Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 25.01.23

 

25-01-2023  காலைமுரளி  ஓம்சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



சாராம்சம்:

இனிய குழந்தைகளே, தந்தையை நினைவுசெய்வதற்கு, பெருமளவு முயற்சி செய்யுங்கள், ஏனெனில் நீங்கள் நிஜத் தங்கமாக வேண்டும்.

கேள்வி:

சிறந்த முயற்சியாளர்களின் அடையாளங்கள் எவை?

பதில்:

உண்மையான முயற்சியாளர்கள் ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறார்கள். சதா ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்களே, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருபவர்கள். பாபா ஏன் சதா ஸ்ரீமத்தைப் பின்பற்றுமாறு குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்? ஏனெனில் அவரே உண்மையான அன்பிற்கினியவரும், ஏனையோர் அவருடைய காதலிகளும் ஆவார்கள்.

ஓம் சாந்தி. பழைய, புதிய குழந்தைகள் இருசாராரும்ஓம் சாந்திஎன்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொண்டுள்ளார்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் அனைவரும் பரமாத்மாவின் குழந்தைகள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துகொண்டுள்ளீர்கள். பரமாத்மாவே அதிமேன்மையானவரும், அனைவராலும் நேசிக்கப்படுகின்ற அன்பிற்கினியவரும் ஆவார். குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தினதும், பக்தியினதும் முக்கியத்துவம் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஞானம் என்றால் சத்திய, திரேதா யுகங்களாகிய, பகல் ஆகும். பக்தி என்றால் துவாபர, கலியுகங்களாகிய, இரவு ஆகும். இது பாரதத்துக்குப் பொருந்துகிறது. உங்களுக்கு ஏனைய சமயங்களுடன் அந்தளவு தொடர்பு கிடையாது. நீங்களே 84 பிறவிகளை அனுபவம் செய்பவர்கள். பாரத மக்களாகிய நீங்களே முதலில் வருபவர்கள். 84 பிறவிகளின் சக்கரம் பாரத மக்களாகிய உங்களுக்கே உரியது. இஸ்லாமிய அல்லது பௌத்த சமயத்தவர்கள் 84 பிறவிகளை எடுக்கிறார்கள் என எவராலும் கூற முடியாது; இல்லை. பாரத மக்களே 84 பிறவிகளை எடுப்பவர்கள். பாரதம் அழிவற்ற தேசமாகும். அது ஒருபொழுதும் அழிக்கப்படுவதில்லை, ஆனால் ஏனைய தேசங்கள் அனைத்தும் அழிக்கப்படுகின்றன. பாரதமே அதிமேலான தேசம்;; அது அழிவற்றது. பாரத தேசம் மாத்திரமே சுவர்க்கம் ஆகுகிறது; வேறெந்தத் தேசமும் சுவர்க்கம் ஆகுவதில்லை. சத்திய யுகமாகிய, சுவர்க்கமான, புதிய உலகில் பாரதம் மாத்திரமே இருந்தது என்று குழந்தைகளான உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. பாரதமே சுவர்க்கம் என அழைக்கப்பட்டது. அவர்கள் 84 பிறவிகளை எடுக்கிறார்கள். இறுதியில், அனைவரும் நரகவாசிகள் ஆகுகிறார்கள், அதே பாரத மக்கள் பின்னர் சுவர்க்கவாசிகள் ஆகுகிறார்கள். இந்நேரத்தில் அனைவரும் நரகவாசிகள். பின்னர் ஏனைய தேசங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு, பாரதம் மாத்திரமே எஞ்சியிருக்கும். பாரத தேசத்தின் எல்லையற்ற புகழ் உள்ளது. அவ்விதமாக, பரமாத்மாவாகிய பரமதந்தையின் புகழும், கீதையின் புகழும் எல்லையற்றவை ஆகும், ஆனால் அது உண்மையான கீதையின் புகழ் மாத்திரமேயாகும். பொய்யான கீதையைச் செவிமடுத்துக் கற்ற பொழுது, நீங்கள் தொடர்ந்தும் வீழ்ந்துள்ளீர்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். இதுவே கீதையின் அதிமங்களகரமான சங்கம யுகம் ஆகும். பின்னர் பாரதம் அனைத்திலும் அதிமேன்மையானதாகும். அந்த ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இப்பொழுது இல்லை; அந்த இராச்சியம் இப்பொழுது இல்லை, அந்த யுகம் இப்பொழுது இல்லை. கீதையில் கிருஷ்ணரின் பெயரை இடுகின்ற தவறு நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். பக்தி மார்க்கம் ஆரம்பமாகும்பொழுது, கீதையே முதலில் இருக்கும். கீதையும், சமயநூல்கள் போன்றவை அனைத்தும் இப்பொழுது அழிக்கப்படவுள்ளன. தேவ தர்மம் மாத்திரமே எஞ்சியிருக்கும். அதனுடன் கீதையும், பாகவதம் போன்றவையும் எஞ்சியிருக்கும் என்பதல்ல் இல்லை. நீங்கள் வெகுமதியைப் பெறுகிறீர்கள், நீங்கள் சற்கதியைப் பெறுவதால், அங்கே சமயநூல்கள் போன்றவற்றிற்கான அவசியம் இல்லை. சத்திய யுகத்தில் குருமார்கள் அல்லது சமயநூல்கள் போன்றவை இருப்பதில்லை. இந்நேரத்தில், பக்தியைக் கற்பிக்கின்ற, எண்ணற்ற குருமார்கள் இருக்கிறார்கள். உங்களுக்குச் சற்கதியை அருள்கின்ற, எல்லையற்ற புகழைக் கொண்ட, ஒரேயொரு ஆன்மீகத் தந்தை மாத்திரமே இருக்கிறார். அவர் உலக சர்வசக்திவான் என அழைக்கப்படுகிறார். அநேகமாக, பாரத மக்களே அவரை அந்தர்யாமி, அதாவது, அவர் அனைவரினுள்ளும் உள்ளவற்றை அறிவார் எனவும் கூறுகின்ற தவறைச் செய்கிறார்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நான் அனைவரின் உள்ளேயும் என்ன உள்ளது என்பதை அறிய மாட்டேன். தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குவதே எனது கடமையாகும். நான் அந்தர்யாமியல்ல. பக்தி மார்க்கத்தில், இந்தப் பொய்யான புகழ் கொடுக்கப்பட்டுள்ளது. நான் தூய்மையற்ற உலகினுள் அழைக்கப்படுகிறேன். நான் பழைய உலகம் புதியதாக்கப்படவுள்ளபொழுது, ஒருமுறை மாத்திரமே வருகிறேன். இவ்வுலகம் புதியதிலிருந்து பழையதாகுகிறது என்பதையும், பின்னர் அது பழையதிலிருந்து புதியதாகுகிறது என்பதையும் மனிதர்கள் அறியார்கள். அனைத்தும் சதோ, ரஜோ, ஸ்திதிகளினூடாகத் தமோவாகுகிறது. மனிதர்களும் இவ்வாறே ஆகுகிறார்கள்: அவர்கள் முதலில் சதோபிரதான் குழந்தைகளாக இருக்கிறார்கள், பின்னர் அவர்கள் இளமை, முதுமை ஸ்திதிகளினூடாகச் செல்கிறார்கள், அதாவது, அவர்கள் ரஜோ தமோ ஸ்திதிகளினூடாகச் செல்கிறார்கள். அவர்களுடைய சரீரங்கள் முதுமை அடையும்பொழுது, அவர்கள் அவற்றை நீக்கி விட்டு, குழந்தைகள் ஆகுகிறார்கள். உலகமும் புதியதிலிருந்து பழையதாக மாறுகிறது. புதிய உலகில் பாரதம் மிகவும் மேன்மையானதாக இருந்தது என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள். பாரதத்தின் புகழ் எல்லையற்றது. பாரதம் செல்வம் மிக்கதாகவும், சந்தோஷமானதாகவும், தூய்மையானதாகவும் இருந்ததைப் போல், வேறெந்தத் தேசங்களும் இருப்பதில்லை. சதோபிரதான் உலகம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகிறது. திரிமூர்த்தியின் படத்தில் பிரம்மா, விஷ்ணு, சங்கரர் காட்டப்பட்டுள்ளார்கள், ஆனால் எவரும் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. உண்மையில், ‘திரிமூர்த்தி பிரம்மாஎன்பதல்லாமல்திரிமூர்த்தி சிவன்எனக் கூறப்பட வேண்டும். பிரம்மா, விஷ்ணு, சங்கரரைப் படைத்தவர் யார்? அது அதிமேன்மையான சிவபாபாவே ஆவார். கூறப்பட்டுள்ளது: பிரம்ம தேவருக்கு வந்தனங்கள், விஷ்ணு தேவருக்கு வந்தனங்கள், சங்கர தேவருக்கு வந்தனங்கள், அத்துடன் பரமாத்மா சிவனுக்கும் வந்தனங்கள். ஆகவே, அவரே அனைவரிலும் உயர்வானவர். அவரே படைப்பவர். பரமாத்மாவான பரமதந்தையே பிரம்மாவினூடாக பிராமணர்களைப் படைக்கிறார் எனப் பாடப்பட்டுள்ளது. அவர்களும் பரமாத்மாவாகிய பரமதந்தையிடமிருந்து தங்கள் ஆஸ்தியைப் பெறுகிறார்கள். அவரே இங்கமர்ந்திருந்து, பிராமணர்களுக்குக் கற்பிக்கிறார், ஏனெனில் அவர் தந்தையும், பரம ஆசிரியரும் ஆவார். எவ்வாறு உலகின் வரலாறும், புவியியலும் என்னும் சக்கரம் சுழல்கிறது என்பதை அவர் இங்கமர்ந்திருந்து, விளங்கப்படுத்துகிறார். அவர் மாத்திரமே ஞானம் நிறைந்தவர். அவர் ஜனிஜனன்கார் என்பதல்ல. அதுவும் ஒரு தவறாகும். பக்தி மார்க்கத்தில் அவருடைய பணியையோ அல்லது அவருடைய சரிதையையோ எவரும் அறியார். அது பொம்மை வழிபாடு போன்றதாகும். கல்கத்தாவில், அந்தப் பொம்மை வழிபாடானது, அதிகளவில் உள்ளது. அவர்கள் அவற்றைப் பூஜித்து, அவற்றுக்கு உணவு படைத்து, பின்னர் அவற்றைக் கடலில் மூழ்கடிக்கிறார்கள். சிவபாபாவே அதியன்பிற்கினியவர். அவர்கள் எனது உருவத்தையும் களிமண்ணால் செய்து, அதனைப் பூஜித்து, பின்னர் அதனை உடைத்து விடுகிறார்கள் எனத் தந்தை கூறுகிறார். அவர்கள் அதனைக் காலையில் உருவாக்கி, மாலையில் உடைத்து விடுகிறார்கள். அவை அனைத்தும் குருட்டு நம்பிக்கைக்குரிய வழிபாடாகிய, பக்தி மார்க்கம் ஆகும். மனிதர்கள் பாடுகிறார்கள்: நீங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவரும், பூஜிப்பவரும் ஆவீர்கள். எவ்வாறாயினும், தந்தை கூறுகிறார்: நான் என்றென்றுமே பூஜிக்கத் தகுதிவாய்ந்தவன். நான் வந்து, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகிறேன். நான் உங்களுக்கு 21 பிறவிகளுக்கான உங்கள் இராச்சிய பாக்கியத்தைக் கொடுக்கிறேன். பக்தி மார்க்கத்தில் தற்காலிகச் சந்தோஷமே உள்ளது. சந்நியாசிகள் கூறுகிறார்கள்: சந்தோஷம் காக்கை எச்சம் போன்றது. சந்நியாசிகள் தங்கள் வீடுகளையும், குடும்பங்களையும் துறந்து விடுகிறார்கள். அது எல்லைக்குட்பட்ட துறவறம்;; அவர்கள் ஹத்தயோகிகள். அவர்கள் கடவுளையும் அறியார்;கள். அவர்கள் பிரம்ம தத்துவத்தை நினைவுசெய்கிறார்கள். பிரம்ம தத்துவம் கடவுள் அல்ல. ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாகிய, ஒரேயொரு அசரீரியான கடவுள் சிவனே உள்ளார். ஆத்மாக்களாகிய நாங்கள் வசிக்குமிடமே பிரம்ம தத்துவம் ஆகும். பிரம்மாந்தம்; இனிய வீடு ஆகும். ஆத்மாக்களாகிய நாங்கள், எங்கள் பாகங்களை நடிப்பதற்கு, அங்கிருந்து வருகிறோம். ஆத்மா கூறுகிறார்: நான் ஒரு சரீரத்தை நீக்கி, இன்னுமொன்றை எடுக்கிறேன். பாரத வாசிகளே 84 பிறவிகளை எடுப்பவர்கள். அதிகளவு பக்தி செய்துள்ளவர்களே அதிகளவு ஞானத்தையும் பெறுவார்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, உங்கள் இல்லறத்தில் இருங்கள், ஆனால் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் பரமாத்மாவாகிய ஒரேயொரு அன்பிற்கினியவரின் காதலிகள். துவாபர யுகத்திலிருந்து நீங்கள் அவரைத் தொடர்ந்தும் நினைவுசெய்துள்ளீர்கள். துன்ப வேளையின்பொழுதே, ஆத்மாக்கள் தந்தையை நினைவுசெய்கிறார்கள். இது துன்ப பூமியாகும். ஆத்மாக்கள் ஆதியில் அமைதிதாம வாசிகள். பின்னர் அவர்கள் சந்தோஷ தாமத்தினுள் வந்து, 84 பிறவிகளை எடுக்கிறார்கள். “ஹம்சோ, சோஹம்என்பதன் அர்த்தமும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆத்மாவும் பரமாத்மாவே எனவும், பரமாத்மாவே ஆத்மா எனவும் அவர்கள் கூறுகிறார்கள். தந்தை இப்பொழுது கூறுகிறார்: ஆத்மாக்கள் எவ்வாறு பரமாத்மாவாக முடியும்? ஒரேயொரு பரமாத்மா மாத்திரமே உள்ளார், ஏனைய அனைவரும் அவருடைய குழந்தைகள். சாதுக்கள், சந்நியாசிகள் போன்றோரும்ஹம்சோஎன்பதற்கு ஒரு தவறான அர்த்தத்தையே கொடுக்கிறார்கள். “ஆத்மாக்களாகிய நாங்கள் சத்திய யுகத்தில் தேவர்களாக இருந்தோம், பின்னர் நாங்கள் சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும், அதன்பின்னர் சூத்திரர்களாகவும் ஆகினோம். தேவர்கள் ஆகுவதற்கு, நாங்கள் இப்பொழுது பிராமணர்களாகி விட்டோம்;.” இதுவேஹம்சோஎன்பதன் அர்த்தமென்று தந்தை இப்பொழுது விளங்கப்படுத்தியுள்ளார். இதுவே மிகச்சரியான அர்த்தம் ஆகும். அவை முற்றிலும் தவறானவை. தந்தை கூறுகிறார்: இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றியதால்;, மனிதர்கள் மிகவும் போலியானவர்கள் ஆகியுள்ளார்கள்! இதனாலேயே கூறப்படுகிறது: மாயையும் பொய், சரீரமும் பொய், உலகமும் பொய். சத்திய யுகத்தில் நீங்கள் இதனைக் கூற மாட்டீர்கள். அது சத்திய பூமியாகும். அங்கே பொய்யான எதனுடையதும் சுவடோ அல்லது அறிகுறியோ கிடையாது, ஆனால் இங்கோ உண்மையின் சுவடே கிடையாது. இங்கே உண்மை இருக்குமாயின், அது ஒரு மூடை மாவில் ஒரு துளி உப்பு இருப்பதைப் போன்றதாகும். சத்திய யுகத்தில் தெய்வீகக் குணங்களையுடைய மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களுடையதே தேவ தர்மம் ஆகும். ஏனைய சமயங்கள் அனைத்தும் பின்னரே வருகின்றன. பின்னர் பிரிவினை தோன்றுகிறது. துவாபர யுகத்தில் இராவணனின் அசுர இராச்சியம் ஆரம்பமாகுகிறது. சத்திய யுகத்தில், இராவண இராச்சியம் இருப்பதில்லை. அங்கே ஐந்து விகாரங்களில் எதுவுமே இருப்பதில்லை, ஆகவே அவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள். இராமரும், சீதையும் 14 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். இராமர் ஏன் அம்புடனும், வில்லுடனும் காண்பிக்கப்படுகிறார் என்பதை எவரும் அறியார்; அது வன்முறைக்கான கேள்வி அல்ல. நீங்கள் இறை மாணவர்கள். அவரே தந்தை, நீங்கள் மாணவர்கள் என்பதால், அவர் உங்களுடைய ஆசிரியரும் ஆவார். பின்னர் அவர் குழந்தைகளாகிய உங்களுக்குச் சற்கதியை அருளி, உங்களைச் சுவர்க்கத்துக்கு அனுப்புகிறார். ஆகவே, அவர் உங்கள் சற்குருவும் ஆவார். இங்கே, அவரே தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆகிய மூவரும் ஆவார். நீங்கள் அவருடைய குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். ஆகவே, உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும்! இது இப்பொழுது இராவண இராச்சியம் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இராவணனே பாரதத்தின் கொடிய எதிரியாவான். குழந்தைகளாகிய நீங்கள் ஞானம் நிறைந்தவராகிய, தந்தையிடமிருந்து இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். அவரே ஞானக் கடலும், பேரானந்தக் கடலுமாகிய தந்தை ஆவார். முகில்களாகிய நீங்கள் ஞானக் கடலிலிருந்து உங்களை நிரப்பி, சென்று, ஏனையோர் மீது ஞானத்தைப் பொழிகிறீர்கள். நீங்களே ஞான கங்கைகள். இந்தப் புகழ் உங்களுக்கே பொருந்துகிறது. எவ்வாறாயினும், கங்கை நீரில் நீராடுவதனால், எவராலும் தூய்மையாக முடியாது. அசுத்த நீரில் நீராடுவதனால் தாங்கள் தூய்மையாகுவார்கள் என அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்கள் நீரூற்றுகளுக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவை அனைத்தும் பக்தி மார்க்கமாகும். சத்திய, திரேதா யுகங்களில் பக்தி கிடையாது. அது முற்றிலும் விகாரமற்ற உலகமாகும். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நான் இப்பொழுது உங்களைத் தூய்மையாக்குவதற்கு வந்துள்ளேன். இந்த ஒரு பிறவியில் என்னை நினைவுசெய்து, தூய்மையாகுங்கள், நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள். நானே தூய்மையாக்குபவர். இயன்றளவுக்கு உங்கள் நினைவு யாத்திரையை அதிகரியுங்கள். நீங்கள் உங்கள் வாயினூடாகசிவபாபா, சிவபாபாஎனக் கூறக்கூடாது. அது ஒரு காதலியும், அன்பிற்கினியவரும் ஒருவரையொருவர் நினைவுசெய்வதைப் போன்றிருக்க வேண்டும்: அவர்கள் மற்றவரை ஒருமுறை பார்த்ததும், அவ்வளவுதான்;; ஒருவருடைய புத்தி மற்றவரை நினைவுசெய்கிறது. பக்தி மார்க்கத்தில், நீங்கள் நினைவுசெய்து வந்தவரின் அல்லது நீங்கள் பூஜிப்பவரின் காட்சிகளைப் பெறுகிறீர்கள். எவ்வாறாயினும், அவை அனைத்தும் தற்காலிகமானதாகும். பக்தி செய்வதனால், நீங்கள் கீழிறங்கி வந்துள்ளீர்கள். இப்பொழுது உங்கள் முன்னிலையில் மரணம் உள்ளது. விரக்திக் கூக்குரல்களின் பின்னர் மாத்திரமே வெற்றிக் குரல்;கள்; இருக்கும். பாரதத்தில் இரத்த ஆறு பாயும். அனைவரும் இப்பொழுது தமோபிரதானாகி விட்டார்கள். இப்பொழுது அனைவரும் சதோபிரதானாக வேண்டும். எவ்வாறாயினும், ஒரு கல்பத்துக்கு முன்னர் தேவர்கள் ஆகியவர்கள் மாத்திரமே இவ்வாறு ஆகுவார்கள். அவர்கள் வந்து, தந்தையிடமிருந்து தங்கள் முழுமையான ஆஸ்தியையும் கோருவார்கள். நீங்கள் குறைந்தளவு பக்தியைச் செய்திருப்பின்,இந்த ஞானத்தை முழுமையாகப் பெற மாட்டீர்கள். நீங்கள் பிரஜைகளின் மத்தியில், வரிசைக்கிரமமாக ஓர் அந்தஸ்தைக் கோருவீர்கள். சிறந்த முயற்சியாளர்கள் ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, ஒரு சிறந்த அந்தஸ்தைக் கோருகிறார்கள். உங்களுக்குச் சிறந்த பண்புகளும் தேவையாகும். நீங்கள் 21 பிறவிகளுக்குத் தொடர்ந்தும் கொண்டிருக்கின்ற, தெய்வீகக் குணங்களைக் கிரகிக்கவும் வேண்டும். இப்பொழுது அனைவருக்கும் அசுர குணங்களே உள்ளன, ஏனெனில் இவ்வுலகம் தூய்மையற்றது. குழந்தைகளான உங்களுக்கு உலகின் வரலாறும், புவியியலும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. இந்நேரத்தில் தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, இப்பொழுது நினைவுக்காகப் பெருமளவு முயற்சியைச் செய்யுங்கள், நீங்கள் நிஜத் தங்கம் ஆகுவீர்கள். சத்திய யுகமே நிஜத் தங்கமாகிய, பொன்னுலகம் ஆகும். பின்னர், திரேதா யுகத்தில், வெள்ளிக் கலப்படம் கலக்கப்பட்டு, கலைகள் தொடர்ந்தும் குறைவடைகின்றன. இப்பொழுது, கலைகள் எதுவுமே இல்லை. இந்த நிலைமை வரும்பொழுது, தந்தை வருகிறார். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் நடிகர்கள். எங்கள் பாகங்களை நடிப்பதற்கு, நாங்கள் இங்கே வந்துள்ளோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். நடிகர்கள் தங்;கள் நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறியாது விட்டால், விவேகமற்றவர்கள் என அழைக்கப்படுகிறார்கள்! எல்லையற்ற தந்தை கூறுகிறார்: அனைவரும் மிகவும் விவேகமற்றவர்களாகி விட்டார்கள். நான் இப்பொழுது உங்களை விவேகிகளாகவும், வைரங்களாகவும் ஆக்குகிறேன். பின்னர் இராவணன் வந்து, உங்களை சிப்பிகளைப் போல் பெறுமதியற்றவர்கள் ஆக்குகிறான். இப்பொழுது இப்பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது. நான் அனைவரையும் நுளம்புக் கூட்டம் போன்று வீட்டுக்கு அழைத்துச் செல்கிறேன். உங்கள் முன்னிலையில் உங்கள் இலக்கும், இலட்சியமும் உள்ளன. நீங்கள் அவர்களைப் போலாகும்பொழுது மாத்திரமே உங்களால் சுவர்க்கவாசிகளாக முடியும். பிரம்மாகுமார்களும், குமாரிகளுமான நீங்கள் இம்முயற்சியைச் செய்கிறீர்கள். எவ்வாறாயினும், மனிதர்களின் புத்தி தமோபிரதானாக உள்ளதால், நீங்கள் அனைவரும் பிரம்மாகுமார்களும், குமாரிகளும் என்பதையும், நிச்சயமாக மக்களின் தந்தையாகிய, பிரம்மாவும் இருக்க வேண்டும் என்பதையும் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. பிராமணர்களே உச்சிக் குடுமிகள். பிராமணர்கள் பின்னர் தேவர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் பல்ரூப வடிவத்திலிருந்து பிராமணர்களையும், சிவனையும் அகற்றியுள்ளார்கள். பிராமணர்கள் இப்பொழுது பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குகிறார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. முகில்களாகிய நீங்கள் ஞானக் கடலிலிருந்து உங்களை நிரப்பி, பின்னர் சென்று ஞானத்தைப் பொழிய வேண்டும். இயன்றளவுக்கு நினைவு யாத்திரையை அதிகரியுங்கள். நினைவைக் கொண்டிருப்பதனால், நிஜத் தங்கம் ஆகுங்கள்.
  2. ஸ்ரீமத்தைப் பின்பற்றி, நல்ல பண்புகளையும், தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். சத்திய பூமிக்குச் செல்வதற்கு, மிகவும் உண்மையானவர்களாகவும் நேர்மையானவர்களாகவும் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:

நீங்கள் ஒருவருடன் மற்றவர் உறவுமுறைகளிலும், தொடர்புகளிலும் வரும்பொழுது, சிறப்பியல்புகளை பார்க்கின்ற கண்ணாடிகளை அணிந்து கொள்வதால், உலகை மாற்றுபவர் ஆகுவீர்களாக.

ஒருவருடன் மற்றவர் உறவுமுறைகளிலும், தொடர்புகளிலும் வரும்பொழுது, ஒவ்வொருவரினதும் சிறப்பியல்புகளைப் பாருங்கள். சிறப்பியல்புகளை மட்டுமே பார்க்கின்ற கண்ணோட்டத்தைக் கொண்டிருங்கள். இன்றைய நாட்களில், கண்ணாடிகளை அணிகின்ற நாகரீகமும், கட்டாயமும் உள்ளன. எனவே, சிறப்பியல்புகளை மட்டுமே பார்க்கின்ற கண்ணாடிகளை அணிந்து கொள்ளுங்கள்; வேறு எதுவும் தென்படாமல் இருக்கட்டும். உதாரணமாக, நீங்கள் சிவப்பு நிற வில்லைகளையுடைய கண்ணாடியை அணியும்பொழுது, பச்சை நிறமானதும் சிவப்பாகவே தென்படும். எனவே, சிறப்பியல்புகளைப் பார்க்கின்ற கண்ணாடிகள் மூலம், நீங்கள் குப்பைகள் எதனையும் பார்க்க மாட்டீர்கள், ஆனால் தாமரை மலரைப் பார்ப்பதால், உலக மாற்றம் எனும் விசேட பணிக்கான ஒரு கருவி ஆகுவீர்கள்.

சுலோகம்:

பிறரைப் பற்றிச் சிந்தித்தல், பிறரைப் பார்த்தல் எனும் தூசியிலிருந்து சதா அப்பால் இருப்பதால், நீங்கள் ஒரு பெறுமதிமிக்க, மாசற்ற வைரம் ஆகுவீர்கள்.

 

---ஓம் சாந்தி---

Download PDF

Post a Comment

0 Comments