12-01-2023 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, ஆசிரியராகிய பாபா உங்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற்றுகின்ற கலையை உங்களுக்குக்
கற்பித்துள்ளார். ஆகவே, ஸ்ரீமத்தின் அடிப்படையில், ஏனையோருக்குச்
சேவை செய்யுங்கள்,
அதனால் அவர்களும் தேவர்களாக மாற முடியும்.
கேள்வி:
பக்தி மார்க்கத்துச்
சம்பிரதாயமாக ஆகுகின்ற எந்த மேன்மையான செயலைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது செய்கிறீர்கள்?
பதில்:
நீங்கள் பாரதத்துக்கு
நன்மை அளிப்பதற்காக
மாத்திரமன்றி, முழு உலகத்துக்கும் நன்மையளிப்பதற்காகவே ஸ்ரீமத்தின்
அடிப்படையில், உங்கள் மனம், சரீரம், செல்வத்தை, அர்ப்பணிக்கிறீர்கள். பக்தி மார்க்கத்தில் மனிதர்கள் கடவுளின் பெயரால் தானமளிக்கின்ற சம்பிரதாயத்தைக்
கொண்டிருக்கிறார்கள். அதன் பிரதிபலனாக, அவர்கள் தங்களுடைய அடுத்த பிறவியை ஓர் அரச குடும்பத்தில் எடுக்கிறார்கள்.
எவ்வாறாயினும், குழந்தைகளாகிய
நீங்கள் சங்கமயுகத்தில்
தந்தையின் உதவியாளர்கள்
ஆகுவதுடன், மனிதர்களிலிருந்து தேவர்களாகவும் மாறுகிறீர்கள்.
பாடல்: நீங்கள் இரவை உறங்குவதிலும்,
பகலை உண்பதிலும் கழித்தீர்கள்.
ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார், குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்ளும் பொழுது,
உங்களால் ஏனையோருக்கு விளங்கப்படுத்த இயலும்.
நீங்கள் புரிந்துகொள்ளாவிட்டால், உங்களால் ஏனையோருக்கு விளங்கப்படுத்த இயலாது. நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள், ஆனால் உங்களால் ஏனையோருக்கு விளங்கப்படுத்த இயலாதுள்ளது என நீங்கள் கூறினால், நீங்கள் முற்றிலுமே எதனையும் புரிந்துகொள்ளவில்லை என்பது அதன் அர்த்தமாகும்.
மக்கள் ஏதோவொரு கலையைக் கற்கும் பொழுது, அவர்களால் ஏனையோருக்கு அதனைக் கற்பிக்க இயலும்.
மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகின்ற இக்கலையை அதிபதியான தந்தை மாத்திரமே கற்பிக்கிறார். தேவர்களின் உருவங்கள் உள்ளன. கடவுள்,
மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகிறார். அவ்வாறாயின்,
அவர்கள் இந்நேரத்தில் இல்லை என்பதே அதன் அர்த்தமாகும்.
தேவர்கள் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள் எனப் புகழப்படுகிறார்கள். இங்கே எம்மனிதரும் அவ்வாறு புகழப்பட முடியாது.
மக்கள் ஆலயங்களுக்குச் சென்று, தேவர்களின் புகழைப் பாடுகிறார்கள். சந்நியாசிகள் தூய்மையாக இருந்தாலும், மக்கள் அமர்ந்திருந்து, அவ்விதமாக அவர்களின் புகழைப் பாடுவதில்லை. அந்தச் சந்நியாசிகள் போன்றோரும் சமயநூல்களை உரைக்கிறார்கள். தேவர்கள் அவ்விதமாக எதனையும் கூறுவதில்லை.
அவர்கள் வெகுமதியை அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் தங்களுடைய முன்னைய பிறவியில் முயற்சி செய்து,
மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறினார்கள். தேவர்களுக்கு இருக்கின்ற தெய்வீகக்குணங்கள் சந்நியாசிகளிடம் இருப்பதில்லை.
தெய்வீகக்குணங்கள் இல்லாதபொழுது,
நிச்சயமாகக் குறைபாடுகள் இருக்கும். சத்தியயுகத்தில், அதே பாரதத்தில்,
அரசர், அரசி,
பிரஜைகள் அனைவரும் தெய்வீகக்குணங்கள் நிறைந்தவர்களாக இருந்தார்கள். அவர்கள் தெய்வீகக் குணங்கள் அனைத்தையும் கொண்டிருந்தார்கள். அந்தத் தேவர்களின் தெய்வீகக் குணங்கள் புகழப்படுகின்றன. அந்நேரத்தில்,
வேறெந்தச் சமயமும் இருக்கவில்லை. சத்தியயுகத்தில் தெய்வீகக்குணங்களை உடைய தேவர்கள் இருந்தார்கள்.
ஆனால் கலியுகத்திலோ குறைபாடுகளையுடைய மனிதர்களே இருக்கிறார்கள். இப்பொழுது,
அத்தகைய குறைபாடுகளையுடைய மனிதர்களை யாரால் தேவர்களாக மாற்ற முடியும்? கடவுளுக்கு மனிதர்களைத் தேவர்களாக்குவதற்கு நீண்டகாலம் எடுக்கவில்லை என்பது நினைவுகூரப்படுகிறது. பரமாத்மாவாகிய பரமதந்தைக்கு மாத்திரமே இப்புகழ் கொடுக்கப்பட்டுள்ளது. தேவர்களும் மனிதர்களாக இருந்தாலும்,
அவர்கள் தெய்வீகக் குணங்களை உடையவர்கள்,
ஆனால் இங்கே உள்ள மனிதர்களோ குறைபாடுகள் உடையவர்கள்.
சற்குரு என அறியப்பட்ட, ஒரேயொரு தந்தையிடமிருந்தே தெய்வீகக் குணங்கள் பெறப்படுகின்றன. மாயையாகிய இராவணனிடமிருந்து குறைபாடுகள் பெறப்படுகின்றன. அவர்கள் அதிகளவு தெய்வீகக் குணங்களுடையவர்களாக இருந்து, பின்னர்,
எவ்வாறு குறைபாடுகளை வளர்த்துக் கொண்டார்கள்?
தெய்வீகக்குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள் எவ்வாறு குறைபாடுகள் அனைத்தும் நிறைந்தவர்கள் ஆகினார்கள்?
குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதனை அறிவீர்கள். மக்கள் பாடுகிறார்கள்: நாங்கள் தெய்வீகக் குணங்கள் அற்றவர்கள், எங்களிடம் தெய்வீகக் குணங்கள் கிடையாது. அவர்கள் தேவர்களின் புகழைப் பாடுகிறார்கள். இந்நேரத்தில்,
எவரிடமும் அத்தகைய குணங்கள் இல்லை.
அவர்களுடைய உணவு,
பானம் போன்றவை தூய்மையற்றவை. தேவர்கள் வைஷ்ணவ சமுதாயத்துக்கு (முற்றிலும் தூய்மையானவர்களும், சைவ போசனம் உண்பவர்களும்) உரியவர்கள்,
ஆனால் இந்நேரத்தில் மனிதர்கள் இராவண சமுதாயத்துக்கு உரியவர்கள்.
அவர்களுடைய உணவு,
பானம் போன்றவை அதிகளவு மாற்றமடைந்துள்ளன. அவர்கள் ஆடையணியும் விதம் மாத்திரமே கருதப்பட வேண்டும் என்பதில்லை. அவர்களுடைய உணவும், அவர்களுடைய அசுரத்தனமும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
தந்தையே கூறுகிறார்:
பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்களாகிய பிராமணர்களினூடாக ஸ்தாபனையை மேற்கொள்வதற்கே, நான் பாரதத்துக்கு வர வேண்டும்.
இது பிராமணர்களின் யாகம் (யக்யா)
ஆகும். அப்பிராமணக் குருமார்கள் பாவத்தினூடாகப் பிறக்கிறார்கள், ஆனால் நீங்களோ ஒரு வாய்வழித்தோன்றல். அதிகளவு வேறுபாடு உள்ளது.
செல்வந்தர்கள் யாகங்களை வளர்த்து, பிராமணக் குருமார்களை வரவழைக்கிறார்கள். இவர் செல்வந்தர்களுக்கெல்லாம் செல்வந்தரான,
அரசர்களுக்கெல்லாம் அரசரான,
எல்லையற்ற தந்தையாவார்.
அவர் செல்வந்தர்களுக்கெல்லாம் செல்வந்தர் என ஏன் அழைக்கப்படுகிறார்? ஏனெனில் கடவுளே தங்களுக்குச் செல்வத்தைக் கொடுத்தார் எனச் செல்வந்தர்களும்; கூறுகிறார்கள். அவர்கள் கடவுளின் பெயரால் தானம் செய்கிறார்கள், அதனால் தங்களுடைய அடுத்த பிறவியில் அவர்கள் செல்வந்தர்கள் ஆகுகிறார்கள். இந்நேரத்தில்,
நீங்கள் உங்களுடைய சரீரம், மனம்,
செல்வம் அனைத்தையும் சிவபாபாவுக்கு அர்ப்பணிக்கிறீர்கள். ஆகவே பின்னர் நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருகிறீர்கள். ஸ்ரீமத்தின் அடிப்படையில், நீங்கள் மேன்மையான செயல்களைச் செய்வதற்குக் கற்றுக் கொள்கிறீர்கள், ஆகவே நீங்கள் நிச்சயமாக அதன் பலனைப் பெற வேண்டும்.
நீங்கள் உங்கள் மனம், சரீரம்,
செல்வத்தை அர்ப்பணிக்கிறீர்கள். அம்மக்களும் கடவுளின் பெயரால் எவரினூடாகவும் கொடுக்கிறார்கள். பாரதத்தில் மாத்திரமே இச்சம்பிரதாயம் இருக்கிறது, ஆகவே தந்தை உங்களுக்கு மிகச்சிறந்த செயல்களைக் கற்பிக்கிறார். பாரதத்துக்கு மாத்திரமன்றி,; முழு உலகத்துக்கும் நன்மையளிப்பதற்காக நீங்கள் இச்செயலைச் செய்கிறீர்கள். பின்னர் நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதனால்,
அதன் பலனைப் பெறுகிறீர்கள். ஸ்ரீமத்தின் அடிப்படையில் நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்துக்கும் ஏற்ப,
அவற்றின் பலனைப் பெறுகிறீர்கள். ஸ்ரீமத்தின் அடிப்படையில் மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குச் சேவை செய்பவர்களையும், அவர்கள் எந்தளவுக்கு தங்கள் வாழ்க்கையை மாற்றமடையச் செய்துள்ளார்கள் எனவும் பாபா ஒரு பார்வையாளராக ஆகி, அவதானிக்கிறார். பிராமணர்களே ஸ்ரீமத்தைப் பின்பற்றுபவர்கள். தந்தை கூறுகிறார்: நான் பிராமணர்களாகிய உங்களினூடாக,
சூத்திரர்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். இது
5000 வருடங்களுக்குரிய கேள்வியாகும்.
பாரதத்திலேயே தேவர்களின் இராச்சியம் இருந்தது.
நீங்கள் மக்களுக்கு இப்படங்களைக் காட்ட வேண்டும். அவர்கள் படங்களைப் பார்க்கும் வரை, இது என்ன புதிய தர்மம் என அதிசயிப்பதுடன், ஒருவேளை நீங்கள் வெளிநாட்டிலிருந்து வந்திருக்கக்கூடும் எனவும் எண்ணுவார்கள். படங்களைக் காண்பிப்பதால், நீங்களும் தேவர்களை நம்புகிறீர்கள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். ஆகவே,
ஸ்ரீ நாராயணனின் இறுதிப்பிறவியாகிய, 84 வது பிறவியின் பொழுது,
பரமாத்மாவாகிய பரமதந்தை இவரில் பிரவேசித்து,
இராஜயோகத்தைக் கற்பிக்கிறார் என்பதை நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். இவ்விதமாக,
கிருஷ்ணரின் பெயர் மறைந்துவிடும். இதுவே அவருடைய 84 பிறவிகளின் இறுதிப்பிறவி ஆகும்.
சூரிய வம்சத்துத்துக்குரிய தேவர்கள், மீண்டும் ஒருமுறை வந்து,
இராஜயோகத்தைக் கற்க வேண்டும். நாடகத்துக்கேற்ப, அவர்கள் நிச்சயமாக முயற்சி செய்வார்கள்.
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது நேரடியாகச் செவிமடுக்கிறீர்கள். சில குழந்தைகள் ஒலிநாடாவிலும் செவிமடுக்கிறார்கள்; அந்நேரத்தில் தாய், தந்தையுடன் தாங்களும் மீண்டும் ஒருமுறை தேவர்களாக மாறுகிறோம் என்னும் உணர்வை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில் உங்கள் 84 வது பிறவியின் பொழுது,
நீங்கள் ஒரு முழுமையான யாசகனாக ஆகவேண்டும். ஆத்மா அனைத்தையும் தந்தையிடம் அர்ப்பணிக்கிறார். இச்சரீரம் அர்ப்பணிக்கப்பட்ட, ஒரு குதிரை போன்றதாகும்.
ஆத்மாவே கூறுகிறார்:
நான் வேறு எவருக்குமன்றி, தந்தைக்கே உரியவன். ஆத்மாவாகிய நான், பரமாத்மாவாகிய பரமதந்தையின் வழிகாட்டல்களுக்கேற்ப, இச்சரீரத்தினூடாகச் சேவை செய்கிறேன்.
தந்தை கூறுகிறார்:
யோகத்தைக் கற்பிப்பதுடன், எவ்வாறு உலகச் சக்கரம் சுழல்கிறது என்பதையும் விளங்கப்படுத்துங்கள். முழுச் சக்கரத்தையும் சுற்றி வந்தவர்களே இவ்விடயங்களை மிக விரைவாகப் புரிந்து கொள்வார்கள்.
முழுச் சக்கரத்தையும் சுற்றி வராதவர்கள் இங்கே நிலைத்திருக்க மாட்டார்கள். முழு உலகமும் வரும் என்றில்லை. பல பிரஜைகள் வருவார்கள்,
ஆனால் ஒரேயொரு அரசரும், அரசியும் மாத்திரமே இருப்பார்கள்.
ஒரு இலக்ஷ்மியும் நாராயணனும் மாத்திரமே இருப்பார்கள். ஒரு இராமரும் சீதையும் மாத்திரமே இருப்பார்கள்.
ஏனைய இளவரசர்களும் இளவரசிகளும் இருப்பார்கள்,
ஆனால் இவர்களே பிரதானமானவர்களாக இருப்பார்கள்.
ஆகவே, அத்தகைய அரசர்களும் அரசிகளும் ஆகுவதற்கு, நீங்கள் பெருமளவு முயற்சியைச் செய்ய வேண்டும்.
ஒரு பார்வையாளர் ஆகும் பொழுது,
ஒருவர் ஒரு செல்வந்தக் குடும்பத்திற்கு உரியவரா அல்லது ஓர் அரச குடும்பத்துக்கு உரியவரா அல்லது ஓர் ஏழைக் குடும்பத்துக்கு உரியவரா என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். சிலர் மாயையினால் தோற்கடிக்கப்பட்டு, ஓடி விடுகிறார்கள். மாயை அவர்களைப் பச்சையாகவே விழுங்கி விடுகிறாள். இதனாலேயே பாபா தொடர்ந்தும் வினவுகிறார்: நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா? நீங்கள் திருப்தியாக இருக்கிறீர்களா? நீங்கள் மாயையினால் அறையப்பட்டு,
உணர்வற்றவர்களாகவோ அல்லது நோய்வாய்;ப்பட்டவராகவோ ஆகவில்லை, இல்லையா?
குழந்தைகளே, எவரேனும் நோய்வாய்ப்படும் பொழுது,
சென்று, அவருக்கு ஞானமும் யோகமும் என்னும் சஞ்சீவி மூலிகையைக் கொடுத்து,
அவர்களை உயிர்ப்பியுங்கள். ஆத்மாக்களுக்கு ஞானமும் யோகமும் இல்லாத பொழுது, மாயை அனைத்தையும் அழித்து விடுகிறாள். அவர்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதை நிறுத்தி, தங்கள் சொந்த மனதின் கட்டளைகளைப் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள். மாயை அவர்களை முற்றிலும் உணர்வற்றவர்கள் ஆக்குகிறாள்.
உண்மையில், ஞானமே சஞ்சீவி மூலிகையாகும்.
இது மாயையின் உணர்வற்ற நிலையை அகற்றுகிறது. இவ்விடயங்கள் அனைத்தும் இந்நேரத்துக்கே பொருந்துகின்றன. நீங்களே சீதைகள். சிந்தி மக்கள் விடுவிக்கப்பட்டதைப் போன்று, இராமர் வந்து, உங்களை இராவணனின் சிறையிலிருந்து விடுவிக்கிறார். பின்னர் இராவணனின் மக்கள் அவர்களை மீண்டும் கடத்திச் செல்கிறார்கள். நீங்கள் இப்பொழுது அனைவரையும் மாயையின் பிடியிலிருந்து விடுவிக்க வேண்டும். தந்தை கருணை உடையவர்.
மாயை ஓர் ஆத்மாவை அறைந்து,
புத்தியை முற்றாகவே மறு திசைக்குத் திருப்புகிறாள் என்பது காணப்படுகிறது. அவள் இராமரிடமிருந்து புத்தியை அப்பால் திருப்பி,
அதனை இராவணனை நோக்கித் திருப்புகிறாள். இராவணன் ஒருபுறமும்,
இராமர் மறுபக்கமும் உள்ள ஒரு பொம்மை உள்ளது.
இந்த ஆத்மாக்கள் வியப்படைந்து, தந்தைக்குரியவர்களாகி, பின்னர் மீண்டும் இராவணனுக்கு உரியவர்களாக ஆகுகிறார்கள் என அறியப்படுகிறது. மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள்.
அவள் ஓர் எலியைப் போன்று உங்களைக் கடித்து,
உங்கள் வருமானம் அனைத்தையும் அழிக்கிறாள்.
இதனாலேயே நீங்கள் ஒருபொழுதும் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதை நிறுத்தக்கூடாது. ஏற்றம் மிகவும் செங்குத்தானது. உங்கள் சொந்தக் கட்டளைகளைப் பின்பற்றுவது என்றால்,
இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றுவதாகும். நீங்கள் அவற்றைப் பின்பற்றும் பொழுது, அதிகளவு மூச்சுத் திணறுவீPர்கள், இது அவதூறை ஏற்படுத்துகிறது. அனைத்து நிலையங்களிலும் தங்களுக்குத் தீங்கை ஏற்படுத்துகின்ற அத்தகைய ஆத்மாக்கள் இருக்கிறார்கள். சேவை செய்பவர்களாலும், ரூப்பும் பசான்ட்டுமாக
(ஞானத்தைப் பொழிகின்ற யோக சொரூபம்)
இருப்பவர்களாலும் மறைந்திருக்க முடியாது. தெய்வீக இராச்சியம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகிறது, அதில் அனைவரும் நிச்சயமாகத் தங்கள் தனிப்பட்ட பாகங்களை நடிப்பார்கள்.
நீங்கள் முன்னேறிச் செல்லும் பொழுது,
உங்களுக்கு நன்மை செய்கிறீர்கள். ஒருவருக்கு நன்மை அளிப்பதென்றால், சுவர்க்கத்தின் அதிபதி ஆகுவதாகும். தாயும் தந்தையும் சிம்மாசனத்தில் அமர்வதைப் போன்று,
குழந்தைகளாகிய நீங்களும் அவ்வாறு ஆகவேண்டும்.
தந்தையைப் பின்பற்றுங்கள், இல்லாவிட்டால் உங்கள் அந்தஸ்து குறைக்கப்படும். பாபா இப்படங்களைக் களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதற்காக உருவாக்கி வைத்திருக்கவில்லை. நீங்கள் அவர்களுடன் பெருமளவு சேவையைச் செய்ய வேண்டும்.
பல செல்வந்தர்கள் இலக்ஷ்மி நாராயணனுக்கு ஆலயங்களைக் கட்டுகிறார்கள், ஆனால் அவர்கள் எப்பொழுது வந்தார்கள் என்பதையோ அல்லது அவர்கள் எவ்வாறு பாரதத்தைச் சந்தோஷமானதாக்கினார்கள் என்பதையோ,
எதற்காக அனைவரும் அவர்களை நினைவு செய்கிறார்கள் என்பதையோ அவர்களில் எவரும் அறியார்கள். தில்வாலா ஆலயம் (உங்கள் இதயங்களை வெற்றி கொள்பவர்;) இருக்க வேண்டும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இந்த ஓர் ஆலயம் போதுமானது.
இலக்ஷ்மி நாராயணன் ஆலயத்தினூடாக என்ன நிகழும்? அவர்கள் உபகாரிகள் அல்ல.
மக்கள் சிவனுக்கு ஆலயங்களைக் கட்டும் பொழுதும், அர்த்தமின்றியே கட்டுகிறார்கள். எவருமே அவருடைய தொழிலை அறியார். ஒருவருடைய தொழிலை அறியாது அவருக்கு ஓர் ஆலயத்தை நீங்கள் கட்டினால், என்ன கூறப்படும்? தேவர்கள் சுவர்க்கத்தில் இருக்கும்பொழுது, அங்கே ஆலயங்கள் கிடையாது. ஆலயங்களைக் கட்டுபவர்களிடம் நீங்கள் வினவ வேண்டும்:
இலக்ஷ்மியும் நாராயணனும் எப்பொழுது வந்தார்கள்?
அவர்கள் உங்களுக்கு என்ன சந்தோஷத்தைக் கொடுத்தார்கள்? அவர்களால் எதனையும் விளங்கப்படுத்த இயலாதிருக்கும். இதனால்,
தெய்வீகக் குணங்கள் அற்றவர்கள், தெய்வீகக் குணங்களை உடையவர்களுக்கு ஆலயங்களைக் கட்டுகிறார்கள் என்பதையே நிரூபிக்கிறது. ஆகவே, குழந்தைகளாகிய உங்களுக்குச் சேவை செய்வதில் பெருமளவு ஆர்வம் இருக்க வேண்டும். பாபா சேவையில் பெருமளவு ஆர்வத்தைக் கொண்டிருக்கிறார், இதனாலேயே அவர் அத்தகைய படங்களை உருவாக்குகிறார். சிவபாபாவே இப்படங்களை உருவாக்கியிருந்தாலும், இருவரின் புத்திகளும் வேலை செய்கின்றன. அச்சா.
இரவு வகுப்பு: 28/06/1968
நீங்கள் ஆத்மாக்கள் என்பதையும், தந்தை இங்கமர்ந்திருக்கிறார் என்பதையும் இங்கே அமர்ந்திருக்கும் நீங்கள் அனைவரும் புரிந்துகொள்கிறீர்கள். இது ஆத்ம உணர்வில் அமர்ந்திருப்பது என்பதாகும்.
நாங்கள் ஆத்மாக்கள்,
நாங்கள் பாபாவின் முன்னிலையில் அமர்ந்திருக்கிறோம் என்னும் விழிப்புணர்வில் அனைவருமே அமர்ந்திருப்பதில்லை. பாபா இப்பொழுது உங்களுக்கு நினைவூட்டுகிறார், ஆகவே நீங்கள் அந்த விழிப்புணர்வில் இருந்து, கவனம் செலுத்துவீர்கள். வெளியே அலைந்து திரிகின்ற புத்தியையுடைய பலர் இருக்கிறார்கள். அது இங்கே அமர்ந்திருக்கும் பொழுது, அவர்களின் செவிகள் மூடியுள்ளதைப் போன்றுள்ளது. அவர்களின் புத்தி வெளியே,
எங்கேயோ ஓரிடத்தில் அலைந்து திரிகிறது.
தந்தையின் நினைவில் அமர்ந்திருக்கின்ற குழந்தைகள்,
ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கிறார்கள். பலரின் புத்தியின் யோகம் வெளியே இருக்கிறது.
அது அவர்கள் யாத்திரையில் இல்லாததைப் போன்று உள்ளது.
நேரம் வீணாக்கப்படுகிறது. நீங்கள் தந்தையைப்
(பிரம்மா) பார்க்கும் பொழுது, பாபாவை நினைவு செய்கிறீர்கள். நிச்சயமாக, அது உங்கள் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமானதாகும். சிலர் ஓர் உறுதியான பழக்கத்தை விருத்தி செய்து கொள்கிறார்கள்: நான் ஓர் ஆத்மா, ஒரு சரீரமல்ல. தந்தை ஞானம்-நிறைந்தவர்,
ஆதலால் குழந்தைகளாகிய நீங்களும் அந்த ஞானத்தை விருத்தி செய்கிறீர்கள். நாங்கள் இப்பொழுது வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். சக்கரம் முடிவுக்கு வருகிறது,
நாங்கள் இப்பொழுது முயற்சி செய்ய வேண்டும். பெருமளவு நேரம் கடந்து விட்டது, சொற்ப நேரம் மாத்திரமே எஞ்சியுள்ளது. பலர் தங்கள் பரீட்சை நாட்களில் அதிகளவு கற்கிறார்கள். இல்லாவிட்டால் தாம் சித்தியடையமாட்டோம் என்றும் ஒரு குறைந்த அந்தஸ்தையே பெறுவோம் எனவும் அவர்கள் உணர்கிறார்கள். குழந்தைகளே, தொடர்ந்தும் முயற்சி செய்யுங்கள்.
சரீர உணர்வின் காரணமாக, பாவச்செயல்கள் செய்யப்படுகின்றன. இது நூறுமடங்கு தண்டனையை ஏற்படுத்தும், ஏனெனில் நீங்கள் என்னை அவதூறு செய்கிறீர்கள். நீங்கள் தந்தையின் பெயரை அவதூறு செய்யக்கூடிய எச்செயல்களையும் செய்யக்கூடாது, இதனாலேயே பாடப்பட்டுள்ளது: சற்குருவை அவதூறு செய்பவர்களால் சற்கதியைப் பெற முடியாது. சற்கதி என்றால் ஆட்சியுரிமை ஆகும். தந்தையே உங்களுக்குக் கற்பிப்பவர்.
ஏனைய ஆன்மீக ஒன்றுகூடல்களில் எந்த இலக்கோ அல்லது இலட்சியமோ இருப்பதில்லை.
இது எங்களுடைய இராஜயோகம் ஆகும்.
எங்களுக்குத் தாங்கள் இராஜயோகம் கற்பிக்கிறார்கள் என வேறு எவராலும் கூற முடியாது. அமைதியில் சந்தோஷம் இருக்கிறது என அவர்கள் உணர்கிறார்கள். அங்கே துன்பம் அல்லது சந்தோஷம் என்னும் கேள்வியே கிடையாது.
அங்கே அமைதி,
அமைதி மாத்திரமே உள்ளது. அவருடைய பாக்கியத்தில் குறைந்தளவே உள்ளது என்பது பின்னர் புரிந்துகொள்ளப்படுகிறது. அதியுயர்ந்த பாக்கியமானது, ஆரம்பத்திலிருந்து தங்கள் பாகங்களை நடிப்பவர்களுடையதாகும். அங்கே அவர்களுக்கு இந்த ஞானம் இருப்பதில்லை.
அங்கே எந்த எண்;ணங்களும் இருக்க மாட்டாது.
நீங்கள் அனைவரும் அவதரிக்கிறீர்கள் என்பதையும்,
நீங்கள் வேறுபட்ட பெயர்களையும் ரூபங்களையும் ஏற்றுக் கொள்கிறீர்கள் என்பதையும் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள்.
இதுவே நாடகமாகும்.
ஆத்மாக்களாகிய நாங்கள் சரீரங்களை ஏற்று,
அவற்றினூடாக எங்கள் பாகங்களை நடிக்கிறோம்.
தந்தை அமர்ந்திருந்து, இந்த இரகசியங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளாகிய நீங்கள் உள்ளுர அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்கிறீர்கள். உங்களுக்கு உள்ளார்ந்த சந்தோஷம் இருக்கிறது.
இவர் ஆத்ம உணர்வுடையவர் எனக் கூறப்படும். நீங்கள் மாணவர்கள் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். நீங்கள் சுவர்க்க அதிபதிகளாகிய தேவர்களாகப் போகின்றீர்கள், வெறும் தேவர்களாக மாத்திரமன்றி, உலக அதிபதிகளாகவும் ஆகப் போகின்றீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நீங்கள் உங்கள் கர்மாதீத ஸ்திதியை அடையும்பொழுது, இந்த ஸ்திதி நிரந்தரமாக இருக்கும். நாடகத் திட்டத்துக்கேற்ப, அது நிச்சயமாக நடைபெறும்.
நீங்கள் இறை குடும்பத்தில் இருக்கிறீர்கள் என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் நிச்சயமாகச் சுவர்க்க ஆட்சியுரிமையைப் பெற போகின்றீர்கள். பெருமளவு சேவை செய்து,
பலருக்கும் நன்மையை ஏற்படுத்துபவர்கள் நிச்சயமாக ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவார்கள்.
உங்களால் இங்கே யோகத்தில் அமர்ந்திருக்க முடியும் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். அதைப் போன்று வெளியே இருக்கும் நிலையங்களில் அவ்வாறிருப்பது சாத்தியமல்ல.
அதிகாலை 4.00 மணிக்கு வந்து,
பின்னர் தியானத்தில் அமர்ந்திருப்பது, அங்கே எவ்வாறு சாத்தியமாக இருக்க முடியும்?
இல்லை. நிலையங்களில் இருப்பவர்களால் தியானத்தில் அமர்ந்திருக்க முடியும்.
நீங்கள் இதனைத் தவறுதலாகவேனும் வெளியே உள்ள மக்களுக்குக் கூறக்கூடாது. இது அதற்கான காலமல்ல.
நீங்கள் இங்கே நன்றாக இருக்கிறீர்கள். நீங்கள் வீட்டில் அமர்ந்திருக்கிறீர்கள். அங்கே,
நீங்கள் வெளியிலிருந்து வர வேண்டும்.
இது இங்கேயிருப்பவர்களுக்கு மாத்திரமே ஆகும். நீங்கள் உங்கள் புத்தியில் இந்த ஞானத்தைக் கிரகிக்க வேண்டும்.
நாங்கள் ஆத்மாக்கள்.
இது அவருடைய அமரத்துவ சிம்மாசனம்.
நீங்கள் இப்பழக்கத்தை விருத்தி செய்ய வேண்டும். நாங்கள் சகோதரர்கள்: நாங்கள் எங்கள் சகோதரர்களுடன் பேசுகிறோம். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள்,
உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அச்சா.
இனிமையிலும் இனிமையான,
அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தை இரவு வணக்கத்தையும், அன்பையும், நினைவையும்,
நமஸ்தேயையும் சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- ஞானமும் யோகமும் என்னும் உயிர் கொடுக்கும் (சஞ்சீவி) மூலிகையின் மூலம் மாயையின், உணர்வற்ற நிலையிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் சொந்த மனதின் கட்டளைகளைப் பின்பற்றாதீர்கள்.
- ரூப்பும் பசான்ட்டும் ஆகி, சேவை செய்யுங்கள். தாயையும் தந்தையையும் பின்பற்றி, சிம்மாசனத்தில் அமர்வதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
உங்களுடைய சக்திமிக்க
ஸ்திதியினால், தான
தர்மம் செய்வதன்
மூலம் பூஜிக்கத்தகுதியானவராகவும்,
போற்றத்தக்கவராகவும் ஆகுவீர்களாக.
இறுதி கணத்தில், பலவீனமான ஆத்மாக்கள், சம்பூர்ணமான
ஆத்மாக்களான உங்கள் ஊடாக பேறுகளின் சிறிதளவு அனுபவத்தைப் பெற்றாலுமே, அவர்கள் அந்த இறுதி அனுபவத்தின்
சம்ஸ்காரங்களை தம்முடன் எடுத்துச் சென்று, அரைக்கல்பத்திற்கு தமது வீட்டில் ஓய்வெடுப்பார்கள். அதன் பின்னர் துவாபரயுகத்தில் அவர்கள் உங்கள் பக்தர்கள் ஆகி உங்களை வழிபட்டு, போற்றுவார்கள். ஆகையால், அத்தகைய பலவீனமான ஆத்மாகளுக்கு
மகா அருள்பவர்களாகவும் ஆசீர்வாதங்களை அருள்பவர்களாகவும் ஆகி, அவர்களுக்கு
அனுபவத்தை தான தர்மமாக வழங்குங்கள். இவ்வாறாக சக்திமிக்க ஸ்திதியில் வழங்கப்படுகின்ற
இந்த ஒரு விநாடிக்கான தானமும் தர்மமும், உங்களை அரைக்கல்பத்திற்கு வழிபாட்டிற்கு
தகுதியானவர்களாகவும் போற்றத்தகுதியானவர்களாகவும் ஆக்குகின்றது.
சுலோகம்:
பாதகமான சூழ்நிலையின்
போது, பயப்படுவதற்குப்
பதிலாக பற்றற்ற பார்வையாளர் ஆகினால் நீங்கள் வெற்றியாளர் ஆகுவீர்கள்.
---ஓம் சாந்தி---
0 Comments