Header Ads Widget

Header Ads

TAMIL MURLI 07.01.23

 

07-01-2023  காலை முரளி  ஓம் சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



இனிமையான குழந்தைகளே ! உங்களுக்கு தந்தை மூலமாக தந்தையின் லீலை அதாவது நாடகத்தின் முதல் இடை கடை பற்றிய ஞானம் கிடைத்துள்ளது. இப்பொழுது இந்த நாடகம் முடிவடைகிறது. நாம் வீடு செல்கிறோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்.

கேள்வி:

சுயம் தங்களை தந்தையிடம் பதிவு செய்வித்துக் கொள்ள வேண்டும் என்றால், அதற்கான நியமம் என்ன?

பதில்:

தந்தையிடம் பதிவு (ரிஜிஸ்தர்) செய்து கொள்ள வேண்டும் என்றால் (1) தந்தை மீது முழுமையான பலி ஆக வேண்டி இருக்கும் (2) தங்களுடைய அனைத்தையும் பாரதத்தை சொர்க்கமாக ஆக்கும் சேவையில் பயனுள்ளதாக ஆக்க வேண்டி இருக்கும் (3) சம்பூர்ண நிர்விகாரி ஆவதற்கான சபதம் எடுக்க வேண்டி இருக்கும். மேலும் அவ்வாறே இருந்தும் காண்பிக்க வேண்டி இருக்கும். அப்பேர்ப்பட்ட குழந்தைகளின் பெயர் ஆல் மைட்டி அரசாங்கத்தின் பதிவேட்டில் வந்து விடுகிறது. நாங்கள் பாரதத்தை சொர்க்கமாக அல்லது இராஜஸ்தானமாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம் என்று அவர்களுக்கு போதை இருக்கும். நாம் பாரதத்தின் சேவைக்காக தந்தை மீது பலி ஆகிறோம்.

பாடல்:

ஓம் நமோ சிவாய .. .. .. Audio Player

ஓம் சாந்தி. யாருடைய மகிமையில் இந்த பாடல் இருக்கிறதோ, அவரே வந்து தனது படைப்பின் மகிமையைக் கூறுகிறார். அதற்கு லீலை என்றும் கூறப்படுகிறது. லீலை என்று நாடகத்திற்குக் கூறப்படுகிறது. மேலும் குணவானுக்கு மகிமை ஆகிறது. எனவே அவரது மகிமை எல்லா வற்றையும் விட தனிப்பட்டது ஆகும். மனிதர்களோ அறியாமல் இருக்கிறார் கள். அந்த பரமபிதா பரமாத்மாவிற்குத் தான் இவ்வளவு பாடல் உள்ளது என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். அவருடைய சிவஜெயந்தி கூட இப்பொழுது அருகில் உள்ளது. சிவஜெயந்திக் காக இந்த பாடல் கூட நன்றாக உள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் அவருடைய லீலையையும் அவரது மகிமையையும் அறிந்துள்ளீர்கள். உண்மையில் இது லீலை ஆகும். இதற்கு நாடகம் (டிராமா) என்றும் கூறப்படுகிறது. தேவதைகளை விடவும் எனது லீலை தனிப்பட்டது ஆகும் என்று தந்தை கூறுகிறார். ஒவ்வொருவருடையதும் அவரவர் லீலை இருக்கும். எப்படி அரசாங்கத்தில் ஜனாதிபதியின் பதவி, மந்திரிகளின் பதவி தனித்தனி ஆகும் அல்லவா? ஒரு வேளை பரமாத்மா சர்வவியாபி- எங்கும் நிறைந்த வராக இருந்தார் என்றால், அனைவருடைய செயல்களும் ஒன்றாக இருந்திருக்கும். சர்வ வியாபி என்று கூறியதால் தான் பசியால் இறந்து விட்டுள்ளார்கள். எந்தவொரு மனிதர் கூட தந்தையையும் தந்தையினுடைய அளவற்ற மகிமை யையும் அறியாமல் இருக்கிறார்கள். தந்தையை அறியாதவரை படைப்பையும் அறிந்து கொள்ள முடியாது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் படைப்பு பற்றியும் அறிந்துள்ளீர்கள். பிரம்மாண்டம், சூட்சும வதனம் மற்றும் மனித படைப்பின் சக்கரம் புத்தியில் சுற்றிக் கொண்டே இருக்கிறது. இது லீலை அல்லது படைப்பினுடைய முதல் இடை கடை பற்றிய ஞானம் ஆகும். இச்சமயம் உலகத்தின் மனிதர்கள் நாஸ்திகராக இருக்கிறார்கள். ஒன்றுமே அறியாமல் உள்ளார் கள். மேலும் எவ்வளவு பொய் கூறுகிறார்கள். சாதுக்கள் கூட மாநாடுகள் ஆகியவை நடத்தி கொண்டே இருக்கிறார்கள். இப்பொழுது நாடகம் முடிவடைகிறது என்பது பாவம் அவர்களுக்குத் தெரியவே தெரியாது. இப்பொழுது நாடகம் முடிவடையும் நேரத்தில் கொஞ்சம் டச் ஆகிறது. இப்பொழுது எல்லாரும் இராமராஜ்யம் வேண்டும் என்று விரும்பு கிறார்கள். கிறித்தவர் களுடைய இராஜ்யத்தில் நவபாரதம் வேண்டும் என்று கூறிக் கொண்டி ருக்கவில்லை. இப்பொழுது மிகுந்த துக்கம் உள்ளது. எனவே ஹே பிரபு, துக்கத்திலிருந்து விடுவியுங்கள் என்று எல்லாரும் முறையிடுகிறார்கள். கலியுக கடைசியில் அவசியம் அதிகமாக துக்கம் இருக்கும். நாளுக்கு நாள் துக்கம் விருத்தி அடைந்து கொண்டே போகும். அனைவரும் அவரவர் ஆட்சி புரிய முற்படுவார்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இந்த விநாசமோ ஆகத் தான் போகிறது. இது யாருக்குமே தெரியாது.

குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு குஷியில் இருக்க வேண்டும். எல்லையில்லாத தந்தை சொர்க்கத்தைப் படைப்பவர் என்றால், குழந்தைகளுக்குக் கூட சொர்க்கத்தின் அரசாட்சி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் கூறலாம். குறிப்பாக பாரதவாசி இதற்காக நினைவு செய்கிறார்கள். பக்தி செய்கிறார்கள். பகவானை அடைய விரும்புகிறார்கள். கிருஷ்ணபுரிக்குச் செல்ல விரும்புகிறார்கள். அதற்கு தான் சொர்க்கம் என்று கூறுகிறார்கள். ஆனால் சத்யுகத்தில் தான் கிருஷ்ணருடைய இராஜ்யம் இருந்தது என்பதை அறியாமல் இருக்கிறார்கள். பிறகு இப்பொழுது இந்த கலியுகம் முடிவடையும், சத்யுகம் வரும். அப்பொழுது மீண்டும் கிருஷ்ணரின் இராஜ்யம் ஏற்படும். சிவ பரமாத்மாவிற்கு அனைவருமே குழந்தைகள் என்பதை அனைவரும் அறிந்துள்ளார்கள். பிறகு பரமாத்மா புதிய சிருஷ்டியைப் படைத்திருக் கக்கூடும். எனவே அவசியம் பிரம்மாவின் வாய் மூலமாக (ஞானத்தின் வழி) படைத்திருக்கக் கூடும். பிரம்மா முக வம்சாவளியோ அவசியம் பிராமண குல பூஷணர்களாக இருப்பார்கள். அந்த நேரம் கூட சங்கமத்தினுடைய தாக இருக்கும். சங்கமம் கல்யாணகாரி (மங்களகரமான) யுகம் ஆகும். அப்பொழுது தான் பரமாத்மா வந்து இராஜயோகம் கற்பித்திருக்கக் கூடும். இப்பொழுது நாம் பிரம்மா முக வம்சாவளி பிராமணர்கள் ஆவோம். மற்றபடி நீங்கள் கூறுவீர்கள், பிரம்மாவின் உடலில் பரமாத்மா வந்து இராஜயோகம் கற்பிக்கிறார் என்பதை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது என்று. நீங்கள் கூட பிரம்மா முகவம்சாவளி ஆகி இராஜயோகம் கற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது தானாகவே உங்களுக்கு கூட அனுபவம் ஆகி விடும். இதில் செயற்கையான விஷயமோ, குருட்டு நம்பிக்கையின் எந்த விஷயமுமே கிடையாது. குருட்டு நம்பிக்கையோ முழு உலகத்தில் உள்ளது. இதில் கூட குறிப்பாக பாரதத்தில் பொம்மைகளின் பூஜை நிறைய நடைபெறுகிறது. விக்கிரகங்களின் இடம் என்று பாரதத்திற்குத் தான் கூறப்படு கிறது. பிரம்மாவிற்கு எவ்வளவு புஜங்கள் கொடுக்கிறார்கள். இப்பொழுது இது எப்படி ஆக முடியும்? ஆம், பிரம்மாவிற்கு நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். எப்படி விஷ்ணுவிற்கு 4 புஜங்களைக் காண்பிக்கிறார்கள்-இரண்டு இலட்சுமியினுடையது, இரண்டு நாராயணனுடையது. அதே போல பிரம்மாவிற்கும் கூட இத்தனை குழந்தைகள் இருந்திருக்கக்கூடும். உதாரணமாக 4 கோடி குழந்தைகள் இருந்தார்கள் என்றால், பிரம்மா விற்கு 8 கோடி புஜங்கள் ஆகி விடும். ஆனால் அப்படி கிடையாது. மற்றபடி பிரஜைகளோ அவசியம் இருப்பார்கள். இது கூட நாடகத்தில் பொருந்தி உள்ளது. தந்தை வந்து இந்த எல்லா விசயங்களையும் புரிய வைக்கிறார். கடைசியில் என்ன ஆகப் போகிறது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள முடியாது. எத்தனை திட்டங்கள் அமைக்கிறார்கள். பலவிதமான திட்டங்கள் அமைக்கிறார்கள். இங்கு பாபாவின் குழந்தைகளாகிய உங்களுக்கு ஒரே ஒரு திட்டம் ஆகும். மேலும் இது இராஜதானி ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. யார் எந்த அளவு உழைப்பு செய்து தங்களுக்குச் சமானமாக ஆக்குவீர் களோ அந்த அளவிற்கு உயர்ந்த பதவியை அடைவீர்கள். தந்தைக்கு ஞானம் நிறைந்தவர், ஆனந்தக் கடல், கருணை யுள்ளம் உடையவர் என்று கூறுகிறார்கள். எனக்குக் கூட நாடகத்தில் பாகம் உள்ளது என்று தந்தை கூறுகிறார். மாயை அனைவர் மீதும் இரக்கமின்மையைக் காட்டிக் கொண்டிருக்கிறது. நான் வந்து இரக்கம் காட்ட வேண்டி இருக்கிறது. குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜ யோகமும் கற்பிக்கிறேன். சிருஷ்டி சக்கரத்தின் இரகசியத்தைக் கூட புரிய வைக்கிறேன். நாலேஜ்ஃபுல் - ஞானம் நிறைந்தவருக்கு ஞானக்கடல் என்று கூறப்படு கிறது. குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். உங்களால் யாருக்கு வேண்டுமானாலும் புரிய வைக்க முடியும். இங்கு குருட்டு நம்பிக்கையின் எந்தவொரு விஷயமுமே கிடையாது. நாம் நிராகார பரமபிதா பரமாத்மாவை ஏற்றுக் கொள்கிறோம். முதன் முதலில் அவருக்கு மகிமை செய்ய வேண்டும். அவர் வந்து இராஜயோகத்தின் மூலமாக சொர்க்கத்தைப் படைக்கிறார். பின் சொர்க்கவாசிகளுக்கு மகிமை செய்ய வேண்டும். பாரதம் சொர்க்கமாக இருக்கும் பொழுது அனைவரும் அனைத்து குணங்களும் நிறைந்தவர்களாக 16 கலை சம்பூர்ணமாக இருந்தார்கள். 5 ஆயிரம் வருடங்களின் விசயம் ஆகும். எனவே பரமாத்மா வின் மகிமை எல்லாவற்றையும் விட தனிப்பட்டதாகும். பிறகு இருப்பது தேவதைகளின் மகிமை. இதில் குருட்டு நம்பிக்கை யின் எந்தவொரு விஷயமுமே கிடையாது. இங்கோ எல்லோரும் குழந்தைகள் ஆவார்கள். சீடர்கள் அல்ல. இதுவோ குடும்பம் ஆகும். நாம் இறைவனின் குடும்பம் ஆவோம். உண்மை யிலோ ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் பரமபிதா பரமாத்மாவின் குழந்தைகள் ஆவோம். எனவே குடும்பம் ஆகிறது அல்லவா? நிராகாரமான அவர் பிறகு சாகாரத்தில் வருகிறார். இச்சமயம் இது அதிசயமான குடும்பம் ஆகும். இதில் சந்தேகத்தின் விஷயமே கிடையாது. அனைவரும் சிவனின் குழந்தைகள் ஆவார்கள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் என்றும் பாடப்பட்டுள்ளார்கள். நாம் பிரம்மா குமார் குமாரிகள் ஆவோம். புதிய சிருஷ்டியின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. பழைய சிருஷ்டி முன்னால் உள்ளது. முதலிலோ தந்தையின் அறிமுகம் கொடுக்க வேண்டும். பிரம்மா வம்சத்தினர் ஆகாமல் தந்தையின் ஆஸ்தி கிடைக்க முடியாது. பிரம்மா விடம் இந்த ஞானம் இல்லை. ஞானக்கடல் சிவபாபா ஆவார். அவரிட மிருந்து தான் நாம் ஆஸ்தி பெறுகிறோம். நாம் முக வம்சாவளி ஆவோம். எல்லாரும் இராஜ யோகம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். நம் அனைவருக்கும் கற்பிப்பவர் சிவபாபா ஆவார். அவர் இந்த பிரம்மா உடலில் வந்து கற்பிக்கிறார். சாகாரத்தில் (வ்யக்தமாக) இருக்கும் இந்த பிரஜாபிதா பிரம்மா சம்பூர்ணம் ஆகி விடும் பொழுது ஃபரிஷ்தா ஆகி விடுகிறார். சூட்சும வதனவாசிகளுக்கு ஃபரிஷ்தா என்று கூறப்படுகிறது. அங்கு எலும்பு சதை இருக்காது. பெண் குழந்தைகள் சாட்சாத்காரம் (காட்சி தெரிதல்) கூட செய்கிறார்கள். பக்தி மார்க்கத்தில் அல்பகால சுகம் கூட என் மூலமாகத் தான் உங்களுக்கு கிடைக்கிறது என்று தந்தை கூறுகிறார். வள்ளல் நான் ஒரே ஒருவர் ஆவேன். எனவே ஈசுவர அர்ப்பணம் செய்கிறார்கள். இறைவன் தான் பலன் அளிக்கிறார் என்று புரிந்துள்ளார்கள். சாது சந்நியாசிகள் ஆகியோரின் பெயரை ஒரு பொழுதும் எடுக்க மாட்டார்கள். கொடுப்பவர் ஒரு தந்தை ஆவார். யாரை யாவது கருவியாக ஆக்கி அவரது மகிமையை அதிகரிப்பதற்காக அவர் மூலம் அளிக்கிறார். அவை அனைத்துமே அற்ப கால சுகம் ஆகும். இது எல்லையில்லாத சுகம் ஆகும். புதுப்புது குழந்தைகள் வருகிறார்கள். நாம் எந்த வழியில் இருந்தோமோ அந்த வழியினருக்கு போய் நாம் இந்த ஞானத்தைப் புரிய வைப்போம் என்று நினைக்கிறார்கள். இச்சமயம் அனைவரும் மாயையின் வழிப்படி இருக் கிறார்கள். இங்கோ உங்களுக்கு ஈசுவரிய வழி கிடைக்கிறது. இந்த வழி அரை கல்பம் நடக்கிறது. ஏனெனில் சத்யுக திரேதாவில் நாம் இதனுடைய பிராப்தியை அனுபவிக்கிறோம். அங்கு தவறான வழி இருக்காது. ஏனெனில், மாயையே இல்லை. தவறான வழியோ பின்னால் தான் ஆரம்பமாகிறது. இப்பொழுது பாபா நம்மை தனக்குச் சமமாக திரிகாலதரிசி, திரிலோகிநாத் ஆக்குகிறார். பிரம்மாண்டத்திற்கு அதிபதியும் ஆகிறோம். பிறகு சிருஷ்டிக்கு அதிபதி கூட நாம் ஆகிறோம். தந்தை குழந்தை களின் மகிமையை தன்னை விடவும் உயர்ந்ததாக ஆக்கி உள்ளார். முழு சிருஷ்டியில் குழந்தைகள் மீது இவ்வளவு உழைப்பு செய்து தன்னை விடவும் கூர்மையாக ஆக்கி விடக்கூடிய அப்பேர்ப்பட்ட தந்தையை எப்பொழுதாவது பார்த்திருக்கிறீர் களா? குழந்தைகளாகிய உங்களுக்கு உலக அரசாட்சி கொடுக்கிறேன். நான் அனுபவிப்பது இல்லை என்று கூறுகிறார். மற்றபடி திவ்ய திருஷ்டியின் சாவியை நான் என் கையில் வைத்துக் கொள்கிறேன். பக்தி மார்க்கத்தில் கூட எனக்கு வேலைக்கு உதவுகிறது. இப்பொழுது கூட இந்த பிரம்மாவிடம் போய் இராஜயோகத்தைக் கற்றுக் கொண்டு வருங்கால இளவரசர் ஆகுங்கள் என்று பிரம்மாவின் சாட்சாத்காரம் செய்விக்கிறேன். இதுவோ அநேகருக்கு சாட்சாத் காரம் ஆகிறது. இவர்களோ எல்லாரும் கிரீடங்களுடன் இருப்பார்கள். மற்றபடி சூரிய வம்ச இளவரசரின் சாட்சாத்காரம் ஆகியதோ அல்லது சத்திர வம்ச இளவரசரின் சாட்சாத்காரம் ஆகியதோ என்பது குழந்தைகளுக்குத் தெரிய வராது. யார் தந்தையின் குழந்தைகள் ஆகிறார்களோ அவர்கள் இளவரசர் இளவரசியாக அவசியம் ஆவார்கள். பின்னால் ஆகலாம் அல்லது முன்னால் ஆகலாம். நல்ல முயற்சி செய்தார்கள் என்றால் சூரிய வம்சத்தினர் ஆவார்கள். இல்லை யென்றால் சந்திர வம்சத்தினர். எனவே இளவரசரைப் பார்த்து விட்டு மட்டும் குஷி அடையக் கூடாது. இவை எல்லாமே முயற்சியை பொருத்தது ஆகும். பாபாவோ ஒவ்வொரு விஷயத்தையும் தெளிவு படுத்தி புரிய வைக்கிறார். இதில் குருட்டு நம்பிக்கையின் விஷயமே இல்லை. இது ஈசுவரிய குடும்பம் ஆகும். இந்த கணக்குப்படி அவர்களும் ஈசுவரிய குழந்தைகள் ஆவார்கள். ஆனால் அவர்கள் கலியுகத்தில் இருக்கிறார்கள். நீங்கள் சங்கமத்தில் இருக்கிறீர்கள். யாரிடம் வேண்டுமானாலும் செல்லுங் கள்.சிவ வம்சத்தினர், பிரம்மா முகவம்சாவளி பிராமணர்களாகிய நாம் மட்டுமே சொர்க்கத்தின் ஆஸ்தியைப் பெறமுடியும். எவரொருவருக்கும் நல்ல முறையில் புரிய வைப்பதற்கான உழைப்பு செய்ய வேண்டி உள்ளது. 100-50 பேருக்கு புரிய வைத்தோம் என்றால் அப்பொழுது அவர்களில் யாராவது ஒருவர் வெளிப்படுவார்கள். யாருடைய அதிர்ஷ்டத்தில் இருக்கிறதோ அவர்கள் கோடியில் ஒருவர் வெளிப்படுவார். தனக்குச் சமமாக ஆக்குவதில் நேரம் பிடிக்கிறது. மற்றபடி பணக்காரர்களின் குரல் பெரியதாக இருக்கும். மந்திரியிடம் சென்றீர்கள் என்றால், முதலில் உங்களிடம் யாராவது மந்திரிகள் வருகிறார்களா என்று கேட்பார்கள். ஆம் வருகிறார்கள் என்று கூறினால் நல்லது நாங்களும் வருகிறோம் என்பார்கள்.

நான் முற்றிலும் சாதாரணமாக இருக்கிறேன் என்று தந்தை கூறுகிறார். எனவே செல்வந்தர்கள் யாரோ ஒருவர் தான் வருகிறார்கள். அவசியம் வர வேண்டி உள்ளது. ஆனால் அது கடைசியில், குழந்தைகளாகிய உங்களுக்கு மிகுந்த போதை இருக்க வேண்டும். நாங்களோ பாரதத்திற்கு உடல் மனம் பொருளாலே சேவை செய்கிறோம் என்று அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். நீங்கள் பாரதத்திற்கு சேவை செய்வதற்காகத் தான் பலி ஆகி உள்ளீர்கள் அல்லவா? அப்பேர்ப்பட்ட கொடையாளர் வேறு யாரும் இருக்க மாட்டார்கள். அவர்களோ பைசா சேர்த்து வைத்து வீடுகள் கட்டிக் கொண்டே இருக்கிறார்கள். கடைசியில் இவை எல்லாமே மண்ணோடு மண்ணாகப் போகிறது. நீங்களோ அனைத்தையும் பாபாவிடம் பலி ஆக்க வேண்டும். பாரதத்தை சொர்க்கமாக ஆக்கும் சேவையில் தான் அனைத்தையும் ஈடுபடுத்த வேண்டும். எனவே ஆஸ்தியும் நீங்கள் தான் அடைகிறீர்கள். உங்களுக்கு போதை ஏற்றப்பட்டுள்ளது - நாங்கள் ஆல்மைட்டி அத்தாரிட்டியின் குழந்தைகள் ஆவோம். நாம் அவர்களிடம் ரிஜிஸ்டர்டு - பதிவு செய்யப்பட்டு விட்டோம். பாபாவிடம் பதிவு ஆவதில் நிறைய உழைப்பு தேவைப் படுகிறது. சம்பூர்ண நிர்விகாரி தன்மையின் சபதம் எடுக்க வேண்டும். மேலும் அவ்வாறு இருந்தும் காண்பிக்க வேண்டும். அப்பொழுது பாபா அவரை பதிவு (ரிஜிஸ்தர்) செய்கிறார். நாம் பாரதத்தை சொர்க்கமாக அல்லது இராஜஸ்தானாக ஆக்கிக் கொண்டிருக்கிறோம். அப்பொழுது அதன் மீது ஆட்சி புரிவோம் என்ற போதை குழந்தைகளுக்கு நிறைய இருக்க வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. நாம் ஈசுவரிய குழந்தைகள். ஒரு இறைவனின் குடும்பத்தினர் ஆவோம். நமக்கு இப்பொழுது ஈசுவரிய வழி கிடைத்துக் கொண்டிருக்கிறது. இந்த ஆன்மீக போதையில் இருக்க வேண்டும். தவறான வழிகளில் நடக்கக் கூடாது.

2. பாரதத்தின் சேவைக்காக பிரம்மா தந்தைக்குச் சமமாக முழுக்க முழுக்க பலி ஆக வேண்டும். உடல் மனம் பொருளை பாரதத்தை சொர்க்கமாக ஆக்குவதில் பயனுள்ளதாக ஆக்க வேண்டும். முழுக்க முழுக்க கொடையாளர் ஆக வேண்டும்.

வரதானம்:

பரமாத்ம அன்பின் குடைநிழலில் சதா பாதுகாப்பாக இருக்கக்கூடிய துக்கங்களின் அலைகளிலிருந்து விடுபட்டவர் ஆகுக.


தாமரை மலர் சேற்றில் இருந்தாலும் தனிப்பட்டு இருக்கிறது மற்றும் எந்தளவு தனிப் பட்டு இருக்கிறதோ அந்தளவு அனைவருக்கும் அன்பானதாக உள்ளது. அதுபோல் குழந்தை களாகிய நீங்கள் துக்கமான உலகத்தில் இருந்து விடுபட்டவர்களாக மற்றும் தந்தைக்கு அன்பானவர்களாக ஆகிவிட்டீர்கள். இந்த பரமாத்ம அன்பு குடைநிழலாக ஆகிவிடுகிறது. மேலும், யாருடைய தலைக்கு மேலே பரமாத்ம நிழல் குடையாக உள்ளதோ, அவரை யார் என்ன செய்ய முடியும்! ஆகையினால், நான் பரமாத்ம குடைநிழலில் இருப்பவர், துக்கத்தின் அலை என்னை தீண்டவே முடியாது என்ற போதையில் இருங்கள்.

சுலோகன்:

யார் தனது சிரேஷ்டமான நடத்தையின் (சரித்திரத்தின்) மூலம் பாப்தாதா மற்றும் பிராமண குலத்தின் பெயரை ஒளிரச் செய்கின்றார்களோ, அவர்களே குல தீபம் ஆவார்கள்

 Download PDF

Post a Comment

0 Comments