05-01-2023 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
இனிமையான குழந்தைகளே! பக்தர்களுக்கு எப்பொழுது இன்னல் வருகிறதோ, துக்கம் வருகிறதோ அப்பொழுது ஞானத்தின் மூலம் கதி, சத்கதியைக் கொடுப்பதற்காகத்
தந்தை வருகின்றார்.
கேள்வி:
யார் விகர்மாஜீத்
(விகர்மங்களை வென்றவர்கள்)
ஆகின்றார்கள்? விகர்மாஜீத்
ஆகக் கூடியவர்களின்
அடையாளம் என்னவாக இருக்கும்?
பதில்:
யார் கர்மம், அகர்மம் மற்றும் விகர்மத்தின்
நிலையை அறிந்து சிரேஷ்ட கர்மம் செய் கின்றார்களோ, அவர்களே விகர்மாஜீத்
ஆகின்றார்கள். விகர்மாஜீத்
ஆகக்கூடியவர்கள் ஒரு பொழுதும் கர்ம வினைப்பயனை அனுபவிப்பதில்லை. அவர்களுடைய கர்மம் (செயல்) விகர்மம் (பாவச் செயல்) ஆகுவதில்லை.
கேள்வி:
இந்த சமயம் தந்தை என்னென்ன இரண்டு சேவைகள் செய்கின்றார்?
பதில்:
ஆத்மா மற்றும் சரீரம் ஆகிய இரண்டையும் தூய்மையாகவும் ஆக்குகின்றார் மேலும், தன்னுடன் வீட்டிற்கும் திரும்பி அழைத்துச் செல்கின்றார். ஒரு தந்தைக்கே வரலாறு (சரித்திரம்) உள்ளது. மனிதர்களுக்கு இருக்க முடியாது.
பாடல்: ஓம் நமோ சிவாய....
ஓம் சாந்தி. இந்தப் பாடலைக் குழந்தைகள் கேட்டீர்கள். யாரெல்லாம் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்களோ, அவர்கள் இத்தகைய பாடல் பாடுகின்றனர். காரிருளில் இருந்து வெளிச்சத்தை விரும்புகின்றனர் மற்றும் துக்கத்திலிருந்து விடுபடுவதற்காக அழைத்துக் கொண்டே இருக்கின்றனர். நீங்களோ சிவவம்சத்தினர் பிரம்மாகுமாரர்கள், குமாரிகள் ஆவீர்கள். இது புரிந்து கொள்வதற்கான விசயம் ஆகும். இத்தனை குழந்தைகள் கர்ப்பவழி வம்சத்தினர் ஆக முடியாது. அவசியம் வாய்வழி வம்சத்தினர்களாகவே இருப்பார் கள். கிருஷ்ணருக்கு இத்தனை இராணிகள் மற்றும் குழந்தைகள் கிடையாது. கீதையின் பகவான் இராஜயோகத்தைக் கற்பிக் கின்றார் என்றால் அவசியம் வாய்வழி வம்சத்தினர் களாகவே இருப்பார்கள். பிரஜாபிதா என்ற வார்த்தையோ புகழ் வாய்ந்தது ஆகும். தந்தை வந்து இவருடைய வாயின் மூலம் பிராமண தர்மத்தைப் படைக்கின்றார். பிரஜாபிதா என்ற தந்தையின் பெயர் அழகாக உள்ளது. இப்பொழுது நடைமுறையில் நீங்கள் அந்தத் தந்தையினுடையவர்கள் ஆகியிருக்கிறீர்கள். கிருஷ்ணரும் பகவான், சிவனும் பகவான் என்று அவர்கள் கூறுகின்றனர். ருத்ர பகவானுக்குப் பதிலாகக் கிருஷ்ணரின் பெயரைப் போட்டுவிட்டார்கள். சங்கர் பார்வதி என்றே கூறுகின்றனர். ருத்ர பார்வதி என்று கூறுவதில்லை. சிவ சங்கர மகாதேவன் என்று கூறுகின்றனர். இப்பொழுது கிருஷ்ணர் எங்கிருந்து வந்தார்? அவரை ருத்ரன் என்றோ அல்லது சங்கரர் என்றோ கூற மாட்டார்கள். பக்தர்கள் பாடுகின்றனர், ஆனால், பகவானைப் பற்றி அறியவில்லை. யார் பூஜைக்குரியவர்களாக இருந்து இப்பொழுது பூஜாரி ஆகியிருக்கின்றார்களோ, அவர்களே பாரதத்தில் உண்மையிலும் உண்மையான பக்தர்கள் ஆவார்கள். அவர்களிலும் வரிசைக் கிரமமாக உள்ளனர். உங்களிலும் கூட வரிசைக்கிரமமாக உள்ளீர்கள். நீங்கள் பிராமணர்கள் ஆவீர்கள், அவர்கள் சூத்திரர்கள் ஆவார்கள். தேவதை தர்மத்தைச் சேர்ந்தவர்கள் தான் மிகவும் துக்கம் நிறைந்தவர்கள் ஆகின்றனர். ஏனெனில், அவர்களே மிகுந்த சுகத்தையும் அனுபவித் திருக்கின்றனர். இப்பொழுது நீங்கள் வீதி வீதியாக அலைந்து திரியும் நிலை அடுத்த அரைக் கல்பத்திற்கு முடிந்துவிட்டது. இந்த இரகசியத்தைக் கூட பிராமணர்களே அறிந்திருக்கிறீர்கள், அதுவும் வரிசைக்கிரமமாக அறிந்துள்ளீர்கள். கல்பத்திற்கு முன்னர் யார் எந்தளவு முயற்சி செய்திருந் தார்களோ, அந்தளவே இப்பொழுதும் செய்கிறார்கள். நாடகத்தில் என்ன இருக்குமோ அது கிடைக்கும் என்பது கிடையாது, இருந்தாலும் முயற்சி என்ற பெயர் உள்ளது. நாடகம் குழந்தைகளை முயற்சி செய்ய வைத்தே ஆகவேண்டும். எத்தகைய முயற்சி இருக்குமோ, அத்தகைய பதவி கிடைக்கும். கல்பத்திற்கு முன்பு கூட அத்தகைய முயற்சி செய்திருந் தோம், கொடுமைகள் இழைக்கப்பட்டது, யக்ஞத்தில் தடை ஏற்பட்டது என்பதை நாம் அறிந்திருக் கிறோம்.
பாபா மீண்டும் வந்திருக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக் கிறீர்கள். கல்பத்திற்கு முன்பும் கூட இதே சமயத்தில் வந்திருந்தார், அப்பொழுது ஆங்கிலேயரின் இராஜ்யம் நடந்தது. அவர்களிடமிருந்து காங்கிரஸ் அரசாட்சியைப் பெற்றது, பிறகு, பாகிஸ்தான் உருவானது. இது கல்பத்திற்கு முன்பும் கூட நடந்திருந்தது. கீதையில் இந்த விசயங்களே கிடையாது. இப்போதைய சமயம் அதே சமயம் ஆகும் என்பதை இறுதியில் புரிந்துகொள் வார்கள். ஈஸ்வரன் வந்துவிட்டார் என்று சிலர் நினைக்கின்றனர். எப்பொழுது மகாபாரத யுத்தம் நடந்ததோ அப்பொழுது பகவான் வந்திருந்தார். சரியாகத் தான் கூறுகின்றனர், பெயரை மட்டும் மாற்றிவிட்டனர். ருத்ரன் என்ற பெயரைப் போட்டிருந்தால் கூட சரி என்று புரிந்து கொள்ளலாம். ருத்ரன் ஞான யக்ஞத்தைப் படைத்தார், அதன் மூலம் உலகத்தில் துக்கம் விலகியது. இது கூட கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் மூலம் தெரிந்துவிடும். இதற்கு இன்னும் சமயம் உள்ளது. இல்லையெனில், நீங்கள் படிக்கக் கூட முடியாத அளவிற்கு இங்கு கூட்டம் கூடிவிடும். இங்கு கூட்டம் கூடுவதற்கான விதி இல்லை. மறைமுகமான வேடத்தில் காரியம் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். இப்பொழுது யாராவது பெரிய மனிதர் இங்கே வந்தார் என்றால், இவர்களின் மூளை குழம்பிவிட்டது என்று கூறுவார்கள். இங்கே தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பித்துக் கொண்டிருக்கின்றார். தேவதை தர்மத்தை பகவான் வந்து படைப்பார் அல்லவா. புது உலகைப் படைப்பதற்காகவும், பக்தர்களின் இன்னல்களைப் (துன்பங்களை) போக்கவும் இப்பொழுது அவர் வந்திருக்கின்றார். விநாசத்திற்குப் பின்னர் எந்த துக்கமும் இருக்காது. அங்கே சத்யுகத்தில் பக்தர்கள் கிடையாது. துக்கமானவர்கள் ஆகும்வண்ணம் எந்த செயலும் செய்யமாட்டார்கள்.
(பாம்பேயிலிருந்து ரமேஷ் சகோதரரின் போன் வந்தது) பாப்தாதா செல்கிறார் என்றால் குழந்தைகள் வருத்தப்படுகின்றனர். எவ்வாறு ஒரு பெண்ணின் கணவர் வெளிநாடு செல்கிறார் என்றால் அவர் நினைவில் அந்தப் பெண் அழுவார். அது உலகாய சம்மந்தம் ஆகும். இங்கே பாபாவுடன் உள்ள சம்மந்தம் ஆன்மிக சம்பந்தம் ஆகும். பாபாவிடமிருந்து பிரிந்திருக்கும் பொழுது அன்புக் கண்ணீர் வந்துவிடுகிறது. யார் சேவாதாரிக் குழந்தைகளோ, அவர்கள் மீது பாபாவிற்கு மரியாதை உள்ளது. பிறகு நல்ல குழந்தைகளுக்கு தந்தை மீது மரியாதை உள்ளது. சிவபாபாவின் சம்மந்தமோ மிகவும் உயர்ந்ததிலும் உயர்ந்தது ஆகும் அவருடைய சம்மந்தத்தை விட உயர்ந்த சம்மந்தம் வேறு எதுவும் கிடையாது. சிவபாபாவோ குழந்தை களைத் தன்னைவிட உயர்ந்தவர்கள் ஆக்குகின்றார். நீங்கள் தூய்மை ஆகின்றீர்கள், ஆனால், தந்தைக்குச் சமமாக எப்பொழுதும் தூய்மையானவர் ஆகமுடியாது. ஆம், தூய்மை யான தேவதை ஆகின்றீர்கள். தந்தையோ ஞானக்கடல் ஆவார். நாம் எவ்வளவு தான் (ஞானம்) கேட்டாலும் ஞானக்கடலாக ஆகமுடியாது. அவர் ஞானக்கடல், ஆனந்தக்கடல் ஆவார். குழந்தை களை ஆனந்தமயமாக ஆக்குகின்றார். மற்றவர்கள் பெயர் மட்டும் வைத்துக் கொள்கின்றனர். இந்த சமயத்தில் உலகத்தில் பக்தர்களின் மாலை மிகவும் நீளமானது ஆகும். உங்களுடையது 16108 மணிமாலை ஆகும். பக்தர்களோ கோடிக்கணக்கானோர் உள்ளனர். இங்கே பக்திக்கான விசயம் கிடையாது. ஞானத்தின் மூலமே சத்கதி கிடைக்கிறது. இப்பொழுது உங்களை பக்தியின் சங்கிலிகளிலிருந்து விடுவிக்கப்படுகிறது. அனைத்து பக்தர்களுக்கும் எப்பொழுது இன்னல் ஏற்படுகிறதோ, அப்பொழுது அனைவருக்கும் கதி, சத்கதியை அளிப்பதற்காக நான் வர வேண்டியதாக உள்ளது என்று பாபா கூறுகின்றார். சொர்க்கத்தின் தேவதைகள் அவசியம் உயர்ந்த செயல்கள் செய்திருக்கின்றனர், ஆகையினா லேயே, அவ்வளவு உயர்ந்த பதவியை அடைந்திருக்கின்றனர். மனிதர்கள் கர்மம் செய்து வந்திருக்கின்றனர். ஆனால், அங்கே கர்மவினைப் பயன் ஏற்படுவதில்லை. இங்கே கர்மம், விகர்மம் ஆகிறது. ஏனெனில், மாயை உள்ளது. அங்கே மாயை கிடையாது. நீங்கள் விகர்மாஜீத் ஆகின்றீர்கள். எந்தக் குழந்தைகளுக்கு இப்பொழுது கர்மம், அகர்மம் மற்றும் விகர்மத்தின் நிலையைப் புரிய வைக்கின்றேனோ, அவர்களே விகர்மாஜீத் ஆகின்றனர். கல்பத்திற்கு முன்பு கூட குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்பித்திருந்தேன், அதையே இப்பொழுதும் கூட கற்பித்துக்கொண்டு இருக்கின்றேன். காங்கிரஸ்வாதிகள் ஆங்கிலேயரை வெளியேற்றிவிட்டு இராஜாக்களிடமிருந்து அரசாட்சியைப் பறித்துவிட்டனர். மேலும், இராஜா என்ற பெயரையே இல்லாமல் செய்து விட்டனர். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பாரதம் இராஜஸ்தானாக இருந்தது. இலட்சுமி, நாராயணருடைய இராஜ்யம் நடந்தது. தேவதைகளின் இராஜ்யம் நடந்த பொழுது சொர்க்கமாக (பரிஸ்தான்) இருந்தது. அவர் களுக்கு அவசியம் பகவான் இராஜயோகத்தைக் கற்பித்திருந் திருப்பார். ஆகையினாலேயே அவர்களுக்கு பகவான், பகவதி என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், இப்பொழுது நமக்குள் ஞானம் உள்ளது என்றாலும் நாம் பகவான், பகவதி என்று நம்மைக் கூற முடியாது. இல்லையெனில், இராஜா, இராணியைப் போல் பிரஜைகளும் கூட பகவதி, பகவானாக இருந்திட வேண்டும். ஆனால், அவ்வாறு இருக்க முடியாது. பிரஜைகளில் எவரும் இலட்சுமி, நாராயணர் என்ற பெயரைக் கூட தனக்கு வைத்துக் கொள்ளமுடியாது, சட்டம் கிடையாது. வெளிநாட்டிலும் கூட இராஜாவின் பெயரை எவரும் தனக்கு வைக்க மாட்டார்கள். அவர்களுக்கு மிகுந்த மரியாதை கொடுப்பார்கள். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தந்தை வந்திருந்தார் என்பதை குழந்தைகள் புரிந்திருக்கிறீர்கள். இப்பொழுது கூட தெய்வீக இராஜஸ்தானை ஸ்தாபனை செய்வதற்காக தந்தை வந்திருக்கின்றார். சிவபாபாவின் வருகை கூட இப்பொழுதே நடைபெறுகிறது. அவர் பாண்டவர்களின் பதி (தலைவர்) ஆவார், கிருஷ்ணர் அல்ல. வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்வதற்காக மற்றும் புது உலகைப் படைப்பதற்காக தந்தை வழிகாட்டியாகி வந்திருக்கின்றார். எனவே, அவசியம் பிரம்மா மூலமே பிராமணர் களைப் படைப்பார். கிருஷ்ணர் படைக்க முடியாது. முக்கியமான கீதையையே களங்கப் படுத்திவிட்டனர். நான் கிருஷ்ணர் அல்ல என்று இப்பொழுது தந்தை புரியவைக்கின்றார். என்னை ருத்ரன் அல்லது சோமநாதர் என்று கூற முடியும். உங்களை ஞானம் என்ற சோமபானத்தைப் பருகச் செய்துகொண்டு இருக்கின்றேன். மற்றபடி, யுத்தம் முதலியவைக்கான விசயம் எதுவும் கிடையாது. யோகபலத்தின் மூலம் உங்களுக்கு இராஜ்யம் என்ற வெண்ணெய் கிடைத்துவிடுகிறது. கிருஷ்ணருக்கு வெண்ணெய் அவசியம் கிடைக்கிறது. இது கிருஷ்ணருடைய கடைசிப் பிறவியில் இருக்கும் ஆத்மா ஆகும். இவர்களுக்கும் (பிரம்மா, சரஸ்வதிக்கும்) கூட அத்தகைய கர்மம் செய்ய தந்தை கற்பித்துக்கொண்டும் இருக்கின்றார், அதன் மூலம் எதிர்காலத்தில் இலட்சுமி, நாராயணர் ஆகிவிடுகின்றனர். இந்த இலட்சுமி, நாராயணரே சிறு வயதில் இராதை, கிருஷ்ணர் ஆவார்கள். ஆகையினால், இலட்சுமி, நாராயணரின் கூடவே இராதை, கிருஷ்ணரின் சித்திரமும் காண்பிக்கின்றனர். மற்றபடி இவர் களின் சிறப்பு எதுவும் கிடையாது. ஒரு கீதையின் பகவானுக்கே சரித்திரம் உள்ளது. அதை சிவபாபா குழந்தைகளுக்கு விதவித மான காட்சிகளாகக் காண்பிக்கின்றார். மற்றபடி மனிதர் களுக்குச் சரித்திரம் என்பது எதுவும் கிடையாது. கிறிஸ்து முதலியவர்கள் கூட வந்து தர்மத்தை ஸ்தாபனை செய்தார்கள், அதாவது அனைவரும் தனது நடிப்பை நடித்தே ஆக வேண்டும். இதில் சரித்திரத்திற்கான விசயம் எதுவுமே கிடையாது. அவர்கள் எவருக்கும் கதியைக் (முக்தி) கொடுக்க முடியாது. நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இரட்டை சேவை செய்வதற்காக வந்திருக்கின்றேன், இதன் மூலம் உங்களது ஆத்மா மற்றும் சரீரம் ஆகிய இரண்டுமே தூய்மையாகிவிடும் என்று இப்பொழுது எல்லையற்ற தந்தை கூறுகின்றார். அனைவரையும் முக்திதாம வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்கின்றேன். பிறகு, அங்கிருந்து அவரவர் நடிப்பை நடிப்பதற்காக வருவீர்கள். குழந்தைகளுக்கு எவ்வளவு நல்ல முறையில் புரியவைக்கின்றார்! இந்த இலட்சுமி, நாராயணர் சித்திரத்தைப் பற்றிப் புரியவைப்பது மிகவும் எளிதாகும். மும்மூர்த்தி மற்றும் சிவபாபாவின் சித்திரமும் உள்ளது. சிலர் மும்மூர்த்தி சித்திரம் இருக்கக் கூடாது என்று கூறுகின்றனர், சிலர் கிருஷ்ணரின் சித்திரத்தில் 84 பிறவிகளின் கதை இருக்கக் கூடாது என்று கூறுகின்றனர். கிருஷ்ணர் கூட 84 பிறவிகள் எடுத்து தூய்மை யற்றவராக ஆகின்றார் என்பதை மனிதர்கள் கேட்கும்பொழுது அவர்களுக்கு பயம் ஏற்படுகிறது. முதல் எண்ணில் வரக்கூடிய ஸ்ரீகிருஷ்ணர் அவசியம் அனைவரையும் விட அதிகப் பிறவி எடுக்க வேண்டியதாக இருக்கும் என்பதை நாம் நிரூபித்துச் சொல்கிறோம். தினமும் புதுப்புது கருத்துக்கள் (பாயிண்ட்ஸ்) வருகின்றன. ஆனால், தாரணையும் செய்ய வேண்டும். இலட்சுமி, நாராயணருடைய சித்திரத்தைப் பற்றி புரியவைப்பது அனைத்தையும் விட எளிதானதாகும். எந்தச் சித்திரத்தின் அர்த்தத்தையும் மனிதர்கள் புரிந்திருக்கவில்லை. தப்பும் தவறுமான சித்திரத்தை உருவாக்கிவிடுகின்றனர். நாராயணருக்கு இரண்டு கரங்களும், இலட்சுமிக்கு நான்கு கரங்களும் கொடுத்துவிடுகின்றனர். சத்யுகத்தில் இத்தனை கரங்கள் இருக்காது. சூட்சும வதனத்திலோ பிரம்மா, விஷ்ணு, சங்கரர் இருக்கின்றார்கள். அவர் களுக்கும் கூட இத்தனை கரங்கள் இருக்க முடியாது. மூல வதனத்தில் இருப்பதே நிராகார மான ஆத்மாக்கள். பிறகு, இந்த 8, 10 கரங்கள் உடையவர்கள் எங்கே இருக்கக் கூடியவர் கள்? மனித சிருஷ்டியில் முதன் முதலில் வரக்கூடிய இலட்சுமி, நாராயணர் இரண்டு கரங்களை உடையவர்களே ஆவார்கள். ஆனால், அவர்களுக்கு 4 கரங்கள் கொடுத்து விட்டனர். நாராயணரைக் கருப்பாக, இலட்சுமியை வெண்மையாகக் காண்பிக்கின்றனர். எனில், அவர்களுடைய குழந்தைகள் எவ்வாறு மற்றும் எத்தனை கரங்களை உடையவர் களாக இருப்பார்கள்? ஆண் குழந்தைகளுக்கு 4 கரங்களும், பெண் குழந்தைகளுக்கு 2 கரங்களும் இருக்குமா என்ன? இத்தகைய கேள்வியைக் கேட்க முடியும். நமக்கு சிவபாபா முரளி சொல்கின்றார் என்றே எப்பொழுதும் புரிந்துகொள்ளுங்கள் என்பது குழந்தைகளுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது இவர் (பிரம்மா) கூட சொல்கின்றார். நான் வழிகாட்டியாகி வந்திருக்கின்றேன் என்று சிவபாபா கூறுகின்றார். இந்த பிரம்மா எனது பெரிய குழந்தை ஆவார். மும்மூர்த்தி பிரம்மா என்று கூறுகின்றனர். மும்மூர்த்தி சங்கரர் என்றோ அல்லது விஷ்ணு என்றோ கூறமாட்டார்கள். மகாதேவன் என்று சங்கரரைக் கூறுகின்றனர். பிறகு, மும்மூர்த்தி பிரம்மா என்று ஏன் கூறுகின்றனர்? இவர் பிரஜை களைப் படைத்திருக்கின்றார். எனவே, இவர் அவருடைய (சிவபாபாவினுடைய) ஜோடி (யுகல்) ஆகின்றார். சங்கரர் அல்லது விஷ்ணுவை ஜோடி என்று கூறமாட்டார்கள். இவை புரிந்து கொள்வதற்கான மிகவும் அற்புதமான விசயங்கள் ஆகும். இங்கே தந்தை மற்றும் ஆஸ்தியை மட்டும் நினைவு செய்ய வேண்டும். இதில் தான் அதிக முயற்சி உள்ளது. இப்பொழுது நீங்கள் எவ்வளவு புத்திசாலி ஆகியிருக்கிறீர்கள்! எல்லையற்ற தந்தை மூலம் நீங்கள் எல்லை யற்ற எஜமானர் ஆகின்றீர்கள். இந்த பூமி, இந்த ஆகாயம் ஆகிய அனைத்தும் உங்களுடையது ஆகிவிடும். பிரம்மாண்டமும் உங்களுடையது ஆகிவிடும். சர்வசக்திவாய்ந்த இராஜ்யமாக இருக்கும். ஒரு அரசாட்சி இருக்கும். சூரியவம்ச அரசாட்சி இருந்தபொழுது சந்திரவம்சத்தினர் இல்லை. பிறகு, சந்திரவம்சத்தினர் இருந்தபொழுது சூரியவம்சத்தினர் கிடையாது. அது கடந்து விட்டது. நாடகம் மாறிவிட்டது. இவை மிகவும் அற்புதமான விசயங்கள் ஆகும். குழந்தைகளுக்குக் குஷி எவ்வளவு அளவு கடந்து இருக்க வேண்டும்! எல்லையற்ற தந்தை யிடமிருந்து நாம் எல்லையற்ற ஆஸ்தியை அவசியம் பெறுவோம். அந்த பதியை எவ்வளவு நினைவு செய்கின்றனர்! இவர் எல்லையற்ற இராஜ்யத்தைக் கொடுக்கக்கூடியவர் ஆவார். இத்தகைய பதிகளுக்கெல்லாம் பதியை எவ்வளவு நினைவு செய்யவேண்டும்! எவ்வளவு உயர்ந்த பிராப்தி கிடைக்கின்றது! அங்கே நீங்கள் யாரிடமிருந்தும் ஒருபொழுதும் யாசிக்க மாட்டீர்கள் (பிச்சை கேட்பதில்லை). அங்கே ஏழைகளே கிடையாது. எல்லையற்ற தந்தை பாரதத்தின் பையை நிறைத்துவிடுகின்றார். இலட்சுமி, நாராயணருடைய இராஜ்யத்தைப் பொற்காலம் (கோல்டன் ஏஜ்) என்று கூறப்படுகின்றனது. இப்பொழுது இரும்பு யுகம் ஆகும், எவ்வளவு வித்தியாசம் உள்ளது பாருங்கள். நான் குழந்தைகளுக்கு இராஜயோகம் கற்பித்துக் கொண்டு இருக்கின்றேன் என்று தந்தை கூறுகின்றார். நீங்கள் தேவி, தேவதைகளாக இருந்தீர் கள். பிறகு, சத்திரியர், வைஷ்யர், சூத்திரர் ஆனீர்கள். இப்பொழுது மீண்டும் பிராமணர் ஆகியிருக்கிறீர்கள், மீண்டும் தேவதை ஆகப்போகிறீர்கள். இந்த 84 பிறவிகளின் சக்கரத்தை நீங்கள் நினைவு செய்யுங்கள். சித்திரங்களை வைத்துப் புரிய வைப்பது மிக எளிதாகும். எப்பொழுது தேவி தேவதைகளின் இராஜ்யம் நடந்ததோ, அப்பொழுது வேறு எந்த இராஜ்யமும் கிடையாது. ஒரு இராஜ்யம் மட்டுமே இருந்தது, மிகவும் குறைவானவர்களே இருந்தனர். இதை சொர்க்கம் என்று கூறப்படுகிறது. அங்கே தூய்மையும் இருந்தது, சுகம், சாந்தியும் இருந்தது. மறுபிறவி எடுத்து, எடுத்து கீழே வந்துவிட்டனர். 84 பிறவிகளைக் கூட இவர்களே எடுத்தார்கள், இவர்களே தமோபிர தானம் ஆகிவிடுகின்றனர். பிறகு, இவர்களே சதோபிரதானம் ஆக வேண்டும். எவ்வாறு சதோபிரதானம் ஆவது? அவசியம் கற்றுக்கொடுக்கக்கூடியவர் வேண்டும். தந்தையைத் தவிர வேறு எவரும் கற்றுத்தர முடியாது. சிவபாபா இவருடைய அனேகப் பிறவிகளின் இறுதியில் இவருக்குள் பிரவேசம் செய்கின்றார் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். எவ்வளவு தெளிவுபடுத்திப் புரியவைக்கின்றார்! நல்லது.
இனிமையிலும் இனிமையான வெகுகாலத்திற்குப் பிறகு தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாய், தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கியமான சாரம்
1.
ஒரு தந்தையிடம் மட்டும் அனைத்து ஆன்மிக சம்மந்தங்களும் வைக்கவேண்டும். சேவாதாரி குழந்தைகளுக்கு மரியாதை கொடுக்கவேண்டும். தனக்குச் சமமாக ஆக்கக்கூடிய சேவை செய்யவேண்டும்.
2.
எல்லையற்ற தந்தை மூலம் நமக்கு எல்லையற்ற உலகத்தின் இராஜ்ய பாக்கியம் கிடைத்துக்கொண்டு இருக்கின்றது. பூமி, ஆகாயம் ஆகிய அனைத்தின் மீதும் நமக்கு அதிகாரம் இருக்கும் - இந்த போதை மற்றும் குஷியில் இருக்கவேண்டும். தந்தை மற்றும் ஆஸ்தியை நினைவு செய்ய வேண்டும்.
வரதானம்:
குழந்தை மற்றும்
எஜமானன் என்ற
தன்மையின் சமநிலையின்
மூலம் முயற்சி
மற்றும் சேவையில்
சதா வெற்றி
மூர்த்தி ஆகுக.
எல்லைக்கு அப்பாற்பட்ட
பாபா மற்றும் எல்லைக்கு அப்பாற்பட்ட ஆஸ்திக்கு குழந்தை யாகவும் எஜமானன் என்ற நஷாவில் சதா இருங்கள். ஆனால் எப்பொழுது ஏதாவது ஆலோசனை தர வேண்டும், திட்டங்களை சிந்திக்க வேண்டும், செயல்படுத்த வேண்டுமென்றால்
எஜமானனாக இருந்து செய்யுங்கள். அதன் பிறகு எப்பொழுது அநேகர் மூலம் அல்லது நிமித்தமாக இருக்கக்கூடிய
ஆத்மாக்கள் மூலம் ஏதாவது விஷயம் தீர்மானம் செய்ய படுகிறது என்றால் அந்த நேரத்தில் குழந்தையாகி
விடுங்கள். சில நேரங்களில் ஆலோசனையை துணிச்சலாக தரவேண்டும், சில நேரங்களில் ஆலோசனை ஏற்றுக்கொள்ள வேண்டும் - இந்த விதிமுறையை கற்றுக் கொண்டீர்கள் என்றால் முயற்சி மற்றும் சேவை இரண்டிலும் வெற்றியடைந்தவராக இருப்பீர்கள்.
சுலோகன்:
நிமித்தம் மற்றும் பணிவானவர் ஆவதற்காக மனம் மற்றும் புத்தியை பிரபு (பாபா) விற்கு அர்ப்பணம் செய்து விடுங்கள்
0 Comments