Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 08.01.23

 

08-01-2023  ஓம் சாந்தி  அவ்யக்த பாப்தாதா  மதுவனம்  23/04/1993


Listen to the Murli audio file



நம்பிக்கை நிறைந்த புத்தியைக் கொண்டவர் ஆகுவீர்களாக! நீங்கள் அமரர் ஆகுவீர்களாக!

(தமது வெள்ளி விழாவைக் கொண்டாட வந்திருக்கும் மூத்த சகோதர, சகோதரிகளின் அன்பு நிறைந்த அழைப்பை ஏற்று, அவ்யக்த் பாப்தாதா குழந்தைகளின் ஒன்றுகூடலில் அரைமணிநேரம் வந்தார். எல்லோருக்கும் இனிமையான திருஷ்டியைக் கொடுத்தபின்னர், சில மேன்மையான வாசகங்களைப் பேசினார். இறுதியில், பாபா கை அசைத்து எல்லோரிடமிருந்தும் விடைபெற்றார்)

இன்று, பாப்தாதா அதிகபட்ச அன்பான ஆத்மாக்களை, ஆரம்பத்தில் இருந்து யக்யத்தின் ஸ்தாபனைக்கு ஒத்துழைத்தவர்களை, தமது புத்திகளிலுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் வெற்றியாளர்களாகி, பல்வகையான பிரச்சனைகளின் பரீட்சைகளில் சித்தி அடைந்திருப்பதுடன், ஆரம்பத்தில் இருந்தே அன்பாகவும் ஒத்துழைப்பவர்களாகவும் ஆட்ட, அசைக்க முடியாதவர்களாகவும் இருந்த ஆத்மாக்களையும் சந்திக்க வந்துள்ளார். நம்பிக்கை என்ற பாடத்தில் சித்தி அடைந்து முன்னேறுகின்ற குழந்தைகளிடம் பாபா வந்துள்ளார். இந்த நம்பிக்கையானது, சதா இந்த வாழ்க்கையிலும் உங்களின் எதிர்கால வாழ்க்கைகளிலும் வெற்றியின் அனுபவத்தைத் தொடர்ந்து கொடுக்கும். நம்பிக்கை மற்றும் அமரத்துவத்தின் ஆசீர்வாதம் சதா உங்களுடன் இருக்கிறது. இன்று, குறிப்பாக பாபா, நீண்ட காலமாக அனுபவம் வாய்ந்த, முதிர்ச்சியான (வயதான பிராமணர்கள்) ஆத்மாக்களின் நினைவிற்காகவும் அன்பு பந்தனத்திற்காகவும் வந்துள்ளார். உங்களின் நம்பிக்கைக்குப் பாராட்டுக்கள்!

ஒருபுறம், பாபாவின் முன்னால், யக்யத்தின் அத்திவார ஆத்மாக்கள், அதாவது, பாண்டவர்களின் கோட்டையைச் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். இன்னொரு புறம், மிக ஆரம்பத்தில் இருந்தே அனுபவசாலி ஆத்மாக்களான, பாண்டவ கோட்டையின் சுவரின் முதல் செங்கற்களாக இருந்த நீங்கள் இருக்கிறீர்கள். அத்திவாரம் பாபாவின் முன்னால் இருக்கிறார்கள். கோட்டை பலம் வாய்ந்தது ஆகுவதற்கு அடிப்படையாகவும் உலகின் பாதுகாப்புக் குடையாகவும் இருக்கும் முதல் செங்கற்களும் பாபாவின் முன்னால் இருக்கிறார்கள். பாபா குழந்தைகளின் மீதுள்ள அன்பினால்ஜீ ஹஸ_ர், ஹஜீர்’ (ஆமாம், எனது பிரபுவே, நான் உள்ளேன்) என்ற பாகத்தை நடைமுறைப்படுத்தி, குழந்தைகளின் முன்னால் வந்திருப்பதைப் போல், பாப்தாதாவின் ஸ்ரீமத்திற்கும்; வழிகாட்டல்களுக்கும் கருவி ஆத்மாக்களின் வழிகாட்டல்களுக்கும் சதாஜீ ஹஜீர்’ (உள்ளேன், எனது பிரபுவே) எனச் சொல்லுங்கள். இதில் வீணான மன்மத்தை அல்லது பரமத்தைக் கலக்காதீர்கள். பிரபு இருப்பதை அறிந்திருப்பதனால், ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் அடிப்படையில், தொடர்ந்து பறவுங்கள். சம்ஜா! (புரிந்ததா?) அச்சா.

பாப்தாதா மதுவனவாசிகளுக்கு அவர்களின் சேவைக்கான பாராட்டுக்களைத் தெரிவித்தவண்ணம் பேசுகிறார்:

அச்சா, குறிப்பாக மதுவனவாசிகளுக்குப் பற்பல பாராட்டுக்கள். முழுப் பருவகாலத்திலும் உங்களின் இனிமையான, களைப்பற்ற சேவையால் எல்லோருக்கும் சேவை செய்வதற்கு நீங்கள் கருவிகள் ஆகியுள்ளீர்கள். எனவே, குறிப்பாக மதுவனவாசிகளுக்கு, அவர்களே பருவகாலம் முழுவதற்கும் முதலில் சேவை செய்வதற்குக் கருவிகளாக இருந்தமைக்காகப் பற்பல பாராட்டுக்கள். மதுவனம் என்பது தேன், அதாவது, இனிமை. இனிமை எல்லோரையும் தந்தையை நேசிக்கச் செய்கிறது. இதனாலேயே, அவர்கள் மண்டபத்தில் அமர்ந்திருந்தாலென்ன அல்லது சென்றிருந்தாலென்ன, பாப்தாதா ஒவ்வொரு துறையினருக்கும் அவர்களின் சேவைக்காக விசேடமான வாழ்த்துக்களையும்நீங்கள் களைப்பற்றவராகவும் இனிமையானவராகவும் இருப்பீர்களாகஎன்ற ஆசீர்வாதத்துடன் வழங்குகிறார். நீங்கள் தொடர்ந்து முன்னேறுவதுடன் பறவுங்கள்.

அவ்யக்த பாப்தாதாவுடன் தனிப்பட்ட சந்திப்புக்கள்.

1) கவனக்குறைவாக இருத்தல் பலவீனத்தை ஏற்படுத்தும். ஆகவேஎப்போதும் விழிப்புடன் இருங்கள்.

நீங்கள் எல்லோரும் சங்கமயுகத்தின் மேன்மையான ஆத்மாக்கள்தானே? வேறெந்த யுகத்திற்கும் இல்லாமல் சங்கமயுகத்தின் சிறப்பியல்பு என்ன? சங்கமயுகத்தின் சிறப்பியல்பு என்னவென்றால், நீங்கள் உடனடிப் பலனைப் பெறுவதுடன் இந்தப் பிறவியிலேயே ஒன்றுக்குப் பதிலாகப் பலமில்லியன் மடங்கு பலனை அனுபவம் செய்வீர்கள். நீங்கள் உடனடிப் பலனைப் பெறுகின்றீர்கள்தானே? ஒரு விநாடியேனும் உங்களுக்குத் தைரியம் இருக்குமாயின், எவ்வளவு காலத்திற்கு நீங்கள் தொடர்ந்து உதவியைப் பெறுவீர்கள்? நீங்கள் ஒரு நபருக்குச் சேவை செய்தாலும், அதிகளவு சந்தோஷத்தைப் பெறுவீர்கள். எனவே, ஒன்றுக்காகப் பலமில்லியன்மடங்கு பேறுகள் என்றால், சங்கமயுகத்திலேயே நீங்கள் உடனடிப் பலனைப் பெறுகிறீர்கள் என்று அர்த்தம். எனவே, நீங்கள் புதுப் பழத்தை உண்பதை இரசிக்கிறீர்கள்தானே? ஆகவே, நீங்கள் எல்லோரும் உடனடிப் பழத்தை, அதாவது, புதுப்பழத்தை உண்பவர்கள். அதனாலேயே நீங்கள் சக்திசாலிகளாக இருக்கிறீர்கள். நீங்கள் பலவீனமாக இல்லையல்லவா? நீங்கள் எல்லோரும் சக்திசாலிகள் ஆவீர்கள். எந்தவொரு பலவீனமும் வர அனுமதிக்காதீர்கள். நீங்கள் ஆரோக்கியமாக இருக்கும்போது, பலவீனம் இயல்பாகவே முடிந்துவிடும். நீங்கள் சதா சர்வசக்திவான் தந்தையிடமிருந்து சக்தியைப் பெறுகிறீர்கள். அப்படியாயின் எப்படி நீங்கள் பலவீனம் ஆகுவீர்கள்? பலவீனம் வரமுடியுமா? தவறுதலாகவேனும் அது வருகிறதா? நீங்கள் கவனக்குறைவாக கும்பகர்ணனைப் போல் தூங்கச் சென்றால், அது வரக்கூடும். இல்லாவிட்டால், அதனால் வரமுடியாது. நீங்கள் எல்லோரும் விழிப்பாக இருக்கிறீர்கள்தானே? நீங்கள் கவனயீனமாக இருக்கிறீர்களா? நீங்கள் எல்லோரும் விழிப்பாக இருக்கிறீர்களா? நீங்கள் எப்போதும் விழிப்பாக இருக்கிறீர்களா? சங்கமயுகத்தில், நீங்கள் தந்தையைக் கண்டடைந்தபோது, நீங்கள் எல்லாவற்றையும் அடைந்துள்ளீர்கள். எனவே, நீங்கள் விழிப்பாக இருப்பீர்கள்தானே? தொடர்ந்து பல பேறுகளைப் பெறுபவர்கள், மிகவும் விழிப்பாக இருப்பார்கள்! வர்த்தகர்கள் தமது வியாபாரத்தில் இலாபத்தைப் பெறும்போது, அவர்கள் கவனயீனமாக இருப்பார்களா அல்லது விழிப்பாக இருப்பார்களா? எனவே, நீங்கள் ஒரு விநாடியில் எவ்வளவைப் பெறுவீர்கள்? ஆகவே, எவ்வாறு உங்களால் கவனயீனமானவர் ஆகமுடியும்? தந்தை உங்களுக்குச் சகல பேறுகளையும் கொடுத்துள்ளார். சகல சக்திகளும் உங்களுடன் இருப்பதனால், கவனயீனம் உங்களிடம் வரமுடியாது. எப்போதும் புத்திசாலிகளாக இருங்கள். எப்போதும் எச்சரிக்கையாக இருங்கள்!

பாப்தாதா எப்போதும், ‘யுகே ஓகேயாக உள்ளதுஎனச் சொல்கிறார். எனவே, ஓகே யாக இருப்பவர்கள் ஓகே. ஏனென்றால், அவர்கள் விழிப்பாக இருக்கிறார்கள். அத்திவாரம் சக்திவாய்ந்தது. இதனாலேயே, வெளிப்பட்டுள்ள கிளைகளும் கொப்புகளும் சக்திவாய்ந்தவையாக இருக்கின்றன. பாபாவும் பிரம்மாபாபாவும் குறிப்பாக இலண்டனில் தமது இதயபூர்வமாக முதல் அத்திவாரத்தை நாட்டியுள்ளார்கள். அது குறிப்பாகத் தந்தை பிரம்மாவால் நேசிக்கப்படும் இடமாகும். எனவே, ஆத்மாக்களான நீங்கள் உடனடிப் பலனைப் பெறுவதற்கான உரிமையை எப்போதும் பெற்றுள்ளீர்கள். நீங்கள் எந்தவொரு செயலைச் செய்ய முன்னரும், அதன் பலன் உங்களுக்காகத் தயாராக உள்ளது. அவ்வாறு உணரப்படுகிறதுதானே? அல்லது, அது கஷ்டமான வேலையாக உள்ளதா? ஆடிப் பாடிக் கொண்டே, நீங்கள் தொடர்ந்து பழத்தை உண்கிறீர்கள். எந்தவொரு நிலையிலும், இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் பழத்தை விரும்புகிறீர்கள்தானே? பாப்தாதாவும் யுகே இலுள்ள ஓகே ஆக இருக்கும் குழந்தைகளைப் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். எப்போதும் உங்களின் இந்தப் பட்டத்தை நினைவு செய்யுங்கள். இதுவே சிறந்த பட்டமாகும். நீங்கள் எல்லோரும் சதா ஓகேயாக இருப்பதுடன், மற்றவர்களையும் உங்களின் முகங்களாலும் உங்களின் வார்த்தைகளாலும் மனோபாவத்தாலும் ஓகே ஆக்குபவர்கள். இந்தச் சேவையையே நீங்கள் செய்ய வேண்டும், அப்படித்தானே? இது நல்லது. சேவை செய்வதற்கு உங்களுக்கு நல்லதோர் ஆர்வம் உள்ளது. எங்கிருந்து யாரெல்லாம் வந்திருந்தாலும், நீங்கள் எல்லோரும் தீவிர முயற்சியாளர்களே. அத்துடன் நீங்கள் பறக்கும் ஸ்திதியில் இருப்பவர்கள். யார் மிகவும் சந்தோஷமாக இருக்கிறீர்கள்? ‘நான்தான்எனப் போதையுடன் சொல்லுங்கள். சந்தோஷத்தைத் தவிர, வேறு என்ன உள்ளது? சந்தோஷமே பிராமண வாழ்க்கையின் போஷாக்கு ஆகும். உங்களின் போஷாக்கு இல்லாமல் உங்களால் எவ்வாறு செயல்பட முடியும்? நீங்கள் செயல்படுகிறீர்கள். ஆனால், நீங்கள் போஷாக்கைப் பெறுவதனாலேயே நீங்கள் முன்னேறுகிறீர்கள். இடங்களும் அதிகரிக்கின்றன. பாருங்கள், முன்னரும், மூன்றடி நிலத்தைப் பெறுவது பெரும்பாடாக இருந்தது. இப்போது அது எப்படி இருக்கிறது? அது இலகுவாக இருக்கிறதுதானே? எனவே, இலண்டன் அதிசயங்களைச் செய்துள்ளது. (இப்போது நாம் 50 ஏக்கர் நிலத்தைப் பெற்றுள்ளோம். இது குளோபல் ரிட்ரீட் சென்ரருக்காக வாங்கப்பட்டுள்ளது). மற்றவர்களுக்குத் தைரியத்தைக் கொடுப்பவர்கள் நல்லவர்கள். தைரியமாக இருப்பவர்களும் நல்லவர்களே. பாருங்கள், ஒவ்வொருவரின் ஒத்துழைப்பும் இல்லாமல் இது எப்படி நடந்திருக்க முடியும்? எனவே, யுகே ஐச் சேர்ந்த நீங்கள் ஒவ்வொருவரும் அதிர்ஷ்டசாலிகள். அத்துடன் உங்களின் ஒத்துழைப்பைக் கொடுப்பதிலும் தைரியசாலிகள்.

2) உங்களின் பொறுப்புக்கள் எல்லாவற்றையும் தந்தையிடம் ஒப்படைத்துவிட்டுகவலையற்ற சக்கரவர்த்திகள் ஆகுங்கள்.

நீங்கள் உங்களைச் சதா கவலையற்ற சக்கரவர்த்திகளாகக் கருதுகிறீர்களா? அல்லது, ஒருசில கவலைகள் உள்ளனவா? தந்தை உங்களின் பொறுப்பை எடுத்திருக்கும்போது, நீங்கள் ஏன் பொறுப்பைப் பற்றிக் கவலைப்படுகிறீர்கள்? இப்போது உங்களுக்கிருக்கும் ஒரேயொரு பொறுப்பு, தந்தையுடன் சேர்;ந்து செயல்படுவதேயாகும். அதுவும், தந்தையுடன் சேர்ந்து செயல்பட வேண்டும். தனியே அல்ல. எனவே, உங்களுக்கு என்ன கவலை உள்ளது? நாளை என்ன நடக்கும் என நீங்கள் கவலைப்படுகிறீர்களா? உங்களின் தொழிலைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களா? உலகில் என்ன நடக்கும் எனக் கவலைப்படுகிறீர்களா? என்ன நடக்க இருக்கிறதோ, அது உங்களுக்கு நல்லதாகவே இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். உங்களுக்கு இந்த நம்பிக்கை இருக்கிறதுதானே? இது உறுதியான நம்பிக்கையா அல்லது சிலவேளைகளில் அது அசைகிறதா? உங்களுக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறதோ, அந்த நம்பிக்கையால் வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது. வெற்றிக்கு உத்தரவாதம் உள்ளது என்ற நம்பிக்கையும் உங்களுக்கு இருக்கிறதுதானே? அல்லது, உங்களுக்கு வெற்றி கிடைக்குமா இல்லையா என நீங்கள் சிலவேளைகளில் நினைக்கிறீர்களா? நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் வெற்றியாளர்களே. எப்போதும் வெற்றியாளர்களாகவே இருப்பீர்கள். நீங்கள் மீண்டும் ஒருமுறை சென்ற கல்பத்தின் உங்களின் ஞாபகார்த்தத்தைப் பார்க்கிறீர்கள்தானே? நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் வெற்றியாளர்கள் என்ற இந்தளவு நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதுதானே? இந்தளவு நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா? நீங்களே சென்ற கல்பத்திலும் அவ்வாறிருந்தவர்கள், அப்படித்தானே? அல்லது, அது வேறு யாராவதா? ஆகவே, நீங்கள் புத்திகளில் நம்பிக்கை உடைய வெற்றி இரத்தினங்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். பாப்தாதாவே உங்களை நினைவு செய்கின்ற அத்தகைய இரத்தினங்கள் ஆவீர்கள். உங்களுக்கு இந்தச் சந்தோஷம் இருக்கிறதுதானே? நீங்கள் அதிகளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? இந்த அலௌகீக, தெய்வீகமான மேன்மையான பிறப்பிற்கும் உங்களின் வீடான மதுவனத்தை வந்தடைந்ததற்கும் வாழ்த்துக்கள்.

3) தந்தையும் நானும் - யாருமே உங்களைப் பிரிக்க முடியாதபடி ஒன்றிணைந்தவராக இருங்கள்.

நீங்கள் எல்லோரும் சதா தந்தையுடன் ஒன்றிணைந்திருப்பதை அனுபவம் செய்கிறீர்களா? ஒன்றிணைந்திருப்பவர்களை யாராலும் பிரிக்க முடியாது. நீங்கள் பல தடவைகள் ஒன்றிணைந்திருந்தீர்கள். இப்போதும் ஒன்றிணைந்திருக்கிறீர்கள். எதிர்காலத்திலும் எப்போதும் ஒன்றிணைந்திருப்பீர்கள். இது உறுதியாக உள்ளதுதானே? எனவே, சதா மிக உறுதியாக ஒன்றிணைந்திருங்கள். எனவே, எப்போதும் உணர்வில் வைத்திருங்கள்: நாங்கள் ஒன்றிணைந்திருந்தோம். நாம் ஒன்றிணைந்திருக்கிறோம். நாம் சதா ஒன்றிணைந்திருப்போம். எண்ணற்ற தடவைகள் ஒன்றிணைந்திருந்தவர்களைப் பிரிக்கும் சக்தி எவருக்கும் கிடையாது. அன்பின் அடையாளம் என்ன? (ஒன்றிணைந்திருத்தல்) பௌதீகமாக, கட்டாயத்தின் பேரில், நீங்கள் சிலவேளைகளில் பிரிந்திருக்க வேண்டியுள்ளது. அன்பு இருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட சூழ்நிலைகளில் நீங்கள் பிரிந்திருக்க வேண்டும். எவ்வாறாயினும், இங்கே இது சரீரத்தைப் (பௌதீகம்) பற்றிய கேள்வியே இல்லை. உங்களால் ஒரு விநாடியில் எங்கேயாவது தொலைவிற்குச் செல்ல முடியும். இறைவனுடன் ஆத்மாக்களின் சகவாசம் உள்ளது. இறைவன் தனது சகவாசத்தின் பொறுப்பை எங்கும் நிறைவேற்றுகிறார். அவர் ஒன்றிணைந்த ரூபத்தில் ஒவ்வொருவரின் அன்பின் பொறுப்பையும் நிறைவேற்றுகிறார். ஒவ்வொருவரும் என்ன சொல்கிறார்கள்? ‘எனது பாபா’. அல்லது, அவர்கள் உங்களின் பாபா எனச் சொல்வார்களா? ஒவ்வொருவரும்எனது பாபாஎன்றே சொல்வார்கள். அப்படியாயின், நீங்கள் ஏன்எனதுஎனச் சொல்கிறீர்கள்? உங்களுக்கு ஓர் உரிமை இருப்பதனாலேயே நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். உங்களுக்கு அன்பும் இருக்கிறது. உங்களுக்கு ஓர் உரிமையும் இருக்கிறது. எங்கு அன்பு உள்ளதோ, அங்கு உரிமையும் இருக்கும். இந்த உரிமை இருப்பதன் போதை உங்களுக்கிருக்கிறதுதானே? நீங்கள் இத்தகைய பெரியதோர் உரிமையைப் பெற்றுள்ளீர்கள். சத்தியயுகத்தில்கூட இத்தகைய பெரியதோர் உரிமையை நீங்கள் பெற மாட்டீர்கள். வேறெந்த யுகத்திலும் உங்களுக்கு இறை உரிமைகள் இருக்காது. இந்தப் பேறு இங்கேயே உங்களுக்கு இருக்கிறது. சத்தியயுகத்திலேயே வெகுமதி உள்ளது. ஆனால், அதைப் பெறுகின்ற நேரம் இதுவேயாகும். எனவே, நீங்கள் எதையாவது அடையும்போது அதிகளவு சந்தோஷம் ஏற்படுகிறது. நீங்கள் ஒரு தடவை எதையாவது அடைந்தபின்னர், அது பொதுவானது ஆகிவிடுகிறது. ஆனால், எதையாவது நீங்கள் அடையும்போது, அந்த நேரத்திற்கான போதையும் சந்தோஷமும் அலௌகீகமானது. எனவே, உங்களிடம் அதிகளவு சந்தோஷமும் போதையும் உள்ளன. ஏனென்றால், வழங்குகின்ற ஒரேயொருவருவம் எல்லையற்றவரே ஆவார். ஆகவே, அருள்பவர் எல்லையற்றவர். நீங்கள் பெறுவதும் எல்லையற்றதே. எனவே, நீங்கள் எதன் அதிபதி ஆவீர்கள்? எல்லைக்குட்பட்டதற்கா அல்லது எல்லையற்றதற்கா? நீங்கள் மூவுலகங்களையும் உங்களுக்குச் சொந்தமாக்கினீர்கள். அசரீரி உலகமும் சூட்சும வதனங்களும் உங்களின் வீடாகும். உங்களின் இராச்சியம் பௌதீக உலகில் வரப்போகிறது. எனவே, உங்களுக்கு மூவுலகங்களுக்குமான உரிமை உள்ளது. எனவே, நீங்கள் யார்? உரிமையுள்ள ஆத்மாக்கள். உங்களுக்கு ஏதாவது குறையுள்ளதா? நீங்கள் என்ன பாடலைப் பாடுகிறீர்கள்? (நான் எதை அடைய வேண்டுமோ, அதை அடைந்துவிட்டேன்). நான் விரும்பியதை அடைந்துவிட்டேன். இப்போது அடைவதற்கு எதுவுமேயில்லை. எனவே, நீங்கள் இந்தப் பாடலைப் பாடுகிறீர்களா? அல்லது, உங்களிடம் ஏதாவது குறைகிறதா? ‘எனக்குப் பணம் வேண்டும். எனக்கு வீடு வேண்டும். எனக்கு அரசியல்வாதியின் ஆசனம் வேண்டும்’. உங்களுக்கு எதுவுமே தேவையில்லை. ஏனென்றால், உங்களிடம் ஏதாவது பதவியின் ஆசனம் இருந்தால், ஒரு பிறவிக்கேனும் எந்தவிதமான உத்தரவாதமும் இருக்காது. ஆனால் உங்களுக்கு எவ்வளவு உத்தரவாதம் உள்ளது? உங்களுக்கு 21 பிறவிகளுக்கான உத்தரவாதம் உள்ளது. மாயை உங்களின் உத்தரவாத அட்டையைத் திருடவில்லைத்தானே? நீங்கள் உங்களின் பாஸ்போர்ட்டைத் தொலைத்துவிட்டால், எல்லாமே மிகவும் கஷ்டமாகிவிடும்தானே? எனவே, மாயை உங்களின் உத்தரவாத அட்டையை எடுக்கவில்லையல்லவா? அவள் ஒளித்துப் பிடிக்கும் விளையாட்டை விளையாடுகிறாள். அப்போது நீங்கள் என்ன செய்கிறீர்கள்? மாயைக்கு எந்தவிதமான தைரியமும் இல்லாதபடி மிகவும் சக்திசாலி ஆகுங்கள்.

4) ஒவ்வொரு செயலையும் திரிகாலதரிசியாகச் செய்யுங்கள்.

நீங்கள் எல்லோரும் உங்களை உங்களின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஆத்மாக்களாக அனுபவம் செய்கிறீர்களா? நீங்கள் எப்படிச் சொல்வீர்கள்: இப்போது உங்களின் சிம்மாசனத்தைப் பெற்றுள்ளீர்களா? அல்லது எதிர்காலத்தில் நீங்கள் அதைப் பெறுவீர்களா? எல்லோரும் சிம்மாசனத்தில் அமர்வார்களா? (இதய சிம்மாசனம் மிகப் பெரியது). இதய சிம்மாசனம் பெரியது. ஆனால், ஒரே நேரத்தில் சத்திய யுக சிம்மாசனத்தில் எத்தனை பேரால் அமர முடியும்? யாராலும் சிம்மாசனத்தில் அமர முடியும். ஆனால் சிம்மாசனத்தின் உரிமையைக் கொண்ட இராஜ குடும்பத்தில் ஒருவராக நீங்கள் இருப்பீர்கள்தானே? ஒன்றாக உங்களால் சிம்மாசனத்தில் அமர முடியாதல்லவா? இந்த வேளையில், நீங்கள் எல்லோரும் ஒரு சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். இதனாலேயே, இந்தப் பிறவியின் முக்கியத்துவம் உள்ளது. எத்தனை பேர் வேண்டுமென்றாலும், யார் வேண்டுமென்றாலும் இதய சிம்மாசனத்தில் அமர முடியும். இந்த வேளையில் வேறு ஏதாவது சிம்மாசனம் உள்ளதா? எந்த சிம்மாசனம்? (அகால் தக் - அமரத்துவ சிம்மாசனம்). அழியாத ஆத்மாக்களான உங்களின் சிம்மாசனம் நெற்றியாகும். எனவே, நீங்கள் நெற்றியின் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறீர்கள். அத்துடன் இதய சிம்மாசனத்திலும் அமர்ந்திருக்கிறீர்கள். உங்களிடம் இரட்டைச் சிம்மாசனங்கள் உள்ளன, அல்லவா? நெற்றி எனும் அமரத்துவ சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஓர் ஆத்மா என்ற போதை உங்களுக்கு இருக்கிறதா? சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஓர் ஆத்மா சுயத்தின் மீது அதிகாரத்தைக் கொண்டிருப்பார். இதனாலேயே, இத்தகையதோர் ஆத்மா சுய அதிபதி ஆவார். சுய இராச்சியத்தின் விழிப்புணர்வானது உங்களுக்கு இருக்கும்போது, அது உங்களைத் தந்தையிடமிருந்து இலகுவாக சகல பேறுகளையும் அனுபவம் அடையச் செய்கிறது. எனவே, மூன்று சிம்மாசனங்களின் ஞானமும் உங்களுக்கு உள்ளது. நீங்கள் ஞானம் நிறைந்தவர்கள்தானே? நீங்கள் சக்திசாலிகளா? அல்லது ஞானம் நிறைந்தவர்கள் மட்டும்தானா? நீங்கள் ஞானம் நிறைந்தவர்களாக இருக்கும் அளவிற்குச் சக்திசாலிகளாகவும் இருக்கிறீர்களா? அல்லது, நீங்கள் அதிகம் ஞானம்நிறைந்தவர்களாகவும் குறைந்தளவு சக்திசாலிகளாகவும் இருக்கிறீர்களா? நீங்கள் ஞானத்தில் கெட்டிக்காரர்கள். நீங்கள் ஞானம் நிறைந்தவர்களும் சக்திசாலிகளும் இரண்டும் ஆவீர்கள். எனவே, மூன்று சிம்மாசனங்களின் உணர்வில் சதா இருங்கள்.

ஞானத்தில், மூன்றின் முக்கியத்துவம் உள்ளது. நீங்கள் முக்காலங்களைப் பற்றியும் அறிவீர்கள். அல்லது, உங்களுக்கு நிகழ்காலத்தைப் பற்றி மட்டுமே தெரியுமா? நீங்கள் எப்பொழுதெல்லாம் எந்தவொரு செயலைச் செய்கிறீர்களோ, அதை ஒரு திரிகாலதரிசியாக இருந்து செய்கிறீர்களா? அல்லது, அதன் ஒரு விடயத்தை மட்டும் அறிந்தவண்ணம் செய்கிறீர்களா? நீங்கள் யார் - ஒரு காலத்தை அறிந்தவர்களா அல்லது முக்காலங்களையும் அறிந்தவர்களா? நாளை என்ன நடக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா? நாளை என்ன நடக்க இருக்கிறதோ, அது மிகவும் நல்லதாகவே இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம் என நீங்கள் சொல்கிறீர்கள். இந்தளவை நீங்கள் அறிவீர்கள்தானே? எனவே, அது உங்களைத் திரிகாலதரிசி ஆக்குகிறதல்லவா? ஏற்கனவே என்ன நடந்ததோ, அது நல்லதே. இப்பொழுது என்ன நடக்கிறதோ, அது மிகவும் நல்லது. என்ன நடக்க இருக்கிறதோ, அது மிகச் சிறப்பாக இருக்கும். என்ன நடக்க இருக்கிறதோ, அது சிறந்ததாகவே இருக்கும், எந்தவொரு தீமையும் நடக்க முடியாது என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதல்லவா? ஏன்? நீங்கள் தந்தையர் எல்லோரிலும் மிகச் சிறந்த தந்தையைப் பெற்றுள்ளீர்கள். நீங்கள் எல்லோரிலும் சிறந்தவர்கள் ஆகியுள்ளீர்கள். அத்துடன் நீங்கள் சகல செயல்களிலும் சிறந்ததையே செய்கிறீர்கள். எனவே, எல்லாம் நன்றாக இருக்கிறதுதானே? அல்லது, சிறிது தீமையும் சிறிது நன்மையும் உள்ளனவா? நீங்கள் மேன்மையான ஆத்மாக்கள் என்பதை நீங்கள் அறிந்திருப்பதனால், மேன்மையான ஆத்மாக்களின் எண்ணங்களும் வார்த்தைகளும் செயல்களும் எல்லாவற்றிலும் மிகவும் சிறப்பானதாக இருக்கும்தானே? எனவே, நீங்கள் நன்மை செய்யும் தந்தையைக் கண்டடைந்திருப்பதனால், எப்போதும் நன்மையே இருக்கும், மேலும் நன்மையே ஏற்படும் என்பதை சதா உணர்ந்தவராக இருங்கள். தந்தை உலக உபகாரி என்று அழைக்கப்படுகிறார். நீங்கள் மாஸ்ரர் உலக உபகாரிகள் ஆவீர்கள். நீங்கள் உலகிற்கே நன்மை செய்வதனால், உங்களுக்கு நன்மை செய்யாத எதுவும் இருக்க முடியாது. இதனாலேயே, ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு பணியும் ஒவ்வோர் எண்ணமும் நன்மை செய்வதே என்ற நம்பிக்கையை நீங்கள் கொண்டிருக்க வேண்டும். சங்கமயுகம் நன்மை தரும் யுகம் என்று அழைக்கப்படுகிறது. எனவே, பேறுகள் இல்லாத எதுவும் இருக்க முடியாது. ஆகவே, நீங்கள் எதை நினைவு செய்வீர்கள்? என்ன நடக்கிறதோ, என்ன நடக்க இருக்கிறதோ, எல்லாமே அனைத்திலும் சிறந்ததாகும். இந்த விழிப்புணர்வானது சதா உங்களைத் தொடர்ந்து முன்னேறச் செய்யும். அச்சா. நீங்கள் உலகில் எல்லா இடங்களிலும் தந்தையின் கொடியை ஏற்றுகிறீர்கள். நீங்கள் எல்லோரும் தைரியமாகவும் தீவிர முயற்சியுடனும் முன்னேறிச் செல்கிறீர்கள். நீங்கள் தொடர்ந்து முன்னேறுவீர்கள். உங்களால் எதிர்காலத்தைப் பார்க்க முடிகிறதுதானே? உங்களின் எதிர்காலம் என்னவென்று யாராவது உங்களைக் கேட்டால், அது எல்லாவற்றிலும் சிறப்பானது என்பதை நாம் அறிவோம் என அவர்களிடம் கூறுங்கள்.

ஆசீர்வாதம்:

நீங்கள் ஒரு கவலையற்ற சக்கரவர்த்தியாகி, உங்களின் நெற்றியில் உங்களின் மேன்மையான பாக்கிய ரேகையைப் பார்ப்பதன் மூலம் எல்லாக் கவலைகளில் இருந்தும் விடுபட்டவர் ஆகுவீர்களாக.


கவலையற்றவராக இருக்கும் இராச்சியமே, எல்லாவற்றிலும் அதியுயர்ந்த இராச்சியமாகும். ஒருவர் கிரீடத்தை அணிந்து, சிம்மாசனத்தில் இருந்தவண்ணம் தொடர்ந்தும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால், அது சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதா? அல்லது கவலைப்படுவதா? பாக்கியத்தை அருள்பவரான இறைவன், உங்களின் நெற்றியில் உங்களின் மேன்மையான பாக்கிய ரேகையை வரைந்துள்ளார். எனவே, நீங்கள் கவலையற்ற சக்கரவர்த்திகள் ஆகவேண்டும். எனவே, எப்போதும் உங்களின் நெற்றியில் உங்களின் மேன்மையான பாக்கிய ரேகையைத் தொடர்ந்து பாருங்கள். ‘ஆஹா எனது மேன்மையான இறை பாக்கியமே!’ இந்த ஆன்மீக போதையைப் பேணுங்கள். எல்லாக் கவலைகளும் முடிந்துவிடும்.

சுலோகம்:

ஒருமுகப்படுத்தும் சக்தியாலும் ஆன்மீக சேவை செய்வதனாலும் ஆத்மாக்களை வரவழைப்பதே உண்மையான சேவையாகும்.

 

--ஓம் சாந்தி---

Download PDF

Post a Comment

0 Comments