09-01-2023 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் உயிருடன் மரணித்து வாழ்வதால், அனைத்தையும் மறந்து விட வேண்டும். ஒரேயொரு தந்தை விளங்கப்படுத்துவதை மாத்திரம் செவிமடுப்பதுடன், தந்தையை நினைவுசெய்யுங்கள்: “நான் உங்களுடன் மாத்திரமே அமர்வேன்…”
கேள்வி:
சற்கதியை அருள்பவரான தந்தையால் குழந்தைகளாகிய உங்களின் சற்கதிக்காக, கொடுக்கப்பட்டுள்ள கற்பித்தல்கள்
யாவை?
பதில்:
பாபா கூறுகிறார்: குழந்தைகளே, சற்கதியடைவதற்கு, சரீரமற்றவராகி,
தந்தையையும், சக்கரத்தையும்
நினைவுசெய்யுங்கள். இந்த யோகத்தின் மூலம் நீங்கள் என்றும் ஆரோக்கியமானவர்களாகவும், நோயற்றவர்களாகவும் ஆகுவதுடன், உங்களின் செயல்கள் எதற்காகவும் வருந்தவும் வேண்டியதில்லை.
கேள்வி:
சுவர்க்க சந்தோஷத்திற்கான
பாக்கியத்தைக் கொண்டிராதவர்களின் அடையாளம் என்ன?
பதில்:
ஞானத்தைச் செவிமடுத்தல்
என்று வரும்பொழுது,
அவர்கள் தங்களுக்கு நேரமில்லை எனக் கூறுகின்றனர்.
அவர்கள் ஒருபொழுதும்
பிராமணக் குலத்தின் அங்கத்தவர்களாக மாட்டார்கள். கடவுள் ஒரு குறித்த ரூபத்தில் வருகிறார் என்பதையேனும் அவர்கள் ஒருபொழுதும் அறிந்துகொள்ள மாட்டார்கள்.
பாடல்: இதயம் உங்களை அழைக்க விரும்புகிறது.
ஓம் சாந்தி.
கடவுள் அமர்ந்திருந்து, பக்தர்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பக்தர்கள் கடவுளின் குழந்தைகள்.
அனைவரும் பக்தர்களே,
ஆனால் ஒரேயொருவரே தந்தையாவார். எனவே,
குழந்தைகளாகிய நீங்கள் அவரது சகவாசத்தில் இந்த ஒரு பிறவியை அனுபவம் செய்ய விரும்புகிறீர்கள். பல பிறவிகள் தேவர்களுடன் செலவிடப்பட்டுள்ளன. பல பிறவிகள் அசுர சமுதாயத்துடனும் செலவிடப்பட்டுள்ளன. கடவுளுக்குரியவராகி, இந்த ஒரு பிறவியைக் கடவுளுடன் அனுபவம் செய்து,
அவருடனேயே வாழ்வதே இப்பொழுது பக்தர்களின் இதயங்களின் ஆசையாகும்.
இப்பொழுது நீங்கள் கடவுளுக்குரியவர்களாகி விட்டதால்,
உயிருடன் மரணித்து வாழ்கிறீர்கள், எனவே நீங்கள் கடவுளுடனேயே வாழ்கின்றீர்கள். உங்களின் இந்த இறுதியான,
பெறுமதிமிக்க வாழ்க்கையில் நீங்கள் பரமாத்மாவான பரமதந்தையுடனேயே இருக்கின்றீர்கள். பாடப்படுகிறது: நான் உங்களுடன் மாத்திரமே உண்பேன், நான் உங்களுடன் மாத்திரமே அமர்வேன், நான் உங்களை மாத்திரமே செவிமடுப்பேன். மரணித்து வாழ்பவர்களால் அவரது சகவாசத்தில் தங்களுடைய இவ்வாழ்க்கையை வாழ முடியும். இதுவே அனைத்திலும் அதிமேன்மையான,
ஒரேயொரு பிறப்பாகும்.
தந்தை ஒருமுறையே வருகின்றார்; அவர் மீண்டும் வர மாட்டார். குழந்தைகளின் ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வதற்காக அவர் ஒருமுறை மாத்திரமே வருகின்றார்.
பக்தி மார்க்கத்திலே மக்கள் பல விடயங்களை வேண்டுகின்றனர். அரைக் கல்பத்திற்கு,
அவர்கள் சாதுக்கள்,
புனிதர்கள், மகாத்மாக்கள்,
தேவர்களின் விக்கிரகங்களிடம் இரக்கின்றனர். பிறவிபிறவியாக, அவர்கள் செபிப்பதுடன்,
விரதமிருந்து, தான தர்மங்களையும் செய்கின்றனர்;
அவர்கள் பல சமயநூல்களையும் வாசிக்கின்றனர். அவர்கள் பல்வேறு சமயநூல்களையும், சஞ்சிகைகளையும் உருவாக்குகின்றனர், அதில் அவர்கள் களைப்படைவதேயில்லை. அவற்றின் மூலம் தாங்கள் கடவுளைக் காண்பார்கள் என அவர்கள் எண்ணுகின்றனர், எவ்வாறாயினும், தந்தையே இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: பிறவிபிறவியாக, நீங்கள் கற்றவற்றினாலோ அல்லது இப்பொழுது நீங்கள் கற்கின்ற சமயநூல்கள் மூலமாகவோ என்னை அடைய முடியாது. பல புத்தகங்கள் உள்ளன.
கிறிஸ்தவர்களும் அதிகளவில் கற்கின்றனர். அவர்கள் தொடர்ந்தும் பலவேறு மொழிகளில் ஏதோவொன்றை எழுதுகின்றனர், மக்களும் தொடர்ந்தும் அவற்றைக் கற்கின்றனர், இப்பொழுது தந்தை கூறுகின்றார்:
நீங்கள் கற்றவை அனைத்தையும் மறந்து விடுங்கள். அவை அனைத்தையும் மறந்து விடுங்கள், அதாவது,
புத்தியிலிருந்து அவற்றை அழித்து விடுங்கள்.
பல புத்தகங்கள் வாசிக்கப்பட்டுள்ளன. புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது: இன்ன இன்னார் கடவுள்,
இன்ன இன்னார் அவதாரங்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்:
நான் வருகின்றபொழுது, எனக்கு உரியவர்கள் ஆகுபவர்களுக்கு, அவ்விடயங்கள் அனைத்தையும் மறந்து விடுமாறு நான் நேரடியாகவே கூறுகின்றேன்.
நான் இப்பொழுது உங்கள் புத்தியிலோ அல்லது முழு உலகிலுமுள்ள வேறு எவரது புத்தியிலோ இருக்காத விடயங்களையே பேசுகின்றேன். பாபா விளங்கப்படுத்துகின்ற விடயங்கள் எந்தச் சமயநூல்களிலும் இல்லை என்பதைக் குழந்தைகளான நீங்கள் இப்பொழுது புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை மிகவும் ஆழமான,
களிப்பூட்டும் விடயங்களை விளங்கப்படுத்துகின்றார். அவர் உங்களுக்குப் படைப்பவரினதும், படைப்பினதும், நாடகத்தின் ஆரம்பம், மத்தி,
இறுதியினதும் செய்தியைக் கூறுகின்றார். எனவே,
பாபா கூறுகின்றார்:
உங்களால் பெருமளவில் நினைவுசெய்ய முடியவில்லையானால், இரண்டு விடயங்களை நினைவுசெய்யுங்கள்: “மன்மனாபவ,
மத்தியாஜிபவ”. இவ்வார்த்தைகள் பக்தி மார்க்கத்திற்கு உரிய கீதையிலிருந்தே வருகின்றன, ஆனால் தந்தை அவற்றின் அர்த்தத்தை மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். கடவுள் இலகு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார். அவர் கூறுகின்றார்: தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள். பக்தி மார்க்கத்தில், நீங்கள் என்னைப் பெருமளவு நினைவுசெய்தீர்கள். துன்ப நேரத்திலேயே அனைவரும் கடவுளை நினைவுசெய்கின்றனர் என அவர்கள் பாடுகின்றனர்,
ஆனால் அவர்கள் எதையுமே புரிந்துகொள்வதில்லை. சத்திய, திரேதா,
யுகங்களிலேயே நிச்சயமாகச் சந்தோஷ உலகம் இருக்கிறது, எனவே அங்கே அவர்கள் ஏன் அவரை நினைவுசெய்ய வேண்டும்?
இப்பொழுது மாயையின் பூமியில் துன்பம் உள்ளதாலேயே, நீங்கள் தந்தையை நினைவுசெய்கின்றீர்கள். சத்திய யுகத்தின் சந்தோஷமும் நினைவுசெய்யப்படுகின்றது. சந்தோஷ உலகில் இருந்தவர்களே,
சங்கம யுகத்தில் தந்தையிடமிருந்து இராஜயோகத்தையும், ஞானத்தையும் கற்பவர்கள்.
குழந்தைகளைப் பாருங்கள்;
பலர் கல்வியறிவு அற்றவர்கள். அது அவர்களுக்கு மேலும் நல்லதாகும். ஏனெனில் அவர்களுடைய புத்தி வேறு எங்கேயும் ஈர்க்கப்பட மாட்டாது.
இங்கே நீங்கள் மௌனமாக இருக்க வேண்டும். உங்கள் உதடுகளினால் எதையுமே கூறவேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்தும் பாபாவை நினைவுசெய்யுங்கள், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். பின்னர் நான் உங்களைத் திரும்பவும் என்னுடன் அழைத்துச் செல்வேன்.
இவ்விடயங்களில் சில கீதையிலே எழுதப்பட்டுள்ளன. புராதன பாரதத்திற்கு ஒரு சமயநூல் மாத்திரமே உள்ளது.
புதியதாக இருந்த இந்தப் பாரதமே,
இப்பொழுது பழையதாகி விட்டது. கிறிஸ்தவ சமயம் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து ஒரு பைபிளே இருந்ததைப் போன்று, ஒரு சமயநூலே உள்ளது,
இறுதிவரைக்கும் அந்த ஒரு சமயநூலையே அவர்கள் கொண்டிருப்பார்கள். கிறிஸ்துவும் பெருமளவில் புகழப்பட்டுள்ளார். அவர் அமைதியை ஸ்தாபித்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
அவர் வந்து,
கிறிஸ்தவ மதத்தை ஸ்தாபித்தார். எவ்வாறாயினும், அமைதி என்ற கேள்வியில்லை. அவர்கள் யார் வந்தாலும் தொடர்ந்தும் புகழ்கின்றனர், ஏனெனில் அவர்கள் தங்களின் சொந்தப் புகழை மறந்து விட்டனர். பௌத்தர்களும்,
கிறிஸ்தவர்கள் போன்றவர்களும் தங்களுடைய மதத்தை நீங்கிச் சென்று,
ஏனையோரைப் புகழ்வதில்லை.
பாரத மக்கள் இப்பொழுது தங்களுடைய சொந்தத் தர்மத்தைக் கொண்டிருப்பதில்லை. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. மக்கள் முழுமையான ஆஸ்திகர்கள் ஆகுகின்றபொழுதே, தந்தை வருகின்றார். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே,
பாடசாலைகள் போன்றவற்றில் பயன்படுத்துகின்ற புத்தகங்கள் குறைந்தபட்சம் ஓர் இலக்கையும், இலட்சியத்தையுமாவது கொண்டுள்ளன. அவற்றில் நன்மை உள்ளது.
ஏனெனில் நீங்கள் வாழ்வுக்காகச் சம்பாதிப்பதுடன், ஓர் அந்தஸ்தையும் பெறுகின்றீர்கள். ஆயினும்,
சமயநூல்கள் போன்றவற்றைக் கற்பது குருட்டு நம்பிக்கை என அழைக்கப்படுகின்றது. ஒரு கல்வி ஒருபொழுதும் குருட்டு நம்பிக்கை என அழைக்கப்படுவதில்லை. அவர்கள் குருட்டு நம்பிக்கையுடன் கற்கின்றார்கள் என்றில்லை. நீங்கள் கற்பதனால், ஒரு சட்டநிபுணராகவோ அல்லது ஒரு பொறியியலாளராகவோ ஆகலாம், எனவே எவ்வாறு அது குருட்டு நம்பிக்கை என அழைக்கப்பட முடியும்? இது கற்குமிடம் (பாடசாலை),
சற்சங்கமல்ல. எழுதப்பட்டுள்ளது: கடவுளின் உலகப் பல்கலைக்கழகம். ஆகவே,
இது கடவுளின் மகத்தான பல்கலைக்கழகம் என்பது புரிந்துகொள்ளப்பட வேண்டும்; இது முழுப் பிரபஞ்சத்திற்கும் உரியது. அனைவருக்கும் இந்தச் செய்தியைக் கொடுங்கள்: உங்கள் சரீரங்களையும், சரீரங்களிற்கான மதங்கள் அனைத்தையும் துறந்து, சுய தர்மத்தில் நிலைத்திருந்து, தந்தையை நினைவுசெய்யுங்கள், அப்பொழுது உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். எந்தளவு நேரம் நீங்கள் யோகத்தில் நிலைத்திருந்தீர்கள் என்ற அட்டவணையை எழுதுங்கள். அனைவரும் தங்களுடைய அட்டவணையை ஒழுங்காக எழுதுகின்றார்கள் என்றில்லை, இல்லை;
அவர்கள் களைப்படைந்து விடுகின்றனர். உண்மையில் நீங்கள் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும் என்றால்,
ஒவ்வொரு நாளும் உங்களுடைய முகத்தைக் கண்ணாடியில் பாருங்கள்,
நீங்கள் இலக்ஷ்மி அல்லது சீதையைத் திருமணம் செய்யத் தகுதிவாய்ந்தவரா அல்லது நீங்கள் ஒரு பிரஜை ஆகுவீர்களா என்பதைத் தெரிந்து கொள்வீர்கள். உங்களின் முயற்சிகளை விரைவாக்குவதற்கும், எந்தளவு நேரம் நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்தீர்கள் எனப் பார்ப்பதற்கும் ஓர் அட்டவணையை வைத்திருக்குமாறு உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. நாள் முழுவதினதும் செயற்பாடுகள், உங்களின் முன்னால் தோன்ற வேண்டும். இளமைப் பருவத்திலிருந்து உங்களின் முழு வாழ்க்கையையும் உங்களால் நினைவுசெய்ய முடிகிறது; எனவே அப்பொழுது உங்களால் உங்களுடைய ஒரு நாள் செயற்பாடுகளை நினைவுசெய்ய முடியாதா?
எந்தளவு நேரம் நீங்கள் பாபாவையும்,
சக்கரத்தையும் நினைவுசெய்தீர்கள் எனச் சோதித்துப் பாருங்கள். இதைப் பயிற்சி செய்வதனால்,
உங்களால் மிக,
மிக விரைவாக ஓட முடிவதுடன்,
உருத்திரரின் மாலையிலும் கோர்க்கப்படுவீர்கள். இதுவே யோக யாத்திரையாகும். இது பற்றி எவருமே அறியாதிருப்பதால், எவ்வாறு இதை வேறு எவராலும் கற்பிக்க முடியும்?
நீங்கள் இப்பொழுது பாபாவுடன் திரும்பிச் செல்ல வேண்டும் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். இராச்சியமே பாபாவின் ஆஸ்தியாகும்.
இதனாலேயே ‘இராஜயோகம்’
என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. நீங்கள் அனைவரும் இராஜரிஷிகள்.
ஏனையோர் ஹத்தயோக ரிஷிகளாவர். அவர்களும் தூய்மையாகவே உள்ளனர்.
ஓர் இராச்சியத்திற்கு அரசர், அரசி,
பிரஜைகள் அனைவருமே தேவைப்படுகின்றனர். சந்நியாசிகளிடையே அரசர்களோ அல்லது அரசிகளோ இருப்பதில்லை.
அவர்கள் எல்லைக்குட்பட்ட ஆர்வமின்மையைக் கொண்டுள்ளனர்,
ஆனால் நீங்களோ எல்லையற்ற ஆர்வமின்மையைக் கொண்டுள்ளீர்கள்;. அவர்கள் தங்களது வீடு,
வாசல்களைத் துறந்தபொழுதிலும் அவர்கள் இன்னமும் இவ்விகார உலகிலேயே வாழ வேண்டும்.
உங்களுக்கு இவ்வுலகின் பின்னர் சுவர்க்கம் உள்ளது. தெய்வீகப் பூந்தோட்டம் நினைவுகூரப்படுகின்றது. குழந்தைகளான உங்;களால் மாத்திரமே உங்கள் புத்தியில் இந்த விடயங்களை வைத்திருக்க முடியும். அட்டவணையை எழுதக் கூட முடியாத பலர் உள்ளனர். முன்னேறிச் செல்லும்பொழுது, அவர்கள் களைப்படைகின்றனர். பாபா கூறுகின்றார்: குழந்தைகளே,
நீங்கள் நினைவுசெய்வதால்;, உங்கள் ஆஸ்தியைக் கோரிக் கொள்கின்ற,
அதியன்பிற்கினிய பாபாவை,
எந்தளவு நேரம் நினைவுசெய்தீர்கள் என உங்களுக்காக ஒரு குறிப்பை உருவாக்கிக் கொள்ளுங்கள். உங்களின் ஆஸ்தியான இராச்சியத்தைக் கோர விரும்பினால்,
நீங்கள் பிரஜைகளை உருவாக்க வேண்டும்.
பாபாவே சுவர்க்கத்தை படைப்பவராதலால், நீங்கள் ஏன் அவரிடமிருந்து ஆஸ்தியைக் பெறக்கூடாது?
பலர் சுவர்க்கம் எனும் ஆஸ்தியைப் பெறுகின்றனர், ஏனையோர் அமைதியைப் பெறுகின்றனர்.
தந்தை அனைவருக்கும் கூறுகின்றார்: குழந்தைகளே,
உங்கள் சரீரங்களையும், உங்கள் சரீர உறவினர்கள் அனைவரையும் மறவுங்கள். நீங்கள் சரீரமற்றவர்களாக வந்து,
84 பிறவிகளைக் கடந்து சென்றீர்கள். இப்பொழுது மீண்டும் ஒருமுறை சரீரமற்றவர்களாகுங்கள். கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்களுக்கும் கிறிஸ்து கீழிறங்கி வந்த பின்னரே,
அவர்கள் கீழே வந்ததாகக் கூறப்பட முடியும். நீங்களும் சரீரமற்றவர்களாகவே வந்து,
சரீரங்களை எடுத்து,
உங்கள் பாகங்களை நடித்தீர்கள். இப்பொழுது உங்களது பாகங்களும் முடிவிற்கு வருகின்றன.
இப்பொழுது கலியுக இறுதி வந்து விட்டதால், தந்தையை நினைவுசெய்யுங்கள். முக்தி தாமத்திற்கு உரியவர்கள் மிகவும் சந்தோஷம் அடைவார்கள். அவர்கள் முக்தியையே விரும்புகின்றனர். ஜீவன்முக்தியடைந்த பின்னர்,
அவர்கள் துன்பத்தை அனுபவம் செய்ய வேண்டும் என்பதால்,
முக்தி அதனிலும் பார்க்க சிறந்தது என அவர்கள் நம்புகின்றனர், அங்கே பெருமளவு சந்தோஷம் உள்ளது என அவர்கள் உணர்ந்து கொள்வதில்லை. ஆத்மாக்களாகிய நாங்கள் பரமாத்மாவுடன் ஆத்ம உலகில் வசிக்கின்றோம். எவ்வாறாயினும் அவர்கள் இப்பொழுது ஆத்ம உலகை மறந்து விட்டார்கள்.
அவர்கள் கூறுகின்றனர்,
தந்தை வருகின்றபொழுது, அவர் தனது தூதுவர்கள் அனைவரையும் அனுப்புகின்றார். உண்மையில்,
எவருமே அனுப்பப்படவில்லை. இவை அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாங்கள் முழு நாடகத்தையும் அறிந்து கொண்டுள்ளோம்.
குழந்தைகளான நீங்கள் தந்தையையும், சக்கரத்தையும் உங்கள் புத்தியில் வைத்திருந்தால், நிச்சயமாகப் பூகோளத்தை ஆட்சிசெய்பவர்கள் ஆகுவீர்கள். இங்கே பெருமளவு துன்பம் உள்ளதாக மக்கள் எண்ணுகின்றார்கள், இதனாலேயே அவர்கள் முக்தியை வேண்டுகின்றனர். “முக்தி”,
“ஜீவன்முக்தி” ஆகிய இரு வார்த்தைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன, ஆனால் எவருமே அவற்றின் அர்த்தத்தை அறியார்கள்.
அனைவருக்கும் சற்கதி அருள்பவர் ஒரேயொரு தந்தையே என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். ஏனைய அனைவரும் தூய்மையற்றவர்கள். முழு உலகமுமே தூய்மையற்றது. இவ்வார்த்தைகளைச் செவிமடுக்கும்பொழுது, சிலர் எதிர்ப்பைக் காட்டுகின்றார்;கள். தந்தை கூறுகின்றார்: உங்கள் சரீரங்களை மறவுங்கள்.
நான் உங்களைச் சரீரமற்றவராகவே அனுப்பினேன்.
நீங்கள் இப்பொழுது சரீரமற்றவர்களாகி, என்னுடன் வீட்டுக்குத் திரும்ப வேண்டும். இது ஞானம் அல்லது கல்வி என அழைக்கப்படுகின்றது. இதைக் கற்பதாலேயே சற்கதி உள்ளது. நீங்கள் யோகத்தின் மூலம் என்றும் ஆரோக்கியமானவர்கள் ஆகுகின்றீர்கள். சத்திய யுகத்தில் நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள். அங்கே எதுவும் குறைவாக இருக்கவில்லை. அங்கே துன்பம் கொடுப்பதற்கு,
விகாரம் எதுவும் இருக்கவில்லை. பற்றை வென்ற அரசனின் கதையை மக்கள் கூறுகின்றனர். பாபா கூறுகின்றார்: நீங்கள் செய்கின்ற செயல்களால் ஒருபொழுதும் வருந்த வேண்டியிருக்காத, அவ்வாறான செயல்களை நான் உங்களுக்குக் கற்பிக்கின்றேன். அங்கே குளிரான காலநிலை இருக்க மாட்டாது. இப்பொழுது பஞ்ச தத்துவங்களும் தமோபிரதானாக உள்ளன.
சிலநேரங்களில் மிகவும் வெப்பமாகவும், சிலநேரங்களில் அதிகக் குளிராகவும் உள்ளது. அங்கே அவ்வாறான அனர்த்தங்கள் எதுவும் இருக்க மாட்டாது; அங்கே எப்பொழும் வசந்த காலமே உள்ளது.
இயற்கையும் சதோபிரதானாக இருக்கின்றது. இப்பொழுது இயற்கையும் தமோபிரதானாக உள்ளதால், எவ்வாறு நல்லவர்கள் இருக்க முடியும்? பாரதத்தின் பிரபல்யமான தலைவர்கள்,
சூழ உள்ள சந்நியாசிகளைப் பின்பற்றுகின்றனர்! ஆயினும் குழந்தைகளான நீங்கள் அவர்களிடம் செல்கின்றபொழுது, தங்களுக்கு நேரமில்லை எனக் கூறுகின்றனர். இதிலிருந்து சுவர்க்கத்தின் சந்தோஷத்தை அனுபவம் செய்வது அவர்களது பாக்கியத்தில் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். அவர்கள் பிராமணக் குலத்தின் அங்கத்தவர்கள் ஆகுவதில்லை.
கடவுள் எவ்வாறு அல்லது எப்பொழுது இங்கு வருகின்றார் என்பதையும் அவர்கள் அறியார்கள். அவர்கள் சிவனின் பிறந்ததினத்தைக் கொண்டாடினாலும், அனைவருமே சிவனைக் கடவுளாகக் கருதுவதில்லை. அவர்கள் அவரைப் பரமாத்மாவான,
பரமதந்தையாகக் கருதி மதிப்பளித்திருந்தால், சிவnஐயந்தியைப் பொது விடுமுறை தினமாகக் கொண்டாடியிருப்பார்கள். தந்தை கூறுகின்றார்: எனது பிறப்பு பாரதத்தில் மாத்திரமே இடம்பெறுகின்றது. ஆலயங்களும் இங்கேயே உள்ளன. அவர் நிச்சயமாக இன்னுமொருவரின் சரீரத்தில் பிரவேசித்திருக்க வேண்டும். தட்ச பிரஜாபதி ஒரு யாகத்தை உருவாக்கியதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. கடவுள் அவரினுள் பிரவேசித்திருப்பாரா? அவர்கள் இதைக் கூறவில்லை. சத்திய யுகத்திலேயே கிருஷ்ணர் இருக்கிறார். தந்தையே கூறுகின்றார்: நான் பிரம்மாவின் மூலம் வாய்வழித் தோன்றல்களான பிராமணர்களை உருவாக்க வேண்டும். நீங்கள் இதை ஏனையோருக்கும் விளங்கப்படுத்தலாம். பாபா உங்களுக்கு மிக இலகுவாக விளங்கப்படுத்துகின்றார்; என்னை நினைவுசெய்யுங்கள். எவ்வாறாயினும், மாயை மிகவும் சக்தி வாய்ந்தவள்,
அவள் உங்களை நினைவில் இருக்க அனுமதிப்பதில்லை. அரைக் கல்பமாக அவள் ஓர் எதிரியாக இருக்கின்றாள். நீங்கள் இந்த எதிரியை வெற்றி கொள்ள வேண்டும். பக்தி மார்க்கத்தில், மக்கள் குளிரில் நீராடச் செல்கின்றனர். அவர்கள் பெருமளவில் தடுமாறுகின்றனர். அவர்கள் அதிகளவில் வலியைச் சகித்துக் கொள்கின்றனர். இது நீங்கள் கற்கின்ற பாடசாலையாகும். இங்கே குருட்டு நம்பிக்கையால் அலைந்து திரிவது என்ற கேள்வியில்லை.
மனிதர்கள் அத்தகைய குருட்டு நம்பிக்கையில் சிக்குண்டுள்ளனர்! அவர்கள் பல குருமார்கள் போன்றோரை ஏற்கின்றனர்,
எவ்வாறாயினும், எந்த மனிதராலும் இன்னுமொருவருக்குச் சற்கதியருள முடியாது.
மனிதர்களை உங்கள் குருவாக ஏற்பது குருட்டு நம்பிக்கையாகும். இந்நாட்களில், சிறு குழந்தைகளும் ஒரு குருவை ஏற்குமாறு செய்யப்படுகின்றனர். இல்லையெனில்,
உங்கள் ஓய்வுக் காலத்தில் ஒரு குருவை ஏற்றுக்கொள்வதே வழக்கமாகும். அச்சா
இனிமையிலும் இனிமையான,
அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய்,
தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- உங்கள் முயற்சிகளைத் தீவிரமாக்குவதற்கு, நினைவு அட்டவணையை வைத்திருப்பது முக்கியமாகும். ஒவ்வொரு நாளும் உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்த்துச் சோதியுங்கள்: நான் எந்தளவு நேரம் அதியன்பிற்கினிய தந்தையை நினைவு செய்கிறேன்?
- நீங்கள் கற்றவை அனைத்தையும் மறந்து விட்டு, மௌனமாக இருங்கள். எதையும் கூற வேண்டிய அவசியம் இல்லை. தந்தையின் நினைவின் மூலம் உங்கள் பாவங்களை அழியுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களுடைய
உதடுகளின் மூலமும்,
உங்கள் மனதிலும்
“பாபா, பாபா”
என்று கூறுவதால்,
“நான்” என்ற
உணர்வு எதனையும்
முடித்து, ஒவ்வொரு
சூழ்நிலையிலும் ஒரு
வெற்றி சொரூபம்
ஆகுவீர்களாக.
ஏனைய ஆத்மாக்களின்
ஊக்கத்தையும், உற்சாகத்தையும்
அதிகரிக்கின்ற, கருவிக் குழந்தைகளாகிய நீங்கள் என்றுமே “நான்” எனும் உணர்வைக் கொண்டிருக்கக்கூடாது. “நான் இதனைச் செய்தேன்” என்றிருக்கக்கூடாது, ஆனால் பாபா என்னை ஒரு கருவியாக்கினார்.
“நான்” என்பதற்குப்
பதிலாக, “என்னுடைய பாபா” என்று கூறுங்கள். “நான் இதனைச் செய்தேன், நான் இதனைக் கூறினேன்” என்றிருக்கக்கூடாது, ஆனால் “பாபா என்னை அதனைச் செய்ய வைத்தார், பாபா அதனைச் செய்தார்”. அப்பொழுது நீங்கள் ஒரு வெற்றி சொரூபம் ஆகுவீர்கள். உங்கள் உதடுகளின் மூலம் எந்தளவிற்கு
அதிகமாக “பாபா, பாபா” என்பது வெளிப்படுகின்றதோ,
அந்தளவிற்கு அதிகமாக உங்களால் ஏனைய பலரையும் பாபாவிற்கு உரியவர்களாக்க முடியும். அனைவரினதும் உதடுகளிலிருந்து வெளிப்படட்டும்:
ஒவ்வொரு சூழ்நிலையிலும்
இவரது அக்கறை பாபா என்பதாகவே உள்ளது.
சுலோகம்:
சங்கம யுகத்தில் உங்கள் சரீரம், மனம், செல்வத்தை ஒரு தகுதிவாய்ந்த
முறையில் பயன்படுத்துவதும்,
உங்கள் பொக்கிஷங்களை
அதிகரிப்பதுமே உண்மையான பகுத்தறிவு ஆகும்.
---ஓம் சாந்தி---
0 Comments