Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 24.01.23

 

24-01-2023  காலைமுரளி  ஓம்சாந்தி  பாப்தாதா  மதுபன்



Listen to the Murli audio file



சாராம்சம்:

இனிய குழந்தைகளே, இதுவே பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் சந்திப்பு நடைபெறுகின்ற, சங்கம யுகம் ஆகும். சற்குரு ஒருமுறை மாத்திரமே குழந்தைகளான உங்களுக்கு உண்மையான ஞானத்தைக் கொடுத்து, உண்மையைப் பேசக் கற்பிப்பதற்கு, வருகின்றார்.

கேள்வி:

எக்குழந்தைகளின் ஸ்திதி முதற்தரமானதாக இருக்கின்றது?

தில்:

அனைத்தும் பாபாவுக்கே உரியது எனும் விழிப்புணர்வைப் புத்தியில் கொண்டிருக்கின்ற குழந்தைகளின் ஸ்திதியாகும். ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, அனைத்தையும் முழுமையாகத் துறக்கின்ற குழந்தைகளின் ஸ்திதி முதற்தரமாக இருக்கின்றது. பயணம் நீண்டதாகையால், அதியுயர்வான தந்தையின் மேன்மையான வழிகாட்டல்களை நீங்கள் தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும்.

கேள்வி:

எக்குழந்தைகள் முரளியைச் செவிமடுக்கும்பொழுது, முடிவற்ற சந்தோஷத்தை அனுபவம் செய்கிறார்கள்?

பதில்:

சிவபாபாவின் முரளியைத் தாங்கள் செவிமடுக்கின்றார்கள்; என்பதையும், பிரம்மாவின் சரீரத்தினூடாக சிவபாபாவே இம்முரளிகளைப் பேசுகிறார் என்பதையும் புரிந்துகொள்பவர்கள் ஆவர். எங்கள் அதியன்பிற்கினிய பாபா எங்களைச் சதா சந்தோஷமானவர்கள் ஆக்குவதற்கும், எங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுவதற்கும் எங்களுடன் இதனைப் பேசுகிறார். முரளியைச் செவிமடுக்கும்பொழுது, உங்களுக்கு இந்த விழிப்புணர்வு இருந்தால், நீங்கள் சந்தோஷத்தை அனுபவம் செய்வீர்கள்.

பாடல்:  அன்பிற்கினியவரே, வந்து, என்னைச் சந்தியுங்கள்.

ஓம் சாந்தி. அந்தச் சந்தோஷமற்ற இதயம் துன்ப உலகில் மட்டுமே இருக்கும். சந்தோஷமுடையவர்கள் சந்தோஷ உலகில் இருப்பார்கள். ஒரேயொருவரே பக்தர்கள் அனைவரினதும் அன்பிற்கினியவர் என நினைவுகூரப்படுகிறார். அவர் அன்பிற்கினியவர் (பிரீதாம்) என அழைக்கப்படுகிறார். மக்கள் துன்பத்தை அனுபவம் செய்யும்பொழுதே, அவரை நினைவுசெய்கிறார்கள். யார் இங்கமர்ந்திருந்து, உங்களுக்கு விளங்கப்படுத்துபவர்? உண்மையான அன்பிற்கினியவரும், உண்மையான தந்தையும், உண்மையான ஆசிரியரும், உண்மையான சற்குருவும் ஆவார். அந்த ஒரேயொருவரே அனைவரினதும் அன்பிற்கினியவர், ஆனால் அன்பிற்கினியவர் எப்பொழுது வருகிறார் என்பதை எவரும் அறியார். தான் சங்கம யுகத்தில் ஒருமுறை மாத்திரமே வருவதாக அந்த அன்பிற்கினியவரே வந்து, தனது குழந்தைகளான, தனது பக்தர்களிடம் கூறுகின்றார். எனது வருகைக்கும், செல்கைக்கும் இடையிலுள்ள காலம், சங்கம யுகம் என அழைக்கப்படுகிறது. ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் பல தடவைகள் பிறப்பு, இறப்பினுள் வருகிறார்கள். நான் ஒருமுறை மாத்திரமே வருகிறேன். நான் மாத்திரமே ஒரேயொரு சற்குரு, ஆனால் பல குருமார்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சற்குரு என அழைக்க முடியாது, ஏனெனில் அவர்கள் உண்மையைப் பேசுவதில்லை. அவர்கள் சத்தியமாகிய கடவுளை அறியார்கள். சத்தியமானவரை அறிந்தவர்கள் எப்பொழுதும் உண்மையையே பேசுவார்கள். அச்சற்குருவே சத்தியத்தைப் பேசுபவர். அவரே உண்மையான சற்குரு ஆவார். உண்மையான தந்தையும், உண்மையான ஆசிரியருமானவர்; வந்து, தான் சங்கம யுகத்தில் வருவதாக உங்களுக்குக் கூறுகிறார். நான் இங்கே வருகின்ற கால எல்லையே எனது யுகம் ஆகும். நான் வந்து, தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்கிய பின்னர் திரும்பிச் செல்கிறேன். நான் பிறப்பெடுத்த கணத்திலிருந்து, உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்க ஆரம்பிக்கிறேன். பின்னர், நான் உங்களுக்குக் கற்பிப்பதைப் பூர்த்தி செய்ததும், தூய்மையற்ற உலகம் அழிக்கப்பட்டு, நான் திரும்பிச் செல்வேன். நான் இந்தளவு காலப் பகுதிக்கு மாத்திரமே வருகிறேன்; அவ்வளவுதான். அவர்கள் சமயநூல்களில் ஒரு காலத்தைக் குறிப்பிடவில்லை. சிவபாபா எப்பொழுது பிறப்பெடுக்கிறார் என்பதையும், அவர் பாரதத்தில் எவ்வளவு காலம் இருக்கிறார் என்பதையும், அவர் சங்கம யுகத்தில் வருகிறார் என்பதையும் தந்தையே வந்து, உங்களுக்குக் கூறுகிறார். சங்கம யுகத்தின் ஆரம்பம் எனது வருகையின் ஆரம்பமும், சங்கம யுகத்தின் இறுதி நான் திரும்பிச் செல்கின்ற இறுதியும் ஆகும். இடையில், நான் இங்கமர்ந்திருந்து, உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். தான் இவருடைய ஓய்வு ஸ்திதியில் இவரில் பிரவேசிப்பதாகத் தந்தையே இங்கமர்ந்திருந்து, உங்களுக்குக் கூறுகிறார். நான் ஓர் அந்நிய தேசத்தினுள் ஓர் அந்நிய சரீரத்தில் பிரவேசிக்கிறேன், ஆகவே நான் விருந்தாளி. நானே இந்த இராவண உலகின் விருந்தாளி. இச்சங்கம யுகத்தின் புகழ் மிகவும் முக்கியமானதும், மகத்தானதும் ஆகும். இராவண இராச்சியத்தை அழிப்பதற்கும், இராம இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கும் தந்தை வருகிறார். அவர்கள் சமயநூல்களில் பல கட்டுக்கதைகளை எழுதியுள்ளார்கள். அவர்கள் தொடர்ந்தும் இராவணனை எரிக்கின்றார்கள். இந்நேரத்தில் முழு உலகுமே இலங்கையைப் போன்று உள்ளது. சிலோன் (ஸ்ரீ லங்கா) மாத்திரமே இலங்கை அல்ல் முழு உலகுமே இராவணனின் வசிப்பிடம், அதாவது, துன்பக் குடில் ஆகும். அனைவரும் துன்பத்தை அனுபவம் செய்கிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் அதனைத் துன்பத்திலிருந்து விடுபட்ட குடிலாக்குவதற்கு, அதாவது, சுவர்க்கமாக்குவதற்கு வருகிறேன். சுவர்க்கத்தில் வேறெந்தச் சமயங்களும் இல்லை. அங்கே ஒரு தர்மம் மாத்திரமே இருந்தது, அது இப்பொழுது இல்லை. உங்களை மீண்டும் ஒருமுறை தேவர்கள் ஆக்குவதற்கு, நான் இப்பொழுது உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். அனைவருமே இதனைக் கற்க மாட்டார்கள். நான் பாரதத்தில் மாத்திரமே வருகிறேன். பாரதத்தில் மாத்திரமே சுவர்க்கம் இருக்கிறது. கிறிஸ்தவர்களும் சுவர்க்கத்தை நம்புகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: அவர் சுவர்க்க பூமிக்குச் சென்று விட்டார், அதாவது தந்தையாகிய கடவுளிடம் சென்று விட்டார். எவ்வாறாயினும், அவர்கள் சுவர்க்கத்தைப் புரிந்துகொள்வதில்லை. சுவர்க்கம் வேறுபட்ட ஒன்றாகும். தான் எப்பொழுது, எவ்வாறு வருகிறார் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். நான் வந்து, உங்களைத் திரிகாலதரிசிகள் ஆக்குகிறேன். வேறு எவரும் திரிகாலதரிசிகள் அல்லர். நான் மாத்திரமே உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவேன். இப்பொழுது கலியுகம் அழிக்கப்படவுள்ளது. அதன் அறிகுறிகள் தென்படுகின்றன. இது அதே சங்கம யுகத்தின் காலமாகும். ஒரு மிகச்சரியான நேரம் கொடுக்கப்பட முடியாது, ஆனால் ஆம், இராச்சியம் முழுமையாக ஸ்தாபிக்கப்பட்டு, குழந்தைகளாகிய நீங்கள் உங்களின்; கர்மாதீத ஸ்திதியை அடையும்பொழுது, இந்த ஞானம் முடிவடைந்து, யுத்தம் ஆரம்பமாகும். நானும் எனது தூய்மையாக்குகின்ற பாகத்தைப் பூர்த்தி செய்து, திரும்பிச் சென்றிருப்பேன். எனது பாகத்தில் தேவ தர்மத்தை ஸ்தாபிப்பது உள்ளது. பாரத மக்கள் இதில் எதனையும் அறியார்கள்;. மக்கள் இப்பொழுது சிவனின் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்கள், ஆகவே அவர் நிச்சயமாக ஏதோவொரு பணியைச் செய்திருக்க வேண்டும். பின்னர் அவர்கள் கிருஷ்ணரின் பெயரைப் புகுத்தினார்கள். இது அவர்கள் செய்துள்ள ஒரு பொதுவான தவறு எனத் தோன்றுகிறது. சிவபாபா வந்து, இராஜயோகத்தைக் கற்பிக்கிறார் எனச் சிவபுராணத்திலோ அல்லது வேறெந்தச் சமயநூல்களிலோ குறிப்பிடப்படவில்லை. உண்மையில், ஒவ்வொரு சமயத்திற்;கும் தனது சொந்த, தனிப்பட்ட சமயநூல் உள்ளது. தேவ தர்மத்தின் சமயநூலும் இருக்க வேண்டும், ஆனால் யார் அதனைப் படைப்பவர் என்பதில் அவர்கள் குழப்பமடைந்து விட்டார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நான் நிச்சயமாக பிரம்மாவினூடாகப் பிராமண தர்மத்தைப் படைக்க வேண்டும். பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்களே பிரம்மாகுமார்களும், குமாரிகளும் ஆவர். பலருடைய பெயர்கள் மாற்றப்பட்டன, அவர்களிற் பலர் ஓடி விட்டார்கள். அவர்கள் விட்டுச் சென்றதுடன், ஏனையோர் அவர்களுடைய இடத்துக்கு மாற்றப்பட்டார்கள். புதிய பெயர்களைக் கொடுப்பதில் எந்த நன்மையும் இருக்கவில்லை என்பது காணப்பட்டது. அவர்கள் அந்தப் பெயர்களைக் கூட மறந்து விட்டார்கள். உண்மையில், நீங்கள் தந்தையுடன் யோகத்தைக் கொண்டிருக்க வேண்டும். சரீரங்களிற்கே பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆத்மாக்களுக்கெனப் பெயர்கள் கிடையாது. இந்த ஆத்மா 84 பிறவிகளை எடுக்கிறார். ஒவ்வொரு பிறவியிலும் பெயர், உருவம், இடம், காலம் அனைத்தும் மாற்றமடைகின்றன. நாடகத்தில் உள்ள எவருமே தாம் முன்னர் இன்னுமொரு வேளையில் கொண்டிருந்த அதே பாகத்தை அதே உருவத்துடன் பெறுவதில்லை. 5000 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் அதே பாகம் நடிக்கப்படும். கிருஷ்ணரால் அதே பெயருடனும், ரூபத்துடனும் மீண்டும் வர முடியும் என்பதில்லை; இல்லை. ஒவ்வோர் ஆத்மாவும் ஒரு சரீரத்தை நீக்கி, இன்னுமொன்றை எடுக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள், ஆகவே, ஒருவருடைய முகச்சாயல்கள் இன்னுமொருவருடையதைப் போன்று ஒரேவிதமாக இருக்க முடியாது. ஐந்து தத்துவங்களுக்கு ஏற்ப, முகச்சாயல்களும் மாற்றமடைகின்றன. பல்வேறு விதமான முகச்சாயல்கள் இருக்கின்றன. எவ்வாறாயினும், நாடகத்தில் அவை அனைத்தும் முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டுள்ளன. புதியவை எவையும் உருவாக்கப்பட முடியாது. சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவன் நிச்சயமாக வந்தார். அவரே முழு உலகினதும் அன்பிற்கினியவர். இலக்ஷ்மி நாராயணன், இராதை கிருஷ்ணர், பிரம்மா, விஷ்ணு - அவர்களில் எவரும் அன்பிற்கினியவர் அல்லர். தந்தையாகிய கடவுளே அன்பிற்கினியவர். தந்தை நிச்சயமாக ஆஸ்தியைக் கொடுக்கிறார். இதனாலேயே தந்தை நேசிக்கப்படுகிறார். தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், ஏனெனில் நீங்கள் என்னிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும். நீங்கள் எவ்வாறு கற்றீர்கள் என்பதற்கேற்ப, சென்று, சூரிய வம்சத்துத் தேவர்களாக அல்லது சந்திர வம்சத்து சத்திரியர்களாக ஆகுவீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உண்மையில், பாரத மக்கள் அனைவரினதும் தர்மம் ஒன்றாக இருக்க வேண்டும், ஆனால் அவர்கள்தேவ தர்மம்என்னும் பெயரை மாற்றி, அதற்குஇந்து சமயம்என்னும் பெயரைக் கொடுத்துள்ளார்கள், ஏனெனில் அவர்களிடம் அந்தத் தெய்வீகக் குணங்கள் இல்லை. இப்பொழுது தந்தை இங்கமர்ந்திருந்து, அவற்றைக் கிரகிக்குமாறு உங்களைத் தூண்டுகிறார். அவர் கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, சரீரமற்றவர்கள் ஆகுங்கள். நீங்கள் பரமாத்மா அல்ல. சிவன் ஒருவரே பரமாத்மா. அனைவரினதும் அன்பிற்கினியவராகிய, அவர் சங்கம யுகத்தில் ஒருமுறை மாத்திரமே வருகிறார். இந்தச் சங்கம யுகம் மிகவும் குறுகியது. அனைத்துச் சமயங்களும் அழிக்கப்படவுள்ளன. பிராமணக் குலத்தினரும் வீட்டுக்குத் திரும்பிச் செல்வர், ஏனெனில் பின்னர் அவர்கள் தேவ குலத்துக்கு மாற்றப்பட வேண்டும். உண்மையில், இது ஒரு கல்வி. ஓர் ஒப்பீடு மேற்கொள்ளப்படுகிறது: காம விகாரம் நஞ்சும், இந்த ஞானம் அமிர்தமும் ஆகும். இது மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்கான கல்வி கற்குமிடம் ஆகும். ஆத்மாக்களில் கலக்கப்பட்டுள்ள கலப்படம் அவர்களை முற்றிலும் போலியானவர்கள் ஆக்கியுள்ளது. தந்தை வந்து, உங்களை வைரங்களைப் போன்றவர்கள் ஆக்குகிறார். அவர்கள் சிவனின் இராத்திரியைப் பற்றிப் பேசுகிறார்கள். சிவன் இரவில் வந்தார், ஆனால் அவர் எவ்வாறு வந்தார்? அவர் யாருடைய கருப்பையில் வந்தார்? அல்லது, அவர் யாருடைய சரீரத்தில் பிரவேசித்தார்? அவர் ஒரு கருப்பையில் பிரவேசிப்பதில்லை. அவர் ஒரு சரீரத்தைக் கடனாகப் பெற வேண்டும். அவர் நிச்சயமாக வந்து, நரகத்தைச் சுவர்க்கமாக்;குவார். எவ்வாறாயினும், எப்பொழுது அல்லது எவ்வாறு அவர் இதனைச் செய்கிறார் என்பதை எவரும் அறியார். பலர் சமயநூல்களைக் கற்கிறார்கள், ஆனால் அவர்களில் எவருமே முக்தியையோ அல்லது ஜீவன்முக்தியையோ பெறுவதில்லை. அவர்கள் மேலும் அதிகமாகத் தமோபிரதானாகி விட்டார்கள். நிச்சயமாக அனைவரும் அவ்வாறாக வேண்டும். நிச்சயமாக மனிதர்கள் அனைவரும் மேடையில் பிரசன்னமாக வேண்டும். இறுதியிலேயே தந்தை வருகிறார். அனைவரும் அவருடைய புகழைப் பாடுகிறார்கள்: நீங்கள் மாத்திரமே உங்கள் வழிகளையும், முறைகளையும் அறிவீர்கள். உங்களிடமுள்ள ஞானம் என்ன என்பதையும், நீங்கள் எவ்வாறு சற்கதியை அருள்கிறீர்கள் என்பதையும் நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். ஆகவே அவர் நிச்சயமாக ஸ்ரீமத்தைக் கொடுப்பதற்கு வருவார், இல்லையா? எவ்வாறாயினும், அவர் எவ்வாறு வருகிறார் அல்லது அவர் எந்தச் சரீரத்தில் வருகிறார் என்பதை எவரும் அறியார். அவரே கூறுகிறார்: நான் ஒரு சாதாரண சரீரத்தில் பிரவேசிக்க வேண்டும். நான் நிச்சயமாக அவருக்குபிரம்மாஎனப் பெயரிட வேண்டும். வேறு எவ்வாறு பிராமணர்கள் உருவாக்கப்படுவார்கள்? எங்கிருந்து பிரம்மா வருவார்? அவர் மேலிருந்து வர மாட்டார்;; அவர் சூட்சும உலகவாசியான, அவ்யக்த, சம்பூரண பிரம்மா. ஒரு படைப்பைப் படைப்பதற்காக அவர் நிச்சயமாக இங்கே ஒரு பௌதீக ரூபத்தில் வர வேண்டும். அனுபவத்திலிருந்து எங்களால் உங்களுக்குக் கூற முடியும். அவர் இந்தளவு காலத்துக்கு வந்து, பின்னர் சென்று விடுகிறார். தந்தை கூறுகிறார்: நானும் நாடகத்தின் பந்தத்தில் கட்டுப்பட்டுள்ளேன். இங்கே ஒருமுறை வருவதே எனது பாகமாகும். உலகில் பல அனர்த்தங்கள் தொடர்ந்தும் நடைபெற்று, அந்நேரத்தில் மக்கள் கடவுளை அதிகளவு கூவியழைத்தாலும், நான் எனக்குரிய நேரத்திலேயே வர வேண்டும், நான் ஓய்வு ஸ்திதி உள்ளபொழுதே வருகிறேன். இந்த ஞானம் மிகவும் இலகுவானது, ஆனால் அந்த ஸ்திதியை உருவாக்குவதற்குக் காலம் எடுக்கிறது. இதனாலேயே இலக்கு மிகவும் உயர்வானது எனக் கூறப்படுகிறது. தந்தை ஞானம் நிறைந்தவர், ஆகவே அவர் நிச்சயமாகக் குழந்தைகளுக்கு ஞானத்தைக் கொடுத்தார். அதனாலேயேஉங்கள் வழிகளையும், முறைகளையும் நீங்கள் மாத்திரமே அறிவீர்கள்என்னும் புகழ் உள்ளது. தந்தை கூறுகிறார்: நான் வந்து, என்னிடமுள்ள சந்தோஷம், அமைதி என்னும் பொக்கிஷங்களைக் குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரமே கொடுக்கிறேன். அப்பாவித் தாய்மார்கள் துன்புறுத்தப்படுதல் போன்றன அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அப்பொழுதே, பாவக் கலசம் நிறையும். ஒவ்வொரு கல்பத்திலும் அதே விடயமே மீண்டும் மீண்டும் நடைபெறுகிறது. இந்நேரத்தில் நீங்கள் இவ்விடயங்களை அறிவீர்கள், பின்னர் அவற்றை நீங்கள் மறந்து விடுகின்றீர்கள். சத்திய யுகத்தில் இந்த ஞானம் இருப்பதில்லை. அது இருந்திருப்பின், அது தொன்றுதொட்ட காலத்திலிருந்து தொடர்ந்திருக்கும். அங்கே, அது இந்நேரத்தில் நீங்கள் செய்யும் முயற்சிகளிற்காக நீங்கள் பெறுகின்ற வெகுமதியாக இருக்கிறது. இங்கே முயற்சி செய்கின்ற ஆத்மாக்களே அங்கே இருப்பார்கள்;; அங்கே ஞானம் தேவைப்படுகின்ற ஏனைய ஆத்மாக்களும் இருக்கிறார்கள் என்பதல்ல. ஒருசிலரே அரிதாக வெளிப்படுவார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள். இது மிகவும் நல்லது எனப் பலர் கூறுவார்கள். உதாரணமாக, வெளிநாட்டிலிருந்து ஒரு முக்கியமான நபர் வெளிப்பட்டு, இதனைப் புரிந்துகொள்வார், ஆனால் அவர் ஒரு பத்தியில் இருக்க நேரிடுமாயின், அவர் எதனைப் புரிந்துகொள்வார்? அவர் கூறுவார்: நீங்கள் கூறுவது சிறப்பானது, ஆனால் என்னால் தூய்மையாக இருக்க முடியாது. எவ்வாறாயினும், இங்கே தூய்மையாக இருக்கின்ற பலர் உள்ளார்கள்! திருமணம் செய்து, ஒருமித்து வாழ்பவர்களும் தூய்மையாக இருப்பதனால், ஒரு பெரிய பரிசைப் பெறுகிறார்கள். இதுவும் ஓர் ஓட்டப் பந்தயம் ஆகும். அந்த ஓட்டப் பந்தயங்களில் வெற்றி பெற்று, முதல் இலக்கத்தில் வருபவர்கள் நான்கு அல்லது ஐந்து நூறாயிரங்களைப் பெறுகிறார்கள். இங்கே, நீங்கள் 21 பிறவிகளுக்கான முழு இராச்சியத்தையும் பெறுகிறீர்கள். இது ஒரு சிறிய விடயமா? இந்த முரளி குழந்தைகள் அனைவரையும் சென்றடையும். அவர்கள் அதனை ஒலிநாடாவிலும்; செவிமடுப்பார்கள். அவர்கள் கூறுவார்கள்: பிரம்மாவின் சரீரத்தினூடாக, சிவபாபா முரளியைப் பேசுகிறார். அல்லது, புதல்விகள் அதனைப் பேசினால், தாங்கள் சிவபாபாவின் முரளியை வாசிக்கிறார்கள் எனக் கூறுவார்கள். ஆகவே, உங்கள் புத்தி மேலேயே செல்ல வேண்டும்; நீங்கள் உள்ளார அந்தச் சந்தோஷத்தை உணர வேண்டும். அதியன்பிற்கினிய பாபா எங்களைச் சதா சந்தோஷமானவர்கள் ஆக்குவதுடன், எங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாகவும் மாற்றுகிறார். ஆகவே நீங்கள் அவரைப் பெருமளவுக்கு நினைவுசெய்ய வேண்டும். ஆனால்;, மாயை உங்களை நினைவில் நிலைத்திருப்பதற்கு அனுமதிப்பதில்லை. முழுமையான துறவறம் இருக்க வேண்டும்: இவை அனைத்தும் பாபாவுக்கே உரியது. இந்த முதற்தரமான ஸ்திதி இருக்க வேண்டும். தொடர்ந்தும் ஸ்ரீமத்தைப் பெறுகின்ற பல குழந்தைகள் இருக்கிறார்கள். நிச்சயமாக ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், நன்மை இருக்கிறது. வழிகாட்டல்கள் மேன்மையானவை, பயணம் மிகவும் நீண்டது. பின்னர் நீங்கள் மரண உலகிற்குத் திரும்பி வர மாட்டீர்கள். சத்திய யுகமே அமரத்துவ உலகமாகும். அங்கே நீங்கள் மரணிக்க மாட்டீர்கள் என வேறொரு நாள் பாபா மிகவும் தெளிவாக விளங்கப்படுத்தினார். நீங்கள் உங்கள் பழைய ஆடைகளைச் சந்தோஷமாக மாற்றி, புதியதொன்றை எடுப்பீர்கள். பாம்பின் உதாரணம் உங்களுக்குரியது. ரீங்காரமிடும் வண்டின் உதாரணமும் உங்களுக்கு உரியது. ஆமையின் உதாரணமும் உங்களுக்கே உரியதாகும். சந்நியாசிகள் உங்களையே பிரதி செய்துள்ளார்கள். ரீங்காரமிடும் வண்டின் உதாரணமும் சிறந்தது. ரீங்காரமிடும் வண்டுகளாகிய நீங்கள் அசுத்தத்தில் வாழுகின்ற பூச்சிகளுக்கு ஞானத்தை ரீங்காரமிட்டு, அவர்களைத் தேவதைகளின் பூமியில் வாழும் தேவதைகள் ஆக்குகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது மிகச்சிறந்த முயற்சியைச் செய்ய வேண்டும். நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தை அல்லது ஒரு நல்ல இலக்கத்தைக் கோர விரும்பினால், முயற்சி செய்ய வேண்டும். உங்கள் தொழில் போன்றவற்றை நீங்கள்; செய்யலாம், நீங்கள் அதற்கென நேரத்தை ஒதுக்குகிறீர்கள். எப்படியிருப்பினும், உங்களுக்குப் பெருமளவு நேரம் உள்ளது. மாயை பல தடைகளை விளைவிப்பதனால், நீங்கள் உங்கள் யோக அட்டவணையைச் சோதிக்க வேண்டும். பாபா மீண்டும் மீண்டும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, எவரும், தவறுதலாகவேனும், அத்தகையதோர் அதியன்பிற்கினிய தந்தையையும், மணவாளனையும் பிரிந்து செல்லக்கூடாது. அத்தகையதொரு பெரும் முட்டாளாக எவரும் ஆகக்கூடாது. எவ்வாறாயினும், மாயை உங்களை அவ்வாறு ஆக்குகிறாள். நீங்கள் மேலும் முன்னேறும்பொழுது, தங்களை அர்ப்பணித்து, மிகச்சிறந்த சேவையைச் செய்து, பின்னர் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதை நிறுத்தியவர்களை மாயை என்ன நிலைமைக்கு உள்ளாக்குகிறாள் என்பதைக் காண்பீர்கள். இதனாலேயே பாபா கூறுகிறார்: அத்தகைய பெரும் முட்டாள் ஆகாதீர்கள்! அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. நீங்கள் தந்தையிடமிருந்து பெற்றுள்ள சந்தோஷமும், அமைதியும் எனும் பொக்கிஷங்களை அனைவருக்கும் கொடுங்கள். முயற்சி செய்து, உங்கள் ஸ்திதியை உறுதியாக்குவதற்கு, இந்த ஞானத்தைப் பயன்படுத்துங்கள்.
  2. தெய்வீகக் குணங்களைக் கிரகிப்பதற்கு, சரீர உணர்வைத் துறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, சரீரமற்றவராகி, ஒரேயொரு அன்பிற்கினியவரை நினைவு செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:

நீங்கள் உங்களுடைய சிறப்பியல்பு எனும் விதையிலிருந்து திருப்தி என்கின்ற பழத்தைப் பெறுகின்ற, ஒரு விசேடமான ஆத்மாவாக இருப்பீர்களாக.
இந்த விசேடமான யுகத்தில், திருப்தியே சிறப்பியல்பு எனும்; விதையிலிருந்து பெறப்படுகின்ற அதிமேன்மையான பழம் ஆகும். திருப்தியாக இருப்பதுடன், அனைவரையும் திருப்தியானவர்கள் ஆக்குவதே, ஒரு விசேட ஆத்மாவின் அறிகுறி ஆகும். ஆகவே விதைக்கும், ஆசீர்வாதம் எனும் சிறப்பியல்பிற்கும், சகல சக்திகளும் எனும் நீர் மூலம் நீருற்றுங்கள், அது பலன்தரும். இல்லாவிட்டால், காலத்திற்குக் காலம், முழுமையாக வளர்ந்துள்ள விருட்சமும் புயல்களாலும், தடைகளாலும் அசைக்கப்படும். நீங்கள் முன்Nறும்பொழுது, அந்த நம்பிக்கையும், ஊற்சாகமும், சந்தோஷமும், ஆன்மீகப் போதையும் இருப்பதில்லை என்பதே அதன் அர்த்தமாகும். எனவே, சரியான வழிமுறையைப் பயன்படுத்துவதால், உங்கள் சக்திமிக்க விதையைப் பலன்நிறைந்ததாக ஆக்குங்கள்.

சுலோகம்:

அனுபவம் என்கின்ற பிரசாதத்தைப் (புனித உணவு) பகிர்ந்து, பலவீனமானவர்களைச் சக்திவாய்ந்தவர்;களாக ஆக்குவதே, அனைத்திலும் அதிமகத்தான புண்ணியமாகும்.

 

---ஓம் சாந்தி---

Download PDF

Post a Comment

0 Comments