13-01-2023 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் இங்கே சந்தோஷத்தையும்
துன்பத்தையும், மரியாதையையும்
அவமரியாதையையும் சகித்துக் கொள்ள வேண்டும். இப்பழைய உலகின் சந்தோஷத்தை உங்கள் புத்தியிலிருந்து அகற்றுங்கள். உங்கள் சொந்த மனதினுடைய கட்டளைகளைப்
பின்பற்றாதீர்கள்.
கேள்வி:
ஏன் இப்பிறவியானது
தேவர்களின் பிறவியை விட மேலானது?
பதில்:
இந்நேரத்தில் குழந்தைகளாகிய
நீங்கள் சிவபாபாவின்
பண்டாராவிலிருந்து உண்கிறீர்கள்.
இங்கே நீங்கள் அதிக வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள். நீங்கள் தந்தையிடம் தஞ்சம் அடைகிறீர்கள். இப்பிறவியிலேயே
நீங்கள் உங்களை இவ்வுலகிலும், அப்பாலுள்ள உலகிலும் (பரலோகம்) சந்தோஷமானவர்கள் ஆக்குகிறீர்கள்.
நீங்கள் சுதாமாவைப் (குசேலர்) போல், இரு கைப்பிடி அவலைக் கொடுத்து, 21 பிறவிகளுக்கான ஆட்சியுரிமையைப் பெறுகிறீர்கள்.
பாடல்: நீங்கள் அருகில் இருந்தாலும்,
தொலைவில் இருந்தாலும்
நீங்களே என்னுடைய கனவு ரூபம்…
ஓம் சாந்தி.
இப்பாடலின் கருத்து மிகவும் சிறந்தது.
நீங்கள் இச்சரீரத்துக்கு அருகில் அமர்ந்திருந்தாலென்ன அல்லது தொலைவில் அமர்ந்திருந்தாலென்ன, அவர் நேரடியாகவே உங்களுக்கு யோகக் கற்பித்தல்களைக் கொடுக்கிறார் எனத் தந்தை இங்கே அமர்ந்திருந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர் அதனைத் தூண்டுதலின் மூலம் கொடுப்பதில்லை. நான் அருகில் இருந்தாலும், தொலைவில் இருந்தாலும் நீங்கள் என்னை நினைவு செய்யவே வேண்டும்.
மக்கள் கடவுளிடம் செல்வதற்காகப் பக்தி செய்கிறார்கள். “ஓ அச்சரீரங்களில் வசிக்கின்ற உயிர் வாழ்பவர்களாகிய ஆத்மாக்களே!” எனத் தந்தை இங்கே அமர்ந்திருந்து கூறுகிறார்.
பரமாத்மாவாகிய பரமதந்தை இங்கே அமர்ந்திருந்து ஆத்மாக்களுடன் பேசுகிறார்.
கடவுள் நிச்சயமாக ஆத்மாக்களைச் சந்திக்க வேண்டும். அவர்கள் சந்தோஷமற்றவர்களாக இருப்பதால்,
ஆத்மாக்கள் கடவுளை நினைவு செய்கிறார்கள். சத்தியயுகத்தில், அவரை எவருமே நினைவு செய்வதில்லை. நீங்களே பழைய பக்தர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்.
மாயை உங்களைப் பற்றிப் பிடித்த காலம் முதல் நீங்கள் கடவுள் சிவனை நினைவு செய்ய ஆரம்பித்தீர்கள். ஏனெனில் சிவபாபா உங்களை உலக அதிபதிகள் ஆக்கியிருந்தார். எனவே மக்கள் அவருடைய ஞாபகார்த்தத்தை உருவாக்கி, பக்தி செய்கிறார்கள். தந்தை உங்களைத் திருப்பி அழைத்துச் செல்வதற்காக இப்பொழுது நேரடியாக வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
ஏனெனில் நீங்கள் இப்பொழுது தந்தையுடன் திரும்பிச் செல்ல வேண்டும். நீங்கள் இங்கே இருக்கும்பொழுது, உங்களுடைய பழைய சரீரத்தையும், பழைய உலகத்தையும் உங்கள் புத்தியிலிருந்து அகற்றி,
யோகத்தில் இருக்க வேண்டும். இந்த யோக அக்கினியாலேயே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இதற்கு முயற்சி தேவை.
உங்களுக்குக் கிடைக்கும் அந்தஸ்து மிகவும் மகத்தானது. நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகவேண்டும். சிவபாபாவே உலகின் அதிபதி என மக்கள் கூறுகிறார்கள். ஆனால்,
இல்லை. மனிதர்களே உலகின் அதிபதிகள் ஆகுகின்றனர். தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களை உலக அதிபதிகள் ஆக்குகிறார். அவர் கூறுகிறார்: நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள். பின்னர்
84 பிறவிகளை எடுத்ததனால்,
நீங்கள் இப்பொழுது சிப்பிகளுக்கேனும் அதிபதிகளாக இல்லை. உங்களுடைய முதற் பிறவிக்கும் இந்த இறுதிப் பிறவிக்கும் இடையில் பகலுக்கும் இரவுக்கும் இடையிலான பெரும் வித்தியாசம் உள்ளது.
தந்தை வந்து,
உங்களுக்கு ஒரு காட்சியைக் கொடுக்கும் வரையில், இதனை எவராலும் நினைவு செய்ய முடியாதுள்ளது. நீங்களும் ஒரு காட்சியை ஞானப் புத்தியால் (கியான் புத்தி) காண முடியும். விவேகிகளாகவும், நாள் முழுவதும் தந்தையை நினைவு செய்பவர்களாகவும் உள்ள குழந்தைகள் அதிகளவு களிப்படைபவர்களாக இருப்பார்கள்.
நீங்கள் இங்கே செவிமடுக்கின்ற அனைத்தும் புதியவை ஆகும்.
மக்கள் எதனையும் சற்றேனும் அறியாதவர்களாக இருக்கின்றனர். அவர்கள் தொடர்ந்தும் பொய்களைக் கூறியவாறு வாயில் தோறும் அலைந்து திரிகிறார்கள். நீங்கள் அலைந்து திரிவதிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளீர்கள். தந்தை கூறுகிறார்: ஆத்மாக்களாகிய நீங்கள் தந்தையாகிய என்னை நினைவு செய்ய வேண்டும்.
நீங்கள் பாபாவிடம் செல்ல வேண்டும் என்னும் எண்ணம் ஆத்மாக்களாகிய உங்கள் புத்தியில் இருக்கட்டும்.
உங்களுக்கு இவ்வுலகம் இல்லாததைப் போன்றுள்ளது.
இப்பழைய உலகம் முடிவடையவுள்ளது. பின்னர் நாங்கள் சுவர்க்கத்துக்குச் சென்று, புதிய மாளிகைகளைக் கட்டுவோம்.
இது உங்கள் புத்தியில் இரவுபகலாகத் தொடர்ந்தும் சுழல வேண்டும். தந்தை தன்னுடைய சொந்த அனுபவத்தைக் கூறுகிறார்.
நான் இரவில் உறங்கச் செல்லும்பொழுது, இந்த எண்ணங்களையே கொண்டுள்ளேன்: இந்த நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகிறது.
நான் இப்பழைய சரீரத்தைத் துறக்க வேண்டும். ஆம்,
பாவத்தின் அதிகச் சுமை உள்ளது.
இதனாலேயே நான் பாபாவைச் சதா நினைவு செய்ய வேண்டும். உங்களுடைய ஸ்திதியைக் கண்ணாடியில் பரிசோதியுங்கள்: எனது புத்தி அனைவரிடமிருந்தும் அகற்றப்பட்டு விட்டதா?
உங்கள் தொழில் முதலியவற்றைச் செய்யும்பொழுது, நீங்கள் உங்களுடைய புத்தியை இந்த வியாபாரத்துக்காகவும் பயன்படுத்தலாம். பாபாவுக்கு எத்தனையோ பல அக்கறைகள் உள்ளன. அவருக்கு ஏராளமான குழந்தைகள் உள்ளனர். அவர் அவர்களைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
அவர் குழந்தைகளுக்குத் தஞ்சம் அளிக்க வேண்டும். சந்தோஷமற்றவர்களாக இருக்கின்ற பலர் உள்ளனர். ஒரு குழப்பம் ஏற்படும் பொழுது, ஏராளமானோர் துன்பத்தை அனுபவித்து,
மரணிக்கிறார்கள். இக் காலம் மிகவும் தீயது. ஆதலால் குழந்தைகளுக்குத் தஞ்சம் அளிப்பதற்காக இக்கட்டடம் கட்டப்படுகிறது. இது இங்கே தங்கப் போகின்ற என்னுடைய குழந்தைகள் அனைவருக்குமானதாகும். இதில் எப்பயமும்;
இல்லை. அத்துடன் நீங்கள் யோக சக்தியையும் கொண்டுள்ளீர்கள். குழந்தைகள் காட்சிகளைப் பெற்றனர்;. தன்னை நன்றாக நினைவு செய்பவர்களைத் தந்தை பாதுகாக்கிறார். எதிரிகளுக்கு ஒரு பயங்கர ரூபத்தைக் காட்டி,
அவர்களை ஓடச் செய்கிறார். நீங்கள் சரீரத்தைக் கொண்டிருக்கும் வரையில், யோகத்தில் நிலைத்திருக்க வேண்டும்.
இல்லாவிட்டால், தண்டனை கிடைக்கும். ஒரு முக்கிய பிரமுகரின் குழந்தை தண்டிக்கப்படும் பொழுது, அவர் தலைகுனிய நேரிடுகிறது.
நீங்களும் தலைகுனிய நேரிடும். குழந்தைகளுக்குத் தண்டனை இன்னமும் கடுமையானதாக இருக்கும்.
இவ்வாறு கூறுகின்ற குழந்தைகளும் உள்ளனர்:
சரி, மாயை தருகின்ற சந்தோஷத்தை இந்நேரத்தில் பெறுவோம்.
நடப்பதைப் பின்னர் கண்டுகொள்வோம். இப்பழைய உலகின் சந்தோஷத்தைப் பலர் மிகவும் இனிமையானதாகக் காண்கிறார்கள். இங்கே நீங்கள் சந்தோஷத்தையும் துன்பத்தையும், மரியாதையையும், அவமரியாதையையும் சகித்துக் கொள்ள வேண்டும். மேன்மையான பேறுகளை அடைவதற்கு நீங்கள் தாயையும் தந்தையையும் பின்பற்ற வேண்டும். நீங்கள் தாயினுடையதும், தந்தையினுடையதும் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். உங்களுடைய சொந்தக் கட்டளைகள் என்றால் இராவணனி;;ன் கட்டளைகள் எனப் பொருள்படும்.
அவை உங்களுடைய பாக்கியத்தை இழக்கச் செய்கின்றவையாக மாத்திரமே இருக்கும். நீங்கள் தந்தையிடம் வினவினால்,
பாபா விரைவாக உங்களுக்குக் கூறுவார்:
அவை அசுர வழிகாட்டல்கள். அது ஸ்ரீமத் அல்ல.
உங்களுக்கு ஒவ்வொரு அடியிலும் ஸ்ரீமத் தேவை. நீங்கள் பிழையான செயல்களைச் செய்து, தந்தையை அவதூறு செய்யவில்லை என்பதைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் அத்தகைய தகுதிகளைக் கொண்டிருக்கும்பொழுது, தேவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் அங்கே செல்லும் பொழுது, இயல்பாகவே இத்தகுதிகளைக் கொண்டிருப்பீர்கள் என்பதல்ல. இங்கே உங்களுடைய நடத்தை மிகவும் இனிமையானதாக வேண்டும். சிவபாபா அன்றி, பிரம்மபாபா எதனையாவது கூறினாலும் இவரே (சிவபாபா)
பொறுப்பு ஆவார்.
ஏதாவது இழப்பு ஏற்பட்டாலும், அது பரவாயில்லை. அது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருந்தது, அதனால் உங்களைக் குற்றஞ்சாட்ட முடியாது. ஒரு மிகச்சிறந்த ஸ்திதி தேவைப்படுகிறது. நீங்கள் இங்கே அமர்ந்திருந்தாலும், நீங்கள் பிரமாந்தத்தின் அதிபதிகள் என்பதும்,
அந்த இடத்துவாசிகள் என்பதும் உங்கள் புத்தியில் இருக்கட்டும்.
வீட்டில் இருந்து,
இவ்விதமாகத் தொடர்ந்தும் உங்கள் கருமங்களைச்;
செய்யுங்கள். நீங்கள் தொடர்ந்தும் அப்பாற்பட்டவராக இருப்பீர்கள். சந்நியாசிகள் இல்லறத்துக்கு அப்பாற்பட்டவர்களாகச் செல்வதைப் போன்று, நீங்களும் பழைய உலகம் முழுவதற்கும் அப்பாற்பட்டவர்களாக இருக்கிறீர்கள்;. ஹத்தயோக துறவறத்துக்கும், இந்தத் துறவறத்துக்கும் இடையில் இரவுக்கும் பகலுக்குமான வேறுபாடு உள்ளது.
தந்தை இந்த இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். சந்நியாசிகளினால் அதனைக் கற்பிக்க முடியாது,
ஏனெனில் ஒரேயொருவரே முக்தியையும் ஜீவன்முக்தியையும் அருள்பவர். அனைவரும் இப்பொழுது முக்தியை அடையவுள்ளார்கள், ஏனெனில் நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். சாதுக்கள் திரும்பிச் செல்வதற்கு ஆன்மீக முயற்சியைச் செய்கிறார்கள். நீங்கள் இங்கே சந்தோஷமற்றவர்களாக இருக்கிறீர்கள். அப்பொழுது சிலர்; தாங்கள் ஒளியில் இரண்டறக் கலந்துவிட விரும்புவதாகக் கூறுகிறார்கள். எண்ணற்ற அபிப்பிராயங்கள் உள்ளன.
இன்னமும் தங்கள் உறவினர்களை நினைவு செய்கின்ற சில குழந்தைகள் உள்ளார்கள் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். நீங்கள் இவ்வுலகின் சந்தோஷத்தை விரும்பும்பொழுது, மரணிக்கிறீர்கள். அத்தருணத்தில் அவர்களுடைய பாதங்களால் இங்கே நிலைத்திருக்க முடியாது.
மாயை பல தூண்டுதல்களைக் கொடுக்கிறாள்.
ஒரு கூற்று உள்ளது: “கடவுளை நினைவு செய்யுங்கள்,
இல்லாவிட்டால், பருந்து வரும்”. மாயையும் உங்களை ஒரு பருந்தைப்;; போன்று தாக்குவாள். இப்பொழுது தந்தை வந்துள்ளதால் நீங்கள் முயற்சி செய்து, ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோர வேண்டும்.
இல்லாவிட்டால், நீங்கள் கல்பம் கல்பமாக அதனைப் பெறமாட்டீர்கள். இங்கே, நீங்கள் தந்தையிடமிருந்து எந்தத் துன்பத்தையும் பெறுவதில்லை.
ஆகவே, நீங்கள் பழைய துன்ப உலகை மறந்திட வேண்டும். நீங்கள் நாள் முழுவதற்குமான உங்கள் அட்டவணையைச் சோதிக்க வேண்டும்:
நான் எவ்வளவு நேரம்; தந்தையை நினைவு செய்தேன்?
நான் எவருக்கேனும் வாழ்க்கைத் தானம் செய்தேனா? தந்தை உங்களுக்கு வாழ்க்கைத் தானத்தையும் கொடுத்தார்,
இல்லையா? நீங்கள் சத்திய, திரேதாயுகங்களில் அமரத்துவமானவர்களாக இருக்கிறீர்கள். இங்கே ஒருவர் மரணிக்கும்பொழுது, மக்கள் அதிகளவுக்கு அழுது புலம்புகிறார்கள்! சுவர்க்கத்தில் துன்பம் என்ற வார்;த்தையே கிடையாது. தாங்கள் தங்களுடைய பழைய தோலை நீக்கி,
புதியதொன்றை எடுக்கிறார்கள் என அவர்கள் எண்ணுவார்கள். இந்த உதாரணம் உங்களுக்குப் பொருந்துகிறது. வேறு எவராலும் இந்த உதாரணத்தைக் கொடுக்க முடியாது. அவர்கள் தங்களுடைய பழைய தோலை மறப்பதில்லை.
அவர்கள் தொடர்ந்தும் பணத்தைச் சேமிக்கிறார்கள். இங்கே நீங்கள் தந்தைக்கு எதனைக் கொடுத்தாலும், அவர் அதனைப் தனக்கெனப் பயன்படுத்துவதோ அல்லது வைத்திருப்பதோ இல்லை.
அவர் அதன் மூலம் குழந்தைகளைப் பராமரிக்கிறார். ஆகவே,
இது சிவபாபாவின் உண்மையான பண்டாரா ஆகும். இந்த பண்டாராவிலிருந்து உண்பவர்கள்,
சந்தோஷமாக இருக்கிறார்கள், அவர்கள் பிறவிபிறவியாகச் சந்தோஷமாக இருக்கிறார்கள். உங்களுடைய இப்பிறவி விலைமதிப்பிட முடியாதது ஆகும். இங்கே,
நீங்கள் உங்களுடைய தேவ பிறவியிலும் பார்க்க சந்தோஷமாக இருக்கிறீர்கள், ஏனெனில் இங்கே, நீங்கள் தந்தையிடம் தஞ்சம் அடைந்துள்;ளீர்கள்.
இங்கே நீங்கள் அதிகளவு வருமானத்தைச் சம்பாதிக்கிறீர்கள், நீங்கள் அவ்வருமானத்தைப் பிறவிபிறவியாகப் பயன்படுத்துவீர்கள். சுதாமா இரு கைப்பிடி அவலுக்குப் பிரதிபலனாக
21 பிறவிகளுக்கு மாளிகையைப் பெற்றார். அவர் இங்கேயும், பரலோகத்திலும் பிறவிபிறவியாகச் சந்தோஷமாக இருந்தார். இதனாலேயே இப்பிறவி மிகவும் சிறந்ததாகும். விநாசம் விரைவில் இடம்பெற்றால்,
நாங்கள் சுவர்க்கத்துக்குச் செல்ல முடியும் எனச் சிலர் கூறுகிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள்; தந்தையிடமிருந்து இன்னமும் பல பொக்கிஷங்களைப் பெறவேண்டியுள்ளது. இராச்சியம் இன்னமும் உருவாக்கப்படவில்லை. ஆகவே எவ்வாறு விநாசத்தை விரைவில் இடம்பெறச் செய்ய முடியும்?
குழந்தைகளாகிய நீங்கள் இன்னமும் தகுதிவாய்ந்தவர்கள் ஆகவில்லை. தந்தை உங்களுக்குக் கற்பிப்பதற்கு இன்னமும் தொடர்ந்து வருகிறார். பாபாவின் சேவை எல்லைகளுக்கு அப்பாற்பட்டதாகும். தந்தையின் புகழும் எல்லையற்றதாகும். நான் எந்தளவுக்கு மேலானவராக இருக்கிறேனோ அந்தளவுக்கு நான் செய்யும் சேவையும் மேலானதாக இருக்கிறது.
இதனாலேயே எனது ஞாபகார்த்தம் உள்ளது.
பாபாவின் கதி
(ஆசனம்) அதிமேலானதாகும். நீங்கள் ஒவ்வொருவரும் செய்யும் முயற்சிகளுக்கேற்பவே, உங்கள் சொந்தப் பாக்கியத்தை உருவாக்குகிறீர்கள். அழிவற்ற ஞான இரத்தினங்களே இந்த வருமானம் ஆகும்.
இவை (ஞான இரத்தினங்கள்) அங்கே எல்லையற்ற செல்வம் ஆகுகின்றன. ஆகவே,
குழந்தைகளாகிய நீங்கள் மிகச்சிறந்த முயற்சியைச் செய்ய வேண்டும்.
தந்தையை இங்கேயும் அத்துடன் அங்கேயும் நினைவு செய்யுங்கள்.
இந்த ஏணி உள்ளது. உங்கள் இதயக் கண்ணாடியில் பாருங்கள்: நான் எந்தளவுக்குத் தந்தையின் தகுதிவாய்ந்த குழந்தையாக இருக்கிறேன்? நான் குருடர்களுக்குப் பாதையைக் காட்டுகிறேனா? உங்களுக்குள் நீங்களே பேசும் பொழுது, சந்தோஷத்தை அனுபவம் செய்கிறீர்கள். பாபா தனது சொந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்-
நான் உறங்கும்பொழுதும், பாபாவுடன் பேசுகிறேன்:
பாபா, இது உங்களுடைய அற்புதம்.
பின்;னர்,
பக்தி மார்க்கத்தில் நாங்கள் உங்களை மறந்து விடுவோம்.
நாங்கள் உங்களிடமிருந்து அத்தகையதோர் ஆஸ்தியைப் பெறுகிறோம், பின்னர் சத்தியயுகத்தில் நாங்கள் உங்களை மறந்து விடுவோம். அதன்பின்னர் பக்தி மார்க்கத்தில் நாங்கள் உங்களுக்கு ஞாபகார்த்தங்களைக் கட்டுவோம்.
எவ்வாறாயினும், அந்நேரத்தில்,
நாங்கள் உங்களுடைய பணியை முற்றிலும் மறந்து விடுகிறோம்.
அது நாங்கள் அறிவற்ற புத்துக்கள் ஆகுவதைப் போன்றுள்ளது.
இப்பொழுது தந்தை உங்களை ஞானம் நிறைந்தவர்களாக ஆக்கியுள்ளார். இரவுக்கும் பகலுக்குமான வித்தியாசம் உள்ளது.
கடவுளைச் சர்வவியாபி எனக்கூறுவது ஞானமல்ல.
உங்களுக்கு உலகச் சக்கரத்தின் ஞானம் தேவை. நாங்கள் இப்பொழுது 84 பிறவிகளின் சக்கரத்தைப் பூர்த்தி செய்து, வீடு திரும்புகிறோம், பின்னர் நாங்கள் ஜீவன்முக்திக்குள் செல்ல வேண்டும்.
நாங்கள் நாடகத்திலிருந்து வெளியேற முடியாது.
நாங்கள் ஜீவன்முக்திக்குள் செல்லும் பயணிகள்.
அச்சா.
இரவு வகுப்பு: 16/12/1968
பாபா சில குழந்தைகளைப் புதல்விகள் எனவும், சிலரைத் தாய்மார்கள் எனவும் அழைக்கிறார், எனவே நிச்சயமாக ஏதோ வேறுபாடு இருக்க வேண்டும். சிலருடைய சேவையில் நறுமணம் வீசுகின்ற அதேவேளையில் ஏனையோர் ‘அக்’;
மலரைப் போல் உள்ளனர். தந்தை விளங்கப்படுத்தியுள்ளார்: நீங்கள் என்னுடன் இருப்பதைப் போன்று உள்ளது.
தந்தை உலகைத் தூய்மையாக்குவதற்காக, மேலேயிருந்து வந்துள்ளார். இது உங்களுடைய பணியுமாகும்.
அங்கேயிருந்து வருபவர்கள் முதலில் தூய்மையாக இருக்கிறார்கள். வருகின்ற புதியவர்கள் நிச்சயமாகத் தங்களுடைய நறுமணத்தைக் கொடுப்பவர்களாக இருப்பார்கள்.
ஒரு பூந்தோட்டத்துடன் ஒப்பீடும் செய்யப்படுகின்றது. சேவை எத்தகையோ மலர்களின் நறுமணமும் அத்தகையதே ஆகும்.
மனச்சாட்சி கூறுகிறது:
சிவபாபாவின் குழந்தை என நீங்கள் அழைக்கப்பட்டவுடனேயே ஆஸ்திக்கான ஓர் உரிமையைக் கோருகிறீர்கள். ஆகவே,
அந்த நறுமணம் இருக்க வேண்டும்.
உங்களுக்கு ஓர் உரிமை இருப்பதாலேயே பாபா அனைவருக்கும் நமஸ்தே கூறுகிறார்.
நீங்கள் நிச்சயமாக உலகின் அதிபதிகள் ஆகுகிறீர்கள், ஆனால் நீங்கள் எவ்வாறு கற்கிறீர்கள் என்பதில் பெருமளவு வித்தியாசம் உள்ளது. இவற்றில் இரு வகைகள் உள்ளன. இவர் பாபா என்ற நம்பிக்கையைக் குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருப்பதுடன் சக்கரமும் உங்கள் புத்தியில் உள்ளது.
எனவே தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு இன்னும் என்ன கூற முடியும்? தந்தையைத் தவிர வேறு எவராலும் உங்களைச் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆக்க முடியாது.
நீங்கள் ஒரு சமிக்ஞையுடன் அவ்வாறு ஆகுகிறீர்கள். முன்னைய கல்பத்தில் இவ்வாறு ஆகியவர்கள் மீண்டும் இவ்வாறு ஆகுவார்கள்.
ஏராளமான குழந்தைகள் இங்கே வருகிறார்கள்.
தூய்மையின் காரணமாகப் பெருமளவு துன்புறுத்தல்கள் இடம்பெறுகின்றன. தந்தை யார் மூலமாகக் கீதையைப் பேசுகிறாரோ,
அவர் அதிகளவு அவதூறு செய்யப்படுகிறார். சிவபாபாவும் அதிகளவு அவதூறு செய்யப்படுகிறார். அவர் மீனிலும் முதலையிலும் அவதரிப்பதாகக் கூறுவதும், அவரை அவதூறு செய்வதாகும்,
இல்லையா? ஞானம் இல்லாததால், அவர்கள் உங்களைப் பெருமளவு குற்றஞ் சாட்டுகிறார்கள். குழந்தைகள் பெரும் பிரயத்தனம் செய்கிறார்கள். சிலர் கற்பதால்,
பெருஞ் செல்வந்தர்கள் ஆகுகின்றனர்; அவர்கள் பெருமளவு சம்பாதிக்கிறார்கள்; அவர்கள் இரண்டு முதல் நான்கு ஆயிரங்களை ஓர் அறுவைச்சிகிச்சையில் பெறுகிறார்கள், அதேவேளையில் ஏனையோரால் தங்கள் சொந்தக் குடும்பத்தைக் கூடப் பராமரிக்க இயலுவதில்லை.
இது கவலைப்பட வேண்டிய ஒரு விடயமாகும். சிலர் பிறவிபிறவியாக இராச்சிய உரிமையைப் பெறுகின்ற அதேவேளையில் ஏனையோர் பிறவிபிறவியாக ஏழைகளாக இருக்கின்றனர். தந்தை கூறுகிறார்: நான் உங்களை விவேகிகள் ஆக்குகிறேன். இப்பொழுது,
நீங்கள் அனைத்துக்கும், “நாடகம்!” எனக் கூறுவீர்கள்: இது ஒவ்வொருவரினதும் பாகம் ஆகும். கடந்த காலத்தில் நிகழ்ந்த அனைத்தும் நாடகமே ஆகும். நாடகத்திலுள்ளவை மாத்திரமே நிகழ்கின்றன.
நாடகத்துக்கேற்ப நிகழ்பவை அனைத்தும் சாலச் சிறந்ததேயாகும். நாங்கள் எவ்வளவுதான் விளங்கப்படுத்தினாலும் அவர்கள் புரிந்துகொள்வதில்லை. இதற்கு மிக நல்ல பண்புகள் தேவைப்படுகின்றன. ஒவ்வொருவரும் தங்களினுள் பரிசோதிக்க வேண்டும்:
என்னிடம் குறைபாடுகள் ஏதேனும் உள்ளனவா?
மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். மாயை எவ்வாறேனும் அகற்றப்பட வேண்டும், சகல குறைபாடுகளும் அகற்றப்பட வேண்டும். தந்தை கூறுகிறார்: பந்தனத்தில் இருப்பவர்களே என்னை அதிகமாக நினைவு செய்கிறார்கள். அவர்களே சிறந்த அந்தஸ்தைப் பெறுபவர்கள். அவர்கள் எவ்வளவுக்கு அடிக்கப்படுகிறார்களோ, அவ்வளவுக்கு நினைவில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களிடமிருந்து, “ஓ சிவபாபா!”
என்பது வெளிப்படுகிறது. அவர்கள் ஞானத்தால் சிவபாபாவை நினைவு செய்கிறார்கள். அவர்களுடைய அட்டவணைகளும் சிறந்து விளங்குகின்றன. அடிக்கப்பட்டு, இங்கே வருபவர்கள் சிறந்த சேவையையும் செய்கிறார்கள். அவர்கள் தங்களுடைய வாழ்க்கைகளைச் சிறந்ததாக மாற்றுவதற்கு,
மிகச்சிறப்பாகச் சேவை செய்கிறார்கள். அவர்கள் சேவை செய்யாவிட்டால், அவர்களுடைய மனச்சாட்சி உறுத்துகிறது. தாங்கள் சேவையில் செல்ல வேண்டும் என அவர்களுடைய இதயம் விரும்புகிறது. கண்காட்சிகளில் அதிகளவு சேவை உள்ளதால் தாங்கள் நிலையத்தை விட்டுச் சேவைக்குச் செல்ல வேண்டும் என அவர்கள் புரிந்துகொள்கிறார்கள். எனவே நீங்கள் உங்கள் நிலையத்தைப் பற்றி அக்கறைப்படாமல் சேவை செய்வதற்கு ஓடிச் செல்ல வேண்டும்.
நாங்கள் எவ்வளவுக்குத் தானம் செய்கிறோமோ அவ்வளவுக்கு எங்களைச் சக்தியால் நிரப்பிக் கொள்கிறோம். நீங்கள் நிச்சயமாகத் தானம் செய்ய வேண்டும்.
இவை அழியாத ஞான இரத்தினங்கள் ஆகும். அவற்றை வைத்திருப்பவர்கள், அவற்றைத் தானம் செய்வார்கள்.
முழு உலகினதும் ஆரம்பம், மத்தி,
இறுதியினுடைய ஞானத்தைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நினைவில் வைத்திருக்கக்கூடியதாக இருக்க வேண்டும். முழுச் சக்கரமும் உங்கள் புத்தியில் சுழல வேண்டும். இவ்வுலகின் ஆரம்பம், மத்தி,
இறுதியைத் தந்தையும் அறிவார். அவர் நிச்சயமாக ஞானக்கடல் ஆவார். இந்த ஞானம் உலகிற்கு முற்றிலும் புதியதாக இருப்பதுடன் அது ஒருபொழுதும் பழைமை அடைவதில்லை. இது அற்புதமான ஞானமாகும்.
இதைத் தந்தை மாத்திரமே எங்களுக்குக் கூறுகிறார். ஒருவர் எவ்வளவுதான் ஒரு சாதுவாக அல்லது மகாத்மாவாக இருந்தாலும்,
அவர்களால் இந்த ஏணியில் ஏற முடியாதுள்ளது. எந்த மனிதருமன்றி, தந்தையால் மாத்திரமே முக்தியை அல்லது ஜீவன்முக்தியை அருள முடியும்.
இதை மனிதர்களாலோ அல்லது தேவர்களாலோ கொடுக்க முடியாது.
இதை ஒரேயொரு தந்தையால் மாத்திரமே கொடுக்க முடியும்.
நாளுக்கு நாள்,
விரிவாக்கம் ஏற்பட வேண்டும். பாபா கூறியுள்ளார்: நடமாடும் கண்காட்சியில் நீங்கள் இலக்ஷ்மி நாராயணனினதும், ஏணியினதும் படங்களைத் திரான்ஸ் லைட் ரூபத்தில் கொண்டிருக்க வேண்டும். எப்பொழுதுமே அதனூடாக ஒளிவீசுகின்ற வகையில் மின் வேலைப்பாடு ஏதேனும் இருக்க வேண்டும்.
அத்துடன் தொடர்ந்தும் சுலோகங்களைப் பேசுங்கள்.
பரமாத்டமாவான பரமதந்தை மாத்திரமே பாக்கிய இரதத்தினூடாகக் கற்பிக்கின்றார். நீங்கள் அத்தகைய ஓசைகளை கேட்பீர்கள் அச்சா. இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு இரவு வணக்கம்.
இனிமையிலும் இனிமையான,
அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய்,
தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- இந்த நாடகம் இப்பொழுது முடிவுக்கு வருகிறது, எனவே இப்பழைய உலகிற்கு அப்பாற்பட்டவராக இருங்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், உங்கள் பாக்கியத்தை மேன்மையானதாக்குங்கள். ஒருபொழுதும் பிழையான செயல்களைச் செய்யாதீர்கள்.
- அழியாத ஞான இரத்தினங்கள் என்னும் வருமானத்தைச் சம்பாதித்து, மற்றவர்களையும் சம்பாதிப்பதற்குத் தூண்டுங்கள். ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருந்து, தகுதிவாய்ந்ததொரு குழந்தையாகி, மேலும் பலருக்குப் பாதையைக் காட்டுங்கள்.
ஆசீர்வாதம்:
உண்மையான சேவகராக
இருந்து, தடைகளை
அழித்து, துறவறமும்
தபஸ்யாவும் நிறைந்த
சூழலை உருவாக்குவீர்களாக.
தந்தையின் மிகப் பெரிய பட்டம்: உலக சேவையாளர். அவ்வாறாகவே குழந்தைகளும்
உலகப் பணியாளார்கள்,
அதாவது சேவையாளர்கள்
ஆவார்கள். ஒரு சேவையாளர் என்றால் ஒரு துறவியும் தபஸ்வியும் ஆவார். ஒருவர் துறவறத்தையும் தபஸ்யாவையும்
கொண்டிருக்கும் போது, பாக்கியம் அந்நபரின் முன்னிலையில,;
ஒரு பணியாளனைப் போல் முன்வந்து நிற்கும். சேவையாளர்கள் கொடுப்பவர்களே அன்றி, எடுப்பவர்கள் அல்ல, ஆகையால் அவர்கள் சதா தடைகளில் இருந்து விடுபட்டிருக்கிறார்கள். உங்களை ஒரு சேவையாளர் எனக் கருதி, துறவறமும் தபஸ்யாவும் நிறைந்த சூழலை உருவாக்குவதால்,
நீங்கள் சதா தடைகளை அழிப்பவராக இருப்பீர்கள்.
சுலோகம்:
எந்த ஒரு சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்கு, உங்கள் சொந்த ஸ்திதியின் சக்தியை பயன்படுத்துவதே வழியாகும்.
---ஓம் சாந்தி---
0 Comments