப்பால் சென்று விட வேண்டும். சொர்க்கத்தை படைப்பவர் ஒரே ஒரு தந்தை தான் என்று புத்தி கூறுகிறது. சொர்க்கத்தில் அனைவரும் சுகமாக இருப்பர். அங்கு துக்கத்தின் பெயர், அடையாளம் இருக்கவே முடியாது. அதனால் தான் துக்கம் வரும் போது அனைவரும் நினைவு செய்வர், சுகமாக இருக்கும் போது யாரும் நினைவு செய்யமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அரைக் கல்பம் துக்கம் இருப்பதால் தான் அனைவரும் நினைவு செய்கின்றனர். சத்யுகத்தில் அளவற்ற சுகம் இருக்கிறது, ஆகையால் அங்கு யாரும் நினைவு செய்வது கிடையாது. மனிதர்கள் கல்புத்தியாக இருக்கின்ற காரணத்தினால் எதையும் புரிந்து கொள்வது கிடையாது. -யுகத்தில் அளவற்ற துக்கம் இருக்கிறது. எவ்வளவு சண்டை சச்சரவுகள் உள்ளன! எவ்வளவு தான் படித்தவர்களாக, வித்வான்களாக இருந்தாலும் இந்த பாட்டின் பொருளை முழுமையாக அறிந்திருக்கவில்லை. நீங்கள் தான் தாய், தந்தை ...... என்று பாடுகின்றனர், ஆனால் எந்த தாய், தந்தையின் மகிமை இது என்பதை புரிந்து கொள்வது கிடையாது. இது பலருக்கான விசயம் அல்லவா! அனைவரும் ஈஸ்வரனின் குழந்தைகள். ஆனால் இந்த நேரத்தில் அனைவரும் துக்க முடையவர்களாக இருக்கின்றனர். யாரும் சுகமானவர்களாக கிடையாது. கருணையின் மூலம் சுகம் கிடைக்க வேண்டும். கருணையற்ற நிலையினால் தான் துக்கம் ஏற்படுகிறது. தந்தை கருணை வடிவானவர் என்று பாடப்பட்டிருக்கிறது. சாது, சந்நியாசிகளையும் கருணை உடைய வர்கள் என்று கூறுகின்றனர்.

நீங்கள் தான் தாய், தந்தை..... என்று பக்தி மார்க்கத்தில் பாடுகின்றனர், இது முற்றிலும் யதார்த்தமானது என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஆனால் யாராவது புத்திசா-களாக இருந்தால் பரமாத்மாவை இறை தந்தை என்று கூறுகிறோம், பிறகு அவரை எப்படி தாய் என்ற கூற முடியும்? என்று கேட்பர். அவர்களது புத்தி ஜெகதம்பாவின் பக்கம் செல்லும். ஜெகதம்பாவின் பக்கம் புத்தி சென்றால் பிறகு ஜெகத்பிதாவின் பக்கமும் புத்தி செல்ல வேண்டும். பிரம்மா, சரஸ்வதி பகவான் கிடையாது. இந்த மகிமை அவர்களுக்குக் கூற முடியாது. அவர்கள் முன் சென்று தாய், தந்தை என்று கூறுவது தவறாகும். பரம்பிதா பரமாத்மாவிற்காகத் தான் மனிதர்கள் பாடுகின்றனர், ஆனால் அவர் எப்படி தாய், தந்தையாக ஆகின்றார்? என்பதை அறியவில்லை. தாய், தந்தையிடமிருந்து ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள், அதாவது அவரது ஸ்ரீமத் படி நடந்து கொள்ளுங்கள் ..... என்று குழந்தை களாகிய உங்களுக்கு இப்போது கூறப்படுகிறது. தனது நடத்தைகள் நன்றாக இருந்தால் தன் மீது தானாகவே ஆசீர்வாதம் கிடைத்து விடும். ஒருவேளை நல்ல நடத்தை இல்லை யெனில், யாருக்காவது துக்கம் கொடுத்துக் கொண்டே இருந்தீர்கள் எனில், தாய், தந்தையை நினைவு செய்யவில்லை அல்லது மற்றவர்களுக்கு நினைவு ஏற்படுத்தவில்லையெனில் ஆசிர்வாதம் பெற முடியாது. பிறகு இவ்வளவு சுகமும் அடைய முடியாது. தந்தையின் உள்ளத்தில் இடம் பெற முடியாது. இந்த தந்தையின் (பிரம்மாவின்) உள்ளத்தில் அமர்கிறீர்கள் எனில் சிவபாபாவின் உள்ளத்தில் அமர்கிறீர்கள் என்பதாகும். இந்த மகிமை அந்த தாய், தந்தை யினுடையது. புத்தி அந்த எல்லையற்ற தாய், தந்தையின் பக்கம் சென்று விட வேண்டும். பிரம்மாவின் பக்கமும் யாருடைய புத்தியும் செல்வது கிடையாது. சிலரது புத்தி ஜெகதம்பாவின் பக்கம் செல்கிறது. அவருக்கும் மேளா (திருவிழா) நடைபெறுகிறது. ஆனால் அவரது தொழிலை யாரும் அறிய வில்லை. நியமப்படி நமது உண்மையிலும் உண்மையான தாய் இந்த பிரம்மா என்பதை நீங்கள் அறிவீர்கள். இதையும் புரிந்துக் கொள்ள வேண்டும். நினைவும் இவ்வாறு செய்கிறீர்கள். இவர் தாயாகவும் இருக்கின்றார், பிரம்மா பாபாவாகவும் இருக்கின்றார். சிவபாபா, கேயர் ஆப் பிரம்மா என்று எழுதுகிறீர்கள். ஆக தாயாகவும் ஆகிவிடு கிறார் எனில் தந்தையாகவும் ஆகிவிடுகிறார். இப்போது குழந்தைகள் இந்த தந்தையின் உள்ளத்தில் அமர வேண்டும். ஏனெனில் இவரிடத்தில் தான் சிவபாபா பிரவேசம் செய்கிறார். பாபா, இந்த குழந்தை மிகவும் நல்ல சேவாதாரியாக இருக்கிறது, அனைவருக்கும் சுகம் கொடுக்கிறது, எண்ணம், சொல், செய-னால் யாருக்கும் துக்கம் கொடுப்பது கிடையாது என்று இவர் உத்திரவாதம் கொடுக்கும் போது தான் சிவபாபாவின் உள்ளத்தில் அமர முடியும். எண்ணம், சொல், செய-னால் என்ன செய்தாலும், என்ன பேசினாலும் அதன் மூலம் அனைவருக் கும் சுகம் கிடைக்க வேண்டும். யாருக்கும் துக்கம் கொடுக்கக் கூடாது. துக்கம் கொடுக்கும் எண்ணம் முத-ல் மனதில் வருகிறது, பிறகு செய-ல் வரும் போது பாவச் செயலாக ஆகிவிடுகிறது. மனதில் புயல்கள் அவசியம் வரும், ஆனால் செய-ல் ஒருபோதும் கொண்டு வந்து விடக்கூடாது. ஒருவேளை யாராவது கோபப்பட்டால் தந்தையிடம் வந்து கேளுங்கள் - பாபா, இந்த விசயத்தில் இன்னார் என்னிடம் கோபித்துக் கொள்கிறார், பிறகு பாபா புரிய வைப்பார். எந்த ஒரு விசயமும் முத-ல் மனதில் வருகிறது. பேச்சும் செயலாக ஆகிவிடுகிறது. குழந்தைகள் தாய், தந்தையிடமிருந்து ஆசிர்வாதம் அடைய வேண்டுமெனில் ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். இது மிகவும் ஆழமான விசயமாகும், ஒருவரையே தாய், தந்தை என்று கூறுகிறோம். இந்த பிரம்மா தந்தையாகவும் இருக்கின்றார், பெரிய தாயாகவும் இருக்கின்றார். இப்போது இந்த பாபா யாரை தாய் என்று கூறுவார்? இந்த தாய் (பிரம்மா) யாரை தாய் என்று கூறுவார்? இந்த தாய்க்கு யாரும் தாயாக இருக்க முடியாது. எவ்வாறு சிவபாபாவிற்கு எந்த தந்தையும் கிடையாதோ, அதே போன்று இவருக்கு தனக்கென்று எந்த தாயும் கிடையாது.

முக்கிய விசயம் குழந்தைகளுக்குப் புரிய வைப்பது என்னவென்றால் ஒருவேளை எண்ணம், சொல், செய-னால் துக்கம் கொடுத்தால் துக்கம் அடைவீர்கள் மற்றும் பதவியும் குறைந்து விடும். சத்தியமான எஜமானிடத்தில் சத்தியமாக இருக்க வேண்டும். இவரிடத்திலும் சத்திய மாக இருக்க வேண்டும். பாபா, இந்த குழந்தை மிகவும் நல்ல குழந்தை என்று இந்த தாதா தான் சான்றிதழ் கொடுப்பார். பாபா மகிமை செய்கின்றார். யார் சேவாதாரி குழந்தைகளாக இருக்கிறார்களோ, உடல், மனம், பொருளால் சேவை செய்கிறார்களோ, ஒருபோதும் யாருக்கும் துக்கம் கொடுக்கவில்லையோ அவர்களே பாப்தாதா மற்றும் தாயின் உள்ளத்தில் அமர்கின்றனர். இவரது உள்ளத்தில் அமருவது என்றால் அவரது சிம்மாசனத்தில் அமருவதாகும். நான் சிம்மாசன தாரியாக ஆவது எப்படி? என்று நல்ல குழந்தைகள் எப்போதும் சிந்திப்பர். இந்த ஆர்வம் இருந்து கொண்டே இருக்கும். அரியணை வரிசைப்படியாக 8 இருக்கிறது. பிறகு 108, பிறகு 16108 - ம் இருக்கிறது, ஆனால் இப்போது நாம் உயர்ந்த பதவி அடைய வேண்டும். இரண்டு கலைகள் குறைந்த பின்பு அரியணையில் அமருவது அழகல்ல. நல்ல குழந்தைகள் அதிக முயற்சி செய்வார் - நாம் இப்போது செல்லமான பாபாவிடமிருந்து சூரிய வம்சத்தின் முழு ஆஸ்தியடையவில்லையெனில் கல்ப கல்பத்திற்கும் அடைய மாட்டோம். இப்போது நாம் வெற்றி மாலையில் வரவில்லையெனில் கல்ப கல்பத்திற்கும் வர முடியாது. இது கல்ப கல்பத்திற்கான போட்டியாகும். இப்போது ஒருவேளை நஷ்டமாகி விட்டால் கல்ப கல்பத் திற்கும் நஷ்டம் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். யார் ஸ்ரீமத்படி நடந்து தாய், தந்தையை முழுமையாக பின்பற்றுகிறார்களோ, யாருக்கும் ஒருபோதும் துக்கம் கொடுக்கவில்லையோ அவர்களே பக்கா வியாபாரிகள். அதிலும் நம்பர் ஒன் துக்கம் கொடுக்கக் கூடியது காமத்தில் செல்வதாகும்.

தந்தை கூறுகின்றார் - கிருஷ்ண பகவானின் மகாவாக்கியம் என்று நினைக்கிறீர்களா, நல்லது, அவரும் நம்பர் ஒன் ஆவார். அவரது விசயங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும், அப்போது தான் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆவீர்கள். கிருஷ்ண பகவான் ஸ்ரீமத் மூலம் கல்வி கொடுத்தார் என்று நினைக்கின்றனர். நல்லது, அவரது வழிப்படி நடந்து கொள்ளுங்கள். காமம் மிகப் பெரிய எதிரி, அதை வெல்லுங்கள் என்று அவரும் கூறியிருக் கின்றார். இந்த விகாரங்களை வெல்லும் போது தான் கிருஷ்ணபுரிக்கு வர முடியும். இப்போது கிருஷ்ணருக் கான விசயம் கிடையாது. கிருஷ்ணர் குழந்தை அல்லவா! அவர் எப்படி வழி (ஸ்ரீமத்) கொடுக்க முடியும்? எப்போது பெரியவராகி அரியணையில் அமருவாரோ அப்போது தான் வழி கொடுப்பார். வழி கொடுப்பதற்கு தகுதியானவராக ஆகும் போது இராஜ்யம் நடத்துவார் அல்லவா! என்னை நிராகார உலகில் நினைவு செய்யுங்கள் என்று இப்போது சிவபாபா கூறுகின்றார். என்னை சொர்க்கத்தில் நினைவு செய்யுங்கள் என்று கிருஷ்ணர் கூறுவார். காமம் மிகப் பெரிய எதிரி, இதன் மீது வெற்றியடையுங்கள் என்று அவரும் கூறுகின்றார். அங்கு விஷம் கிடைக்காது, ஆகையால் விஷத்தை விட்டு விட்டு தூய்மையாக ஆகுங்கள். இதை கிருஷ்ணரின் தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். மனிதர்கள் எனது பெயரை நீக்கி குழந்தையின் பெயர் வைத்து விட்டனர் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவரும் அனைத்து குணங்களும் நிறைந்தவர் ஆவார். அவரும் கூறுகின்றார் - காமம் மிகப் பெரிய எதிரி என்று கீதையில் எழுதப்பட்டிருக்கிறது. அவர் கூறுவதையும் ஒருபோதும் கேட்பதே கிடையாது. அதன் படி நடப்பதும் கிடையாது. சுயம் கிருஷ்ணர் வந்தால் நாம் அவர் வழிப்படி நடப்போம் என்று நினைக்கின்றனர், அதுவரை மூழ்கிக் கொண்டே இருப்போம். நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்க வந்திருக்கிறேன் என்ற சந்நியாசிகள் கூற முடியாது. இதை தந்தை தான் புரிய வைக்கின்றார், மேலும் சங்கமத்திற்கான விசயமாகும். கிருஷ்ணர் சத்யுகத்தில் இருக்கின்றார். அவரையும் இவ்வாறு தகுதியுடையவராக ஆக்கக் கூடியவர் யாராவது இருப்பார்கள் அல்லவா! ஆக சிவபாபா சுயம் கூறுகின்றார் - கிருஷ்ணர் மற்றும் அவரது முழு இராஜ்யத்தில் வருபவர்களை நான் இப்போது சொர்க்கம் செல்வதற்கு தகுதியானவர்களாக ஆக்கிக் கொண்டி ருக்கிறேன். குழந்தை சொர்க்கத்திற்கு சென்று உயர்ந்த பதவி அடைய வேண்டும் என்பதற்காக பாபா எவ்வளவு முயற்சி செய்கின்றார்! இல்லையெனில் படித்தவர்கள் முன் சென்று வேலை செய்ய வேண்டியிருக்கும். தந்தையிடமிருந்து முழு ஆஸ்தி அடைய வேண்டும். நான் அந்த அளவிற்கு நல்லவனாக இருக்கிறேனா? என்று தனக்குள் கேளுங்கள். நல்லவர்களிலும் வரிசைக்கிரமம் இருக்கிறது. உத்தமம் (முதல் தரம்), மத்தியம் (நடுத்தரம்), கனிஷ்டம் (கடை நிலை). முதல் தரமானவர்கள் ஒருபோதும் மறைந்திருக்க மாட்டார்கள். நாம் பாரதத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று அவர்களது உள்ளத்தில் இரக்கம் ஏற்படும். சமூக சேவகர் களும் உத்தமம் (முதல் தரம்), மத்தியம் (நடுத்தரம்), கனிஷ்டம் (கடை நிலை) என்று வரிசைக் கிரமமாக இருக்கின்றனர். சிலர் அதிகம் கொள்ளையடிக்கின்றனர், பொருட்களை விற்று சாப்பிட்டு விடுகின்றனர். பிறகு அவர்களை நல்ல சமூக சேவகர்கள் என்று எப்படி கூற முடியும்? பலர் தங்களை சமூக சேவகர்கள் என்று கூறிக் கொள்கின்றனர். ஏனெனில் சமூகத்திற்கு சேவை செய்கின்றனர். உண்மையான சேவை தந்தை தான் செய்கின்றார்.

நாங்களும் பாபாவின் கூடவே சமூக சேவகர்களாக இருக்கிறோம் என்று நீங்கள் கூறுகிறீர் கள். முழு உலகமும் மட்டுமின்றி தத்துவங்களையும் தூய்மையாக ஆக்குகிறோம். தத்துவமும் இந்த நேரத்தில் தமோ பிரதானமாக இருக்கிறது, இதையும் சதோ பிரதானமாக ஆக்க வேண்டும் என்பதை சந்நியாசிகள் அறியவில்லை. சதோ பிரதான தத்துவத்தின் மூலம் உங்களது சரீரமும் சதோ பிரதானமாக ஆகிவிடும். சந்நியாசிகளுக்கு ஒருபோதும் சதோ பிரதான சரீரம் கிடைப்பது கிடையாது. அவர்கள் வருவதோ ரஜோபிரதான நேரத்தில். பாபா அதிகம் புரிய வைக்கின்றார், இருப்பினும் குழந்தைகள் மறந்து விடுகிறீர்கள். யார் மற்றவர்களுக்குக் கூறுகிறார்களோ அவர்களுக்குத் தான் நினைவு இருக்கும். தானம் செய்யவில்லையெனில் தாரணையும் ஏற்படாது. யார் நன்றாக சேவை செய்கிறார்களோ, அவர்களது பெயரை பாப்தாதாவும் வெளிப் படுத்துகின்றார். சேவையில் யார் யார் தீவிரமாக இருக்கின்றனர்? என்பதை குழந்தைகளும் அறிவீர்கள். யார் சேவை செய்கிறார்களோ அவர்கள் தந்தையின் உள்ளத்தில் அமர்கிறார்கள். எப்போதும் தாய், தந்தையை பின்பற்ற வேண்டும். அவர்கள் தான் அரியணையில் அமர்வார்கள். யார் சேவை செய்கிறார்களோ அவர்கள் மற்றவர்களுக்கு சுகம் கொடுப்பார்கள். நான் பாபாவிற்கு நல்ல குழந்தையாக இருக்கிறேனா? என்று தனது முகத்தை கண்ணாடியில் பாருங்கள். இது எனது சேவைக்கான சார்ட் என்று சுயம் எழுத முடியும். நான் இந்த இந்த சேவைகளை செய்து கொண்டிருக்கிறேன், நீங்கள் முடிவெடுங்கள். ஆக தந்தைக்கும் தெரிந்து விடும். நான் உத்தமமாக இருக்கிறேனா? மத்தியமாக இருக்கிறேனா? அல்லது கனிஷ்டமாக இருக்கிறேனா? என்று சுயமும் தீர்மானிக்க முடியும். யார் மகாரதிகளாக இருக்கின்றனர்? யார் குதிரை வீரர்களாக இருக்கின்றனர்? என்பதை குழந்தைகளும் அறிவீர்கள். யாரும் மறைந்திருக்க முடியாது. தந்தைக்கு கணக்கு அனுப்பினால் பாபா எச்சரிக்கையும் செய்வார். கணக்கு கொடுக்காமல் இருந்தாலும் எச்சரிக்கை கிடைத்துக் கொண்டே இருக்கிறது. இப்போது எவ்வளவு ஆஸ்தி அடைய வேண்டுமோ முழுமையிலும் முழுமையாக எடுத்துக் கொள்ளுங் கள். பிறகு பாப்தாதாவிடமிருந்தும் சான்றிதழ் கிடைக்கும். பெரிய தாய் இவர் அமர்ந்திருக் கின்றார், இவரிடமிருந்து சான்றிதழ் அடைந்து விட முடியும். இந்த அதிசயமான தாய்க்கு எந்த தாய் கிடையாது. எவ்வாறு அந்த தந்தைக்கு எந்த தந்தையும் கிடையாதோ! அதுபோல பிறகு பெண்களில் மம்மா நம்பர் ஒன் ஆவார். நாடகத்தில் ஜெகதம்பா என்று பாடப்பட்டிருக்கிறது. அதிக சேவையும் செய்திருக்கின்றார். பாபா எப்படி செல்வாரோ, அதே போன்று மம்மாவும் சென்றார். சிறு சிறு ஊர்களிலும் சேவை செய்தார். அனைத்திலும் தீவிரமாக சென்றார். பாபாவிடம் உயர்ந்த பாபா இருக்கின்றார், ஆகையால் குழந்தைகளை இவர் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. சத்யுகத்தில் பிரஜைகள் அதிக சுகத்துடன் இருப்பார்கள். தனக்கென்று மாளிகை, பசுமாடு, காளை போன்ற அனைத்தும் இருக்கும்.

நல்லது, குழந்தைகளே! குஷியாக இருங்கள், செழிப்பாக இருங்கள், மறக்காதீர்கள், நினைவு செய்யாதீர்கள், ஆனால் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும். தனது சரீரத்தையும் மறந்து விட வேண்டும் எனும் போது மற்றவர்களை எப்படி நினைவு செய்ய முடியும்? நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) யார் மீதும் கோபப்படக் கூடாது. எண்ணம், சொல், செய-னால் அனைவருக்கும் சுகம் கொடுத்து தந்தை மற்றும் குடும்பத்தாரின் ஆசிர்வாதம் பெற வேண்டும்.

2) நல்ல குழந்தையாகி பாரதத்திற்கு ஆன்மீக சேவை செய்ய வேண்டும். கருணை உள்ளம் உடையவராகி ஆன்மீக சமூக சேவை செய்ய வேண்டும். உடல், மனம், பொருளால் சேவை செய்ய வேண்டும். சத்தியமான எஜமானிடம் சத்தியமாக இருக்க வேண்டும்.

வரதானம்:

பேச்சின் மீது இரட்டை அடிக்கோடிட்டு ஒவ்வொரு வார்த்தையையும் விலைமதிப்பற்றதாக ஆக்கக்கூடிய மாஸ்டர் சத்குரு ஆகுக.


குழந்தைகளாகிய உங்களுடைய பேச்சு அப்படி இருக்க வேண்டும், அதைக் கேட்பவர் கள் சாதகப் பறவையாகி இவர்கள் இன்னும் கொஞ்சம் பேசட்டும், நாங்கள் கேட்கின்றோம் என்று கூற வேண்டும். .இதைத் தான் விலைமதிப்பற்ற மகாவாக்கியம் என்று சொல்லப்படு கிறது. மகாவாக்கியம் என்பது அதிகம் இருக்காது. எப்பொழுது விருப்பம் ஏற்படுகிறதோ, அப்பொழுது பேசிக்கொண்டே இருப்பது - இதை மகாவாக்கியம் என்று கூறமாட்டார்கள். சத்குருவின் குழந்தைகளாகிய நீங்கள் மாஸ்டர் சத்குரு ஆவீர்கள். எனவே, உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் மகாவாக்கியமாக இருக்க வேண்டும். எந்த நேரத்தில், எந்த இடத்தில், எந்த வார்த்தை அவசியமானதோ, யுக்தி யுக்தானதோ, தனக்கும், மற்ற ஆத்மாக்களுக்கும் பயனுள்ள தாக இருக்கிறதோ, அப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசுங்கள். பேச்சின் மீது இரட்டை அடிக்கோடிடுங்கள்.

சுலோகன்:

சுபசிந்தனை செய்யும் மணியாகி தன்னுடைய கிரணங்களால் உலகத்திற்கு வெளிச்சத்தை கொடுத்துக் கொண்டே இருங்கள்.

 Download PDF

Post a Comment

0 Comments