19-01-2023 காலை
முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே!
சாகார சரீரத்தை
நினைவு செய்வது
கூட பூத
அபிமானி ஆவதாகும்.
ஏனென்றால் சரீரம்
5 பூதங்களால் ஆனது.
நீங்களோ தேகி
அபிமானி ஆகி
ஒரு விதேகி
தந்தையை நினைவு
செய்ய வேண்டும்.
கேள்வி:
அனைத்திலும் சர்வோத்தம காரியம் எது, அதை பாபா மட்டுமே செய்கிறார்?
பதில்:
முழு தமோப்ரதான சிருஷ்டியையும் சதோப்ரதானமாக, சதா சுகம் நிறைந்ததாக ஆக்கி விடுவது அனைத்திலும் சர்வோத்தம காரியமாகும். அதை பாபா தாம் செய்கிறார். இந்த உயர்ந்த காரியத்தின் காரணத்தால் அவருடைய நினைவுச் சின்னமும் கூட மிக-மிக உயர்ந்த தாகச் செய்கின்றனர்.
கேள்வி:
எந்த இரண்டு சொற்களில் டிராமாவின் இரகசியம் வந்து விடுகிறது?
பதில்:
பூஜைக்குரியவர் மற்றும் பூஜாரி. எப்போது நீங்கள் பூஜைக்குரியவர்களாக இருக்கிறீர்
களோ, அப்போது புருúˆôத்தமாக இருக்கிறீர்கள்.
உத்தம நிலையில் இருந்து பிறகு மத்தியம், கனிஷ்டம் ஆகிறீர்கள். மாயா பூஜைக்குரிய நிலையில் இருந்து பூஜாரியாக ஆக்கி விடுகிறது.
பாடல்: கூட்டத்தில் எரிந்து எழுந்தது ஜோதி......
ஓம் சாந்தி.
பகவான் அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் - மனிதர்களை பகவான் எனச் சொல்லப்படுவதில்லை. பிரம்மா,
விஷ்ணு, சங்கருக்கும் கூட உருவம் உள்ளது. அவர்களை பகவான் எனச் சொல்ல முடியாது.
பரமபிதா பரமாத்மாவின் வாசஸ்தலம் அவர்களுடையதை விட உயர்ந்ததாகும். அவரைத் தான் பிரபு,
ஈஸ்வரன், பகவான் என்றெல்லாம் சொல்கின்றனர்.
மனிதர்கள் அவரை அழைக்கின்றனர் என்றால் அவர்களுக்கு எந்த ஓர் ஆகார்
(சூட்சும) அல்லது சாகார் (ஸ்தூல)
மூர்த்தி எதுவும் காணப் படுவதில்லை.
அதனால் எந்த ஒரு மனித உருவத்தையும் பகவான் எனச் சொல்லி விடுகின்றனர். சந்நியாசிகளையும் பார்க்கின்றனர் என்றால் பகவான் எனச் சொல்கின்றனர்.
ஆனால் பகவான் தாமே வந்து புரிய வைக்கிறார்,
மனிதரை பகவான் என்று சொல்ல முடியாது. நிராகார் பகவானையோ அதிகமாக நினைவு செய்கின்றனர்.
யாருக்கு குரு கிடையாதோ, சிறு குழந்தைகளாக உள்ளனரோ,
அவர்களுக்கும் பரமாத்மாவை நினைவு செய்யுங்கள் என்று கற்றுத்தரப் படுகின்றது. ஆனால் எந்தப் பரமாத்மாவை நினைவு செய்ய வேண்டும் என்பது கற்றுத் தரப் படுவதில்லை. எந்த ஒரு சித்திரமும்
(உருவம்) புத்தியில் இருப்பதில்லை. துக்கத்தின் சமயம் ஹே பிரபு என அழைக்கின்றனர். எந்த ஒரு குரு அல்லது தேவதை முதலானவரின் சித்திரம் அவர்களுக்கு முன் வருவதில்லை. அநேக குருமார்களைக் கொண்டுள்ளனர் என்றாலும் கூட ஹே பகவானே என்று அழைக்கும் போது அவர்களுக்கு குருவின் நினைவு வராது. குருவை நினைவு செய்து அவரையும் பகவான் எனச் சொல்வார்களானால் அந்த மனிதரோ பிறப்பு-இறப்பில் வருபவர் ஆகிறார்.
ஆக, இது
5 தத்துவங்களாலான சரீரத்தை நினைவு செய்கின்றனர் என்றாகிறது. அது பஞ்சபூதம் எனச் சொல்லப்படுகிறது. ஆத்மா பூதம் எனச் சொல்லப் படுவதில்லை.
ஆக, பூத பூஜை ஆகி விடுகிறது. புத்தியோகம் சரீரத்தின் பக்கம் போய்விட்டது.
யாராவது மனிதரை பகவான் எனப் புரிந்து கொண்டிருப்பார்காளானால் அவருக்குள் இருக்கும் ஆத்மாவை அவர்கள் நினைவு செய்கின்றனர் என்பதில்லை.
ஆத்மாவோ இருவருக்குள்ளும் உள்ளது. நினைவு செய் பவருக்குள்ளும் உள்ளது என்றால் யாரை நினைவு செய்கின்றாரோ, அவருக்குள்ளும் ஆத்மா உள்ளது.
பரமாத்மாவையோ சர்வவியாபி எனச் சொல்லி விடுகின்றனர். ஆனால் பரமாத்மாவை பாவாத்மா எனச் சொல்வதில்லை.
உண்மையில் பரமாத்மா என்ற பெயர் எப்போது வெளிப்படுகிறதோ, அப்போது புத்தியோகம் நிராகார் பக்கமாகச் சென்று விடுகிறது.
நிராகார் தந்தையை நிராகார் ஆத்மா நினைவு செய்கிறது.
அவரை தேகி அபிமானி எனச் சொல்வார்கள். சாகார சரீரத்தை யார் நினைவு செய்கின்றனரோ,
அவர்கள் பூத அபிமானி போலத் தான். பூதம் பூதத்தை நினைவு செய்கிறது. ஏனென்றால் தன்னை ஆத்மா எனப் புரிந்து கொள்வதற்கு பதிலாக
5 பூதங்களின் சரீரம் எனப் புரிந்து கொள்கின்றனர். பெயரும் சரீரத்திற்குத் தான் வைக்கப்படுகின்றது. தன்னையும் கூட 5 தத்துவங்களின் பூதம் எனப் புரிந்து கொள்கின்றனர்.
மேலும் அவரையும் சரீரமாகவே நினைவு செய்கின்றனர். தேகி அபிமானியோ இல்லை.
தன்னை நிராகார் ஆத்மா எனப் புரிந்து கொண்டிருந்தால் நிராகார் பரமாத்மாவை நினைவு செய்வார்கள்.
அனைத்து ஆத்மாக்களின் சம்மந்தம் முதன் முதலில் பரமாத்மாவோடு தான். ஆத்மா துக்கத்தில் பரமாத்மாவைத் தான் நினைவு செய்கிறது. அவரோடு சம்மந்தம் உள்ளது.
அவர் ஆத்மாக்களை அனைத்து துக்கங்களில் இருந்தும் விடுவிக்கிறார். அவரை மா
(ஒளி) என்றும் சொல்கின்றனர். ஒளி என்று சொல்வதால் மனிதர்கள் பிறகு (ஸ்தூலமான) ஜோதி எனப் புரிந்து கொள்கின்றனர். பாபாவோ தாமே புரிய வைத்துள்ளார், நான் பரம ஆத்மா,
எனது பெயர் சிவன். சிவனை ருத்ரன் என்றும் சொல்கின்றனர். அந்த நிராகாருக்குத் தான் அநேகப் பெயர்கள் உள்ளன. வேறு யாருக்கும் இத்தனைப் பெயர்கள் கிடையாது.
பிரம்மா, விஷ்ணு,
சங்கருக்கு ஒரே பெயர் தான்.
தேகதாரிகள் அனைவருக்குமே ஒரு பெயர் தான். ஓர் ஈஸ்வரனுக்கு மட்டுமே அநேகப் பெயர்கள் தரப்படுகின்றன. அவரது மகிமை அளவற்றது.
மனிதர்களுக்கு ஒரு பெயர் தீர்மானிக்கப் பட்டதாகும். இப்போது நீங்கள் மறுபிறவி எடுத்திருக்கிறீர்கள் என்றால் இதன் மூலம் பழையதெல்லாம் மறந்துபோக வேண்டும் என்பதற்காக உங்களுக்கு இன்னொரு பெயர் வைக்கப்படுகிறது.. நீங்கள் பரமபிதா பரமாத்மா வின் முன்பு உயிரோடு இருந்து கொண்டே இறந்தவராக ஆகிறீர்கள். ஆக,
இது மர்ஜீவா ஜென்மம் (மறுபிறவி).
ஆகவே நிச்சயமாகத் தாய்-தந்தையிடம் பிறவி எடுக்கின்றனர். இந்த ஆழமான விஷயங்களை பாபா அமர்ந்து உங்களுக்குப் புரிய வைக்கிறார்.
உலகமோ சிவனைப் பற்றி அறியாமல் உள்ளது. பிரம்மா,
விஷ்ணு, சங்கரை அறிந்துள்ளனர். பிரம்மாவின் பகல், பிரம்மாவின் இரவு என்றும் சொல்கின்றனர். இதையும் வெறுமனே கேட்டுள்ளனர்.
பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை, ஆனால் எப்படி என்பது தெரியாது. இப்போது படைப்பவரோ நிச்சயமாகப் புதிய தர்மம்,
புதிய உலகத்தைப் படைப்பார். பிரம்மாவின் மூலம் பிராமண குலத்தைத்தான் படைப்பார். நீங்கள் பிரம்மாவை அல்ல,
பரமபிதா பரமாத்மாவை நினைவு செய்கிறீர்கள். ஏனென்றால் பிரம்மா மூலம் நீங்கள் அவருடையவர்களாக ஆகியிருக்கிறீர்கள். வெளியில் உள்ள தேக அபிமானி பிராமணர்கள் இது போல் தங்களை பிரம்மாவின் குழந்தைகள்,
சிவனுடைய பேரக்குழந்தைகள் எனச் சொல்ல மாட்டார்கள். சிவபாபாவுக்கு ஜெயந்தியும் கொண்டாடுகின்றனர். ஆனால் அவரை அறிந்திராத காரணத்தால் அவருக்குரிய மதிப்பை அளிப்பதில்லை. அவருடைய கோவிலுக்குச் செல்கின்றனர்.
புரிந்து கொள்கின்றனர்,
இவர் பிரம்மா,
விஷ்ணு, சங்கர் அல்லது லட்சுமி-நாராயணரோ அல்ல.
இவர் நிச்சயமாக நிராகார் பரமாத்மா ஆவார். மற்ற அனைத்து நடிகர்களுக்கும் அவரவர் பார்ட் உள்ளது. புனர்ஜென்மம் எடுக்கின்றனர். இருந்தாலும் தங்களுக்கென்று ஒரு பெயரை வைத்துக் கொள்கின்றனர். இந்தப் பரமபிதா பரமாத்மா ஒருவர் தான்.
அவருக்கு வ்யக்த
(சரீரத்தின்) பெயர் வடிவம் கிடையாது.
ஆனால் மூடமதி மனிதர்கள் புரிந்து கொள்வதில்லை. பரமாத்மாவின் நினைவுச் சின்னம் உள்ளது என்றால் நிச்சயமாக அவர் வந்திருப்பார். ஏனென்றால் இதில் ஸ்வாஹா ஆக வேண்டியுள்ளது. யக்ஞமோ அநேக மனிதர்கள் படைக்கின்றனர். அவை அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடைய ஸ்தூல யக்ஞங்கள். இந்தப் பரமபிதா பரமாத்மா சுயம் வந்து யக்ஞத்தைப் படைக்கிறார்.
குழந்தைகளுக்குப் படிப்பு சொல்லித் தருகிறார்.
யக்ஞத்தைப் படைக்கின்றனர் என்றால் பிராமணர்கள் கதைகள், சாஸ்திரங்கள் முதலியவற்றைச் சொல் கின்றனர். இந்தத் தந்தையோ ஞானம் நிறைந்தவர். அவர் சொல்கிறார், இந்த கீதை, பாகவதம் முதலிய அனைத்தும் பக்தி மார்க்கத்தினுடையவை. இதுவே பக்தி மார்க்கத்தினுடைய சமயம் தான். எப்போது கலியுகத்தின் கடைசி வருகிறதோ, அப்போது பக்தி மார்க்கத்திற்கும் இறுதி வந்து விடும். அப்போது தான் பகவான் வந்து சந்திப்பார்.
ஏனென்றால் அவர் தாம் பக்தியின் பலனைக் கொடுப்பவர்.
அவர் ஞானசூரியன் என்று சொல்லப்படுகிறார். ஞான சந்திரன்,
ஞான சூரியன் மற்றும் ஞான அதிர்ஷ்ட நட்சத்திரங்கள். நல்லது, ஞான சூரியனோ பாபா.
பிறகு மாதா வேண்டும் - ஞான சந்திரன். ஆக,
யாருடைய சரீரத்தில் பிரவேசமாகியிருக்கிறாரோ, அவர் ஞான சந்திரன் மாதா. மற்றப்படி மற்றுமுள்ள அனைவரும் குழந்தைகள், அதிர்ஷ்ட நட்சத்திரங்கள். இந்தக் கணக்கின் படி ஜெகதம்பாவும் கூட அதிர்ஷ்ட நட்சத்திரம் ஆகிறார். ஏனென்றால் குழந்தை ஆகிறார் இல்லையா? நட்சத்திரங்களில் சில தீவிரமானவை கூட உள்ளன.
அது போல் இங்கே நம்பர்வார் உள்ளனர். அது ஸ்தூல ஆகாயத்தின் சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங் கள். இது ஞானத்தின் விˆயமாகும். எப்படி அந்தத் தண்ணீரின் நதிகள் உள்ளன,
இதுவோ ஞான நதிகள். இவை ஞானக்கடலில் இருந்து வெளிப்பட்டுள்ளன.
இப்போது சிவஜெயந்தி கொண்டாடுகின்றனர். நிச்சயமாக அந்த முழு சிருஷ்டியின் தந்தை வருகிறார். வந்து நிச்சயமாக சொர்க்கத்தைப் படைத்திருப்பார். பாபா வருவதே ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தின் ஸ்தாபனை செய்வதற்காக.
அது மறைந்து விட்டுள்ளது. அரசாங்கமும் எந்த ஒரு தர்மத்தையும் ஏற்றுக் கொள்வதில்லை.
எங்களுக்கு தர்மம் எதுவும் கிடையாது எனச் சொல்கின்றனர்.
சரியாகத்தான் சொல்கின்றனர்.
பாபாவும் சொல்கிறார்,
பாரதத்தின் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் மறைந்து விட்டுள்ளது.
தர்மத்தில் சக்தி உள்ளது. பாரதவாசிகள் தங்களின் தெய்விக தர்மத்தில் இருந்த போது மிகவும் சுகமாக இருந்தனர்.
உலகத்தின் சர்வசக்தி நிறைந்த இராஜ்யமாக இருந்தது. புருஷோத்தமர்கள் இராஜ்யம் செய்தனர்.
ஸ்ரீலட்சுமி-நாராயணர் தாம் புருஷோத்தம் எனச் சொல்லப் படுகின்றனர். நம்பர்வார் உயர்ந்தவர், தாழ்ந்தவரோ இருக்கவே செய்கின்றனர்.
சர்வோத்தம புருஷ்
(ஆத்மாக்கள்), உத்தம புருஷ், மத்தியம்,
கனிஷ்ட ஆத்மாக்களோ இருக்கவே செய்கின்றனர்.
முதல்-முதலில் அனைவரையும் விட சர்வோத்தம புருஷ் யார் ஆகின்றனரோ,
அவர்கள் தாம் பிறகு மத்தியம்,
கனிஷ்டமாக ஆகின்றனர்.
ஆக, லட்சுமி-நாராயணர் புருஷோத்தம்.
அனைத்து ஆத்மாக்களுக்குள்ளும் உத்தமமானவர்கள். பிறகு கீழே இறங்கு கின்றனர் என்றால் தேவதையிலிருந்து சத்திரியர், சத்திரியரில் இருந்து பிறகு வைசியர், கீழான சூத்திரராக ஆகின்றனர்.
சீதாராமரைக் கூட புருஷோத்தம் எனச் சொல்ல மாட்டார்கள்.
அனைத்து ராஜாக் களுக்கும் ராஜா,
சர்வோத்தம சதோப்ரதான புருஷோத்தமர் லட்சுமி-நாராயணர் ஆவர்.
இந்த அனைத்து விஷயங்களும் உங்களுடைய புத்தியில் பதிந்துள்ளது.
எப்படி இந்த சிருஷ்டியின் சக்கரம் நடைபெறுகிறது? முதல்-முதலில் உத்தம்,
பிறகு மத்தியம்,
கனிஷ்டம் ஆகின்றனர்.
இச்சமயமோ முழு உலகமும் தமோப்ரதானமாக உள்ளது. இதை பாபா புரிய வைக்கிறார். யாருக்கு இப்போது ஜெயந்தி கொண்டாடுவார்கள் என்று நீங்கள் சொல்ல முடியும் - அதாவது இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன் பரமபிதா பரமாத்மா வந்திருந்தார். இல்லையென்றால் சிவஜெயந்தியை ஏன் கொண்டாடுகின்றனர்? பரமபிதா பரமாத்மா நிச்சயமாகக் குழந்தை களுக்காகப் பரிசு கொண்டு வருவார். மேலும் அவசியம் சர்வோத்தம காரியம் செய்வார்.
தமோப்ரதான உலகம் முழுவதையும் சதோப்ரதானமாக,
சதா சுகம் நிறைந்ததாக ஆக்குவார்.
எவ்வளவு உயர்ந்தவரோ,
அவ்வளவு உயர்ந்த நினைவுச் சின்னமும் இருந்தது. அந்தக் கோவிலைக் கொள்ளையடித்து எடுத்துச் சென்றனர்.
மனிதர்கள் படிப்பதே பணம் சம்பாதிப்பதற்காகத் தான். வெளிநாட்டில் இருந்தும் பணத்திற்காகவே வந்துள்ளனர். அந்தச் சமயமும் செல்வம் ஏராளம் இருந்தது.
ஆனால் மாயா இராவணன் பாரதத்தை சோழி போல் ஆக்கி விட்டிருக்கிறான். பாபா வந்து வைரம் போல் ஆக்குகிறார். அப்படிப்பட்ட சிவபாபாவைப் பற்றி யாருக்கும் தெரியாது.
சர்வவியாபி எனச் சொல்லி விடுகின்றனர்.
இப்படிச் சொல்வதும் கூடத் தவறாகும்.
படகை அக்கரை கொண்டு சேர்ப்பவர் சத்குரு ஒருவர் தாம். மூழ்கடிப்பவர்கள் அநேகர் உள்ளனர்.
அனைவரும் விஷக்கடலில் மூழ்கி விட்டிருக்கின்றனர். அதனால் தான் சொல்கின்றனர், இந்த சாரமற்ற உலகம்,
விஷக்கடலில் இருந்து அக்கரைக்குக் கொண்டு செல்லுங்கள் - பாற்கடல் இருக்கும் இடத்திற்கு.
பாடவும் படுகிறது,
விஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டிருந்தார். சொர்க்கம் பாற்கடல் எனச் சொல்லப்படுகிறது. அங்கே லட்சுமி-
நாராயணர் இராஜ்யம் செய்கின்றனர். மற்றப்படி அங்கே விஷ்ணு பாற்கடலில் ஓய்வாக இருந்தார் என்பதில்லை.
அவர்களோ பெரிய குளத்தை உருவாக்கி அதன் நடுவே விஷ்ணுவை வைக் கின்றனர். விஷ்ணுவையும் மிகப் பெரிய உயரமான உருவமாகச் செய்கின்றனர். இவ்வளவு பெரிய உருவமாகவோ லட்சுமி-நாராயணர் இருக்க மாட்டார்கள்.
அதிக பட்சம் ஆறடி உயரம் இருப்பார்கள். பாண்டவர்களுக்கும் கூடப் பெரிய-பெரிய உருவம் செய்கின்றனர். இராவணனுக்கு எவ்வளவு பெரிய உருவம் செய்கின்றனர்!
பெரிய பெயர் உள்ளதென்றால் பெரிய உருவமாகச் செய்கின்றனர்.
பாபாவின் பெயர் பெரியதாக உள்ளது என்றாலும் அவரது உருவம் சிறியது.
இதுவோ புரிய வைப்பதற்காக இவ்வளவு பெரிய உருவத்தைக் கொடுத்துள்ளனர்.
பாபா சொல்கிறார்,
எனக்கு இவ்வளவு பெரிய உருவம் கிடையாது. எப்படி ஆத்மா சிறியதாக உள்ளதோ, அது போல் நான் பரமாத்மாவும் நட்சத்திரம் போலவே இருக்கிறேன்.
அவர் சுப்ரீம் ஸோல் என்று சொல்லப்படுகிறார். அவர் அனைவரை விடவும் உயர்ந்தவர். அவருக்குள் ஞானம் முழுவதும் நிரம்பியுள்ளது. அவருடைய மகிமை பாடப்பட்டுள்ளது - அவர் மனித சிருஷ்டியின் விதைவடிவம்,
ஞானக்கடல், சைதன்ய ஆத்மா. ஆனால் ஞானத்தைச் சொல்லும் போது தான் உறுப்புகளை எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும். எப்படி குழந்தையும் கூட சிறிய உறுப்புகளால் பேச முடியாது. பெரியவனாக ஆனால் சாஸ்திரங்கள் முதலியவற்றைப் பார்ப்பதால் முந்தைய சம்ஸ்காரங்களின் ஸ்மிருதி வந்து விடுகிறது. ஆக,
பாபா அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் - நான் மீண்டும் 5000 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு அதே ராஜயோகத்தைக் கற்பிப்பதற்காக வந்துள்ளேன். கிருஷ்ணர் ஒன்றும் ராஜயோகம் கற்பிக்கவில்லை. அவரோ பிராலப்தத்தை அனுபவித்துள்ளார். எட்டுப் பிறவிகள் சூரியவம்சி, 12 பிறவிகள் சந்திரவம்சி, பிறகு
63 பிறவிகள் வைசிய,
சூத்திர வம்சி ஆனார். இப்போது அனைவர்க்கும் இது கடைசிப் பிறவி.
இந்தக் கிருஷ்ணரின் ஆத்மாவும் கேட்டுக் கொண்டி ருக்கிறது.
நீங்களும் கேட்கிறீர்கள். இது சங்கமயுக பிராமணர் களின் வர்ணம். பிறகு நீங்கள் பிராமணரில் இருந்து போய் தேவதை ஆகிறீர்கள்.
பிராமண தர்மம்,
சூரியவம்சி தேவதா தர்மம் மற்றும் சந்திரவம்சி சத்திரிய தர்மம் மூன்றையும் ஸ்தாபனை செய்பவர் ஒரே ஒரு பரமபிதா பரமாத்மா ஆவார். அப்போது மூன்றினுடைய சாஸ்திரமும் ஒன்றாக இருக்க வேண்டும். தனித்தனியாக எந்த சாஸ்திரமும் கிடையாது. பிரம்மா இவ்வளவு பெரியவர்,
அனைவர்க்கும் தந்தை,
பிரஜாபிதா. அவருக்கும் எந்த ஒரு சாஸ்திரமும் கிடையாது.
ஒரு கீதையில் தான் பகவான் வாக்கு உள்ளது.
பிரம்மா பகவான் வாக்கு அல்ல.
இது சிவபகவான்,
பிரம்மாவின் மூலமாகச் சொல்லும் வாக்கு.
இதன் மூலம் சூத்திரர்கள் மாற்றப் பட்டு பிராமணர் ஆக்கப் படுகின்றனர்.
பிராமணர்கள் தாம் தேவதையாகவும், யார் ஃபெயிலாகி விடுகின்றனரோ,
அவர்கள் சத்திரியராகவும் ஆகின்றனர். இரண்டு கலைகள் குறைந்து விடு கின்றன.
எவ்வளவு நன்றாகப் புரிய வைக்கிறார்!
உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பரமபிதா பரமாத்மா,
பிறகு பிரம்மா,
விஷ்ணு, சங்கர்
-அவர்களையும் கூடப் புருஷோத்தம் எனச் சொல்ல மாட்டார் கள். யார் புருஷோத்தம் ஆகின்றனரோ,
அவர்கள் தாம் பிறகு கனிஷ்டமாகவும் (தாழ்ந்தவர் களாக)
ஆகின்றனர். மனிதர்களில் சர்வோத்தமமானவர்கள் லட்சுமி-நாராயணர். அவர்களுக்குக் கோவிலும் கூட உள்ளது. ஆனால் அவர்களின் மகிமையையாரும் அறிந்து கொள்ளவில்லை. பூஜை மட்டும் செய்து கொண்டே இருக்கின்றனர். இப்போது நீங்கள் பூஜாரியில் இருந்து பூஜைக்குரியவர்களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். மாயா பிறகு பூஜாரியாக ஆக்கி விடுகிறது.
டிராமா அது போல் உருவாக்கப் பட்டுள்ளது. எப்போது நாடகம் முடிவடைகின்றதோ, அப்போது தான் நான் வர வேண்டி உள்ளது.
பிறகு விருத்தியடைவதும் தானாகவே நின்று போகிறது. பிறகு குழந்தைகளாகிய நீங்கள் வந்து அவரவர் பார்ட்டை ரிப்பீட் செய்ய வேண்டும்.
இதைப் பரமபிதா பரமாத்மா தாமே அமர்ந்து புரிய வைக்கிறார். அவருடைய ஜெயந்தியை பக்தி மார்க்கத்தில் கொண்டாடுகின்றனர். இதையோ கொண்டாடிக் கொண்டே தான் இருப்பார்கள். சொர்க்கத்திலோ யாருடைய ஜெயந்தியையும் கொண்டாட மாட்டார்கள்.
கிருஷ்ணர், இராமர் முதலானவர்களின் ஜெயந்தியையும் கொண்டாட மாட்டார்கள்.
அவர்களோ தாங்களே
(சத்யுகத்தில்) நடைமுறையில் இருப்பார்கள். இவர்களோ இருந்து விட்டுச் சென்றுள்ளனர். அதனால் இங்கே கொண்டாடுகின்றனர். அங்கே வருடாவருடம் கிருஷ்ணரின் பிறந்த நாளைக் கொண்டாட மாட்டார்கள். அங்கோ சதா மகிழ்ச்சியே மகிழ்ச்சி தான்..
பிறந்த நாள் என்ன கொண்டாடுவார்கள்? குழந்தைக்குப் பெயரோ தாய்-தந்தை தாம் வைத்திருப்பார்கள். குருவோ அங்கே கிடையாது. உண்மையில் இந்த விஷயங்களுக்கு ஞான-யோகத்துடன் எந்த ஒரு தொடர்பும் கிடையாது.
மற்றப்படி அங்குள்ள பழக்க-வழக்கங்கள் என்ன என்று கேட்க வேண்டி உள்ளது. என்றால் பாபா சொல்வார்,
அங்கே என்ன விதிமுறைகள் இருக்குமோ,
அதன்படி எல்லாம் நடைபெறும். நீங்கள் கேட்பதற்கு என்ன தேவை உள்ளது?
முதலில் முயற்சி செய்து தனது பதவியையோ பெற்றுக் கொள்ளுங்கள். தகுதியுள்ளவர்களாக ஆகுங்கள். பிறகு கேட்கலாம். டிராமாவில் ஏதாவதொரு விதிமுறை இருக்கும். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1.
தன்னை நிராகார் ஆத்மா என உணர்ந்து நிராகார் தந்தையை நினைவு செய்ய வேண்டும்.
எந்த ஒரு தேகதாரியையும் நினைவு செய்யக் கூடாது.
மறுபிறவி எடுத்தவராகி பழைய விசயங்களை புத்தி மூலம் மறந்துவிட வேண்டும்.
2.
பாபா படைத்துள்ள இந்த ருத்ர யக்ஞத்தில் சம்பூர்ண ஸ்வாஹா ஆக வேண்டும். சூத்திரர்களை பிராமண தர்மத்தில் மாற்றும் சேவை செய்ய வேண்டும்.
வரதானம்:
அன்றாட காரியங்களின்
செட்டிங் (அமைப்பு)
மற்றும் பாபாவின்
துணை மூலம்
ஒவ்வொரு காரியத்தையும்
துல்லியமாக செய்யக்கூடிய
விஷ்வ கல்யாணகாரி
ஆகுக
உலகில் யார் பெரிய மனிதர்களாக இருக்கிறார்களோ,
அவர்களின் அன்றாட தினசரி நடவடிக்கையை அமைத்துக் கொண்டு இருப்பார்கள்.
தினசரி நடவடிக்கைகள்
வடிவமைத்து வைத்திருக்கும்
பொழுது அனைத்து செயல்களும் சரியாக நடைபெறும். வடிமைத்துக் கொள்வதினால் நேரம், ஆற்றல் (எனர்ஜி) அனைத்தும் சேமிப்பு ஆகும். ஒரே நபர் 10 செயல்களை செய்ய முடியும். எனவே உலக நன்மைக்கான பொறுப்பை ஏற்றுள்ள ஆத்மாக் களாகிய நீங்கள், ஒவ்வொரு காரியத்திலும்
வெற்றி அடைவதற்காக அன்றாட நடவடிக்கைகளை வடிவமைத்துக்
கொள்ளுங்கள். மேலும் பாபாவோடு சதா இணைந்திருங்கள்.
ஆயிரம் கைகளை உடைய பாபா உங்களோடு இருந்தால் ஒரு காரியத்தை செய்வதற்கு பதிலாக ஆயிரம் காரியங்களை துல்லியமாக செய்ய முடியும்.
சுலோகன்:
அனைத்து ஆத்மாக்களுக்காகவும் சுத்தமான எண்ணங்களை கொண்டு வருவது தான் வரங்களை அளிக்கும் மூர்த்தி ஆவதாகும்.
0 Comments