Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 21.01.23

 

21-01-2023  காலைமுரளி  ஓம்சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



சாராம்சம்:

இனிய குழந்தைகளே, தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைக் கோருவதற்கு, ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். உங்களுடைய செயற்பாட்டை நன்றாக வைத்திருங்கள்.

கேள்வி:

யாரால் சிவபாபாவின் இதய சிம்மாசனத்தில் ஏறமுடியும்?

பதில்:

பிரம்மபாபா குறித்த ஒரு குழந்தை சேவை செய்கிறார் எனவும், அனைவருக்கும் சந்தோஷம் கொடுக்கிறார் எனவும் உத்தரவாதம் அளிக்கும் பொழுது, அதாவது, அவர் தன்னுடைய எண்ணங்கள். வார்த்தைகள், செயல்களால் எவருக்கும் துன்பம் கொடுப்பதில்லை என அவரைப் பற்றி பிரம்மபாபா கூறும்பொழுதே, அவரால் சிவபாபாவின் இதய சிம்மாசனத்தில் அமர முடியும்.

கேள்வி:

இந்நேரத்தில் ஆன்மீகச் சேவகர்களாகிய நீங்கள் பாபாவுடன் சேர்ந்து என்ன சேவையைச் செய்கிறீர்கள்?

பதில்:

நீங்கள் முழு உலகை மட்டுமன்றி, ஐந்து தத்துவங்களையும் தூய்மையாக்கும் ஆன்மீகச் சேவகர்கள். இதனாலேயே உண்மையான சமூக சேவையாளர்கள் நீங்களே ஆவீர்கள்.

பாடல்:  தாய், தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைக் கோருங்கள்.

ஓம்சாந்தி. குழந்தைகளாகிய நீங்கள் பாடலைச் செவிமடுத்தீர்கள். உண்மையில் குழந்தைகள் தங்களுடைய லௌகீகத் தாய், தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். குழந்தைகள் தங்களுடைய தாய் தந்தைக்கு முன்னால் மண்டியிடும் பொழுது அவர்;கள் தாய் தந்தையினால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். ஒரு லௌகீகத் தாய், தந்தைக்கு முரசங்கள் அடிக்கப்படுவதில்லை. முரசங்களை அடித்தல் என்றால் ஏராளமானோருக்கு இதைச் செவிமடுக்கக்கூடியதாக உள்ளது எனப் பொருள்படும். “நீங்களே தாயும் தந்தையும், நாங்கள் உங்களுடைய குழந்தைகள். உங்களுடைய ஆசீர்வாதங்களினாலும், கருணையாலுமே நாங்கள் எல்லையற்ற சந்தோஷத்தைப் பெறுகிறோம்என எல்லையற்ற தந்தைக்குப் பாடப்படுகிறது. பாரதத்திலேயே இப்புகழ் பாடப்படுகிறது. இது நிச்சயமாக பாரதத்திலேயே நிகழ்ந்திருக்க வேண்டும். இதனாலேயே இது பாரதத்தில் பாடப்படுகிறது. நீங்கள் முற்றாகவே எல்லையற்றதினுள் செல்ல வேண்டும். ஒரேயொரு தந்தை மாத்திரமே சுவர்க்கத்தைப் படைப்பவர் எனப் புத்தி கூறுகிறது. சத்தியயுகத்தில் அனைவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அங்கே துன்பத்தின் எச்சுவடும் இருக்க முடியாது. இதனாலேயே அனைவரும் கடவுளைத் துன்ப வேளையிலேயே நினைவு செய்கிறார்கள் எனவும், அவரை எவருமே சந்தோஷக் காலத்தில் நினைவு செய்வதில்லை எனவும் கூறப்படுகிறது. அரைக் கல்பமாகத் துன்பம் இருக்கும் பொழுது அனைவரும் அவரை நினைவு செய்கிறார்கள். சத்திய யுகத்தில் அளவற்ற சந்தோஷம் இருப்பதால் அங்கே எவருமே அவரை நினைவு செய்வதில்லை. ஏனெனில் மனிதர்கள் இப்பொழுது கல்லுப் புத்தியைக் கொண்டிருப்பதனால், அவர்கள் எதையும் புரிந்துகொள்வதில்லை. கலியுகத்தில் அளவற்ற துன்பம் உள்ளது. பெருமளவு சண்டை, சச்சரவுகள் உள்ளன. எவ்வளவுதான் படித்த கல்விமான்களாக இருந்தாலும், அவர்களாலும்கூட இப்பாடல்களின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடியாதுள்ளது. “நீங்களே தாயும், தந்தையும்என மக்கள் பாடினாலும், தாங்கள் எத்தாயையும் தந்தையையும் பகழ்கிறார்கள் என அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இது பலரையிட்டுக் கூறப்படுகிறது. அவர்கள் கடவுளுடைய குழந்தைகளாக இருந்தபொழுதும், இந்நேரத்தில் அனைவரும் சந்தோஷமற்றவர்களாகவே இருக்கிறார்கள். எவரிடமும் எல்லையற்ற சந்தோஷம் இல்லை. ஒருவர் ஆசீர்வாதங்களிலிருந்தே சந்தோஷத்தைப் பெறுகிறார். ஆசீர்வாதங்கள் இல்லாதபொழுது துன்பமே உள்ளது. கருணைநிறைந்தவர் எனத் தந்தை புகழப்படுகிறார். சாதுக்களும் புனிதர்களும் கூட கருணை நிறைந்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். “நீங்களே தாயும், தந்தையும்என அவர்கள் பக்தி மார்க்கத்தில் பாடுகிறார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது முற்றிலும் மிகச்சரியானதாகும். எவ்வாறாயினும், தந்தையாகிய கடவுள் என பரமாத்மா அழைக்கப்பட்டால், அப்பொழுது அவரை எவ்வாறு தாய் என அழைக்க முடியும் என ஒருவர் திறமைசாலியாக இருந்தால் வினவுவார். அவர்களுடைய புத்தி ஜெகதாம்பாவிடம் (உலகத் தாய்) செல்கிறது, எனவே புத்தி ஜெகத்பிதாவிடமும் (உலகத் தந்தை) செல்ல வேண்டும். பிரம்மாவும் சரஸ்வதியும் இறைவனும் இறைவியும் அல்ல. இப்புகழானது அவர்களுக்கு வழங்கப்பட முடியாது. அவர்களைத் தாயும் தந்தையும் என அழைப்பது பிழையாகும். மக்கள் இப்புகழை பரமாத்மாவாகிய பரமதந்தைக்குப் பாடினாலும், அவர் எவ்வாறு தாயும் தந்தையும் ஆகுகிறார் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. தாய் தந்தையினுடைய ஆசீர்வாதங்களைக் கோருமாறு, அதாவது, ஸ்ரீமத்தைப் பின்பற்றுமாறு குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. உங்களுடைய செயற்பாடு நன்றாக இருந்தால், நீங்கள் இயல்பாகவே ஆசீர்வாதங்களைக் கோருகிறீர்கள். உங்களுடைய செயற்பாடு நன்றாக இல்லாவிட்டாலோ, நீங்கள் தொடர்ந்தும் மற்றவர்களுக்குத் துன்பம் விளைத்தாலோ, நீங்கள் தாய், தந்தையரை நினைவு செய்யாவிட்டாலோ, நீங்கள் ஏனையோரையும் நினைவு செய்யத் தூண்டாவிட்டாலோ, உங்களால் ஆசீர்வாதங்களைக் கோரவோ அல்லது அதிகச் சந்தோஷத்தைப் பெறவோ முடியாதிருக்கும். உங்களால் தந்தையினுடைய இதய சிம்மாசனத்திலும் ஏறமுடியாதிருக்கும். நீங்கள் இந்தத் தந்தையினுடைய (பிரம்மபாபா) இதய சிம்மாசனத்தில் ஏறினால், நீங்கள் சிவபாபாவின் இதய சிம்மாசனத்திலும் ஏறிவிட்டீர்கள் எனப் பொருள்படும். இப்புகழ் தாய். தந்தைக்குக் கொடுக்கப்படுகிறது. புத்தியானது எல்லையற்ற தாய் தந்தையை நோக்கி ஈர்க்கப்பட வேண்டும். எவருடைய புத்தியும் பிரம்மாவை நோக்கி ஈர்க்கப்படுவதில்லை. சிலருடைய புத்தி ஜெகதாம்பாவை நோக்கி ஈர்க்கப்பட்டாலும், அவருடைய பெயரில் விழாக்களை நடத்தினாலும் எவருமே அவருடைய தொழிலைப் புரிந்துகொள்வதில்லை. நியதிப்படி இந்தப் பிரம்மாவே உங்களுடைய உண்மையான தாய் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவர் தந்தை பிரம்மாவாகத் திகழ்வதுடன், தாயாகவும் உள்ளார் என்பது புரிந்துகொள்ளப்படவும், நினைவு செய்யப்படவும் வேண்டும். சிவபாபா, பிரம்மா மேற்பார்த்து என நீங்கள் எழுதுகிறீர்கள். எனவே அவர் உங்களுடைய தந்தையாக இருப்பதுடன், தாயாகவும் உள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் இத்தந்தையினுடைய இதய சிம்மாசனத்தில் ஏற வேண்டும், ஏனெனில் சிவபாபா இவரினுள் பிரவேசித்துள்ளார். ஒரு குறித்த குழந்தை மிகவும் நல்லவர் எனவும், சேவை செய்பவர் எனவும், அவர் அனைவருக்கும் சந்தோஷத்தையே கொடுக்கிறார் எனவும், அவர் எவருக்கும் தனது எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களினால் துன்பத்தைக் கொடுப்பதில்லை எனவும் இவர் பாபாவுக்கு ஓர் உத்தரவாதம் அளிக்கும் பொழுது, அவரால் சிவபாபாவின் இதய சிம்மாசனத்தில் ஏற முடியும். நீங்கள் உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள் அல்லது செயல்களினால் வெளிப்படுத்தும் அனைத்தும் அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள். துன்பம் விளைவிக்கின்ற எண்ணமானது முதலில் மனதிலேயே பிரவேசிக்கின்றது. எவ்வாறாயினும், நீங்கள் அந்த எண்ணத்தைச் செயலில் இடும்பொழுது, அது ஒரு பாவமாகுகிறது. புயல்கள் நிச்சயமாக மனதில் வரும். ஆனால் நீங்கள் அதனைச் செயலில் இடக்கூடாது. எவரேனும் குழப்பம் அடைந்தால், தந்தையிடம் வந்து வினவுங்கள்: இவ்விடயத்தினால் அவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அப்பொழுது பாபா விளங்கப்படுத்துவார்: எதுவாயினும், அது முதலில் மனதிலேயே தோன்றுகிறது. பேசுவதும் ஒரு செயலே ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் தாய் தந்தையிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற விரும்பினால், நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். “தாயும், தந்தையும்என ஒருவரை அழைப்பது மிகவும் ஆழமான ஒரு விடயமாகும். இந்த பிரம்மா தந்தையாகவும், அத்துடன் சிரேஷ்ட தாயாகவும் உள்ளார். இப்பொழுது இத் தந்தை (பிரம்மா) யாரைத் தாய் என அழைப்பார்? இத்தாய் (பிரம்மா) யாரைத் தாய் என அழைப்பார்? இத் தாய்க்கு(பிரம்மாவுக்கு) ஒரு தாய் இருக்க முடியாது. எவ்வாறு சிவபாபாவுக்குத் தந்தை இல்லையோ, அவ்வாறே இத்தாய் பிரம்மாவுக்கும் ஒரு தாய் இல்லை. நீங்கள் உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களினால் எவருக்கேனும் துன்பம் விளைவித்தீர்களாயின், நீங்கள் துன்பத்தைப் பெறுவதுடன், உங்களுடைய அந்தஸ்தும் அழிக்கப்படும் என்பதே குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்ற பிரதான விடயமாகும். உண்மையான தந்தையுடன் நேர்மையாக இருங்கள். இவருடனும் நேர்மையாக இருங்கள். “இக் குழந்தை மிகவும் நல்லவரும், தகுதிவாய்ந்தவரும் ஆவார்எனக் கூறி, இந்த தாதா சான்றிதழைக் கொடுப்பார். நீங்கள் ஒரு சேவாதாரிக் குழந்தை என, அதாவது நீங்கள் உங்களுடைய சரீரம், மனம், செல்வத்தினால் சேவை செய்கின்றீர்கள் எனக் கூறி, பாபா அந்த ஆத்மாவைப் புகழ்வார். நீங்கள் எவருக்கேனும் துன்பம் விளைவிக்காமல் இருக்கும் பொழுது உங்களால் பாப்தாதாவினுடையதும் தாயினதும் (பிரம்மா) இதய சிம்மாசனத்தில் ஏறக்கூடியதாக இருக்கும். இவருடைய (பிரம்மா) இதய சிம்மாசனத்தில் ஏறுவதென்றால், அவருடைய சிம்மாசனத்தில் ஏறுவதாகும். எவ்வாறு தாங்கள் தகுதிவாய்ந்தவர்களாகி, சிம்மாசனத்தில் அமரலாம் என்பதைப் பற்றியே தகுதிவாய்ந்த குழந்தைகள் எப்பொழுதும் சிந்திக்கிறார்கள். இதுவே அவர்கள் கொண்டிருக்கும் ஆழ்ந்த அக்கறை ஆகும். எட்டு சிம்மாசனங்கள் வரிசைக்கிரமமாக உள்ளன. பின்னர் 108ம், அதன்பின்னர் 16,108ம் உள்ளன. எவ்வாறாயினும், நீங்கள் ஓர் அந்தஸ்தைக் கோர வேண்டும். இரு கலைகள் குறைந்திருக்கும்பொழுது, சிம்மாசனத்தில் அமர்வதென்பது ஓர் ஆத்மாவுக்குப் பொருத்தமாக இல்லை. தாங்கள் இப்பொழுது தங்களுடைய முழு சூரியவம்ச ஆஸ்தியையும் பாபாவிடமிருந்து பெறாவிட்டால். அதைத் தாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் பெறமாட்டார்கள் என்பதைத் தகுதிவாய்ந்த குழந்தைகள் உணர்ந்து, அதிகளவு முயற்சி செய்வார்கள். நீங்கள் இப்பொழுது வெற்றிமாலையில் கோர்க்கப்படா விட்டால். ஓவ்வொரு கல்பத்திலம் கோர்க்கப்பட மாட்டீர்கள். இந்த ஓட்டப் பந்தயம் ஒவ்வொரு கல்பத்திலும் நடைபெறுகிறது. இப்பொழுது இழப்பு ஏற்பட்டால், ஒவ்வொரு கல்பத்திலும் இழப்பு இருக்கும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவரும், தாயையும். தந்தையையும் முழுமையாகப் பின்பற்றுபவரும், ஒருபொழுதும் எவருக்கும் துன்பத்தை விளைவிக்காதவருமே ஒரு நல்ல வியாபாரி ஆவார். அதிலும் காம வாளே முதல் இலக்கத் துன்பம் ஆகும். தந்தை கூறுகிறார்: அச்சா, நீங்கள் கடவுள் கிருஷ்ணர் தான் பேசுகிறார் என நினைத்தால், அவரும் முதல் இலக்கத்தவரே ஆவார். நீங்கள் அவர் கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுது உங்களால் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகமுடியும். கிருஷ்ணரே கடவுள் எனவும், அவர் கொடுத்த வழிகாட்டல்களே ஸ்ரீமத் எனவும் அவர்கள் எண்ணுகிறார்கள். அவருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள், ஏனெனில் அவரும் காமமே கொடிய எதிரி, நீங்கள் அதனை வெல்ல வேண்டும் எனக் கூறினார். நீங்கள் அந்த விகாரத்தை வெல்லும்பொழுது மாத்திரமே உங்களால் கிருஷ்ணரின் பூமிக்குச் செல்ல முடியும். எவ்வாறாயினும், இது எதனையும் கிருஷ்ணர் கூறுவதற்கான கேள்விக்கே இடமில்லை, ஏனெனில் கிருஷ்ணர் ஒரு சிறு குழந்தையாக இருந்தார். அவர் எவ்வாறு வழிகாட்டல்களைக் கொடுத்திருக்க முடியும்? அவர் வளர்ந்து, சிம்மாசனத்தில் அமர்ந்தபொழுதே, வழிகாட்டல்களைக் கொடுத்திருப்பார். அவர் வழிகாட்டல்களைக் கொடுப்பதற்குத் தகுதியானவர் ஆகியபொழுதே, அவரால் இராச்சியத்தை ஆட்சிசெய்யக்கூடியதாக இருந்திருக்கும். சிவபாபா இப்பொழுது கூறுகிறார்: என்னை அசரீரியான உலகில் நினைவு செய்யுங்கள். கிருஷ்ணர் கூறுவார்: என்னைச் சுவர்க்கத்தில் நினைவு செய்யுங்கள். அவரும் கூறுகிறார்: நீங்கள் கொடிய எதிரியாகிய காமத்தை வெல்ல வேண்டும். நீங்கள் அங்கே நஞ்சைப் பெற மாட்டீர்கள். ஆதலால், இங்கே நஞ்சைத் துறந்து, தூய்மையாகுங்கள். கிருஷ்ணரின் தந்தையே இங்கிருந்து விளங்கப்படுத்துகிறார். அச்சா, மனிதர்கள் எனது பெயரை நீக்கி, குழந்தையின் பெயரை இட்டு விட்டனர். அவரும்கூட சகல தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர் ஆவார். காமமே கொடிய எதிரி என அவர் கூறுவதாகக் கீதையிலும் எழுதப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவர்கள் அவரை நம்புவதில்லை; அவர்கள் கிருஷ்ணரின் வழிகாட்டல்களையேனும் பின்பற்றுவதில்லை. கிருஷ்ணரே வரும்பொழுதே. தாங்கள் கிருஷ்ணருடைய வழிகாட்டல்களைப் பின்பற்றுவார்கள் என அவர்கள் எண்ணுகிறார்கள். எவ்வாறாயினும், அதுவரையில் அவர்கள் தொடர்ந்தும் மூழ்கியவாறே உள்ளனர். தாங்கள் இராஜயோகம் கற்பிக்க வந்துள்ளதாக சந்நியாசிகளால் கூற முடியாது. இதை உங்களுக்குத் தந்தை மாத்திரமே கூறுவதுடன், இது சங்கமயுகத்துக்குரிய ஒரு விடயமாகும் எனவும் விளங்கப்படுத்துகிறார். கிருஷ்ணர் சத்தியயுகத்தில் இருந்தார். அவரை அத்தனை தகுதிவாய்ந்தவராக யாரோ ஒருவர் ஆக்கியிருக்க வேண்டும். சிவபாபாவே கூறுகிறார்: நான் இப்பொழுது கிருஷ்ணரையும் அவருடைய முழு வம்சத்தையும் சுவர்க்கம் செல்வதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகிறேன். நீங்கள் சுவர்க்கம் சென்று, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோரும் வகையில் பாபா கடுமையாக உழைக்கிறார். இல்லாவிட்டால். நீங்கள் சென்று, உயர்ந்த அந்தஸ்தைக் கோருபவர்களுக்குப் பணி புரிய நேரிடும். நீங்கள் உங்களுடைய முழு ஆஸ்தியையும் தந்தையிடமிருந்து கோர வேண்டும். உங்களை வினவுங்கள்: நான் போதியளவு தகுதி உடையவனா? தகுதியானவர்களும் வரிசைக்கிரமமாகவே உள்ளனர். அதியுயர்ந்தவர்களும், நடுத்தரமானவர்களும், தாழ்ந்தவர்களும் உள்ளனர். அதியுயர்ந்தவர்களால் மறைந்திருக்க முடியாது. அவர்கள் பாரதத்துக்குச் சேவை செய்வதற்குத் தங்கள் இதயத்தில் கருணை கொண்டிருப்பார்கள். சமூக சேவையாளர்களும் அதியுயர்ந்தவர்கள், நடுத்தரமானவர்கள், தாழ்ந்தவர்கள் என வரிசைக்கிரமத்துக்கு உள்ளாகுகின்றனர். சிலர் ஏனையவர்களிடமிருந்து திருடுகிறார்கள்; அவர்கள் ஏனையவர்களின் பொருட்களை விற்று, அதிலிருந்து பணம்; பெறுகிறார்கள். ஆதலால், அவர்களை எவ்வாறு தகுதிவாய்ந்த சமூக சேவையாளர்கள் என அழைக்க முடியும்? தாங்கள் சமுதாயத்துக்குச் சேவை செய்வதனால். தங்களைச் சமூக சேவையாளர்கள் எனப் பலர் அழைக்கிறார்கள். தந்தை மாத்திரமே உண்மையான சேவையைச் செய்கிறார். பாபாவுடன் நீங்களும் ஆன்மீகச் சேவகர்களே என நீங்களும் கூறுகிறீர்கள். நாங்கள் முழு உலகையும் தூய்மையாக்குவது மாத்திரமன்றிப் பஞ்ச தத்துவங்களையும் தூய்மையாக்குகிறோம். தற்பொழுது தத்துவங்கள் தமோபிரதானாக இருக்கின்றன என்பதையும், அவைகூட சதோபிரதானாக வேண்டும் என்பதையும் சந்நியாசிகள் புரிந்துகொள்வதில்லை. தத்துவங்கள் சதோபிரதான் ஆகும்பொழுது. உங்களுடைய சரீரங்களும் சதோபிரதானாக இருக்கும். சந்நியாசிகள் ஒருபொழுதும் சதோபிரதான் சரீரங்களைக் கொண்டிருப்பதில்லை, ரஜோபிரதான் ஸ்திதி இருக்கும்பொழுதே, அவர்கள் வருகிறார்கள். பாபா எவ்வளவோ விளங்கப்படுத்துகிறார். இருப்பினும் குழந்தைகளாகிய நீங்கள் மறந்துவிடுகிறார்கள். இதனை ஏனையோருக்கு விளங்கப்படுத்துபவர்கள் இதனை நினைவில் வைத்திருப்பார்கள். நீங்கள் தானம் செய்யாவிட்டால். உங்களால் கிரகிக்க முடியாது. நல்ல சேவை செய்பவர்களின் பெயர்களை பாபா புகழடையச் செய்கிறார். யார் சேவை செய்வதில் திறமைசாலிகள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்களும் புரிந்துகொள்கிறீர்கள். சேவையில் செய்பவர்கள் பாபாவின் இதய சிம்மாசனத்தில் ஏறுகிறார்கள். தாயையும் தந்தையையும் எப்பொழுதும் பின்பற்றுங்கள். அவருடைய இதய சிம்மாசனத்தில் அமர்வதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுங்கள். மற்றவர்களுக்குச் சேவை செய்வதில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றவர்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பார்கள். உங்களுடைய சொந்த இதயக் கண்ணாடியில் பாருங்கள்: நான் பாபாவினுடைய தகுதிவாய்ந்த ஒரு குழந்தையா? “இதுவே நான் செய்யும் சேவைஎன நீங்கள் செய்கின்ற சேவையின் அட்டவணையொன்றையும் எழுதி, உங்களால் அனுப்ப முடியும். நீங்கள் அதியுயர்ந்தவரா, நடுத்தரமானவரா, தாழ்ந்தவரா எனத் தந்தையும் புரிந்துகொள்ளும் வகையில் நீங்களே இப்பொழுது தீர்மானியுங்கள். யார் யானைப் படையினர், யார் குதிரைப் படையினர் எனக் குழந்தைகளாகிய நீங்களும் புரிந்துகொள்கின்றனர். எவராலும் மறைந்திருக்க முடியாது. நீங்கள் உங்களுடைய அட்டவணையைத் தந்தைக்கு அனுப்பினால், பாபாவினால் உங்களை எச்சரிக்கை செய்ய முடியும். நீங்கள் உங்களுடைய அட்;டவணையை அனுப்பாவிட்டாலும் தொடர்ந்தும் எச்சரிக்கை செய்யப்பட்டு வருகிறீர்கள். உங்களுக்கு எவ்வளவு ஆஸ்தி வேண்டுமோ அதை இப்பொழுதே கோருங்கள். பின்னர் நீங்கள் தந்தையிடமிருந்து ஒரு சான்றிதழைப் பெறுவீர்கள். இவரே சிரேஷ்ட தாய். உங்களால் இவரிடமிருந்து ஒரு சான்றிதழைப் பெறமுடியும். தந்தைக்கு ஒரு தந்தை இல்லாதிருப்பதைப் போன்றே, இந்த அற்புதமான தாய்க்கும் ஒரு தாய் இல்லை. எவ்வாறாயினும், பெண்களில் மம்மாவே முதல் இலக்கத்தவர். ஜெகதாம்பா நாடகத்தில் புகழப்படுகிறார். அவர் அதிகளவு சேவை செய்தார். பாபா வெளியே செல்லும்; வழக்கத்தைக் கொண்டிருந்ததைப் போன்றே மம்மாவும் வெளியே செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்தார். அவர் சிறிய கிராமங்களுக்குச் சேவை செய்து வந்தார். அவரே அனைவரிலும் அதிதிறமைசாலி. பாபா, சிரேஷ்ட பாபாவைத் தன்னுடன் வைத்துள்ளார். ஆதலால், குழந்தைகளும் இவரைக் கவனமாகப் பராமரிக்க வேண்டும். சத்தியயுகத்தில் பிரஜைகளும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களுடைய சொந்த மாளிகைகள், பசுக்கள், எருதுகள் போன்ற அனைத்தையும் கொண்டிருக்கிறார்கள். குழந்தைகளே சந்தோஷமானவர்களாகவும், செழிப்பானவர்களாகவும் இருங்கள். நீங்கள் சிவபாபாவை நினைவு செய்ய வேண்டும் என்பதால், நீங்கள் அதை மறக்கவோ அல்லது வேறு எவரையேனும் நினைவு செய்யவோ கூடாது. நீங்கள் உங்களுடைய சொந்தச் சரீரத்தையும்கூட மறந்து விட வேண்டும், எனவே எவ்வாறு உங்களால் வேறு எவரையேனும் நினைவு செய்ய முடியும்? அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. எவரையும் குழப்பம் அடையச் செய்யாதீர்கள். உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களின் மூலம் அனைவரையும் சந்தோஷம் உடையவர்கள் ஆக்கித் தந்தையிடமிருந்தும், குடும்பத்திடமிருந்தும் ஆசீர்வாதங்களைக் கோருங்கள்.
  2. தகுதிவாய்ந்தவர்கள் ஆகி. பாரதத்துக்கு ஆன்மீகச் சேவை செய்யுங்கள். கருணை நிறைந்த இதயத்தைக் கொண்டிருந்து, ஓர் ஆன்மீகச் சமூக சேவையாளர் ஆகுங்கள். உங்களுடைய சரீரம், மனம், செல்வத்தினூடாகச் சேவை செய்யுங்கள். உண்மையான பிரபுவுடன் உண்மையாக இருங்கள்.

ஆசீர்வாதம்:

நீங்கள் மாஸ்டர் சற்குரு ஆகுவதுடன் உங்களின் வார்த்தைகளின் கீழ் இரட்டைக் கோடிடுவதன் மூலம் அவற்றினைப் பெறுமதியானதாக மாற்றுங்கள்.
குழந்தைகளாகிய உங்களின் வார்த்தைகளை மற்றவர்கள் கேட்கும் போது நீங்கள் ஏதாவது பேச வேண்டும் என்று அவ்வார்த்தைகளைக் கேட்கும் தாகத்துடன் இருக்க வேண்டும். இதுவே பெறுமதியான மேன்மையான வாசகங்களாகும். மேன்மையான வாசகங்கள் பல வார்த்தைகளைக் கொண்டிருக்காது. யாராவது ஒருவர் தனக்கு வேண்டியபோதெல்லாம் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தால் அவ்வார்த்தைகள் மேன்மையான வாசகங்களாகாது. நீங்கள் மாஸ்டர் சற்குரு. அதாவது சற்குருவின் குழந்தைகள். எனவே உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் மேன்மையானவை. எந்நேரத்திலும் எவ்விடத்திலும் உங்களுக்கும் மற்றய ஆத்மாக்களுக்கும் நன்மை பயக்கின்ற தேவையான யுக்தியுக்தான வார்த்தைகளை மட்டுமே பேசுங்கள். உங்கள் வார்த்தைகளின் கீழ் இரட்டைக் கோடிடுங்கள்.

சுலோகம்:

தூய்மையான நேர்முகமான எண்ணங்களைக் கொண்டிருக்கும் ஒரு இரத்தினமாகி உங்கள் கதிர்களின் மூலம் தொடர்ந்தும் உலகினைப் பிரகாசமாக்குங்கள்.

 

---ஓம் சாந்தி---

Download PDF

Post a Comment

0 Comments