Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 15.01.23

 

15-01-2023  ஓம் சாந்தி  அவ்யக்த பாப்தாதா  மதுவனம்  18/11/1993


Listen to the Murli audio file



சங்கமயுகத்தின் அன்பிற்கினிய இராஜரீக குழந்தைகளே, எதிர்கால இராச்சியத்தின் ஆட்சியாளர்கள்.

இன்று, குழந்தைகள் அனைவரதும் இதயத்திற்கு சுகமளிப்பவரான தந்தை எங்குமுள்ள தனது அன்பிற்கினிய இராஜரீக குழந்தைகளை பார்க்கின்றார். ஒவ்வொரு குழந்தையும் இதயத்திற்கு சுகமளிப்பவரின் பரிவிற்குத் தகுதியானவர்கள் ஆவார்கள். இந்தத் தெய்வீகமான பரிவை, இந்த உயர்வான பரிவை, பலமில்லியன் எண்ணிக்கையானோரில், வெகுசிலரான, ஒரு கைப்பிடி அளவான ஆத்மாக்களால் மாத்திரமே அடைய முடியும். நீங்கள் பல பிறவிகளாக, ஆத்மாக்களின் பரிவையும் மகாத்மாக்களின் பரிவையுமே அனுபவம் செய்திருக்கிறீர்கள். இப்பொழுது, இந்த ஓர் அலௌகீக பிறவியில், நீங்கள் உயர்வான அன்பையும் பரிவையும் அனுபவம் செய்கிறீர்கள். இந்த தெய்வீகப் பரிவினூடாக நீங்கள் அன்பிற்கினிய, இராஜரீக குழந்தைகள் ஆகியுள்ளீர்கள். இதனாலேயே, இதயத்திற்கு சுகமளிப்பவர், தனது ஒவ்வொரு குழந்தையும் ஓர் அரசர் ஆகப் போகிறவர்கள் என்ற ஆன்மிக போதையை கொண்டிருக்கிறார். நீங்கள் அரசர்கள், அப்படித்தானே? நீங்கள் பிரஜைகள் அல்ல, அப்படித்தானே? இப்பொழுது நீங்கள் அனைவரும் உங்களுக்கான தலைப்பு என்னவென கூறுகிறீர்கள்? இராஜயோகிகள். நீங்கள் அனைவரும் இராஜயோகிகளா அல்லது சிலர் பிரஜாயோகிகளா (பிரஜைகளின் யோகிகளா)? நீங்கள் அனைவரும் இராஜயோகிகளாயின், எங்கிருந்து பிரஜைகள் வருவார்கள்? யாரை நீங்கள் ஆள்வீர்கள்? பிரஜைகள் இருக்க வேண்டும். பிரஜாயோகிகள் எப்பொழுது வருவார்கள்? அன்பிற்கினிய இராஜ (ராஜ் டுலாரா) குழந்தைகள் என்றால், இந்நேரத்தினதும் எதிர்காலத்தினதும் இராஜாக்கள் ஆவார்கள். எதிர்கால அரசர்கள் ஆகுவதற்கு முன்னர், நீங்கள் இந்நேரத்தின் சுயராச்சிய உரிமையை கோரிக் கொள்ள வேண்டும். எனவே, உங்களுடைய சுயராச்சிய செயற்பாடுகளை நீங்கள் சோதனை செய்கிறீர்களா? எதிர்கால இராச்சியத்தின் புகழை, அதாவது அது ஒரே இராச்சியம், ஒரேதர்மம், முற்றிலும் அமைதியும், சந்தோஷமும், செல்வமும் நிறைந்தது என நீங்கள் பாடுவதைப் போன்றே, சுயராச்சிய அரசர்களே, உங்கள் சுயராச்சிய செயற்பாட்டில் இவை சதா நிலவுகின்றனவா?

ஒரே இராச்சியம் என்றால், ஆத்மாவாகிய நான், இராச்சியத்தை இயங்கச் செய்கின்ற பௌதீக புலன்களின் இராச்சியத்தை சதா எனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகும். அல்லது இடையிடையே, சுயராச்சியமுடையவராக இருப்பதற்குப் பதிலாக, வேறொரு நபர் சிலவேளைகளில் உரிமை கோருகிறாரா, அப்படியா? வேறொரு நபருக்கு உரிய இராச்சியமாயின் அது மாயையின் இராச்சியமாகும். இன்னொரு நபருக்கு உரிய இராச்சியத்தின் அடையாளம், அந்த நபரில் தங்கியிருப்பதாகும். சுயராச்சியமுடையவரின் அடையாளம், நீங்கள் சதா அனைத்து உரிமைகளும் உடைய ஒரு மேன்மையானவர் என உங்களை நீங்கள் அனுபவம் செய்வதாகும். வேறொருவருக்கு உரிய இராச்சியம், உங்களை தங்கியிருப்பவராக்கி, பிறரின் ஆதிக்கத்தின் கீழ் உங்களை கொண்டு வரச் செய்கின்றது. ஓர் அரசர் இன்னொரு அரசரின் இராச்சிய உரிமையை கோரிக் கொள்ளும் போது, அவர் அந்த அரசரை முதலில் சிறைவாசம் செய்யச் செய்வார். அதாவது அதன் பின்னர் அந்த அரசர் இன்னொருவரில் தங்கியிருப்பவர் ஆகுகிறார். எனவே நீங்கள் ஒரே இராச்சியத்தைக் கொண்டிருக்கிறீர்களா என சோதித்துப் பாருங்கள். அல்லது மாயையின் இராச்சியத்திற்கு உரிமையுடையவர்கள், அல்லது இராச்சியத்தை இயக்கிக் கொண்டிருக்கும் பௌதீக புலன்கள் அவ்வப்பொழுது அரசர்களாகிய, சுயாட்;சியாளர்களாகிய உங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனவா? எனவே உங்களிடம் ஒரு இராச்சியம் உள்ளதா அல்லது இரு இராச்சியங்கள் உள்ளனவா? சுயாட்சியாளர்களாகிய உங்களது சட்டமும் கட்டளைகளும் ஆட்சி செய்கின்றனவா, அல்லது மாயையின் கட்டளைகளும் அவ்வப்பொழுது ஆட்சி செய்கின்றனவா?

இத்துடன், ஒரே தர்மமும் உள்ளது. தர்மம் என்றால் தர்மம் ஆகும். எனவே, ஒரே தர்மம் அல்லது சுயராச்சியத்தின் ஒரே தாரணை எது? தூய்மையாகும். ‘உங்கள் எண்ணங்களில், வார்த்தைகளில், செயல்களில், உறவுமுறை தொடர்புகள் அனைத்திலும் தூய்மை இருப்பதாகும், இதுவே ஒரே தர்மம் எனப்படுகின்றது, அதாவது ஒரே தாரணையாகும். எந்தத் தூய்மையின்மையும் இல்லாதிருக்கட்டும், அதாவது, உங்கள் கனவுகளிலோ அல்லது உங்கள் எண்ணங்களிலோ வேறெந்த தர்மமும் இல்லாதிருப்பதாகும். ஏனெனில் தூய்மை இருக்கும் இடத்தில் தூய்மையின்மையின் பெயரோ சுவடோ, அதாவது வீணான அல்லது விகாரமான எதுவுமே இருக்க முடியாது. அந்தளவிற்கு நீங்கள் சக்திமிக்கவர்கள் ஆகியுள்ளீர்களா? அல்லது நீங்கள் பலவீனமான அரசர்களா? அல்லது, சிலவேளைகளில் நீங்கள் பலவீனமாகவும், சிலவேளைகளில் சக்திமிக்கவர்களாகவும் இருக்கிறீர்களா? இந்த ஒரு குறுகிய பிறவியில் உங்களால் உங்கள் இராச்சியத்;தை ஆட்சி செய்ய முடியாதிருந்தால், 21 பிறவிகளுக்கான இராச்சியத்தின் உரிமையை நீங்கள் எவ்வாறு கோரப் போகிறீர்கள்? நீங்கள் அந்த சம்ஸ்காரங்களை இப்பொழுதே விருத்தி செய்கிறீர்கள். இந்த நேரத்தின் உங்களுடைய மேன்மையான சம்ஸ்காரங்களைக் கொண்டே, எதிர்கால உலகம் உருவாக்கப்படுகின்றது. எனவே, இந்த நேரத்தின் ஒரே இராச்சியத்தின், ஒரே தர்மத்தின் உங்களுடைய சம்ஸ்காரங்களே எதிர்கால உலகின் அத்திவாரமாகும்.

எனவே, சோதியுங்கள்: உங்களுடைய சந்தோஷம், அமைதி, செல்வம் ஆகியன எல்லைக்குட்பட்ட பேறுகளின் அடிப்படையில் உள்ளதா அல்லது அதியுயர்ந்த இறை இராச்சியத்தின் ஆன்மிக அதீந்திரியசுகத்தை நீங்கள் கொண்டிருக்கிறீர்களா? உங்களுடைய சந்தோஷத்தின் அனுபவம் வசதிகளினதும் புகழ்ச்சியினதும் அடிப்படையில் உள்ளதா அல்லது உங்களுடைய அதீந்திரியசுகத்தின் சந்தோஷம் பரமனை அடிப்படையாகக் கொண்டுள்ளதா? துண்டிக்க முடியாத அமைதியும் அவ்வாறாகவே உள்ளது: அமைதியின்மையின் எந்தச் சூழ்நிலையும் உங்களுடைய துண்டிக்கப்பட முடியாத அமைதியை அழித்துவிடுகின்றதா? சுயராச்சியமுடையவர்களுக்கு, எந்த அமைதியின்மையின் புயலும், சிறிதாயினும் பெரிதாயினும் அவர்களை அனுபவசாலிகளாக ஆக்கவே வந்துள்ளது, எனவே அவை பறக்கின்ற ஸ்திதிக்கான பரிசாகின்றன. அவை உயர்த்திக்கான ஒரு பரிசாகும். இதுவே நிலையான அமைதி எனப்படுகின்றது. எனவே சோதியுங்கள்: உங்கள் இராச்சியம் துண்டிக்கப்பட முடியாத அமைதியும் சுயராச்சியமும் உடையதா?

செல்வத்திற்கும் அதுவேயாகும்: சுயராச்சியத்தின் செல்வம் ஞானம், தெய்வீகக் குணங்கள், சக்திகளும் ஆகும். நீங்கள் இந்த அனைத்து வகையான செல்வமும் நிறைந்த சுயராச்சியமுடையவரா? நிறைந்திருப்பதன் அடையாளம், எங்கு நிறைந்திருக்கின்றதோ, அங்கே சதா திருப்தி இருக்கும், அத்துடன் எந்த பேறுகளினதும் குறைபாட்டின் பெயரோ சுவடோ இருக்க மாட்டாது. எல்லைக்குட்பட்ட ஆசைகள் என்றால் என்னவென்றே அறியாதிருப்பதே செல்வந்தராக இருப்பது எனப்படுகின்றது. ஓர் அரசர் என்றால் அருள்பவர் என்று அர்த்தமாகும். ஒருவருக்கு எல்லைக்குட்பட்ட ஆசைகள் அல்லது பேறுகளின் ஆசைகள் எதுவும் இருக்குமாயின் அத்தகைய ஓர் ஆத்மா ஓர் அரசராக இருப்பதற்குப் பதிலாக அவர் ஒரு யாசகர் ஆகுகிறார். ஆகையால், உங்கள் சுயராச்சியத்தை மிக நன்றாக சோதியுங்கள். சோதியுங்கள்: எனது சுயராச்சியம் ஒரே இராச்சியமும், ஒரே தர்மமுடைய முழு அமைதியும் சந்தோஷமும் நிறைந்ததா? அல்லது, அது இனிமேலா அவ்வாறு ஆகப் போகின்றது? இனிமேல்தான் நீங்கள் அரசர் ஆகவேண்டும், சுயராச்சிய ஸ்திதியை இன்னமும் அடையவில்லை என்றால் அவ்வாறாயின் அந்த நேரத்தில் நீங்கள் யாராக இருப்பீர்கள்? நீங்கள் பிரஜைகள் ஆகப் போகிறீர்களா? அல்லது நீங்கள் பிரஜைகளோ அரசர்களோ அல்ல இடையில் ஒன்றாக உள்ளீர்களா? இப்பொழுது, இடையில் ஒன்றாக இருக்காதீர்கள். இறுதியில் அவ்வாறு ஆகி விடலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் நீண்ட காலத்திற்கு இராச்சிய பாக்கியத்தை கட்டாயமாக அடைய வேண்டுமென விரும்பினால், இராச்சியத்தை நீண்டகாலத்திற்கு பெறுவதற்கான பலன், நிச்சயமாக நீண்டகாலத்திற்கு, சுயராச்சியத்தைக் கொண்டிருப்பதாகும். முழு ஆயுட் காலத்திற்கும் ஓர் இராச்சியத்திற்கான உரிமையை கோருவதற்கு அடிப்படை இந்த நேரத்தில் சதா சுயராச்சியமுடையவராக இருப்பதாகும். உங்களுக்குப் புரிகிறதா? ‘அது நடக்கும், அது நடக்கும்என என நினைத்து கவனயீனமாக இருக்காதீர்கள். குழந்தைகள் பல இனிமையான விடயங்களினால் பாப்தாதாவை களிப்படையச் செய்கின்றார்கள். அரசர்களாக இருப்பதற்குப் பதிலாக, அவர்கள் மிக நல்ல வழக்கறிஞர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தந்தை சதா புன்னகைக்கும் அளவிற்கு பல சட்டக் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். ஓர் அரசரை விட வழக்கறிஞர் சிறந்தவரா? நீங்கள் சட்டக்கருத்துக்களுடன் மிகத் திறமையாக விவாதிக்கிறீர்கள். எனவே, இப்பொழுது, சட்டக் கருத்துக்களுடன் விவாதிப்பதை நிறுத்துங்கள். அன்பிற்கினிய, இராஜரீக குழந்தைகள் ஆகுங்கள். தந்தை குழந்தைகளின் மீது அன்பு கொண்டிருக்கின்றார். ஆகையாலேயே அவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டிருக்கும் போதும் அவர் தொடர்ந்தும் புன்னகைக்கின்றார். அக் கணத்தில் அவர் தர்மராஜை பயன்படுத்துவதில்லை.

அன்பு அனைவரையும் முன்னேறச் செய்கின்றது. நீங்கள் அன்பினாலேயே இங்கே வந்திருக்கிறீர்கள். அப்படித்தானே? எனவே, உங்கள் அன்பிற்கு பிரதிபலனாக, பாப்தாதாவும் அதற்கு பிரதியுபகாரமாக அன்பை கொடுக்கின்றார். உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள குழந்தைகள் மதுவனத்திற்கு அன்பு என்ற வாகனத்தில் பறந்து வந்திருக்கின்றார்கள். பாப்தாதா உங்கள் அனைவரையும் (இங்கே வந்திருப்பதை) சக்கார் வடிவத்தில் பார்க்கின்றார். குழந்தைகள் அனைவரையும் அவர்களுடைய அன்பான வடிவத்தில் பார்க்கின்றார் (எங்கும்) அச்சா.

அன்பில் மூழ்கியிருக்கும் நெருக்கமான குழந்தைகள் அனைவருக்கும், சுய-ராச்சியமுடையவர்கள் என்பதால் உலக இராச்சியத்திற்கு உரிமையுடைய மேன்மையான ஆத்மாக்களுக்கும், விசேடமான, மேன்மையான, அனைத்து வகையான முழு பேறுகளையும் பெற்ற செல்வந்த ஆத்மாக்களுக்கும், ஒரே இராச்சியம், ஒரே தர்மம், முழுமையான இராச்சியத்தின் உரிமையை கோரியுள்ள குழந்தைகளுக்கும், தந்தையை போன்றவர்களுக்கும், பாக்கியசாலி ஆத்மாக்களுக்கும், பாக்கியத்தை அருள்பவரான பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.

பாப்தாதா தாதிகளை சந்தித்தல்:

அனைத்து பணிகளும் சிறப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன, அப்படித்தானே? பணிகள் நல்ல ஆர்வத்துடனும் உற்சாகத்துடன் மேற்கொள்ளப்படுகின்றன. கரவன்ஹார் இடம்பெறச் செய்கின்றார், கருவிகள் அதனை மேற்கொள்கின்றார்கள். இதனை நீங்கள் அனுபவம் செய்கிறீர்களா? ஒவ்வொரு பணியும் அனைவரதும் ஒரு விரல் ஒத்ழைப்புடன் இலகுவாகவும் வெற்றிகரமாகவும் இடம்பெறுகின்றது. இவை அனைத்தும் எவ்வாறு இடம்பெறுகின்றது? இது ஒரு வித்தை போல் உள்ளது, இல்லையா? உலக மக்கள் இதனை பார்த்து வியப்படைகின்றார்கள், ஆனால் கருவி ஆத்மாக்களாகிய நீங்கள், சதா தொடர்ந்தும் முன்னேறிக் கொண்டிருக்கிறீர்கள், ஏனெனில் நீங்கள் அனைவரும் கவலையற்ற அரசர்கள். உலக மக்கள் ஒவ்வொரு அடியிலும் கவலையடையும் போது, நீங்களோ கவலையற்றவராக இருக்கிறீர்கள், ஏனெனில், உங்கள் ஒவ்வொரு எண்ணத்திலும் கடவுளின் நினைவைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் கவலையற்றவர்கள், அப்படித்தானே? நல்லது. நீங்கள் அநாதியான உறவுமுறையை கொண்டிருக்கின்றீர்கள். அச்சா. அனைத்தும் நன்றாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இனியும் நன்றாகவே இடம்பெறும். உங்களுக்கு நம்பிக்கை உள்ளது, நீங்கள் கவலையற்றவர்கள். என்ன நடக்கும் என்றோ எப்படி நடக்கும் என்றோ நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை.

ஆசிரியர்களுக்கு ஏதேனும் கவலை உள்ளதா? நிலையங்கள் எவ்வாறு விரிவடையும் என கவலைப்படுகிறீர்களா? சேவை எவ்வாறு வளர்ச்சியடையும் என கவலைப்படுகிறீர்களா? இதனைப் பற்றி நீங்கள் கவலைப்படுவதில்லையா? நீங்கள் கவலையற்றவர்களாக இருக்கிறீர்களா? ஒன்றைப் பற்றி சிந்திப்பது, அதைப் பற்றி கவலைப்படுவதில் இருந்து வேறுபட்டது. நீங்கள் சேவையின் வளர்ச்சியை பற்றி சிந்திக்கலாம் அதாவது சேவைக்கான திட்டங்களை வகுக்கலாம். எவ்வாறாயினும் கவலைப்படுவதனால் என்றுமே வெற்றி கிட்டாது. உங்களை இயக்குபவர், உங்களுடாக அனைத்தையும் இயங்கச் செய்கின்றார், அனைத்தையும் இடம்பெறச் செய்பவர் அவற்றை இடம்பெறச் செய்கின்றார். ஆகையால், அனைத்தும் இலகுவாக இடம்பெறும். நீங்கள் ஒரு கருவியாகவிருந்து, உங்கள் எண்ணங்கள், சரீரங்கள், மனங்கள், செல்வத்தையும் தகுதியான முறையில் பயன்படுத்துங்கள். எந்த நேரத்தில் என்ன பணி இடம்பெற்றாலும் - அது எங்களுடைய பணியாகும். ஒரு பணி எங்களுடையதாயின், அது உங்களுடைய சொந்த பணியாக கருதப்படும் போது, ‘என்னுடையதுஎன்ற உணர்வுடன் அனைத்தையும் அதற்காக பயன்படுத்துவீர்கள். எனவே பிராமண குடும்பத்தின் விசேட பணி என்ன? ஆசிரியர்களாகிய நீங்கள் பதிலளிக்க வேண்டும். ஆசிரியர்களே, இந்த நேரத்தில், பிராமண குடும்பத்தின் விசேட பணி என்ன? எதற்காக நீங்கள் அனைத்தையும் தகுதியான முறையில் பயன்படுத்துவீர்கள்? (கியான் சரோவருக்காக) நீங்கள் அனைத்தையும் சரோவரில் (ஏரி) அர்ப்பணிப்பீர்களா? ஒரு குடும்பத்தில் ஏதோ ஒரு விசேட பணி இடம்பெறும் போது, அனைவரது கவனமும் எங்கே செல்லும்? அவர்களின் கவனம் அந்தப் பணியை நோக்கியே இருக்கும். இந்த நேரத்தில், பிராமண குடும்பத்தின் பெரும் பணி இதுவே ஆகும், அப்படித்தானே? ஒவ்வொரு கணமும் அதற்குரிய முக்கியத்துவத்தைக் கொண்டது. பிராமண குடும்பத்தில், உள்நாட்டவர், வெளிநாட்டவர் அனைவரதும் ஒத்துழைப்பு இவ் விசேட பணிக்கானதாகவே உள்ளது, அப்படித்தானே? அல்லது உங்கள் சொந்த நிலையத்திற்காக உள்ளதா? ஒரு பணி எவ்வளவு பெரிதாக உள்ளதோ, அந்தளவிற்கு உங்கள் இதயமும்; பெரிதாக உள்ளது. உங்கள் இதயம் எவ்வளவு பெரிதாக உள்ளதோ, அந்தளவிற்கு இயல்பாக பணி நிறைவேறும். நீங்கள் சிறிய இதயத்தைக் கொண்டிருந்தால், எது வரவுள்ளதோ அது நிறுத்தப்படும். என்ன இடம்பெற இருந்ததோ அது நிறுத்தப்படும். ஆனால் பெரிய இதயத்தினால், அசாத்தியமானதும் சாத்தியமாகும். இது மதுவனத்தின் கியான்சரோவரா அல்லது உங்களுடையதா? அது யாருடையது? அது மதுவனத்தினது ஆகும், அப்படித்தானே? அது குஜராத்துடையது அல்ல, அது மதுவனத்தினதா? அது மகாராஷ்ராவுடையதா? அது வெளிநாட்டிற்கு உரியதா? அது அனைவருடையதும் ஆகும். எல்லையற்ற சேவையின் எல்லையற்ற இடமானது, அனைவருடைய எல்லையற்ற ஆஸ்தியை அவர்களை அடையச் செய்கின்றது. இது சரியா? அச்சா.

அவ்யக்த பாப்தாதாவுடன் தனிப்பட்ட சந்திப்பு:

சுயமாற்றத்தின் அதிர்வலைகள் உலக மாற்றத்தை ஏற்படுத்தும்.

நீங்கள் அனைவரும் சந்தோஷ பாக்கியத்தையுடைய ஆத்மாக்கள் என உங்களை அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் கனவிலும் கூட காணாத சந்தோஷ பாக்கியத்தை நீங்கள் அடைந்திருக்கிறீர்கள். எனவே, அனைவரது இதயமும் பாடும் பாடல்: எவரேனும் மகாபாக்கியசாலி ஆயின், அது நானே. இதுவே உங்கள் மனதில் உள்ள பாடலாகும். உங்கள் வாயில் நீங்கள் ஒரு பாடல் பாடுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். ஆனால், உங்கள் மனதினால் பாடலைப் பாடலாம். அனைத்திலும் மிகப் பெரிய பொக்கிஷம் சந்தோஷமாகும். ஏனெனில், பேறுகள் இருந்தாலே சந்தோஷம் இருக்க முடியும். பேறுகளின் குறைபாடு இருக்குமாயின், ஒருவர் எவ்வாறு அவரிடம் சந்தோஷமாக இருக்குமாறு கூறினாலும் அல்லது அவர் போலியாக எவ்வளவு சந்தோஷமாக இருக்க முயற்சித்தாலும், அவர்களால் சந்தோஷமாக இருக்க முடியாது. எனவே, நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கிறீர்களா அல்லது சிலவேளைகளில் மாத்திரமா? நீங்கள் கடவுளின் குழந்தைகள் என்ற சவாலை விடுவதால், கடவுள் இருக்கமிடத்தில் பேறுகளின் குறைபாடு ஏதேனும் இருக்க முடியுமா? நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கிறீர்கள், ஏனெனில், நீங்கள் சதா சகல பேறுகளின் சொரூபமாக இருக்கிறீர்கள். தந்தை பிரம்மாவின் பாடல் என்ன? ‘நான் விரும்பியதை நான் அடைந்து விட்டேன்’. எனவே, இது தந்தை பிரம்மாவின் பாடல் மட்டுமா அல்லது இது உங்கள் அனைவரதும் பாடலா? சிலவேளைகளில் துன்ப அலை வருகின்றதா? எப்பொழுது வரை அது தொடர்ந்தும் வரும்? இப்பொழுது, சிறிதளவு நேரம் கூட துன்ப அலை வராதிருக்கட்டும். நீங்கள் மாற்றத்திற்கு கருவிகள் ஆகியுள்ளதால், உங்களுக்குள் இந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியாதா? இப்பொழுதும் உங்களுக்கு நேர அவகாசம் தேவையா? ஒரு முற்றுப் புள்ளி இடுங்கள். நீங்கள் அத்தகைய மேன்மையான நேரத்தையோ, மேன்மையான பேறுகளையோ அல்லது மேன்மையான உறவுமுறையையோ முழு கல்பத்திலும் பெற மாட்டீர்கள். எனவே, அனைத்திற்கும் முதலில், சுய மாற்றம் இருக்கட்டும். சுயமாற்றத்தின் இந்த அதிர்வலைகள் உலக மாற்றத்தை ஏற்படுத்தும்.

இரட்டை வெளிநாட்டு ஆத்மாக்களின் சிறப்பு, விரைவான வாழ்க்கையாகும். எனவே, உங்கள் மாற்றத்திலும் நீங்கள் விரைவாக இருக்கிறீர்களா? வெளிநாட்டைச் சேர்ந்த எவரேனும் மிக மெதுவாக நடந்தால் அவர்களுக்கு அது பிடிக்காது. எனவே மாற்றத்திற்கு இந்தச் சிறப்பியல்பை பயன்படுத்துங்கள். அது நல்லது. நீங்கள் முன்னேறிச் செல்கிறீர்கள், தொடர்ந்தும் முன்னேறிச் செல்வீர்கள். உங்களுடைய இனங்காணும் பார்வை மிகவும் கூர்மையானது, அதனால் நீங்கள் தந்தையை இனங்கண்டிருக்கிறீர்கள். இப்பொழுது, உங்கள் முயற்சியில் தீவிரமாக இருங்கள். சேவையில் தீவிரமாக இருங்கள், முழுமையடைவதற்காக நீங்கள் விரைந்;தோடி இலக்கை அடைவதில் தீவிரமாக இருங்கள். நீங்கள் முதல் இலக்கத்தை அடைய விரும்புகிறீர்கள், அப்படித்தானே? தந்தை பிரம்மா முதலாவதாக இருந்ததைப் போன்று, தந்தை பிரம்மாவின் சகவாசி ஆகுங்கள். அப்போது நீங்கள் முதலாவதாகவும் முதலாமவருடனும் வருவீர்கள். நீங்கள் தந்தை பிரம்மாவின் மீது அன்பு வைத்திருக்கிறீர்கள். அப்படித்தானே? அச்சா. தாய்மார்களே நீங்கள் அற்புதம் புரிவீர்கள், அப்படித்தானே? உலகம் அசாத்தியம் எனக் கருதியதை, நீங்கள் இலகுவானதென செய்து காட்டியிருக்கிறீர்கள். நீங்கள் அத்தகைய அற்புதத்தை செய்கிறீர்கள். அப்படித்தானே? தாய்மார்கள் பலவீனமானவர்கள், அவர்களால் எதனையும் செய்ய முடியாது என உலக மக்கள் நினைக்கிறார்கள், ஆனால் நீங்களோ அசாத்தியமானதையும் சாத்தியமாக்கி, உலக மாற்றத்தில் நீங்கள் அனைவரையும் முந்திச் செல்கிறீர்கள். பாண்டவர்கள் என்ன செய்கிறார்கள். நீங்கள் அசாத்தியமானதை சாத்தியமாக்குகிறீர்கள், அப்படித்தானே? நீங்கள் தூய்மையின் கொடியை ஏற்றியிருக்கிறீர்கள். ஏற்றியிருக்கிறீர்களா? உங்கள் கரத்தில் அதனை மிக நன்றாக பிடித்திருக்கிறீர்களா அல்லது சிலவேளைகளில் அது தாழ்ந்து விடுகிறதா? தூய்மைக்கான சவாலின் கொடியை சதா தொடர்ந்தும் ஏற்றுங்கள்.

2. அமிர்தவேளையில்இணைந்திருக்கின்ற விழிப்புணர்வின் திலகத்தை இடுங்கள்.

உங்களை நீங்கள் சதா இலகுயோகி என அனுபவம் செய்கிறீர்களா? சந்தர்ப்பசூழ்நிலைகள் உங்களை எவ்வளவு சிரமத்தை அனுபவிக்கச் செய்தாலும், நீங்கள் எந்தச் சிரமத்தையும் இலகுவாக்குகின்ற இலகுயோகிகள். நீங்கள் அவ்வாறானவர்களா அல்லது சிரமமான நேரத்;தில் அதனை சிலவேளைகளில் சிரமமாக அனுபவம் செய்கிறீர்களா? எப்பொழுதுமே அது இலகுவாக உள்ளதா? ஏதாயினும் ஒன்று சிரமமாக இருப்பதற்குக் காரணம் நீங்கள் தந்தையின் சகவாசத்தை கைவிடுவதால் ஆகும். நீங்கள் தனியாகிவிடும் போது, நீங்கள் பலவீனம் அடைகிறீர்கள். பலவீனமானவர்கள் இலகுவான விடயங்களையும் சிரமமானதாகவே கருதுகிறார்கள். ஆகையாலேயே பாப்தாதா முன்னரும் சதா இணைந்திருங்கள் எனக் கூறினார். இணைந்திருப்பவர்களை எவராலுமே பிரிக்க முடியாது. இந்த நேரத்தில் ஆத்மாக்களாகிய நீங்களும் உங்கள் சரீரங்களும் இணைந்திருப்பதைப் போன்று, நீங்களும் தந்தையும் இணைந்திருக்க வேண்டும். தாய்மார்கள் என்ன நினைக்கிறார்கள்? நீங்கள் இணைந்திருக்கிறீர்களா அல்லது சிலவேளைகளில் நீங்கள் பிரிந்திருக்கிறீர்கள் சிலவேளைகளில் மட்டும் இணைந்திருக்கிறீர்களா? அத்தகைய சகவாசத்தை நீங்கள் வேறெந்த நேரத்திலும் பெறுவீர்களா? அவ்வாறாயின், நீங்கள் ஏன் அவரின் சகவாசத்தை விட்டுவிடுகிறீர்கள்? அவர் உங்களுக்குக் கொடுத்துள்ள பணி என்ன? ‘எனது பாபா!’ வை நினைவு செய்வது மட்டுமே. இதனை விட இலகுவான பணி வேறெதுவும் இருக்க முடியுமா? இது கடினமானதா? (எங்களுக்கு இந்த சம்ஸ்காரங்கள் 63 பிறவிகளாக உள்ளது). இது இப்பொழுது உங்களுடைய புதுப் பிறவியாகும். அப்படித்தானே? புதிய பிறவியும் புதிய சம்ஸ்காரங்களும். நீங்கள் இப்பொழுது உங்களுடைய பழைய பிறவியிலா அல்லது புதுப் பிறவியிலா இருக்கிறீர்கள்? அல்லது அரை அரைவாசியாகவா? புதிய பிறவியில், உங்களுக்கு நினைவு செய்கின்ற சம்ஸ்காரமா அல்லது மறக்கின்ற சம்ஸ்காரமா உள்ளது? அவ்வாறாயின், புதியதை விட்டுவிட்டு ஏன் பழையதற்கு திரும்பிச் செல்கிறீர்கள்? நீங்கள் புதியதையா அல்லது பழையதையா விரும்புகிறீர்கள்? அவ்வாறாயின், நீங்கள் ஏன் பழையதற்கு செல்கிறீர்கள்? ஒவ்வொரு நாளும் அமிர்தவேளையில், பிராமண வாழ்வின் விழிப்புணர்வு என்ற திலகத்தை உங்களுக்கு இட்டுக் கொள்ளுங்கள். பக்தர்கள் நிச்சயமாக தமக்கு திலகம் இட்டுக் கொள்கிறார்கள். எனவே நீங்கள் விழிப்புணர்வு திலகத்தை உங்களுக்கு இட்டுக் கொள்ள வேண்டும். எவ்வாறாயினும் திலகம் இடுகின்ற தாய்மார்கள், நீங்கள் சகவாசத்தின் திலகத்தை இடவேண்டும். எனவே, எப்பொழுதும் உங்களுக்கு இருக்க வேண்டிய விழிப்புணர்வு: நான் இணைந்திருக்கின்றேன். எப்பொழுதும் சகவாசம் என்ற இந்தத் திலகத்தை இட்டுக் கொள்ளுங்கள். யாராயினும் ஒருவருக்கு பங்காளி (கணவன்) இருந்தால், அவர் திலகம் இட்டுக்கொள்கிறார். ஒரு பங்காளி இல்லாதிருந்தால் அவள் திலகம் இடுவதில்லை. இது சகவாசம் என்ற திலகமாகும். எனவே, ஒவ்வொருநாளும் விழிப்புணர்வு என்ற திலகத்தை இடுகிறீர்களா அல்லது மறந்து விடுகிறீர்களா? சிலவேளைகளில், நீங்கள் மறந்து விடுகிறீர்கள், சிலவேளைகளில் அது அழிந்து விடுகின்றது. நீங்கள் ஒருபோதும் உங்கள் பங்காளியை அவரின் சகவாசத்தை மறப்பதில்லை. எனவே, எப்பொழுதும் உங்கள் சகவாசியை (பாபாவை) உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்தக் குழு ஓர் அழகான பூங்கொத்தாகும். பல்வேறு பூக்களைக் கொண்ட ஒரு பூங்கொத்து அழகானது. எனவே, நீங்கள் அனைவரும், நீங்கள் யாராக இருந்தாலும், நீங்கள் எங்கிருந்து வந்திருந்தாலும், நீங்கள் ஒவ்வொருவருமே அடுத்தவரைவிட அதிகளவு நேசிக்கப்படுகிறீர்கள். நீங்கள் அனைவருமே திருப்தியாக இருக்கிறீர்கள், அப்படித்தானே? நீங்கள் சதா சகாவாசத்துடன் இருக்கிறீர்கள், நீங்கள் எப்பொழுது திருப்தியாக இருக்கிறீர்கள். அவ்வளவே, நீங்கள் நினைவுசெய்ய வேண்டிய ஒரேயொரு வார்த்தைநான் இணைந்திருக்கின்றேன்எப்பொழுதும் நான் இணைந்தே இருப்பேன், ஒரேநேரத்தில் திரும்பிச் செல்வேன். எவ்வாறாயினும், அவருடன் நீங்கள் நிலைத்திருந்தால் மட்டுமே அவருடன் சேர்ந்து உங்களால் திரும்பிச் செல்ல முடியும். நீங்கள் அவருடன் நிலைத்திருக்க வேண்டும், அவருடனேயே திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் நேசிக்கின்ற ஒருவரை விட்டு நீங்கள் பிரிந்திருக்கக்கூடாது. நீங்கள் ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு எண்ணத்திலும் அவருடனேயே இருக்கிறீர்கள்.

ஆசீர்வாதம்:

சமநிலையை கொண்டிருக்கின்ற சிறப்பியல்பை கிரகிப்பதன் மூலம் ஆசீர்வாதங்களை அனைவருக்கும் வழங்குகின்ற ஓர் சக்திமிக்க சேவையாளர் ஆகுவீர்களாக.


சக்திசாலி ஆத்மாக்களாகிய நீங்கள் செய்ய வேண்டிய சேவை அனைவருக்கும் ஆசீர்வாதங்களை வழங்குவதாகும். உங்கள் கண்களால் அல்லது உங்கள் நெற்றியினூடாக அவற்றை வழங்கலாம். சக்கார் பாபா, தனது இறுதிகணங்களில் எவ்வாறு கர்மாதீத் ஸ்திதியில் இருந்தார் என்பதை நீங்கள் பார்த்தீர்கள். அவர் சமநிலையின் சிறப்பியல்பையும் ஆசீர்வாதங்களின் அற்புதத்தையும் கொண்டிருந்தார். எனவே தந்தையை பின்பற்றுங்கள். இது இலகுவான சக்திமிக்க சேவையாகும். இதனை நீங்கள் குறைந்தளவு நேரத்தில், குறைவான முயற்சியில் செய்து, அதிகளவு பெறுபேறை பெறுவீர்கள். எனவே, உங்களுடைய ஆத்ம உணர்வு வடிவத்தினூடாக தொடர்ந்தும் ஆசீர்வாதங்களை கொடுங்கள்.

சுலோகம்:

ஒரு விநாடியில் விரிவாக்கத்தை அமிழ்த்திக் கொண்டு, ஞானத்தின் சாராம்சத்தின் அனுபவத்தைக் கொடுப்பதே வெளிச்ச வீடாகவும், சக்திபீடமாகவும் இருப்பதாகும்.

 

--ஓம் சாந்தி---

அறிவித்தல்: இன்று மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையாகும். இராஜயோகிகளும் தபஸ்வி சகோதரர்களும் மாலை 6.30 முதல் 7.30 வரை விசேட யோகம் செய்கின்ற நாளாகும். இந்த நேரத்தில், நீங்கள் இலேசான, சக்தி நிறைந்த ஸ்திதியில் நிலைத்திருந்து, ஒரு வெளிச்ச வீடாக இருந்து, அமைதியின் சக்காஷையும் சக்தியையும் பூகோளத்தின் மீது பரவச் செய்யுங்கள்.

Download PDF

Post a Comment

0 Comments