Header Ads Widget

Header Ads

TAMIL MURLI 13.01.23

 

13-01-2023  காலை முரளி  ஓம் சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



இனிமையான குழந்தைகளே! இங்கு நீங்கள் சுகம்-துக்கம், மானம்-அவமானம் அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும், பழைய உலகின் சுகங்களை புத்தியினால் நீக்கி விட வேண்டும், தனது வழிப்படி நடக்கக் கூடாது.

கேள்வி:

தேவதைகளின் பிறப்பை விட இந்த பிறப்பு மிகவும் நல்லது, எப்படி?

பதில்:

இந்த பிறவியில் குழந்தைகளாகிய நீங்கள் சிவபாபாவின் பண்டாராவிலிருந்து (பண்டக சாலை) சாப்பிடுகிறீர்கள். இங்கு நீங்கள் அளவற்ற வருமானம் செய்கிறீர்கள், நீங்கள் தந்தையின் சரணத்தை அடைந்திருக்கிறீர்கள். இந்த பிறவியிலேயே நீங்கள் தனது லௌகீக்-பரலௌகீ கத்தை சுகமானதாக ஆக்குகிறீர்கள். சுதாமாவைப் போன்று இரண்டு பிடி கொடுத்து 21 பிறவி களுக்கான இராஜ்யத்தை அடைகிறீர்கள்.

பாடல்:  அருகில் இருந்தாலும், தூரத்தில் இருந்தாலும் ...... 

ஓம்சாந்தி. பாட்டின் பொருள் எவ்வளவு நன்றாக இருக்கிறது! இந்த சரீரத்தின் அருகிலிருந் தாலும், தூரத்தில் இருந்தாலும் யோகாவிற்கான கல்வி எதிரில் கொடுத்துக் கொண்டிருக் கின்றார் என்பதை தந்தை அமர்ந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார். பிரேரணையின் மூலம் (தூண்டுதல்) கொடுக்கமாட்டார் அல்லவா! நான் அருகில் இருந்தாலும், தூரத்தில் இருந்தாலும், என்னைத் தான் நினைவு செய்ய வேண்டும். பகவானிடம் செல்வதற்காகவே பக்தி செய்கின்றனர். ஹே ஜீவ ஆத்மாக்களே! இந்த சரீரத்தில் வசிக்கக் கூடிய ஆத்மாக்களே! ஆத்மாக்களுடன் பரம்பிதா பரமாத்மா அமர்ந்து உரையாடுகின்றார் என்பதை தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். பரமாத்மாவை ஆத்மாக்கள் அவசியம் சந்திக்க வேண்டும், அதனால் தான் ஜீவாத்மாக்கள் பகவானை நினைவு செய்கின்றன. ஏனெனில் துக்கமாக இருக்கின்றன. சத்யுகத் தில் யாரும் நினைவு செய்யமாட்டார்கள். நாம் மிகவும் பழைய பக்தர்கள் என்பதை இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். எப்போது மாயை நம்மை பிடித்துக் கொண்டதோ அப்போதிலிருந்து பகவானை, சிவனை நினைக்க ஆரம்பித்து விட்டோம். ஏனெனில் சிவபாபா நம்மை சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்கியிருந்தார். ஆக அவரது நினைவுச் சின்னத்தை உருவாக்கி பக்தி செய்கிறோம். அழைத்துச் செல்ல தந்தை எதிரில் வந்திருக்கின்றார் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் இப்போது தந்தை யிடம் செல்ல வேண்டும். எதுவரை இங்கு இருப்போமோ அது வரை பழைய சரீரத்தை, பழைய உலகை புத்தியிலிருந்து மறந்து விட வேண்டும். மேலும் யோகாவில் இருக்க வேண்டும். ஆக இந்த யோக அக்னியின் மூலம் பாவங்கள் அழியும். பதவியும் மிக உயர்ந்தது. உலகிற்கு எஜமானர்களாக ஆக வேண்டும். உலகிற்கு எஜமான் சிவபாபா என்று மனிதர்கள் கூறுகின்றனர். ஆனால் கிடையாது. உலகிற்கு எஜமானர்களாக மனிதர்கள் தான் ஆகின்றனர். தந்தை அமர்ந்து குழந்தைகளை உலகிற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். நீங்கள் தான் உலகிற்கு எஜமானர்களாக இருந்தீர்கள், பிறகு 84 பிறவிகள் எடுத்து எடுத்து இப்போது சோழிக்கும் கூட எஜமானர்களாக இல்லாமல் இருக்கிறீர்கள் என்று கூறுகின்றார். முதல் பிறப்பு மற்றும் இப்போதைய கடைசிப் பிறப்பை பாருங்கள் - எவ்வளவு இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது! எதுவரை தந்தை வந்து சாட்சாத் காரம் செய்விக்க வில்லையோ! யாருடைய நினைவிலும் வர முடியாது. ஞான புத்தியினாலும் சாட்சாத்காரம் ஏற்படும். எந்த குழந்தைகள் புத்திசாலிகளாக உள்ளனரோ மற்றும் தினமும் தந்தையை நினைவு செய் றார்களோ அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும். இங்கு நீங்கள் அனைத்து புதிய விசயங்களையும் கேட்கிறீர்கள். மனிதர்கள் எதையும் அறியவில்லை. அவர்கள் கட்டுக் கதைகளை கூறிக் கொண்டிருக்கின்றனர் மற்றும் பல இடங்களுக்குச் (கோவில் கோவிலாக) சென்று ஏமாற்றம் அடைந்து கொண்டிருக்கின்றனர். ஏமாற்றம் அடைவதிலிருந்து நீங்கள் விடுவிக்கப்படுகிறீர்கள். நீங்கள் ஆத்மாக்கள், என்னை நினைவு செய்து கொண்டே இருங்கள் என்று தந்தை கூறுகின்றார். ஆத்மாக்களாகிய நாம் தந்தையிடம் செல்ல வேண்டும், இந்த உலகம் நம்முடையது கிடையாது என்ற சிந்தனை மட்டுமே புத்தியில் இருக்க வேண்டும். இந்த பழைய உலகம் அழிந்து போய்விடும். பிறகு நாம் சொர்க்கத்திற்கு வந்து புது மாளிகை கட்டுவோம். இரவு பகல் இது புத்தியில் ஓடிக் கொண்டிருக்க வேண்டும். தந்தை தனது அனுபவத்தை கூறுகின்றார். இரவு தூங்கும் போது இதே எண்ணங்கள் ஓடுகின்றன. இந்த நாடகம் இப்போது முடிவடைகிறது, இந்த பழைய ஆடையை விட்டு விட வேண்டும். ஆம், விகர்மத்தின் சுமைகள் அதிகம் இருக்கிறது. ஆகையால் நிரந்தரமாக பாபாவை நினைவு செய்ய வேண்டும். தனது மனநிலையை கண்ணாடியில் பார்க்க வேண்டும் - எனது புத்தி அனைத்திலிருந்தும் விடுபட்டு இருக்கிறதா? தொழில் போன்றவைகளில் இருந்தாலும் புத்தியினால் காரியம் செய்ய முடியும். பாபாவிற்கு எவ்வளவு கவலை இருக்கிறது! எவ்வளவு குழந்தைகள் இருக்கின்றனர்! அவர் களை பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது. குழந்தைகளுக்கு அடைக்கலம் (சரணம்) கொடுக்க வேண்டும். துக்கமானவர்கள் பலர் இருக்கின்றனர் அல்லவா! குழப்ப நிலை ஏற்படும் போது எத்தனை பேர் துக்கப்பட்டு இறக்கின்றனர்! இந்த கால கட்டம் மிகவும் கெட்டது. ஆக குழந்தைகளுக்கு புகலிடம் கொடுப்பதற்காக இந்த கட்டடங்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இங்கு இருப்பவர்கள் அனைவருமே எனது குழந்தைகள் தான். எந்த பயமும் கிடையாது, பிறகு யோக பலமும் இருக்கிறது. குழந்தைகள் சாட்சாத்காரமும் செய்திருக்கிறீர்கள், எந்த குழந்தைகள் தந்தையை நல்ல முறையில் நினைவு செய்கிறார்களோ அவர்களை தந்தை பாதுகாக்கவும் செய்கின்றார். எதிரிகளை பயங்கர ரூபம் காண்பித்து விரட்டி விடுகின்றார். உங்களுக்கு எதுவரை சரீரம் இருக்கிறதோ அதுவரை நினைவில் இருக்க வேண்டும். இல்லையெனில் தண்டனை அடைய வேண்டியிருக்கும். பெரிய மனிதனின் குழந்தை தண்டனை அடையும் போது தலை குனிந்து விடுகிறது. நீங்களும் தலை குனிய வேண்டியிருக்கும். குழந்தை களுக்கு இன்னும் அதிக தண்டனை இருக்கிறது. இப்போது மாயையின் சுகத்தை அடைந்து விடலாம், என்ன நடக்குமோ பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று சிலர் நினைக்கின்றனர். பலருக்கு இந்த பழைய உலகின் சுகம் இனிக்கிறது. இங்கோ சுகம், துக்கம் மானம், அனைத்தையும் சகித்துக் கொள்ள வேண்டி யுள்ளது. உயர்ந்த பலனை விரும்புகிறீர்கள் எனில் பின்பற்ற வேண்டும், தாய், தந்தையின் கட்டளைப்படி நடக்க வேண்டும். தனது வழி என்றால் இராவணனின் வழியாகும். அது அதிர்ஷ்டத்திற்கு வரையறுத்துக் கொள்வதாகவே இருக்கும். தந்தையிடம் கேட்டால் தந்தை உடனேயே இது அசுர வழி, ஸ்ரீமத் கிடையாது என்று கூறிவிடுவார். ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத் பெற வேண்டும். தலைகீழான காரியங்கள் செய்து தந்தைக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவில்லை தானே? என்று சோதிக்க வேண்டும். இப்படிப்பட்ட இலட்சணம் இருக்கும் போது தான் தேவி தேவதையாக ஆக முடியும். அங்கு தானாகவே இலட்சணம் வந்து விடும் என்பது கிடையாது. இங்கு நடத்தைகள் மிகவும் இனிமையானதாக இருக்க வேண்டும். சிவபாபா கூறாமல் பிரம்மா பாபா கூறினாலும் பொறுப்பு இவராக இருப்பார் அல்லவா! ஒருவேளை ஏதாவது நஷ்டம் ஏற்பட்டாலும் பெரிய விசய மில்லை. இது நாடகத்தில் இருந்தது, உங்களது குற்றம் கிடையாது. மனநிலை மிகவும் நன்றாக இருக்க வேண்டும். நீங்கள் இங்கு அமர்ந்திருந்தாலும் நான் பிரம்மாண்டத்திற்கு எஜமான், அங்கு வசிக்கக் கூடியவன் என்பது புத்தியில் இருக்க வேண்டும். இதே போன்று வீட்டில் இருந்தாலும், தொழில் செய்தாலும் விடுபட்டுக் கொண்டே செல்வீர்கள். எவ்வாறு சந்நியாசிகள் இல்லறத்திலிருந்து விடுபட்டு விடுகிறார்களோ! நீங்கள் முழு பழைய உலகிலிருந்து விடுபட்டு விடுகிறீர்கள். அந்த ஹடயோக சந்நியாசத்திற்கும், இந்த சந்நியாசத்திற்கும் இரவு பகல் வித்தியாசம் இருக்கிறது. இந்த இராஜயோகத்தை தந்தை கற்றுக் கொடுக்கின்றார். சந்நியாசி களால் கற்றுக் கொடுக்க முடியாது. ஏனெனில் முக்தி, ஜீவன்முக்தி கொடுக்கும் வள்ளல் ஒரே ஒருவர் ஆவார். அனைவருக்கும் இப்போது முக்தி ஏற்பட வேண்டும், ஏனெனில் அனைவரும் திரும்பிச் செல்ல வேண்டும். நாம் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதற்காக சாதுக்கள் முயற்சி செய்கின்றனர். இங்கு துக்கம் இருக்கிறது. நாம் ஜோதி, ஜோதியுடன் கலந்து விட வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். பல வழிகள் இருக்கின்றன.

சில குழந்தைகளுக்கு பல உறவுகளின் நினைவும் வருகிறது என்று பாபா புரிய வைக் கின்றார். அந்த உலக சுகத்தின் ஆசை ஏற்படுவதால் இவர்கள் இறந்து விடுகின்றனர். பிறகு அவர்களது பாதங்கள் இங்கு நிலைத்திருக்க முடியாது. மாயை நிறைய பேராசைகளை ஏற்படுத்துகிறது. பகவானை நினைவு செய்யுங்கள், இல்லையெனில் மாயை என்ற இராஜாளி (கழுகு) வந்து விடும் என்ற ஒரு கதை இருக்கிறது. இந்த மாயையும் இராஜாளி போன்று யுத்தம் செய்கிறது. தந்தை வந்திருக்கின்றார் எனில் இப்போது முயற்சி செய்து உயர்ந்த பதவி அடையவில்லை எனில் கல்ப கல்பத்திற்கும் அடையமாட்டீர்கள். இங்கு தந்தையிடம் உங்களுக்கு எந்த துக்கமும் கிடையாது, ஆக பழைய, துக்கமான உலகை மறக்க வேண்டும் அல்லவா! முழு நாளின் கணக்கையும் பார்க்க வேண்டும். எவ்வளவு நேரம் தந்தையை நினைவு செய்தேன்? யாருக்கு உயிர்தானம் கொடுத்தேன்? தந்தை உங்களுக்கு உயிர்தானம் கொடுத்திருக்கிறார் அல்லவா! சத்யுகம், திரேதா வரை நீங்கள் அமரர்களாக இருப்பீர்கள். இங்கு யாராவது இறந்து விட்டால் எவ்வளவு கண்ணீர் விட்டு கதறுகின்றனர்! சொர்க்கத்தில் துக்கத்தின் பெயர் கிடையாது. பழைய ஆடையை விடுத்து புதியது எடுக்கிறோம் என்று நினைப்பர். இந்த உதாரணம் உங்களுக்கானது, வேறு யாரும் இந்த உதாரணம் கொடுக்க முடியாது. அவர்கள் பழைய ஆடையை ஒருபோதும் மறப்பது கிடையாது. அவர்கள் செல்வத்தை சேமித்துக் கொண்டே இருக்கின்றனர். இங்கு நீங்கள் தந்தைக்கு கொடுக் கிறீர்கள் எனில் அவர் சுயம் சாப்பிடுவது (பயன்படுத்துவது) அல்லது தன்னிடம் வைத்துக் கொள்வது கிடையாது. அதை பயன்படுத்தி குழந்தைகளைத் தான் பரிபாலனை செய்கின்றார். ஆகையால் இது உண்மையிலும் உண்மையான சிவபாபாவின் பண்டாரா (கிடங்கு) ஆகும், இந்த பண்டாராவில் சாப்பிடுபவர்கள் இங்கும் சுகமானவர்களாக இருக்கின்றனர், பல பிறவிகளாக சுகமானவர்களாக இருப்பர்.

உங்களது இந்த பிறவி மிகவும் கிடைத்தற்கரியது. தேவதைகளின் பிறவியை விட நீங்கள் இங்கு சுகமாக இருக்கிறீர்கள், ஏனெனில் தந்தையின் குழந்தைகளாக இருக்கிறீர்கள். இங்கேயே நீங்கள் அளவற்ற வருமானம் செய்கிறீர்கள். பிறகு அதை பல பிறவிகளுக்கு அனுபவிப்பீர்கள். சுதாமிற்கு இரண்டு பிடி அவலுக்குப் பதிலாக 21 பிறவிகளுக்கு மாளிகை கிடைத்து விட்டது. அந்த லோகமும் பல பிறவிகளுக்கு சுகமானது எனில் பரலோகமும் சுகமானது ஆகும், ஆகையால் இது மிகவும் நல்ல பிறவியாகும். சீக்கிரம் விநாசம் ஏற்பட்டால் நாம் சொர்க்கத் திற்கு சென்று விடலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் இப்போது தந்தையிட மிருந்து பல பொக்கிˆங்களை அடைய வேண்டும். இப்போது இராஜ்யம் உருவாகியிருக்கிறதா என்ன? பிறகு எப்படி சீக்கிரம் விநாசம் செய்விக்க முடியும்? இப்போது குழந்தைகள் தகுதியானவர் களாக ஆகிவிட்டீர்களா என்ன? இப்போது தந்தை குழந்தை களுக்கு கற்பிப்பதற்காக வந்து கொண்டே இருக்கின்றார். பாபாவின் சேவையானது அளவிட முடியாதது. தந்தையின் மகிமையும் அளவிட முடியாதது. எந்த அளவு உயர்ந்த வராக இருக்கிறேனோ அந்த அளவிற்கு உயர்ந்த சேவையும் செய்கின்றேன், அதனால் தான் என்னுடைய நினைவுச் சின்னம் இருக்கிறது. பாபாவின் சிம்மாசனம் தான் உயர்ந்ததிலும் உயர்ந்தது, யார் எவ்வளவு முயற்சி செய்கிறார்களோ, அவர்கள் தங்களது பாக்கியத்தை உருவாக்கிக் கொள்கின்றனர். இது அழிவற்ற ஞான இரத்தினங்களின் வருமானமாகும். இது அங்கு அளவற்ற செல்வமாக ஆகிவிடுகிறது. ஆக குழந்தைகள் மிக நன்றாக முயற்சி செய்ய வேண்டும். தந்தையை இங்கும் நினைவு செய்யுங்கள், அங்கும் (பரம் தாமத்தை) நினைவு செய்யுங்கள். ஏணி இருக்கிறது அல்லவா! நான் தந்தைக்கு எந்த அளவிற்கு நல்ல குழந்தையாக இருக்கிறேன்? என்று உள்ளம் என்ற கண்ணாடி யில் பாருங்கள். கண்ணில்லாதவர்களுக்கு வழி கூறுகிறேனா? தனக்குள் உரையாடிக் கொள்ளும் போது குஷி ஏற்படுகிறது. பாபா தனது அனுபவம் கூறுகிறார் - தூங்கினாலும் உரையாடல் செய் கிறேன். பாபா உங்களது அதிசயம் தான். பிறகு பக்தி மார்க்கத்தில் நாம் உங்களை மறந்து விடுவோம். இவ்வளவு ஆஸ்தி உங்களிடமிருந்து அடைகிறோம், பிறகு சத்யுகத்தில் இதை மறந்து விடுவோம். பிறகு பக்தி மார்க்கத்தில் உங்களது நினைவுச் சின்னம் உருவாக்குவோம். ஆனால் உங்களது தொழிலை முற்றிலும் மறந்து விடுகிறோம். புத்தியற்ற வர்களாக, அஞ்ஞானி போன்று ஆகிவிடுகிறோம். இப்போது தந்தை எவ்வளவு ஞானிகளாக ஆக்கியிருக்கின்றார்! இரவு, பகல் வித்தியாசம் இருக்கிறது. ஈஸ்வரன் எங்கும் வியாபித்து இருக்கின்றார் என்று கூறுவது ஞானமா என்ன? ஞானம் என்றால் சிருஷ்டிச் சக்கரமாகும். இப்போது நாம் 84 பிறவிச் சக்கரத்தை முடித்து திரும்பிச் செல்கிறோம், பிறகு நாம் ஜீவன் முக்திக்கு வர வேண்டும். நாடகத்திலிருந்து சிறிதும் விடுபட முடியாது. நாம் ஜீவன் முக்திக்கான வழிப் போக்கர்கள். நல்லது.

இனிமையிலும் இனிமையான, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீக குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்தே.

இரவு வகுப்பு - 16.12.1968

சிலரை பாபா குழந்தைகள் என்றும், சிலரை தாய்மார்கள் என்றும் கூறுகிறார் எனில் அவசியம் வித்தியாசம் இருக்கும். சிலரது சேவையின் மூலம் நறுமணம் வருகிறது, சிலர் எருக்கம் பூ போன்று இருக்கின்றனர். நீங்கள் என்னிடத்தில் வந்திருக்கிறீர்கள், உலகை தூய்மையாக்கு வதற்காக மேலிருந்து தந்தை வந்திருக்கின்றார். உங்களது கடமையும் இதுவே. அங்கிருந்து யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் தூய்மையாக இருக்கின்றனர். புதிதாக வருபவர்கள் அவசியம் நறுமணம் பரப்புவர். தோட்டத்துடன் ஒப்பிடுகிறார். சேவை எப்படியோ அவ்வாறு நறுமணம். சிவபாபாவின் குழந்தை என்று கூறிக் கொள்கிறீர்கள் எனில் உரிமையாளர் ஆகிவிடு கிறீர்கள் என்று விவேகம் கூறுகிறது. ஆக அந்த நறுமணம் வர வேண்டும். உரிமையாளராக இருப்பதால் தான் அனைவரும் வணங்குகின்றனர். சந்தேக மேயின்றி நீங்கள் தான் உலகிற்கு எஜமானர்களாக இருக்கிறீர்கள், ஆனால் படிப்பில் வித்தியாசம் அதிகம் இருக்கிறது. இவ்வாறு அவசியம் ஏற்படவே செய்யும். இவர் பாபா என்ற நிச்சயம் குழந்தைகளுக்கு ஏற்பட்டு விடுகிறது, சிருஷ்டிச் சக்கரமும் புத்தியில் இருக்கிறது. வேறு அதிகமாக என்ன கூற வேண்டும் என்று தந்தை கேட்கின்றார். தந்தையைத் தவிர வேறு யாரும் சுயதரிசன சக்கரதாரியாக ஆக்க முடியாது. சைகை களினால் (இசாரா) ஆகிறீர்கள். யார் கல்பத்திற்கு முன்பு ஆகியிருந்தார்களோ அவர்களே ஆகின்றனர். பல குழந்தைகள் வருகின்றனர். தூய்மை என்ற விசயத்தில் எவ்வளவு கொடுமைகள் ஏற்படுகின்றன. யார் மூலம் தந்தை கீதை கூறுகிறாரோ அவரை எவ்வளவு திட்டுகின்றனர்! சிவபாபாவையும் திட்டுகின்றனர். ஆமை, மீன் அவதாரம் என்று கூறுவதும் திட்டுவது போன்றதல்லவா! அறியாத காரணத்தினால் தந்தையின் மீது, உங்கள் மீது எவ்வளவு களங்கத்தை ஏற்படுத்துகின்றனர்! குழந்தைகள் தலையை எவ்வளவு உடைத்துக் கொள்கின்றனர்! படிப்பின் மூலம் சிலர் மிகவும் செல்வந்தர்களாக ஆகிவிடுகின்றனர், எவ்வளவு சம்பாதிக்கின்றனர்! ஒவ்வொரு ஆப்ரேசனுக்கும் இரண்டாயிரம், 4 ஆயிரம் கிடைத்து விடுகிறது. சிலருக்கு வீட்டை கவனிக்க முடிவதும் கிடையாது. கவலை இருக் கிறது அல்லவா! சிலர் பல பிறவிக்கான இராஜ்யத்தை அடைகின்றனர். சிலர் பல பிறவி களுக்கு ஏழைகளாக ஆகின்றனர். உங்களை புத்திசாலிகளாக ஆக்குகின்றேன் என்று தந்தை கூறுகின்றார். இப்போது நீங்கள் அனைத்து விசயத்திற்கும் நாடகம் என்று கூறுவீர்கள். அனைவருக்கும் பாகம் இருக்கிறது. எது கடந்து முடிந்ததோ அது நாடகம். நாடகத்தில் எது இருக்கிறதோ அதுவே நடக்கிறது. நாடகப்படி எது நடக்கிறதோ அது சரியே. நீங்கள் எவ்வளவு தான் புரிய வைத்தாலும் புரிந்து கொள்வதே கிடையாது. இதில் நடத்தைகள் நன்றாக இருக்க வேண்டும். எந்த குறையும் கிடையாது தானே? என்று ஒவ்வொருவரும் தனக்குள் பாருங்கள். மாயை மிகவும் கடுமையானது. எப்படியாவது அதை நீக்க வேண்டும். அனைத்து குறைகளையும் நீக்க வேண்டும். அனைவரையும் விட பந்தனமுள்ள தாய்மார்கள் அதிகம் நினைவில் இருக்கின்றனர் என்று தந்தை கூறுகின்றார். அவர்களே நல்ல பதவி அடைகின்றனர். எவ்வளவு அதிகம் அடி வாங்குகிறார்களோ அவ்வளவு அதிகம் நினைவில் இருக்கின்றனர். ஐயோ சிவபாபா என்று வெளிப்படுகிறது. ஞானத்தின் மூலம் சிவபாபாவை நினைவு செய்கின்றனர். அவர்களது சார்ட் நன்றாக இருக்கிறது. இவ்வாறு அடி வாங்கி யார் வருகிறார்களோ அவர்கள் சேவையிலும் நன்றாக ஈடுபட்டு விடுகின்றனர். தனது வாழ்க்கையை உயர்வாக்கிக் கொள்ள நன்றாக சேவை செய்கின்றனர். சேவை செய்யவில்லையெனில் மனம் வருந்துகிறது. நான் சென்று சேவை செய்ய வேண்டும் என்று மனம் விரும்புகிறது. சென்டர் விட்டு விட்டு செல்ல வேண்டி யிருக்கிறது என்று நினைக் கின்றனர், ஆனால் கண்காட்சியில் சேவை அதிகமாக இருப்பதால் சென்டரைப் பற்றியும் நினைக்காமல் செல்ல வேண்டும். எந்த அளவிற்கு நாம் தானம் செய்வோமோ அந்த அளவிற்கு பலமும் நிறைந்து கொண்டே இருக்கும். அவசியம் தானமும் செய்ய வேண்டும் அல்லவா! இது அழிவற்ற ஞான இரத்தினம், யாரிடத்தில் இருக்கிறதோ அவர்களே தானம் செய்வார்கள். குழந்தைகளுக்கு இப்போது முழு சிருஷ்டியின் முதல், இடை, கடையின் ஞானம் நினைவிற்கு வந்து விட வேண்டும். முழு சக்கரத்தையும் சுற்ற வேண்டும். தந்தையும் இந்த சிருஷ்டியின் முதல், இடை, கடையை அறிந்தவர். அவசியம் ஞானக் கடலாக இருக்கிறார். சிருஷ்டிச் சக்கரத்தை அறிந்தவர். உலகத்தினருக்கு இந்த ஞானம் முற்றிலும் புதுமையானது, இது ஒரு போதும் பழையதாக ஆவதே கிடையாது. ஆச்சரியமான ஞானம் அல்லவா, இதை தந்தை தான் கூறுகின்றார். எவ்வளவு பெரிய சாது, மகாத்மாவாக இருந்தாலும் ஏணியில் ஏறி மேலே செல்வதே கிடையாது. தந்தையைத் தவிர எந்த மனிதனாலும் கதி, சத்கதி கொடுக்க முடியாது. மனிதனாலும் கொடுக்க முடியாது, தேவதைகளாலும் கொடுக்க முடியாது. ஒரே ஒரு தந்தை மட்டுமே கொடுக்க முடியும். நாளுக்கு நாள் வளர்ச்சி ஏற்பட்டே ஆக வேண்டும். இந்த லெட்சுமி-நாராயணன் சித்திரம், ஏணிப்படியை டிரான்ஸ்லைட்டில் உருவாக்கி அதிகாலையில் சுற்றி வர வேண்டும் என்று பாபாவும் கூறியிருக்கின்றார். ஏதாவது மின்சார சாதனங்களின் மூலம் ஜொலிப்பு வந்து கொண்டே இருக்க வேண்டும். சுலோகனையும் உச்சரித்துக் கொண்டே செல்லுங்கள். சந்நியாசிகள் ஒருபோதும் இராஜயோகம் கற்றுக் கொடுக்க முடியாது. பரம்பிதா பரமாத்மா தான் பாக்கிய ரதத்தின் மூலம் இராஜயோகம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார். நல்லது.

இனிமையிலும் இனிய குழந்தைகளுக்கு இரவு வணக்கம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1) இந்த நாடகம் இப்போது முடிவடைந்து கொண்டிருக்கிறது. ஆகையால் இந்த பழைய உலகிலிருந்து விடுபட்டு இருக்க வேண்டும். ஸ்ரீமத் மூலம் தனது அதிர்ஷ்டத்தை உயர்வாக்கிக் கொள்ள வேண்டும். ஒருபோதும் எந்த தலைகீழான காரியமும் செய்யக் கூடாது.

2) அழிவற்ற ஞான இரத்தினங்களின் வருமானம் செய்ய வேண்டும் மற்றும் செய்விக்க வேண்டும். ஒரு தந்தையின் நினைவில் இருந்து நல்ல குழந்தையாக ஆகி பலருக்கு வழிகூற வேண்டும்.

வரதானம்:

தியாகம் மற்றும் தபஸ்யாவின் சூழ்நிலையின் மூலம் தடைகளை வெல்லக் கூடிய உண்மையான சேவாதாரி ஆகுக.


தந்தையின் மிக உயர்ந்த பட்டம் உலக சேவாதாரி. அதே போன்று குழந்தைகளும் உலக சேவாதாரி ஆவீர்கள். சேவாதாரி என்றால் தியாகி மற்றும் தபஸ்வி. எங்கு தியாகம் மற்றும் தபஸ்யா இருக்கிறதோ, அங்கு பாக்கியமானது அவர்கள் முன் வேலைக்காரன் போன்று வந்து விடும். சேவாதாரிகள் கொடுப்பவர்களாக இருப்பர், பெறுபவர்களாக இருக்கமாட்டார்கள். ஆகையால் சதா தடைகளற்றவர்களாக இருப்பர். எனவே சேவாதாரி என்று புரிந்து கொண்டு தியாகம் மற்றும் தபஸ்யாவின் சூழ்நிலையை உருவாக்குவதன் மூலம் தடைகளை வென்றவர் களாக இருப்பீர்கள்.

சுலோகன்:

எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்கொள்ளக் கூடிய சாதனம் - சுய ஸ்திதியின் சக்தியாகும்.

 Download PDF

Post a Comment

0 Comments