20-01-2023 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்களே அமைதியை ஸ்தாபிப்பதற்கான
கருவிகள். ஆகவே, நீங்கள் மிக மிக அமைதிநிறைந்தவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் தந்தையின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள், எனவே நீங்கள் சகோதர, சகோதரிகள் என்பது உங்கள் புத்தியில் இருக்கட்டும்.
கேள்வி:
முழுமையாக அர்ப்பணித்தவர்கள் என நீங்கள் யாரை அழைப்பீர்கள்? அதனைக் குறிப்பது எது?
பதில்:
தாங்கள் இறை தாயும்;, தந்தையுமானவரினால் பராமரிக்கப்படுகிறார்கள் எனும் அறிவைப் புத்தியில் கொண்டவர்களே “முழுமையாக அர்ப்பணித்தவர்கள்”. அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, இவை அனைத்தும் உங்களுடையவை. நீங்கள் எங்களைப் பராமரிக்கிறீர்கள். சிலருக்குத்
தொழில்கள் இருந்தாலும்,
அனைத்தும் பாபாவுக்கே என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். அவர்கள் தொடர்ந்தும்
தந்தைக்கு உதவுகிறார்கள்,
அதனூடாக அத்தகையதொரு
பெரிய யாகம் எனும் முழுச் செயற்பாடும்
தொடர்வதுடன், அனைவரும் அதிலிருந்து பராமரிக்கப்படுகிறார்கள். அத்தகைய குழந்தைகளே அர்ப்பணிக்கப்பட்ட புத்தியைக் கொண்டவர்கள். அத்துடன், ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு, நீங்கள் கற்று, ஏனையோருக்கும்
கற்பிக்க வேண்டும். சரீரத்தின் ஜீவனோபாயத்துக்காக அனைத்தையும்
செய்யும்பொழுது, நீங்கள்; எல்லையற்ற தாயும், தந்தையுமானவரை
ஒவ்வொரு மூச்சிலும் நினைவுசெய்ய வேண்டும்.
பாடல்: ஓம் நமசிவாய.
ஓம் சாந்தி.
இப்பாடல் புகழுக்குரியதாகும். உண்மையில், எல்லாப் புகழும் அதிமேலான கடவுளுக்குரியதே, அவரைக் குழந்தைகள் அறிவார்கள்,
அவர் எங்கள் தாயும் தந்தையும் என்பதைக் குழந்தைகளினூடாக முழு உலகிலுள்ள அனைவரும் அறிந்து கொள்கிறார்கள். நீங்கள் இப்பொழுது தாயும் தந்தையுமானவருடன் குடும்பத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். ஸ்ரீ கிருஷ்ணரைத் தாயும் தந்தையுமானவர் என அழைக்க முடியாது.
அவருடன் இராதையும் இருந்தாலும், அவர்களைத் தாயும், தந்தையும் என அழைக்க முடியாது, ஏனெனில் அவர்கள் ஓர் இளவரசரும், இளவரசியும் ஆவார்கள். சமயநூல்களில் இந்தத் தவறு உள்ளது. இந்த எல்லையற்ற தந்தை இப்பொழுது உங்களுக்குச் சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தைக் கூறுகிறார்.
இந்நேரத்தில், குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே அவர் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருக்கிறீர்கள், சில குழந்தைகள் தொலைவில் இருந்தாலும், அவர்களும் செவிமடுக்கிறார்கள். தாயும் தந்தையுமானவர் தங்களுக்கு உலகின் ஆரம்பம்,
மத்தி, இறுதியின் இரகசியங்களை விளங்கப்படுத்தி, தங்களுக்கு நிலையான சந்தோஷத்துக்கான வழியைக் காட்டுகிறார் என்பதை அவர்கள் அறிவார்கள்.
இது மிகச்சரியாக ஒரு வீட்டைப் போன்றதாகும். இங்கே சில குழந்தைகளே இருக்கிறார்கள், வெளியே பலர் இருக்கிறார்கள். இது பிரம்மாவின் ஒரு புதிய படைப்பான வாய்வழித்தோன்றலும், அதுவோ ஒரு பழைய படைப்பும் ஆகும். உங்களைச் சதா சந்தோஷமானவர்கள் ஆக்குவதற்கு பாபா வந்துவிட்டார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பௌதீகப் பெற்றோர்களும் ஒரு குழந்தையை வளர்த்து,
அவரைப் பாடசாலைக்கு அழைத்துச் செல்கிறார்கள். இங்கே எங்களுக்கு எல்லையற்ற தந்தை கற்பிப்பதுடன், எங்களைப் பராமரிக்கிறார். குழந்தைகளாகிய உங்களுக்கு அந்த ஒரேயொருவரைத் தவிர,
வேறு எவரும் கிடையாது. நீங்கள் அவருடைய குழந்தைகள் என்பதைத் தாயும்,
தந்தையும் புரிந்துகொள்கிறார்கள். ஒரு லௌகீகக் குடும்பத்தில் 10 முதல் 15 குழந்தைகள் இருப்பார்கள், அவர்களில்
2 அல்லது 3 பேர் திருமணம் செய்திருப்பார்கள். இங்கே அமர்ந்திருக்கும் நீங்கள் அனைவரும் பாபாவின் குழந்தைகள்.
படைக்கப்படவுள்ள குழந்தைகள் அனைவரும் பிரம்மாவின் கமல வாயினூடாகவே படைக்கப்பட உள்ளார்கள்.
பின்னர், அனைவரும் வீட்டுக்குத் திரும்ப வேண்டுமாதலால், மேலும் குழந்தைகள் உருவாக்கப்பட மாட்டார்கள். இவரே ஒரு கருவியாகிய,
தத்தெடுக்கப்பட்ட தாய்.
இவை மிகவும் அற்புதமான விடயங்கள்.
தனது தந்தை ஏழை என்பதை ஓர் ஏழையின் குழந்தை அறிந்திருப்பார் என்பதும், தனது தந்தை செல்வந்தர் என்பதை ஒரு செல்வந்தரின் குழந்தை அறிந்திருப்பார் என்பதும் நிச்சயமே. பல தாய்மார்களும், தந்தையர்;களும் உள்ளார்கள்.
இங்கே, அந்த ஒரேயொருவரே முழு உலகினதும் தாயும் தந்தையுமானவர். இவரின் வாயினூடாக நீங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அந்த ஒரேயொருவரே எங்கள் அப்பாலுள்ள தாயும் தந்தையுமானவர். மக்கள் மிகவும் சந்தோஷமற்றிருக்கும்பொழுதே, அவர் பழைய உலகினுள் வருகிறார். நீங்கள் அந்த அப்பாலுள்ள தாயும் தந்தையுமானவரினால் தத்தெடுக்கப்பட்டு;ளீர்கள் என்பதைக் குழந்தைகளான நீங்கள் அறிவீர்கள்.
நாங்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள்.
எங்களுக்கு வேறெந்த உறவுமுறையும் கிடையாது.
ஆகவே, சகோதரர்களும்,
சகோதரிகளுமாகிய நீங்கள் மிகவும் இனிமையானவர்களாகவும், இராஜரீகமானவர்களாகவும், ஞானம் நிறைந்தவர்களாகவும், அமைதி நிறைந்தவர்களாகவும், பேரானந்தம் நிறைந்தவர்களாகவும் இருக்க வேண்டும். நீங்கள் அமைதியை ஸ்தாபிப்பதால், மிகவும் அமைதி நிறைந்தவர்களாக இருக்க வேண்டும். நீ;ங்களே அப்பாலுள்ள தந்தையின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் என்பதைக் குழந்தைகளாகிய உங்கள் புத்தி அறிந்துள்ளது.
நீங்கள் பரந்தாமத்திலிருந்து வந்துள்ளீர்கள். அந்த ஒரேயொருவரே பாட்டனாராகிய தாதா. இந்தத் தாதா (பிரம்மா)
என்றால் மூத்த சகோதரர் ஆகும்.
தாங்கள் இறை பெற்றோரினால் பராமரிக்கப்படுகிறார்கள் என்பதை முழுமையாக அர்ப்பணித்தவர்கள் புரிந்துகொள்வார்கள்: பாபா,
இவை அனைத்தும் உங்களுடையவை. நீங்கள் எங்களைப் பராமரிக்கிறீர்கள். தங்களை முழுமையாக அர்ப்பணித்துள்ள குழந்தைகளினால் அனைவரும் பராமரிக்கப்படுகிறார்கள். சிலருக்கு ஒரு தொழில் இருந்தாலும், அனைத்தும் பாபாவுக்கே என்பதை அவர்கள் புரிந்துகொள்கிறார்கள், ஆகவே அவர்கள் தொடர்ந்தும் தந்தைக்கு உதவுகிறார்கள். இல்லாவிட்டால், யக்யாவின் பணி எவ்வாறு தொடரும்? ஓர் அரசரையும் அரசியையும் தாயும் தந்தையும் என்றே அழைக்கிறார்கள், ஆனாலும் அவர்கள் பௌதீகப் பெற்றோர்களே.
தாயாகிய அரசியும்,
தந்தையாகிய அரசரும் எனக் கூறப்படுகிறது. அந்த ஒரேயொருவரே எல்லையற்றவர். நீங்கள் தாயுடனும், தந்தையுடனும் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். நீங்கள் கற்று, ஏனையோருக்குக் கற்பிக்குமளவுக்கேற்ப, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். அத்துடன்,
நீங்கள் உங்கள் சரீரங்களின் ஜீவனோபாயத்துக்கான செயல்களையும் செய்ய வேண்டும். இந்த தாதா மூத்தவர்.
சிவபாபா ஒருபொழுதுமே இளையவர் என்றோ அல்லது முதியவர் என்றோ அழைக்கப்பட மாட்டார். அவர் அசரீரியானவர். அசரீரியான தந்தை ஆத்மாக்களாகிய எங்களைத் தத்தெடுத்துள்ளார் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். பின்னர்,
பௌதீக ரூபத்தில்,
இந்த பிரம்மா உள்ளார். தந்தை எங்களைத் தனக்குரியவர் ஆக்கியுள்ளார் என ஆத்மாக்களாகிய நாங்கள் கூறுகிறோம். பின்னர்,
நீங்கள் கீழிறங்கியவுடன், சகோதர, சகோதரிகளாகிய நீங்கள் பிரம்மாவை உங்களுக்குரியவர் ஆக்கியுள்ளீர்கள் எனக் கூறுவீர்கள்.
சிவபாபா கூறுகிறார்:
பிரம்மாவினூடாக, நீங்கள் எனது வாய்வழித்தோன்றல் ஆகியுள்ளீர்கள். பிரம்மாவும் கூறுகிறார்: நீங்கள் எனது குழந்தைகளாகி விட்டீர்கள். இவர் உங்களுடைய தந்தை என்பதும், அந்த ஒரேயொருவர் உங்கள் பாட்டனார் என்பதும் பிராமணர்களாகிய உங்கள் புத்தி ஒவ்வொரு மூச்சிலும் அறிந்துள்ளது.
நீங்கள் உங்கள் தந்தையை விடவும் அதிகமாக உங்கள் பாட்டனாரை நினைவுசெய்கிறீர்கள். அம்மக்கள் தங்கள் பாட்டனாரிடமிருந்து தங்கள் சொத்தைக் கோருவதற்காகத் தங்கள் தந்தையுடன் சண்டையிடுகிறார்கள். நீங்களும் பாட்டனாரிடமிருந்து தந்தை கோருவதை விடவும் பெரும் ஆஸ்தியைக் கோருவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
பாபா உங்களிடம் வினவும்பொழுது, நீங்கள் நாராயணனைத் திருமணம் செய்வீர்கள் என நீங்கள் அனைவரும் கூறுகிறீர்கள். வருகின்ற சில புதியவர்களால் தூய்மையாக இருக்க முடியாததால், அவர்கள் தங்கள் கரங்களை உயர்த்த மாட்டார்கள்.
மாயை மிகவும் சக்திவாய்ந்தவள் என அவர்கள் கூறுவார்கள்.
தாங்கள் ஸ்ரீ நாராயணனை அல்லது ஸ்ரீ இலக்ஷ்மியைத் திருமணம் செய்வார்கள் என அவர்களால் கூற முடியாது.
பாபா உங்களுடன் நேரடியாகப் பேசும்பொழுது,
உங்கள் சந்தோஷப் பாதரசம் மிகவும் உயரே உயர்கிறது.
உங்கள் புத்தி புத்துணர்ச்சியூட்டப்படும்பொழுது, நீங்கள் போதையை அனுபவம் செய்கிறீர்கள். அப்பொழுது,
உங்களிற் சிலரால் அந்தப் போதையை நிரந்தரமாக வைத்திருக்க இயலுகிறது. ஏனையோரில் அது குறைவடைகிறது.
நீங்கள் எல்லையற்ற தந்தையை நினைவுசெய்ய வேண்டும். உங்கள்
84 பிறவிகளையும், பூகோளத்தை ஆட்சிசெய்பவர்களின் இராச்சியத்தையும் நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். இதனை நம்பாதவர்களால் பாபாவை நினைவுசெய்ய இயலாதிருக்கும். அவர்கள் “பாபா,
பாபா” எனக் கூறினாலும், அவர்கள் உண்மையில் அவரை நினைவுசெய்வதில்லை என்பதை அப்பொழுது பாப்தாதா புரிந்துகொள்கிறார். அவர்கள் இலக்ஷ்மியையோ அல்லது நாராயணனையோ திருமணம் செய்வதற்குத் தகுதியானவர்கள் அல்ல. அவர்களுடைய செயற்பாடு அத்தகையது!
அனைவரினுள்ளும் என்ன இருக்கிறது என்பதைத் தந்தை அறிவார்,
அவர் அனைவருடைய புத்தியையும் புரிந்துகொள்கிறார். இங்கே, இது சமயநூல்களுக்கான விடயமல்ல.
தந்தை வந்து,
இராஜயோகத்தை உங்களுக்குக் கற்பித்தார், அது கீதை என அழைக்கப்படுகின்றது. சிறிய சமயங்களைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய சொந்தச் சமயநூல்களை உருவாக்குகின்றனர், அவர்கள் தொடர்ந்தும் அவற்றைக் கற்கிறார்கள்.
பாபா சமயநூல்களைக் கற்கவில்லை. அவர் கூறுகிறார்: குழந்தைகளே,
நான் சுவர்க்கத்துக்கான பாதையை உங்களுக்குக் காட்டுவதற்கு வந்து விட்டேன். நீங்கள் சரீரமற்று வந்ததைப் போன்று, சரீரமற்றே திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் உங்கள் சரீரத்தையும்,
உங்கள் சரீரத்தின் கர்மக் கணக்குகள் அனைத்தையும் விட்டு நீங்க வேண்டும்,
ஏனெனில் சரீரமே துன்பத்தை விளைவிக்கிறது. உங்களுக்கு ஒரு சுகவீனம் ஏற்பட்டு,
வகுப்புக்குச் செல்ல இயலாது விட்டால்,
அது ஒரு சரீர பந்தனமாகும்.
இதில் உங்களுக்கு ஒரு மிகச்சிறந்த,
சக்திவாய்ந்த புத்தி தேவையாகும். எல்லாவற்றுக்கும் முதலில், உண்மையில் பாபா சுவர்க்கத்தைப் படைக்கிறார், ஆனால் அது இப்பொழுது நரகமாக உள்ளது என்ற நம்பிக்கை இருக்க வேண்டும்.
ஒரு நபர் மரணிக்கும்பொழுது, அவர் சுவர்க்கத்துக்குச் சென்று விட்டார் என மக்கள் கூறுகிறார்கள். ஆகவே, நிச்சயமாக அவர் நரகத்திலேயே இருந்திருக்க வேண்டும்.
நீங்கள் இதனை இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள், ஏனெனில் உங்கள் புத்தியில் சுவர்க்கம் உள்ளது.
பாபா தினமும் உங்களுக்குப் புதிய வழிகளில் விளங்கப்படுத்துகிறார். ஆகவே,
இது உங்கள் புத்தியில் மிகவும் நன்றாகப் பதிந்துள்ளது.
எங்கள் தாயும் தந்தையுமானவர் எல்லையற்றவர்.
ஆகவே, எல்லாவற்றுக்கும் முதலில், உங்கள் புத்தி முற்றாகவே மேலே செல்ல வேண்டும். பின்னர் நீங்கள் கூறுவீர்கள்:
இந்நேரத்தில் பாபா அபுவில் இருக்கிறார்.
மக்கள் மிகவும் உயரத்திலுள்ள பத்திரிநாதர் ஆலயத்துக்கு (மாற்றமடையச் செய்கின்ற பிரபு)
யாத்திரை செல்கிறார்கள். வழிகாட்டிகள் உங்களை அங்கே அழைத்துச் செல்கிறார்கள். அங்கே உங்களை அழைத்துச் செல்வதற்கு, பத்திரிநாதர் வருவதில்லை. மக்களே வழிகாட்டிகள் ஆகுகிறார்கள்.
இங்கே, சிவபாபாவே பரந்தாமத்திலிருந்து வருகிறார்.
அவர் கூறுகிறார்:
ஓ ஆத்மாக்களே,
நீங்கள் அச்சரீரங்களை நீக்கி விட்டு,
சிவனின் தாமத்துக்குச் செல்ல வேண்டும்.
நீங்கள் செல்ல வேண்டிய இலக்கை நீங்கள் நிச்சயமாக நினைவுசெய்ய வேண்டும்.
அந்தப் பத்திரிநாதர்
(விக்கிரகம்) உயிருள்ள ரூபத்தில் வந்து,
குழந்தைகளைத் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்வது சாத்தியமல்ல.
அவர் இவ்விடத்தில் வசிப்பவர். பரமாத்மாவாகிய பரமதந்தை கூறுகிறார்:
நான் பரந்தாமவாசி.
நான் உங்களைத் திரும்பவும் பரந்தாமத்துக்கு அழைத்துச் செல்வதற்கு வந்து விட்டேன்.
கிருஷ்ணரால் இதனைக் கூற முடியாது.
உருத்திர சிவபாபா கூறுகிறார்: ஞான யாகம் உருவாக்கப்பட்டுள்ளது. கீதையிலும்,
உருத்திரரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆன்மீகத் தந்தை கூறுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள். விநாசம் நடைபெறும்பொழுது, ஆத்மாக்களாகிய நீங்கள், உங்கள் சரீரங்களை நீக்கி விட்டு, தந்தையிடம் நேரடியாகச் செல்லும் வகையில், தந்தை அத்தகையதொரு திறமையான வழியில் உங்களுக்கு யாத்திரையைக் கற்பிக்கிறார். பின்னர் தூய ஆத்மாக்களுக்குத் தூய சரீரங்கள் தேவைப்படும்,
ஆனால்;, உலகம் புதிதாக இருக்கும்பொழுதே, அது நடைபெறும்.
இப்பொழுது, ஆத்மாக்கள் அனைவரும் ஒரு நுளம்புக் கூட்டம் போன்று பாபாவுடன் திரும்பிச் செல்வார்கள்,
இதனாலேயே அவர் படகோட்டி எனவும் அழைக்கப்படுகிறார். ஏனெனில் அவர் உங்களை இந்த நச்சுக்கடலிலிருந்து அக்கரைக்கு அழைத்துச் செல்கிறார். ஸ்ரீ கிருஷ்ணரைப் படகோட்டி என அழைக்க முடியாது. தந்தையே உங்களை இத்துன்ப உலகிலிருந்து சந்தோஷ உலகிற்கு அழைத்துச் செல்கிறார். இந்தப் பாரதம் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாகிய, விஷ்ணு பூமியாக இருந்தது. அது இப்பொழுது இராவணனின் பூமியாக இருக்கிறது.
நீங்கள் இராவணனின் படமொன்றைக் காட்ட வேண்டும். நீங்கள் படங்களைப் பெருமளவு பயன்படுத்த வேண்டும்.
ஆத்மாக்களாகிய உங்களைப் போன்றே, பாபாவின் ஆத்மாவும் உள்ளார்.
முன்னர், உங்களுக்கு ஞானம் இருக்கவில்லை.
அவரே ஞானக்கடல்.
படைப்பவரையோ அல்லது படைப்பையோ அறியாதவர்கள் ஞானமற்றவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். படைப்பவரிடமிருந்து படைப்பவரையும், படைப்பையும் அறிந்து கொள்பவர்களே ஞானம் நிறைந்தவர்கள் எனக் கூறப்படுகிறார்கள். நீங்கள் இங்கேயே இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள், சத்திய யுகத்தில் அல்ல.
கடவுளே உலகின் அதிபதி என அம்மக்கள் கூறுகிறார்கள். மக்கள் அந்த அதிபதியை நினைவுசெய்கிறார்கள். எவ்வாறாயினும், உண்மையில்,
இலக்ஷ்மியும் நாராயணனுமே உலக அதிபதிகள் ஆகுபவர்கள். அசரீரியான சிவபாபா உலக அதிபதி ஆகுவதில்லை.
ஆகவே, நீங்கள் அவர்களை வினவ வேண்டும்: அந்த அதிபதி அசரீரியானவரா அல்லது பௌதீகமானவரா?
அசரீரியானவரால் பௌதீக உலகின் அதிபதியாக முடியாது. அவர் பிரம்மாந்தத்தின் அதிபதி.
அவர் வந்து,
தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்குகிறார். அவர் தூய உலகின் அதிபதி ஆகுவதில்லை.
இலக்ஷ்மியும் நாராயணனுமே அதன் அதிபதி ஆகுபவர்கள், தந்தையே அவர்களை அவ்வாறு ஆக்குபவர். இவை மிகவும் ஆழமான விடயங்கள், இவை புரிந்துகொள்ளப்பட வேண்டியவை.
ஆத்மாக்களாகிய நாங்கள் பிரம்ம தத்துவத்தில் வசிக்கும்பொழுது, நாங்களே பிரம்மாந்தத்தின் அதிபதிகளாக இருக்கிறோம். தாங்கள் பாரதத்தின் அதிபதிகள் என அரசரும் அரசியும் கூறுவார்கள்,
ஆகவே தாங்களும் அதிபதிகள் என அவர்களுடைய மக்களும் கூறுவார்கள்; அவர்களும் அங்கே வசிக்கிறார்கள். அவ்விதமாகவே, தந்தை பிரம்மாந்தத்தின் அதிபதி ஆதலால், நாங்களும் அதிபதிகளே. பாபா வந்து, புதிய மனித உலகைப் படைக்கிறார். அவர் கூறுகிறார்: நான் இவ்வுலகை ஆட்சிசெய்வதற்கு விரும்பவில்லை. நான் ஒரு மனிதர் ஆகுவதில்லை. நான் இச்சரீரத்தைக் கடனாகப் பெறுகிறேன். உங்களை உலக அதிபதிகள் ஆக்குவதற்காக, நான் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். நீங்கள் எவ்வளவு முயற்சியைச் செய்கிறீர்கள் என்பதற்கேற்பவே, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள்.
இதில் நீங்கள் எதனையும் தவற விடக்கூடாது. ஓர் ஆசிரியர் அனைவருக்கும் கற்பிப்பார். பல மாணவர்கள் பரீட்சையில் சித்தியெய்தினால், ஆசிரியர் போற்றப்படுவதுடன், அரசாங்கத்திடமிருந்து பதவியுயர்வையும் பெறுகிறார். இங்கும் அதுவே. நீங்கள் நன்றாகக் கற்குமளவுக்கேற்ப, ஒரு சிறந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள்.
பெற்றோர்களும் மிகவும் சந்தோஷம் அடைவார்கள்.
மாணவர்கள் தங்கள் பரீட்சையில் சித்தியெய்தும்பொழுது, அவர்களுடைய பெற்றோர்கள் இனிப்புக்களை விநியோகிக்கிறார்கள். இங்கே,
நீங்கள் தினமும் இனிப்புக்களை விநியோகிக்கிறீர்கள். பின்னர், நீங்கள் உங்களுடைய பரீட்சையில் சித்தியெய்தும்பொழுது, உங்கள் மீது தங்க மலர்கள் பொழியப்படும்.
ஆகாயத்திலிருந்து உங்கள் மீது மலர்கள் வீழும் என்பதல்ல,
ஆனால் நீங்கள் தங்க மாளிகைகளின் அதிபதிகள் ஆகுவீர்கள்.
இங்கே, ஒருவரைப் போற்றுவதற்காக, மக்கள் தங்க மலர்களை உருவாக்கி, அந்த நபரின் மீது அம்மலர்களைப் பொழிகிறார்கள். உதாரணமாக, துர்பங்காவின் அரசர் மிகவும் செல்வந்தராக இருந்தார்.
அவருடைய மகன் வெளிநாட்டுக்குச் சென்றபொழுது,
அவர் (அரசர்)
ஒரு விருந்துபசாரத்தை நடத்தி, பெருமளவு பணத்தைச் செலவழித்தார்.
அவர் தங்க மலர்களைச் செய்து,
அவற்றை அனைவர் மீதும் பொழியச் செய்தார். இதற்கு அவருக்குப் பெருமளவு செலவு ஏற்பட்டது,
அவருடைய பெயர் போற்றப்பட்டது. அவர்கள் கூறுவது வழக்கம்:
பாரத மக்கள் எவ்வாறு தங்கள் பணத்தை வீணாக்குகிறார்கள் எனப் பாருங்கள்!
நீங்கள் சென்று,
தங்க மாளிகைகளில் வாழ்வீர்கள். உங்களுக்கு அதிகளவு போதை இருக்க வேண்டும்.
தந்தை கூறுகிறார்:
என்னையும், சக்கரத்தையும் நினைவுசெய்யுங்கள், உங்கள் படகு அக்கரை செல்லும். இது மிகவும் இலகுவானது!
குழந்தைகளாகிய நீங்கள் உயிர்வாழும் விட்டிற்பூச்சிகள்;. பாபாவே உயிருள்ள சுவாலை. இப்பொழுது எங்கள் இராச்சியம் ஸ்தாபிக்கப்படவுள்ளது என நீங்கள் கூறுகிறீர்கள். உங்களுடைய பக்தியின் பலனை உங்களுக்குக் கொடுப்பதற்கு உண்மையான பாபா இப்பொழுது வந்துவிட்டார். அவர் எவ்வாறு வந்து,
பிராமணர்களின் புதிய உலகைப் படைக்கிறார் என பாபாவே உங்களுக்குக் கூறியுள்ளார்.
நான் நிச்சயமாக வர வேண்டும்.
குழந்தைகளான நீங்கள் பிரம்மாகுமார்களும் குமாரிகளும் என்பதையும், சிவபாபாவின் பேரக் குழந்தைகள் என்பதையும் அறிவீர்கள்.
இது ஓர் அற்புதமான குடும்பம்.
எவ்வாறு தேவர்களின் மரக்கன்று நாட்டப்படுகிறது எனப் பாருங்கள்!
இது விருட்சத்தின் படத்தில் தெளிவாக உள்ளது. நீங்கள் கீழே அமர்ந்திருக்கிறீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் பாக்கியசாலிகள்! அதியன்பிற்கினிய தந்தை இங்கமர்ந்திருந்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: குழந்தைகளான உங்களை இராவணனின் சங்கிலிகளிலிருந்து விடுவிப்பதற்கு நான் வந்துவிட்டேன். இராவணன் உங்களை நோய்வாய்ப்படச் செய்துள்ளான்.
தந்தை கூறுகிறார்:
இப்பொழுது, என்னை நினைவுசெய்யுங்கள், அதாவது,
சிவபாபாவை நினைவுசெய்யுங்கள். இதனூடாக, உங்கள் ஒளி ஏற்றப்படும்.
அப்பொழுது உங்களால் பறக்க இயலும்.
மாயை அனைவருடைய சிறகுகளையும் துண்டித்து விட்டாள். அச்சா.
இனிமையிலும் இனிமையான,
அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய்,
தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும்,
நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- உங்கள் புத்தியைச் சிறந்ததாகவும், சக்திவாய்ந்ததாகவும் ஆக்குவதற்கு, சரீரத்தில் இருக்கும்பொழுதே, சரீர பந்தனத்திலிருந்து பற்றற்றிருங்கள். சரீரமற்றிருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். சுகவீனத்தின் பொழுதும், தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள்.
- நீங்கள் அப்பாலுள்ள தாயும் தந்தையுமானவரின் குழந்தைகளாகி விட்டீர்கள், ஆகவே நீங்கள் மிக மிக இனிமையானவராகவும், இராஜரீகமானவராகவும், அமைதி நிறைந்தவர்களாகவும், ஞானம் நிறைந்தவராகவும், பேரானந்தம் நிறைந்தவராகவும் ஆகவேண்டும். நீங்கள் அமைதியில் நிலைத்திருந்து, அமைதியை ஸ்தாபிக்க வேண்டும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் அதியுயர்ந்த மரியாதைக் கோட்பாடுகளைப் பின்பற்றுகின்ற அதியுயர்வானவராக இருப்பதுடன், ஆன்மீகமானவராகவும்,
விளையாட்டுத்தனமானவராகவும், களிப்பூட்டுபவராகவும் இருப்பீர்களாக.
சில குழந்தைகள் நகைச்சுவையாகப் பேசி, பிறரைப் பரிகாசம் செய்வதுடன், அதனை விளையாட்டாகவும், களிப்பூட்டுவதாகவும் கருதுகின்றார்கள்.
பொதுவாக, களிப்பூட்டுவதாகவும், விளையாட்டுத்தனமாகவும் இருக்கின்ற நற்குணம் நல்லது என்று கருதப்படுகின்றது. எவ்வாறாயினும், அது ஒரு நபருக்கும், நேரத்திற்கும்,
ஒன்றுகூடலிற்கும், இடத்திற்கும்,
சூழலிற்கும் பொருத்தமான வழியில் உள்ள விளையாட்டாக
இருந்தால், அது நல்லது. அவை அனைத்திலும்
ஏதாவது ஒன்றேனும் சரியில்லாது விட்டால், அப்பொழுது அத்தகைய களிப்பூட்டுகின்ற, விளையாட்டுத்தனம்
வீணானது என்றே கருதப்படும். பின்னர் நீங்கள் பிறரைப் பெருமளவில் சிரிக்க வைப்பவராகவும், ஆனால் அதிகளவு பேசுபவராகவும் இருக்கின்ற சான்றிதழையே
பெறுவீர்கள். இதனாலேயே ஆன்மீகம் இருக்கும்பொழுதே, சிரித்து, பிறரைக் கேலி செய்வது நல்லது, அதில் மற்றைய ஆத்மா நன்மையைப் பெறுவார். உங்;கள் வார்த்தைகள்
ஓர் எல்லைக்குள்,
வரையறைக்குள் இருக்கட்டும்,
அப்பொழுது நீங்கள் அதியுயர்ந்த மரியாதைக் கோட்பாடுகளைப்
பின்பற்றுகின்ற அதியுயர்வானவர்
என்று கூறப்படுவீர்கள்.
சுலோகம்:
சதா ஆரோக்கியமாக
இருப்பதற்கு, உங்கள் ஆன்மீகச் சக்தியை அதிகரியுங்கள்.
---ஓம் சாந்தி---
0 Comments