19-01-2023 காலைமுரளி ஓம்சாந்தி
பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஒரு பௌதீகச் சரீரத்தை நினைவு செய்தல் என்றால் தத்துவ (தீய ஆவியின்) உணர்வில் இருப்பதாகும். ஏனெனில் சரீரங்கள் பஞ்ச தத்துவங்களினால்
ஆக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்களாகி, சரீரமற்ற ஒரு தந்தையை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும்.
கேள்வி:
தந்தை மாத்திரமே மேற்கொள்ளும் அதிமேன்மையான பணி யாது?
பதில்:
தமோபிரதானான முழு உலகையும் சதோபிரதான் ஆக்கி, சதா சந்தோஷம் நிறைந்ததாக ஆக்குவது தந்தையால் மாத்திரமே மேற்கொள்ளப்படும் அதிமேன்மையான பணியாகும். அதிமேன்மையான இப் பணியினாலேயே,
அவரின் ஞாபகார்த்தங்கள்
மிகவும் மகத்துவமானவையாக
அமைக்கப்பட்டுள்ளன.
கேள்வி:
எந்த இரு வார்த்தைகளில் முழு நாடகத்தின் இரகசியங்களும் உள்ளன?
பதில்:
பூஜிக்கத் தகுதியுடையவர்,
பூஜிப்பவர் என்ற இரு வார்த்தைகளிலாகும். நீங்கள் பூஜிக்கத் தகுதி உடையவராக இருக்கும் பொழுது, நீங்களே அதி மேன்மையானவர்களாக இருக்கின்றீர்கள்.
அதன்பின்னர் நீங்கள் மத்திம தரத்தை அடைந்து, பின்னர் தாழ்ந்தவர் ஆகுகின்றீர்கள்.
மாயை உங்களைப் பூஜிக்கத் தகுதியுடையவரில் இருந்து பூஜிப்பவர் ஆக்கி விட்டாள்.
பாடல்: விட்டில் பூச்சிகளின் கூட்டத்தின்
மத்தியில் சுவாலை ஏற்றப்பட்டுள்ளது......
ஓம் சாந்தி.
மனிதர்களைக் கடவுள் என்று அழைக்க முடியாது எனக் கடவுள் இங்கே அமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். பிரம்மா,
விஷ்ணு, சங்கரரிற்குக் கூட உருவங்கள் உள்ளன. அவர்களையுமே கடவுள் என அழைக்க முடியாது.
பரமாத்மாவான பரமதந்தையின் வசிப்பிடம் அவர்களுடையதை விட உயர்ந்ததாகும். அவர் மாத்திரமே பிரபு, ஈஸ்வர்,
பகவான் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றார். மக்கள் கூவியழைக்கும் பொழுது,
அவர்களால் சரீர அல்லது சூட்சும உருவத்தை அவர்களின் முன்னால் பார்க்க முடியாது. ஆகையாலேயே அவர்கள் மனித உருவத்தைக் கடவுள் என்று அழைக்கின்றார்கள். ஒரு சந்நியாசியைக் காணும் பொழுதும் அவரைக் கடவுள் என அழைக்கின்றார்கள். எவ்வாறாயினும் கடவுள் தானே விளங்கப்படுத்துகின்றார்: மனிதர்களைக் கடவுள் என அழைக்க முடியாது.
பலரும் அசரீரியான கடவுளை அதிகளவு நினைவு செய்கின்றார்கள். எந்த குருமார்களையும் ஏற்றுக் கொள்ளாதவர்களுக்கும் அல்லது குழந்தைகளுக்கும் பரமாத்மாவை நினைவு செய்யவே கற்பிக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் எப் பரமாத்மாவை நினைவு செய்வது என அவர்களுக்குக் கூறப்படுவதில்லை. அவர்களின் புத்தியில் எந்த உருவமும் இருப்பதில்லை.
துன்பம் வரும் பொழுதே, அவர்கள் கூறுகின்றார்கள்: ஓ பிரபுவே! எந்த ஒரு குருவினதோ அல்லது ஒரு தேவரினது படமோ அவர்களின் முன்னிலையில் தோன்றுவதில்லை. அவர்கள் பல குருமார்களை ஏற்றிருந்தாலும் அவர்கள்
‘ஓ கடவுளே!’
என கூறும் பொழுது, அவர்கள் ஒருபொழுதும் தமது குருவை நினைவு செய்வதில்லை. அவர்கள் தமது குருவை நினைவு செய்து,
அவரைக் கடவுள் என அழைத்தாலும்,
அவர் பிறந்து,
மரணிக்கின்ற ஒரு மனிதர் ஆவார்.
அதாவது, அவர்கள் ஐந்து தீய ஆவிகள் என்று அழைக்கப்படுகின்ற பஞ்ச தத்துவங்களினால் ஆக்கப்பட்ட சரீரத்தையே நினைவு செய்கின்றார்கள் என்பதே அதன் அர்த்தமாகும்.
ஓர் ஆத்மா தீய ஆவி என அழைக்கப்படுவதில்லை. ஆகையால் அது தத்துவ வழிபாடாகும்.
அவர்களின் புத்தியின் யோகம் சரீரத்தை நோக்கித் திசை திருப்பப்படுகின்றது. மனிதர்களை அவர்கள் கடவுள் எனக் கருதுவார்களாயின், அவர்கள் அச்சரீரத்தில் உள்ள ஆத்மாவை நினைவு செய்வதில்லை,
இல்லை. ஒவ்வொருவரிலும் ஓர் ஆத்மா உள்ளார்: அதாவது நினைவு செய்பவர் நினைவு செய்யப்படுபவர் இருவரிலும் உள்ளார்.
கடவுள் சர்வவியாபி என அழைக்கப்படுகின்றார். எவ்வாறாயினும் கடவுளை பாவாத்மா என உங்களால் கூறமுடியாது.
உண்மையில் அவர்கள்
‘பரமாத்மா’ என அழைக்கும் பொழுது அவர்களின் புத்தி அசரீரியானவரிடமே செல்லுகின்றது. அசரீரியான ஆத்மாக்கள் அசரீரியான தந்தையை நினைவு செய்கின்றார்கள். அதுவே ஆத்ம உணர்வு என்று அழைக்கப்படுகின்றது. சரீரத்தை நினைவு செய்கின்றவர்கள் தத்துவ (தீய ஆவி) உணர்வில் இருக்கின்றார்கள். தீய ஆவிகள் தீய ஆவிகளை நினைவு செய்கின்றனர். ஏனெனில் அவர்கள் தம்மை ஆத்மாக்கள் எனக் கருதாது, தம்மைப் பஞ்ச தத்துவங்களால்; ஆன சரீரம் எனக் கருதுகின்றார்கள். சரீரத்திற்கே அவர்களின் பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் தங்களைப் பஞ்ச தத்துவங்களால் ஆன ஆவிகளாகக்
(மனிதர்களாகக்) கருதி,
ஏனையவர்களின் சரீரங்களையே நினைவு செய்கிறார்கள். அவர்கள் ஆத்ம உணர்வில் இருப்பதில்லை.
அவர்கள் தம்மை அசரீரியான ஆத்மாக்கள் என்று கருதுவார்களாயின், அவர்கள் அசரீரியான கடவுளை நினைவு செய்வார்கள். ஆத்மாக்கள் அனைவரின் உறவுமுறைகளும் முதன்முதலில் கடவுளுடனேயே உள்ளன. ஆத்மாக்கள் துன்பத்தில் இருக்கும் பொழுதே கடவுளை நினைவு செய்கின்றார்கள். அவர்கள் அவருடன் ஓர் உறவுமுறையைக் கொண்டுள்ளார்கள். அவர் ஆத்மாக்களை அனைத்துத் துன்பத்திலும் இருந்து விடுவிக்கின்றார். அவர் சுவாலை என்றும் அழைக்கப்படுகின்றார். இதில் ஒளி போன்ற எக் கேள்விக்கும் இடமில்லை. அவர் பரமாத்மாவான பரமதந்தையாவார். அவரை அவர்கள் ஒரு சுவாலை என அழைப்பதால்,
அவர் ஓர் ஒளி என மக்கள் நினைக்கின்றார்கள். தந்தை தானே விளங்கப்படுத்தியுள்ளார்: நானே பரமாத்மா, நான் சிவன் என்று அழைக்கப்படுகின்றேன். சிவன் உருத்திரன் என்றும் அழைக்கப்படுகின்றார். அந்த அசரீரியானவருக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. வேறு எவருக்கும் அவரைப் போன்று அதிகளவு பெயர்கள் இருப்பதில்லை. பிரம்மா,
விஷ்ணு, சங்கரரும் தமக்கென ஒரு பெயரையே கொண்டுள்ளார்கள். சரீரதாரிகள் அனைவருக்கும் ஒரேயொரு பெயரே உள்ளது. ஒரேயொரு கடவுளுக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவரின் புகழ் வரையறையற்றது. மனிதர்களுக்குக் குறிப்பிட்ட ஒரு பெயரே உள்ளது.
நீங்கள் இப்பொழுது மரணித்து வாழ்வதால்,
நீங்கள் கடந்தவை அனைத்தையும் மறக்க வேண்டும் என்பதற்காக உங்களுக்கு வேறு பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் பரமாத்மாவான பரமதந்தையின் முன்னிலையில் மரணித்து வாழ்வதால்,
இதுவே நீங்கள் மரணித்து வாழும் பிறவியாகும். ஆகையால் நீங்கள் நிச்சயமாக ஒரு தாய்க்கும்,
தந்தைக்கும் பிறக்கின்றீர்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு இந்த ஆழமான விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். உலகத்தவருக்குச் சிவனைத் தெரியாது.
அவர்களுக்கு பிரம்மா,
விஷ்ணு சங்கரரையே தெரியும். அவர்கள் பிரம்மாவின் பகலையும்,
பிரம்மாவின் இரவையும் பற்றிப் பேசுகின்றார்கள். பிரம்மாவின் மூலம் ஸ்தாபனை இடம்பெறுகின்றது என அவர்கள் கேள்வியுற்றிருந்தாலும், அது எவ்வாறு இடம்பெறுகின்றது என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர் படைப்பவர் என்பதால்,
அவர் நிச்சயமாக ஒரு புதிய தர்மத்தையும் புதிய உலகையும் படைப்பார்.
அவர் பிரம்மாவின் மூலமாக மாத்திரமே பிராமணக் குலத்தைப் படைக்கின்றார். பிராமணர்களாகிய நீங்கள் பிரம்மாவை அன்றி, பரமாத்மாவான பரமதந்தையையே நினைவு செய்கின்றீர்கள்;. ஏனெனில் நீங்கள் பிரம்மாவின் மூலம் அவருக்கு
(பரமாத்மாவிற்கு) உரியவர்கள் ஆகுகின்றீர்கள். வெளியில் உள்ள சரீர உணர்வு கொண்ட பிராமணர்கள் தம்மைச் சிவனின் பேரக் குழந்தைகளான, பிரம்மாவின் குழந்தைகள் என்று அழைக்க மாட்டார்கள்.
அவர்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடிய போதிலும், அவரை அறியாததால் அவருக்குரிய மதிப்பைக் கொடுக்காதுள்ளார்கள். அவரின் ஆலயத்திற்குச் சென்று, அவர் பிரம்மாவோ, விஷ்ணுவோ,
சங்கரரோ, இலக்ஷ்மி நாராயணனோ அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்கின்றார்கள். அவர் நிச்சயமாக அசரீரியான பரமாத்மாவான பரமதந்தையாவார். நடிகர்கள் அனைவரும் தத்தமக்கென ஒரு பாகத்தைக் கொண்டுள்ளனர். அவர்கள் மறுபிறப்பெடுக்கும் பொழுதும்,
அவர்களுக்கென ஒரு பெயர் கொடுக்கப்படுகின்றது. பரமாத்மாவான பரமதந்தை மாத்திரமே சரீர உருவமோ அல்லது பெயரோ அற்றவர் ஆவார். எவ்வாறாயினும் மந்த புத்தியுள்ள மக்களால் இதனைப் புரிந்து கொள்ள முடிவதில்லை. கடவுளின் ஞாபகார்த்தம் இருப்பதால்,
அவர் நிச்சயமாக வந்து, சுவர்க்கத்தைப் படைத்திருக்க வேண்டும்.
இல்லாவிடின், சுவர்க்கத்தைப் படைப்பது யார்?
அவர் வந்து,
மீண்டும் ஒருமுறை இந்த உருத்திர ஞான யாகத்தை உருவாக்கி உள்ளார்.
இது யாகம் என்று அழைக்கப்படுகின்றது, ஏனெனில் இதில் உங்களை நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும்.
பலரும் யாகங்களை வளர்க்கின்றார்கள். அவை யாவும் பக்தி மார்க்கத்திற்கான பௌதீக யாகங்கள் ஆகும்.
பரமாத்மாவான பரமதந்தையும் வந்து, தானே ஒரு யாகத்தை உருவாக்குகின்றார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். ஒரு யாகம் உருவாக்கப்படும் பொழுது, அப் பிராமணர்கள் சமயநூல்கள்,
சமயக் கதைகள் போன்றவற்றைக் கூறுகின்றார்கள். தந்தை ஞானம் நிறைந்தவர். கீதை,
பாகவதம் போன்ற ஏனைய அனைத்துச் சமயநூல்கள் யாவும் பக்தி மார்க்கத்திற்கு உரியவையாகும். சடப் பொருட்களினால் உருவாக்கப்படும் யாகம் பக்தி மார்க்கத்திற்குரியதாகும். இது பக்தி மார்க்கத்திற்கான நேரமாகும். கலியுக இறுதி வரும் பொழுது, பக்தியும் முடிவடைய வேண்டும்.
அப்பொழுதே கடவுள் வந்து, உங்களைச் சந்திக்கின்றார். ஏனெனில் அவரே பக்திக்கான பலனைக் கொடுக்கின்றார். அவர் ஞான சூரியன் என அழைக்கப்படுகின்றார். ஞான சூரியன், ஞானச் சந்திரன், அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் போன்றோர் உள்ளனர். நல்லது.
தந்தையே ஞான சூரியன், அதன் பின்னர் தாயான ஞானச்சந்திரன் இருக்க வேண்டும். அவர் எவரின் சரீரத்தில் பிரவேசிக்கின்றாரோ, அவரே ஞானச் சந்திரன் ஆவார். ஏனைய அனைவரும் அதிர்ஷ்ட நட்சத்திரங்களான குழந்தைகளாவார்கள். இக் கணக்கிற்கு ஏற்ப, ஜெகதாம்பாளும் ஓர் அதிர்ஷ்ட நட்சத்திரம் ஆவார்.
ஏனெனில் நீங்கள் குழந்தைகள் ஆவீர்கள்.
நட்சத்திரங்களின் மத்தியிலும் சில பிரகாசமாகவிருக்கும். இங்கும் அவ்வாறே வரிசைக்கிரமமாகவே உள்ளது.
அவை பௌதீகச் சூரியனும், சந்திரனும்,
நட்சத்திரங்களும் ஆகும்.
ஆனால் இவை ஞான விடயங்களாகும். அதே போன்றே அவை நீர் நதிகள். ஆனால் இவர்கள் ஞானக்கடலில் இருந்து தோன்றிய ஞானநதிகள் ஆவார்கள்.
மக்கள் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்கள். ஆகையால் முழு உலகினரதும் தந்தை நிச்சயமாக வருகின்றார்.
அவர் நிச்சயமாக வந்து, சுவர்க்கத்தைப் படைக்கின்றார். தந்தை வந்து, மறைந்து போய்விட்ட ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். அரசாங்கம் சமயத்தில் நம்பிக்கை கொண்டிருப்பதில்லை. தமக்குச் சமயம் எதுவும் இல்லை என அவர்கள் கூறுகின்றார்கள். அவர்கள் கூறுவது சரியே.
பாரதத்தின் ஆதி சனாதன தேவிதேவதா தர்மம் மறைந்து விட்டது எனத் தந்தையும் கூறுகிறார்.
தர்மமே சக்தியாகும்.
பாரத மக்கள் தேவ தர்மத்தினராக இருந்த பொழுது மிகவும் சந்தோஷமாக இருந்தார்கள். அப்பொழுது உலக சர்வ சக்திவானின் இராச்சியம் இருந்தது. அதிமேன்மையான மனிதர்களே இராச்சியத்தை ஆட்சி செய்தார்கள்.
ஸ்ரீ இலக்ஷ்மியும் ஸ்ரீ நாராயணனுமே அதி மேன்மையானவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். அங்கே அதிமேலான, அதிதாழ்ந்த என்று வரிசைக்கிரமம் உள்ளது. அதி மேன்மையானவர்கள், மேலானவர்கள்,
மத்திம தரத்தினர்,
அதன்பின்னர் தாழ்ந்தவர்களும் உள்ளனர். முதன்முதலில் அதி மேன்மையானவர்களாக ஆகுபவர்கள், பின்னர் மத்திம தரத்தினராகவும், பின்னர் அதிதாழ்ந்தவர்களும் ஆகுகின்றார்கள். ஆகையால் இலக்ஷ்மி நாராயணனே அதிமேன்மையானவர்கள். அவர்களே மனிதர்கள் அனைவரிலும் அதி மேன்மையானவர்கள். அதன்பின்னர் அவர்கள் கீழே வரும் போது, அவர்கள் தேவர்களில் இருந்து சத்திரியர்களாகவும், சத்திரியர்களில் இருந்து வைசியர்களாகவும் ஆகி, பின்னர் சூத்திரர்களாகவும் அதன் பின்னர் அதிதாழ்ந்தவர்களும் ஆகுகின்றார்கள். சீதையையும் இராமரையும் அதிமேன்மையானவர்கள் என அழைக்க முடியாது. இலக்ஷ்மியும் நாராயணனுமே அதி மேன்மையான சதோபிரதான் மனிதர்களான, அரசர்களுக்கு எல்லாம் அரசனும் அரசியும் ஆவார்கள்.
இவை யாவும் உங்கள் புத்தியில் உள்ளன. இவ் உலகச் சக்கரம் எவ்வாறு சுழலுகின்றது?
முதன் முதலில்,
அவர்களே அதிமேலானவர்களாகவும், பின்னர் அவர்கள் மத்திம தரமுடையவர்களாகவும், அதன்பின்னர் தாழ்ந்தவர்களாகவும் ஆகுகின்றார்கள். இந்த நேரத்தில் உலகம் முழுவதும் தமோபிரதான் ஆகவுள்ளது. நீங்கள் இப்பொழுது எந்தத் தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறீர்களோ, அவரே இதனை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார். 5000 வருடங்களுக்கு முன்னர் பரமாத்மாவான, பரமதந்தை சிவன் இங்கே வந்தார் என நீங்கள் மக்களுக்கு விளங்கப்படுத்தலாம். அல்லாவிடின்,
அவர்கள் ஏன் சிவனின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும்?
பரமாத்மாவான பரமதந்தை நிச்சயமாகக் குழந்தைகளுக்கென ஒரு பரிசைக் கொண்டு வருவதுடன்,
அவர் அதிமேலான ஒரு பணியையும் நிச்சயமாக மேற்கொள்வார்.
அவர் தமோபிரதான் ஆகவுள்ள முழு உலகையும் சதோபிரதான் ஆக்கி, அதனைச் சதா சந்தோஷம் நிறைந்ததாக்குகின்றார். அவர் எந்தளவிற்கு மேன்மையானவரோ,
அந்தளவிற்கு அவருக்கான சிறந்த ஞாபகார்த்தமும் உள்ளது. அதனை அவர்கள் கொள்ளை அடித்து விட்டனர்.
செல்வத்திற்காக மக்கள் பிறரைத் தாக்குகின்றார்கள். செல்வத்திற்காகவே மக்கள் வெளிநாட்டில் இருந்தும் வந்தார்கள். அந்த நேரத்திலும், அதிகளவு செல்வம் இருந்தது.
எவ்வாறாயினும், மாயையான இராவணன் பாரதத்தைச் சிப்பியின் பெறுமதியாக்கினான். இப்பொழுது தந்தை அதனை வைரத்;தின் பெறுமதியுடையதாக ஆக்குவதற்கு வந்துள்ளார்.
அத்தகைய சிவபாபாவை எவருக்கும் தெரியாது.
அவரைச் சர்வவியாபி என்று அவர்கள் கூறுகின்றார்கள். இவ்வாறு கூறுவது தவறாகும்.
உங்கள் படகைக் கரையேற்றும் சற்குரு ஒரேயொருவரே, ஆனால் உங்களை மூழ்கச் செய்ய பலர் உள்ளனர். அனைவரும் நச்சுக்கடலில் மூழ்கிக் கொண்டிருப்பதாலேயே அவர்கள் கூறுகின்றார்கள்: இந்தச் சுவையற்ற நச்சுக் கடலில் இருந்து எங்களை அக்கரையான பாற்கடலுக்கு அழைத்துச் செல்லுங்கள். விஷ்ணு பாற்கடலில் வாழ்வதாகக் கூறப்படுகின்றது. இலக்ஷ்மியும் நாராயணனும் ஆட்சி செய்கின்ற சுவர்க்கம் பாற்கடல் என அழைக்கப்படுகின்றது. விஷ்ணு அங்கே பாற்கடல் ஒன்றில் இளைப்பாறுகின்றார் என்றில்லை. அவர்கள் பெரிய ஏரி ஒன்றைச் செய்து,
அதன் மத்தியில் விஷ்ணுவை வைக்கின்றார்கள். அவர்கள் விஷ்ணுவின் மிகப்பெரிய உருவத்தைச் செய்கின்றார்கள். இலக்ஷ்மியும் நாராயணனும் அளவில் அவ்வளவு பெரியவர்கள் இல்லை. அதிகபட்சம் அவர்கள் 6 அடி உயரமாக இருக்கலாம்.
அவர்கள் பாண்டவர்களின் பெரிய சிலைகளையும் செய்கின்றார்கள். அவர்கள் இராவணனின் மிகப்பெரிய கொடும்பாவியையும் செய்கின்றார்கள். அவர்களின் பெயர்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவை என்பதால்,
அவர்களுக்குப் பெரிய சிலைகளைச் செய்கின்றார்கள். பாபாவின் பெயரே அதிமேலானது என்றாலும்,
அவருக்கென ஒரு சிறிய உருவமே செய்யப்படுகின்றது. விளங்கப்படுத்துவதற்காகவே அவருக்கு ஒரு பெரிய உருவம் கொடுக்கப்பட்டுள்ளது. தந்தை கூறுகின்றார்:
எனக்கு அத்தனை பெரிய உருவம் இல்லை. ஆத்மாக்கள் எவ்வாறு சிறியதாக இருக்கின்றார்களோ, அவ்வாறே பரமாத்மாவான நானும் நட்சத்திரம் போன்றவரே.
அவர் பரமாத்மா என்று அழைக்கப்படுகின்றார். அவரே அனைவரிலும் அதிமேலானவர். அவருக்குள் ஞானம் முழுவதும் அடங்கியுள்ளது. அவரின் புகழ் பாடப்படுகின்றது: அவரே மனித உலக விருட்சத்தின் விதையாவார். அவரே ஞானக்கடல் ஆவார்.
அவரே உயிருள்ள ஆத்மாவாவார். எவ்வாறாயினும், அவர் புலன்களைப் பெற்றுக் கொள்ளும் பொழுதே அவரால் பேச முடியும்.
ஒரு குழந்தையால் தனது பிஞ்சு அவயவங்களைக் கொண்டு பேச முடியாத போதிலும், அக் குழந்தை பெரியவர் ஆகியதும், அவர் சமயநூல்கள் போன்றவற்றைப் பார்க்கும் போது,
அவருக்குத் தனது கடந்தகாலச் சமஸ்காரங்கள் நினைவு வருவதைப் போன்றே, தந்தையும் இங்கமர்ந்திருந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: 5000 வருடங்களின் பின்னர் நான் உங்களுக்கு அதே இராஜயோகத்தைக் கற்பிக்க வந்துள்ளேன்.
கிருஷ்ணர் இராஜயோகத்தைக் கற்பிக்கவில்லை. அவர்கள் தமது வெகுமதியையே அனுபவித்துள்ளனர். அவர்கள்
8 பிறவிகள் சூரிய வம்சத்திலும், 12 பிறவிகள் சந்திர வம்சத்திலும் அதன் பின்னர்
63 பிறவிகள் வைசிய,
சூத்திர வம்சங்களிலும் இருந்தார்கள். இதுவே அனைவரதும் இறுதிப் பிறவியாகும். கிருஷ்ணரின் ஆத்;;மாவும் இதனைச் செவிமடுக்கின்றார். நீங்களும் இதனைச் செவிமடுக்கின்றீர்கள். இது சங்கமயுகப் பிராமணர்களின் குலமாகும். அதன்பின்னர் நீங்கள் பிராமணர்களில் இருந்து தேவர்கள் ஆகுவீர்கள். ஒரேயொரு பரமாத்மாவான பரமதந்தையே மூன்று தர்மங்களையும் ஸ்தாபிக்கின்றார், அதாவது பிராமண தர்மம்,
சூரிய வம்சத் தேவதர்மம், சந்திர வம்ச சத்திரிய தர்மம். ஆகையால் மூன்றினதும் சமயநூல் ஒன்றேயாகும். வெவ்வேறு சமயநூல்கள் இருக்க முடியாது. அதிமகத்துவமான பிரம்மாவே, அனைவரதும் தந்தையான பிரஜாபிதா ஆவார். அவருடைய சமயநூல் என்று எதுவும் இல்லை.
‘கடவுள் பேசுகின்றார்’
என்பது கீதையில் மாத்திரமே குறிப்பிடப்பட்டுள்ளது. ‘கடவுள் பிரம்மா பேசுகின்றார்’
என்று குறிப்பிடப்படவில்லை. பிரம்மாவின் மூலம் சிவனே பேசி,
சூத்திரர்களைப் பிராமணர்களாக மாற்றுகின்றார். பிராமணர்களே தேவர்கள் ஆகுகின்றார்கள். சித்தி அடையாதவர்கள் சத்திரியர்கள் ஆகுகின்றார்கள். அவர்கள் இரு கலைகளினால் குறைவடைந்துள்ளனர். அவர் அனைத்தையும் மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகின்றார்! அதிமேலானவர் பரமாத்மா பரமதந்தையாவார். அதன்பின்னர் பிரம்மா,
விஷ்ணு, சங்கரர் உள்ளனர். அவர்களையும் அதிமேன்மையானவர்கள் என அழைக்க முடியாது.
அதிமேன்மையானவர்கள் ஆகுபவர்களே அதி தாழ்ந்தவர்களும் ஆகுகின்றார்கள். மனிதர்கள் அனைவரிலும், இலக்ஷ்மியும் நாராயணனனுமே அதி மேன்மையானவர்கள் என்பதால் அவர்களுக்கு ஆலயம் ஒன்றும் உள்ளது.
எவ்வாறாயினும் அவர்களின் புகழ் எவருக்கும் தெரியாது. மக்கள் அவர்களை வழிபடுவதற்காகத் தொடர்ந்தும் பக்தர்களாக இருக்கிறார்கள். நீங்கள் இப்பொழுது பூஜிப்பவர்களில் இருந்து பூஜிக்கத்தகுதியுடைவர்கள் ஆகுகின்றீர்கள். மாயை மீண்டும் உங்களைப் பூஜிப்பவர்கள் ஆக்குகிறாள். நாடகம் இவ்வாறாக உருவாக்கப்பட்டுள்ளது. நாடகம் முடிவடையும் பொழுது,
நான் வரவேண்டும்.
அதன் பின்னர் விரிவாக்கம் இயல்பாகவே நின்றுவிடும். அதன்பின்னர் குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் சொந்தப் பாகங்களில் நடிக்க மீண்டும் வரவேண்டும்.
பரமாத்மாவான பரமதந்தையே,
இங்கே உங்கள் முன்னிலையில் அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். பக்தி மார்க்கத்தில் மக்கள் அவரின் பிறந்தநாளைக் கொண்டாடுகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் இதனைக் கொண்டாடுகின்றார்கள். சுவர்க்கத்தில் அவர்கள் எவரின் பிறந்தநாளையும் கொண்டாடுவதில்லை. அவர்கள் கிருஷ்ணரினதோ,
இராமரதோ பிறந்தநாளையேனும் கொண்டாடுவதில்லை. அவர்கள் தாமே நடைமுறை ரீதியாக அங்கே வாழ்கின்றார்கள். அவர்கள் இங்கே வாழ்ந்து,
சென்று விட்டதாலேயே மக்கள் அதனைக் கொண்டாடுகின்றார்கள். அங்கே,
கிருஷ்ணரின் பிறந்தநாளை அவர்கள் ஒவ்வொரு வருடமும் கொண்டாடுவதில்லை. அங்கே அவர்கள் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருப்பதால், ஏன் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும்? குழந்தைகள் தமது பெற்றோரினால் பெயர் சூட்டப்படுகின்றார்கள். அங்கே எந்தக் குருவும் இருப்பதில்லை. உண்மையில் அவ்விடயங்களுடன் யோகத்திற்கும் ஞானத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
எனினும், அங்கே என்ன சம்பிரதாயம் இருந்தது என்று நீங்கள் வினவினால்,
பாபா உங்களுக்குக் கூறுவார்: அங்கிருந்த சம்பிரதாயங்கள் அனைத்தும் தொடரும். அவற்றைப் பற்றி நீங்கள் வினவத் தேவையில்லை.
எல்லாவற்றிற்கும் முதலில் உங்கள் அந்தஸ்தை அடைய முயற்சி செய்யுங்கள். தகுதியுடையவராகிய பின்னர் வினவுங்கள்.
நாடகத்தில் ஏதோ ஒரு சம்பிரதாயம் இருந்திருக்கும். நல்லது.
இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய்,
தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும்,
நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- உங்களை அசரீரியான ஆத்மாவாகக் கருதி, எச்சரீரதாரிகளையும் அன்றி, அசரீரியான தந்தையை நினைவு செய்யுங்கள். மரணித்து வாழ்ந்து, உங்கள் புத்தியிலிருந்து கடந்தவற்றின் பழைய விடயங்களை அகற்றிடுங்கள்.
- தந்தை உருவாக்கியுள்ள இந்த உருத்திர ஞான யாகத்தில் உங்களை முற்றாக நீங்கள் அர்ப்பணிக்க வேண்டும். சூத்திரர்களைப் பிராமண தர்மத்தினராக மாற்றும் சேவையைச் செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
முறையான நாளாந்த
நேர அட்டவணையை
நிர்ணயித்து, தந்தையின்
சகவாசத்துடன் எங்களுடைய
ஒவ்வொரு செயலையும்
மிகச்சரியாக மேற்கொள்கின்ற
ஓர் உலக
உபகாரி ஆகுவீர்களாக.
உலகில் உள்ள முக்கிய பிரமுகர்கள் தமக்கென ஒரு நாளாந்த நேர அட்டவணையை நிர்ணயித்துக் கொள்வார்கள்.
நேர அட்டவணைக்கு
ஏற்ப முறையாக நிர்ணயிக்கப்படுகின்ற பணி மிகச் சரியானதாகும். முறையாக ஒழுங்குபடுத்தப்படுவதால், உங்களுக்கு நேரமும் சக்தியும் சேமிக்கப்படுவதால், ஒரு நபரால் 10 பணிகளை மேற்கொள்ள முடியும். உலக உபகாரிகளாகிய நீங்கள் பொறுப்பான ஆத்மாக்கள். ஒவ்வொரு பணியிலும் வெற்றி ஈட்டுவதற்கு,
உங்கள் நேர அட்டவணையை நிர்ணயித்து, சதா தந்தையுடன் இணைந்திருங்கள். ஆயிரம் கரங்களுடைய தந்தை உங்களுடன் இருக்கும் போது, ஒரு பணிக்குப் பதிலாக உங்களால் ஆயிரம் பணிகளை மிகச்சரியாக
மேற்கொள்ள முடியும்.
சுலோகம்:
ஆத்மாக்கள் அனைவரது மீதும் தூய எண்ணங்களைக்
கொண்டிருப்பது என்றால் ஆசீர்வாதங்களின் சொரூபமாக இருப்பதாகும்.
---ஓம் சாந்தி---
0 Comments