Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 23.01.23

 

23-01-2023  காலைமுரளி  ஓம்சாந்தி  பாப்தாதா  மதுபன்

 



Listen to the Murli audio file



சாராம்சம்:

இனிய குழந்தைகளே, உங்கள் தூய்மையின்றி பாரதம் சுவர்க்கமாக முடியாது. நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுதே தூய்மையாகுவதற்கான ஸ்ரீமத்தைப் பெற்றுள்ளீர்கள். இரு பக்கங்களிலும் உங்களுக்குள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுங்கள்.

கேள்வி:

இங்குள்ள எவ் வழக்கம் ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களிலும், ஆச்சிரமங்களிலும் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது?

பதில்:

மக்கள் சென்று, அந்த ஆச்சிரமங்களில் வாழ்வதுடன், அங்கே தங்களுக்கு நல்ல சகவாசம் கிடைப்பதாகவும், தங்கள் வீட்டினதும் குடும்பத்தினதும் குழப்பங்கள் அங்கே இருக்க மாட்டாது என்றும் நம்புகின்றனர். எவ்வாறாயினும், அங்கே அவர்களுக்கு எவ்வித இலக்கும், குறிக்கோளும் கிடையாது. இங்கோ நீங்கள் மரணித்து வாழ வேண்டும். உங்களது வீட்டையும், குடும்பத்தையும் விட்டு நீங்குமாறு உங்களுக்குக் கூறப்படவில்லை. வீட்டில் வாழ்ந்தவாறே, நீங்கள் ஞானாமிர்தத்தைப் பருகி, ஆன்மீகச் சேவை செய்கிறீர்கள். ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களில் அவர்கள் இவ்வழக்கத்தைக் கொண்டிருப்பதில்லை.

ஓம் சாந்தி. தந்தை இங்கமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார், ஏனெனில், ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களுக்கு இங்கே விளங்கப்படுத்துகிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இதனாலேயேகடவுள் சிவன் பேசுகிறார்என மீண்டும் மீண்டும் கூறுவது சரியானதாகத் தென்படவில்லை. கீதையை உரைப்பவர்கள் கூறுவார்கள்: “கடவுள் கிருஷ்ணர் பேசுகிறார்.” எவ்வாறாயினும், அவர் வந்து சென்று விட்டார். கிருஷ்ணரே கீதையைப் பேசியதாகவும், இராஜயோகம் கற்பித்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். இங்கே, சிவபாபாவே உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இராஜயோகம் கற்பிக்கின்ற ஆன்மீக ஒன்றுகூடல்கள் வேறு எதுவும் இல்லை. தந்தை கூறுகிறார்: நான் உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக்குகிறேன். அவர்கள் கூறுவார்கள்: கடவுள் கிருஷ்ணர் பேசுகின்றார்: ‘மன்மனாபவ!’ அவர் எபபொழுது அதைக் கூறினார்? 5000 வருடங்களுக்கு முன்னர் அவர் அதைப் பேசியதாக அவர்கள் கூறுவார்கள் அல்லது கிறிஸ்துவுக்கு 3000 வருடங்களுக்கு முன்னர் அவர் அதைக் கூறியதாகச் சிலர் கூறுவார்கள். அவர்கள் 2000 வருடங்களைப் பற்றிப் பேசுவதில்லை, ஏனெனில், இடையிலுள்ள 1000 வருடங்களிலேயே இஸ்லாமியரும், பௌத்தர்களும் வந்தனர். எனவே, கிறிஸ்துவுக்கு 3000 வருடங்களுக்கு முன்னர் அது சத்திய யுகம் ஆகியது என்பதை இது நிரூபிக்கிறது. 5000 வருடங்களுக்கு முன்னர் கடவுள் வந்து, கீதையைப் பேசி, தேவ தர்மத்தை ஸ்தாபித்ததாக நாங்கள் கூறுகிறோம். இப்பொழுது, 5000 வருடங்களுக்குப் பின்னர், அவர் மீண்டும் வர வேண்டும். இச்சக்கரம் 5000 வருடங்களைக் கொண்டது. இத்தந்தை இவர் மூலமாகவே விளங்கப்படுத்துகிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மக்கள் செல்கின்ற, பல்வேறு வகையான ஆன்மீக ஒன்றுகூடல்கள் உள்ளன. சிலர் சென்று, ஓர் ஆச்சிரமத்தில் வசிக்கின்றனர். எவ்வாறாயினும், அவர்கள் சென்று தாயும் தந்தையுமானவருக்குப் பிறந்தனர் என்றோ அல்லது அவர்களிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெற்றனர் என்றோ அவர்களைப் பற்றிக் கூறப்பட மாட்டாது. இல்லை; அங்கே உள்ள சகவாசம் சிறந்ததென்றும், தங்கள் வீட்டினதோ, குடும்பத்தினதோ குழப்பங்கள் எதுவும் அங்கே இருப்பதில்லை என்றும் அவர்கள் கருதுகின்றனர். எவ்வாறாயினும், அங்கே இலக்கும், குறிக்கோளும் கூட இருப்பதில்லை. இங்கே, நீங்கள் தாயும் தந்தையுமானவரிடம் வந்துள்ளதாகக் கூறுகிறீர்கள். இது உங்களுடைய உயிருடன் மரணித்து வாழ்கின்ற பிறப்பாகும். அவர்கள் குழந்தைகளைத் தத்தெடுக்கும்பொழுது, அக்குழந்தைகள் வந்து, அவர்களின் வீட்டில் வசிக்கின்றனர். இங்கே, உங்களின் பிறந்த வீடு அல்லது புகுந்த வீட்டை விட்டு நீங்கி, இங்கே வந்து தங்குகின்ற வழக்கம் இல்லை. அது சாத்தியமில்லை. இங்கே, நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழும்பொழுதும் ஒரு தாமரை மலர் போலாக வேண்டும். நீங்கள் ஒரு குமாரியாகவோ, அல்லது யாராக இருந்தாலும், வீட்டில் வாழ்ந்து கொண்டே தினமும் ஞானாமிர்தத்தைப் பருகுவதற்கு வருமாறு உங்களுக்குக் கூறப்படுகிறது. இந்த ஞானத்தைப் புரிந்துகொண்டு, பின்னர் மற்றவர்களுக்கும் விளங்கப்படுத்துங்கள். இரு பக்கங்களிலும் உங்களுக்குள்ள பொறுப்புக்களை நிறைவேற்றுங்கள். நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழவும் வேண்டும். இரு பக்கங்களிலும் உங்களுக்குள்ள பொறுப்புக்களை நீங்கள் இறுதிவரைக்கும் நிறைவேற்ற வேண்டும். இறுதியில் நீங்கள் இங்கே வாழ்ந்தாலென்ன, அங்கே வாழ்ந்தாலென்ன, மரணம் அனைவருக்கும் வரும். இராமர் சென்றார், இராவணனும் சென்றான் எனக் கூறப்படுகிறது. எனவே, அனைவரும் இங்கே வந்து தங்க வேண்டும் என்றில்லை. அவர்கள் நஞ்சிற்காகத் தொந்தரவு செய்யப்பட்டபொழுதே, தமது வீடுகளை விட்டு வெளியேறினர். குமாரிகளும் வீட்டிலேயே வாழ வேண்டும். நீங்கள் உங்களது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சேவை செய்ய வேண்டும். பல சமூக சேவையாளர்கள் உள்ளனர். அரசாங்கத்தால் பலரையும் பராமரிக்க முடியாது. அவர்கள் அனைவரும் வீட்டில் தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து கொண்டே ஏதோவொரு வகையான சேவையையும் செய்கின்றனர். இங்கே, நீங்கள் ஆன்மீகச் சேவை செய்ய வேண்டும். அத்துடன் நீங்கள் வீட்டில் உங்கள் குடும்பத்துடன் வாழவும் வேண்டும். ஆம், அம்மக்கள் விகாரத்திற்காகப் பெரும் விரக்தியை விளைவிக்கும்பொழுது, நீங்கள் கடவுளிடம் புகலிடம் தேடி வரலாம். புத்திரிகள் விகாரத்திற்காகப் பெருமளவு துன்புறுத்தப்படுகிறார்கள். வேறெங்கும் இவ்வாறு இல்லை. இங்கே, நீங்கள் தூய்மையாக இருக்க வேண்டும். அரசாங்கமும் தூய்மையையே விரும்புகிறது. எவ்வாறாயினும், வீட்டில் வாழும்பொழுதும் உங்களைத் தூய்மையாக இருக்க வைப்பதற்கான சக்தி கடவுளிடம் மாத்திரமே உள்ளது. பெருமளவு வறுமை நிலவுவதால், அதிகக் குழந்தைகள் பிறப்பதை அரசாங்கம் கூட விரும்பாத காலம் இதுவாகும். எனவே, குறைந்தளவு குழந்தைகளே பிறக்கும் வகையில், பாரதத்தில் தூய்மை இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, தூய்மையாகுங்கள், நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். இது அவர்களின் புத்தியில் இல்லை. பாரதம் தூய்மையாக இருந்தது, அது இப்பொழுது தூய்மையற்றதாக உள்ளது. சகல ஆத்மாக்களும் தூய்மையாகவே விரும்புகிறார்கள். இங்கே பெருமளவு துன்பமே உள்ளது. உங்கள் தூய்மையின்றி பாரதம் சுவர்க்கமாக முடியாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நரகத்தில் துன்பம் மாத்திரமே உள்ளது. மனிதர்கள் நச்சாற்றில் மூச்சுத் திணறுவதாகக் கருட புராணத்தில் அவர்கள் காண்பிப்பது போன்று, நரகம் என்பது வேறொன்று அல்ல. அவர்கள் தண்டனையை அனுபவிப்பதற்கென அத்தகையதோர் ஆறும் இல்லை. தண்டனை கருப்பைச் சிறையில் பெறப்படுகிறது. தண்டனை பெறுவதற்கு, சத்திய யுகத்தில் கருப்பை எனும் சிறை இருப்பதில்லை. அங்கு கருப்பை எனும் மாளிகையே இருக்கின்றது. இந்நேரத்தில் முழு உலகமும் மக்கள் சந்தோஷமற்றவர்களாகவும், நோயாளிகளாகவும் உள்ள உயிருள்ள நரகமாக உள்ளது; அவர்கள் தொடர்ந்தும் ஒருவருக்கொருவர் துன்பத்தையே விளைவிக்கின்றனர். சுவர்க்கத்தில் இவ்வாறு எதுவும் நிகழ்வதில்லை. தந்தை இப்பொழுது உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நான் உங்களுடைய எல்லையற்ற தந்தையாவேன். நானே படைப்பவராதலால், நிச்சயமாகச் சுவர்க்கம் என்ற புதிய உலகைப் படைப்பேன். நான் சுவர்க்கத்திற்காக ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை உருவாக்குவேன். கூறப்படுகிறது: நீங்களே தாயும், தந்தையும். அவர் ஒவ்வொரு கல்பத்திலும் இந்த இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். அவர் இங்கே அமர்ந்திருந்து, பிரம்மாவின் மூலம் வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் இரகசியங்களை விளங்கப்படுத்துகிறார். முற்றிலும் கல்வியறிவு அற்றவர்களுக்கே அவர் அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். ‘ கடவுளே! வாருங்கள்!’ என நீங்கள் கூறியதுண்டு. தூய்மையற்றவர்களால் அங்கு செல்ல முடியாது. எனவே, உங்களைத் தூய்மையாக்குவதற்காக அவர் நிச்சயமாக இங்கே வர வேண்டும். முன்னைய கல்பத்திலும் அவர் உங்களுக்கு இராஜயோகம் கற்பித்ததைக் குழந்தைகளாகிய உங்களுக்கு அவர் ஞாபகப்படுத்துகிறார். உங்களிடம் கேட்கப்படுகிறது: நீங்கள் முன்னரும் இந்த ஞானத்தைப் பெற்றீர்களா? நீங்கள் கூறுகிறீர்கள்: ஆம், நான் 5000 வருடங்களுக்கு முன்னரும் இந்த ஞானத்தைப் பெற்றேன். இவை புதிய விடயங்கள். புதிய யுகமும், புதிய தர்மமும் மீண்டும் ஒரு தடவை ஸ்தாபிக்கப்படுகின்றன. கடவுளைத் தவிர வேறு எவராலும் இந்தத் தேவ தர்மத்தை ஸ்தாபிக்க முடியாது. பிரம்மா, விஷ்ணு, சங்கரரால் கூட அதை ஸ்தாபிக்க முடியாது, ஏனெனில், அந்த தேவர்களும் கூட படைப்புக்களே. தாயும் தந்தையுமான, சுவர்க்கத்தைப் படைப்பவரே தேவைப்படுகிறார். உங்களுக்கு இங்கே பெருமளவு சந்தோஷம் தேவை. தந்தை கூறுகிறார்: நானே படைப்பவர். நான் உங்களையும் பிரம்மாவின் வாய் மூலம் படைத்தேன். நானே மனித உலகின் விதை. ஒருவர் எவ்வளவு மகத்தான சாதுவாகவோ, புனிதராகவோ இருந்தாலும், இவ்வார்த்தைகள் வேறு எவரது வாயிலிருந்தும் வெளிப்பட மாட்டாது. இவை கீதையின் வாசகங்கள் ஆகும். எவ்வாறாயினும், அவற்றைப் பேசியவரால் மாத்திரமே அவற்றைப் பேச முடியும். வேறு எவராலும் இதைக் கூற முடியாது. அசரீரியானவருக்குப் பதிலாக அவர்கள் கிருஷ்ணரைக் கடவுள் எனக் கூறியதே ஒரேயொரு வேறுபாடாகும். தந்தை கூறுகிறார்: நானே மனித உலகின் விதையும், பரந்தாம வாசியும், அசரீரியான பரமாத்மாவும் ஆவேன். ஒரு பௌதீக மனிதரால் தன்னை விதை என அழைக்க முடியாது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ளலாம். பிரம்மா, விஷ்ணு, சங்கரரால் கூட இதைக் கூற முடியாது. சிவபாபாவே அனைவரையும் படைக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் தேவ தர்மத்தை ஸ்தாபிக்கிறேன். அவர்கள் தங்களை ஸ்ரீ கிருஷ்ணர், பிரம்மா அல்லது சங்கரர் என அழைத்தாலும், இதைக் கூறுகின்ற சக்தியும் வேறு எவரிடமும் இல்லை. பலர் தங்களை ஓர் அவதாரம் என்றும் அழைக்கின்றனர். எவ்வாறாயினும், அவ்விடயங்கள் யாவும் பொய்யாகும். அவர்கள் இங்கே வந்து, இதனைச் செவிமடுக்கும்பொழுது, உண்மையில் ஒரு தந்தையும், ஓர் அவதாரமுமே இருப்பதைப் புரிந்துகொள்கின்றார்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களை என்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்வேன். இவ்வாறு கூறுகின்ற சக்தியும் வேறு எவரிடமும் இல்லை. 5000 வருடங்களுக்கு முன்னரும், கீதையின் கடவுளான சிவபாபா இதைக் கூறினார். ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபித்தவர் இப்பொழுது மீண்டும் அதைச் செய்கிறார். ஆத்மாக்கள் ஒரு நுளம்புக் கூட்டத்தைப் போன்று திரும்பிச் சென்றார்கள் என நினைவுகூரப்படுகிறது. எனவே, தந்தை வந்து, வழிகாட்டியாகி, அனைவருக்கும் விடுதலையளிக்கிறார். இப்பொழுது இது கலியுகத்தின் இறுதியாகும். அதன்பின்னர் சத்திய யுகம் வர வேண்டும். எனவே, அவர் நிச்சயமாக வந்து, உங்களைத் தூய்மையாக்கி, தூய உலகிற்கு அழைத்துச் செல்வார். இவ்வார்த்தைகளில் சில கீதையில் உள்ளன. அந்த மதத்திற்கு (இந்து) ஒரு சமயநூல் தேவைப்பட்டதாக அவர்கள் நம்பினர். எனவே, அவர்கள் அமர்ந்திருந்து, கீதை நூலை எழுதினர். அதுவே அனைத்துச் சமயநூல்களினதும் இரத்தினமும், அதிமேன்மையானதும், முதலாம் இலக்கத் தாயும் ஆகும், ஆனால்;, அவர்கள் பெயரை மாற்றி விட்டனர். துவாபர யுகத்தில், தந்தை இந்நேரத்தில் மேற்கொண்ட செயற்பாடுகளைப் பற்றி அவர்கள் எழுதப் போவதில்லை. அதே கீதையே மீண்டும் வெளிப்படும்; அந்தக் கீதை நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை மீண்டும் ஒருமுறை மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவது போன்றே, ஏனையோரும் பின்னர் அமர்ந்திருந்து, சமயநூல்களை எழுதுவார்கள். சத்திய யுகத்தில் சமயநூல்கள் எதுவும் இருக்க மாட்டாது. தந்தை இங்கிருந்தவாறு, முழுச் சக்கரத்தினதும் இரகசியங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் 84 பிறவிகளின் இச்சக்கரத்தைப் பூர்த்தி செய்துள்ளீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே அதிகபட்ச எண்ணிக்கையான, 84 பிறவிகளை எடுக்கின்றனர். பின்னரே மனித சனத்தொகை வளர்கிறது; அவர்கள் இந்தளவு பிறவிகளை எடுக்க மாட்டார்கள். தந்தை இங்கிருந்து, இந்தப் பிரம்மாவின் வாய் மூலம் விளங்கப்படுத்துகிறார். நான் யாருடைய சரீரத்தைக் கடனாக எடுத்திருக்கின்றேனோ, அந்தத் தாதா தனது சொந்தப் பிறவிகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை. இவர் சரீரதாரியான (வியக்த்) பிரஜாபிதா பிரம்மா ஆவார். அவர் சூட்சுமமானவர் (அவ்யக்த பிரம்மா). இருவரும் ஒருவரே. இந்த ஞானத்தின் மூலம் நீங்களும் தேவதைகளாகி, சூட்சும லோகவாசிகள் ஆகுவீPர்கள். சூட்சுமலோக வாசிகளே தேவதைகள் என அழைக்கப்படுகின்றனர், ஏனெனில், அவர்களிடம் தசைகளும், எலும்புகளும் இல்லை. பிரம்மா, விஷ்ணு, சங்கரருக்குக் கூட தசைகளோ, எலும்புகளோ இல்லை, எனவே, அவர்களின் படங்கள் எவ்வாறு உருவாக்கப்படுகின்றன? சிவன் ஒரு நட்சத்திரமாக இருந்தபொழுதிலும், அவரது படமும் உருவாக்கப்படுகிறது. அவர்கள் அதன் ரூபத்தையும் உருவாக்குகின்றனர். பிரம்மா, விஷ்ணு, சங்கரர் சூட்சுமமானவர்கள். அவர்களால் மனிதர்களுக்கு உருவாக்குவதைப் போன்ற அதே ரூபத்தைச் சங்கரருக்கு உருவாக்க முடியாது, ஏனெனில், அவருக்குத் தசைகளாலும், எலும்புகளாலும் ஆக்கப்பட்ட சரீரம் இல்லை. நாங்கள் விளங்கப்படுத்துவதற்காகவே அந்தப் பௌதீக ரூபத்தை உருவாக்குகிறோம். எவ்வாறாயினும், அவரும் (சங்கரர்) சூட்சுமமானவரே என்பதை நீங்கள் காணலாம். அச்சா.

31/01/13 - இரவு வகுப்பு

மனிதர்களுக்கு நிச்சயமாக இரு விடயங்கள் தேவை: ஒன்று அமைதி, மற்றையது சந்தோஷம் - உலகில் அமைதியும், சுய அமைதியும் ஆகும். மனிதர்கள் உலகில் சந்தோஷம் நிலவுவதற்கும், தாம் சந்தோஷமாக இருப்பதற்கும் விரும்புகின்றனர். எனவே, எவரேனும் வினவ வேண்டும்: இப்பொழுது அமைதி இருப்பதால், முன்னர் ஏதோவொரு காலத்தில் நிச்சயமாக அமைதி இருந்திருக்க வேண்டும். எவ்வாறாயினும், அது எப்பொழுது, எவ்வாறு இருந்தது என்றோ அல்லது ஏன் அமைதியின்மை இருக்கின்றது என்றோ எவருக்கும் தெரியாது, ஏனெனில் மக்கள் காரிருளில் உள்ளனர். நீங்கள் அமைதிக்கும், சந்தோஷத்திற்குமான மிகச்சிறந்த பாதையைக் காண்பிக்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அவர்கள் இதனைக் கேட்கும்பொழுது, சந்தோஷமடைகின்றனர், ஆனால் தாங்களும் தூய்மையாக வேண்டும் என்பதை அவர்கள் கேள்விப்படும்பொழுது, சற்று பின்தங்கி விடுகிறார்கள். இந்த விகாரமே அனைவரதும் எதிரி, அதுவே அனைவராலும் நேசிக்கவும் படுகிறது. மக்கள் அவற்றைத் துறக்க வேண்டியுள்ளபொழுது, அவர்களின் இதயங்கள் சுருங்கி விடுகின்றன. அது நஞ்சு என அழைக்கப்படுகின்றது, இருப்பினும், மக்கள் அதைத் துறப்பதில்லை. நீங்கள் பெரும் பிரயத்தனம் செய்கிறீர்கள், இருந்தும் நீங்கள் தோற்கடிக்கப்படுகிறீர்கள். அனைத்தும் தூய்மைக்கான விடயமாகும். இதிலேயே பலரும் தோல்வியடைகின்றனர். அவர்கள் ஒரு குமாரியைப் பார்க்கும்பொழுது, கவரப்படுகின்றனர். கோபம், பேராசை, பற்று போன்றவற்றிற்கு அந்தக் கவர்ச்சி இல்லை. காமமே கொடிய எதிரியாகும். அதை வெற்றிகொள்வது ஒரு மகாவீரரின் வேலையாகும். சரீர உணர்விற்குப் பின்னர், காமமே முதலில் வருகிறது. இதையே நீங்கள் வெற்றிகொள்ள வேண்டும். தூய்மையற்ற, காமம் நிறைந்த மக்கள் தூய்மையானவர்களுக்கு முன்னால் தலை வணங்குகின்றனர். அவர்கள் கூறுகின்றனர்: நான் விகாரம் நிறைந்தவன், நீங்கள் விகாரமற்றவர். தங்களிடம் கோபம் அல்லது பேராசை நிறைந்திருப்பதாக அவர்கள் கூறுவதில்லை. அனைத்தும் விகாரத்திற்கான விடயமாகும். மக்கள் விகாரத்திற்காகவே திருமணம் செய்கின்றனர். அவர்களுடைய பெற்றோருக்கு இந்த அக்கறை உள்ளது. அவர்கள் பெரிதாக வளர்ந்ததும் பணம் கொடுத்து, விகாரத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் விகாரத்தில் ஈடுபடாமல் விட்டால், சச்சரவு இடம்பெறும். தேவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்களாக இருந்தார்கள் என்பதைக் குழந்தைகளான நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். உங்களுடைய இலக்கும், குறிக்கோளும் உங்களுக்கு முன்னால் உள்ளன. நீங்கள் சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாகி, அரசர்க்கெல்லாம் அரசர்களாக வேண்டும். உங்களுக்கு முன்னாலேயே படம் உள்ளது. இது சத்சங்கம் (ஆன்மீக ஒன்றுகூடல்) என அழைக்கப்படுவதில்லை. அவர்களுக்குக் கற்பதற்கோ அல்லது ஒரு சத்சங்கத்திற்கோ ஓர் இடம் இல்லை. அவர் உங்களுக்கு நேரடியாக இராஜயோகம் கற்பிக்கும்பொழுதே, சத்தியமானவருடனான உண்மையான சத்சங்கம் (சத்தியத்தின் சகவாசம்) உள்ளது. நீங்கள் சத்தியத்தின் சகவாசத்தைக் கொண்டிருப்பது அவசியம். அவரே இராஜயோகமாகிய, கீதையைக் கற்பிப்பவர். தந்தை கீதையை உரைப்பதில்லை. இது ஒரு கீதாப் பாடசாலை என அழைக்கப்படுவதால், தாங்கள் வந்து கீதையைச் செவிமடுக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்; அவர்களிடம் அந்த ஈர்ப்பு உள்ளது. இதுவே நீங்கள் சற்கதி, ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் போன்றவற்றை ஒரு விநாடியில் பெறுகின்ற, உண்மையான கீதாப் பாடசாலை ஆகும். எனவே, நீங்கள் எதற்காகஉண்மையான கீதாப் பாடசாலைஎன எழுதியுள்ளீர்கள் என்று அவர்களிடம் வினவுங்கள்: “கீதாப் பாடசாலைஎன எழுதுவது பொதுவானது. “உண்மையானஎன்ற வார்த்தையை அவர்கள் வாசிக்கும்பொழுது, ஒருவேளை பொய்யானதும் இருக்கக்கூடுமோ என்று சிந்திப்பதற்கு அவர்களை அது தூண்டும். எனவே, “உண்மையானஎன்ற வார்த்தையை நீங்கள் நிச்சயமாக எழுத வேண்டும். தூய உலகம் தங்க யுகமான, சத்திய யுகம் என்றும், தூய்மையற்ற உலகம் இரும்பு யுகமான, கலியுகம் என்றும் அழைக்கப்படுகின்றன. சத்திய யுகத்தில் அவர்கள் தூய்மையாக இருந்தார்கள். அவர்கள் எப்படி அவ்வாறு ஆகினார்கள் என உங்களுக்குக் கற்பிக்கப்படுகிறது. தந்தை எங்களுக்குப் பிரம்மா மூலம் கற்பிக்கிறார். வேறு எவ்வாறு அவர் எங்களுக்குக் கற்பிப்பார்;? இச்சமயநூல்களை முன்னைய கல்பத்தில் புரிந்துகொண்டவர்களே, அவற்றைப் புரிந்துகொள்வார்கள். அவர்கள் பக்தி மார்க்கப் புதைசேற்றில் அகப்பட்டுள்ளனர். பக்தியில் பெருமளவு பகட்டு உள்ளது. அதில் எதுவுமேயில்லை. இந்த விழிப்புணர்வைக் கொண்டிருங்கள்: நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நாங்கள் தூய்மையாகிய பின்னர் திரும்பிச் செல்ல வேண்டும். இதற்கு, நீங்கள் நினைவில் இருக்க வேண்டும். உங்களைச் சுவர்க்க அதிபதிகளாக்குகின்ற தந்தையை உங்களால் நினைவுசெய்ய முடியாதா? இதுவே பிரதான விடயம். இதற்கு முயற்சி தேவை என்றே அனைவரும் கூறுகின்றனர். குழந்தைகள் சிறந்த சொற்பொழிவாற்றுகின்றனர், ஆனால், அவர்கள் யோகத்தில் இருந்தவாறு விளங்கப்படுத்துவார்களாயின், அது நல்ல விளைவைக் கொண்டிருக்கும். நீங்கள் நினைவில் இருக்கும்பொழுது, வலிமையைப் பெறுகின்றீர்கள். சதோபிரதான் ஆகுவதனால், நீங்கள் சதோபிரதான் உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள். வழிநடத்தப்படுகின்ற தியானமே நினைவு என நீங்கள் கூறுவீர்களா? வழிநடத்தப்படுகின்ற தியானத்தில் நீங்கள் அரை மணித்தியாலம் அமர்ந்திருந்தீர்கள் எனக் கூறுவது தவறாகும். தந்தை கூறுகிறார்: நினைவில் நிலைத்திருங்கள்! உங்களுக்கு எதிரில் அமர்ந்திருந்து, கற்பிக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் எல்லையற்ற தந்தையைப் பெருமளவு அன்புடன் நினைவுசெய்ய வேண்டும், ஏனெனில், அவர் உங்களுக்குப் பல பொக்கிஷங்களைக் கொடுக்கிறார். நினைவினால் உங்களின் சந்தோஷப் பாதரசம் உயர வேண்டும். அப்பொழுது நீங்கள் அதீந்திரிய சுகத்தை உணர்வீர்கள். தந்தை கூறுகிறார்: உங்களின் அந்த வாழ்க்கை மிகவும் பெறுமதி வாய்ந்தது. நீங்கள் அதை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். நீங்கள் எவ்வளவு காலம் வாழ்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாகப் பொக்கிஷங்களைப் பெறுவீர்கள். நீங்கள் சதோபிரதான் ஆகியதும், பொக்கிஷங்கள் முழுவதையும் பெற்றிருப்பீர்கள். நீங்கள் முரளி மூலம் சக்தியைப் பெறுகிறீர்கள். வாளில் சக்தியும் உள்ளது. உங்களிடம் நினைவுச் சக்தி உள்ளபொழுது, வாள் கூர்மையாகும். ஞானத்தில் அந்தளவு சக்தியில்லை, இதனாலேயே அந்தளவு தாக்கம் இல்லை. பின்னர் (உங்களுக்கு முன்னால் யார் வந்தாலும்), அவருக்கு நன்மை செய்வதற்காக பாபா வர வேண்டும். உங்கள் நினைவானது சக்தியால் நிறைந்திருக்கும்பொழுது, அம்பானது கல்விமான்கள், ஆசிரியர்களை போன்றவர்களையும்; தாக்கும். இதனாலேயே பாபா கூறுகிறார்: உங்கள் அட்டவணையை வைத்திருங்கள். தாங்கள் பாபாவைப் பெருமளவில் நினைவுசெய்வதாகச் சிலர் கூறுகின்றனர், ஆனால் அவர்களால் வாய் திறக்க முடியாமலுள்ளது (அவர்களால் ஞானத்தைப் பேச முடியாதுள்ளது). நினைவில் நிலைத்திருங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அச்சா. இரவு வணக்கம், குழந்தைகளே.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. வீட்டில் வாழும்பொழுதும், ஆன்மீகச் சேவை செய்யுங்கள். தூய்மையாகி, மற்றவர்களையும் தூய்மையாக்குங்கள்.
  2. உயிருள்ள இந்நரகத்தில் வாழ்கின்றபொழுதும், எல்லையற்ற தந்தையிடமிருந்து நீங்கள் சுவர்க்கம் என்ற உங்கள் ஆஸ்தியைக் கோர வேண்டும். எவருக்கும் துன்பத்தை விளைவிக்காதீர்கள்.

ஆசீர்வாதம்:

நீங்கள் உங்களுடைய சிறப்பியல்புகள் அனைத்தையும் பயன்படுத்தி, அவற்றை அதிகரிக்கச் செய்து, ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.
நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக உங்கள் மனம், வார்த்தைகள், செயல்கள் மூலம் சேவை செய்வதற்கு, உங்கள் சிறப்பியல்புகளைப் பயன்படுத்துகின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக அந்தச் சிறப்பியல்புகள் தொடர்ந்தும் வளரும். அவற்றைச் சேவைக்குப் பயன்படுத்துவது என்றால், ஒரு விதையிலிருந்து பெருமளவு பலனைப் பெறுவது என்று அர்த்தமாகும். இம்மேன்மையான வாழ்வில் பிறப்புரிமையாக நீங்கள் பெற்றுள்ள சிறப்பியல்புகளை விதைகளாக மட்டுமே வைத்திராமல், அவற்றைச் சேவை எனும் பூமியில் விதையுங்கள், அப்பொழுது நீங்கள் அவற்றின் பலனைப் அனுபவம் செய்வீர்கள், அதாவது, நீங்கள் அவற்றின் வெற்றியைப் பெறுவீர்கள்.

சுலோகம்:

விரிவாக்கத்தைப் பார்க்காதீர்கள், ஆனால் சாராம்சத்தைப் பார்த்து, அதை உங்களில் அடக்கிக் கொள்ளுங்கள். இதுவே தீவிர முயற்சி ஆகும்.

 

---ஓம் சாந்தி---

Download PDF

Post a Comment

0 Comments