11-01-2023 காலை
முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே!
புத்தியோகத்தை பாபாவிடம்
ஈடுபடுத்திக் கொண்டே
இருப்பீர்களானால் நீண்ட
யாத்திரையை சுலபமாகவே
கடந்து சென்று
விடுவீர்கள்.
கேள்வி:
பாபாவிடம் பலியாவதற்கு
எந்த விஷயத்தின் தியாகம் அவசியம்?
பதில்:
தேக அபிமானம். தேக அபிமானம் வந்தது என்றால் இறந்து விட்டீர்கள்.
நினைவில் கலப்படமாகிறது.
அதனால் பலியாவதில் குழந்தைகளுக்கு இதயம் உடைந்து விடுகிறது. பலியாகி விட்டால் அந்த ஒருவரின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். அவர் மீது தான் பலியாக வேண்டும். அவருடைய ஸ்ரீமத்படி தான் நடக்க வேண்டும்.
பாடல்: இரவு நேரப்பயணி......
ஓம் சாந்தி.
பகவான் வாக்கு
- பகவான் தம்முடைய குழந்தைகளுக்கு இராஜயோகம் மற்றும் ஞானம் கற்றுத் தந்து கொண்டிருக்கிறார். இவர் ஒன்றும் மனிதரல்ல.
கிருஷ்ண பகவான் வாக்கு என்று கீதையில் எழுதப் பட்டுள்ளது. இப்போது ஸ்ரீகிருஷ்ணர் முழு உலகத்தையும் மாயாவிடம் இருந்து விடுவிப்பது என்பது நடக்க முடியாதது. தந்தை வந்து தான் குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார். யார் தந்தையைத் தங்களுடையவராக ஆக்கிக் கொண்டுள்ளனரோ,
மற்றும் தந்தை யின் முன்னிலையில் அமர்ந்துள்ளனரோ, அவர்களுக்குப் புரிய வைக்கிறார்.
கிருஷ்ணர் தந்தை எனச் சொல்லப் படுவதில்லை. தந்தை,
பரமபிதா, பரந்தாமத்தில் இருப்பவர் எனச் சொல்லப் படுகிறார்.
ஆத்மா இந்த சரீரத்தின் மூலம் பகவானை நினைவு செய்கிறது. பாபா அமர்ந்து புரிய வைக்கிறார், நான் உங்களுடைய தந்தை,
பரந்தாமத்தில் வசிக்கிறேன்.
நான் அனைத்து ஆத்மாக் களின் தந்தை ஆவேன்.
கல்பத்திற்கு முன்பும் கூட குழந்தைகளுக்கு வந்து நான் தான் புத்தி யோகத்தை பரமாத்மா என்னிடம் ஈடுபடுத்துங்கள் என்று கற்றுக் கொடுத்தேன். ஆத்மாக் களோடு பேசுகிறேன்.
ஆத்மா எது வரை சரீரத்தில் வரவில்லையோ, அது வரை கண்களால் பார்க்க முடியாது.
காதுகளால் கேட்க முடியாது. ஆத்மா இல்லாமல் சரீரம் ஜடமாகி விடுகிறது.
ஆத்மா சைதன்யமானது.
கர்ப்பத்தில் குழந்தை உள்ளது. ஆனால் எது வரை அதற்குள் ஆத்மா பிரவேசமாகவில்லையோ, அது வரை அசைவு இருக்காது. ஆக,
அத்தகைய சைதன்ய ஆத்மாக்களோடு பாபா உரையாடிக் கொண்டிருக்கிறார். நான் இந்த சரீரத்தை லோனாகப் பெற்றுக் கொண்டிருக்கிறேன் என்று சொல்கிறார்.
நான் வந்து அனைத்து ஆத்மாக்களையும் திரும்ப அழைத்துச் சென்று விடுகிறேன்.
பிறகு முன்பாக இருக்கும் ஆத்மாக்களுக்கு இராஜ யோகம் கற்பிக்கிறேன். இராஜயோகத்தை முழு உலகமும் கற்றுக் கொள்வதில்லை.
கல்பத்திற்கு முன் கற்றவர்கள் தான் இப்போதும் இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டுள்ளனர்.
இப்போது பாபா புரிய வைக்கிறார்,
புத்தியோகத்தை பாபாவிடம் கடைசி வரை ஈடுபடுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
இதில் தடை ஏற்பட்டுவிடக் கூடாது.
ஆண்-பெண் இருக்கின்றனர் என்றால் முதலில் ஒருவர் மற்றவரை அறிந்திருப்பதில்லை. பிறகு எப்போது அவர்களுக்குள் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறதோ,
பிறகு சிலர்
60-70 வருடங்கள் கூட சேர்ந்து வாழ் கின்றனர். ஆக,
வாழ்நாள் முழுவதும் சரீரம், சரீரத்தையே நினைவு செய்து கொண்டிருக் கின்றனர்.,
இவர் என்னுடைய கணவர் என்று அவள் சொல்வாள்.
இவள் என்னுடைய பத்தினி என்று இவர் சொல்வார்.
இப்போது உங்களுக்கு நிராகாருடன் திருமண நிச்சயதார்த்தம் ஆகியிருக்கிறது. நிராகார் தந்தை தான் வந்து நிச்சயம் செய்வித்திருக்கிறார். அவர் சொல்கிறார், கல்பத்திற்கு முன்பு போலவே குழந்தைகளாகிய உங்களுக்கு என்னோடு நிச்சயதார்த்தம் செய்விக்கிறேன். நான் நிராகார் இந்த மனித சிருஷ்டியின் விதை வடிவம்.
இந்த மனித சிருஷ்டியை காட் ஃபாதர் படைத்தார் என்று அனைவரும் சொல்வார்கள். ஆக,
உங்களுடைய தந்தை எப்போதுமே பரந்தாமத்தில் இருக்கிறார். இப்போது என்னை நினைவு செய்யுங்கள் எனச் சொல்கிறார். யாத்திரை நீண்டதாக இருக்கும் காரணத்தால் அநேகக் குழந்தைகள் களைத்துப் போகின்றனர். புத்தி யோகத்தை முழுமையாக ஈடுபடுத்த முடிவதில்லை.
மாயா விடம் அநேக அடிகள் வாங்கு வதால்
(ஏமாற்றம் அடைந்து)
களைத்துப் போகின்றனர்.
இறந்தும் போகின்றனர்.
பிறகு கையை விட்டு விடுகின்றனர்.
கல்பத்திற்கு முன்பும் கூட இது போல் நடந்துள்ளது.
இங்கோ எது வரை உயிருடன் இருக்கிறீர்களோ, அது வரை நினைவு செய்ய வேண்டும்.
கணவன் இறந்து போனாலும் கூட மனைவி நினைவு செய்து கொண்டே இருக்கிறாள். இந்த தந்தை அல்லது கணவர் அப்படியே விட்டுவிட்டுச் செல்பவரல்ல.
நாயகி களாகிய உங்களை உடன் அழைத்துச் செல்வேன் என்று அவர் சொல்கிறார். ஆனால் இதில் சிறிது காலம் பிடிக்கிறது.
களைத்துப் போகக் கூடாது. பாவச்சுமை தலை மீது அதிகம் உள்ளது.
அது யோகத்தில் இருப்பதால் தான் இறங்கும். கடைசியில் தந்தை அல்லது நாயகன் ஒருவரைத் தவிர வேறு யாருடைய நினைவும் இல்லாதவாறு அந்த மாதிரி யோகம் இருக்க வேண்டும்.
வேறு யாராவது நினைவு வந்தால் அது கலப்பட நினைவாகி விடும்.
பிறகு பாவங்களுக்கான தண்டனை அடைய வேண்டியிருக்கும். அதனால் பாபா சொல்கிறார்,
பரந்தாமமம் செல்ல வேண்டிய பயணிகளே களைத்துப்போகக் கூடாது.
நீங்கள் அறிவீர்கள்,
நான் பிரம்மா மூலமாக ஆதி சநாதன தேவி-தேவதா தர்மத்தினை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறேன் மற்றும் சங்கர் மூலமாக அனைத்து அதர்மங்களையும் விநாசம் செய்விக்கிறேன். அனைவரும் எப்படி அமைதியில் இருப்பது,
அதற்கான வழியை உருவாக்க வேண்டும் என்பதற்காக இப்போது மகாநாடுகளை நடத்திக் கொண்டே இருக் கின்றனர் என்றால் அனைத்து தர்மங்களும் சேர்ந்து ஒன்றாக எப்படி ஆவது,
இப்போது அநேக தர்மங்களின் வழியும் ஒன்றாக இருக்கவோ முடியாது. ஒற்றுமையினால் ஒரே தர்மத்தின் ஸ்தாபனை நடைபெறுகிறது.
அந்த அனைத்து தர்மங்களும் சர்வகுண சம்பன்ன மாக,
சம்பூர்ண நிர்விகாரி ஆகிறார்கள் என்றால் அப்போது அவர்களுக்குள் பாற்கடலாக (இனியவர்களாக)
இருக்க முடியும்.
மிருகங்களும் கூட சண்டையிட்டுக் கொண்டதில்லை.
இங்கோ ஒவ்வொரு வீட்டிலும் சண்டை.
அவர்களுக்கு ஆதரவளிப்பவர் யாரும் இல்லை என்றால் அப்போது அவர்களுக்குள் அடித்துக் கொள்கின்றனர். தங்களின் தாய்-தந்தையை அறிந்து கொள்ளவில்லை.
பாடவும் செய்கின்றனர்
- நீங்கள் தான் தாயும் தந்தையும்,
நாங்கள் உங்கள் குழந்தைகள் உங்கள் கிருபையால் அளவற்ற சுகம் அடைந்தோம்.
அளவற்ற சுகமோ இப்போது இல்லை.
ஆக, தாய்-தந்தையின் கிருபை இல்லை என்று தான் சொல்வார்கள்.
தந்தையைப் பற்றித் தெரியவே இல்லை என்றால் தந்தை என்ன கிருபை செய்வார்? பிறகு ஆசிரியரின் வழிகாட்டுதல் படி நடந்தால் கிருபை கிடைக்கும்.
அவர்களோ சர்வவியாபி எனச் சொல்லி விடுகின்றனர். அப்போது யார் கிருபை செய்வார், யார் மீது கிருபை செய்வார்? கிருபையைப் பெறுகிறவர், கிருபை செய்பவர் இருவரும் வேண்டும். மாணவர்கள் முதலிலோ ஆசிரியரிடம் வந்து படிக்க வேண்டும். இந்தக் கிருபையைத் தனக்குத் தானே செய்து கொள்ள வேண்டும்.
பிறகு ஆசிரியரின் வழிகாட்டுதல் படி நடக்க வேண்டும்.
புருஷார்த்தம் செய்விப்பவரும் கூட வேண்டும்.
இவர் தந்தையாகவும் உள்ளார், ஆசிரியராகவும் உள்ளார் என்றால் சத்குருவாகவும் உள்ளார்.
அவர் பரமபிதா,
பரம ஆசிரியர்,
பரம சத்குரு என்றும் சொல்லப்படுகிறார். பாபா சொல்கிறார்,
நான் கல்ப-கல்பமாக இந்த ஸ்தாபனையின் காரியத்தைச் செய்விக்கிறேன். தூய்மையற்ற உலகத்தைப் தூய்மை யான உலகமாக ஆக்குகிறேன். வேர்ல்டு ஆல்மைட்டி அத்தாரிட்டி
(உலகின் சர்வ சக்திவான்) இல்லையா?
ஆக, வேர்ல்டு அத்தாரிட்டியின் (உலகம் ஆளும் அதிகாரம் படைத்த) இராஜ்யத்தை நிலையானதாக ஆக்குகிறார்.
முழு சிருஷ்டியிலும் ஒரே லட்சுமி-நாராயணரின் இராஜ்யம் இருந்தது. அவர்களுக்கு ஆல்மைட்டி அத்தாரிட்டி
(அனைத்து அதிகாரமும்)
இருந்தது. அங்கே யாரும் சண்டை-சச்சரவு செய்ய முடியாது. அங்கே மாயா என்பதே கிடையாது. அங்கு இருப்பதே கோல்டன் ஏஜ் மற்றும் சில்வர் ஏஜ்.
சத்யுகம், திரேதாயுகம் இரண்டையும் சொர்க்கம் அல்லது வைகுண்டம் எனச் சொல்வார்கள்.
அனைவரும் பாடவும் செய்கின்றனர் - பிருந்தாவன் செல்லுங்கள், பாடுங்கள்,
ராதே கோவிந்த் யாரும் செல்வ தில்லை. நினைவு மட்டும் அவசியம் செய்கின்றனர். இப்போதோ மாயாவின் இராஜ்யம்.
அனைவரும் இராவணனின் வழிப்படி நடக்கின்றனர்.
பார்ப்பதற்கு பெரிய-பெரிய நல்ல மனிதர் களாக வருகின்றனர். பெரிய-பெரிய டைட்டில்கள் கிடைக்கின்றன. கொஞ்சம் உலகாயத ரீதியிலான தைரியம் காட்டுகின்றனர், அல்லது நல்ல கர்மம் செய்கின்றனர் என்றால் டைட்டில் கிடைக்கின்றது. சிலருக்கு டாக்டர் ஆஃப் ஃபிலாசஃபி, சிலருக்கு இன்னும் என்னென்னவோ டைட்டில்கள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். இப்போது நீங்களோ,
பிராமணர்கள். நிச்சயமாக பாரதத்தின் சேவையில் இருக்கிறீர்கள். நீங்கள் தெய்விக ராஜதானியை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறீர்கள். எப்போது ஸ்தாபனை ஆகி விடுகிறதோ, அப்போது உங்களுக்கு டைட்டில்கள்
(பதவி -பட்டம்)
கிடைக்கும். சூரியவம்சி ராஜா-ராணி,
சந்திரவம்சி ராஜா-ராணி பிறகு உங்கள் இராஜ்யம் நடைபெறும். அங்கே வேறு யாருக்கும் டைட்டில்கள் கிடைக்காது.
அங்கே துக்கத்தின் எந்த விசயமும் இருக்காது. அதனால் டைட்டில் பெறலாம் என்று யாருடைய துக்கத்தைப் போக்குவதற்கோ தங்களின் தைரியத்தைக் காட்டுவதற்கோ தேவை இருக்காது. என்ன பழக்க-வழக்கம் இங்கே உள்ளதோ,
அது அங்கே இருக்காது. லட்சுமி-நாராயணர் இந்த தூய்மை இல்லாத உலகத்தில் வரவும் முடியாது. இந்தச் சமயம் தூய்மை யான தேவதை என்று யாரும் கிடையாது. இதுவே தூய்மையற்ற அசுர உலகம். அநேக வழி முறைகளில் குழம்பிப் போய் இருக்கின்றனர். இங்கோ ஒரே ஒரு ஸ்ரீமத் தான்.
இதன் மூலம் இராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. ஆம், போகப்போக சிலருக்கு மாயாவின் முள் குத்தி விடுகிறது என்றால் நொண்டிக் கொண்டே இருக்கின்றனர். அதனால் பாபா சொல்கிறார்
-- சதா ஸ்ரீமத்படி நடந்து செல்லுங்கள்.
தன்னுடைய மனதின் வழிப்படி நடப்பதால் ஏமாற்ற மடைவீர்கள்.
சத்தியமான தந்தையின் வழிப்படி நடப்பதால் உண்மையான வருமானம் கிடைக்கிறது. தன்னுடைய வழிப்படி நடக்கும் போது படகு மூழ்கிப் போகும்.
எவ்வளவு மகாவீரர்கள் ஸ்ரீமத்படி நடக்காத காரணத்தால் துர்கதியை அடைந்துள்ளனர்!
இப்போது குழந்தைகள் நீங்கள் சத்கதியை அடைய வேண்டும்.
ஸ்ரீமத்படி நடக்க வில்லை, துர்கதி அடைந்தீர்கள் என்றால் பிறகு மிகவும் பச்சாத்தாபப் பட வேண்டியதிருக்கும். பிறகு தர்ம ராஜபுரியில் சிவபாபா நான் உங்களுக்கு இந்த பிரம்மாவின் உடல் மூலம் இவ்வளவு சொல்லிப் புரிய வைத்தேன், கற்றுக் கொடுத்தேன், எவ்வளவு முயற்சி செய்தேன்!
ஸ்ரீமத்படி நடப்போம் என்று நிச்சயப் பத்திரம் எழுதினீர்கள்.
ஆனால் அது போல் நடக்கவில்லை என்று இந்த உடலில் வந்து புரிய வைப்பார்,
. ஸ்ரீமத்தை ஒரு போதும் விட்டுவிடக் கூடாது. எது நடந்தாலும் சரி,
பாபாவிடம் சொல்வதால் எச்சரிக்கை கிடைத்துக் கொண்டே இருக்கும்.
பாபாவை மறப்பதால் தான் (விகார)
முள் குத்துகிறது.
குழந்தைகள் சத்கதி அளிக்கும் தந்தையிடம் இருந்து கூட மூன்று காதவழி
(தொலை) தூரம் ஓடி விடுகின்றனர்.
பாடவும் செய்கின்றனர்
-- பலியாவேன், சமர்ப்பணமாவேன் என்று. ஆனால் யார் மீது?
இப்படியோ எழுதப் படவில்லை -- அதாவது சந்நியாசிக்கு முன் சமர்ப்பணமாவேன். பரமபிதா பரமாத்மா மீது பலியாக வேண்டும்.
எந்த ஒரு மனிதர் மீதும் அல்ல. தந்தையிடமிருந்து தான் ஆஸ்தி கிடைக்கிறது. தந்தை குழந்தைகள் மீது பலியாகிறார். இந்த எல்லையற்ற தந்தையும் சொல்கிறார், நான் பலியாவதற்காக வந்துள்ளேன்.
ஆனால் தந்தை மீது பலியாவதில் குழந்தைகளின் மனம் எவ்வளவு உடைந்து போகிறது! தேக அபிமானத்தில் வந்தால் இறந்து விட்டனர் என்றாகிறது. பலரை நினைவு செய்பவராக ஆகி விட்டனர்.
அந்த ஒருவரை மட்டுமே நினைவு செய்ய வேண்டும்.
அவர் மீது பலியாக வேண்டும்.
இப்போது நாடகம் முடிவடைகிறது. இப்போது நாம் திரும்பிச் செல்ல வேண்டும்.
மற்றப்படி உற்றார்-உறவினர் முதலானவர்களோ,
சுடுகாட்டில் உள்ளனர்.
அவர்களை எதற்காக நினைவு செய்ய வேண்டும்? இதில் அப்பியாசம் அதிகம் வேண்டும். பாடப் பட்டும் உள்ளது
- மேலே உயர்ந்து சென்றால் அமிர்த ரசம், வேகமாக விழுந்து விட்டார்கள் என்றால் பதவியை இழந்து விடுகின்றனர்.
சொர்க்கத்தில் வர மாட்டார்கள் என்பதில்லை.
ஆனால் இராஜா-ராணி ஆவது மற்றும் பிரஜை ஆவதில் வேறுபாடு உள்ளது இல்லையா?
இங்கே உள்ள மலை ஜாதியினரைக் கூடப் பாருங்கள்,
மந்திரியையும் பாருங்கள்.
வித்தியாசம் உள்ளது இல்லையா? அதனால் புருஷார்த்தம் முழுமையாகச் செய்ய வேண்டும்.
யாராவது விழுந்து விட்டால் முற்றிலும் தூய்மை இழந்து விடுகின்றனர். ஸ்ரீமத்படி நடக்கவில்லை என்றால் மாயா மூக்கைப் பிடித்து சாக்கடையில் தள்ளி விடும்.
பாப்தாதாவுடையவர் ஆகி விட்டு பிறகு துரோகி ஆவதென்றால் அவரை எதிர்ப்பதாக ஆகும். அதனால் பாபா சொல்கிறார்,
ஒவ்வோர் அடியிலும் கவனமாகச் செல்லுங்கள்.
இப்போது மாயாவின் முடிவு வரப் போகிறது. அதனால் மாயா அநேகரை வீழ்த்தி விடுகிறது.
ஆகவே குழந்தைகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வழி கொஞ்சம் நீண்ட தாகும். பதவியும் பெரியது. துரோகி ஆகி விட்டால் தண்டனையும் கடுமையானதாகும். தர்மராஜர் பாபா தண்டனை தருகிறார் என்றால் அதிகமாகக் கதறுவார்கள். அது கல்ப-கல்பமாக நிலைத்து விடும்.
மாயா மிகவும் சக்தி வாய்ந்ததாகும். கொஞ்சமாவது பாபாவுக்கு அவமரியாதை செய்தால் இறந்து போனது போல் ஆகும்.
பாடப்பட்டுள்ளது - சத்குருவுக்கு நிந்தனை செய்பவர் நல்ல கதி அடைய முடியாது.
காம வசம்,
கோபவசமாக ஆகித் தலைகீழான காரியங்களைச் செய்கின்றனர். அது பாபாவுக்கு நிந்தனை செய்ததாகிறது மற்றும் தண்டனைக் குரியவராக ஆகி விடுகின்றனர்.
ஒவ்வோர் அடியிலும் பல கோடி மடங்கு வருமானம் என்றால் பல கோடி மடங்கு நஷ்டமும் உள்ளது.
சேவையினால் சேமிப்பாகிறது என்றால் தலைகீழான விகர்மத்தால் நஷ்டமும் ஏற்படுகிறது. பாபாவிடம் கணக்கு முழுவதும் உள்ளது. இப்போது முன்பாக அமர்ந்து கற்றுத் தந்து கொண்டிருக்கிறார் என்றால் கணக்குகள் அனைத்தும் அவரது உள்ளங்கையில் உள்ளது.
பாபாவோ சொல்வார்,
எந்த ஒரு குழந்தையும் சிவபாபாவுக்கு அவமரியாதை செய்யக் கூடாது. அதன் மூலம் அதிக விகர்மங்கள் உருவாகி விடும். யக்ஞ சேவையில் எலும்புகளைக் கொடுக்க வேண்டி உள்ளது. ததீச்சி ரிஷியின் உதாரணம் உள்ளது இல்லையா?
அதற்கான பதவியும் உருவாகின்றது. இல்லையென்றால் பிரஜையிலும் வித-விதமான பதவிகள் உள்ளன. பிரஜையிலும் வேலைக்காரர் முதலிய அனைவரும் வேண்டும்.
அங்கே துக்கம் இருக்காது. ஆனால் நம்பர்வார் பதவியோ இருக்கவே செய்கிறது.
நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1.
நினைவு யாத்திரையில் களைத்துப்போகக் கூடாது.
கடைசி சமயத்தில் பாபாவைத் தவிர வேறு யாருடைய நினைவும் வராத அளவிற்கு உண்மையான நினைவின் அப்பியாசம்செய்ய வேண்டும்.
2.
சத்தியமான பாபாவின் வழிப்படி நடந்து உண்மையான வருமானத்தைச் சேமிக்க வேண்டும்.
தனது மனதின் வழிப்படி நடக்கக் கூடாது. சத்குருவுக்கு ஒரு போதும் நிந்தனை செய்யக் கூடாது. காம,
கோப வசமாகி எந்த ஒரு தலைகீழான காரியமும் செய்யக்கூடாது.
வரதானம்:
சங்கல்ப சக்தி
மூலம் ஒவ்வொரு
காரியத்திலும் வெற்றி
பெறக்கூடிய வெற்றி
மூர்த்தி ஆகுக.
சங்கல்ப சக்தி மூலம் அநேகக் காரியங்களில்
சுலபமாக வெற்றியடைவதற்கான
சித்தி அனுபவம் ஆகிறது. எப்படி ஸ்தூல ஆகாயத்தில் பல்வேறு நட்சத்திரங்களைப்
பார்க்கிறீர்கள். அது போல் உலக வாயுமண்டலத்தின்
ஆகாயத்தின் பக்கம் நாலாபுறமும் வெற்றியின் ஜொலிக் கின்ற நட்சத்திரங்கள் -- உங்கள் சங்கல்பங்கள் சிரேஷ்டமாக, மற்றும் சக்திசாலியாக இருக்கும் போது, சதா ஒரு தந்தையின் நினைவில் மூழ்கியிருக்கும் போது, உங்கள் ஆன்மிகக் கண்கள் ஆன்மிக மூர்த்தி தெய்விகக் கண்ணாடி ஆகும் போது காணப்படும். அத்தகைய தெய்வீகக் கண்ணாடி தான் அநேக ஆத்மாக்களுக்கு ஆத்மிக சொரூபத்தை அனுபவம் செய்விக்கிற வெற்றி மூர்த்தி ஆகிறது.
சுலோகன்:
நிரந்தரமாக ஈஸ்வரிய சுகங்களை அனுபவம் செய்பவர்கள்
தாம் கவலையற்ற மகாராஜா ஆவார்கள்.
0 Comments