14-01-2023 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, உங்கள் சரீரங்கள் இப்பொழுது முற்றிலும் பழையன ஆகிவிட்டன. உங்கள் சரீரங்களை கல்ப விருட்சத்தைப் போன்று அமரத்துவமானவை
ஆக்குவதற்காகவே தந்தை வந்துள்ளார். நீங்கள் அரைக் கல்பத்திற்கு அமரத்துவமானவர்கள் ஆகுவீர்கள்.
கேள்வி:
இந்த அற்புதமான நாடகத்தின் எவ்விடயம் புரிந்துகொள்வதற்கு மிகவும் பயனுள்ளது?
பதில்:
இந்நேரத்தில், ஒரு தடவை மாத்திரமே இந்நாடகத்தின்
நடிகர்கள் அனைவரினதும்
முகங்களை உங்களால் பார்க்க முடியும். அதே முகங்களை 5000 வருடங்களுக்குப் பின்னரே நீங்கள் பார்ப்பீர்கள். 84 பிறவிகளிலும்
84 முகங்கள் இருக்கும். அவை ஒவ்வொன்றும் வேறுபட்டதாக
இருக்கும். ஒருவரின் செயற்பாடுகள் இன்னொருவருடையதைப் போன்று இருக்கவும் முடியாது. என்ன செயல்கள் செய்யப்பட்டாலும், அச்செயல்கள்
5000 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இடம்பெறும். இவ்விடயங்கள்
புரிந்துகொள்வதற்கு உண்மையிலேயே
பயனுள்ளவையாகும். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களின் புத்தி திறந்துள்ளது. உங்களால் இந்த இரகசியங்களை அனைவருக்கும் விளங்கப்படுத்த
முடியும்.
பாடல்: கள்ளங்கபடமற்ற பிரபு தனித்துவமானவர்….
ஓம் சாந்தி.
சிவபாபா மாத்திரமே கள்ளங்கபடமற்ற பிரபு என அழைக்கப்படுகிறார். சங்கரரை அவ்வாறு அழைக்க முடியாது.
அவர் அழிக்கின்றார், சிவபாபாவோ உருவாக்குகிறார். நிச்சயமாக சுவர்க்கமே உருவாக்கப்படுகிறது, நரகம் அழிக்கப்படுகிறது. எனவே,
சிவபாபாவை மாத்திரமே கள்ளங்கபடமற்ற பிரபு என்றும், ஞானக்கடல் என்றும் அழைக்கமுடியும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அனுபவசாலிகள்.
நிச்சயமாக சிவபாபா முன்னைய கல்பத்தில் வந்திருக்கவேண்டும். அவர் இப்பொழுது நிச்சயமாக வந்துள்ளார். அவர் மனித உலகைப் புதியதாக்க வேண்டுமென்பதால், நிச்சயமாக அவர் வந்தாக வேண்டும்.
அவர் உங்களுக்கு நாடகத்தின் ஆரம்பம்,
மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களைக் கூறவேண்டியுள்ளதால், அவர் இங்கே வந்தாக வேண்டும். அவரால் சூட்சுமலோகத்தில் உங்களுக்குக் கூறமுடியாது. சூட்சுமலோகத்தின் மொழி வேறுபட்டது,
அசரீரி உலகில் எந்த மொழியும் கிடையாது. இங்கே,
இது பேசும் உலகமாகும். சிவபாபாவே சீரழிந்தவற்றைச் சீர்ப்படுத்துபவர் ஆவார். அனைவருக்கும் சற்கதியருள்கின்ற கடவுள் கூறுகிறார்: உலகம் தமோபிரதான் ஆகும்போது நான் வரவேண்டும்.
அவரின் ஞாபகார்த்தங்களும் இங்கே உள்ளன.
இந்நாடகத்திலுள்ள ஒவ்வொரு மனிதனின் முகத்தையும் ஒரு தடவை மாத்திரமே பார்க்க முடியும். இலக்ஷ்மி நாராயணனின் முகங்களையேனும் சத்திய யுகத்திற்கு வெளியில் வேறெங்கும் பார்க்க முடியாது.
அவர்கள் மறுபிறவி எடுக்கும்போது, அவர்களின் பெயர்களும் ரூபங்களும் வேறுபட்டவையாக இருக்கும்.
காந்தியின் அதே முகத்தை நீங்கள்
5000 வருடங்களுக்குப் பின்னரே பார்ப்பீர்கள், அதேபோன்று,
இலக்ஷ்மி நாராயணனின் உருவங்களையும் நீங்கள் ஒரு தடவை பார்த்துவிட்டால், அதே உருவங்களை இன்னுமோர்
5000 வருடங்களுக்கு நீங்கள் பார்க்கமாட்டீர்கள். எண்ணற்ற மனிதர்கள் உள்ளனர்.
நீங்கள் இப்பொழுது பார்க்கின்ற மனிதர்களின் முகங்களை 5000 வருடங்களுக்குப் பின்னரே மீண்டும் பார்ப்பீர்கள். 84 பிறவிகளிலும் 84 முகங்கள் இருக்கும். அவை ஒவ்வொன்றும் வேறுபட்டதாக இருக்கும். ஒருவரின் செயல்களை இன்னொருவருடையதுடன் ஒப்பிட முடியாது.
ஒருவர் என்ன செயல்களைச் செய்கின்றாரோ,
அதே செயல்களே
5000 வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் இடம்பெறும்.
இவ்விடயங்கள் புரிந்துகொள்வதற்கு மிகவும் பயனுள்ளவையாகும். பாபாவின் உருவம் உள்ளது. உலகைப் படைப்பதற்காக அவரே நிச்சயமாக முதலில் வந்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இப்பொழுது உங்கள் புத்தியின் பூட்டு திறந்துள்ளதால், நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இவ்விதமாகவே நீங்கள் இப்பொழுது மற்றவர்களின் பூட்டுக்களையும் திறக்கவேண்டும். அசரீரியான தந்தை நிச்சயமாக பரந்தாமத்திலேயே வசிக்கிறார்.
நீங்களும் என்னுடன் அங்கேயே வசிக்கிறீர்கள். நான் முதலில் வரும்போது, பிரம்மா,
விஷ்ணு, சங்கரரும் என்னுடனேயே உள்ளனர்.
மனித உலகம் ஏற்கனவே உள்ளது.
எனவே, எவ்வாறு அது சுழன்று,
மீண்டும் மீண்டும் இருக்கிறது? சூட்சுமலோகமே முதலில் உருவாக்கப்பட வேண்டும், பின்னர் அவர் பௌதீக உலகிற்கு வரவேண்டும்.
தேவர்கள் ஆகவேண்டிய மனிதர்கள் இப்பொழுது சூத்திரர்கள் ஆகிவிட்டதால்,
அவர்கள் முதலில் பிராமணர்களாகி, பின்னர் தேவர்கள் ஆக்கப்பட வேண்டும். எனவே,
நான் முன்னைய சக்கரத்தில் கொடுத்த ஞானத்தையே மீண்டும் கொடுக்கின்றேன். இந்நேரத்திலேயே நான் அமர்ந்திருந்து இராஜ யோகம் கற்பிக்கின்றேன். பின்னர்,
அரைக்கல்பத்திற்குப் பின்னர் பக்தி ஆரம்பமாகிறது.
எவ்வாறு பழைய உலகம் புதியதாகிறது,
எவ்வாறு இறுதியில் மீண்டும் ஆரம்பநிலை ஆரம்பிக்கிறது எனத் தந்தையே அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். பரமாத்மா வந்தார் என மக்கள் புரிந்துகொள்கின்றனர், எனினும் எப்பொழுது அல்லது எவ்வாறு வந்தார் என அவர்களுக்குத் தெரியாது. ஆரம்பம்,
மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களை அவர் எவ்வாறு வெளிப்படுத்தினார் என அவர்களுக்குத் தெரியாது.
தந்தை கூறுகிறார்:
நான் உங்களுக்கு சற்கதியருள்வதற்காக தனிப்பட்ட முறையில் வந்துள்ளேன்.
இராவணனாகிய மாயை அனைவரதும் பாக்கியத்தைச் சீரழித்துவிட்டாள். எனவே,
சீரழிந்தவற்றைச் சீர்ப்படுத்துவதற்கு நிச்சயமாக ஒருவர் தேவைப்படுகிறார். தந்தை கூறுகிறார்: நான்
5000 வருடங்களுக்கு முன்னரும் பிரம்மாவின் சரீரத்தில் வந்தேன். மனித உலகம் இங்கேயே உருவாக்கப்படுகிறது. நான் உலகை மாற்றி,
கல்ப விருட்சத்தைப் போன்று உங்கள் சரீரங்களை அமரத்துவமானமானவை ஆக்குவதற்காகவே இங்கே வருகிறேன். உங்கள் சரீரங்கள் இப்பொழுது முற்றிலும் பழையன ஆகிவிட்டன. பாபா அரைக்கல்பத்திற்கு அவற்றை அமரத்துவமானவை ஆக்குகிறார்.
அங்கே நீங்கள் உங்களது சரீரங்களை மாற்றுகிறீர்கள், ஆனால் அதைச் சந்தோஷமாகவே செய்கிறீர்கள். ஏனெனில்,
நீங்கள் ஒரு பழைய ஆடையை நீக்கிவிட்டு, புதியதொன்றை எடுக்கின்றீர்கள். இன்ன இன்னார் மரணித்துவிட்டார் என அங்கே நீங்கள் கூறமாட்டீர்கள். அங்கே அது மரணம் என அழைக்கப்படுவதில்லை. அதேபோன்று,
நீங்கள் இங்கே மரணித்து வாழ்கின்றீர்கள். நீங்கள் உண்மையிலேயே மரணித்துவிட்டீர்கள் என்றில்லை,
நீங்கள் உங்களைச் சிவபாபாவிற்குரியவர்கள் ஆக்கியுள்ளீர்கள். பாபா கூறுகிறார்:
நீங்களே எனது கண்ணின் ஒளியும்,
நீண்ட காலம் தொலைந்திருந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளும் ஆவீர்கள். சிவபாபா இவ்வாறு கூறுகிறார்,
பிரம்ம பாபாவும் இவ்வாறே கூறுகிறார்.
அவர் அசரீரியான தந்தை, இவரோ பௌதீகமான தந்தை ஆவார். நீங்களும் கூறுகிறீர்கள்: பாபா,
நீங்களே அந்த ஒருவர், நாங்கள் உங்களை மீண்டும் சந்திக்க வந்துள்ள அதே குழந்தைகள் ஆவோம். தந்தை கூறுகிறார்: நான் வந்து சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறேன். உங்களுக்கு நிச்சயமாக ஓர் இராச்சியம் தேவை.
எனவே, நான் உங்களுக்கு இராஜ யோகம் கற்பிக்கிறேன். இறுதியிலேயே நீங்கள் இராச்சியத்தைப் பெறுவீர்கள்.
பின்னர் அங்கே இந்த ஞானத்திற்கான தேவை இருக்காது.
அந்தச் சமயநூல்கள் யாவும் பக்தி மார்க்கத்தில் பயனுள்ளவையாக இருக்கும். முக்கியஸ்தர் ஒருவர் ஓரிடத்தின் வரலாறையும், புவியியலையும் பற்றி எழுதும்போது,
மற்றவர்கள் அதைத் தொடர்ந்தும் வாசிப்பது போன்றே மக்களும் தொடர்ந்தும் அவற்றைக் கற்கின்றனர். எண்ணற்ற நூல்கள் உள்ளன.
மக்கள் தொடர்ந்தும் அவற்றை வாசிக்கின்றனர். சுவர்க்கத்தில் அதுபோன்ற எதுவும் கிடையாது.
அங்கே, ஒரு மொழி மாத்திரமே இருக்கும். எனவே,
பாபா கூறுகிறார்:
நான் உலகைப் புதுப்பிப்பதற்காக வந்துள்ளேன்.
முன்னர், அது புதியதாக இருந்தது,
இப்பொழுது பழையதாகிவிட்டது. எனது புத்திரர்கள் யாவரையும் மாயை எரித்துச் சாம்பலாக்கிவிட்டாள். அவர்களைக் கடலின் குழந்தைகளாகக் காண்பித்துள்ளனர். அது சரியானதே.
ஏnனில்,
நீங்கள் ஞானக்கடலின் குழந்தைகள். அவர் உண்மையிலேயே ஞானக்கடல் ஆவார். உண்மையில்,
அனைவரும் எனது குழந்தைகளே, ஆனால் நீங்களே நடைமுறை ரூபத்தில் நினைவுகூரப்படுகிறீர்கள். உங்களுக்காகவே தந்தை வருகிறார்.
அவர் கூறுகிறார்:
நான் குழந்தைகளாகிய உங்களை மீண்டும் உணர்வுடையவர்கள் ஆக்குவதற்காகவே வந்துள்ளேன். முற்றிலும் அவலட்சணமாகவும், கல்லுப் புத்தியுடனும் இருப்பவர்களை தெய்வீகப் புத்தியுடையவர்கள் ஆக்குவதற்காக நான் மீண்டும் ஒரு தடவை வருகிறேன்.
இந்த ஞானத்தின் மூலமாக உங்கள் புத்தி எவ்வாறு தெய்வீகமானதாகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உங்கள் புத்தி தெய்வீகமானதாகும்போது, இந்த உலகமும் கற்பூமியில் இருந்து தெய்வீக பூமியாக மாறும்.
இதற்காக முயற்சி செய்வதற்கு பாபா உங்களைத் தொடர்ந்தும் தூண்டுகிறார். எனவே,
மனித உலகை உருவாக்குவதற்காக பாபா நிச்சயமாக இங்கே வந்தாக வேண்டும்.
அவர் யாரின் சரீரத்தில் பிரவேசிக்கிறாரோ, அவரின் வாய் மூலமாகப் படைப்புகளை உருவாக்குகிறார். எனவே,
இவர் தாயாகின்றார்.
இது அத்தகையதோர் ஆழமான விடயமாகும்!
அவர் ஓர் ஆணாக இருப்பதால்,
பாபா அவரினுள் பிரவேசிக்கும்போது அவர் தாயாகின்ற கருத்து நிச்சயமாக மக்களைக் குழப்பும். தாய் தந்தையரான இந்த பிரம்மாவும், சரஸ்வதியும் கல்ப விருட்சத்தின் அடியில் அமர்ந்திருந்து இராஜ யோகம் கற்பதைக் காண்பிப்பதன் மூலம் நீங்கள் அதை நிரூபிக்கின்றீர்கள். எனவே, அவர்களுக்கு நிச்சயமாக ஒரு குரு தேவைப்படுகிறார். பிரம்மாவும், சரஸ்வதியும்,
அனைத்துக் குழந்தைகளும் இராஜ ரிஷிகள் எனப்படுகின்றனர். நீங்கள் இராச்சியத்தைக் கோருவதற்காக யோகம் செய்கின்றீர்கள். வேறு எவராலுமே கற்பிக்க முடியாத இராஜ யோகத்தையும்,
ஞானத்தையும் தந்தை வந்து கற்பிக்கிறார். வேறு எவருமே இராஜ யோகத்தைப் பயிற்சி செய்வதில்லை.
அவர்கள் வெறுமனே கூறுகின்றனர்: யோகத்தைக் கற்றிடுங்கள்! பல வகையான ஹத்த யோகங்கள் உள்ளன.
சந்நியாசிகள் போன்ற எவராலும் இராஜ யோகம் கற்பிக்க முடியாது. கடவுள் வந்து இராஜ யோகம் கற்பித்தார்.
அவர் கூறுகிறார்:
ஒவ்வொரு சக்கரத்திலும் மனித உலகைப் புதியதாக்க வேண்டிய காலம் வரும்போது நான் வந்தாக வேண்டும். பிரளயம் ஒருபோதும் இடம்பெறுவதில்லை. பிரளயம் ஏற்பட்டிருந்தால், நான் யாரில் பிரவேசிப்பேன்? அசரீரியானவர் வந்து என்ன செய்வார்? தந்தை விளங்கப்படுத்துகிறார்: உலகம் ஏற்கனவே உள்ளது.
பக்தர்களும் உள்ளனர்.
அவர்கள் கடவுளைக் கூவியழைக்கின்றனர். பக்தர்களும் இருப்பதையே இது நிரூபிக்கிறது. கலியுகத்தின் இறுதியில், பக்தர்கள் யாவரும் மிகவும் சந்தோஷமற்றுள்ளபோது கடவுள் வந்தாக வேண்டும்.
இராவண இராச்சியம் முடிவடையும் தறுவாயிலேயே நான் வரவேண்டும்.
அனைவரும் இந்நேரத்தில் நிச்சயமாக சந்தோஷமற்றே உள்ளனர். மகாபாரத யுத்தம் முன்னாலேயே உள்ளது. இது ஒரு பாடசாலை ஆகும். இங்கே,
ஓர் இலக்கும்,
குறிக்கோளும் உள்ளது.
சத்திய யுகத்தில் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பின்னர் ஒற்றைக் கிரீடம் கொண்டவர்களின் இராச்சியம் வந்தது. பின்னர் ஏனைய மதங்கள் விரிவாக்கமடைந்தன. அதன் பின்னர் இராச்சியங்களை அதிகரிப்பதற்கு, யுத்தங்கள் போன்றவை இடம்பெற்றன.
கடந்தவை யாவும் மீண்டும் மீண்டும் இடம்பெறும் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இப்பொழுது ஆரம்பமாகவுள்ளது. உலகின் வரலாறினதும்,
புவியியலினதும் இரகசியங்கள் அனைத்தையும் பாபா விளங்கப்படுத்துகிறார். விபரத்திற்குச் செல்லவேண்டிய தேவையில்லை.
சூரிய வம்சத்தைச் சேர்ந்த நீங்கள் நிச்சயமாக சூரிய வம்சத்திலேயே மறுபிறவி எடுப்பீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். உங்கள் பெயர்களும், ரூபங்களும் மாறுவதுடன், நீங்கள் வெவ்வேறு தாய்,
தந்தையரையும் கொண்டிருப்பீர்கள். இந்த முழு நாடகத்தையும் நீங்கள் உங்களது புத்தியில் வைத்திருக்க வேண்டும்.
எவ்வாறு தந்தை வருகிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பழைய கீதையின் ஞானம் மக்களின் புத்தியில் உள்ளது.
முன்னர் எங்களின் புத்தியிலும் அப்பழைய கீதையின் ஞானம் இருந்தது. இப்பொழுது அத்தகைய ஆழமான விடயங்களைச் செவிமடுத்த பின்னர், அனைத்தினதும் முழுமையான அர்த்தத்தை நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம். முன்னர் உங்கள் ஞானம் வேறுபட்டது என்றும்,
இப்பொழுது அது நல்லது என்றும் மக்களும் கூறுகின்றனர்.
உங்கள் இல்லறத்தில் வாழும்போதும் ஒரு தாமரை போன்று எவ்வாறு தூய்மையாக வாழ்வதென இப்பொழுது நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். இது அனைவரதும் இறுதிப் பிறவியாகும், அனைவரும் மரணித்தாக வேண்டும்.
எல்லையற்ற தந்தையே கூறுகிறார்: நீங்கள் தூய்மையாக இருப்பீர்கள் என்றும், 21 பிறவிகளுக்குச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள் என்றும் சத்தியம் செய்யுங்கள்.
இங்கே, ஒருவர் ஒரு கோடீஸ்வரராக இருந்தாலும், அவர் சந்தோஷமற்றவராகவே இருப்பார்,
சரீரம் தூய்மையற்றது.
உங்கள் சரீரங்கள் தூய்மையாகின்றன. நீங்கள்
21 பிறவிகளுக்கு மரணிப்பதில்லை. தந்தை கூறுகிறார்:
இங்கே வருபவர்களே சூரிய, சந்திர வம்சங்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் காமச்சிதையில் அமர்ந்ததால் அவலட்சணமாகினர். அதனாலேயே இராதையும்,
கிருஷ்ணரும், நாராயணனும் அவலட்சணமானவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இப்பொழுது,
அனைவரும் அவலட்சணமாகிவிட்டனர். அவர்கள் காமச்சிதையில் அமர்ந்ததாலேயே அவலட்சணமாகினர். இப்பொழுது நீங்கள் காமச்சிதையில் இருந்து கீழிறங்கி, ஞானச்சிதையில் அமரவேண்டும். நச்சுப் பிணைப்பை அறுத்து,
ஞானாமிர்தப் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். நீங்கள் ஒரு மேன்மையான பணியை மேற்கொள்கிறீர்கள் என மக்கள் கூறும் வகையில் விளங்கப்படுத்துங்கள். ஒரு குமாரி அல்லது குமாரைத் தூய்மையற்றவர் என அழைக்க முடியாது. தந்தை கூறுகிறார்: நீங்கள் ஒருபோதும் அசுத்தமானவர்கள் ஆகக்கூடாது! காலம் கடந்துசெல்லும்போது, எண்ணற்ற மக்கள் வருவார்கள்.
இது மிக நல்லது என அவர்கள் கூறுவார்கள்.
ஞானச்சிதையில் அமர்வதால் நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள்.
அதிகமாக, பிராமணப் புரோகிதர்களே திருமண ஏற்பாடுகளைச் செய்கின்றனர்.
அரசர்களும் பிராமணப் புரோகிதர்களை வைத்திருக்கின்றனர். அவர்கள் இராஜ குருக்கள் (இராச்சியத்தின் குருக்கள்) என அழைக்கப்படுகின்றனர். தற்போது,
சந்நியாசிகள்கூட பந்தனங்களை ஏற்படுத்துகின்றனர். நீங்கள் இத்தகைய ஞான விடயங்களை மக்களுக்குக் கூறும்போது, அவர்கள் மிகவும் சந்தோஷமடைகின்றனர். அவர்கள் உடனடியாகவே ராக்கியைக் கட்டுகின்றனர். பின்னர், வீட்டில் சண்டையும் ஏற்படுகிறது.
நீங்கள் நிச்சயமாக சிறிது சகித்துக்கொள்ளவே வேண்டும். நீங்கள் மறைமுகமான சக்தி சேனையினர், நீங்கள் எந்த ஆயுதங்களையுமே வைத்திருப்பதில்லை. தேவியர் பல்வேறு ஆயுதங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளனர். எவ்வாறாயினும், அவை யாவும் ஞான விடயங்களாகும். இங்கே, இவை யோக சக்தி பற்றிய விடயம் ஆகும். நீங்கள் யோக சக்தியால் உலக இராச்சியத்தைக் கோருகின்றீர்கள். எல்லைக்குட்பட்ட இராச்சியங்களே பௌதீக சக்தியால் பெறப்படுகின்றன. எல்லையற்ற அதிபதியால் மாத்திரமே எல்லையற்ற இராச்சியத்தை வழங்கமுடியும். இதில் யுத்தம் என்ற கேள்வியில்லை.
தந்தை கூறுகிறார்:
எவ்வாறு நான் ஒரு யுத்தத்தை ஏற்படுத்த முடியும்?
சண்டை சச்சரவுகளின் சுவடேனும் எஞ்சாத வகையில் அவற்றை முடிவிற்குக் கொண்டுவருவதற்காகவே நான் வந்துள்ளேன்.
இதனாலேயே அனைவரும் பரமாத்மாவை நினைவு செய்கின்றனர். அவர் கூறுகிறார்: எனது கௌரவத்தைப் பேணுங்கள்!
ஒரேயொருவரில் நம்பிக்கை இல்லாதபோதே அவர்கள் மற்றவர்களைப் பிடித்துக்கொள்கின்றனர். கடவுள் தங்களிலும் இருப்பதாக அவர்கள் கூறுகின்றபோதிலும், அவர்களுக்குத் தங்களிலேயே அந்தளவு நம்பிக்கை இல்லை. அதனாலேயே அவர்கள் குருமாரை ஏற்கின்றனர். கடவுள் உங்களில் இருக்கின்றாராயின், நீங்கள் ஏன் ஒரு குருவை ஏற்கவேண்டும்? இங்கே,
இது தனித்துவமானது. தந்தை கூறுகிறார்:
நான் இப்பொழுது வந்திருப்பது போன்றே முன்னைய கல்பத்திலும் வந்தேன். படைப்பவரான தந்தை எவ்வாறு அமர்ந்திருந்து படைக்கின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். இதுவும் நாடகமேயாகும். நீங்கள் இச்சக்கரத்தைப் புரிந்துகொள்ளவில்லையாயின், எதிர்காலத்தில் என்ன நிகழப்போகிறது என்பதை எவ்வாறு உங்களால் புரிந்துகொள்ள முடியும்? இது கர்மஷேத்திரம் எனக் கூறப்படுகிறது. நாங்கள் எமது பாகங்களை நடிப்பதற்காக அசரீரி உலகிலிருந்து வந்துள்ளோம்.
எனவே, நாங்கள் முழு நாடகத்தினதும் தயாரிப்பாளரையும், இயக்குனரையும் அறிந்திருக்க வேண்டும்.
இந்நாடகம் எவ்வாறு உருவாக்கப்படுகிறது, இவ்வுலகின் விரிவாக்கம் எவ்வாறு இடம்பெறுகிறது போன்றவற்றை நடிகர்களாகிய நாங்கள் அறிந்துகொண்டோம். இப்பொழுது இது கலியுகத்தின் இறுதிக்காலம் என்பதால்,
சத்திய யுகம் நிச்சயமாக உருவாக்கப்பட வேண்டும். சக்கரத்தின் விளக்கம் முற்றிலும் சரியானது. பிராமண குலத்திற்குரியவர்கள் புரிந்துகொள்வார்கள். இவர் பிரஜாபிதா ஆவார். எனவே,
எங்கள் குலம் தொடர்ந்தும் வளரும்,
அது வளரவேண்டும்.
அனைவரும் முன்னைய கல்பத்தில் செய்தது போன்றே தொடர்ந்தும் முயற்சி செய்கின்றனர்.
நாங்கள் பற்றற்று அவதானிக்கின்றோம். நீங்கள் ஒவ்வொருவரும் சத்திய யுகத்தில் ஓர் இராச்சியத்தைக் கோருவதற்கு எந்தளவிற்குத் தகுதியானவர் ஆகியுள்ளீர்கள் எனக் கண்ணாடியில் உங்கள் முகத்தைச் சோதித்து,
உங்களையே கேட்கவேண்டும். இது ஒவ்வொரு சக்கரத்தினதும் விளையாட்டாகும். ஒவ்வொருவரினதும் சேவைக்கேற்ப,
நீங்களே ஆன்மீக,
எல்லையற்ற, சமூக சேவையாளர்கள். நீங்கள் பரமாத்மாவின் வழிகாட்டல்களைப் பின்பற்றுகிறீர்கள். இத்தகைய அழகான கருத்துக்களைத் தொடர்ந்தும் கிரகியுங்கள்.
தந்தை வந்து,
உங்களை மரணத்தின் பிடியிலிருந்து விடுவிக்கிறார். அங்கே மரணம் பற்றி குறிப்பிடப்படுவதில்லை. இதுவே மரணபூமி ஆகும்.
அது அமரத்துவ பூமி ஆகும்.
இந்த தேசத்தில்,
ஆரம்பம் முதல் மத்தியூடாக இறுதி வரைக்கும் துன்பமே உள்ளது. அந்த தேசத்திலோ துன்பத்தின் சுவடே கிடையாது.
அச்சா.
இனிமையிலும் இனிமையான,
அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய்,
தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- நாங்கள் அசரீரியான, மற்றும் பௌதீகத் தந்தையரின் கண்களின் ஒளியும், நீண்ட காலம் தொலைந்திருந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளும் ஆவோம். வாழும்போதே சிவபாபாவின் வாரிசுகளாக இருக்கின்ற போதையைப் பேணுங்கள்.
- யோக சக்தி மூலம் உலக இராச்சியத்தைக் கோருங்கள். நீங்கள் தூய்மைக்கான ராக்கியைக் கட்டியிருப்பதால், சிறிது சகித்துக்கொள்ளவே வேண்டும். ஒருபோதும் தூய்மையற்றவர்கள் ஆகாதீர்கள்.
ஆசீர்வாதம்:
சந்தோஷக் கடலான
தந்தையின் விழிப்புணர்வில்
இருப்பதன் மூலம்
இந்த துன்ப
உலகில் வாழும்
போதும் சந்தோஷத்தின்
சொரூபமாக இருப்பீர்களாக.
சதா சந்தோஷக் கடலான தந்தையின் விழிப்புணர்வில்
இருங்கள். அதனால் நீங்கள் சந்தோஷத்தின் சொரூபமாக ஆகுவீர்கள். உலகில் எவ்வளவு துன்பத்தினதும் அமைதியின்மையினதும் செல்வாக்கு இருந்த போதிலும் நீங்கள் பற்றற்றவராகவும் அன்புடையவராகவும் இருங்கள். நீங்கள் சந்தோஷக்கடலுடன் இருப்பதால் நீங்கள் தொடர்ந்தும் சந்தோஷ ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கின்றீர்கள். மாஸ்டர் அன்புக் கடலின் குழந்தைகளான நீங்கள் எவ்விதமான துன்ப எண்ணங்களையும்
கொண்டிருக்கக் கூடாது. ஏனெனில் நீங்கள் துன்ப உலகிலிருந்து விலகி சங்கம யுகத்திற்குள் வந்துள்ளீர்கள். அனைத்து இழைகளும் துண்டிக்கப்பட்டுவிட்டதால் நீங்கள் தொடர்ந்தும் சந்தோஷக் கடல் அலைகளுடன் முன்னேறிச் செல்லலாம்.
சுலோகம்:
ஏகாந்தத்தில் இருத்தல் என்பது மனதினையும் புத்தியினையும்
ஒருமித்த சக்தி வாய்ந்த ஸ்திதியில் நிலை நிறுத்துவதாகும்.
---ஓம் சாந்தி---
0 Comments