Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 11.01.23

 

11-01-2023  காலைமுரளி  ஓம்சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



சாராம்சம்:

இனிய குழந்தைகளே, உங்கள் புத்தியின் யோகத்தைத் தொடர்ந்தும் தந்தையுடன் இணைத்திருந்தால், நீங்கள் நீண்ட பயணத்தை இலகுவாகப் பூர்த்தி செய்வீர்கள்.

கேள்வி:

உங்களைத் தந்தையிடம் அர்ப்பணிப்பதற்கு, எந்தவொரு விடயத்தை நீங்கள் துறக்க வேண்டும்?

பதில்:

சரீர உணர்வை ஆகும். நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகியவுடன், மரணித்து, கலப்படமானவர்கள் ஆகுகின்றீர்கள். இதனாலேயே பாபாவிடம் தம்மை அர்ப்பணிக்கின்ற எண்ணத்தினால் சில குழந்தைகளின் இதயங்கள் சுருங்குகின்றன. நீங்கள் பாபாவிடம் உங்களை அர்ப்பணித்திருப்பதால், அந்த ஒரேயொருவரின் நினைவு மாத்திரமே இருக்க வேண்டும். உங்களை அவரிடம் நீங்கள் அர்ப்பணித்து, அவரின் ஸ்ரீமத்தை மாத்திரமே பின்பற்ற வேண்டும்.

பாடல்:  இரவுப் பயணியே, களைப்படையாதீர்;! விடியலின் இலக்கு தொலைவில் இல்லை.

ஓம் சாந்தி. கடவுள் பேசுகின்றார். கடவுள் தனது குழந்தைகளுக்கு இராஜயோகத்தையும், ஞானத்தையும் கற்பிக்கின்றார். அவர் ஒரு மனிதரல்ல. கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் பேசுகின்றார் என்று கீதையில் எழுதப்பட்டுள்ளது. இப்பொழுது, முழு உலகையும் மாயையிடமிருந்து விடுவிப்பது கிருஷ்ணருக்குச் சாத்தியமில்லை. தந்தையால் மாத்திரமே வந்து, குழந்தைகளுக்கு விளங்கப்படுத்த முடியும். தந்தையைத் தமக்குரியவராக ஆக்கிக் கொண்டிருப்பவர்களே தந்தையுடன் நேருக்கு நேர் அமர்ந்திருக்கின்றார்கள். கிருஷ்ணரைத் தந்தை என அழைக்க முடியாது. தந்தை பரந்தாமத்தில் வசிப்பவரான, பரமாத்மா என்று அழைக்கப்படுகின்றார். ஆத்மா இச்சரீரத்தின் மூலம் கடவுளை நினைவுசெய்கின்றார். தந்தை இங்கமர்ந்திருந்து, விளங்கப்படுத்துகின்றார்: நான் பரந்தாமத்தில் வசிப்பவரான, உங்கள் தந்தை. நானே ஆத்மாக்கள் அனைவரதும் தந்தை ஆவேன். உங்கள் பரமதந்தையான என்னுடன் எவ்வாறு உங்கள் புத்தியின் யோகத்தை இணைப்பது என்று நான் ஒரு கல்பத்தின் முன்னரும் வந்து, குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பித்தேன். அவர் ஆத்மாக்களுடன் உரையாடுகின்றார். ஓர் ஆத்மா சரீரம் ஒன்றில் பிரவேசிக்கும் வரையில், அவரால் கண்களால் பார்க்கவோ அல்லது காதுகளினால் கேட்கவோ முடியாது. ஓர் ஆத்மா இல்லாத சரீரம் உயிரற்றதாகும்; ஒவ்வோர் ஆத்மாவும் உயிருள்ளவர். கருப்பையில் ஒரு குழந்தை உள்ளபொழுது, ஓர் ஆத்மா அதில் பிரவேசிக்கும் வரை, அதனால்; அசைய முடியாது. ஆகவே, தந்தை அத்தகைய உயிருள்ள ஆத்மாக்களுடனேயே பேசுகின்றார். அவர் கூறுகின்றார்: நான் இச்சரீரத்தைக் கடனாகப் பெற்றுள்ளேன். நான் வந்து, ஆத்மாக்கள் அனைவரையும் திரும்பவும் அழைத்துச் செல்கின்றேன். என் முன்னால் உள்ள ஆத்மாக்களுக்கு நான் இராஜயோகம் கற்பிக்கின்றேன். முழு உலகமும் இராஜயோகத்தைக் கற்க மாட்டாது; முன்னைய கல்பத்தைச் சேர்ந்தவர்களே இராஜயோகம் கற்கின்றார்கள். பாபா இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: இறுதி வரையில் உங்கள் புத்தியின் யோகத்தைத் தந்தையுடன் தொடர்ந்தும் இணைத்திடுங்கள்; இதனை நிறுத்தாதீர்கள். ஒரு கணவனும் மனைவியும் திருமணம் செய்யும் முன்னர் ஒருவரையொருவர் அறிய மாட்டார்கள். எவ்வாறாயினும், தங்கள் நிச்சயதார்த்தத்தின் பின்னர், சிலர் 60 அல்லது 70 வயது வரை சேர்ந்து வாழ்கின்றார்கள், அவர்களுடைய வாழ்க்கை முழுவதும் அவர்கள் ஒருவர் மற்றவரின் சரீரத்தையே நினைவுசெய்கின்றார்கள். ‘இவர் எனது கணவன்என மனைவி கூறலாம், ‘இவர் எனது மனைவிஎன்று கணவர் கூறுவார். நீங்கள் இப்பொழுது அசரீரியானவருடன் நிச்சயதார்த்தம் செய்துள்ளீர்கள். அசரீரியான தந்தையே வந்து, இந்த நிச்சயதார்த்தத்தை ஏற்பாடு செய்கின்றார். அவர் கூறுகின்றார்: முன்னைய கல்பத்தைப் போன்றே, நான் குழந்தைகளாகிய உங்களை என்னுடன் நிச்சயதார்த்தம் செய்கின்றேன். அசரீரியான நான் மனித உலக விருட்சத்தின் விதையாவேன். தந்தையான கடவுளே இம் மனித உலகைப் படைத்தார் என அனைவரும் கூறுகின்றார்கள். உங்கள் தந்தை எப்பொழுதும் பரந்தாமத்திலேயே வசிக்கின்றார். அவர் இப்பொழுது கூறுகின்றார்: என்னை நினைவுசெய்யுங்கள். இப் பயணம் மிகவும் நீண்டதென்பதால், பல குழந்தைகள் களைப்படைந்து, யோகத்தில் தமது புத்தியை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள முடியாதுள்ளனர். மாயை அவர்களைத் தடுமாறச் செய்வதால், அவர்கள் களைப்படைகின்றார்கள். சிலர் பாபாவின் கரங்களை விட்டுச் சென்று, மரணிக்கின்றார்கள். ஒரு கல்பத்தின் முன்னரும் அதேவிடயமே நடைபெற்றது. இங்கே, நீங்கள் வாழும்வரை, தொடர்ந்தும் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். ஓர் ஆண் மரணிக்கும்பொழுது, அவரின் விதவை மனைவி அவரையே நினைவுசெய்து கொண்டிருக்கின்றார். இந்தத் தந்தையும், கணவருமானவர் அவ்வாறு உங்களைக் கைவிட மாட்டார். அவர் கூறுகின்றார்: நான் மணவாட்டிகளாகிய உங்களைத் திரும்பவும் என்னுடன் அழைத்துச் செல்வேன். எனினும், இதற்குக் காலம் எடுக்கின்றது, எனவே களைப்படையாதீர்கள். உங்கள் தலை மீது பெரும் பாவச் சுமை உள்ளது, அது யோகத்தின் மூலமாக மாத்திரமே அகற்றப்படும். இறுதியில் வேறு எவரையும் அன்றி, மணவாளனான தந்தையை மாத்திரமே நீங்கள் நினைவுசெய்யும் வகையில் உங்கள் யோகம் இருக்க வேண்டும். நீங்கள் வேறு எவரையும் நினைவுசெய்தால், கலப்படமானவராகி, அப்பாவத்திற்கான தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். இந்தத் தந்தை கூறுகின்றார்: பரந்தாமத்திற்கான பயணிகளே, களைப்படையாதீர்கள். நான் பிரம்மாவினூடாக ஆதிசனாதன தேவதேவியர் தர்மத்தை ஸ்தாபிக்கின்றேன் என்பதையும், சங்கரரின் ஊடாகச் சகல சமயங்களினதும் விநாசத்தைத்; தூண்டுகின்றேன் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். இப்பொழுது அவர்கள் சமயங்கள் அனைத்தையும் ஒன்றிணைப்பதற்காகத் தொடர்ந்தும் மாநாடுகளை நடாத்துகின்றார்கள்; ஒன்றாகி, அமைதியாக ஒற்றுமையோடு வாழ்வதற்காக அவர்கள் வழிகளைக் காண முயற்சிக்கின்றார்கள். பல சமயங்களும் ஒரே வழிகாட்டலைக் கொண்டிருப்பது சாத்தியமில்லை. ஒரே வழிகாட்டலின் மூலமே ஒரேயொரு தர்மம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அனைத்துச் சமயங்களும் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்களும்;, முற்றிலும் விகாரமற்றவர்களும் ஆகுமாயின், அவர்களால் பாலும் தேனும் போல ஒன்றிணைந்து வாழ முடியும். இராம இராச்சியத்தில், அவர்கள் அனைவருமே பாலும் தேனும் போல் உள்ளார்கள். மிருகங்களும் சண்டையிடுவதில்லை. இங்கே, ஒவ்வொரு வீட்டிலுமே சண்டை உள்ளது. அவர்கள் பிரபுவிற்கும் அதிபதியுமானவருக்கு உரியவர்களாக இருக்காதபொழுது, சண்டையிடுகின்றார்கள். அவர்கள் தமது தாயும் தந்தையுமானவரை அறியாதுள்ளார்கள். மேலும் அவர்கள் பாடுகின்றார்கள்: நீங்களே தாயும் தந்தையும், நாங்கள் உங்கள் குழந்தைகள். உங்கள் கருணையினால், நாங்கள் சந்தோஷப் பொக்கிஷங்களைப் பெறுகின்றோம். இப்பொழுது சந்தோஷப் பொக்கிஷங்கள் இல்லாதிருப்பதால், அவர்கள் கூறுகின்றார்கள்: தாயும் தந்தையுமானவரிடமிருந்து நாங்கள் கருணையைப் பெறுவதில்லை. அவர்களுக்குத் தந்தையைத் தெரியாததால், அவர்கள் மீது தந்தையால் எவ்வாறு கருணை கொள்ள முடியும்? அவர்கள் ஆசிரியரின் வழிகாட்டல்களைப் பின்பற்றும்பொழுதே, கருணை இருக்க முடியும். கடவுள் சர்வவியாபி என்று அவர்கள் கூறுகின்றார்கள். அவ்வாறாயின், கருணையைக் கொடுப்பது யார், கருணையைப் பெறுவது யார்? இருசாராரும் தேவை - கருணை காட்டுபவரும், கருணைக்கான தேவையைக் கொண்டிருப்பவரும். மாணவர்கள் முதலில் ஆசிரியரிடம் வந்து, கற்க வேண்டும். முதலில், ஒருவர் தன் மீது இந்தக் கருணையைக் கொண்டிருக்க வேண்டும். பின்னர் அவர் ஆசிரியரின் வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டும். முயற்சி செய்வதற்கு உங்களைத் தூண்டுவதற்கு ஒருவர் தேவைப்படுகின்றார். அவரே தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். அவர் பரமதந்தையும், பரம ஆசிரியரும், பரம சற்குருவும் ஆவார். தந்தை கூறுகின்றார்: ஒவ்வொரு கல்பத்திலும், நான் ஸ்தாபனை என்ற இப்பணியை மேற்கொண்டு, தூய்மையற்ற உலகைத் தூய்மையாக்குகின்றேன். பாபா உலக சர்வசக்திவான். ஆகவே, உலக அதிகாரியின் இராச்சியம் சதா ஆட்சிசெய்யப்படும். முழு உலகிலும் இலக்ஷ்மி நாராயணனின் ஒரே இராச்சியம் நிலவும். அவர்களும் சர்வசக்திவான்கள். அங்கே எவரும் சண்டை அல்லது சச்சரவுகளில் ஈடுபடுவதில்லை; அங்கே மாயை இருப்பதில்லை. அது சத்திய யுகமும், திரேதா யுகமும் ஆகும். சத்திய, திரேதா யுகங்கள் இரண்டுமே வைகுந்தமான சுவர்க்கம் என்றே அழைக்கப்படுகின்றன. அனைவரும் பாடுகின்றார்கள்: இராதையையும் கிருஷ்ணரையும் நினைவுசெய்து, சுவர்க்கமான பிருந்தாவனத்திற்குச் செல்லுங்கள். எவ்வாறாயினும், அவர்களில் எவரும் செல்வதில்லை. அவர்கள் அவர்களை நினைவுசெய்கின்றார்கள். இப்பொழுது, இது மாயையின் இராச்சியமாகும், அனைவரும் இராவணனின் கட்டளைகளையே பின்பற்றுகின்றார்கள். முக்கியஸ்தர்கள் மிகவும் சிறப்பாகத் தோற்றமளிப்பார்கள், அவர்கள் பெரிய பட்டங்களையும் பெறுகின்றார்கள். அவர்கள் சற்று பௌதீகத் தைரியத்தைக் காட்டினாலோ அல்லது ஒரு நல்ல செயலைச் செய்தாலோ, அவர்களுக்குப் பட்டம் வழங்கப்படுகின்றது. சிலர்தத்துவ கலாநிதிஎன்ற பட்டத்தைப் பெறுகின்றார்கள். அவர்கள் தொடர்ந்தும் ஏதோ ஒரு பட்டத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் இப்பொழுது பிராமணர்கள். நீங்கள் நிச்சயமாகப் பாரதத்திற்குச் சேவை செய்கின்றீர்கள். நீங்கள் தெய்வீக இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள். ஸ்;தாபனை நிறைவேறியதும், சூரிய வம்ச அரசன் அல்லது அரசி, சந்திர வம்ச அரசன் அல்லது அரசி என்ற உங்களுக்கான பட்டங்களைப் பெறுகின்றீர்கள். அதன்பின்னர் உங்கள் இராச்சியம் ஆரம்பமாகுகின்றது. அங்கே, எவருக்கும் ஒரு பட்டம் வழங்கப்பட மாட்டாது. அங்கே துன்பம் கொடுக்கின்ற எதுவுமே இருக்க மாட்டாது, எனவே எவருமே துன்பத்தை அகற்றியோ அல்லது தைரியத்தைக் காட்டியோ பட்டத்தைப் பெற வேண்டியதில்லை. இங்கேயுள்ள சம்பிரதாயங்கள் அங்கு இருக்கவோ அல்லது இலக்ஷ்மி நாராயணன் தூய்மையற்ற உலகிற்கு வரவோ முடியாது. இந்நேரத்தில், தூய தேவர்கள் இல்லை. இது தூய்மையற்ற, அசுர உலகமாகும். பல்வேறு வழிகாட்டல்களினாலும், அபிப்பிராயங்களினாலும் மக்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள். இங்கே, ஒரேயொரு மேன்மையான வழிகாட்டல் மாத்திரமே உள்ளது, அதனூடாக ஒரே இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. எனினும், முன்னேறிச் செல்கின்றபொழுது. சிலர் மாயையின் முட்களால் குத்தப்பட்டு, அந்த ஆத்மாக்கள் முடமாக ஆகுகின்றார்கள். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: சதா ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். உங்கள் சொந்த மனக் கட்டளைகளைப் பின்பற்றுவதால், நீங்கள் ஏமாற்றப்படுகின்றீர்கள். உண்மையான தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதால், நீங்கள் ஓர் உண்மையான வருமானத்தை ஈட்டுகின்றீர்கள். உங்கள் சொந்த வழிகாட்டல்களைப்; பின்பற்றுவதால், உங்கள் படகு மூழ்குகின்றது. ஸ்ரீமத்தைப் பின்பற்றாததால், பல மகாவீரர்கள் சீரழிந்தார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது சற்கதியை அடைய வேண்டும். ஸ்ரீமத்தைப் பின்பற்றாது விட்டால், சீரழிந்தவர்கள் பெருமளவு வருந்த நேரிடும். அதன்பின்னர் இச்சரீரத்தில் தர்மராஜ்ஜின் பாகத்தில் சிவபாபா அமர்ந்து கூறுவார்: நான் இந்தப் பிரம்மாவின் சரீரத்தினூடாக உங்களுக்கு அதிகளவு விளங்கப்படுத்தினேன். நான் உங்களுக்குக் கற்பித்து, உங்களுக்காக அதிகளவு முயற்சி செய்தேன். சிலர் தமது நம்பிக்கையை வெளிப்படுத்திக் கடிதமும் எழுதிக் கூறினார்கள்: நான் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவேன், ஆனால் அவர்கள் அதனைப் பின்பற்றவில்லை. நீங்கள் என்ன நடந்தாலும், ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதை மாத்திரம் என்றுமே நிறுத்தக்கூடாது. நீங்கள் அனைத்தைப் பற்றியும் தந்தையிடம் கூறினால், எச்சரிக்கை செய்யப்படுவீர்கள். நீங்கள் தந்தையை மறக்கும்பொழுதே, முட்கள் உங்களைக் குத்துகின்றன. அதன்பின்னர் சற்கதியை அருளகின்ற தந்தையிடமிருந்து குழந்தைகளாகிய நீங்கள் அதிக மைல்களுக்கு அப்பால் ஓடுகின்றீர்கள். அவர்கள் பாடுகின்றார்கள்: நான் என்னை அர்ப்பணிப்பேன், நான் சரணடைவேன். எவ்வாறாயினும், யாரிடம் அவர்கள் இதனைச் செய்வார்கள்? ‘நான் ஒரு சந்நியாசியிடம் சரணடைவேன்என்றோ, ‘பிரம்மா, விஷ்ணு, சங்கரரிடம் அர்ப்பணிப்பேன்என்றோ எழுதப்படவில்லை. அல்லதுநான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைவேன்என்றோ எழுதப்படவில்லை. நீங்கள் பரமாத்மாவான, பரமதந்தையிடமே உங்களை அர்ப்பணிக்கின்றீர்கள், ஒரு மனிதரிடம் அல்ல. நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். தந்தையும் குழந்தைகளாகிய உங்களிடம் தன்னை அர்ப்பணிக்கின்றார். அந்த எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: நான் உங்களிடம் என்னை அர்ப்பணிக்கவே இங்கே வந்துள்ளேன். எனினும், தந்தையிடம் தம்மை அர்ப்பணித்தல் என்ற எண்ணத்தினால், சில குழந்தைகளின் இதயங்கள் சுருங்குகின்றன. நீங்கள் சரீர உணர்வு உடையவர்களாகினால், மரணித்து, கலப்படமானவர்கள் ஆகுகின்றீர்கள். அவரின் நினைவு இருக்க வேண்டும். அவரிடம் உங்களை அர்ப்பணியுங்கள். நாடகம் முடிவடையவுள்ளது. நாங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். உங்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்ற அனைவரும் இடுகாட்டில் புதைக்கப்பட உள்ளார்கள், ஆகவே அவர்களை நினைவுசெய்வதில் என்ன அர்த்தம் உள்ளது? இதற்குப் பெருமளவு பயிற்சி தேவையாகும். கூறப்படுகின்றது: ஓர் ஆத்மா மேலேறும்பொழுது, அமிர்தத்தைச் சுவைக்கின்றார், ஆனால் ஓர் ஆத்மா மிகவும் கீழே வீழும்பொழுது, தனது அந்தஸ்தை இழக்கின்றார். இதற்கு அவர் சுவர்க்கத்திற்குச் செல்ல மாட்டார் என்று அர்த்தமல்ல. ஆனால், ஓர் அரசர், அரசியாக இருப்பதற்கும், பிரஜையாக இருப்பதற்கும் இடையில், ஒரு வேறுபாடு உள்ளது. இங்கே உள்ள சுதேசிகளையும், ஓர் அமைச்சரையும் பாருங்கள்;; ஒரு வேறுபாடு உள்ளது. ஆகவே முழு முயற்சி செய்யுங்கள். ஒருவர் வீழ்ந்தால், முற்றிலும் தூய்மையற்றவர் ஆகுகின்றார். ஓர் ஆத்மாவினால் ஸ்ரீமத்தைப் பின்பற்ற முடியாதிருந்தால், மாயை அந்த ஆத்மாவை மூக்கால் பிடித்து, அவரைச் சாக்கடைக்குள் வீசி எறிகின்றாள். பாப்தாதாவிற்கு உரியவர்களாகிய பின்னர், அவரை எதிர்ப்பது என்;றால், ஒரு துரோகியாக ஆகுவது என்று அர்த்தமாகும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: ஒவ்வோர் அடியிலும் எச்சரிக்கையாக இருங்கள். மாயையின் நேரம் இப்பொழுது முடிவடையும் தறுவாயில் உள்ளது, எனவே அவள் உங்களில் பலரை வீழ்த்துவாள். எனவே, குழந்தைகளே, மிகவும் உஷாராக இருங்கள். பாதை சற்று நீண்டதாயினும், அந்தஸ்து மிகவும் மகத்தானது. நீங்கள் ஒரு துரோகி ஆகினால், தீவிரமான தண்டனை உள்ளது. தர்மராஜ் பாபா ஆத்மாக்களைத் தண்டிக்கும்பொழுது, அவர்கள் விரக்தியில் கதறி அழுகின்றார்கள். அதன்பின்னர் அது ஒவ்வொரு கல்பத்திலும் நிச்சயிக்கப்பட்டதாக ஆகுகின்றது. மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். தந்தையைப் பற்றிய சிறிதளவு அவமரியாதை இருந்தாலும், நீங்கள் மரணிக்கின்றீர்கள். சற்குருவை அவதூறு செய்பவரால்;, இலக்கை அடைய முடியாது என்று கூறப்படுகின்றது. சிலர் காமத்தின் அல்லது கோபத்தின் ஆதிக்கத்தினால் பிழையான செயல்களைச் செய்து, தந்தைக்கு அவதூறை ஏற்படுத்துவதால், தண்டனையை அனுபவம் செய்கின்றார்கள். ஒவ்வோர் அடியிலும் பல மில்லியன் மடங்கு வருமானம் இருப்பதைப் போன்றே, பல மில்லியன் மடங்கு இழப்பும் உள்ளது. சேவை செய்வதால், உங்கள் கணக்கு அதிகரித்தால், பின்னர் பிழையான, பாவகரமான செயல்களைச் செய்தால், அது இழப்பினுள்ளும் செல்கின்றது. பாபாவிடம் முழுக் கணக்கும் உள்ளது. இப்பொழுது, பாபா உங்களுக்கு நேரடியாகக் கற்பிப்பதால், முழுக் கணக்கும் அவரின் உள்ளங்கையில் இருப்பதைப் போல் உள்ளது. எந்தக் குழந்தையும் சிவபாபாவை அவமரியாதை செய்யாதிருப்பதையே தான் விரும்புவதாகத் தந்தை கூறுகின்றார், ஏனெனில், அவ்வாறு செய்வதால், பெருமளவு பாவங்கள் செய்யப்படுகின்றன. யக்ஞத்திற்குச் சேவை செய்வதில் நீங்கள் உங்களுடைய எலும்புகளையும் கொடுக்க வேண்டும். தாதிஷி ரிஷியின் உதாரணமும் உள்ளது. இதுவும் ஓர் அந்தஸ்தை உருவாக்குகின்றது. இல்லாதுவிடின், பிரஜைகள் மத்தியில் பல்வேறு தரங்களில்; அந்தஸ்துக்கள் உள்ளன. பிரஜைகளுக்கும் கூட பணிப்பெண்களும், வேலையாட்களும் தேவைப்படுகின்றார்கள். அங்கே துன்பம் இருக்க மாட்டாது, ஆனால் அந்தஸ்து வரிசைக்கிரமமாக உள்ளது. அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. நினைவு யாத்திரையில் களைப்படையாதீர்கள். இறுதியில், வேறு எவரையும் அன்றி தந்தையை நினைவுசெய்யும் வகையில், உண்மையான நினைவைக் கொண்டிருப்பதைப் பயிற்சி செய்யுங்கள்.
  2. உண்மையான தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றி, உண்மையான வருமானத்தை ஈட்டுங்கள். உங்கள் சொந்த மனக் கட்டளைகளைப் பின்பற்றாதீர்கள். சற்குருவிற்கு அவதூறு விளைவிக்காதீர்கள். காமத்தின் அல்லது கோபத்தின் ஆதிக்கத்தினால், பிழையான செயல்களைச் செய்யாதீர்கள்.

ஆசீர்வாதம்:

நீங்கள் உங்களுடைய எண்ணத்தின் சக்தி மூலம் ஒரு வெற்றி சொரூபமாகி, உங்கள் அனைத்துப் பணியிலும் வெற்றிகரமாக இருப்பதற்கான ஓர் உரிமையைக் கொண்டிருப்பீர்களாக.


நீங்கள் உங்களுடைய எண்ணத்தின் சக்தி மூலம் பல பணிகளிலும் இலகு வெற்றியை அனுபவம் செய்வீர்கள். பௌதீகமான ஆகாயத்தில் பல்வேறு நட்சத்திரங்களை நீங்கள் பார்ப்பதைப் போன்று, உலகின் சூழல் எனும் ஆகாயத்தில் உங்கள் எண்ணங்கள் மேன்மையானவையாகவும், சக்திவாய்ந்தவையாகவும் இருக்கும்பொழுது, உங்களால் வெற்றி நட்சத்திரங்கள் பிரகாசிப்பதைப் பார்க்க இயலும், அத்துடன் நீங்கள் ஒரேயொரு தந்தையின் ஆழத்தில் சதா உங்களை இழந்திருக்கின்றீர்கள். உங்களுடைய ஆன்மீகக் கண்களும், ஆன்மீக உருவமும் ஒரு தெய்வீகக் கண்ணாடியாக ஆகும். இந்தத் தெய்வீகக் கண்ணாடியானது பல ஆத்மாக்களையும் தங்களுடைய ஆத்ம உணர்வு ரூபத்தை அனுபவம் செய்ய வைக்கின்ற, ஒரு வெற்றி சொரூபம் ஆகுகின்றது.

சுலோகம்:

சதா இறை சந்தோஷத்தை அனுபவம் செய்பவர்களே, கவலையற்ற சக்கரவர்த்திகள்.

 

---ஓம் சாந்தி---

Download PDF

Post a Comment

0 Comments