09-01-2023 காலை
முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே!
இறந்து பிறந்திருக்கிறீர்கள்
என்றால் அனைத்தையும்
மறந்து விடுங்கள்.
ஒரு தந்தை
என்ன கூறுகின்றாரோ
அதையே கேளுங்கள்.
மேலும் தந்தையை
நினையுங்கள், உங்களுடைய
சங்கத்தில் இருப்பேன்.
கேள்வி:
சத்கதி அளிக்கக் கூடிய தந்தை குழந்தைகளின்
சத்கதிக்காக என்ன பாடத்தை சொல்லிக் கொடுக்கிறார்?
பதில்:
குழந்தைகளே ! சத்கதிக்கு செல்ல வேண்டும் என்றால் அசரீரி ஆகி தந்தை மற்றும் சக்கரத்தை நினையுங்கள்
என பாபா கூறுகின்றார். யோகத்தினால் நீங்கள் சதா ஆரோக்கிய மாகவும், நோயற்றவராகவும் மாறிவிடுவீர்கள். பிறகு உங்களுடைய கர்மம் எதுவும் துன்பம் தராது.
கேள்வி:
யாருடைய அதிர்ஷ்டத்தில்
சொர்க்கத்தின் சுகம் இல்லையோ அவர்களின் அடையாளம் என்ன?
பதில்:
ஞானத்தை கேட்பதற்கு எங்களிடம் நேரம் இல்லை என்பார்கள். அவர்கள் ஒரு போதும் பிராமண குலத்தினர் ஆக மாட்டார்கள். அவர்களுக்கு
பகவான் ஏதோ ஒரு ரூபத்தில் எப்போதாவது வருவார் என்பது தெரியாது.
பாடல்: உங்களை அழைக்க மனம் விரும்புகிறது.....
ஓம் சாந்தி.
பகவான் அமர்ந்து குழந்தைகளுக்கு புரிய வைக்கிறார். பக்தர்கள் பகவானின் குழந்தைகள் ஆவர். அனைவரும் பக்தர்கள், தந்தை ஒருவரே. ஒரு பிறவியாவது தந்தை யுடனிருந்து பார்க்க வேண்டும் என்று குழந்தைகள் விரும்புகிறார்கள். தேவதைகளுடன் பல பிறவிகள் கழிந்தது.
அசுர சம்பிரதாயத்தினருடனும் பல பிறவிகள் கழிந்தது.
இப்போது பக்தர் களின் மனமானது ஒரு பிறவியாவது பகவானுடையவராகி பகவானுடன் இருந்து பார்க்க வேண்டும் என விரும்புகிறது. இப்போது நீங்கள் பகவானுடையவராகி விட்டீர்கள். இறந்து பிறந்திருக்கிறீர்கள் என்றால் பகவானுடன் இருக்கிறீர்கள். இது விலை மதிப்பற்ற கடைசி வாழ்க்கை ஆகும்.
இதில் நீங்கள் பரம்பிதா பரமாத்மாவுடன் வசிக்கிறீர்கள். உங்களுடன் தான் சாப்பிடுவேன்,
உங்களுடன் தான் அமருவேன், நீங்கள் சொல்வதைத் தான் கேட்பேன்..... என்று புகழ் பாடப்பட்டு இருக்கின்றது. யார் மறுபிறவி எடுத்திருக்கிறார்களோ அவர்கள் தான் இப்பிறவியில் கூடவே இருக்க முடியும். இது ஒன்று தான் உயர்ந்ததிலும் உயர்ந்த பிறவி யாகும்.
தந்தை ஒரு முறை தான் வருகின்றார். பிறகு ஒரு போதும் வரமாட்டார். ஒரே ஒரு முறை வந்து குழந்தைகளின் அனைத்து விருப்பங்களையும் நிறைவேற்றி விடுகின்றார்.
பக்தி மார்க்கத்தில் கேட்பவர்கள் பலர் இருக்கிறார்கள். சாது,
சந்நியாசிகள், மகாத்மாக்கள் மற்றும் தேவி தேவதைகளிடம் ஆரம்பத்திலிருந்து அரைக்கல்பமாக கேட்டுக் கொண்டே இருக்கிறார் கள். இரண்டாவது ஜபம், தவம்,
தானம், புண்ணியம் போன்றவைகளையும் பல பிறவிகளாக செய்து வந்துள்ளார்கள். எத்தனை சாஸ்திரங்களை படிக்கிறார்கள். பல்வேறு சாஸ்திரங்கள்,
செய்தித்தாள்கள் போன்றவைகளை உருவாக்குவதில் களைப்படைவதில்லை. இதன் மூலமாகத் தான் பகவான் கிடைப்பார் என நினைக்கிறார்கள். ஆனால் பல பிறவிகளாக நீங்கள் என்ன படித்தீர்களோ, மேலும் இப்போது என்ன சாஸ்திரங்களை படிக்கிறீர்களோ இதன் மூலமாக யாரும் என்னுடைய பிராப்திகளை அடைய முடியாது என பாபாவே கூறுகின்றார்.
பல புத்தகங்கள் இருக்கின்றது. கிறிஸ்துவர்கள் கூட எவ்வளவு கற்றுக் கொள்கிறார்கள். பல மொழி களில் நிறைய எழுதிக் கொண்டே இருக்கிறார்கள். மனிதர்கள் படித்துக் கொண்டேயிருக் கிறார்கள். இப்போது பாபா, எதையெல்லாம் படித்திருக்கிறீர்களோ அதையெல்லாம் மறந்து விடுங்கள் அல்லது புத்தியிலிருந்து நீக்கிவிடுங்கள் எனக் கூறுகின்றார். நிறைய புத்தகங்களை படிக்கிறார்கள். புத்தகங்களில் இன்னார் பகவான், இந்த அவதாரம் எடுக்கிறார் என்றெல்லாம் இருக்கின்றது.
இப்போது நானே வருகிறேன். என்னுடையவர்களாக யார் மாறுகிறார்களோ அவர்களுக்கு இவை அனைத்தையும் மறந்து விடுங்கள் என நானே கூறுகின்றேன் என பாபா கூறு கின்றார்.
முழு உலகம் மற்றும் உங்களுடைய புத்தியில் எது இல்லையோ அது அனைத்தும் நான் உங்களுக்கு கூறுகின்றேன்.
குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். உண்மை யில் பாபா எதைப் புரிய வைக்கின்றாரோ அது எந்த சாஸ்திரத்திலும் இல்லை.
பாபா மிகவும் ஆழமாக மற்றும் ரமணீகரமான, விசயங்களைப் புரிய வைக்கின்றார்.
டிராமாவின் முதல்,
இடை, கடை,
படைப்பவர் மற்றும் படைப்பின் அனைத்து செய்திகளையும் உங்களுக்கு சொல்கின்றார். இருப்பினும் அதிகமாக இல்லாவிட்டாலும் மன்மனாபவ, மத்யாஜிபவ என்ற இரண்டு வார்த்தைகளை மட்டுமாவது நினைவில் வையுங்கள் என்கிறார். இந்த வார்த்தைகளோ பக்திமார்க்கத்தின் கீதையினுடையதாகும். ஆனால் பாபா இதனுடைய பொருளை நன்கு புரிய வைக்கின்றார்.
பகவான் எளிய இராஜயோகத்தை கற்பிக்கின்றார். என்னை மட்டும் நினையுங் கள் என்று கூறுகின்றார்.
பக்தியில் கூட பலர் நினைத்தனர்.
துக்கத்தில் அனைவரும் நினைக் கின்றனர்.......
எனப்பாடுகின்றனர். ஆனால் எதையும் புரிந்து கொள்ளவில்லை. சத்யுகம் திரேதாவில் சுக உலகம் நிச்சயமாக இருக்கின்றது என்றால் ஏன் நினைப்பார்கள்? இப்போது மாயையின் இராஜ்யத்தில் துக்கம் இருக்கின்றது. அப்போது தான் தந்தையை நினைக்க வேண்டி யிருக்கின்றது. பிறகு சத்யுகத்தில் அளவற்ற சுகம் தான் நினைவிற்கு வருகிறது.
யாரெல்லாம் சங்கமயுகத்தில் பாபாவிடமிருந்து இராஜயோகத்தை கற்றார்களோ அவர்களே அந்த சுக உலகத்தில், இருந்தனர்.
குழந்தைகளைப் பாருங்கள் எப்படி படிக்காதவர்களாக இருக்கிறார்கள்! அவர்களைப் பொருத்த வரை இன்னும் நல்ல தாகும். ஏனென்றால் புத்தி எங்கேயும் போவ தில்லை.
இங்கேயோ சும்மா மட்டுமே இருக்க வேண்டும். வாயின் மூலமாகவும் எதையும் கூற வேண்டியதில்லை. பாபாவை மட்டும் நினைவு செய்தால் விகர்மங்கள் அழிந்து போகும். பிறகு கூடவே அழைத்துச் செல்வேன். இந்த விஷயங்கள் சிறிதளவு கீதையில் இருக்கின்றது.
பழமையான பாரதத்தின் தர்ம சாஸ்திரம் ஒன்று தான்.
இதே பாரதம் புதியதாக இருந்தது.
இப்போது பழையதாகி விட்டது. சாஸ்திரம் ஒன்று தான் இருக்கும் அல்லவா!
எப்படி பைபிள் ஒன்றாக இருக்கின்றது,
கிறிஸ்துவ தர்மம் உருவாகியதிலிருந்து முடியும் வரை அவர்களுடைய சாஸ்திரம் ஒன்று தான். கிறிஸ்துவிற்கு கூட நிறைய மகிமைகள் செய்கிறார்கள். அவர்தான் அமைதியை ஸ்தாபனை செய்தார் என கூறுகிறார்கள். இப்போது அவர் தான் வந்து கிறிஸ்துவ தர்மத்தை ஸ்தாபனை செய்தார்.
அதில் அமைதி என்ற விஷயமே இல்லை. யார் வருகிறார் களோ அவர்களுடைய மகிமையை செய்து கொண்டேயிருக்கிறார்கள். ஏனென்றால் தங்களுடைய மகிமைகளை மறந்து விட்டார்கள்.
பௌத்தர்கள், கிறிஸ்துவர்கள் போன்றோர் தனது தர்மத்தை விட்டு விட்டு மற்றவர்களின் மகிமையை செய்ய மாட்டார்கள். பாரத வாசிகளுக்கு தனது தர்மமே இல்லை.
இதுவும் டிராமாவில் நிச்சயிக்கப்பட்டு இருக்கின்றது.
முற்றிலும் நாஸ்திகர் ஆகி விடும் போது மீண்டும் தந்தை வருகின்றார்.
குழந்தைகளே பள்ளிக் கூடங்களில் என்னென்ன புத்தகங்களை படிக்கிறீர்ளோ அதில் குறிக் கோள் என்பதாவது இருக்கின்றது என பாபா புரிய வைக்கின்றார். அதில் நன்மையும் இருக் கின்றது. வருமானமும் கிடைக்கிறது, பதவியும் கிடைக்கின்றது. மற்றபடி சாஸ்திரம் போன்ற எவற்றையெல்லாம் படிக்கிறீர்களோ அதற்கு மூடநம்பிக்கை என்று கூறப்படுகிறது. படிப்பிற்கு ஒருபோதும் மூட நம்பிக்கை என்று கூறமாட்டார்கள். குருட்டு நம்பிக்கையோடு படிக்க மாட்டார்கள்.
படிப்பினால் வக்கீலாக,
இஞ்சினியர்களாக மாறுகிறார்கள். அதை குருட்டு நம்பிக்கை என்று எப்படி கூறுவார்கள்.
இதுவும் பாடசாலையாகும். இது ஒன்றும் சத்சங்கம் கிடையாது.
ஈஸ்வரிய விஷ்வ வித்தியாலயம் என்று எழுதப்பட்டு இருக்கின்றது.
நிச்சயமாக ஈஸ்வரனுடையது மிகப் பெரிய வித்யாலயமாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அதுவும் உலகத்திற்காக ஆகும். அனைவருக்கும் செய்தியை கொடுக்க வேண்டும். தேகம் உட்பட அனைத்து தர்மங்களையும் விட்டு விட்டு தங்களுடைய சுய தர்மத்தில் நிலைத்திருங்கள். பிறகு தங்களுடைய தந்தையை நினைத்தால் கடைசி நினை விற்கு ஏற்ப நல்ல நிலைய அடையலாம்.
எவ்வளவு நேரம் நாம் யோகத்தில் இருந்தோம் என்று உங்களுடைய சார்ட்டில் எழுதுங்கள். ஒவ்வொருவரும் தினசரி சார்ட் எழுதுவார்கள் எனக் கூறமுடியாது. எழுதுவது இல்லை. களைத்துப் போகிறார்கள். உண்மையில் என்ன செய்ய வேண்டும். தினந்தோறும் உங்களுடைய முகத்தை கண்ணாடியில் பார்க்க வேண்டும். நாம் லட்சுமி நாராயணன் அல்லது சீதையை மணப்பதற்கு தகுதி உடையவரா அல்லது பிரஜையில் சென்று விடுவோமா என்று தெரிந்து விடும்.
முயற்சியைத் தீவிரப்படுத்துவதற்கு சார்ட் வையுங்கள் என்று கூறப்படுகிறது. மேலும் நாம் எவ்வளவு நேரம் சிவபாபாவை நினைவு செய்தோம் என்றும் பார்க்க முடியும். முழு நாளும் என்ன செய்ய வேண்டும் என்பது முன்னால் வருகிறது. எப்படி சிறுவயதிலிருந்து முழு ஆயுள் வரை வாழ்க்கையில் அனைத்து விஷயங்களும் நினைவிற்கு வருகிறதல்லவா! அப்படி என்றால் ஒரு நாளின் விஷயம் நினைவிற்கு வராதா?
நாம் பாபாவை மற்றும் சக்கரத்தை எவ்வளவு நினைவு செய்தோம் என்று பார்க்க வேண்டும்.
அனைவரும் பயிற்சி செய்தால் ருத்திர மாலையில் சுழல்வதற்கான ஓட்டத்தில் சீக்கிரம் செல்லலாம். இது யோகத்தின் யாத்திரையாகும். இதை அறியவே இல்லை என்றால் எப்படி கற்றுக் கொள்ள முடியும்.
இப்போது பாபாவிடம் திரும்பி போக வேண்டும் என அறிகிறீர்கள். பாபாவின் ஆஸ்தியே இராஜ்யப் பதவி ஆகும்.
ஆகவே தான் இதற்கு இராஜ யோகம் என்ற பெயர் வைக்கப்பட்டு இருக்கின்றது.
நீங்கள் அனைவரும் இராஜ ரிஷி,
அவர்கள் ஹடயோக ரிஷி. அவர்களும் பவித்திரமாக இருக்கின்றார்கள். இராஜ்யத்தில் இராஜா இராணி பிரஜைகள் அனைவரும் வேண்டும்.
சந்நியாசிகளில் இராஜா இராணி இல்லை.
அவர்களுடையது எல்லைக்குட்பட்ட வைராக்கியம் ஆகும்.
உங்களுடையது எல்லைக்கப்பாற்பட்ட வைராக்கியம் ஆகும்.
அவர்கள் வீடு வாசலைத் துறந்தாலும் இந்த விகார உலகத்திலேயே தான் இருக்கின்றார்கள். உங்களுக்கோ இந்த உலகத்திற்குப் பிறகு சொர்க்கம்,
தெய்வீகத் தோட்டம் இருக்கும். எனவே அதுவே நினைவில் இருக்கும். இந்த விஷயங்களை குழந்தைகளாகிய நீங்கள் தான் புத்தியில் வைத்துக் கொள்ள முடியும்.
பலர் இருக்கிறார்கள் சார்ட் எழுதக் கூட முடிவதில்லை.
போகப்போக களைத்து விடுகிறார்கள். குழந்தைகளே!
நீங்கள் எவ்வளவு அன்பான தந்தையை நினைத்தீர்கள் என நீங்களே குறிப்பெடுங்கள். அந்த தந்தையின் நினைவினால் தான் ஆஸ்தி அடைய முடியும். இராஜ்ய பதவியை ஆஸ்தியாக அடைய வேண்டும் என்றால் பிரஜைகளைக் கூட உருவாக்க வேண்டும். பாபா சொர்க்கத்தைப் படைக்கக் கூடியவர் என்றால் அவரிடமிருந்து சொர்க்கத்தின் ஆஸ்தியை ஏன் அடையக் கூடாது?
பலருக்கு சொர்க்கத்தின் ஆஸ்தி கிடைக்கின்றது. மற்றவர் களுக்கு அமைதி கிடைக்கின்றது. குழந்தைகளே! தேகம் உட்பட தேகத்தின் அனைத்து சம்பந்தங் களையும் மறந்துவிடுங்கள் என பாபா அனைவருக்கும் கூறுகின்றார்.
நீங்கள் அசரீரியாக வந்தீர்கள். 84 பிறவிகளை அனுபவித்தீர்கள். இப்போது மீண்டும் அசரீரி ஆகுங்கள். கிறிஸ்துவ தர்மத்தினருக்கு கூட நீங்கள் கிறிஸ்துவிற்கு பின்னால் வந்தீர்கள் என்று கூறுவார்கள்.
நீங்கள் உடல் இல்லாமல் வந்தீர்கள்.
இங்கே உடலை எடுத்து நடிப்பை நடித்தீர்கள். இப்போது உங்களுடைய நடிப்பு முடியப்போகிறது. கலியுகத்தின் முடிவு வந்து விட்டது. இப்போது நீங்கள் பாபாவை நினையுங்கள். முக்திதாமத்தை சார்ந்தவர்கள் கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைவார் கள்.
அவர்கள் முக்தியைத் தான் விரும்புகிறார்கள். ஜீவன் முக்தியை அடைந்தாலும் துக்கத் தில் தான் வருவோம், இதை விட முக்தி நல்லது என நினைக்கிறார்கள். சுகம் நிறைய இருக் கிறது என்பது அவர்களுக்கு தெரியவில்லை.
ஆத்மாக்களாகிய நாம் பரந்தாமத்தில் பாபாவுடன் வசிக்கக்கூடியவர்கள் ஆவர்.
ஆனால் பரந்தாமத்தை இப்போது மறந்து விட்டு இருக்கின்றார்கள். பாபா அனைத்து தூதுவர்களையும் அனுப்புகிறார் எனக் கூறுகிறார்கள். உண்மையில் யாரும் அனுப்புவது இல்லை.
இது அனைத்தும் நாடகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. நாம் முழு நாடகத்தையும் புரிந்து கொண்டோம்.
குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் அப்பா மற்றும் சக்கரம் நினைவிருக்கிறது. எனவே நிச்சயமாக நீங்கள் சக்கரவர்த்தி ராஜாவாக மாறுவீர்கள். மனிதர்கள் இங்கே துக்கம் நிறைய இருக்கின்றது என நினைக் கிறார்கள். ஆகவே முக்தியை விரும்புகிறார்கள். கதி சத்கதி என்ற இரண்டு வார்த்தைகள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இதனுடைய பொருளை யாரும் புரிந்து கொள்ள வில்லை.
அனைவருக்கும் சத்கதி அளிக்கக் கூடிய வள்ளல் ஒரு தந்தை தான்,
மற்ற அனைவரும் பதீதமானவர்கள் என நீங்கள் அறிகிறீர்கள்.
உலகம் முழுவதுமே அழுக்காக இருக்கின்றது.
இந்த வார்த்தைகளைச் சொன்னால் சிலர் கோபம் கொள்கின்றனர்.
இந்த சரீரத்தை மறந்து விடுங்கள் என பாபா கூறுகின்றார். உங்களை அசரீரியாக அனுப்பினேன்.
இப்போது அசரீரியாகி என்னுடன் செல்ல வேண்டும். இதற்கு ஞானம் அல்லது படிப்பு என்று கூறப்படுகிறது. இந்த படிப்பினால் தான் சத்கதி கிடைக்கின்றது. யோகத்தினால் தான் நீங்கள் சதா ஆரோக்கியமானவராகிறீர்கள். நீங்கள் சத்யுகத்தில் மிகவும் சுகமுடையவராக இருந்தீர்கள்.
எந்த விஷயத்திற்கும் குறைவில்லை. துக்கத்தை அளிக்கக்கூடிய விகாரம் எதுவும் இல்லை.
மோகத்தை வென்ற ராஜாவின் கதையைக் கூறுகின்றார்கள். நான் உங்களுக்கு இது போன்ற கர்மத்தை கற்பிக்கின்றேன். ஒருபோதும் உங்களுக்கு தவறான கர்மம் செய்ய வேண்டியிருக்காது என்று பாபா கூறுகின்றார்.
அங்கே இது போன்று குளிரும் இருக்காது. இப்போது
5 தத்துவங்களும் தமோபிரதானமாக இருக்கின்றது. சில நேரங்களில் மிகவும் வெயிலாக இருக்கின்றது.
சில நேரங்களில் குளிராக இருக்கின்றது.
அங்கே இது போன்ற ஆபத்துக்கள் ஏற்படுவதில்லை. எப்போதும் வசந்த கால மாக இருக்கின்றது.
இயற்கை சதோபிரதானமாக இருக்கின்றது. இப்போது இயற்கை தமோபிர தானமாக இருக்கின்றது.
எனவே எப்படி நல்ல மனிதனாக இருக்க முடியும்?
பாரதத்தின் இவ்வளவு பெரிய பெரிய அதிபதிகள் சந்நியாசிகளுக்குப் பின்னால் சுற்றிக் கொண்டு இருக் கின்றார்கள். அவர்களிடம் குழந்தைகள் சென்றால் நேரம் இல்லை என்கிறார்கள். இதன் மூலமாக இவர்களுடைய அதிர்ஷ்டத்தில் சொர்க்கத்தின் சுகம் இல்லை என்பது புரிய வருகிறது. பிராமண குலத்தில் பங்கேற்பவர்களாக ஆவதில்லை. பகவான் எப்படி, எப்போது இங்கே வருகின்றார் என்பது இப்போது இவர்களுக்குத் தெரியவில்லை.
சிவ ஜெயந்தி கொண்டாடுகிறார்கள். ஆனால் சிவனை அனைவரும் பகவான் என புரிந்து கொள்ளவில்லை.
ஒருவேளை அவரை பரம்பிதா பரமாத்மா என புரிந்து கொண்டால் சிவ ஜெயந்தி நாளன்று விடுமுறை அளித்து கொண்டாடுவார்கள். பாரதத்தில் தான் என்னுடைய ஜென்மம் ஏற்படுகிறது என்று பாபா கூறுகின்றார். கோவிலும் இங்கே தான் இருக்கின்றது. நிச்சயமாக ஏதாவது உடலில் பிரவேசித்திருப்பார். தக்ச பிரஜாபிதா யக்ஞத்தை உருவாக்கினார் என்று காண்பிக் கிறார்கள்.
அப்படி என்றால் அவருக்குள் வந்திருப்பார். அவ்வாறும் கூறுவதில்லை.
கிருஷ்ணரோ சத்யுகத்தில் இருக்கின்றார். நான் பிரம்மாவின் வாய் மூலமாக பிராமண வம்சத்தை படைக்கின்றேன் என்று பாபாவே கூறுகின்றார். யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள்,
பாபா எவ்வளவு எளிதாக என்னை மட்டும் நினையுங்கள் என்பதை புரிய வைக்கிறார் என புரிய வைக்கலாம்.
ஆனால் மாயை எவ்வளவு பலசாலியாக இருக்கின்றது. நினைவு செய்ய விடுவ தில்லை. அரைக்கல்பத்தின் எதிரியாகும். இந்த எதிரியை வெற்றி அடைய வேண்டும்.
பக்தி மார்க்கத்தில் கூட மனிதர்கள் குளிரில் நீராட செல்கிறார்கள். எவ்வளவு ஏமாற்றமடைந்து போகிறார்கள்.
துக்கத்தை பொறுத்துக் கொள்கிறார்கள். இங்கேயோ பள்ளிக் கூடம் ஆகும். படிக்க வேண்டும். இதில் ஏமாற்றமடைவதற்கு எந்த விஷயமும் இல்லை.
பள்ளிக் கூடத்தில் குருட்டு நம்பிக்கை எதுவும் இல்லை.
மனிதர்களோ நிறைய குருட்டு நம்பிக்கையில் இருக்கின்றார்கள். எத்தனை குருக்களிடம் செல்கிறார்கள். ஆனால் மனிதர்கள் ஒருபோதும் மனிதர்களுக்கு சத்கதி அளிக்க முடியாது. யாரெல்லாம் மனிதர்களை குருக்களாக வைத்துக் கொள்கிறார்களோ அது குருட்டு நம்பிக்கையாகும். தற்காலத்தில் சிறிய குழந்தை களைக் கூட குருவாக ஆக்குகிறார்கள். இல்லையென்றால் வானப்பிரஸ்தத்தில் தான் குரு வைத்துக் கொள்வது முறையாகும். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1.
தீவிர முயற்சிக்காக நினைவினுடைய சார்ட் நிச்சயமாக வைக்க வேண்டும். தினந் தோறும் கண்ணாடியில் தனது முகத்தைப் பார்க்க வேண்டும்.
நாம் மிகவும் அன்பான தந்தையை எவ்வளவு நினைக்க வேண்டும் என்று சோதிக்க வேண்டும்.
2.
எதையெல்லாம் படித்திருக்கிறீர்களோ அவற்றை மறந்து சும்மா இருக்க வேண்டும்.
வாயினால் எதையும் கூற வேண்டியதில்லை. பாபாவின் நினைவினால் விகர்மங்களை அழிக்க வேண்டும்.
வரதானம்:
ஒவ்வொரு விஷயத்திலும்
வாயினால் மனதினால்
பாபா பாபா
என்று சொன்னால்
நான் என்ற
உணர்வை சமாப்தி
(முடிக்க) செய்து
வெற்றி மூர்த்தி
ஆகுக.
பல ஆத்மாக்களின்
ஊக்கம் - உற்சாகத்தை அதிகரிப்பதற்கு நிமித்தமாக இருக்கக் கூடிய குழந்தைகளாகிய நீங்கள் ஒருபொழுதும் நான் என்ற உணர்வில் வரக்கூடாது. நான் செய்தேன், அவ்வாறு அல்ல. பாபா என்னை நிமித்தமாக்கினார். நான் என்பதற்கு பதிலாக என்னுடைய பாபா, நான் தான் செய்தேன், நான் தான் சொன்னேன், இவ்வாறு அல்ல. பாபா செய்ய வைத்தார், பாபா செய்கிறார் என்ற உணர்வு இருந்தால் வெற்றி மூர்த்தி ஆகி விடலாம். எந்தளவு உங்களுடைய வாயிலிருந்து பாபா பாபா என்ற வார்த்தை வெளிப் படுகிறதோ அந்தளவு பலரை பாபாவினுடையவராக ஆக்க முடியும். அனைவருடைய வாயிலிருந்தும்
இவர்களுடைய பேச்சு மற்றும் நடத்தையில் பாபா மட்டும் தான் இருக்கிறார்,
என்று வர வேண்டும்.
சுலோகன்:
சங்கமயுகத்தில் தனது உடல், மனம், செல்வத்தை பயன்படுத்துவது மற்றும் அனைத்து பொக்கிஷங்களை அதிகரிப்பதும் தான் புத்திசாலியானவர்கள்.
0 Comments