Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 26.01.23

 

26-01-2023  காலைமுரளி  ஓம்சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



சாராம்சம்:

இனிய குழந்தைகளே, உங்கள் சரீரம் உட்பட, நீங்கள் அனைத்தையும் மறந்து, அமிர்தவேளையில், தூய்மையான, அமைதியான சூழலில் நினைவைக் கொண்டிருக்க வேண்டும். அந்; நேரத்தில் உங்களால் மிக நன்றாக நினைவு செய்ய முடியும்.

கேள்வி:

குழந்தைகளாகிய நீங்கள் செய்கின்ற எந்த ஒரு மிகச் சிறந்த செயலின் ஊடாக தந்தையிடமிருந்து நீங்கள் சக்தியை பெறுகிறீர்கள்?

பதில்:

உங்களிடமுள்ள அனைத்தையும் அதாவது உங்கள் மனம், சரீரம், செல்வத்தை தந்தையிடம் அர்ப்பணிப்பதே, அதி சிறந்த செயலாகும். நீங்கள் அனைத்தையும் அர்ப்பணிக்கும் போது, அதற்குப் பதிலாக, சதா அமைதியும் சந்தோஷமும் நிறைந்த துண்டிக்கப்பட முடியாத அநாதியான உலகை, உங்களால் ஆட்சிசெய்ய முடியுமளவிற்கு தந்தை உங்களுக்கு அதிகளவு சக்தியை கொடுக்கின்றார்.

கேள்வி:

வேறு எந்த மனிதராலும் கற்பிக்க முடியாத எந்த சேவையை தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பித்துள்ளார்?

பதில்:

ஆன்மிக சேவையை ஆகும். விகாரங்கள் என்ற நோயிலிருந்து ஆத்மாக்களை குணப்படுத்துவதற்கு நீங்கள் அவர்களுக்கு ஞான ஊசியை போடுகிறீர்கள். நீங்கள் ஆன்மிக சமூக சேவையாளர்கள். மக்களால் பௌதீக சேவை செய்ய முடியும், ஆனால் அவர்களால் ஆத்மாக்களுக்கு ஞான ஊசி போட்டு, சதா அவர்களை அணையாத விளக்குகள் ஆக்க முடியாது. தந்தை மாத்திரமே இந்த சேவையை எவ்வாறு செய்வதென உங்களுக்குக் கற்பிக்கின்றார்.

ஓம் சாந்தி. கடவுள் பேசுகிறார்: எந்த மனிதரையும் கடவுள் என அழைக்க முடியாது என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. இது மனித உலகமாகும், ஆனால் பிரம்மா விஷ்ணு, சங்கரர் சூட்சும உலகில் இருக்கிறார்கள். சிவபாபாவே ஆத்மாக்களின் அழியாத தந்தை ஆவார். அழிகின்ற சரீரத்தின் தந்தை அழிபவர் ஆவார். அனைவரும் இதனை புரிந்து கொண்டுள்ளனர். நீங்கள் வினவலாம்: உங்கள் அழிகின்ற சரீரத்தின் தந்தை யார்? ஆத்மாவின் தந்தை யார்? ஆத்மாக்களாகிய நீங்கள் பரந்தாமத்தில் வசிக்கிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள். இப்பொழுது, உங்களை சரீர உணர்வுடையவர் ஆக்கியவர் யார்? உங்கள் சரீரத்தை உருவாக்கியவரே. இப்பொழுது, உங்களை ஆத்ம உணர்வுடையவர் ஆக்குபவர் யார்? ஆத்மாக்களின் அநாதியான தந்தை ஆவார். ‘அநாதியானஎன்றால் ஆரம்பம், மத்தி, இறுதி அற்றவர். ஆத்மாக்களுக்கும் பரமாத்மாவிற்கும் ஆரம்பம், மத்தி, இறுதி உள்ளதென நீங்கள் கூறுவீர்களாயின், அது படைப்பை பற்றியதொரு கேள்வியை எழுப்புகின்றது. அவர் அநாதியான பரமாத்மாவான அநாதியான ஆத்மா என அழைக்கப்படுகின்றார். ஓர் ஆத்மா, ஆத்மா என்றே அழைக்கப்படுகின்றார். ஓர் ஆத்மா நிச்சயமாக புரிந்து கொள்கிறார்: நான் ஓர் ஆத்மா. ஆத்மா கூறுகின்றார்: இந்த ஆத்மாவான என்னை சந்தோஷமற்றவர் ஆக்காதீர்கள். நான் ஒரு பாவாத்மா. ஆத்மாவே இதனை கூறுகின்றார். ஆத்மாக்கள் சுவர்க்கத்தில் இத்தகைய வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள். இந்த நேரத்திலேயே ஆத்மாக்கள் தூய்மையற்றவர்களில் இருந்து தூய்மையானவர்கள் ஆகுகின்றார்கள். தூய்மையற்ற ஆத்மாக்கள் தூய ஆத்மாக்களின் புகழைப் பாடுகிறார்கள். மனித ஆத்மாக்கள் அனைவரும் மறுபிறவி எடுக்க வேண்டும். இவ்விடயங்கள் அனைத்தும் புதியவை ஆகும். தந்தை உங்களுக்கு கட்டளையிடுகிறார்: நீங்கள் அமர்ந்திருக்கும் போதும், நடமாடித் திரியும் போதும் என்னை நினைவுசெய்யுங்கள். முன்னர், நீங்கள் பூஜிப்பவர்களாக இருந்தீர்கள். நீங்கள் கூறுவதுண்டு: சிவாய நமக: (சிவனுக்கு வந்தனங்கள்) இப்பொழுது தந்தை கூறுகின்றார்: நீங்கள் பல தடவைகள் பூஜிப்பவர்களாக தலைவணங்கி இருக்கிறீர்கள். ஆகையால், நான் இப்பொழுது பூஜிக்கத்; தகுதியான அதிபதிகளாக உங்களை ஆக்குகின்றேன். பூஜிக்கத் தகுதியானவர்கள் தலைவணங்க வேண்டியதில்லை. பூஜிப்பவர்களே தலைவணங்கவோ அல்லது நமஸ்தே கூறவோ வேண்டும். ‘நமஸ்தேஎன்றால் வணங்குதல் அல்லது உங்கள் தலையை சற்று தாழ்த்துவது என்று அர்த்தமாகும். குழந்தைகளாகிய நீங்கள் எவருக்கும் தலைவணங்க வேண்டியதி;ல்லை. இலக்ஷ்மி நாராயணனுக்கோ, விஷ்ணு தேவனுக்கோ சங்கர தேவனுக்கோ தலை வணங்க வேண்டியதில்லை. இந்த சொற்கள் அனைத்தும் வழிபாட்டு சம்பிரதாயத்திற்கு உரியவையாகும். நீங்கள் இப்பொழுது முழு உலகினதும் அதிபதிகள் ஆக வேண்டும். நீங்கள் தந்தையை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். அவர்களும் கூறுவதுண்டு: அவரே அமரத்துவ ரூபமான, மரணத்திற்கெல்லாம் மரணமான (மகா காலன்) சர்வசக்திவான். ஒளிப்புள்ளி வடிவமான அவரே உலகைப் படைப்பவர் ஆவார். ஆரம்பத்தில், அவர்கள் அவரை அதிகளவு போற்றுவதுண்டு. அதன் பின்னர் அவர் சர்வவியாபி என்றும் அவர் பூனையிலும் நாயிலும் இருக்கின்றார் என்று கூற ஆரம்பித்தார்கள். இவ்வாறாக, அனைத்து புகழும் முடிவடைந்தது. மனிதர்கள் அனைவருமே தற்போது பாவாத்மாக்கள் ஆவார்கள். அவ்வாறாயின், மிருகங்களுக்கு என்ன புகழ் இருக்க முடியும்? இவை அனைத்தும் மனிதர்களுக்கே பொருந்தும். ஆத்மா கூறுகின்றார்: நான் ஓர் ஆத்மா. இது எனது சரீரம். ஆத்மா ஒரு புள்ளியாக இருப்பதைப் போன்றே, பரமாத்மாவான பரமதந்தையும் ஒரு புள்ளியே ஆவார். அவர் கூறுகின்றார்: தூய்மையற்றவர்களை தூய்மை ஆக்குவதற்காக நான் ஒரு சாதாரண சரீரத்திற்குள்;;;;;; பிரவேசிக்கின்றேன். நான் வந்து, குழந்தைகளின் கீழ்ப்படிவான சேவையாளன் ஆகி அவர்களுக்கு சேவை செய்கின்றேன். நான் ஆன்மிக சமூக சேவையாளன் ஆவேன். எவ்வாறு ஆன்மிக சேவையை செய்ய வேண்டும் என்றும் நான் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றேன். ஏனைய அனைவரும் எல்லைக்குட்பட்ட பௌதீக சேவையை எவ்வாறு செய்வது என்றே உங்களுக்குக் கற்பிக்கின்றார்கள். உங்கள் சேவை ஆன்மிகமாகும். ஆகையாலேயே அது நினைவுகூரப்படுகின்றது: சற்குரு ஞான தைலத்தை கொடுத்ததால், அறியாமை என்ற இருள் அகன்றது. அவர் மாத்திரமே உண்மையான சற்குரு ஆவார். அவர் மாத்திரமே அதிபதி ஆவார். அவர் வந்து ஆத்மாக்கள் அனைவருக்கும் ஊசி போடுகின்றார். விகாரங்களின் நோய் ஆத்மாக்களுக்குள் உள்ளது. வேறு எவரிடமும் இந்த ஞான ஊசி இல்லை. சரீரங்கள் அல்ல, ஆத்மாக்களே தூய்மையற்றதாகி உள்ளதால் ஆத்மாக்களுக்கே ஊசி ஏற்ற வேண்டியுள்ளது. அவர்கள் ஐந்து விகாரங்கள் என்ற கசப்பான நோயை கொண்டிருக்கின்றார்கள். ஞானக்கடலான தந்தையை தவிர, வேறு எவரிடமும் இந்த ஊசி இல்லை. தந்தை வந்து ஆத்மாக்களுடன் பேசுகின்றார்: ஆத்மாக்களே, நீங்கள் உயிர் வாழும் விளக்குகள். பின்னர் மாயை உங்கள் மீது நிழலை படியச் செய்கிறாள். இந்த நிழலை அவள் படியச் செய்து, நாளடைவில் அவள் உங்கள் புத்திகளில் இருள் சூழச் செய்து விட்டாள். யுதிஷ்டர் அல்லது திரித்திராஷ்டர் என்ற கேள்விக்கு இடமில்லை. இது இராவணனை குறிக்கின்றது. தந்தை கூறுகின்றார்: நான் சாதாரணமான ஒரு முறையிலேயே வருகின்றேன். அரிதாக சிலரே என்னை இனங்காண்கின்றார்கள். சிவஜெயந்தி, கிருஷ்ணஜெயந்தியில் இருந்து வேறுபட்டது. நீங்கள் கிருஷ்ணரை பரமாத்;மா சிவனான பரமதந்தையுடன் ஒப்பிட முடியாது. இவர் அசரீரியானவர், அவர் சரீரதாரியாவார். தந்தை கூறுகின்றார்: நான் அசரீரியானவன். அவர்கள் எனது புகழைப் பாடி என்னை அழைக்கின்றார்கள்: தூய்மையாக்குபவரே, மீண்டும் ஒருமுறை வந்து, பாரதத்தை அரசர்களின் தெய்வீக பூமியான சத்தியயுகமாக மாற்றுங்கள். அரசர்களின் தெய்வீக பூமி ஒரு காலத்தில் நிலவியது, அது இப்பொழுது இல்லை. அதனை மீண்டும் ஸ்தாபிக்கப் போவது யார்? பரமாத்மாவான பரமதந்தை பிரம்மாவினூடாக புதிய உலகை ஸ்தாபிக்கின்றார். இப்பொழுது, இது தூய்மையற்ற மக்களால், மக்கள் ஆட்சி செய்யப்படுகிறார்கள். இது இடுகாடு என அழைக்கப்படுகின்றது. மாயை அதனை அழித்துவிட்டாள். இப்பொழுது உங்கள் சரீரங்களையும் சரீர உறவினர் அனைவரையும் மறந்து தந்தையான என்னை நினைவு செய்ய வேண்டும். உங்கள் ஜீவனோ பாயத்திற்காக நீங்கள் செயல்களை செய்ய வேண்டும். ஆனால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னை நினைவுசெய்ய முயற்சி செய்ய வேண்டும். இவர் மாத்திரமே அதற்கான வழிமுறையை உங்களுக்குக் காட்டுகின்றார். அதிகாலை அமிர்தவேளையின் போது உங்களால் என்னை அதிகளவு நினைவுசெய்ய முடியும், ஏனெனில் அந்த நேரம் தூய்மையானதும் அமைதிநிறைந்ததும் ஆகும். அந்த நேரத்தில் கள்ளர்கள் எதனையும் திருடவோ எவரும் ஏதேனும் பாவங்களை செய்யவோ, எவரும் விகாரத்தில் ஈடுபடவோ மாட்டார்கள். அனைத்தும் உறக்க நேரத்திலேயே ஆரம்பம் ஆகின்றது. அது முற்றிலும் தமோபிரதான் இரவு எனப்படுகின்றது. இப்பொழுது தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, கடந்தது கடந்தாகும். பக்தி மார்க்கம் என்ற நாடகம் முடிவடைந்து விட்டது. இது இப்பொழுது உங்களுடைய இறுதி பிறவி என உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. எவ்வாறு உலக சனத்தொகை அதிகரிக்கும் என்ற கேள்வி எழுவதில்லை. விரிவாக்கம் தொடர்ந்தும் இடம்பெறும். இன்னமும் மேலே இருக்கின்ற ஆத்மாக்கள், கீழே வரவேண்டும். அவர்கள் அனைவரும் வந்த பி;ன்னர், விநாசம் ஆரம்பமாகும். அதன் பின்னர் அனைவரும் வரிசைக்கிரமமாகத் திரும்பிச் செல்ல வேண்டும். வழிகாட்டி எப்பொழுதும் முன்னால் இருக்கின்றார். தந்தை முக்தியளிப்பவர் என்றும் தூய்மையாக்குபவர் என்றும் அழைக்கப்படுகின்றார். சுவர்க்கம் தூய உலகமாகும். அதனை தந்தையை அன்றி வேறு எவராலும் படைக்க முடியாது. நீங்கள் இப்பொழுது தந்தையின் ஸ்ரீமத்திற்கு ஏற்ப உங்கள் மனம், சரீரம், செல்வத்தினால் பாரதத்திற்கு சேவை செய்கிறீர்கள். காந்திஜீயும் இதனையே செய்ய விரும்பினார், ஆனால் அவரால் அதனை செய்ய முடியவில்லை. நாடகத்தின் நியதி அதுவாகும். அது இப்பொழுது கடந்துவிட்டது. தூய்மையற்ற அரசர்களின் உலகம் முடிவிற்கு வந்துவிட்டது என்பதால் அதன் பெயரும் சுவடும் மறைந்து விட்டது. அவர்களின் சொத்தின் பெயரும் சுவடும் கூட இல்லை. இலக்ஷ்மியும் நாராயணனும் உலக அதிபதிகளாக இருந்தார்கள் என மக்கள் நம்புகிறார்கள். ஆனால் அவர்களை அவ்வாறு ஆக்கியவர் யார் என்பதை அவர்கள் அறியாதிருக்கிறார்கள். நிச்சயமாக, அவர்கள் தமது ஆஸ்தியை சுவர்க்கத்தைப் படைக்கின்ற தந்தையிடமிருந்தே பெற்றிருக்க வேண்டும். வேறு எவராலும் அத்தகைய மகத்துவமான ஆஸ்தியை கொடுக்க முடியாது. இவ்விடயங்கள் வேறு எந்த சமயநூல்களிலும் குறிப்பிடப்படவில்லை. இது கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால், அவர்கள் பெயரை மாற்றியுள்ளார்கள். அவர்கள் பாண்டவர்கள் கௌரவர்கள் இருசாராருக்கும் இராச்சியம் இருந்தது எனக் காட்டுகிறார்கள். ஆனால் இங்கே இருசாராருக்குமே இராச்சியம் இருப்பதில்லை. தந்தை அதனை மீண்டும் ஸ்தாபிக்கின்றார். குழந்தைகளாகிய உங்களுடைய சந்தோஷபாதரசம் அதிகரிக்க வேண்டும். நாடகம் இப்பொழுது முடிவிற்கு வருகின்றது, நாங்கள் திரும்பிச் செல்லவுள்ளோம். நாங்கள் இனிய வீட்டின் வாசிகள். அவர்கள் இன்னார் இன்னார் நிர்வாணாவிற்குச் சென்றதாகவோ அல்லது ஒளியுடன் ஒளி கலந்தது என்றோ அல்லது அவருக்கு அநாதியான முக்தி கிடைத்தது என்றோ கூறுகிறார்கள். பாரத வாசிகள் சுவர்க்கத்தை இனிமையானதாக இனங்காண்கிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: அவர் சுவர்க்கத்திற்குச் சென்று விட்டார். தந்தை விளங்கப்படுத்துகிறார்: எவருமே அநாதியான முக்தியை அடைவதில்லை. தந்தையே அனைவருக்கும் முக்தி அளிப்பவர் அத்துடன் அவர் அனைவருக்கும் சந்தோஷத்தையும் அருள்கின்றார். ஒரு நபர் நிர்வாண உலகில் அமர்ந்திருக்கும் போது, இன்னொருவர் துன்பத்தில் வேதனையடைந்தால், தந்தையினால் அதனை சகித்துக் கொள்ள முடியாது. தந்தையே தூய்மையாக்குபவர், ஒன்று தூய முக்திதாமமும் மற்றயது தூய ஜீவன்முக்திதாமமும் ஆகும். துவாபரயுகத்தின் பின்னர், அனைவரும் தூய்மையற்றவர்கள் ஆகுகின்றார்கள். பஞ்ச தத்துவங்கள் போன்ற அனைத்தும் தூய்மையற்றதாகின்றன. அதன் பின்னர் தந்தை வந்து அவற்றை தூய்மையாக்குகிறார். உங்கள் சரீரங்கள் அங்கே தூய தத்துவங்களால் அழகாக இருக்;கும். இயற்கை அழகு இருக்கும். அவர்களிடம் இயற்கையான கவர்ச்சி இருக்கும். ஸ்ரீகிருஷ்ணரிடம் அதிகளவு கவர்ச்சி உள்ளது. பெயரே சுவர்க்கம் ஆகும். அவ்வாறாயின் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள்? கடவுள் அமரத்துவ ரூபமானவர் என அதிகளவு போற்றப்படுகின்றார், ஆனால் அவரை அவர்கள் கல்லிலும் கூழாங்கற்களிலும் இட்டுள்ளார்கள். எவருக்கும் தந்தையை தெரியாது. தந்தை வரும் பொழுதே அவரால் விளங்கப்படுத்த முடியும். லௌகீகத் தந்தையிலும் கூட, அவர் குழந்தைகளை உருவாக்கிய பின்னரே, அவர்களால் தந்தையின் சுயசரிதையை அறிந்து கொள்ள முடியும். தந்தை கூறாமல் குழந்தைகளால் எவ்வாறு தந்தையின் சுயசரிதையை அறிந்து கொள்ள முடியும்? இப்பொழுது தந்தை கூறுகின்றார்: நீங்கள் இலக்ஷ்மி அல்லது நாராயணனை திருமணம் செய்ய வேண்டுமாயின், நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இலக்கு மிகவும் உயர்ந்தது, எனினும் வருமானம் மிப்பெரியது. சத்தியயுகத்தில் தூய இல்லறப்பாதை இருந்தது. தூய இராஜஸ்தான் (இராஜக்களின் இடம்) இருந்தது. அது இப்பொழுது தூய்மையற்றதாகி உள்ளது. அனைத்தும் விகாரம் நிறைந்ததாகியுள்ளன. இது அசுர உலகம், இங்கு அதிகளவு ஊழல் நிறைந்துள்ளது. உங்களுக்கு ஆட்சி செய்வதற்கு சக்தி தேவையாகும். மக்களிடம் இறை சக்தி இல்லை. இங்கு மக்களே மக்களை ஆட்சி செய்கிறார்கள். தான தர்மம் செய்பவர்களும் நல்ல செயல்கள் செய்பவர்களும் இராஜகுடும்பத்தில் பிறக்கிறார்கள். அந்தளவிற்கு கர்மத்தின் சக்தி உள்ளது. நீங்கள் இப்பொழுது மிகவும் மேன்மையான செயல்களை செய்கிறீர்கள். நீங்கள் அனைத்தையும் (சரீரம், மனம், செல்வம்) சிவபாபாவிற்கு அர்ப்பணிப்பதால், சிவபாபாவும் அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு அர்ப்பணிக்கின்றார். நீங்கள் அவரிடம் இருந்து சக்தியை பெற்று, அநாதியான துண்டிக்கப்பட முடியாத, சந்தோஷமும், அமைதியும் நிறைந்த இராச்சியத்தை ஆட்சி செய்கிறீர்கள். மக்களிடம் எந்த சக்தியும் இல்லை. ஒருவர் செல்வத்தை தானம் செய்ததால் அவர் எம்.எல். ஆகினார் என நீங்கள் கூற மாட்டீர்கள். செல்வத்தை தானம் செய்வதால், அவர் செல்வந்த குடும்பத்தில் பிறப்பெடுப்பார். இப்பொழுது இராச்சியம் எதுவும் இல்லை. பாபா இப்பொழுது உங்களுக்கு அதிகளவு சக்தியை கொடுக்கின்றார். நீங்கள் கூறுகிறீர்கள்: நாங்கள் நாராயணை திருமணம் செய்வோம். நாங்கள் மனிதர்களில் இருந்து தேவர்கள் ஆகுகிறோம். இவ்விடயங்கள் அனைத்தும் புதியவை ஆகும். நாரதரின் கதை இந்நேரத்திற்கானதாகும். இராமாயணம் போன்றனவும் இந் நேரத்திற்கு உரியவையே. சத்தியயுகத்திலும் திரேதாயுகத்திலும் எந்த சமயநூல்களும் இருக்க மாட்டாது. அனைத்து சமயநூல்களும் இந்நேரத்துடன் தொடர்புடையவையாகும். நீங்கள் விருட்சத்தைப் பார்த்தால், அனைத்து பிரிவுகளும், ஸ்தலங்களும் பின்னரே வருகின்றன. பிராமண, தேவ, சத்திரிய குலங்களே பிரதானமானவையாகும். பிராமணர்களின் உச்சிகுடுமி பிரபல்யமாகும். அனைத்திலும் அதியுயர்வான பிராமண குலம், சமயநூல்களில் குறிப்பிடப்படவில்லை. அவர்கள் விஷ்ணுவின் பல்ரூப வடிவத்தில், பிராமணர்களை தவிர்த்துவிட்டார்கள். இது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டது. தாம் பக்தி செய்வதனால் கீழ் இறங்குகின்றோம் என்பதை உலக மக்கள் புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் கூறுகிறார்கள்: பக்தி செய்வதனால் உங்களால் கடவுளை சந்திக்க முடியும். அவர்கள் அவரை அதிகளவு கூவியழைத்து, துன்பத்தில் இருக்கும் போதே நினைவுசெய்கிறார்கள். நீங்கள் இதனை அனுபவம் செய்திருக்கிறீர்கள். அங்கே, துன்பத்திற்கான கேள்வி இல்லை, ஆனால் இங்கே அனைவரிடத்திலும் கோபம் உள்ளது. அவர்கள் ஒருவரையொருவர் தொடர்ந்தும் அவமதித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது, சிவன் உங்கள் தந்தை என்பதால், நீங்கள் கூறுவதில்லை: நமசிவாய. அவர்கள் தந்தை சர்வவியாபி எனக் கூறுவதால், சகோதரத்துவம் என்ற எண்ணம் மறைந்து விடுகின்றது. பாரதத்தில் அவர்கள் இந்துக்களும், சீனர்களும் சகோதர்கள் எனக் கூறுகிறார்கள், அத்துடன் சீனர்களும் முஸ்லிம்களும் சகோதர்கள், அனைவருமே ஒரே தந்தையின் குழந்தைகளான சகோதரர்கள். இந்த நேரத்தில் நீங்கள் ஒரே தந்தையின் குழந்தைகள் என்பதை புரிந்து கொண்டிருக்கிறீர்கள். பிராமணர்களின் வம்சாவளி விருட்சம் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது. தேவ தர்மம் இந்த பிராமண தர்மத்திலிருந்து வெளிப்படுகின்றது. சத்திரிய தர்மம் தேவ தர்மத்தின் பின்னர் வருகின்றது. இஸ்லாம் தர்மம் சத்திரிய தர்மத்தின் பின்னர் வெளிப்படுகின்றது, ஏனெனில் இது வம்சாவளி விருட்சம் ஆகும். அதன் பின்னர் பௌத்த சமயமும், கிருஸ்தவ சமயமும் வெளிப்படுகின்றது. விரிவாக்கம் தொடர்ந்தும் இடம்பெறுகின்ற போது பெரியதொரு விருட்சம் உருவாக்கப்படுகின்றது. இது எல்லையற்ற வம்சாவளி விருட்சமாகும், ஆனால் ஏனையவை எல்லைக்குட்பட்டவை. இந்த விபரங்களை கிரகிக்க முடியாதவர்களுக்குத் தந்தை மிகவும் இலகுவான வழிமுறையை காட்டுகிறார்: தந்தையையும் ஆஸ்தியையும் நினைவுசெய்தால், நீங்கள் நிச்சயமாக சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர விரும்பினால், அதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். சிவபாபா உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள், இந்த பாபாவும் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார், அவரே உங்கள் புத்திகளில் உள்ளார், என் புத்தியிலும் அவரே உள்ளார். நாங்கள் சமயநூல்கள் போன்றவற்றைக் கற்றிருந்தாலும், அவை எவற்றினூடாகவும் எங்களால் கடவுளை அறிந்து கொள்ள முடியாது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, சிவபாபாவையும் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். நீங்கள் இவ்வாறாக பாபாவை புகழ வேண்டும். பாபா, நீங்கள் இனிமையானவர் ஆவீர்கள்! இது உங்கள் அற்புதம்! குழந்தைகளாகிய நீங்கள் இறை அதிஷ்டலாபச்சீட்டை வென்றிருக்கிறீர்கள். நீங்கள் ஞானத்திற்கும் யோகத்திற்குமான முயற்சியை செய்ய வேண்டும். நீங்கள் இதில் மிகப் பெரிய பரிசைப் பெறுகிறீர்கள் என்பதால் நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. நாடகம் இப்பொழுது முடிவடைய உள்ளது. நாங்கள் இப்பொழுது எங்களுடைய இனிய வீட்டிற்குத் திரும்பிச் செல்கிறோம். இந்த விழிப்புணர்வில் உங்களுடைய சந்தோஷ பாதரசம் எப்பொழுதும் உயர்வாக இருக்கட்டும்.
  2. கடந்தது கடந்தாக இருக்கட்டும், இந்த இறுதிப் பிறவியில், தூய்மையின் ஒத்துழைப்பை தந்தைக்கு வழங்குங்கள். உங்கள் சரீரம், மனம், செல்வத்தினால் பாரதத்தை சுவர்க்கமாக்குகின்ற சேவையில் மும்முரமாக இருங்கள்.

ஆசீர்வாதம்:

அகநோக்குடையவர் ஆகி, உங்கள் பழைய கணக்குகள் அனைத்தையும், அவை எண்ணங்களினது சம்ஸ்காரங்களினது வடிவில் இருந்தாலும் அவை அனைத்தையும் முடிப்பீர்களாக.

பாப்தாதா இப்பொழுது குழந்தைகள் அனைவரதும் சுத்தமான கணக்குப் புத்தகங்களைப் பார்க்கவே விரும்புகின்றார். பழைய, சிறிய கணக்கேனும், அதாவது, எண்ணங்கள், சம்ஸ்காரங்கள் என்ற வடிவிலேனும் புறநோக்குக் கணக்கு சற்றும் இருக்கக்கூடாது. சகல பந்தனங்களில் இருந்தும் சதா விடுபட்டு, யோகயுக்தாக இருங்கள். இதுவே அகநோக்குடன் இருப்பது என அழைக்கப்படுகின்றது. ஆகையால், நீங்கள் அதிகளவு சேவை செய்யலாம், ஆனால், அதனை செய்யும் போது, புறநோக்குடன் அல்லாது, அகநோக்குடன் இருங்கள். அகநோக்குடைய உங்கள் முகத்தினால் தந்தையின் பெயரைப் போற்றுங்கள். ஆத்மாக்களை அவர்கள் தந்தைக்குரியவர் என்பதையிட்டு மிகவும் சந்தோஷமடைபவர்கள் ஆக்குங்கள்.

சுலோகம்:

உங்கள் சொந்த மாற்றத்தினூடாக, உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், உறவுகள் தொடர்புகளினால் நீங்கள் வெற்றி ஈட்டுவதே வெற்றி சொரூபம் ஆகுதல் ஆகும்.

 

---ஓம் சாந்தி---

Download PDF

Post a Comment

0 Comments