15-01-2023 காலை
முரளி ஓம் சாந்தி "அவ்யக்த பாப்தாதா" ரிவைஸ் 18.11.1993
Listen to the Murli audio file
சங்கம யுகத்தின் இராஜ செல்லங்களே வருங்காலத்தின் இராஜ்ய அதிகாரி.
இன்று அனைத்து குழந்தைகளின் இதய இராமனான தந்தை தனது நாலாபுறங்களின் அனைத்து இராஜ செல்லக் குழந்தைகளை பார்த்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு குழந்தை யும் இதயராமனின் செல்லத்திற்கு பாத்திரம் ஆவார். இந்த தெய்வீக செல்லம்,
பரமாத்ம செல்லம் கோடியில் ஒருவரான பாக்கியவான் ஆத்மாக்களுக்கு தான் பிராப்தி ஆகிறது. அநேக பிறவி களாக ஆத்மாக்கள் அல்லது மகான் ஆத்மாக்கள் மூலமாக செல்லத்தை அனுபவம் செய்தீர்கள்.
இப்பொழுது இந்த ஒரு அலௌகீக பிறவியில் பரமாத்ம அன்பு அல்லது செல்லத்தை அனுபவம் செய்து கொண்டிருக்கிறீர்கள். இந்த தெய்வீக செல்லத்தின் மூலமாக இராஜ செல்லங்களாக ஆகி விட்டுள்ளீர்கள். எனவே எனது ஒவ்வொரு குழந்தை யும் இராஜா குழந்தை ஆவார் என்று இதய இராமனான தந்தைக்கு கூட அலௌகீக பெருமிதம் உள்ளது.
இராஜா ஆவீர்கள் அல்லவா? பிரஜை ஒன்றும் இல்லையே?
அனைவரும் தங்களது
(டைட்டில்) பட்டத்தை என்ன வென்று கூறுகிறீர்கள்? இராஜயோகி.
அனைவரும் இரஜயோகி ஆவீர்களா? இல்லை யாராவது பிரஜாயோகியும் இருக்கிறார்களா? அனைவரும் இராஜயோகி ஆவீர்கள் என்றால், பின் பிரஜைகள் எங்கிருந்து வருவார்கள்? யார் மீது ஆட்சி புரிவீர்கள்? பிரஜைகளோ வேண்டும் அல்லவா?
பின் அந்த பிரஜாயோகி கள் எப்பொழுது வருவார்கள்?
இராஜ செல்லம் என்றால் இப்பொழுதிற்கும் இராஜா மற்றும் வருங்காலத்திற்கும் இராஜா,
(டபிள்) இரட்டை இராஜ்யம் ஆகும்.
வருங்காலத்திற்கான இராஜ்யம் மட்டும் அல்ல.
வருங்காலத்திற்கு முன்னதாக இப்பொழுது சுய இராஜ்ய அதிகாரி ஆகி உள்ளீர்கள்.
தங்களது சுய இராஜ்யத்தின் காரியங்களை
(செக்) சோதனை செய்கிறீர்கள். எப்படி வருங்கால இராஜ்யத்திற்கு ஒரு இராஜ்யம்,
ஒரு தர்மம்,
சுகம், சாந்தி,
செல்வம் நிறைந்த இராஜ்யம் என்று மகிமை செய்கிறீர்கள், அதே போல ஹே, சுய இராஜ்ய அதிகாரி இராஜாக்களே, சுய இராஜ்யத்தின் அரச நடவடிக்கைகளில் இந்த எல்ல விஷயங்களும் எப்பொழுதும் இருக்கின்றனவா?
ஒரு இராஜ்யம் உள்ளது என்றால் எப்பொழுதும் ஆத்மாவாகிய என்னுடைய ஆட்சி இந்த அனைத்து இராஜ்ய ஊழியர்களான கர்ம இந்திரியங்கள் மீது உள்ளதா,
இல்லை இடையிடையே சுய இராஜ்யத்திற்கு பதிலாக அந்நிய இராஜ்யம் தங்களது அதிகாரத்தை ஒன்றும் செலுத்து வதில்லையே?
அந்நிய இராஜ்யமாவது
- மாயையின் இராஜ்யம்.
அந்நிய இராஜ்யத்தின் அடையாளமாவது அந்நியனுக்கு அடிமை ஆகி விடுவீர்கள். சுய இராஜ்யத்தின் அடையாள மாவது எப்பொழுதும்
(சிரேஷ்ட) சிறந்த அதிகாரி என்ற அனுபவம் செய்வீர்கள்.
அந்நிய இராஜ்யம்,
அந்நியனுக்கு அடிமை அல்லது அந்நியனுக்கு வசப்பட்டவராக ஆக்கி விடுகிறது. எப்பொழுதுமே யாராவது ஒரு அந்நிய இராஜா எவரொருவருடைய இராஜ்யத்தின் மீதும் அதிகாரத்தை பெற்று விட்டார் என்றால் முதலில் இராஜாவைத் தான் கைதியாக ஆக்குகிறார்,
அதாவது அந்நியனுக்கு அடிமையாக ஆக்குகிறார்.
எனவே ஒரு இராஜ்யம் இருக்கிறதா என்று செக் செய்யுங்கள். இல்லை இடையிடையே மாயையின் இராஜ்ய அதிகாரிகள்,
சுய இராஜ்ய அதிகாரி இராஜாக்களாகிய உங்களை அல்லது உங்களது எந்த ஒரு கர்ம இந்திரியங்கள் என்ற அரச ஊழியர்களை அந்நியனுக்கு வசப்பட்டவர்களாக ஒன்றும் ஆக்கி விடுவதில்லையே? எனவே ஒரு இராஜ்யம் உள்ளதா? இல்லை இரண்டு இராஜ்யம் உள்ளதா? சுய இராஜ்ய அதிகாரிகளுடைய (லா அண்ட் ஆர்டர்) சட்டமும் ஒழுங்கும் நடக்கிறதா?
இல்லை இடை யிடையே மாயையின்
(ஆர்டர்) கட்டளையும் நடக்கிறதா? கூட கூடவே ஒரு தர்மம், தர்மம் என்றால் தாரணை.
எனவே சுய இராஜ்யத்தின் தர்மம் அல்லது ஒரு தாரணை எது?
தூய்மை. மனம் சொல், செயல்,
சம்பந்தம், தொடர்பு அனைத்து விதமான தூய்மை - இதற்கு தான் ஒரு தர்மம் அதாவது ஒரு தாரணை என்று கூறப்படுகிறது. கனவளவிலும், எண்ணத்தளவிலும் கூட அபவித்திரதா
(தூய்மையின்மை) அதாவது மற்ற தர்மம் இருக்கக் கூடாது.
ஏனெனில் எங்கு தூய்மை இருக்கிறதோ,
அங்கு அபவித்திரதா அதாவது வீண் அல்லது விகல்பம்
- தீயவற்றின் பெயர் அடையாளம் இருக்காது.
அப்பேர்ப்பட்ட திறமையுள்ள சக்கரவர்த்தி ஆகி உள்ளீர்களா? இல்லை தளர்ந்த இராஜா ஆவீர்களா? இல்லை சில சமயம் தளர்ந்தவர், சில நேரங்களில் சக்கரவர்த்தி அப்படி இருக்கிறீர்களா? எப்பேர்ப்பட்ட இராஜா ஆவீர்கள்? இப்பொழுது இந்த ஒரு சிறிய ஜென்மத்தின் இராஜ்யத்தை உங்களால் நடத்த முடியவில்லை என்றால், 21 ஜென்மங் களின் இராஜ்ய அதிகாரத்தை எப்படி அடைவீர்கள்? சம்ஸ்காரத்தை இப்பொழுது நிரப்பிக் கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுதினுடைய சிறந்த சம்ஸ்காரத்தினால், வருங்கால (சம்சாரம்)
உலகம் அமையும்.
எனவே இப்பொழுது முதற்கொண்டு ஒரு இராஜ்யம், ஒரு தர்மத்தின் சம்ஸ்காரம் வருங்கால (சம்சாரம்)
உலகத்திற்கான (ஃபவுண்டேஷன்)
அஸ்திவாரம் ஆகும்.
எனவே செக் செய்யுங்கள். சுகம்,
சாந்தி, செல்வம் அதாவது எப்பொழுதுமே எல்லைக்குட் பட்ட பிராப்திகளின் ஆதாரத்தில் சுகம் இருக்கிறதா?
இல்லை ஆத்மீக அதீந்திரிய சுகம்,
பரமாத்ம சுகமயமான இராஜ்யம் உள்ளதா?
சாதனங்கள் அல்லது வசதிகள் அல்லது புகழின் ஆதாரத்தில் சுகத்தின் அனுபவம் ஏற்படுகிறதா? இல்லை பரமாத்ம ஆதாரத்தில் அதீந்திரிய சுகமய இராஜ்யம் உள்ளதா?
இதே போல அகண்ட சாந்தி
- எந்த வொரு விதமான அசாந்தியின் நிலைமை அகண்ட சாந்தியை குறையுள்ளதாக ஒன்றும் ஆக்கி விடுவதில்லையே? அசாந்தியின் புயல்கள் சிறியதாக இருந்தாலும் சரி,
பெரியதாக இருந்தாலும் சரி, ஆனால் சுய இராஜ்ய அதிகாரிக்கு (தூஃபான்)
புயல்கள் அனுபவம் உடையவராக ஆக்கக் கூடிய பறக்கும் கலையின் (தோஃபா)
பரிசாக ஆகி விட வேண்டும்
- லிஃட்டின் கிஃப்ட்
(பரிசு) ஆகி விட வேண்டும்.
இதற்குத் தான் அகண்ட சாந்தி என்று கூறப்படுகிறது. எனவே அகண்ட சாந்திமயமான சுய இராஜ்யம் உள்ளதா?
என்று செக் செய்யுங்கள். அதே போல செல்வம் என்றால், சுய இராஜ்யத்தின் செல்வம்,
ஞானம், குணம் மற்றும் சக்திகள் ஆகும். இந்த அனைத்து செல்வங்களிலும் நிறைந்த சுய இராஜ்ய அதிகாரி ஆவீர்களா? நிறைந்த நிலையின் அடையாளம்
- சம்பன்னதா என்றால் எப்பொழுதுமே திருப்தி
- அப்ராப்தி என்ற பெயர் அடையாளம் இல்லாத நிலை.
எல்லைக்குட்பட்ட இச்சைகளின் அவித்யா - இச்சைகள் என்றால் என்னவென்றே அறியாத நிலை
- இதற்கு தான் செல்வந்தர் என்று கூறப்படுகிறது. மேலும் இராஜா என்பதன் பொருளே வள்ளல்.
ஒரு வேளை எல்லைக்குட்பட்ட இச்சை அல்லது பிராப்தியின் உற்பத்தி உள்ளது என்றால், அவர் இராஜா விற்கு பதிலாக வேண்டுபவராக ஆகி விடுகிறார்.
எனவே தங்களது சுய இராஜ்ய அதிகாரத்தை நல்ல முறையில் செக் செய்யுங்கள் - எனது சுய இராஜ்யம் ஒரு இராஜ்யம் ஒரு தர்மம்,
சுகம், சாந்தியில் நிறைந்ததாக ஆகி உள்ளதா? இல்லை இதுவரையும் ஆகிக் கொண்டு இருக்கிறதா?
ஒரு வேளை இராஜா ஆகிக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால், இராஜ்ய அதிகாரியின் நிலை இல்லாதிருக்கும் நேரத்தில் அப்பொழுது என்னவாக ஆகி விடுகிறீர்கள். பிரஜை ஆகி விடுகிறீர் களா?
இல்லை இராஜாவும் இல்லை பிரஜையும் இல்லை, நடுவில் இருக்கிறீர்களா? இப்பொழுது நடுவில் இருக்காதீர்கள். இப்படியும் யோசிக்காதீர்கள் - கடைசியில் ஆகி விடுவோம் என்று.
வெகுகால இராஜ்ய பாக்கியம் அடையவே வேண்டும் என்றால்,
வெகுகால சுய இராஜ்யத்தின் பலனாவது வெகுகாலத்தின் இராஜ்யம்.
(ஃபுல்) முழு சமயத்தின் இராஜ்ய அதிகாரத்திற்கான ஆதாரம் நிகழ்காலத்தில் சதா காலத்தின் சுய இராஜ்யம் ஆகும்.
புரிந்ததா? ஒரு பொழுதும் கவனக் குறைவானவர் ஆகி விடாதீர்கள். ஆகி விடும், ஆகி விடும் என்று கொண்டே இருந்து விடாதீர்கள். பாப்தாதாவை மிகவுமே இனிமையான விஷயங்களால் மகிழ்விக்கிறார்கள். இராஜாவிற்கு பதிலாக மிகவுமே உயர்தரமான வக்கீல் ஆகி விடுகிறார்கள். என்னென்ன மாதிரி (லா பாயிண்ட்ஸ்) சட்டக் குறிப்புக்களை கூறுகிறார்கள் என்றால் தந்தை கூட புன்முறுவலித்துக் கொண்டே இருக்கிறார்.
வக்கீலாக இருப்பது நல்லதா? இல்லை இராஜாவாக இருப்பது நல்லதா? மிகவுமே புத்திசாலித்தனத்துடன் வாதாடுகிறார்கள். எனவே இப்பொழுது வாதாடுவதை விட்டு விடுங்கள். இராஜா செல்லம் ஆகுங்கள்.
தந்தைக்கு குழந்தைகளிடம் சிநேகம் உள்ளது.
எனவே கேட்டுக் கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கையிலும் கூட புன்முறுவலித்துக் கொண்டே இருக்கிறார்.
இப்பொழுது தர்மராஜரிடம் வேலை வாங்குவதில்லை.
சிநேகம் அனைவரையும் நடத்தி கொண்டிருக்கிறது. சிநேகத்தின் காரணமாகத் தான் வந்து சேர்ந்துள்ளீர்கள் அல்லவா?
எனவே சிநேகத்திற்கு பதிலாக, பாப்தாதா கூட பதிலாக கோடி மடங்கு சிநேகம் கொடுத்துக் கொண்டிருக்கிறார். தேச விதேசத்தின் அனைத்து குழந்தைகளுமே சிநேகம் என்ற விமானத்தின் மூலமாக மதுபன் வந்து சேர்ந்துள்ளீர்கள். பாப்தாதா சாகார ரூபத்தில் உங்கள் அனைவரையும் மேலும் சிநேக சொரூபத்தில் அனைத்து குழந்தைகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். நல்லது.
அனைத்து சிநேகத்தில் மூழ்கி இருக்கும் நெருங்கிய குழந்தைகளுக்கு அனைத்து சுய இராஜ்ஜிய அதிகாரி மற்றும் உலக இராஜ்ய அதிகாரியான சிறந்த ஆத்மாக்களுக்கு அனைத்து பிராப்தி களில் நிறைந்த சிறந்த செல்வந்தர்களான விசேஷ ஆத்மாக்களுக்கு சதா ஒரு தர்மம், ஒரு இராஜ்யத்தில் நிறைந்த சுய இராஜ்ய அதிகாரி தந்தைக்கு சமானமான பாக்கியவான் ஆத்மாக் களுக்கு பாக்கிய விதாதா பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.
தாதிகளுடன் சந்திப்பு: எல்லா காரியங்களும் நன்றாக நடந்து கொண்டிருக்கின்றன அல்லவா?
நல்ல ஊக்கம் உற்சாகத்துடன் காரியம் ஆகிக் கொண்டிருக்கிறது. செய்விப்பவர் செய்வித்துக் கொண்டிருக்கிறார். மேலும்
(நிமித்தமாக) கருவியாக ஆகி செய்பவர்கள் செய்து கொண்டிருக் கிறார்கள். இவ்வாறு அனுபவம் ஏற்படுகிறது அல்லவா? அனைவரின் ஒத்துழைப்பு என்ற விரல் மூலமாக ஒவ்வொரு காரியமும் சுலபமாகவும் வெற்றிகரமாகவும் நடந்து விடுகிறது.
எப்படி ஆகிக் கொண்டிருக்கிறது என்பது மாயா ஜாலமாக தோன்றுகிறது அல்லவா?
உலகத்தாரோ பார்த்தபடியே யோசித்தபடியே இருந்து விடுகிறார்கள். மேலும் நிமித்த ஆத்மாக்களாகிய நீங்கள் எப்பொழுதும் முன்னேறிக் கொண்டே செல்வீர்கள். ஏனெனில் கவலையில்லாத சக்கரவர்த்தி ஆவீர்கள். உலகத்தாருக்கோ ஒவ்வொரு அடியிலும் கவலை இருக்கிறது.
மேலும் உங்கள் அனைவருடைய ஒவ்வொரு எண்ணத்திலும் பரமாத்ம சிந்தனை உள்ளது.
எனவே கவலை யற்று இருக்கிறீர்கள். கவலையற்றவர்கள் ஆவீர்கள் அல்லவா? நல்லது.
அவினாஷி சம்பந்தம் ஆகும். நல்லது.
ஆக எல்லாமே சரியாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் நடந்தே ஆக வேண்டியுள்ளது. நம்பிக்கை
(நிச்சயம்) உள்ளது.
மேலும் கவலையற்று
(நிச்சிந்தை) இருக்கிறீர்கள். என்ன ஆகுமோ?
எப்படி ஆகுமோ?
இந்த கவலை கிடையாது. டீச்சர்களுக்கு ஏதாவது கவலை இருக்கிறதா? சென்டர்கள் எப்படி அதிகரிக்கும்,
இந்த கவலை இருக்கிறதா? சேவை எப்படி அதிகரிக்கும்,
இந்த கவலை இருக்கிறதா? இல்லையா?
கவலையற்றவர் ஆவீர்களா?
சிந்தனை செய்வது என்பது தனி விஷயம். சிந்த்தா -
கவலைப்படுவது என்பது தனி விஷயம்.
சேவையை அதிகரிப் பதற்கான சிந்தனை
- அதாவது பிளான்
(திட்டத்தை) தாராளமாக அமையுங்கள். ஆனால் கவலைப்படுவதால் ஒரு பொழுதும் வெற்றி ஏற்படாது. நடத்துபவர் நடத்திக் கொண்டிருக்கிறார். செய்விப்பவர் செய்வித்துக் கொண்டிருக்கிறார். எனவே எல்லாமே சுலபமாக ஆகியே விடும்.
கருவியாக (நிமித்தம்)
ஆகி மட்டுமே எண்ணம், உடல்,
மனம், பொருளை பயனுள்ளதாக ஆக்கிக் கொண்டே செல்லுங்கள்.
எந்த நேரத்தில் எந்த காரியம் ஆகிறதோ, அந்த காரியம் நமது காரியம் ஆகும்.
நமது காரியம் என்னும் பொழுது
- எனது காரியம் ஆகும். எனவே எங்கு எனது என்ற தன்மை உள்ளதோ, அங்கு எல்லாமே இயல்பாகவே ஈடுபட்டு விடுகிறது.
எனவே இப்பொழுது பிராமண குடும்பத்தினுடைய விசேஷ காரியம் எது. டீச்சர்கள் கூறுங்கள். பிராமண பரிவாரத்தினுடைய விசேஷ காரியம் இப்பொழுது எதுவாக இருக்கிறது?
எதில் பயன்படுத்த போகிறீர்கள் (ஞான சரோவரில்), சரோவரில்
(குளத்தில்) எல்லாம் ஸ்வாஹா செய்வீர்கள்.
பரிவாரத்தில் ஏதாவது விசேஷ காரியம் ஏற்பட்டால், எல்லாருடைய அட்டென்ஷன் (கவனம்)
எங்கே போகிறது?
அதே விசேஷ காரியத்தின் பக்கம் அட்டென்ஷன் இருக்கும்.
பிராமண பரிவாரத்தில் பெரியதிலும் பெரிய காரியம் நிகழ்காலத்தில் இதுவாகத் தான் இருக்கிறது அல்லவா?
ஒவ்வொரு நேரத் தினுடையதும் அதன் அதன் காரியம் இருக்கும். நிகழ்காலத்தில் தேச விதேசத்தின் அனைத்து பிராமண பரிவாரத்தின் சகயோகம் இந்த விசேஷ காரியத்தில் இருக்கிறது அல்லவா? இல்லை அவரவர் சென்டரில் இருக்கிறதா? எவ்வளவு பெரிய காரியமோ,
அவ்வளவு பெரிய மனது. மேலும் எவ்வளவு பெரிய மனது இருக்குமோ,
அவ்வளவு இயல்பாகவே நிறைந்த நிலை
(சம்பன்னதா) ஏற்பட்டு விடுகிறது. ஒரு வேளை குறுகிய மனம் இருந்தது என்றால், எது வரவேண்டி இருக்கிறதோ,
அதுவும் நின்று விடுகிறது. எது நடக்க வேண்டி இருக்கிறதோ, அதுவும் நின்று விடுகிறது.
மேலும் பெரிய மனது இருந்தது என்றால் நடக்க முடியாத காரியம் கூட நடக்கக் கூடியதாக ஆகி விடுகிறது. மதுபனின் ஞான சரோவர் ஆகுமா? இல்லை உங்களுடையதா? யாருடையது?
மதுபனினுடை யது அல்லவா? குஜராத்தினுடையது ஒன்றும் இல்லையா?
மதுபனினுடையதா? மகாராஷ்டிரத் தினுடையதா? விதேசத்தினுடையதா? எல்லாருடையது ஆகும்.
எல்லையில்லாத சேவை யின் எல்லையில்லாத இடம். அநேக ஆத்மாக்களுக்கு எல்லையில்லாத ஆஸ்தி அறிவிக்கக் கூடியது ஆகும்.
சரி தானே நல்லது.
அவ்யக்த பாப்தாதாவின் தனிப்பட்ட சந்திப்பு.
1.
சுயமாற்றத்தின் (வைப்ரேஷன்) அதிர்வலையே உலக மாற்றம் செய்விக்கும்.
அனைவரும் தங்களை குஷி என்ற அதிர்ஷ்டம் உடைய ஆத்மாக்கள் என்று அனுபவம் செய்கிறீர்களா? குஷியின் பாக்கியம் என்பது கனவில் கூட இருக்கவில்லை.
அதை பெற்று விட்டீர்கள். எனவே எல்லாரையும் விட மகிழ்ச்சி என்ற அதிர்ஷ்டம் உடையவர் யாரென்றால், அது நான் தான் ஆவேன் என்று எல்லோருடைய இதயங்களும் எப்பொழுதும் இதே கீதம் பாடுகிறது.
இது மனதினுடைய கீதம் ஆகும்.
வாயால் கீதம் பாடுவதற்கோ உழைப்பு செய்ய வேண்டி உள்ளது. ஆனால் மனதினுடைய கீதம் எல்லோராலும் பாட முடியும். எல்லாவற்றை யும் விட பெரியதிலும் பெரிய பொக்கிஷம் குஷியின் பொக்கிஷம் ஆகும்.
ஏனெனில் எப்பொழுது பிராப்தி ஏற்படுகிறதோ,
அப்பொழுது குஷி ஏற்படுகிறது. அப்ராப்தி
(அடையப் பெறாதது)
என்று இருந்தால்,
யார் எவ்வளவு தான் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கூறினாலும் எவ்வளவு தான் செயற்கையாக குஷியாக இருப்பதற்கு முயற்சி செய்தாலும் சரி,
ஆனால் குஷியாக இருக்க முடியாது.
எனவே நீங்கள் எப்பொழுதும் குஷியாக இருக்கிறீர்களா? இல்லை அவ்வப்பொழுது இருக்கிறீர்களா? நாங்கள் பகவானின் குழந்தைகள் ஆவோம் என்று (சேலஞ்)
சவால் விடுகிறீர்கள் என்றால் எங்கு பகவான் இருக்கிறாரோ,
அங்கு ஏதாவது அப்ராப்தி இருக்க முடியுமா? எனவே குஷி கூட எப்பொழுதும் இருக்கிறது.
ஏனெனில் சதா சர்வ பிராப்தி சொரூபம் ஆவீர்கள்.
பிரம்மா தந்தையின் பாடல் என்னவாக இருந்தது? எதை அடைய வேண்டுமோ,
அதை அடைந்து விட்டேன் - ஆக இது பிரம்மா தந்தையின் பாடல் மட்டுமே ஆகுமா?
இல்லை உங்கள் அனைவரினுடையதா? அவ்வப்பொழுது கொஞ்சம் துக்கத்தின் அலைகள் வந்து விடுகிறதா? எது வரை வரும்?
இப்பொழுது சிறிது நேரம் கூட துக்கத்தின் அலை வரக் கூடாது.
உலக மாற்றத்திற்கு நிமித்தமாக ஆகி உள்ளீர்கள் என்றால்,
உங்களுடைய இந்த மாற்றத்தை உங்களால் செய்ய முடியாதா?
இப்பொழுதும் (டைம்)
நேரம் வேண்டுமா?
ஃபுல் ஸ்டாப்
- முற்றுப் புள்ளி இடுங்கள். இப்பேர்ப்பட்ட சிறந்த நேரம்,
சிறந்த பிராப்திகள்,
சிறந்த சம்பந்தம் முழு கல்பத்திலும் கிடைக்காது. எனவே முதலில் சுய மாற்றம் செய்யுங்கள்.
இந்த சுய மாற்றத்தின் வைப்ரேஷன் தான் உலக மாற்றம் செய்விக்கும்.
(டபிள் விதேஷி)
இரட்டை வெளி நாட்டினரின் விசேஷ தன்மையாவது (ஃபாஸ்ட் லைஃப்) வேகமான வாழ்க்கை. எனவே மாற்றத்தில் (ஃபாஸ்ட்)
வேகமாக இருக்கிறீர்களா? (ஃபாரினில்) வெளி நாட்டில் யாராவது தளர்ந்து தளர்ந்து நடக்கிறார் என்றால் அது நல்லதாக படுவதில்லை அல்லவா?
எனவே இதே விசேஷத்தன்மையை மாற்றம் செய்வதில் கொண்டு வாருங்கள் நன்றாக இருக்கிறீர்கள். முன்னேறிக் கொண்டு இருக்கிறீர்கள். மேலும் முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள்.
கண்டறிவதற்கான பார்வை மிகவும் கூர்மையாக உள்ளது. அதன் காரணமாக தந்தையை அடையாளம் கண்டு கொண்டு விட்டீர்கள்.
இப்பொழுது புருஷார்த்தத்தில் கூட தீவிரத் தன்மை, சேவையில் கூட தீவிர தன்மை, மேலும் குறிக்கோளை நோக்கி சம்பூர்ணம் ஆகி போய் சேருவதில் கூட தீரவிர தன்மை எடுத்து வாருங்கள். முதல் நம்பரில் வர வேண்டும் அல்லவா?
எப்படி பிரம்மா தந்தை முதல் நம்பரில் வந்தார் அல்லவா? எனவே பிரம்மா தந்தையின் துணையாளர்களாக ஆகி முதல் நம்பருடன் கூட நீங்களும் முதல் நம்பரில் வாருங்கள். பிரம்மா தந்தையிடம் அன்பு இருக்கிறது அல்லவா?
நல்லது. தாய்மார்கள் அற்புதம் செய்வீர்கள் அல்லவா? எதை உலகம் செய்ய முடியாதது என்று நினைக்கிறதோ, அதை நீங்கள் சுலபமாக ஆக்கி காண்பித்து விட்டீர்கள். அப்பேர்ப்பட்ட அதிசயம் செய்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?
தாய்மார்கள் பலவீனமானவர்கள் எதுவுமே அவர்களால் செய்ய முடியாது என்று உலகத்தார் நினைக்கிறார்கள். நீங்கள் முடியாததை முடியுமாறு செய்து உலக மாற்றத்தில் எல்லோரையும் விட முன்னால் சென்று கொண்டிருக்கிறீர்கள். பாண்டவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? நடக்க முடியாததை நடக்குமாறு செய்து கொண்டிருக்கிறீர்கள் அல்லவா?
தூய்மையின் கொடியை பறக்க விட்டுள்ளீர்கள் அல்லவா? கையில் நல்ல முறையில் கொடியை பிடித்துள்ளீர்களா? இல்லை சில நேரங்களில் கீழே வந்து விடுகிறதா?
எப்பொழுதுமே தூய்மையின் சவாலுக்கான கொடியை பறக்க வைத்துக் கொண்டே இருங்கள்.
2.
தினமும் அமிருதவேளை கம்பைண்டு - இணைந்த சொரூபத்தின் நினைவினுடைய திலகத்தை வைத்துக் கொள்ளுங்கள்.
எப்பொழுதுமே தங்களை சகஜயோகி என்று அனுபவம் செய்கிறீர்களா? எவ்வளவு தான் நிலைமைகள் கடினமான அனுபவம் செய்விக்க கூடியதாக இருந்தாலும் சரி, ஆனால் கடினமானதை கூட சுலபமாக ஆக்கி விடக் கூடிய சகஜயோகி ஆவீர்கள்.
அவ்வாறு இருக்கிறீர் களா? இல்லை கடினமான நேரங்களில் கடினம் என்று அனுபவம் ஆகிறதா?
எப்பொழுதும் சுலபமாக இருக்கிறதா? கடினமாக ஆகி விடுவதற்கான காரணமாவது தந்தையின் துணையை விட்டு விடுகிறீர்கள். தனியாக ஆகி விடும் பொழுது பின் பலவீன மாக ஆகி விடுகிறீர்கள். மேலும் பலவீனமானவருக்கோ சுலபமான விஷயம் கூட கடினமாக படுகிறது. எனவே எப்பொழுதும் (கம்பைண்டு)
இணைந்த ரூபத்தில் இருங்கள் என்று பாப்தாதா முன்பேயும் கூறியுள்ளார். கம்பைண்டு
- இணைந்திருப்பவர்களை யாரும் பிரிக்க முடியாது.
எப்படி இச்சமயத்தில் ஆத்மா மற்றும் சரீரம் (கம்பைண்டு)
இணைந்து இருக் கிறதோ, அதே போல தந்தை மற்றும் நீங்கள் கம்பைண்டு - இணைந்து இருங்கள். தாய்மார்கள் என்ன நினைக் கிறீர்கள்? கம்பைண்டு
- இணைந்து இருக்கிறீர்களா? இல்லை சில நேரங்களில் தனியாக இருக்கிறீர்கள், சில நேரங்களில் கம்பைண்டு
- இணைந்து இருக்கிறீர்களா? இப்பேர்ப்பட்ட துணை இனி எப்பொழுதாவது கிடைக்குமா? பிறகு ஏன் துணையை விட்டு விடுகிறீர்கள்? வேலை தான் என்ன கொடுத்துள்ளார்? மேரா பாபா
- என்னுடைய பாபா என்பதை மட்டுமே நினைவில் கொள்ளுங்கள் என்று. இதை விட சுலபமான வேலை என்னவாக இருக்கும்? கடினமா?
(63 பிறவிகளின் சம்ஸ்காரம் உள்ளது). இப்பொழுதோ புதிய ஜென்மம் ஆகி விட்டது அல்லவா? புதிய ஜென்மம், புதிய சம்ஸ்காரம் - இப்பொழுது பழைய ஜென்மத்தில் இருக்கிறீர்களா? இல்லை புதிய ஜென்மத்தில் இருக்கிறீர்களா? இல்லை,
பாதி பாதியாக இருக்கிறதா? எனவே புதிய ஜென்மத்தில்
(ஸ்மிருதி) நினைவின் சம்ஸ்காரம் உள்ளதா?
இல்லை (விஸ்மிருதி)
மறதியின் சம்ஸ்காரம் உள்ளதா? பிறகு புதியதை விட்டு விட்டு பழையதில் ஏன் செல்கிறீர்கள்? புதிய பொருள் நல்லதாக இருக்குமா?
இல்லை பழைய பொருள் நல்லதாக தோன்றுகிறதா? பிறகு பழையதில் ஏன் சென்று விடுகிறீர்கள்? தினமும் அமிருதவேளை சுயம் தங்களுக்கு பிராமண வாழ்க்கையின் நினைவின் திலகத்தை இட்டுக் கொள்ளுங்கள்.
எப்படி பக்த ஜனங்கள் அவசியம் திலகமிடுகிறார்கள். அதே போல நீங்கள் ஸ்மிருதியின் (நினைவு)
திலகம் இடுங்கள்.
அப்படியும் பாருங்கள் தாய்மார்கள் திலகம் இடுகிறார்கள் என்றால் அந்த துணையின் திலகம் இடு கிறார்கள். எனவே நாங்கள் கம்பைண்டு ஆவோம் என்பதை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள் மற்றும் இந்த துணையின் திலகத்தை எப்பொழுதும் இட்டுக் கொள்ளுங்கள்.
தம்பதிகளாக இருந்தால் திலகம் வைப்பார்கள்.
தம்பதிகளாக இல்லையென்றால் திலகம் வைக்க மாட்டார்கள். இது கூட இருப்பதற்கான திலகம் ஆகும்.
எனவே தினமும் நினைவின் திலகம் இட்டுக் கொள்கிறீர்களா? இல்லை மறந்து விடுகிறதா? சில நேரங்களில் திலகம் இடுவது மறந்து போய் விடுகிறது.
சில நேரங்களில் அழிந்து விடுகிறது.
யார் சுமங்கலியாக இருப்பார்களோ, கூட இருக்கிறார் என்றால் அவரை ஒரு பொழுதும் மறக்க மாட்டார்கள். எனவே துணைவரை எப்பொழுதும் கூட வைத்திருங்கள்.
இந்த குரூப் அழகான பூச்செண்டு ஆகும். பல்வேறு விதமான (வெரைட்டி)
மலர்களின் பூச்செண்டு அழகானதாக படுகிறது.
எனவே அனைவரும் யாரெல்லாம் எங்கிருந்து வந்திருந் தாலும் சரி, அனைவரும் ஒருவரை விட ஒருவர் பிரியமானவர்கள் ஆவார்கள். எல்லோரும் திருப்தியுடன் இருக்கிறீர்கள் அல்லவா? சதா கூட இருக்கிறீர்கள், மேலும் சதா திருப்தியாக இருக்கிறீர்கள். அவ்வளவே. இதே கம்பைண்டு என்ற ஒரேயொரு வார்த்தையை எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள், மேலும் எப்பொழுதுமே கம்பைண்டு
- இணைந்தவராக இருந்து கூடவே செல்வோம்.
ஆனால் கூட இருந்தீர்கள் என்றால் தான் கூட செல்வீர்கள். கூட இருக்க வேண்டும்,
கூட செல்ல வேண்டும். யார் மீது அன்பு இருக்கிறதோ, அவரிடமிருந்து பிரிந்து இருக்கவே முடியாது. ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு எண்ணத்திலும் கூட இருக்கவே இருக்கிறார்.
நல்லது.
வரதானம்:
பேலன்ஸ் - சமநிலையின்
விசேஷத் தன்மையை
தாரணை செய்து
அனைவருக்கும் பிளெஸ்ஸிங்
- ஆசிகளை அளிக்கக்
கூடிய சக்திசாலி
சேவாதாரி ஆவீர்களாக.
இப்பொழுது சக்திசாலி ஆத்மாக்களாகிய உங்களுடைய சேவை ஆவது அனை வருக்கும் பிளெஸ்ஸிங் - ஆசிகள் கொடுப்பது. கண்களால் கொடுத்தாலும் சரி, நெற்றியின் மணி மூலமாக கொடுத்தாலும் சரி. எப்படி சாகாரத்தை (பிரம்மா பாபா) கடைசி கர்மாதீத நிலையின் பொழுது பார்த்தீர்கள் - எப்படி பேலன்ஸ் - சமநிலையின் விசேˆத் தன்மை இருந்தது, மேலும் பிளெஸ்ஸிங் - ஆசிகளின் அற்புதம் இருந்தது. எனவே ஃபாலோ பாதர் - தந்தையை பின்பற்றுங் கள். இதுவே சகஜமான மற்றும் சக்திசாலி சேவை ஆகும். இதில் சமயமும் குறைவு, உழைப்பும் குறைவு, மேலும் ரிசல்ட் அதிகமாக வெளிப்படுகிறது. எனவே ஆத்மீக சொரூபத்தால் அனைவருக்கும்
பிளெஸ்ஸிங் - ஆசிகள் கொடுத்துக் கொண்டே செல்லுங்கள்.
சுலோகன்:
விஸ்தாரத்தை ஒரு நொடியில் உள்ளடக்கி ஞானத்தின் சாரத்தினை அனுபவம் செய்விப்பது
தான் லைட் - மைட் ஹவுஸ் ஒளி மற்றும் சக்தியின் இருப்பிடம் ஆவது ஆகும்.
அறிவிப்பு: இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிறு ஆகும்.
அனைத்து இராஜயோகி தபஸ்வி சகோதர சகோதரிகள் மாலை
6.30 முதல் 7.30 வரை விசேஷ யோக அப்பியாசத்தின் பொழுது லைட் மைட் சொரூபத்தில் நிலைத்திருந்து லைட் ஹவுஸ் ஆகி முழு உலக உருண்டை மீதும் சாந்தி மற்றும் சக்தியின் சகாஷ் பரப்பவும்.
0 Comments