Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 27.01.23

 

27-01-2023  காலைமுரளி  ஓம்சாந்தி  பாப்தாதா  மதுபன்

 



Listen to the Murli audio file



சாராம்சம்:

இனிய குழந்தைகளே, உங்கள் புத்தியை தெய்வீகமானதாக்குவதற்கு, தந்தை விளங்கப்படுத்துகின்ற விடயங்களை மிகத்தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். முதலில் இவற்றை உங்களுக்குள் கிரகித்துப் பின்னர் மற்றவர்களையும் அவ்வாறு செய்யத் தூண்டுங்கள்.

கேள்வி:

எந்த மிக ஆழமான, களிப்பூட்டும் விடயத்தை, நீங்கள் மிகத்தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்?

பதில்:

அசரீரியான தந்தை எவ்வாறு தாய், தந்தையாக ஆகுகின்றார் என்பதும் அவர் உலகை எந்த முறையில் படைக்கின்றார் என்பதும் மிக ஆழமான, களிப்பூட்டும் விடயங்களாகும். அசரீரியான தந்தை ஒரு தாய் இல்லாது உலகைப் படைக்க முடியாது. எவ்வாறு அவர் ஒரு சரீரத்தினுள் பிரவேசித்து, அதைத் தத்தெடுக்கின்றார், அவருடைய வாயின்மூலம், குழந்தைகளாகிய உங்களை அவர் எவ்வாறு தத்தெடுக்கின்றார்;, எவ்வாறு பிரம்மா ஒரு தந்தையாகவும், தாயாகவும் இருக்கின்றார் போன்ற விடயங்கள் அனைத்தையும் மிகத்தெளிவாகப் புரிந்து கொண்டு, நினைவு செய்யப்படுவதுடன், உங்கள் உணர்விலும் வைத்திருக்கப்பட வேண்டும்.

பாடல்:  நீங்களே தாயும், தந்தையும்

ஓம் சாந்தி: நீங்கள் தாய், தந்தை என அழைப்பவர்களில், நிச்சயமாகத் தந்தையே வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். இந்தத் தாயும், தந்தையும் இணைந்தேயுள்ளனர். மனிதர்களுக்கு இதை புரிந்து கொள்வது மிகவும் சிரமமானதாகும். இருந்தபோதிலும், இதுவே புரிந்துகொள்ளப்பட வேண்டிய பிரதான விடயமாகும். தந்தை என அழைக்கப்படுகின்ற அசரீரியான பரமதந்தை பரமாத்மாவே, தாய் எனவும் அழைக்கப்படுகின்றார். இது ஓர் அற்புதமான விடயமாகும். பரமதந்தை, பரமாத்மா மனித உலகைப் படைக்கின்றபோது, ஒரு தாய் நிச்சயமாகத் தேவைப்படுகிறார். இந்த விடயம் மிக ஆழமானதாகையால், இது எவரது புத்தியிலும், பிரவேசிப்பதில்லை. அவர் அனைவரதும் தந்தையாவார் எனவே ஒரு தாயும் தேவைப்படுகின்றார். அத்தந்தை அசரீரியானவர், எனவே அவர் யாரைத் தாயாகத் தத்தெடுக்க வேண்டும்? அவர் எவரையும் திருமணம் செய்வதில்லை. இந்த விடயங்கள் அனைத்தும், அதி ஆழமான களிப்பூட்டும் விடயங்களாகும். புதியவர்களால் இந்த விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. பழையவர்கள் புரிந்துகொண்டாலும், அவர்கள் அதைத் தங்களது உணர்வுகளில் வைத்திருக்கச் சிரமமாக உணர்கின்றனர். குழந்தைகள் மாத்திரமே, தாய், தந்தையர் என்ற உணர்வில் இருக்கின்றனர். பாரதத்தில் அவர்கள் இலக்ஷ்மி, நாராயணனைத் தாய், தந்தை என அழைக்கின்றனர், அவர்கள் ராதை, கிருஷ்ணரின் விக்கிரகங்களின் முன்னால் சென்று, அவர்களைத் தாய், தந்தை என அழைக்கின்றனர். இப்பொழுது அவர்கள் இளவரசர்கள், இளவரசிகளாவர். ஒரு விவேகமற்றவர் கூட அவர்களைத் தாய், தந்தை என அழைக்கமாட்டார்கள். மக்கள் இவ்வாறு கூறுகின்ற பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். ஆயினும், இந்த விடயம் முற்றிலும் தனித்துவமானதாகும். இலக்ஷ்மி, நாராயணனின் குழந்தைகள் மாத்திரமே அவர்களைத் தாய், தந்தை என அழைக்கின்றார்கள். அதிகளவு செல்வத்தைக் கொண்டிருப்பவர்களும், அரண்மனைகளிலும், மாளிகைகளிலும் வசிப்பவர்களும் சுவர்க்கத்தில் இருப்பதாக மக்கள் எண்ணுகின்றனர். அவர்களுடைய குழந்தைகளும், தங்களுடைய பெற்றோரிடம் அதிகளவு செல்வம் உள்ளது எனக் கூறுகின்றனர். அவர்கள் நிச்சயமாகத் தங்களது முன்னைய பிறவியில் நல்ல செயல்களைச் செய்திருக்க வேண்டும். அச்சா, நீங்களே, தாயும், தந்தையும் என மக்கள் பாடுகின்றபோது, படைப்பவராகிய பரமதந்தை பரமாத்மாவைப் பற்றியே அவர்கள் இவ்வாறு பாடுகின்றனர். அவர் அசரீரியானவர், நாங்கள் அவரது குழந்தைகளாவோம். ஆத்மாக்களாகிய நாங்களும், அசரீரியானவர்களே, எனவே அவ்வாறாயின், எவ்வாறு அசரீரியானவர் உலகை படைக்க முடியும்? ஒரு தாய் இல்லாது, உலகைப் படைக்க முடியாது. உலகம் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்பது அற்புதமாகும். பரமதந்தை பரமாத்மாவே உலகைப் படைப்பவர், அவர் புதிய உலகைப் படைப்பதற்காகப் பழைய உலகிற்கே வருகின்றார். ஆனால் அவர் எவ்வாறு அதைப் படைக்கின்றார்? இது மிக ஆழமான விடயமாகும். நாங்கள் தாய், தந்தை என அழைக்கின்ற ஒருவரே அசரீரியானவர் ஆவார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களைத் தத்தெடுக்கின்றேன். குழந்தைகள் கர்ப்பத்திலிருந்து வெளியாகின்றார்கள் என்ற கேள்வியில்லை. எவ்வாறு அதிகளவு குழந்தைகள் அப்படி வெளியாகமுடியும்? ஆகையால் அவர் கூறுகின்றார்: நான் இந்த சரீரத்தைத் தத்தெடுத்து, பின்னர் குழந்தைகளாகிய உங்களை இவரின் வாயினூடாகத் தத்தெடுக்கின்றேன். மனித உலகைப் படைப்பவரான இந்த பிரம்மா தந்தை ஆவார், அத்துடன் அவர் தாயும் ஆவார், குழந்தைகளாகிய உங்களை நான் அவரது வாய் மூலமாகத் தத்தெடுக்கின்றேன். இந்த முறையில் குழந்தைகளைத் தத்தெடுப்பது தந்தையொருவரின் பணியாகும். சந்நியாசிகளால் இதைச் செய்யமுடியாது. அவர்கள், சீடர்களையும், பின்பற்றுபவர்களையும் கொண்டுள்ளனர், இங்கே இது படைப்பிற்கான விடயமாகும். பாபா இவரினுள் பிரவேசிக்கின்றார், எனவே வாய்வழித்தோன்றல்களே கூறுகின்றனர்: நீங்களே தாயும், தந்தையும். ஆகையால், இவரே தாய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. தந்தை இவரினுள் பிரவேசித்து, உங்களையும் படைக்கின்றார். இந்த வயதானவரே மனித குலத்தின் தந்தையாவார், எனவே தாயும் வயதானவராகவே இருக்கவேண்டும். வயதான ஒருவரே தேவைப்படுகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தாய் தந்தையை நினைவு செய்யவேண்டும். இவரிடம் எந்த சொத்துமில்லை. நீங்கள் வாரிசுகள் ஆகின்றீர்கள். இதனாலேயே இவர் பாப்தாதா என அழைக்கப்படுகின்றார். நீங்கள் பிரஜாபிதாவிடமிருந்து சொத்தைக் கோருவதில்லை. இந்த தாதாவும் (பிரம்மா) அதை அவரிடம் இருந்தே கோருகின்றார். இவர் தாதா என்றும், அத்துடன் தாய் என்றும் அழைக்கப்படுகின்றார். இல்லையெனில் எவ்வாறு தாய், தந்தையர் நிரூபிக்கப்படமுடியும்? தாய், தந்தை, குழந்தைகள் பற்றிய விடயங்கள் மிகவும் ஆழமானதும், புரிந்துகொண்டு நினைவுசெய்வதற்குத் தகுதியானதுமாகும். பாபா, நீங்களே தந்தை. நாங்கள் இந்தத் தாயின் மூலமே பிறப்பெடுத்துள்ளோம். நாங்கள் நிச்சயமாக ஆஸ்தியையும் நினைவு செய்கின்றோம். நீங்கள் அந்தத் தந்தையை நினைவு செய்யவேண்டும். எவ்வாறு தந்தை இந்தத் தூய்மையற்ற உலகில் பிரவேசிக்கின்றார் என இந்த ஞானத்தினால், உங்களால் புரிந்துகொள்ள முடிகின்றது. அவர் கூறுகின்றார்: நான் பிரவேசிக்கின்றவரும் எனது புத்திரனாவார். அவர் உங்களுடைய தந்தையும் அத்துடன் தாயுமாவார், எனவே நீங்கள் குழந்தைகள் ஆகின்றீர்கள். தந்தையை நினைவு செய்வதன்மூலம், நீங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். தாயை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் ஆஸ்தியைப் பெறுவதில்லை. நீங்கள் சதா அத்தந்தையை நினைவுசெய்து, இந்த சரீரத்தை மறக்க வேண்டும். ஞானத்தின் இந்த விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டியவையாகும். தந்தை பழைய உலகத்திற்குள் வந்து, புதிய உலகைப் படைக்கின்றார். அவர் பழையதை அழிக்கின்றார். இல்லையெனில், யார் அதைச் செய்வார்கள்? பழைய உலகின் விநாசம் சங்கரர் மூலம் இடம்பெற்றது என நினைவுகூரப்பட்டுள்ளது. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது, இதனாலேயே இது நினைவு கூரப்படுகின்றது. புதிய இராச்சியம் உங்களுக்காகவே உருவாக்கப்படுகின்றது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். விநாசத்திற்கான முழு ஆயத்தங்களும் செய்யப்பட்டுள்ளன. உங்களில் பலர் உள்ளீர்கள். நீங்கள் அனைவரும் இராச்சியத்தைக் கோருகின்றீர்கள். நீங்கள் இதைக் குருட்டு நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்டீர்கள் என்றில்லை. இராமருடைய சீதை கடத்தப்பட்டார் எனச் சிலர் கூறியுள்ளனர். மக்கள் அதை உண்மை என்றே கூறுகின்றனர். நீங்கள் எதையாவது விளங்கிக் கொள்ளவில்லையானால், கேட்டு, அதைப்புரிந்து கொள்ள முயற்சி செய்யவேண்டும். இல்லையெனில் நீங்கள் விவேகமற்றவர்களாகவே இருப்பீர்கள். நீங்கள் பக்தி மார்க்கத்தில் தற்காலிக சந்தோஷத்தையே பெறுகின்றீர்கள். நீங்கள் செய்தவற்றிற்கான குறுகிய காலத்திற்கான பலனை, அந்தப் பிறவியிலோ அல்லது அடுத்த பிறவியிலோ பெறுகின்றீர்கள். மக்கள் யாத்திரை செல்லும்போது அந்த குறுகிய காலத்தில், அவர்கள் தூய்மையாக இருக்கின்றனர், அவர்கள் எந்தப் பாவமும் செய்வதில்லை. அத்துடன் அவர்கள் தானதர்மங்களும் செய்கின்றனர். அது காக்கையின் எச்சம் போன்ற சந்தோஷம் என அழைக்கப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதைப் புரிந்துகொள்ளமுடியும். ஏனெனில் நீங்கள் குரங்குகளிலிருந்து ஆலயத்தில் வீற்றிருக்கத் தகுதியானவர்கள் ஆகின்றீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் தெய்வீகப்புத்தியைக் கொண்டிருந்தீர்கள். ஏனெனில் அது தெய்வீக தேவ, தேவியரின் இராச்சியமாக இருந்தது. அங்கே தங்க மாளிகைகள் இருந்தன. இங்கே, கற்களைத் தவிர வேறெதுவுமில்லை. உங்களுடைய தெய்வீகப் புத்தியைக் கல்லுப்புத்தி ஆக்கியது யார்? ஐந்து விகாரங்களின் ரூபத்திலுள்ள இராவணன் ஆவான். அனைவரது புத்தியும் கல்லாகும்போதே, தந்தை உங்களுடைய புத்தியை தெய்வீகமானதாக்குகின்றார். விதையினதும், விருட்சத்தினதும் ஞானம் விளங்கப்படுத்தப்பட்டு, இலகுவாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அவர் மிகுதியை சரியாக விளங்கப்படுத்துவதுடன், தொடர்ந்தும் அவ்வாறு செய்வார். சுருக்கமாக, அவர் கூறுகின்றார்: உங்களுடைய ஆஸ்தியைப் பெறுகின்ற தந்தையை நினைவு செய்யுங்கள். தாயை நினைவு செய்யவேண்டிய அவசியமில்லை. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள்! குழந்தைகளே, நிச்சயமாக நீங்கள் ஒரு தாயின் மூலமே பிறப்பு எடுக்கின்றீர்கள். தந்தையிடமிருந்து, உங்கள் ஆஸ்தியைப் பெறுவதற்காகவே, நீங்கள் பிறப்பு எடுத்துள்ளீர்கள். இந்தத் தாயையும், சகல சரீரசம்பந்தமானவர்களையும் ஒருபுறம் ஒதுக்கிவிடுங்கள். ஏனெனில், நீங்கள் தந்தையிடமிருந்தே உங்கள் ஆஸ்தியைக் கோரவேண்டும். லௌகீகப் பெற்றோரின் குழந்தைகளாக இருக்கின்ற அதேவேளை ஆத்மாக்கள் ஆன்மீகத் தந்தையின் குழந்தைகளுமாவார்கள் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொண்டுள்ளீர்கள். அந்த எல்லையற்ற தந்தை புதிய உலகைப் படைக்கின்றார். பாரதம் சுவர்க்கமாக இருந்தது. இலக்ஷ்மி, நாராயணன் சுவர்க்கதில் அதிபதிகளாக இருந்தார்கள். இப்பொழுது அவர்கள் அவ்வாறில்லை. எல்லையற்ற தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் ஒவ்வொரு பிறவியிலும் எல்லைக்குட்பட்ட ஆஸ்தியையே பெறுகின்றீர்கள். ஏனெனில், நரகத்தில் எல்லைக்குட்பட்ட ஆஸ்தியே உள்ளது. சுவர்க்கத்தில், ஆஸ்தி எல்லைக்குட்பட்டது என அழைக்கப்படுவதில்லை. அந்த ஆஸ்தி எல்லையற்றது. ஏனெனில், நீங்கள் எல்லையற்றதன், அதாவது முழுஉலகினதும் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். அங்கே வேறு எந்த மதங்களும் இருக்கமாட்டாது. எல்லைக்குட்பட்ட ஆஸ்தி துவாபர யுகத்திலேயே ஆரம்பமாகின்றது, ஆனால் சத்தியயுகத்தில் அது எல்லையற்றதாகும். அங்கே, நீங்கள் பலனை அனுபவம் செய்கின்றீர்கள். அங்கே நீங்கள் எல்லையற்ற இராச்சியத்தைக் கொண்டுள்ளீர்கள். அரசன் அரசி எவ்வாறோ, பிரஜைகளும் அவ்வாறேயாவர். பிரஜைகளும் கூட, தாங்கள் முழுஉலகின் அதிபதிகள் என்றே கூறுகின்றனர். தற்போதைய மக்கள் தாங்கள் முழு உலகினதும் அதிபதிகள் என்று கூறுவதில்லை. இப்போது அதிகளவு வரையறைகள் உள்ளன. அவர்கள் கூறுகின்றனர்: நீங்கள் எங்கள் கடல் எல்லைக்குள் பிரவேசிக்க முடியாது. இது எங்களது பிரதேசமாகும். அங்கே பிரiஐகளும் கூட தாங்கள் முழு உலகினதும் அதிபதிகள் என்றும், தங்களது சக்கரவர்த்தி, சக்கரவர்த்தினிகளான இலக்ஷ்மி, நாராயணனும் உலகஅதிபதிகள் என்றும் கூறுவார்கள். அங்கே ஒரு இராச்சியம் மாத்திரமே இருக்கும் என இப்பொழுது நாங்கள் புரிந்து கொள்கின்றோம். அந்த இராச்சியம் எல்லையற்றது. முன்னர் பாரதம் எவ்வாறு இருந்தது என்பது எவரது புத்தியிலுமில்லை. எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்களுடைய ஆஸ்தியைப் பெறுவதற்கான வழிகாட்டல்களைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பெறுகின்றீர்கள். நாங்கள் இதைக் கூறுகின்றோம், எனவே நாங்கள் நிச்சயமாக அதைக் கோருகின்றோம். எல்லையற்ற தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவராவார். “21 தலைமுறைகளுக்கான பாக்கியம்நினைவுகூரப்படுகின்றது. “தலைமுறைஎன்ற வார்த்தை ஏன் பயன்படுத்தப்படுகிறது? ஏனெனில், அங்கே நீங்கள் வயதாகியதும் மரணிப்பீர்கள்; அங்கே அகால மரணங்கள் இருப்பதில்லை. அங்கே பெண்கள் ஒருபோதும் விதவைகள் ஆகுவதில்லை. அங்கே அழுது புலம்புவது இருக்கமாட்டாது. இங்கே அதிகளவு அழுதலும், புலம்புதலும் உள்ளது. அங்கே குழந்தைகளும் அழுவதில்லை. இங்கே அவர்கள் குழந்தைகளை வேண்டுமென்றே அழச்செய்கின்றனர், அதனால் அவர்களுடைய சுவாசப்பை விரிவடைகின்றது. இவ்வாறான விடயங்கள் எதுவும் அங்கு இருக்கமாட்டாது. நாங்கள் முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்றே, எல்லையற்ற தந்தையிடமிருந்து எங்களின் ஆஸ்தியைக் கோருகின்றோம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் புரிந்துகொள்கின்றீர்கள். 84 பிறவிகள் இப்பொழுது முடிவடைகின்றன. இது வீடு திரும்புவதற்கான நேரமாகும். தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்வதன் மூலமே பாவங்களை அழிக்க முடியும். “மன்மனாபவஎன்பதன் அர்த்தம் மிக இலகுவானதாகும்! அந்த கீதை பொய்யாக இருந்தபோதிலும், அதிலுள்ள சில விடயங்கள் உண்மையானவை. உங்களுடைய தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள்! என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் என்னிடம் வரவேண்டும் எனக் கிருஷ்ணர் கூறுவதில்லை. இப்பொழுது பரமாத்மா, ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் நுளம்புக்கூட்டம் போன்று திரும்ப வேண்டும், எனவே ஆத்மாக்கள் நிச்சயமாகப் பரமாத்மாவைப் பின்தொடர்வார்கள். கிருஷ்ணர் ஒரு சரீரதாரி. ஆத்மாவாகிய என்னை நினைவு செய்யுங்கள் என அவர் கூறுவதில்லை. அவரது பெயர் கிருஷ்ணராகும். எந்த ஆத்மாவாலும் இதைக் கூறமுடியாது, ஏனெனில், ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள். தந்தை கூறுகின்றார்: நான் அசரீரியானவர். எனது பெயர் சிவன் ஆகும். எவ்வாறு கிருஷ்ணர் இதைக் கூறமுடியும்? அவருக்கு ஒரு சரீரமுண்டு. சிவபாபாவுக்குச் சொந்தமாக ஒரு சரீரமில்லை. சிவபாபா கூறுகின்றார்: முதலில் குழந்தைகளாகிய நீங்களும் சரீரமற்றே இருந்தீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரமற்றே இருந்தீர்கள், பின்னர் நீங்கள் சரீரத்தை எடுத்தீர்கள். நீங்கள் இப்பொழுது, நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் விழிப்புணர்வைக் கொண்டுள்ளீர்கள். எப்படி, எப்போது, ஏன் தந்தை உலகைப் படைக்கின்றார்? உலகம் ஏற்கனவே உள்ளது, இருந்தும் புதிய உலகம் பிரம்மாவின் மூலம் படைக்கப்பட்டது என நினைவுகூரப்படுகின்றது. ஆகையால், அவர் நிச்சயமாக அதைப் பழைய உலகிலிருந்தே அதனை உருவாக்கினார். மனிதர்களும், தேவர்களாக்கப்பட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்: நான் இந்தக் கல்வியின் மூலமாக உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுகின்றேன். நீங்கள் பூஐpக்கத்தக்க தேவர்களாக இருந்தீர்கள், பின்னர் நீங்கள் பூஐpப்பவர்கள் ஆகின்றீர்கள். எவ்வாறு 84 பிறவிகள் எடுக்கப்படுகிறது என மக்கள் புரிந்து கொள்வதில்லை. அனைவரும் 84 பிறவிகள் எடுக்கின்றனரா? உலகின் சனத்தொகை தொடர்ந்தும் அதிகரிக்கின்றது, எனவே எவ்வாறு அனைவரும் 84 பிறவிகள் எடுக்கமுடியும்? நிச்சயமாகச் சக்கரத்தில் தாமதமாக வருகின்றவர்கள். வெகு சில பிறவிகளே எடுக்கின்றனர். 25-50 வருடங்களுக்குள் எவ்வாறு எவராலும் 84 பிறவிகள் எடுக்க முடியும்? இதுவே சுயதரிசனச் சக்கரமாகும். ஆனால் அவர்கள் இந்த சுயதரிசனச் சக்கரத்தை ஓர் ஆயுதமாகச் சித்தரித்துள்ளனர். ஆத்மாக்களாகிய நீங்கள் எவ்வாறு 84 பிறவிகளுக்கூடாகச் செல்கின்றீர்கள் என்ற விழிப்புணர்வை இப்பொழுது கொண்டுள்ளீர்கள். சக்கரம் இப்பொழுது முடிவிற்கு வருகின்றது. நாடகமும் மறுபடி இடம்பெற உள்ளது. மறைந்த ஆதிசனாதன தேவி தேவதா தர்மம் இப்பொழுது மீண்டும் தேவைப்படுகின்றது. மனிதர்கள் கூறுகின்றனர்: தந்தையாகிய கடவுளே, கருணை காட்டுங்கள்! தந்தை கூறுகின்றார்: அச்சா, நான் உங்களைத் துன்பத்திலிருந்து விடுவித்து, சந்தோஷமானவர்கள் ஆக்குகின்றேன். அனைவரையும் சந்தோஷமானவர்கள் ஆக்குவதே தந்தையின் பணியாகும். இதனாலேயே நான் ஒவ்வொரு கல்பத்திலும் வந்து, பாரதத்தை வைரம் போன்று ஆக்குகின்றேன். நான் உங்கள் அனைவரையும் மிகவும் சந்தோஷமானவர்களாக ஆக்கி ஏனைய அனைவரையும் முக்திதாமத்திற்கு அனுப்புகின்றேன். பக்தர்களும் சந்தோஷமாக இருப்பதற்காகக் கடவுளைச் சந்திக்க விரும்புகின்றனர், ஆனால் சந்நியாசிகளோ சந்தோஷம் காக்கையின் எச்சம் போன்றது என ஏற்கனவே கூறிவிட்டார்கள். அவர்கள் மீண்டும் திரும்பிவந்து இந்த நாடகத்தில் நடிக்க விரும்பவில்லை என்பதும் அவர்கள் கூறுகின்ற இன்னொரு விடயமாகும். அவர்கள் அநாதியான முக்தியை வேண்டுகின்றனர், ஆயினும், அவர்களால் அநாதியான முக்தியைப் பெறமுடியாது. இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டதாகும். சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதையும், முழு உலகினதும் வரலாற்றையும், புவியியலையும் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்துகொண்டுள்ளீர்கள். இதுவும் கூட சுயதரிசன சக்கரம் என்றே அழைக்கப்படுகின்றது. அவர்கள் சக்கரத்தினால் அனைவரது தலைகளும் துண்டிக்கப்பட்டதாகச் சித்தரித்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் கம்சனின் சிரச்சேதம் பற்றிய நாடகத்தையும் காட்டியுள்ளார்கள். ஆயினும், அவ்வாறான விடயங்கள் எதுவுமில்லை. இங்கே எந்த வன்முறையுமில்லை. இது ஒரு கல்வியாகும். நீங்கள் கற்றுத் தந்தையிடமிருந்து உங்களின் ஆஸ்தியைக் கோரவேண்டும். ஓர் ஆஸ்தியைக் கோருவதற்காக எவருமே அவரது தந்தையைக் கொல்லத் தேவையில்லை. அது எல்லைக்குட்பட்ட ஆஸ்தியாகும். ஆனால் இங்கே எல்லையற்ற தந்தையிடமிருந்து நீங்கள் கோருகின்ற ஆஸ்தி எல்லையற்றதாகும். கீதையிலே யுத்தங்கள் போன்றவை பற்றிய பல விடயங்களை அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். அவ்வாறு எதுவுமில்லை. உண்மையில், பாண்டவர்கள் எவருடனும் சண்டையிடவில்லை. குழந்தைகளாகிய நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து புதிய உலகமெனும் உங்களின் ஆஸ்தியை யோகசக்தி மூலமே கோருகின்றீர்கள். யுத்தம் என்ற கேள்வியேயில்லை அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. 21 தலைமுறைகளுக்கு உங்களின் ஆஸ்தியைக் கோருவதற்கு, சதா தந்தையையும், ஆஸ்தியையும் நினைவு செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். எந்த சரீரதாரிகளையும் நினைவு செய்யாதீர்கள்.
  2. உங்களுடைய புத்தியில் தொடர்ந்தும் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுங்கள்: நாங்கள் பூஜிக்கத்தக்கவர்களாக இருந்து, பின்னர் பூஜிப்பவர்கள் ஆகினோம். நாங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தை முடித்துவிட்டோம், நாடகம் இப்பொழுது மறுபடியும் இடம்பெற உள்ளது. பூஐpப்பவர்களிலிருந்து நாங்கள் பூஐpக்கத்தக்கவர்கள் ஆகவேண்டும். இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதே சுயதரிசனச் சக்கரத்தை சுழற்றுவதாகும்.

ஆசீர்வாதம்:

சமமாக இருப்பதனால், மிக அருகாமையில் ஓர் ஆசனத்தைப் பெற்றுக் கொள்வதன் மூலம், முதற்பிரிவில் பிரவேசிக்கின்ற ஓர் வெற்றி இரத்தினம் ஆகுவீர்களாக.

நேரம் அருகாமையில் இருப்பதால், இப்;பொழுது உங்களை தந்தைக்குச் சமமாக ஆக்குங்கள். தந்தையை போன்று அதாவது உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், சம்ஸ்காரங்கள் மற்றும் சேவையில் அவருக்கு நெருக்கமாக இருங்கள். தந்தையின் சகவாசத்தையும், ஒத்துழைப்பையும், அன்பையும் உங்கள் ஒவ்வொரு எண்ணத்திலும் அனுபவம் செய்யுங்கள். சதா தந்தையின் சகவாசத்;தை அனுபவம் செய்து அவரின் கரங்களை உங்கள் கரங்களுடன் உணர்ந்து கொண்டால், நீங்கள் முதல் பிரிவிற்குள் பிரவேசிப்பீர்கள். சதா ஒரே தந்தையின் நினைவையும் அவர் மீது முழுமையான அன்பையும் கொண்டிருக்கும் போது, நீங்கள் வெற்றி மாலையில் ஒரு வெற்றி இரத்தினமாக ஆகுவீர்கள். இப்பொழுதும் உங்களுக்கு ஒரு வாய்ப்பு உள்ளது, ‘காலந்தாழ்ந்து விட்டதுஎன்ற அறிவிப்பு பலகை இன்னமும் போடப்படவில்லை.

சுலோகம்:

சந்தோஷத்தை அருள்பவர் ஆகி, துன்பத்திலிருந்தும் அமைதியின்மையிலிருந்தும் பல ஆத்மாக்களை விடுவிக்கின்ற சேவையை செய்வதே சுக்தேவன் (சந்தோஷத்தை அருள்பவர்) ஆகுவதாகும்.

 

---ஓம் சாந்தி---

Download PDF

Post a Comment

0 Comments