10-01-2023 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இதுவே நீங்கள் உயிருடன் மரணித்து வாழும் பிறவி ஆகும். நீங்கள் தந்தையாகிய கடவுளிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் மிகப்பெரிய அதிர்ஷ்ட இலாபச்சீட்டை
வென்று விட்டீர்கள்.
ஆகவே, எல்லையற்ற சந்தோஷத்திலே நிலைத்திருங்கள்.
கேள்வி:
உங்கள் கவலைகள் அனைத்திற்கும் முடிவு கட்டவும், உங்கள் கோபத்தை நிறுத்துவதற்கும்
உங்களுக்கு நீங்களே என்ன கூற வேண்டும்?
பதில்:
'நான் கடவுளின் ஒரு குழந்தை". நான் தந்தையைப் போல் இனிமையானவராக வேண்டும். பாபா இனிமையான முறையில் கோபமடையாமல், விளங்கப்படுத்துவதைப் போல், நானும் உவர்நீர் போல் ஆகாமல், மற்றவர்களுடன் மிகவும் இனிமையானவராக இருக்க வேண்டும், ஏனெனில் கடந்து செல்லும் ஒவ்வொரு விநாடியும் நாடகத்தின் பாகமே என்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆகவே, கவலைப்படுவதற்கு என்ன உள்ளது?” இவ்வாறு உங்களுடன்; பேசினால், நீங்கள் கவலைப்படுவது முடிவடைவதுடன்,
உங்கள் கோபமும் மறைந்து விடும்.
பாடல்: இந்த வசந்த காலமே நீங்கள் களிப்படைவதற்கும், உலகை மறப்பதற்குமான காலம்.
ஓம் சாந்தி.
இப்பாடல் கடவுளின் குழந்தைகளினது சந்தோஷத்தைப் பற்றியதாகும். சத்திய யுகத்திலே நீங்கள் இத்தகைய சந்தோஷத்திற்கான பாடல்களைப் பாட மாட்டீர்கள். இப்பொழுதே நீங்கள் பொக்கிஷங்களைப் பெறுகிறீர்கள். இந்த அதிர்ஷ்ட இலாபச்சீட்டே அனைத்திலும் அதிமகத்தானது.
மக்கள் ஓர் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வெல்லும்பொழுது, மிகுந்த சந்தோஷம் அடைகிறார்கள்.
இவ் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வெல்வதனால்,
பிறவிபிறவியாக நீங்கள் சுவர்க்கச் சந்தோஷத்தை அனுபவம் செய்கிறீர்கள். இதுவே நீங்கள் உயிருடன் மரணித்து வாழும் பிறவி ஆகும். நீங்கள் உயிருடன் மரணித்து வாழாது விட்டால்,
இது உங்களுடைய மரணித்து வாழும் பிறவியாக இருக்க முடியாது. நீங்கள் உயிருடன் மரணித்து வாழும்வரை, அதாவது,
நீங்கள் தந்தையை உங்களுக்குரியவர் ஆக்கும்வரை,
உங்கள் சந்தோஷப் பாதரசம் உயர மாட்டாது, ஆகவே நீங்கள் அவ்வாறு ஆகும்வரை, உங்களால் உங்கள் முழு ஆஸ்தியையும் பெற முடியாது. தந்தைக்குரியவர்களும், அவரை நினைவுசெய்பவர்களும் தந்தையினால் நினைவுசெய்யப்படுகிறார்கள். நீங்கள் கடவுளின் குழந்தைகள்.
பக்தி மார்க்கத்தில், பக்தர்கள் யாருக்காக அலைந்து திரிகிறார்களோ, அந்தத் தந்தையாகிய கடவுளிடமிருந்து உங்கள் ஆஸ்தியையும், ஆசீர்வாதங்களையும் நீங்கள் பெறுகிறீர்கள் என்ற போதையைக் கொண்டிருக்கிறீர்கள். அவர்கள் தந்தையைச் சந்திக்க முயற்சி செய்வதற்கு,
பல வழிமுறைகளையும் கையாள்கிறார்கள். அவர்கள் வேதங்கள், சமயநூல்கள்,
சஞ்சிகைகள் முதலிய பலவற்றையும் கற்கிறார்கள்.
எவ்வாறாயினும், நாளுக்கு நாள், உலகம் தொடர்ந்தும் மேலும் துன்பம் மிக்கதாக ஆகுகின்றது; அது தமோபிரதானாக வேண்டும்.
இதுவே முட்களின் விருட்சம் ஆகும்.
முட்களின் பிரபு வந்து, முட்களை மலர்களாக மாற்றுகிறார்.
முட்கள் மிகவும் பெரிதாக வளர்ந்து விட்டதால், அவை மிகவும் விசையுடன் குத்துகின்றன. அவற்றிற்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை சத்திய யுகத்தில் இருப்பதில்லை. தந்தை விளங்கப்படுத்துகிறார்: இது முட்களின் உலகம்;
அவர்கள் தொடர்ந்தும் ஒருவரையொருவர் துன்பப்படுத்துகிறார்கள். இல்லறத்தில் அத்தகைய தகுதியற்ற குழந்தைகளும் இருக்கிறார்கள், கேட்கவும் வேண்டாம்!
அவர்கள் தங்களுடைய தாய்க்கும், தந்தைக்கும் பெருமளவு துன்பத்தைக் கொடுக்கிறார்கள். அனைவரும் ஒரேமாதிரியானவர்கள் அல்ல.
யார் அதிகளவு துன்பத்தைக் கொடுக்கிறார் என்பது மனிதர்களுக்குத் தெரியாது. தந்தை கூறுகிறார்: குருமார்கள் கடவுளின் புகழை அழித்து விட்டார்கள்.
நாங்களோ அவரைப் பெருமளவு புகழ்கிறோம்.
அவரே உச்சளவு தகுதிவாய்ந்த, பரமாத்மாவாகிய பரமதந்தை ஆவார்.
சிவனின் படம் மிகவும் சிறந்தது,
ஆனாலும், சிவன் ஒரு புள்ளி வடிவானவர் என்பதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் பலர் இருக்கிறார்கள், ஏனெனில் அவர்கள் ஆத்மாக்களும், பரமாத்மாவும் ஒன்றே எனக் கூறுகிறார்கள். ஓர் ஆத்மா மிகவும் சூட்சுமமானவர். அவர் நெற்றியின் மத்தியிலே அமர்ந்திருக்கிறார், ஆகவே கடவுளின் உருவம் எவ்வாறு அதை விடப் பெரியதாக இருக்க முடியும்?
கல்விமான்கள் பலரும் கடவுளின் உருவம் இதுவல்ல என்றும்,
அவர் அநாதியாகவே எரிகின்ற ஒளி என்றும், ஆயிரம் சூரியன்களை விடவும் பிரகாசமானவர் என்றும் கூறி, பிரம்மகுமாரிகளை எள்ளி நகையாடுகிறார்கள். உண்மையில், அது தவறானது. தந்தையால் மாத்திரமே உங்களுக்குத் தனது மிகச்சரியான புகழைக் கூற முடியும். அவரே மனித உலக விருட்சத்தின் விதை ஆவார். இவ்வுலகம் தலைகீழான ஒரு விருட்சத்தைப் போன்றது.
அவரைச் சத்திய,
திரேதா யுகங்களில் உள்ள எவருமே நினைவுசெய்வதில்லை. மனிதர்கள் சந்தோஷமற்றிருக்கும்பொழுதே, கடவுளை நினைவுசெய்கிறார்கள். 'ஓ கடவுளே! ஓ பரமாத்மாவாகிய பரமதந்தையே,
கருணை காட்டுங்கள்!"
என அவர்கள் கூறுகிறார்கள். சத்திய,
திரேதா யுகங்களில் உள்ள எவருமே கருணை காட்டும்படி வேண்டுவதில்லை. அவர்கள் படைப்பவராகிய, தந்தையின் புதிய படைப்புக்கள்.
அத்தந்தையின் புகழோ எல்லையற்றது. அவரே தூய்மையாக்குபவரான, ஞானக் கடல். அவர் ஞானக் கடலாக இருப்பதனால், நிச்சயமாக ஞானத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அவரே சத்தியமும், உயிருள்ளவரும், பேரானந்த சொரூபமும் ஆவார். அவர் உயிருள்ள ஆத்மா
(பரமாத்மா) ஆவார்.
உயிருள்ள ஆத்மாக்களே ஞானத்தைக் கிரகிக்கிறார்கள். உதாரணமாக, ஓர் ஆத்மா தனது சரீரத்தை நீங்கிச் செல்லும்பொழுது, ஞான சம்ஸ்காரங்களைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறார்.
அவர் ஒரு குழந்தையாகும்பொழுது, அந்தச் சம்ஸ்காரங்களைக் கொண்டிருப்பார், ஆனால் வாய் முதலிய அங்கங்கள் சிறிதாக இருப்பதனால்,
அவரால் பேச முடியாதிருக்கும். அவரது அங்கங்கள் வளர்ச்சியடையும்பொழுது, ஆத்மா நினைப்பதற்குத் தூண்டப்பட்டு,
ஞாபகம் மீண்டும் வருகிறது. சிறு குழந்தைகளும் சமயநூல்கள் முதலியவற்றை மனப்பாடம் செய்கிறார்கள். அது அவர்களின் முன்னைய பிறவியின் சம்ஸ்காரங்கள் என்பதே இதற்கான காரணம் ஆகும்.
தந்தை இப்பொழுது எங்களுடைய ஆஸ்தியான ஞானத்தை எங்களுக்குக் கொடுக்கிறார். அவரிடமே முழு உலகினதும் ஞானம்; இருக்கிறது,
ஏனெனில் அவரே விதை ஆவார்.
நாங்கள் எங்களை விதை என அழைக்க முடியாது.
விருட்சம் ஒன்றின் விதையானது அந்த விருட்சத்தின் ஆரம்பம்,
மத்தி, இறுதி ஆகியவற்றின் ஞானத்தை நிச்சயமாகத் தன்னுள் கொண்டிருக்கிறது. தந்தையே கூறுகிறார்: நானே உலகின் விதை.
இந்த விருட்சத்தின் விதை மேலேயே உள்ளார். அந்தத் தந்தையே சத்தியமும்,
உயிருள்ளவரும், பேரானந்த சொரூபமும், ஞானக் கடலும் ஆவார்.
அவர் உலகின் ஆரம்பம், மத்தி,
இறுதி ஆகியவற்றின் ஞானத்தையும் கொண்டிருக்கிறார். அவரிடம் வேறு என்ன ஞானம் இருக்கும்? அது சமயநூல்களின் ஞானமாக இருக்க முடியுமா?
அது பலரிடமும் உள்ளது. கல்விமான்கள் போன்ற எவருமே அறியாத புதிதான ஏதோவொன்று நிச்சயமாகக் கடவுளிடம் இருக்கும்.
எவரிடமும் வினவுங்கள்:
உலக விருட்சம் எவ்வாறு வெளிப்படுகிறது? அது எவ்வாறு பராமரிக்கப்படுகிறது? அதன் ஆயுட்காலம் என்ன?
அது எவ்வாறு அழிக்கப்படுகிறது? அது எவ்வாறு வளர்கிறது?
எவராலுமே இவ்விடயங்களை விளங்கப்படுத்த இயலாதிருக்கும். கீதையே அனைத்துச் சமயநூல்களினதும் ஒரேயொரு இரத்தினமாகும்; ஏனைய அனைத்தும் அதன் குழந்தைகளே. கீதையை வாசித்த பின்னரும் மக்கள் எதையும் புரிந்துகொள்ளாது விடின்,
வேறு சமயநூல்களைக் கற்பதனால் என்ன நன்மையைப் பெற்றுக் கொள்வார்கள்? கீதையின் மூலமே ஆஸ்தி பெறப்படுகிறது. தந்தை இப்பொழுது முழு நாடகத்தினதும் இரகசியங்களை விளங்கப்படுத்துகிறார். தந்தை உங்களின் கல்லுப் புத்தியைத் தெய்வீகமானதாக மாற்றுவதுடன், உங்களைத் தெய்வீகப் பிரபுக்களாகவும் ஆக்குகிறார். இப்பொழுது அனைவருமே கற்களின் பிரபுக்களாக இருக்கும்வகையில், அத்தகைய கல்லுப்புத்தியைக் கொண்டிருக்கின்றனர். எவ்வாறாயினும், அவர்கள் தங்களுக்குப் பெரிய பட்டங்களைக் கொடுத்து, தங்களைத் தெய்வீகப் புத்தி உடையவர்களாகக் கருதுகிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: எனது புகழே மிகவும் தனித்துவமானது; நான் ஞானக் கடலும்,
பேரானந்தக்; கடலும்,
சந்தோஷக் கடலும் ஆவேன். தேவர்கள் இவ்வாறு புகழப்பட மாட்டார்கள். பக்தர்கள் தேவர்களின் சிலைகளின் முன்னால் சென்று கூறுகின்றார்கள்: நீங்கள் தெய்வீகக் குணங்கள் அனைத்தும் நிறைந்தவர்கள், 16 சுவர்க்கக் கலைகளையும் உடைய, முற்றிலும் தூய்மையானவர்கள். புகழானது ஒரேயொரு தந்தையினதே என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள், நாங்கள் மாத்திரமே அவரது புகழை அறிவோம்.
ஆலயங்களில் சித்தரிக்கப்பட்டிருப்பவர்கள் எவ்வாறு தங்கள் 84 பிறவிகள் முழுவதையும் எடுத்துள்ளார்கள் என்ற ஞானம் முழுவதையும் இப்பொழுது உங்கள் புத்தி கொண்டிருக்கிறது. ஆகவே,
இப்பொழுது நீங்கள் எவ்வளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்கிறீர்கள்? முன்னர்,
நீங்கள் இவ்வாறு சிந்திக்கவில்லை. நீங்கள் அவர்களைப் போலாக வேண்டும் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். உங்கள் புத்தியிலே பெருமளவு மாற்றம் இருக்கிறது.
குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை விளங்கப்படுத்துகிறார்: ஒருவரோடொருவர் மிகவும் இனிமையானவர்கள் ஆகுங்கள். உவர்நீர் போல் ஆகாதீர்கள்.
பாபா எவருடனாயினும் எப்பொழுதாவது கோபப்படுகின்றாரா? அவர் மிகவும் இனிமையான முறையில் விளங்கப்படுத்துகிறார். கடந்து செல்கின்ற ஒரு விநாடி கூட நாடகத்தின் பாகமே என்று கூறப்பட முடியும். இதில் கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது? உங்களுக்கு நீங்களே இவ்வாறு விளங்கப்படுத்துங்கள். கடவுளின் குழந்தைகளாகிய நீங்கள் குறைந்தவர்களல்ல. கடவுளின் குழந்தைகள் நிச்சயமாகவே கடவுளுடன் வசிக்கின்றார்கள் என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
கடவுள் அசரீரியானவர்,
ஆகவே, அவரின் குழந்தைகளும் அசரீரியானவர்களே. அதே குழந்தைகளே இங்கு வந்து,
தமது பாகங்களை நடிப்பதற்காக ஆடைகளை எடுத்துக் கொள்கிறார்கள். சுவர்க்கத்தில் உள்ள மனிதர்கள் தேவ தர்மத்திற்குரியவர்கள். ஒவ்வொருவரும் எத்தனை பிறவிகள் எடுக்கிறார்கள் என்பதை நீங்கள் கணக்கிட வேண்டுமாயின், அதற்கு நீங்கள் அதிகளவு பிரயத்தனம் செய்ய நேரிடும்! எவ்வாறாயினும், பிறவிகளின் எண்ணிக்கை அவர்கள் வருகின்ற காலத்திற்கு ஏற்ப குறைவடைகிறது என்பது புரிந்துகொள்ளப்படுகிறது. மனிதர்கள் பூனைகளாகவும் நாய்களாகவும் ஆகினார்கள் என முன்னர் நீங்கள் நம்பினீர்கள். அப்பொழுதிருந்த உங்கள் புத்திக்;கும், இப்பொழுதுள்ள உங்கள் புத்திக்கும் இடையில் இரவிற்கும்,
பகலிற்குமான வேறுபாடு இருக்கிறது. இந்த விடயங்கள் அனைத்தும் கிரகிக்கப்பட வேண்டும்.
84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது முடிவடைகின்றது என்பது சுருக்கமாக விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இப்பொழுது உங்கள் அழுக்கான சரீரங்களைத் துறக்க வேண்டும்.
உங்கள் அனைவரது சரீரங்களும் பழையவையாகவும், சீரழிந்தவையாகவும், தமோபிரதானாகவும் இருக்கின்றன. அதிலுள்ள உங்கள் பற்றை அகற்றி விடுங்கள்.
நீங்கள் ஏன் உங்கள் பழைய சரீரங்களை நினைவுசெய்ய வேண்டும்;? இப்பொழுது நீங்கள் சத்திய யுகத்திலே பெறப் போகின்ற புதிய சரீரங்களை நினைவுசெய்யுங்கள். முக்தி தாமத்தின் ஊடாக நீங்கள் சத்திய யுகத்திற்குச் செல்வீர்கள். நாங்கள் ஜீவன்முக்தி தாமத்திற்குச்; செல்லும்பொழுது, ஏனைய அனைவரும் முக்தி தாமத்திற்குச் செல்கிறார்கள். இதுவே வெற்றி முழக்கம் எனப்படுகிறது.
துன்ப ஓலத்தின் பின்னர், வெற்றி முழக்கம் இருக்கும்.
பலர் மரணிப்பார்கள், ஆகவே அதற்குக் கருவியாக ஏதாவது இருக்க வேண்டும்.
இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும். கடல் மாத்திரமே அனைத்துத் தேசங்களையும் அழிக்கும் என்பதல்ல. அனைத்தும் முடிவடைய வேண்டும்.
எவ்வாறாயினும், அழியாத தேசமாகிய பாரதமே மீதமாக இருக்கும்.
ஏனெனில் இதுவே சிவபாபாவின் பிறப்பிடம்.
இந்தத் தேசமே அனைத்திலும் அதிசிறந்த யாத்திரைத் தலமாகுகின்றது. தந்தை அனைவருக்கும் சற்கதியை அருள்கிறார்,
ஆனால் மனிதர்களுக்கு இது தெரியாது.
அவர்களுக்கு இது தெரியாதிருப்பதும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனாலேயே தந்தை கூறுகிறார்:
குழந்தைகளே, முன்னர் உங்களுக்கும் எதுவும் தெரியாது. நானே படைப்பவரதும், அவரின் படைப்பினதும்;, அதாவது,
மனித உலகின் ஆரம்பம், மத்தி,
இறுதியினது இரகசியம் முழுவதையும் விளங்கப்படுத்துகிறேன். அதற்கு முடிவு இல்லை என ரிஷிகளும்,
முனிவர்களும் கூறி உள்ளார்கள். ஐந்து விகாரங்களே முழு உலகினதும் மாபெரும் எதிரிகள் என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. பாரத மக்கள் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்தும் இராவணனின் கொடும்பாவியை எரிக்கிறார்கள், ஆனால் அவன் பௌதீகமானவனும் அல்ல,
ஆன்மீகமானவனும் அல்ல என்பதால், அவர்களுக்கு அவனைத் தெரியாது.
விகாரங்களுக்கும் உருவம் இல்லை. ஒருவர் செயற்பட ஆரம்பிக்கும்பொழுதே, அவர் காமம் அல்லது கோபம் எனும் தீய ஆவியைக் கொண்டிருக்கிறாரா என்பது புரிந்துகொள்ளப்படுகிறது. விகாரங்களிலும் அதிமேலான, நடுத்தரமான,
கீழ்த்தரமான நிலைகள் இருக்கின்றன. சிலர் காமத்தின் தமோபிரதான் போதையையும், சிலரோ ரஜோ ஸ்திதியின் போதையையும், சிலர் சதோ ஸ்திதியின் போதையையும் கொண்டிருக்கிறார்கள். சிலர் பிறப்பிலிருந்தே பிரம்மச்சாரிகளாக இருக்கிறார்கள். அவர்கள் இல்லறத்தில் வசிப்பதை மிகவும் தர்மசங்கடமாக நினைக்கிறார்கள். அத்தகையவர்களே மிகவும் சிறந்தவர்களாக அறியப்பட்டுள்ளார்கள். சந்நியாசிகளிலும், பிறப்பிலிருந்தே பிரம்மச்சாரிகளாக இருப்பவர்கள் சிறந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இது அரசாங்கத்திற்கு மிகவும் உகந்ததாக இருக்கிறது,
ஏனெனில் சனத்தொகை அதிகரிப்பதில்லை. அவர்கள் தூய்மையின் சக்தியைப் பெற்றுக் கொள்கிறார்கள். இது மிகவும் மறைமுகமானது. சந்நியாசிகள் தூய்மையானவர்களாக இருக்கிறார்கள், சிறு குழந்தைகளும் தூய்மையானவர்களாக இருக்கிறார்கள், தங்களுடைய ஓய்வு ஸ்திதியில் இருப்பவர்களும் தூய்மையாகவே இருக்கிறார்கள். ஆகவே, தொடர்ந்தும் தூய்மையின் சக்தி பெறப்படுகின்றது. அவர்களும் ஒரு குழந்தை ஒரு குறித்த வயதுவரை தூய்மையாக இருக்க வேண்டும் என்ற நியதியையே கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அதிலிருந்து சக்தியையும் பெறுகிறார்கள். நீங்கள் சதோபிரதான் வழியிலே தூய்மையாக இருக்கிறீர்கள். நீங்கள் இந்த இறுதிப் பிறவியில் தந்தைக்கு ஒரு சத்தியம் செய்கிறீர்கள். சத்திய யுகத்தை ஸ்தாபிப்பவர்களும் நீங்களே.
தூய்மையாக இருப்பவர்களே,
தமது முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக, தூய உலகின் அதிபதிகள் ஆகுகின்றார்கள். இது கடவுளின் குடும்பம்.
ஒவ்வொரு சக்கரத்திலும் நீங்கள் கடவுளுடன் வாழ்ந்து, பின்னர் தேவ குலத்தில் பல பிறவிகள் எடுக்கிறீர்கள். இந்த ஒரு பிறவி மிகப் பெறுமதியானது.
இந்தக் கடவுளின் குலமே அனைத்திலும் அதிமேலானது. பிராமணக் குலமே உச்சிக்குடுமியான, அதியுயர்ந்தது. அதிதாழ்ந்த குலத்திலிருந்து நாங்கள் அதியுயர்ந்த பிராமணக் குலத்திற்கு உரியவர்களாகி விட்டோம். சிவபாபா,
பிரம்மாவைப் படைக்கும்பொழுதே, அவரால் பிராமணர்களை உருவாக்க முடியும்.
பாபாவின் சேவையில் இருப்பவர்களால், பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடியும்.
நாங்கள் கடவுளின் குழந்தைகளாகி, கடவுளின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறோம். நீங்கள் உங்களுடைய நடத்தையின் மூலம் அவரின் பெயரைப் புகழடையச் செய்கிறீர்கள். பாபா கூறுகிறார்:
மற்றவர்கள் அசுர குணங்களை உடையவர்கள்,
நீங்களோ தெய்வீகக் குணங்கள் உடையவர்கள் ஆகுகின்றீர்கள். நீங்கள் முழுமை அடைந்ததும்,
உங்கள் நடத்தையும் நன்றாகி விடும்.
பாபா கூறுவார்:
நீங்கள் உங்களுடைய முயற்சிகளுக்கு ஏற்ப,
வரிசைக்கிரமமாக, தெய்வீகக் குணங்கள் உடையவர்களாக இருக்கிறீர்கள். அசுர குணங்களைக் கொண்டவர்களும் வரிசைக்கிரமமானவர்களே. பிறப்பிலிருந்தே பிரம்மச்சாரிகளாக உள்ளவர்களும் இருக்கிறார்கள். சந்நியாசிகள் தூய்மையாக இருப்பது நல்லதே, ஆனால்;
அவர்களால் எவருக்கும் சற்கதியை அருள முடியாது. குருமார்களால் ஆத்மாக்களுக்குச் சற்கதியை அருள முடிந்தால்,
அவர்களும் அந்த ஆத்மாக்களைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள்.
எவ்வாறாயினும், குருமார்கள்
(சரீரங்களை) நீங்கும்பொழுது, அவர்களை விட்டுச் சென்று விடுகின்றார்கள். இங்கு தந்தை கூறுகிறார்: நான் உங்களைத் திரும்பவும் என்னுடன் அழைத்துச் செல்வேன். நான் உங்களைத் திரும்பவும் என்னுடன் அழைத்துச் செல்வதற்கே வந்திருக்கிறேன். அவர்களால் உங்களை அழைத்துச் செல்ல முடியாது. அவர்கள் தாமே இல்லறத்தவர்களிடம் மறுபிறவி எடுக்;கிறார்கள். பின்னர்,
அவர்களுடைய சம்ஸ்காரங்களின் காரணமாக அவர்கள் மீண்டும் சென்று,
சந்நியாசிகளின் கூட்டத்திலேயே வாழ்கிறார்கள். அவர்களின் பெயர்களும், உருவங்களும் ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்தும் மாறிக் கொண்டே இருக்கும்.
நீங்கள் இப்பொழுது செய்கின்ற முயற்சிகளுக்கு ஏற்பவே, சத்திய யுகத்தில் ஓர் அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அங்கு,
நீங்கள் எவ்வாறு உங்கள் அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டீர்கள் என்பது உங்களுக்கு தெரியாது. முன்னைய கல்பத்தில் நீங்கள் என்ன முயற்சியைச் செய்தீர்களோ, அதையே இப்பொழுதும் செய்வீர்கள் என்பதை இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். அங்கு எவ்வாறு திருமணங்கள் நடைபெறுகின்றன என்பதைப் பற்றிய காட்சிகளும் சில குழந்தைகளுக்குக் கொடுக்கப்பட்டன. அங்கே,
மிகப்பெரிய பூங்காக்களும், பூந்தோட்டங்களும் இருக்கும்.
பாரதத்தில் இப்பொழுது மில்லியன் கணக்கான மக்கள் இருக்கிறார்கள். அங்கே, ஒரு சில நூறாயிரக் கணக்கானவர்கள் மாத்திரமே இருப்பார்கள்;. அங்கே பல மாடிகளைக் கொண்ட உயர்ந்த கட்டடங்கள் எதுவும் இருக்காது. இங்கே இடமில்லாதபடியாலேயே, அவை
(மாடிக் கட்டடங்கள்)
இருக்கின்றன. அங்கே அதிகக் குளிர் இருக்காது. அங்கு துன்பத்தின் சுவடே இருப்பதில்லை. மக்கள் மலைகளுக்குச் செல்லுமளவிற்குப் பெருமளவு வெப்பமும் இருப்பதில்லை. அதன் பெயரே சுவர்க்கம்.
இந்நேரத்திலே மக்கள் முட்காட்டிலே வசிக்கிறார்கள். அவர்கள் எந்தளவிற்கு அதிகமாகச் சந்தோஷத்தை விரும்புகிறார்களோ, அந்தளவிற்கு அதிகமாக அவர்களின் துன்பம் அதிகரிக்கிறது. இப்பொழுது பெருமளவு துன்பம் வரப் போகின்றது. யுத்தம் ஆரம்பித்ததும், இரத்த ஆறு பாயும்.
அச்சா. இந்த முரளி குழந்தைகளான உங்கள் அனைவர் முன்னிலையிலும் பேசப்பட்டுள்ளது. (முரளியை) நேரடியாகச்;
செவிமடுத்தல் முதற்தரமானது;
(முரளியை) ஒலிப்பதிவு நாடாவில் (டேப்)
செவிமடுத்தல் இரண்டாந்தரமானது, முரளியை வாசித்தல் மூன்றாந்தரமானது. ஆகவே,
இது சதோபிரதான்,
சதோ, ரஜோ ஆகும். இதில் தமோ ஸ்திதி இருக்க முடியாது.
இது ஒலிப்பதிவு நாடாவில் முற்றிலும் மிகச்சரியாக இருக்கிறது.
அச்சா.
இனிமையிலும் இனிமையான,
அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய்,
தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- தந்தையின் பெயரை உங்கள் நடத்தை மூலமும், தெய்வீகக் குணங்கள் மூலமும்; புகழடையச் செய்யுங்கள். அசுர குறைபாடுகளை அகற்றுங்கள்.
- உங்களுடைய பழைய, உக்கிய சரீரத்தில் பற்று வைக்காதீர்கள். உங்கள் சத்திய யுகத்துப் புதிய சரீரத்தை நினைவுசெய்து, தூய்மையாக இருப்பதால், மறைமுகமான உதவியைச் செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒரு
மாஸ்டர் சர்வசக்திவானாக
இருந்து, உங்கள்
ஆன்மீகச் சக்தி
மூலம் தொலைவில்
இருக்கின்ற ஆத்மாக்களுக்கு
அண்மையில் இருக்கின்ற
அனுபவத்தைக் கொடுப்பீர்களாக.
விஞ்ஞானத்தின் வசதிகளின் மூலம் தொலைவில் உள்ள விடயங்களை உங்களால் அண்மையில் அனுபவம் செய்ய இயலும். அதேபோன்று, உங்கள் தெய்வீகப் புத்தி மூலம், தொலைவிலுள்ள
ஒன்றை உங்களுக்கு அண்மையில் இருப்பதாக அனுபவம் செய்ய முடியும். உங்களுடன் இருப்பவர்களுடன் உங்களால் பார்க்க, பேச முடிவதுடன், ஒத்துழைப்பையும்
கொடுத்து, பெற முடிவதைப் போல், உங்கள் ஆன்மீகச் சக்தி மூலம் தொலைவில் உள்ள ஆத்மாக்களுக்கு
அண்மையில் இருக்கின்ற அனுபவத்;தைக் கொடுக்க முடியும். இதற்கு, நீங்கள் ஒரு மாஸ்டர்; சர்வசக்திவான்
என்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதுடன், முழுமையான. சம்பூரணமான ஸ்திதியைக் கொண்டிருந்து,
உங்களுடைய எண்ணச் சக்தியைச் சுத்தமாக்குவதும் அவசியமாகும்,
சுலோகம்:
தங்கள் ஒவ்வோர் எண்ணம், வார்த்தை, செயல் மூலம் பிறரைத் தூண்டுபவர்கள்
மாத்திரமே தூண்டுதலைக்
கொடுக்கின்ற ரூபங்கள் ஆகுகின்றார்கள்.
---ஓம் சாந்தி---
0 Comments