17-01-2023 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் உங்கள் பாக்கியத்தை மேன்மையாக்கிக் கொள்வதற்காக இந்தக் கல்வி கற்குமிடத்திற்கு வந்துள்ளீர்கள்.
நீங்கள் அசரீரியான தந்தையுடன் கற்று, அரசர்களுக்கெல்லாம் அரசர்களாக வேண்டும்.
கேள்வி:
பாக்கியசாலிகளாகிய சில குழந்தைகள் எவ்வாறு அபாக்கியசாலிகள் ஆகுகின்றார்கள்?
பதில்:
கர்ம பந்தனங்கள் அற்றவர்கள் பாக்கியசாலிகள், அதாவது, அவர்கள் கர்ம பந்தனங்களிலிருந்து விடுபட்டுள்ளனர். எவ்வாறாயினும்,
பின்னர் கற்பதில்; கவனம் செலுத்தாமல், அவர்களின் புத்தி இங்குமங்கும் அலைந்து திரிந்தாலோ, அத்தகைய மிகப்பெரிய ஆஸ்தியைக் கொடுக்கின்ற ஒரேயொரு தந்தையை நினைவுசெய்யாமல் இருந்தாலோ, அவர்கள் பாக்கியசாலிகளாக இருந்தாலும்,
அபாக்கியசாலிகள் என்றே அழைக்கப்படுவார்கள்.
கேள்வி:
ஸ்ரீமத் எந்த இனிமையினால் நிறைந்துள்ளது?
பதில்:
ஸ்ரீமத்தில் மாத்திரமே தாய், தந்தை, ஆசிரியர், குரு போன்றோரின் வழிகாட்டல்கள் அடங்கியுள்ளன. ஸ்ரீமத் சக்கரினைப் போன்றது, அதில் இவை அனைத்தினதும் இனிமை நிறைந்துள்ளது.
பாடல்: நான் எனது பாக்கியத்தை விழித்தெழச் செய்து வந்துள்ளேன்
ஓம் சாந்தி. கடவுள் சிவன் பேசுகின்றார்.
மக்கள் கீதையை உரைக்கும்பொழுது, அவர்கள் கிருஷ்ணரின் பெயரைப் பயன்படுத்தியே கூறுகின்றார்கள்.
இங்கே அதனைப் பேசுபவர் கூறுகின்றார்: கடவுள் சிவன் பேசுகின்றார். சிவபாபாவே பேசுவதால், ‘கடவுள் சிவன் பேசுகின்றார்’ என அவரால் கூறமுடியும். இருவரும் சேர்ந்தும் இதனைக் கூற முடியும். குழந்தைகளாகிய நீங்கள் இருவருக்கும் உரியவர்கள். புத்திரர், புத்திரிகள் இருசாராருமே இங்கே அமர்ந்திருக்கின்றீர்கள். ஆகவே, அவர் கூறுகின்றார்: குழந்தைகளே, உங்களுக்குக் கற்பிப்பவர் யார் என்பதை நீங்கள் புரிந்துகொண்டிருக்கின்றீர்களா? பாப்தாதா உங்களுக்குக் கற்பிப்பதாக நீங்கள் கூறுவீர்கள். மூத்தவர் தந்தை என்று அழைக்கப்படுகிறார், இளையவர் தாதா என்று அழைக்கப்படுகிறார், அதாவது, சகோதரரைத் தாதா என்று அழைக்கின்றார்கள்.
எனவே, பாபா, தாதா இருவரும் இணைந்தே பாப்தாதா ஆவார்கள். நீங்கள் மாணவர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். மாணவர்கள் தமது பாக்கியத்தை உருவாக்கிக் கொள்ளவும், கற்று, இன்ன இன்ன பரீட்சையில் சித்தியெய்த வேண்டும் என்பதற்காகவும் ஒரு பாடசாலையில் இருக்கின்றார்கள். அந்தப் பௌதீகப் பரீட்சைகள் பல உள்ளன. இங்கே, பரமாத்மாவான பரமதந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது குழந்தைகளான உங்கள் இதயங்களில் உள்ளது. இவரை (பிரம்மாவை) நீங்கள் தந்தை என்று அழைப்பதில்லை. அசரீரியான தந்தையே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நாங்கள் தந்தையுடன் இராஜயோகம் கற்று, அரசர்க்கெல்லாம் அரசர்கள் ஆகுவோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். அரசர்களும் உள்ளனர், அரசர்களுக்கெல்லாம் அரசர்களும் உள்ளனர். அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆகுபவர்களை அரசர்கள் வழிபடுகின்றார்கள். பாரத தேசத்தில் மாத்திரமே இவ் வழமை தொடர்கின்றது. தூய்மையற்ற அரசர்கள் தூய அரசர்களை (விக்கிரகங்களை)
வழிபடுகின்றார்கள். பெரும் சொத்துக்களைக் கொண்டிருப்பவர்கள் சக்கரவர்த்திகள்
(மகாராஜாக்கள்) என்று அழைக்கப்படுகின்றார்கள். அரசர்கள் இளையவர்கள். இக்காலத்தில் சில அரசர்களிடம் மகாராஜாக்களை விட அதிகளவு சொத்துக்கள் உள்ளன. சில செல்வந்தர்களிடம் அரசர்களை விட அதிகளவு சொத்துக்கள் உள்ளன. அங்கே, சட்டத்திற்கு முரணாக எதுவும் இருக்க மாட்டாது; அங்கே அனைத்தும் சட்டத்திற்கேற்பவே நடைபெறுகின்றது.
பெரும் சக்கரவர்த்திகள் பெரும் சொத்துக்களைக் கொண்டிருப்பார்கள். எல்லையற்ற தந்தை இங்கமர்ந்திருந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பரமாத்மா அன்றி, வேறு எவராலும் உங்களைச் சுவர்க்க அதிபதிகளான, அரசர்களுக்கெல்லாம் அரசர்களாக்க முடியாது. அசரீரியான தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர். தந்தையான சுவர்க்கக் கடவுள் என அவர் நினைவுகூரப்படுகின்றார். தந்தை தெளிவாக விளங்கப்படுத்துகின்றார்: நானே குழந்தைகளாகிய உங்களுக்கு மீண்டும் ஒருமுறை சுய இராச்சியத்தைக் கொடுத்து, உங்களை அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆக்குபவர். நீங்கள் அரசர்க்கெல்லாம் அரசர்கள் ஆகுவதற்காக, உங்கள் பாக்கியத்தை விழித்தெழச் செய்து, இப்பொழுது எல்லையற்ற தந்தையிடம் வந்திருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது பெருஞ் சந்தோஷத்திற்கான விடயமாகும். இது மிகவும் முக்கியமான பரீட்சையாகும்.
பாபா கூறுகின்றார்:
ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள்!
இது தாய், தந்தை, ஆசிரியர், குரு போன்றோரின் வழிகாட்டல்களை உள்ளடக்கியுள்ளது.
இது அவர்கள் அனைவரினதும் சக்கரின் ஆகும். இதில் அவர்கள் அனைவரினதும் இனிமை நிறைந்துள்ளது. அவை அனைத்தினதும் இனிமையால் ஒரேயொருவர் நிறைந்துள்ளார். ஒரேயொருவரே அனைவரதும் அன்பிற்கினியவர். தந்தையே தூய்மையற்றவர்களைத் தூய்மை ஆக்குகின்றார்.
குருநானக்கும் அந்த ஒரேயொருவரைப் புகழ்ந்துள்ளார் என்பதால் நீங்கள் நிச்சயமாக அவரை நினைவுசெய்ய வேண்டும். முதன்முதலில் அவர் உங்களைத் தான் இருக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்வார், அதன்பின்னர் அவர் உங்களைத் தூய உலகிற்கு அனுப்புவார். இது இறை கல்லூரி என வருகின்ற எவருக்கும் விளங்கப்படுத்துங்கள். கடவுள் பேசுகின்றார். ஏனைய பாடசாலைகளில்,
‘கடவுள் பேசுகின்றார்’
என அவர்கள் கூற மாட்டார்கள். கடவுளே அசரீரியானவரும், ஞானக்கடலும், மனித உலக விருட்சத்தின் விதையும் ஆவார். நான் இங்கமர்ந்திருந்து, குழந்தைகளான உங்களுக்குக் கற்பிக்கின்றேன். இது இறை ஞானமாகும். சரஸ்வதி ஞான தேவி என்று அழைக்கப்படுகின்றார். எனவே, நிச்சயமாக அவர்கள் இறை ஞானத்தினூடாக இறைவர்கள்;, இறைவிகள் ஆகுகின்றார்கள்.
‘சட்டநிபுணர்’ ஆகுவதற்கான கல்வியில் நீங்கள் சட்டநிபுணர் ஆகுவீர்கள். இது இறை ஞானமாகும். கடவுள் சரஸ்வதிக்கு ஞானத்தைக் கொடுத்துள்ளார். எனவே, சரஸ்வதி ஞான தேவியாக இருப்பதைப் போன்றே, குழந்தைகளாகிய நீங்களும் அவ்வாறானவர்களே. சரஸ்வதிக்குப் பல குழந்தைகள் உள்ளனர், ஆனால்;, ஒவ்வொருவரையும் ஞான தேவி என்று அழைப்பது சாத்தியமில்லை. இந்நேரத்தில் நீங்கள் உங்களை ஞான தேவிகள் என்றழைக்க முடியாது. அங்கே, நீங்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுகின்றீர்கள். கடவுள் உண்மையிலேயே உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் உங்களை இப்பாடங்களைக் கிரகிக்கச் செய்கின்றார்.
அந்த ஒரேயொருவரே உங்களுக்கு உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கொடுக்கின்றார், ஆனால் தேவர்களால் இறைவர்களும்;, இறைவிகளுமாக இருக்க முடியாது. இந்தத் தாயும் தந்தையுமே இறைவன், இறைவி போன்றவர்கள், ஆனால் அவர்கள் அதுவல்ல. அசரீரியான தந்தையே, தந்தையான கடவுள் என்று அழைக்கப்படுகின்றார். இச்சரீரதாரி கடவுள் என்று அழைக்கப்பட மாட்டார். இவை மிகவும் ஆழமான விடயங்கள். ஆத்மாக்களின் வடிவமும், பரமாத்மாவுடனான உறவுமுறையும் அத்தகைய ஆழமான விடயமாகும். அந்த லௌகீகமான தாய்வழி, தந்தைவழி உறவுமுறைகளின் உறவினர்கள் பொதுவானவர்கள். இது ஓர் ஆன்மீக உறவுமுறை. விளங்கப்படுத்துவதற்கு உங்களுக்குச் சிறந்த வழிமுறைகள் தேவை. அவர்கள் தாயும் தந்தையுமானவர் எனப் பாடுவதால், நிச்சயமாக அதில் ஓர் அர்த்தமுள்ளது. அவ்வார்த்தைகள் அழிவற்றவை ஆகுகின்றன. அவை பக்தி மார்க்கத்திலும் தொடர்கின்றன.
நீங்கள் ஒரு பாடசாலையில் அமர்ந்திருக்கின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். உங்களுக்குக் கற்பிப்பவர் ஞானக்கடல் ஆவார். இவரின் ஆத்மாவும் கற்கின்றார். தந்தையான கடவுளே இந்த ஆத்மாவின் தந்தை. அவரே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையும், எங்களுக்குக் கற்பிப்பவரும்,
ஆவார். அவர் ஒரு கருப்பைக்குள் பிரவேசிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவ்வாறாயின், அவர் எவ்வாறு உங்களுக்குக் கற்பிப்பார்?
அவர் பிரம்மாவின் சரீரத்திற்குள் பிரவேசிக்கின்றார். அதன்பின்னர்,
அம்மக்கள் பிரம்மாவிற்குப் பதிலாக, கிருஷ்ணரின் பெயரை இட்டுள்ளார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஒரு தவறு நடக்கும்பொழுதே, தந்தையால் வந்து, அத்தவறைத் திருத்தி, உங்களைத் தவறுகள் செய்வதிலிருந்து விடுவிக்க முடியும். ஏனெனில் அசரீரியானவரை அறியாததாலேயே, மக்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நானே எல்லையற்ற ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்ற, உங்கள் எல்லையற்ற தந்தை. இலக்ஷ்மியும் நாராயணனும் எவ்வாறு சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றார்கள்? எவருக்கும் இது தெரியாது. அத்தகைய செயல்களை எவ்வாறு செய்வது என்று நிச்சயமாக அவர்களுக்கு யாரோ கற்பித்திருக்க வேண்டும், அவ்வாறு அவர்களை உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்கு நிச்சயமாக மூத்தவரான ஒரேயொருவரே (சிவபாபா) அவர்களுக்கு உதவியிருக்க வேண்டும். மக்களுக்கு எதுவுமே தெரியாது. தந்தை உங்களுக்கு அதிகளவு அன்புடன் விளங்கப்படுத்துகின்றார். அவர் அத்தகைய மகத்தான அதிகாரியாவார்.
அவர் முழு உலகையும் தூய்மையாக்குகின்ற, அதிபதி. அவர் விளங்கப்படுத்துகின்றார்: இந்த நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. நீங்கள் சக்கரத்தைச் சுற்றி வரவேண்டும். எவருக்குமே இந்த நாடகத்தைத் தெரியாது. நாங்கள் நாடகத்தில் எவ்வாறு நடிகர்களாக இருக்கிறோம் என்பதும், இந்தச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பதும், துன்ப உலகை யார் சந்தோஷ உலகமாக மாற்றுகின்றார் என்பதும் உங்களுக்கு மாத்திரமே தெரியும். நான் சந்தோஷ உலகிற்காகவே உங்களுக்குக்; கற்பிக்கின்றேன். நீங்கள் மாத்திரமே 21 பிறவிகளுக்குச் சதா சந்தோஷமானவர்கள் ஆகுகின்றீர்கள். அங்கே வேறு எவராலும் செல்ல முடியாது. சந்தோஷ உலகில் நிச்சயமாக வெகுசிலரே இருப்பார்கள்.
மிகவும் நல்ல கருத்துக்கள் விளங்கப்படுத்தப்பட வேண்டும். நீங்கள் கூறுகின்றீர்கள்: பாபா, நான் உங்களுக்கு உரியவன். எவ்வாறாயினும், முற்றிலும் அவருக்குரியவர்கள் ஆகுவதற்குக் காலம் எடுக்கின்றது. சிலர் மிக விரைவில் தங்கள் கர்ம பந்தனங்களிலிருந்து விடுபட்டபொழுதிலும், ஏனையோருக்கு அதற்குக் காலம் எடுக்கின்றது. சிலர் மிகவும் பாக்கியசாலிகள், அவர்களின் கர்ம பந்தனங்கள் ஏற்கனவே துண்டிக்கப்பட்டுள்ளன, ஆனால் அவர்கள் கற்பதில் கவனம் செலுத்தாததால், அபாக்கியசாலிகள் என்றழைக்கப்படுகின்றார்கள். அவர்களின் புத்தி தங்கள் குழந்தைகள், பேரக் குழந்தைகள் போன்றோரிடம் செல்கின்றது.
இங்கே நீங்கள் ஒரேயொருவரை மட்டுமே நினைவுசெய்ய வேண்டும். நீங்கள் மிகப்பெரிய ஆஸ்தியைப் பெறவுள்ளீPர்கள். நீங்கள் அரசர்க்கெல்லாம் அரசர்கள் ஆகுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள். எவ்வாறு தூய்மையற்ற அரசர்கள் உருவாக்கப்படுகின்றார்கள், எவ்வாறு தூய்மையான, அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் உருவாக்கப்படுகின்றார்கள் என்பதைத் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். நானே வந்து, இந்த இராஜயோகத்தின் மூலம், உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகளாக, அரசர்களுக்கு அரசர்களாக ஆக்குகின்றேன்.
அந்தத் தூய்மையற்ற அரசர்கள் தானம் செய்வதன் மூலம் அவ்வாறு ஆகுகின்றார்கள்.
நான் அவர்களை உருவாக்குவதற்கு வருவதில்லை. அவர்கள் மகாதானிகள். தானம் செய்வதனால், அவர்கள் ஓர் இராஜ குடும்;பத்தில் பிறக்கின்றார்கள்.
நான் உங்களுக்கு 21 பிறவிகளுக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றேன்.
அவர்கள் ஒரு பிறவிக்கே அவ்வாறு ஆகுகின்றார்கள்,
இருந்தாலும் அவர்கள் தூய்மையற்றவர்களாகவும், சந்தோஷமற்றவர்களாகவும் இருக்கின்றார்கள். நான் வந்து, குழந்தைகளான உங்களைத் தூய்மை ஆக்குகின்றேன். கங்கையில் நீராடுவதனால், தாங்கள் தூய்மையாகி விடலாம் என மக்கள் எண்ணுகின்றார்கள்; அவர்கள் அதிகளவு தடுமாறித் திரிகின்றார்கள்! அவர்கள் கங்கையையும், யமுனையையும் அதிகளவு புகழ்கின்றார்கள்! இங்கே, எவரையும் புகழ வேண்டும் என்ற அவசியமே இல்லை. நீர் கடலிலிருந்து வருகின்றது. அத்தகைய பல ஆறுகள் உள்ளன. வெளிநாடுகளிலும், அவர்கள் குழிதோண்டிப் பல கால்வாய்களைச் செய்கின்றார்கள்.
அது பெரிய விடயமா? அவர்களுக்கு ஞானக் கடல் யார் என்பதோ அல்லது ஞான கங்கைகள் யார் என்பதோ தெரியாது. சக்திகள் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது. உண்மையில், இந்த ஜெகதாம்பாள் ஞான சரஸ்வதியான ஞான கங்கை ஆவார். மக்களுக்கு எதுவும் தெரியாது. அவர்கள் கல்வியறிவு அற்றவர்களைப் போலுள்ளார்கள்; அவர்கள் முற்றிலும் விவேகமற்ற புத்துக்கள்.
தந்தை வந்தே, விவேகமற்றவர்களை மிகவும் விவேகமானவர்கள் ஆக்குகின்றார். அவர்களை அரசர்க்கெல்லாம் அரசர்கள் ஆக்கியவர் யார் என்பதை நீங்கள் அம்மக்களிடம் கூறலாம். கீதையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது: நான் மாத்திரமே உங்களை அரசர்க்கெல்லாம் அரசர் ஆக்குகின்றேன். இதனை மக்கள் முற்றிலும் அறியவில்லை. நாங்களே இதனை அறிந்திருக்கவில்லை. அவ்வாறு ஆகியவரும், இப்பொழுது அவ்வாறு இல்லாதிருப்பவருமே அறியாதிருக்கும்பொழுது, பிறரால் எவ்வாறு அதனை அறிந்திருக்க முடியும்? சர்வவியாபி என்ற எண்ணக் கருத்தில் அர்த்தம் கிடையாது. யாருடன் நீங்கள் யோகம் செய்கின்றீர்கள்? நீங்கள் யாரைக் கூவியழைப்பீர்கள்? நீங்களே கடவுளாக இருந்தால், நீங்கள் யாரை நோக்கிப் பிரார்த்திப்பீர்கள்? இது பெரும் அற்புதம்! பெருமளவு பக்தி செய்பவர்களுக்கு மரியாதை உள்ளது; பக்தர்களின் மாலையும் உள்ளது. உருத்திர மாலையே ஞான மாலை; அது பின்னர் பக்தர்களின் மாலையும் ஆகும். அதுவே அசரீரியான மாலையாகும். ஆத்மாக்கள் அனைவரும் அங்கே வசிக்கின்றார்கள். அவர்கள் அனைவரிலும், முதல் இலக்கத்தைக் கோரப் போகின்ற ஆத்மாக்கள் யார்? சரஸ்வதியினதும், பிரம்மாவினதும் ஆத்மாக்களே முதல் இலக்கத்தைக் கோருகின்றார்கள். இவை ஆத்மாக்களைப் பற்றிய விடயங்கள். பக்தி மார்க்கத்தில், அனைத்தும் பௌதீகமானவை பற்றியதாகும்: இன்ன இன்ன பக்தர் இவ்வாறிருந்தார். அவர்கள் சரீரத்தின் பெயரைக் குறிப்பிடுவார்கள்;. நீங்கள் மனிதர்களையிட்டு இவ்வாறு கூறமாட்டீர்கள். பிரம்மாவின் ஆத்மா யாராக ஆகுகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் சரீரத்தை ஏற்று, அரசர்களுக்கெல்லாம் அரசர் ஆகுவார். ஆத்மா சரீரத்திற்குள் பிரவேசித்து, இராச்சியத்தை ஆட்சிசெய்கின்றார். அவர் இப்பொழுது ஓர் அரசர் அல்ல. ஆத்மாவே ஆட்சி செய்கின்றார்.
நான் ஓர் அரசன். நான் ஓர் ஆத்மா. நான் இச்சரீரத்தின் அதிபதி. இந்த ஆத்மாவாகிய நான் ஸ்ரீ நாராயணன் எனப் யெரிடப்பட்ட சரீரத்தை ஏற்று, பின்னர் ஆட்சிசெய்கின்றேன். ஆத்மாவே எதையாவது செவிமடுத்து, அதனைக் கிரகிக்கின்றார்.
ஆத்மாவிலேயே சம்ஸ்காரங்கள் இருக்கின்றன. நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், தந்தையிடமிருந்து எங்கள் இராச்சியத்தைப் பெறுகின்றோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா, தாதா இருவரும் சேர்ந்து கூறுகின்றார்கள்: குழந்தைகளே. இருவருக்கும்
‘குழந்தைகளே’ என்று கூறுவதற்கான உரிமை உள்ளது. ‘அசரீரியான குழந்தைகளே’ என அவர்கள் ஆத்மாக்களிடம் கூறுகின்றார்கள்.
அசரீரியான குழந்தைகளே, தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள்! ‘ஓ அசரீரியான குழந்தைகளே, ஓ ஆத்மாக்களே, தந்தையான என்னை நினைவுசெய்யுங்கள்!’ என்று வேறு எவராலும் கூற முடியாது: தந்தையே ஆத்மாக்களாகிய உங்களுடன் உரையாடுகின்றார். அவர் கூறுவதில்லை:
கடவுளே, கடவுளாகிய என்னை நினைவுசெய்யுங்கள்;. அவர் கூறுகின்றார்: ஓ ஆத்மாக்களே, உங்கள் தந்தையான என்னை நினைவுசெய்தால் இந்த யோக அக்கினியில் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். கங்கையில் நீராடுவதால்,
எந்தப் பாவாத்மாவாலும் புண்ணியாத்மாவாக முடியாது. அவர்கள் கங்கையில் நீராடி, வீட்டிற்குத் திரும்பிச் சென்ற பின்னர், பாவத்தைச் செய்கின்றார்கள். இந்த விகாரங்களினாலேயே அவர்கள் பாவாத்மாக்கள் ஆகுகின்றார்கள். எவருமே இதனைப் புரிந்துகொள்வதில்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: இப்பொழுது உங்களைக் கடுமையான இராகு சகுனங்கள் பீடித்துள்ளன. முதலில், சகுனங்களின் தாக்கம் மிகவும் இலேசாக இருக்கும். இப்பொழுது தானம் ஒன்றைச் செய்தால், சகுனங்கள் அகன்று விடும். பேறு மிகவும் மகத்தானது. எனவே, நீங்கள் அந்தளவு முயற்சியையும் செய்ய வேண்டும். தந்தை கூறுகிறார்: நான் மாத்திரமே உங்களை அரசர்க்கெல்லாம் அரசர்கள் ஆக்குகிறேன். ஆகவே, என்னையும், ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். உங்கள் 84 பிறவிகளையும் நினைவுசெய்யுங்கள். இதனாலேயே பாபா குழந்தைகளான உங்களுக்கு ‘சுயதரிசனச் சக்கரதாரிகள்’ எனும் பெயரைக் கொடுத்துள்ளார். எனவே சுய புரிந்துணர்வின் ஞானத்தையும் நீங்கள் வைத்திருக்க வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இப்பழைய உலகம் அழிக்கப்படவுள்ளது. நான் உங்களைப் புதிய உலகிற்கு அழைத்துச் செல்லவுள்ளேன். சந்நியாசிகள் தமது வீட்டையும், குடும்பத்தையும் மறக்கின்றார்கள், ஆனால் நீங்களோ முழு உலகையும் மறக்கின்றீர்கள்.
தந்தை மட்டுமே கூறுகிறார்: சரீரமற்றவர்கள் ஆகுங்கள்! நான் உங்களைப் புதிய உலகிற்கு அழைத்துச் செல்லவுள்ளேன்,
எனவே, உங்களுடைய பழைய உலகின் மீதான பற்றையும், உங்கள் பழைய சரீரங்களின் மீதான பற்றையும் துண்டித்து விடுங்கள். பின்னர் புதிய உலகிலே நீங்கள் புதிய சரீரங்களைப் பெறுவீர்கள்.
கிருஷ்ணர் சியாம்சுந்தர் என அழைக்கப்படுவதைப் பாருங்கள். அவர் சத்திய யுகத்திலே அழகாக இருந்தார், இப்பொழுது இறுதிப் பிறவியிலே அவர் அவலட்சணமானவராகி விட்டார். ஆகவே அவலட்சணமானவராகி விட்டவர் அழகானவர் ஆகுகிறார் எனவும், பின்னர் அவர் மீண்டும் அவலட்சணமானவர் ஆகுகிறார் எனவும் கூறப்படும். இதனாலேயே, அவர்கள் அவருக்கு சியாம்சுந்தர் எனும் பெயரைக் கொடுத்துள்ளார்கள். உங்களை இராவணனாகிய ஐந்து விகாரங்களே அவலட்சணமானவர்கள் ஆக்குகின்றன. பின்னர் பரமாத்மாவான பரமதந்தை, உங்களை அழகானவர்கள் ஆக்குகிறார். நான் பழைய உலகை உதைத்து, அழகானவர் ஆகுவதாகவும் படத்திலே காட்டப்பட்டுள்ளது. அழகிய ஆத்மாக்கள் உலகின் அதிபதிகள் ஆகுகிறார்கள். அவலட்சணமான ஆத்மாக்கள் நரகத்தின் அதிபதிகள் ஆகுகிறார்கள்.
ஆத்மாக்களே அவலட்சணமானவர்களாகவும், அழகானவர்களாகவும் ஆகுகிறார்கள்.
தந்தை கூறுகிறார்: இப்பொழுது நீங்கள் தூய்மையாக வேண்டும். அந்த ஹத்தயோகிகள் தூய்மையாகுவதற்குப் பெருமளவு சக்தியைப் பயன்படுத்துகிறார்கள். எவ்வாறாயினும்,
யோகமின்றி உங்களால் தூய்மையாக முடியாது. அல்லது, தண்டனையை அனுபவிக்காது உங்களால் தூய்மையாக முடியாது. எனவே, நீங்கள் ஏன் தந்தையை நினைவுசெய்யக்கூடாது? நீங்கள் ஐந்து விகாரங்களையும் வெல்ல வேண்டும். தந்தை கூறுகிறார்: அக்காம விகாரம் உங்களை ஆரம்பத்திலிருந்து, நடுப்பகுதியூடாக,
இறுதிவரை உங்களைத் துன்பத்தை அனுபவம் செய்ய வைத்தது. விகாரங்களை வெல்லாதவர்களால்,
வைகுந்தத்தின் அரசர்களாக முடியாது. இதனாலேயே தந்தை கூறுகிறார்: தந்தை, ஆசிரியர், சற்குரு வடிவத்திலே நான் மிக நல்ல செயல்களைச் செய்வதற்கு உங்களுக்குக் கற்பிப்பதைப் பாருங்கள். நான் உங்களை யோக சக்தியால் உங்கள் பாவங்களை அழிக்கத் தூண்டி, பாவச் செயல்களை வென்ற அரசர்கள் ஆக்குகிறேன். உண்மையில், சத்திய யுகத்திலிருக்கும் தேவர்களே பாவச் செயல்களை வென்ற அரசர்கள் என அழைக்கப்படுகிறார்கள். அங்கே பாவச் செயல்களே இல்லை. பாவங்களை வென்றவர்களின் யுகம், பாவங்கள் செய்பவர்களின் யுகத்திலிருந்து வேறுபட்டது. பாவச் செயல்களை வென்ற அரசர் கடந்த காலத்திலே இருந்தார், பாவச் செயல்களைச் செய்த அரசரும் இருந்து, பின்னர் சென்று விட்டார். இப்பொழுது நாம் பாவங்களை வெல்கிறோம். பின்னர் துவாபர யுகத்திலிருந்து, பாவங்கள் புதிதாக செய்யப்பட ஆரம்பிக்கின்றன. எனவே, அவர்கள் “அரசன் விக்கிரமன்” (பாவச் செயல்களைச் செய்தவர்) என்ற பெயரைக் கொடுத்துள்ளார்கள். தேவர்கள் பாவச் செயல்களை வென்றவர்கள். இப்பொழுது நாங்கள் அவ்வாறு ஆகுகிறோம், பின்னர் நாங்கள் பாவப் பாதையில் செல்லும்பொழுது, பாவக் கணக்கு ஆரம்பமாகும். இங்கே நாம் பாவக் கணக்கை முடித்து, பாவத்தை வென்றவர்கள் ஆகுகிறோம். அங்கே பாவச் செயல்கள் செய்யப்படுவதில்லை. எனவே, குழந்தைகளே, நாங்கள் இங்கே எங்கள் பாக்கியத்தை மேன்மையானதாக்குகிறோம் என்ற போதை உங்களுக்கு இருக்க வேண்டும். இதுவே அதிமேன்மையான பாக்கியத்தை உருவாக்குவதற்கான கற்குமிடமாகும். ஓர் ஆன்மீக ஒன்றுகூடலில் பாக்கியத்தை உருவாக்குவதைப் பற்றிய கேள்விக்கே இடமில்லை. ஒரு கற்குமிடத்திலேயே எப்பொழுதும் ஒரு பாக்கியம் உருவாக்கப்படுகின்றது. நாங்கள் ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாறுவோம், அதாவது, அரசர்களுக்கெல்லாம் அரசர்கள் ஆகுவோம் என்பது உங்களுக்குத் தெரியும். உண்மையில் தூய்மையற்ற அரசர்கள் தூய்மையான அரசர்களை வழிபடுகிறார்கள். நான் மட்டுமே உங்களைத் தூய்மையாக்குகிறேன். நீங்கள் தூய்மையற்ற உலகில் ஆட்சிசெய்ய மாட்டீர்கள். அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும்.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- உங்கள் புத்தியிலே சுயதரிசனச் சக்கரத்தின் ஞானத்தை வைத்திருந்தவாறு, இராகுவின் சகுனங்களிலிருந்து விடுபடுங்கள். மேன்மையான செயல்களைச் செய்வதாலும், யோக சக்தியாலும், பாவக் கணக்கைத் தீர்த்து, பாவச் செயல்களை வென்றவர் ஆகுங்கள்.
- உங்கள் பாக்கியத்தை மேன்மையாக்குவதற்கு, கற்பதில் முழுக் கவனம் செலுத்துங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் புறநோக்கின் இனிமை எனும் கவர்ச்சியான பந்தனம் எதிலிருந்தும் விடுபட்டிருந்து,
வாழ்வில் ஜீவன்முக்தி அடைந்தவர்கள் ஆகுவீர்களாக.
புறநோக்கு என்றால் ஒரு நபரின் சுபாவம், சம்ஸ்காரங்கள், அவரது எண்ணங்கள், வார்த்தைகள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளின் அதிர்வலைகள் என்பதாகும். அவை ஏதோவொரு வகையான வீணானவற்றிற்கும், ஏதோவொரு வகையான வீணான சிந்தனையில் எப்பொழுதும் மும்முரமாக இருப்பதற்கும், உள்ளார்த்தமான சந்தோஷம், அமைதி, சக்தியிலிருந்து உங்களைத் தொலைவிற்கும் இட்டுச் செல்கின்றன. இந்தப் புறநோக்கின் இந்த இனிமையானது பெருமளவு வெளிப்புறக் கவர்ச்சியைக் கொண்டுள்ளது.
ஆகவே, முதலில், இவற்றைத் துண்டித்து விடுங்கள், ஏனெனில் இந்த இனிமை ஒரு சூட்சும பந்தனமாகி, உங்கள் வெற்றி இலக்கிலிருந்து உங்களைத் தொலைவாக்குகின்றது. இந்தப் பந்தனங்களிலிருந்து விடுபடும்பொழுது,
நீங்கள் வாழ்வில் ஜீவன்முக்தி அடைந்தவர்கள் என்று கூறப்படுவீர்கள்.
சுலோகம்:
நல்ல, தீய செயல்களின் ஆதிக்கத்திலிருந்து விடுதலையடைந்தவர்களும், பற்றற்றவர்களும், கருணை மிக்கவர்களுமே உண்மையான தபஸ்விகள் ஆவர்.
---ஓம் சாந்தி---
0 Comments