Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 16.01.23

 

16-01-2023  காலைமுரளி  ஓம்சாந்தி  பாப்தாதா மதுபன்

 


Listen to the Murli audio file



சாராம்சம்:

இனிய குழந்தைகளே, நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக ஞானத்தை ஏனையோருக்குக் கூறுகின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக இந்த ஞானம் உங்கள் புத்தியில் தெளிவடையும். ஆகவே நிச்சயமாகச் சேவை செய்யுங்கள்.

கேள்வி:

தந்தையின் இரு வகையான குழந்தைகள் யாவர்? அவர்களுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

பதில்:

தந்தைக்கு மாற்றந்தாய்க் குழந்தைகளும், உண்மையான குழந்தைகளும் உள்ளனர். மாற்றந்தாய்க் குழந்தைகள் வெறுமனேபாபா, மம்மாஎனத் தங்கள் வாயினால் கூறுகின்றார்கள், ஆனால் அவர்களால் ஸ்ரீமத்தை முழுமையாகப் பின்பற்ற இயலாதுள்ளது; அவர்கள் தங்களை முழுமையாக அர்ப்பணிப்பதில்லை. உண்மையான குழந்தைகள் தங்கள் சரீரங்கள், மனங்கள், செல்வத்தினால் தங்களை முழுமையாக அர்ப்பணிக்கின்றனர், அத}வது, அவர்கள் நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் ஆகுகின்றனர், அவர்கள் தொடர்ந்தும் ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றனர். முன்னேறும் வேளையில், சேவை செய்யாததால், மாற்றாந்தாய் குழந்தைகள் வீழ்ந்து விடுகின்றனர்; அவர்கள் சந்தேகங்களை வளர்த்துக் கொள்கின்றனா.; உண்மையான குழந்தைகளின் புத்தி முழுமையான நம்பிக்கையைக் கொண்டுள்ளது.

பாடல்:  உங்கள் குழந்தைப் பருவ நாட்களை மறந்து விடாதீர்கள்.

ஓம் சாந்தி. தந்தை, குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். எந்தத் தந்தை? உண்மையில், இருவரும் தந்தையர்கள்: ஒருவர் பாபா என்று அழைக்கப்படுகின்ற, ஆன்மீகத் தந்தையும், மற்றவர் தாதா என்று அழைக்கப்படுகின்ற, லௌகீகத் தந்தையும் ஆவர். தாங்கள் பாப்தாதாவின் குழந்தைகள் என்பதை அனைத்து நிலையங்களிலும் உள்ள குழந்தைகள் அறிவார்கள். சிவன் ஆன்மீகத் தந்தையாவார். அவர் ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரதும் தந்தை ஆவார், பிரம்ம தாதாவே மனித வம்சாவழி விருட்சத்தின் தலைவர். நீங்கள் வந்து, அவரது குழந்தைகளாகி விட்டீர்கள். உங்களிற் சிலர் உண்மையான குழந்தைகள், ஆனால் ஏனையோர் இன்னமும் மாற்றாந்தாய் குழந்தைகளே. இருவரும்மம்மா, பாபாஎனக் கூறுகின்றனர், ஆனால் மாற்றந்தாய்க் குழந்தைகளால் தங்களை அர்ப்பணிக்க முடியாதுள்ளது. தங்களை அர்ப்பணிக்காதவர்களால், அந்தளவு சக்தியைப் பெற முடியாது, அதாவது, அவர்களால் தந்தையைத் தங்களது சரீரங்கள், மனங்கள், செல்வத்திற்கு நம்பிக்கை பொறுப்பாளராக்க முடியாமல் உள்ளது. மேன்மையானவர்கள் ஆகுவதற்கு, அவர்களால் அவரின் ஸ்ரீமத்தைப் பின்பற்ற இயலாதுள்ளது. உண்மையான குழந்தைகள் சூட்சுமமான உதவியைப் பெறுகின்றனர், ஆனால் அவர்களில் வெகுசிலரே உள்ளனர். உண்மையான குழந்தைகள் இருந்தபொழுதிலும், இறுதிப் பெறுபேறுகள் அறிவிக்கப்பபடாதவரை, அவர்களையும் உண்மையில் உறுதியானவர்கள் என அழைக்க முடியாது. அவர்கள் இங்கேயே வசித்து, மிகவும் நல்லவர்களாக இருந்து, சேவை செய்தபொழுதிலும், இன்னமும் வீழ்கின்றனர். இவை அனைத்தும் உங்கள் புத்தியின் யோகத்திற்கான கேள்வியாகும். நீங்கள் பாபாவை மறக்கக்கூடாது. பாபா குழந்தைகளாகிய உங்களுடைய உதவியுடனே இந்தப் பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குகின்றார். சிவசக்தி சேனை நினைவுகூரப்பட்டுள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடனேயே பேச வேண்டும்: நாங்கள் உண்மையில் சிவபாபாவின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். நாங்கள் சுவர்க்கம் எனும் எங்களின் ஆஸ்தியைத் தந்தையிடமிருந்து கோருகின்றோம். துவாபர யுகத்திலிருந்து நாங்கள் லௌகீகத் தந்தையரிடமிருந்து பெற்று வருகின்ற ஆஸ்தி நரகத்திற்கு உரியவையாக மட்டுமே இருந்தன. நாங்கள் தொடர்ந்தும் சந்தோஷமற்றவர்கள் ஆகினோம். பக்தி மார்க்கத்திலே, குருட்டு நம்பிக்கையே உள்ளது, ஆயினும், பக்தி ஆரம்பித்ததிலிருந்து பல வருடங்கள் கடந்து, நாங்கள் தொடர்ந்தும் கீழிறங்கி மட்டுமே வந்துள்ளோம். பக்தியும் ஆரம்பத்தில் கலப்படமற்று இருந்தது. அவர்கள் ஒரேயொருவரையே பூஜித்தனர். இப்பொழுது அதற்குப் பதிலாக, அவர்கள் பலரைப் பூஜிக்கின்றனர், பக்தி எப்பொழுது ஆரம்பித்தது என்று எந்த ரிஷிகளோ, முனிவர்களோ, சாதுக்களோ அல்லது புனிதர்களோ அறியார்கள். பிரம்மாவின் பகலும், இரவும் சமயநூல்களிலே குறிப்பிடப்பட்டுள்ளன. பிரம்மாவும், சரஸ்வதியும் இலக்ஷ்மியும், நாராயணனுமாக ஆகியபொழுதிலும், அவர்கள் பிரம்மாவின் பெயரையே குறிப்பிட்டுள்ளனர், பிரம்மாவுடன் பல குழந்தைகளும் உள்ளனர், இலக்ஷ்மி, நாராயணனுக்குப் பல குழந்தைகள் இருக்க மாட்டார்கள்; அவர் பிரஜாபிதா எனவும் அழைக்கப்படுவதில்லை. புதியவர்கள் இப்பொழுது படைக்கப்படுகின்றனர். பிராமணர்களே புதிய படைப்பு (மக்கள்) ஆவர். பிராமணர்கள் தங்களைக் கடவுளின் குழந்தைகளாகக் கருதுகின்றார்கள். தேவர்கள் அவ்வாறு தங்களைக் கருத மாட்டார்கள்; அவர்கள் சக்கரம் பற்றியும் அறியார்கள். நீங்கள் இப்பொழுது சிவபாபாவின் குழந்தைகள் ஆகியுள்ளீர்கள் என்பதை அறிவீர்கள். அவர் 84 பிறவிகளின் சக்கரத்தை எங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். அவரது உதவியுடன் நாங்கள் பாரதத்தை மீண்டும் ஒருமுறை தூய, தெய்வீக இராஜஸ்தான் (அரசர்களின் பூமி) ஆக்குகின்றோம். இது தெளிவாகப் புரிந்துகொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். இதை விளங்கப்படுத்துவதற்கு, ஒருவருக்குத் தைரியம் தேவை. நீங்களே சிவசக்தி பாண்டவ சேனை. நீங்கள் வழிகாட்டிகளும் ஆவீர்கள்: நீங்கள் அனைவருக்கும் பாதையைக் காட்டுகின்றீர்கள். உங்களைத் தவிர, வேறு எவராலும் ஆன்மீக, இனிய வீட்டிற்கான பாதையைக் காட்ட முடியாது. அந்த வழிகாட்டிகள் உங்களை அமர்நாத்துக்கோ அல்லது வேறு யாத்திரைத் தலங்களுக்கோ அழைத்துச் செல்வர். பிரம்மாகுமார்களும், குமாரிகளுமாகிய நீங்கள் அனைத்திற்கும் வெகு தொலைக்கு அப்பாலுள்ள பரந்தாமத்திற்கு அனைவரையும் அழைத்துச் செல்கின்றீர்கள். அவர்கள் உங்களைத் தடுமாறி அலையச் செய்கின்ற, பௌதீகமான வழிகாட்டிகள். நீங்கள் அனைவரையும் அமைதி தாமத்திலுள்ள தந்தையிடம் அழைத்துச் செல்கின்றீர்கள். ஆகவே, நீங்கள் சதா நினைவுசெய்ய வேண்டும்: நாங்கள் மீண்டும் ஒருமுறை பாரதத்தை, தெய்வீக இராஜஸ்தானாக ஆக்குகின்றோம். எவரும் இதை நம்புவார்கள். பாரத்தில் ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இருந்தது. சத்திய யுகத்தில் பாரதம் எல்லையற்ற, தூய, தெய்வீக இராஜஸ்தானாக இருந்தது. அது பின்னர் தூய, சத்திரிய இராஜஸ்தான் ஆகியது. பின்னர் மாயையின் வரவிற்குப் பின்னர், அது அசுர இராஜஸ்தான் ஆகியது. இங்கேயும் ஆரம்பத்தில் அரசர்களும், அரசிகளும் ஆட்சிசெய்தனர். ஆயினும் ஒளிக் கிரீடமற்ற இராச்சியமே தொடர்ந்தது. தேவர்களின் இராஜஸ்தானுக்குப் பின்னர் அது தூய்மையற்ற அசுர இராஜஸ்தான் ஆகியது. இப்பொழுது இது தூய்மையற்ற மக்களின் தேசமாக உள்ளது; அது மக்களாட்சி நடக்கின்ற இராஜஸ்தானாக உள்ளது. உண்மையில், அதனை இராஜஸ்தான் என அழைக்க முடியாது; அதற்கு, அவர்கள் அந்தப் பெயரை இட்டுள்ளார்கள். இப்பொழுது இராச்சியங்கள் எதுவும் இல்லை. இந்த நாடகம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இலக்ஷ்மி, நாராயணனின் இந்தப் படம் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதைப் பயன்படுத்தி நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்;: இது போன்று பாரதம் இரட்டைக் கிரீடமுள்ளதாக இருந்தது. அது இந்த இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியமாக இருந்தது. தங்களுடைய குழந்தைப் பருவத்தில் அவர்கள் இராதையும், கிருஷ்ணருமாக இருந்தார்கள். பின்னர், திரேதா யுகத்தில், அது இராமரின் இராச்சியமாகியது, பின்னர், துவாபர யுகத்தில், மாயை வந்தாள். இது மிக இலகுவானது. பாரதத்தின் வரலாறும், புவியியலும் சுருக்கமாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. துவாபர யுகத்திலேயே தூய அரசரான நாராயணனுக்கும், அரசியான இலக்ஷ்மிக்கும் ஆலயங்கள் கட்டப்பட்டன. தேவர்கள் தாங்களாகவே பாவப் பாதைக்குச் சென்றார்கள். அவர்கள் தூய்மையற்றவர்களாகத் தொடங்கினார்கள். பின்னர் அவர்கள் முன்னர் இருந்த தூய தேவர்களுக்கு ஆலயங்களைக் கட்டி, அவர்களைப் பூஐpக்கத் தொடங்கினார்கள். தூய்மையற்றவர்களே தூய்மையானவர்களுக்குத் தலை வணங்குகின்றனர். பிரித்தானிய அரசாங்கம் வரும்வரை, அரசர்களும், அரசிகளும் இருந்தார்கள். நிலச் சொந்தக்காரர்களும் அரசன், அரசி என்ற பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்கள், அதன் மூலம் அவர்கள் அரச சபையில்; மரியாதையைப் பெறுவார்கள். இப்பொழுது அரசர் என்று எவருமே இல்லை. அவர்கள் தங்களுக்குள் சண்டையிட ஆரம்பித்ததும், இஸ்லாமியர்கள் வந்தார்கள். இது இப்பொழுது மீண்டும் ஒருமுறை கலியுக முடிவு என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். விநாசம் முன்னால் உள்ளது. தந்தை மீண்டும் ஒருமுறை உங்களுக்கு இராஐயோகம் கற்பிக்கின்றார். எவ்வாறு ஸ்தாபனை இடம்பெறுகின்றது என்பதை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். பின்னர் இந்த வரலாறும், புவியியலும் மறைந்து விடும்;. பக்தி மார்க்கத்தில் மக்கள் தங்களது சொந்தக் கீதையை எழுதுகின்றனர், அதில் பெருமளவு வித்தியாசம் உள்ளது. பக்தி மார்க்கத்தில், அவர்களுக்குத் தங்களுடைய தேவர்களின் சொந்த மதத்துப் புத்தகங்கள் நிச்சயமாகத் தேவை. ஆகவே, நாடகத்துக்கேற்ப, அவர்கள் கீதையை உருவாக்கினார்கள். பக்தி மார்க்கத்தில், அவர்கள் கீதையின் மூலம் இராச்சியத்தை ஸ்தாபிப்பதோ அல்லது மனிதர்களை நாராயணனாக மாற்றுவதோ இல்லை; முற்றாகவே இல்லை! தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் மறைமுகமான சேனையினர். பாபாவும் மறைமுகமானவர். மறைமுகமான யோக சக்தியே உங்களை இராச்சியத்தைப் பெறச் செய்கின்றது. பௌதீக சக்தியின் மூலம் நீங்கள் எல்லைக்குட்பட்ட இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். யோக சக்தியினால் நீங்கள் எல்லையற்ற இராச்சியத்தைப் பெறுகின்றீர்கள். இப்பொழுது நீங்கள் பாரதத்தைத் தேவர்களின் அதே இராஐஸ்தான் ஆக்குகின்றீர்கள் என்ற நம்பிக்கை குழந்தைகளான உங்களின் இதயத்தில் உள்ளது. முயற்சி செய்பவர்களின் முயற்சிகள் மறைந்திருக்க முடியாது. விநாசம் இடம்பெற வேண்டும். இதுவும் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வினவப்பட்டுள்ளது: இந்நேரத்தின் முயற்சிகளுக்கேற்ப, எதிர்காலத்தில் நான் என்ன அந்தஸ்தைப் பெறுவேன்? இங்கேயும் ஒருவர் சரீரத்தை விட்டு நீங்குகின்றபொழுது, கேள்வி எழுகின்றது: அவர் என்ன அந்தஸ்தை அடைவார்? தனது சரீரம், மனம் செல்வத்தினால் அவர் எவ்வகையான சேவை செய்தார் என்பதைத் தந்தை மாத்திரமே அறிவார். குழந்தைகளால் இதை அறிய முடியாது. பாப்தாதா இதை அறிவார். எவ்வகையான சேவையை நீங்கள் செய்தீர்கள் என்பதையும், ஞானத்தை எடுத்தீர்களா அல்லது இல்லையா என்பதையும், நீங்கள் பெருமளவில் உதவினீர்களா என்பதையும் உங்களுக்குக் கூற முடியும். உதாரணமாக, மக்கள் நன்கொடை கொடுக்கின்றனர், ஏனெனில், இந்த ஸ்தாபனம் மிகவும் சிறந்தது எனவும், அது நல்ல பணியைச் செய்கின்றது எனவும் அவர்கள் நம்புகின்றனர். அவர்கள் கூறுகின்றனர்: தூய்மையாக இருப்பதற்கான சக்தி என்னிடம் இல்லை. நான் யஞ்;யத்துக்கு உதவுவேன். ஆகவே அவர்கள் அதன் பிரதிபலனைப் பெறுகின்றனர். மக்கள் ஒரு கல்லூரியையோ அல்லது வைத்தியசாலையையோ கட்டுகின்றபொழுது, அதை ஏனையோருக்காகவே செய்கின்றனர். தாங்கள் சுகயீனமுற்றால், தாங்கள் அங்கே செல்லலாம் என அவர்கள் செய்வதில்லை. அவர்கள் கட்டுகின்றவற்றையெல்லாம், மற்றவர்களுக்காகவே செய்கின்றனர், எனவே, அவர்கள் அதன் பலனைப் பெறுகின்றனர். அதுவே தானமளித்தல் என அழைக்கப்படுகின்றது. இங்கே என்ன நடைபெறுகின்றது? உங்களுக்கு ஆசீர்வாதங்கள் கொடுக்கப்படுகின்றன, நீங்கள் சந்தோஷமாக உள்ளீர்கள். இந்த உலகம், அப்பாலுள்ள உலகம் இரண்டிலும் நீங்கள் சந்தோஷமாக உள்ளீர்கள். நீங்கள் இந்த உலகம் பற்றியும், அப்பாலுள்ள உலகம் (பரலோகம்) பற்றியும் பேசும்பொழுது, அது சங்கம யுகத்துக்கே பொருந்துகின்றது. மரண பூமியின் இந்தப் பிறவி, அமரத்துவ பூமியிலுள்ள பிறவி இரண்டுமே தகுதியானவை என்பதே அதன் அர்த்தமாகும். உண்மையில் உங்களுடைய இந்தப் பிறவி இப்பொழுது தகுதியானதாக ஆக்கப்படுகின்றது. சிலர் தங்களது சரீரங்களாலும், சிலர் தங்களின் மனங்களாலும், ஏனையோர் தங்களது செல்வத்தாலும் சேவை செய்கின்றனர். பலரால் ஞானத்தை எடுக்க முடியாதுள்ளது. அவர்கள் கூறுகின்றனர்: பாபா எனக்குத் தைரியம் இல்லை, ஆனால் என்னால் உதவ முடியும். தந்தை அவருக்குக் கூறுகின்றார்: நீங்கள் மிகவும் செல்வந்தராகலாம். ஏதாவது இருந்தால், நீங்கள் தந்தையை வினவலாம். நீங்கள் தந்தையைப் பின்பற்ற விரும்புகின்றீர்கள், எனவே நீங்கள் அவரை வினவ வேண்டும்: பாபா, இந்தச் சூழ்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும்? உங்களுக்கு ஸ்ரீமத் கொடுக்கின்ற தந்தை இங்கே அமர்ந்திருக்கின்றார். நீங்கள் அவரை வினவ வேண்டும்; நீங்கள் அவரிடமிருந்து எதையும் மறைக்கக்கூடாது. இல்லையெனில், நோய்; அதிகரிக்கும். நீங்கள் ஒவ்வோர் அடியிலும் ஸ்ரீமத்தைப் பின்பற்றவில்லை எனில், ஏதோவொன்று பிழையாகி விடும். பாபா தொலைவில் இல்லை. நீங்கள் நேரடியாக பாபாவின் முன்னால் வந்து, அவரை வினவ வேண்டும். நீங்கள் அத்தகைய பாப்தாதாவிடம் மீண்டும் மீண்டும் வரவேண்டும். உண்மையில், நீங்கள் அதியன்பிற்கினிய தந்தையுடன் இணைந்தே இருக்க வேண்டும். நீங்கள் மணவாளனைப் பற்றிப் பிடித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் பௌதீகமானவர்கள், ஆனால் அவரோ ஆன்மீகமானவர். இங்கே அவரைப் பற்றிப் பிடிப்பது என்ற கேள்வியே இல்லை. இங்கே அனைவரும் அமர வைக்கப்பட முடியாது. இது அவ்வாறான விடயமாகும். நீங்கள் தொடர்ந்;தும் அவரைச் செவிமடுக்கும்பொழுதும், அவரது வழிகாட்டல்களைப் பின்பற்றுகின்றபொழுதும், தந்தை உங்களின் முன்னால் அமர்ந்திருப்பதை நீங்கள் விரும்புகின்றீர்கள். எவ்வாறாயினும், பாபா கூறுவார்: நீங்கள் இங்கே அமர்ந்திருக்கக்கூடாது. கங்கை ஆறுகளாகி, சென்று சேவை செய்யுங்கள்! அன்பில் போதையுற்றவர்கள் போன்று குழந்தைகளாகிய உங்களின் அன்பு இருக்க வேண்டும். எவ்வாறாயினும் நீங்கள் சேவையும் செய்ய வேண்டும். புத்தியில் நம்பிக்கையுள்ளவர்கள், முழுமையாக அவரைப் பற்றிப் பிடிக்கின்றார்கள். சில குழந்தைகள் எழுதுகின்றனர்: இன்னார், இன்னாருக்குப் புத்தியில் மிக நல்ல நம்பிக்கையுள்ளது. நான் பதிலளிப்பேன்: அவர் எததையுமே புரிந்து கொள்ளவில்லை. எங்களைச் சுவர்க்த்தின் அதிபதிகள் ஆக்குகின்ற தந்தை வந்துள்ளார் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்திருந்தால், அத்தகைய தந்தையைச் சந்திக்காமல் அவரால் ஒரு விநாடி கூட இருக்க முடியாது. பல புத்திரிகள் பரிதவிக்கின்றார்கள். அப்பொழுது வீட்டில் இருந்தவாறே அவர்கள் பிரம்மாவின் அல்லது கிருஷ்ணரின் காட்சிகளைக் காண்கின்றனர், தந்தை உங்களுக்கு இராச்சியத்தைக் கொடுப்பதற்காக, பரந்தாமத்திலிருந்து வந்திருக்கின்றார் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், நீங்கள் வந்து, பாபாவைச் சந்திப்பீர்கள். அத்தகையவர்கள் வருகின்றபொழுது, ஞான கங்கைகள் ஆகுமாறு அவர்களுக்கு பாபா கூறுகின்றார். பிரஜைகள் பலரும் தேவைப்படுகின்றனர்; ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இந்தப் படங்களுடன் விளங்கப்படுத்துவது மிகவும் சிறந்தது. விநாசமும் முன்னால் உள்ளதால், நீங்கள் மீண்டும் ஒருமுறை இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என எவருக்கும் கூற முடியும். நீங்கள் மரணிப்பதற்கு முன்னர், தந்தையிடமிருந்து உங்களின் ஆஸ்தியைக் கோருங்கள். ஒரு சர்வசக்திவானின் அரசாங்கம் இருக்க வேண்டுமென அனைவரும் விரும்புகின்றனர், ஆனால் அனைவரும் ஒன்றுசேர்ந்து, ஒன்றாக முடியாது. நிச்சயமாக நினைவுகூரப்படுகின்ற ஓர் இராச்சியம் இருந்தது. சத்திய யுகத்தின் பெயர் பெருமளவு புகழப்பட்டுள்ளது. அது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது. சிலர் இந்த விடயங்களை மிக விரைவாக நம்புவார்கள், ஆனால் ஏனையோர் நம்ப மாட்டார்கள். 5000 ஆண்டுகளுக்கு முன்னர், இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருந்தது, அது பின்னர் இந்த அரசர்களின் இராச்சியமாகியது. இப்பொழுது அரசர்கள் அனைவரும் தூய்மையற்றவர்கள் ஆகியுள்ளனர். இப்பொழுது தூய இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியம் இருக்க வேண்டும். விளங்கப்படுத்துவதற்கு இது உங்களுக்கு மிகவும் இலகுவானது. நாங்கள் தேவர்களின் இராச்சியத்தை சிவபாபாவின் ஸ்ரீமத்துடனும், அவரது உதவியுடனும் ஸ்தாபிக்கின்றோம். நாங்கள் சிவபாபாவிடமிருந்து சக்தியையும் பெறுகின்றோம். நீங்கள் இந்தப் போதையைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் சத்திரியர்கள். படைப்பவரின் மூலம் சுவர்க்கத்தின் ஸ்தாபனை நிச்சயமாக இடம்பெறும் என்று நீங்கள் ஆலயங்களுக்குச் சென்று, அவர்களுக்கு விளங்கப்படுத்தலாம். ஒரேயொருவரே எல்லையற்ற தந்தை என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் நேரடியாகவே உங்களை ஞானத்தால் அலங்கரிக்கின்றார். அவர் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். கீதையைக் கூறுபவர்களால், ஒருபொழுதும் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியாது. இதன் மூலமே குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் போதையை அனுபவம் செய்யுமாறு செய்யப்படுகிறது. பாபா சுவர்க்கத்தை ஸ்தாபிக்க வந்துள்ளார். சுவர்க்த்தில் தூய இராஜஸ்தான் இருக்கின்றது. மக்கள் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியத்தை மறந்து விட்டனர். தந்தை இப்பொழுது நேரடியாக உங்கள் முன் அமர்ந்திருந்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் செல்கின்ற கீதைப் பாடசாலைகள் போன்ற எவற்றிலும் எவராலும் முழு வரலாற்றையும், புவியியலையும் அல்லது 84 பிறவிகளின் தகவலையும் கூற முடியாது. நீங்கள் இலக்ஷ்மி, நாராயணனின் படத்துடன் இராதை, கிருஷ்ணரின் படத்தையும் வைத்திருந்தால், விளங்கப்படுத்துவதற்கு இலகுவாக இருக்கும். இதுவே மிகச்சரியான படமாகும். அது மிகவும் தெளிவாக எழுதப்பட்டும் இருக்க வேண்டும். முழுச் சக்கரமும் உங்கள் புத்தியில் உள்ளது. உங்களுக்குச் சக்கரத்தை விளங்கப்படுத்துபவரையும் நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். எவ்வாறாயினும், சதா நினைவில் இருக்கின்ற பயிற்சிக்குப் பெருமளவு முயற்சி தேவைப்படுகின்றது. நீங்கள் இறுதியில் எந்தக் குப்பைகளையும் நினைவுசெய்யாதளவிற்கு சதா அத்தகைய நினைவு இருக்கட்டும். நீங்கள் தந்தையை ஒருபொழுதும் மறக்கக்கூடாது. சிறிய குழந்தைகள் தங்களது தந்தையைப் பெருமளவில் நினைவுசெய்கின்றனர், அவர்கள் வளர்ந்த பின்னர், செல்வத்தை நினைவுசெய்கின்றனர், நீங்களும் இந்தச் செல்வத்தைப் பெறுகிறீர்கள், நீங்கள் அதனை மிக நன்றாகக் கிரகித்துப் பின்னர் ஏனையோருக்கும் தானம் செய்ய வேண்டும். முழுமையான கொடையாளிகள் ஆகுங்கள். நான் நேரடியாகவே உங்கள் முன்னால் வந்து, உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன். நீங்கள் அந்தக் கீதையைப் பிறவிபிறவியாகக் கற்றீர்கள், ஆனால் எந்த விதமான பேறுகளும் இருக்கவில்லை. இங்கே, உங்களைச் சாதாரண மனிதரிலிருந்து நாராயணனாக மாற்றுவதற்காக, இந்தக் கற்பித்தல்களை நான் உங்களுக்குக் கொடுக்கின்றேன். அது பக்தி மார்க்கமாகும். இங்கே பல மில்லியன் எண்ணிக்கையினரில் ஒரு கைப்பிடியளவினரே உங்கள் தேவ குலத்தில் ஒருவராக வெளிப்படுவார்கள். அவர்கள் பிராமணர்கள் ஆகுவதற்கு, நிச்சயமாக இங்கே வருவார்கள். சிலர் அரசர்களாகவும், ஏனையோர் பிரஜைகளாகவும் ஆகுவார்கள். அவர்களுக்கிடையேயும் சிலர் ஞானத்தை செவிமடுப்பதில் வியப்படைந்து, பின்னர் ஏனையோருக்கு ஞானத்தைக் கூறிய பின்னர் ஓடி விடுகின்றனர். குழந்தைகளாகிய பின்னர், தந்தையை விட்டு விலகிச் செலபவர்களுக்கு மிகவும் கடுமையான தண்டனை இருக்கும். தண்டனை கடுமையானது. இந்நேரத்தில் நீங்கள் சதா நினைவில் இருப்பதாக உங்களில் எவருமே கூறமுடியாது. நீங்கள் அவ்வாறு கூறுவதாயின், நீங்கள் எழுதிய அட்டவணையை பாபாவுக்கு அனுப்ப வேண்டும். அப்பொழுது பாபா உங்கள் சரீரம், மனம், செல்வத்தைப் பாரதத்திற்குச் சேவை செய்வதற்காக நீங்கள் பயன்படுத்துகின்றீர்கள் எனப் புரிந்துகொள்வார். இலக்ஷ்மி, நாராயணனின் படம் எப்பொழுதும் உங்கள் சட்டைப் பையில் இருக்கட்டும். குழந்தைகளாகிய நீங்கள் பெருமளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் எவ்வாறு பாரதத்திற்குச் சேவை செய்கின்றீர்கள் என்று சமூக சேவையாளர்கள் உங்களைக் கேட்கின்றனர். அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் எங்களின் சரீரங்கள், மனங்கள், செல்வத்தினால் பாரதத்தைத் தேவர்களின் இராஜஸ்தான் ஆக்குகின்றோம். வேறு எவராலுமே இவ்வாறான சேவையைச் செய்ய முடியாது. நீங்கள் அதிகளவு சேவை செய்கின்றபொழுது, உங்கள் புத்தியும் அதிகளவு தெளிவடைகிறது. பல குழந்தைகளால் மிக நன்றாக விளங்கப்படுத்த முடியாமல் உள்ளது, எனவே அவர்கள் பெயரை அவதூறு செய்கின்றார்கள். சிலருக்கு இன்னமும் கோபம் எனும் தீய ஆவி உள்ளதால், அதுவும் கூட அழிவை ஏற்படுத்துகின்ற ஒன்றாகும். அவர்களுடைய முகங்களைப் பார்க்குமாறு அவர்களுக்குக் கூறப்படும். நீங்கள் இலக்ஷ்மியை அல்லது நாராயணனைத் திருமணம் செய்வதற்குத் தகுதியுடையவர்களாகி விட்டீர்களா? கௌரவத்தை இழந்த அத்தகைய குழந்தைகள் என்ன அந்தஸ்தைக் கோருவார்கள்? அவர்கள் காலாட் படையினரின் வரிசையில் வருகின்றனர். நீங்களும் ஒரு சேனை ஆவீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. அழியாத ஞான இரத்தினங்களை தானம் செய்யும் மகாதானி ஆகுங்கள். உங்கள் சரீரம், மனம், செல்வத்தின் மூலம் பாரதத்தைச் சுவர்க்கம் ஆக்குவதற்குச் சேவை செய்யுங்கள்;.
  2. அழிவை ஏற்படுத்தக்கூடிய எச்செயலையும்; செய்யாதீர்கள். சதா நினைவைக் கொண்டிருப்பதற்கான பயிற்சியைச் செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:

நீங்கள் ஸ்திரமான, நிலையான சந்தோஷத்தை அனுபவம் செய்து, முடிவற்ற பொக்கிஷங்களால் நிறைந்தவர்களாகுவதால், முதல் இலக்கத்தைக் கோருவீர்களாக.


முதல் இலக்கத்தைக் கோருவதற்கு, தொடர்ந்தும் ஸ்திரமான, நிலையான சந்தோஷத்தை அனுபவம் செய்யுங்கள். எந்தக் குழப்பங்களிலும் (ஜமேலா) சிக்கிக் கொள்ளாதீர்கள். நீங்கள் ஜமேலாக்களுக்குள் செல்லும்பொழுது, சந்தோஷம் எனும் ஊஞ்சல் தளர்வடைகின்றது, அப்பொழுது உங்களால் உயரே ஊஞ்சலாட முடியாது. ஆகவே, சதா தொடர்ந்தும் சந்தோஷம் எனும் ஸ்திரமான ஊஞ்சலில் ஊஞ்சலாடுங்கள். குழந்தைகளாகிய நீங்கள் அனைவரும் பாப்தாதாவிடமிருந்து அழிவற்ற, முடிவற்ற, எல்லையற்ற பொக்கிஷங்களைப் பெறுகின்றீர்கள். ஆகவே, சதா ஸ்திரமாக இருந்து, அந்தப் பொக்கிஷங்களின் பேறுகளினால் நிறைந்திருங்கள். அனுபவமே சங்கம யுகத்தின் சிறப்பியல்பாகும். ஆகவே, இந்த யுகத்தின் சிறப்பியல்பின் நன்மையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

சுலோகம்:

உங்கள் மனத்தின் மூலம் மகாதானியாகுவதற்கு, ஓர் ஆன்மீக ஸ்திதியில் சதா ஸ்திரமாக இருங்கள்.

 

---ஓம் சாந்தி---

Download PDF

Post a Comment

0 Comments