Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 07.01.23

07-01-2023  காலைமுரளி  ஓம்சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



சாராம்சம்
:

இனிய குழந்தைகளே, நீங்கள் தந்தையின் செயற்பாட்டின் ஞானத்தையும், நாடகத்தின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தையும் தந்தையிடமிருந்து பெற்றுள்ளீர்கள். இப்பொழுது இந்நாடகம் முடிவுக்கு வருகின்றது என்பதையும், நாங்கள் வீட்டுக்குத் திரும்பவுள்ளோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.

கேள்வி:

உங்களைத் தந்தையுடன் பதிவு செய்வதற்கு, நீங்கள் எந்த விதிகளுக்குக் கீழ்ப்படிய வேண்டும்?

பதில்:

உங்களைத் தந்தையுடன் பதிவுசெய்வதற்கு: 1) தந்தையிடம் உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள். 2) உங்களிடமுள்ள அனைத்தையும் பாரதத்தைச் சுவர்க்கமாக்குகின்ற சேவைக்குப் பயன்படுத்துங்கள். 3) முற்றிலும் விகாரமற்றவர் ஆகுவதற்கும், இவ்விதமாக நடைமுறையில் வாழ்ந்து, அதன் அத்தாட்சியைக் கொடுப்பதற்கும் ஒரு சத்தியத்தைச் செய்யுங்கள். அத்தகைய குழந்தைகளின் பெயர்கள் சர்வசக்திவான் அரசாங்கத்தின் பதிவேட்டில் பதிவுசெய்யப்படுகின்றன. தாங்கள் பாரதத்தைச் சுவர்க்கமாக, அதாவது, அரசர்களின் பூமியாக ஆக்குகிறோம் என்னும் போதையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். பாரதத்தின் சேவைக்காக நாங்கள் எங்களைத் தந்தையிடம் அர்ப்பணிக்கிறோம்.

பாடல்:  ஓம் நமசிவாய

ஓம் சாந்தி. இப்பாடலில் புகழப்படுகின்றவரே, இங்கமர்ந்திருந்து தனது படைப்பின் புகழைப் பாடுகிறார். இது ஓர் அற்புதமான நாடகம் எனவும் அழைக்கப்படுகிறது. ஒரு நாடகம் ஒரு விளையாட்டு என அழைக்கப்படுகிறது. தெய்வீகக் குணங்களை உடையவர்களே புகழப்படுகிறார்கள், ஆகவே இவரின் புகழ் தனித்துவமானதாகும். எவ்வாறாயினும், மக்கள் இதனைப் புரிந்துகொள்வதில்லை. பரமாத்மாவாகிய பரமதந்தையே அதிகளவு புகழப்படுபவர் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். அவருடைய பிறந்த தினம், அதாவது, சிவ ஜெயந்தி விரைவில் வருகிறது என்பதையும் நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இப்பாடல் சிவஜெயந்தியில் ஒலிக்கச் செய்வதற்கு மிகவும் சிறந்ததாகும். அவருடைய புகழை அறிந்துகொள்வதுடன், குழந்தைகளாகிய நீங்கள் நாடகத்தையும் அறிந்துகொள்கிறீர்கள். இது நிச்சயமாக ஒரு நாடகம் ஆகும். அது நாடகம் எனவும், அத்துடன் ஒரு கூத்து எனவும் அழைக்கப்படுகிறது. தந்தை கூறுகிறார்: தேவர்களின் செயற்பாடுகளை விடவும் எனது செயற்பாடுகள் மேலும் தனித்துவமானவை. ஓர் அரசாங்கத்திலுள்ள ஜனாதிபதியின் அந்தஸ்து, ஓர் அமைச்சரின் அந்தஸ்திலிருந்து வேறுபட்டிருப்பதைப் போன்றே, ஒவ்வொருவரின் செயற்பாடும் வேறுபட்டதாகும். கடவுள் சர்வவியாபியாக இருந்தால், அனைவருடைய செயற்பாடும் ஒரேமாதிரியாக இருக்கும். கடவுள் சர்வவியாபி எனக் கூறுவதனால், அவர்கள் தொடர்ந்தும் பட்டினியாக இருந்து வருகிறார்கள். மனிதர்கள் ஒருபொழுதும் தந்தையையோ அல்லது தந்தையின் முடிவற்ற புகழையோ அறியார்கள். அவர்கள் தந்தையை இனங்காணும் வரை, அவர்களால் அவருடைய படைப்பைப் புரிந்துகொள்ள முடியாது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் படைப்பைப் பற்றிப் புரிந்துகொள்கிறீர்கள். பிரம்ம தத்துவமும், சூட்சும உலகமும், மனித உலகச் சக்கரமும் உங்கள் புத்தியில் தொடர்ந்தும் சுழல்கிறது. இது ஒரு நாடகம் ஆகும், அதாவது, படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானம் ஆகும். இந்நேரத்தில், உலக மக்கள் நாஸ்திகர்கள் ஆகியுள்ளார்கள். அவர்கள் முற்றிலும் எதனையும் புரிந்துகொள்ளாமல், பொய்களைக் கூறுகிறார்கள். புனிதர்கள் கருத்தரங்குகள் போன்றவற்றைத் தொடர்ந்தும் நடாத்துகிறார்கள், ஆனால் இப்பொழுது நாடகம் முடிவடையவுள்ளது என்பதை அப்பாவிகள் அறியார்கள். எவ்வாறாயினும், நாடகம் முடிவடையவுள்ளதனால், அவர்கள் இப்பொழுது ஏதோவொன்றை உணர்கிறார்கள். தாங்கள் இராம இராச்சியத்தை விரும்புவதாக அனைவரும் இப்பொழுது கூறுகிறார்கள். இங்கே கிறிஸ்தவர்கள் ஆட்சிசெய்த பொழுது, புதிய பாரதம் இருக்க வேண்டும் என அவர்கள் கூறவில்லை. இப்பொழுது அதிகளவு துன்பம் உள்ளது. அனைவரும் இப்பொழுது கூவியழைக்கிறார்கள்: கடவுளே, எங்களைத் துன்பத்திலிருந்து விடுவியுங்கள்! நிச்சயமாக, கலியுகத்தின் இறுதியில் பெருமளவு துன்பம் இருக்கும். நாளுக்கு நாள், தொடர்ந்தும் துன்பம் அதிகரிக்கிறது. அனைவரும் தங்கள் சொந்த இராச்சியத்தை ஆட்சிசெய்ய ஆரம்பிப்பார்கள் என அவர்கள் எண்ணுகிறார்கள். எவ்வாறாயினும், விநாசம் நடைபெற வேண்டும் என்பதை எவரும் அறியார். குழந்தைகளாகிய நீங்கள் பெருஞ் சந்தோஷத்தில் நிலைத்திருக்க வேண்டும். எல்லையற்ற தந்தை சுவர்க்கத்தைப் படைக்கிறார் என்பதால், அவருடைய குழந்தைகள் சுவர்க்க இராச்சியத்தைப் பெற வேண்டும் என உங்களால் எவருக்கும் கூற முடியும். விசேடமாகப் பாரத மக்களே இதனை நினைவு செய்கிறார்கள். அவர்கள் கடவுளைச் சந்திப்பதற்காகப் பக்தி செய்கிறார்கள். அவர்கள் சுவர்க்கம் என அறியப்பட்டுள்ள, கிருஷ்ணரின் பூமிக்குச் செல்ல விரும்புகிறார்கள், ஆனால் சத்தியயுகத்தில் மாத்திரமே கிருஷ்ணரின் பூமி இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துகொள்வதில்லை. கலியுகம் இப்பொழுது முடிவுக்கு வருகிறது, கிருஷ்ணரின் இராச்சியம் இருக்கின்ற சத்தியயுகம் வரவுள்ளது. அனைவரும் பரமாத்மாவாகிய பரமதந்தை சிவனின் குழந்தைகள் என்பதை அனைவரும் அறிவார்கள். ஆகவே, கடவுள் புதிய உலகைப் படைத்திருக்க வேண்டும். அவர் அதனை நிச்சயமாகப் பிரம்மாவின் வாயினூடாகப் படைத்திருக்க வேண்டும். வாய்வழித்தோன்றல்கள் நிச்சயமாகப் பிராமண குல இரத்தினங்களாக இருந்திருக்க வேண்டும், அந்தக் காலம் சங்கமயுகமாகவே இருந்திருக்க வேண்டும். சங்கமயுகமே நன்மை அளிக்கும் யுகமாகும், அப்பொழுது கடவுள் அமர்ந்திருந்து, உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பித்திருப்பார். நாங்கள் இப்பொழுது பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்களாகிய பிராமணர்கள். அப்படியிருந்தும், நீங்கள் வினவுகிறீர்கள்: கடவுள் பிரம்மாவின் சரீரத்தில் பிரவேசித்து, இராஜயோகத்தைக் கற்பிக்கிறார் என்பதை எவ்வாறு எங்களால் ஏற்றுக் கொள்ள முடியும்? பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்கள் ஆகி, இந்த இராஜயோகத்தைக் கற்றுக் கொள்வதனால், நீங்கள் இயல்பாகவே இதனை அனுபவம் செய்வீர்கள். இதில் நம்பிக்கை கொள்ளச் செய்தல் அல்லது குருட்டு நம்பிக்கை என்ற கேள்விக்கு இடமில்லை. பொதுவாக முழு உலகிலும், குறிப்பாக பொம்மைகளை (சிலைகள்) அதிகளவு வழிபடும் பாரதத்திலும் குருட்டு நம்பிக்கையே உள்ளது. பாரதம் சிலைகளின் இடம் என்று அறியப்பட்டுள்ளது. பிரம்மா பல கரங்களுடன் சித்தரிக்கப்படுகிறார். இப்பொழுது, அது எவ்வாறு சாத்தியமாக முடியும்? ஆம், பிரம்மாவுக்குப் பல குழந்தைகள் உள்ளார்கள். விஷ்ணு நான்கு கரங்களுடன் சித்தரிக்கப்படுகிறார்: இலக்ஷ்மியின் இரு கரங்களும், நாராயணனின் இரு கரங்களுமாகும். பிரம்மாவுக்குப் பல குழந்தைகள் இருக்க வேண்டும். அவருக்கு நான்கு மில்லியன் குழந்தைகள் இருப்பார்களாயின், அவருக்கு எட்டு மில்லியன் கரங்கள் உள்ளன என்று அர்த்தமாகும். உண்மையில், அது அவ்வாறு இல்லை, ஆனால் நிச்சயமாக மக்கள் தேவைப்படுகிறார்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தை வந்து, இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். இறுதியில் என்ன நடைபெறப் போகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் தொடர்ந்தும் பல்வேறு திட்டங்களைத் தீட்டுகிறார்கள். இங்கே, பாபாவிடம் குழந்தைகளாகிய உங்களையிட்டு, ஒரேயொரு திட்டமே உள்ளது, அந்த இராச்சியம் இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகிறது. நீங்கள் எந்தளவுக்கு ஏனையோரை உங்களுக்குச் சமமாக்குகின்ற சேவையைச் செய்கிறீர்களோ, அந்தளவுக்கு நீங்கள் ஓர் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவீர்கள். தந்தை ஞானம் நிறைந்தவரும், பேரானந்தம் நிறைந்தவரும், கருணை நிறைந்தவரும் என அழைக்கப்படுகிறார். அவர் கூறுகிறார்: எனக்கும் நாடகத்தில் ஒரு பாகம் உள்ளது. மாயைக்கு எவர்மீதும் கருணை கிடையாது. நான் வந்து, அனைவர் மீதும் கருணை கொள்ள வேண்டும். நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன். நான் உலகச் சக்கரத்தின் இரகசியங்களையும் விளங்கப்படுத்துகிறேன். ஞானம் நிறைந்தவராகிய நானே, ஞானக்கடல் என அழைக்கப்படுகிறேன். குழந்தைகளாகிய நீங்கள் இதனை அறிவீர்கள், ஆகவே உங்களால் அதனை ஏனையோருக்கு விளங்கப்படுத்த முடியும். இங்கே, குருட்டு நம்பிக்கை என்னும் கேள்வியே கிடையாது. நாங்கள் அசரீரியான பரமாத்மாவாகிய பரமதந்தையை நம்புகிறோம். முதலில், நீங்கள் அவரைப் புகழ வேண்டும். அவர் வந்து, இராஜயோகத்தினூடாகச் சுவர்க்கத்தைப் படைக்கிறார். அப்பொழுது, நீங்கள் சுவர்க்கவாசிகளைப் புகழ வேண்டும். பாரதம் சுவர்க்கமாக இருந்தபொழுது, அனைவரும் தெய்வீகக் குணங்கள் நிறைந்தவர்களாகவும், பதினாறு சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்களாகவும் இருந்தார்கள். அது 5000 வருடங்களுக்குரிய கேள்வி ஆகும். பரமாத்மாவின் புகழே அதி தனித்துவமானதாகும். பின்னர், தேவர்களின் புகழ் உள்ளது. இதில் குருட்டு நம்பிக்கை என்னும் கேள்வியே கிடையாது. இங்கே, அனைவரும் குழந்தைகள்; அவர்கள் சிஷ்யர்கள் அல்ல. இது ஒரு குடும்பம் ஆகும். நாங்களே இறை குடும்பத்தினர். ஆதியில், ஆத்மாக்களாகிய நாங்கள் பரமாத்மாவாகிய பரமதந்தையின் குழந்தைகள், ஆகவே நாங்கள் ஒரு குடும்பம். முதலில், அவர்கள் அசரீரியானவர்களாகவும், பின்னர் பௌதீகமானவர்களாகவும் ஆகுகிறார்கள். இந்நேரத்தில், இதுவே அதி அற்புதமான குடும்பம். இதில் சந்தேகம் என்னும் கேள்வியே கிடையாது. அனைவரும் சிவனின் குழந்தைகள். பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகளும் நினைவுகூரப்படுகிறார்கள். நீங்கள் பிரம்மகுமார்களும் குமாரிகளும் ஆவீர்கள். புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகிறது. பழைய உலகம் உங்கள் முன்னால் உள்ளது. முதலில் நீங்கள் தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். பிரம்மாவின் சந்ததி ஆகாமல், உங்களால் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெற முடியாது. பிரம்மாவிடம் இந்த ஞானம் இருக்கவில்லை. சிவபாபாவே ஞானக்கடல். நாங்கள் அவரிடமிருந்து எங்கள் ஆஸ்தியைக் கோருகிறோம். நாங்கள் வாய்வழித்தோன்றல்கள். நாங்கள் அனைவரும் இராஜயோகம் கற்கிறோம். சிவபாபாவே எங்கள் அனைவருக்கும் கற்பிப்பவர். அவர் பிரம்மாவின் இச்சரீரத்தில் பிரவேசித்து, எங்களுக்குக் கற்பிக்கிறார். பௌதீகமான பிரஜாபிதா பிரம்மா, முழுமையடையும் பொழுது, ஒரு தேவதை ஆகுகிறார். சூட்சும உலகவாசிகளே தேவதைகள் என அழைக்கப்படுகிறார்கள். அங்கே, சதையோ அல்லது எலும்போ கிடையாது. குழந்தைகள் அதன் காட்சிகளைக் காண்கிறார்கள். தந்தை கூறுகிறார்: பக்தி மார்க்கத்தில், நீங்கள் என்னிடமிருந்து தற்காலிகச் சந்தோஷத்தைப் பெறுகிறீர்கள். நான் மாத்திரமே அருள்பவர், இதனாலேயே அனைவரும் கடவுளின் பெயரில் அர்ப்பணிக்கிறார்கள். கடவுளே தங்கள் பக்தியின் பலனைக் கொடுக்கிறார் என அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் ஒருபொழுதும் ஒரு சாது அல்லது புனிதர் போன்றவரின் பெயரைக் குறிப்பிடுவதில்லை. பாபா மாத்திரமே அருள்பவர். அவர் வேறு ஒருவரை எதனையாவது அருள்வதற்கு ஒரு கருவியாக ஆக்கலாம். இவ்விதமாக, அவரின் புகழை அவர் (சிவபாபா) அதிகரிக்கிறார். அவை அனைத்தும் தற்காலிகச் சந்தோஷம் மாத்திரமே ஆகும். இது முடிவற்ற சந்தோஷம் ஆகும். தாங்கள் யாருடைய கட்டளைகளைப் பின்பற்றினார்களோ, அவர்களுக்கு இந்த ஞானத்தை விளங்கப்படுத்த வேண்டும் என்பதைப் புதிய குழந்தைகள் வரும்பொழுது, புரிந்துகொள்கிறார்கள். இந்நேரத்தில், அனைவரும் மாயையின் கட்டளைகளைப் பின்பற்றுகிறார்கள், ஆனால் இங்கோ நீங்கள் கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகிறீர்கள். இவ்வழிகாட்டல்கள் அரைக் கல்பத்துக்கு நீடிக்கின்றன, ஏனெனில் நீங்கள் பெறுகின்ற வெகுமதி சத்திய, திரேதா யுகங்களினூடாக நீடிக்கிறது. அங்கே, தவறான வழிகாட்டல்கள் கிடையாது, ஏனெனில் அங்கே மாயை இருப்பதில்லை. பின்னரே தவறான வழிகாட்டல்கள் ஆரம்பிக்கின்றன. இப்பொழுது பாபா எங்களைத் தனக்குச் சமமமானவர்கள் ஆக்குகிறார்: முக்காலங்களை அறிந்தவர்களாகவும் (திரிகாலதரிசி), மூவுலகங்களின் அதிபதிகளாகவும் (திரிலோகநாத்) ஆக்குகிறார். நாங்கள் ஒளித் தத்துவத்தின் (பிரமாந்தம்) அதிபதிகள் ஆகுகிறோம், பின்னர் நாங்கள் உலக அதிபதிகளாகவும் ஆகுகிறோம். தந்தை தனது சொந்தப் புகழை விடவும் உயர்வான புகழைக் குழந்தைகளுக்குக் கொடுத்துள்ளார். முழு உலகத்தின் குழந்தைகளுக்காகவும் முயற்சி செய்பவரும், அவர்களைத் தன்னை விடவும் திறமைசாலிகளாகவும் ஆக்குபவருமாகிய அத்தகையதொரு தந்தையை நீங்கள் எப்பொழுதாவது சந்தித்துள்ளீர்களா? அவர் கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு உலக இராச்சியத்தைக் கொடுக்கிறேன். நான் அதனை அனுபவம் செய்வதில்லை. எவ்வாறாயினும், நான் எனது கரத்தில் தெய்வீகக் காட்சிக்கான திறவுகோலை வைத்திருக்கிறேன். அது எனக்குப் பக்தி மார்க்கத்திலும் பயனுள்ளதாக ஆகுகிறது. இப்பொழுதும், நான் ஆத்மாக்களுக்குப் பிரம்மாவின் காட்சியைக் கொடுக்கிறேன். இந்த பிரம்மாவிடம் சென்று, இராஜயோகத்தைக் கற்று, ஓர் இளவரசர் ஆகுமாறு நான் அவர்களுக்குக் கூறுகிறேன். பலர் இக்காட்சிகளைப் பெறுகிறார்கள். இளவரசர்கள் அனைவரும் ஒரு கிரீடத்தை அணிகிறார்கள், ஆனால் தாங்கள் சூரியவம்சத்து இளவரசரின் காட்சியைக் கண்டார்களா அல்லது சந்திர வம்சத்து இளவரசரின் காட்சியைக் கண்டார்களா என்பதைக் குழந்தைகள் புரிந்துகொள்வதில்லை. தந்தையின் குழந்தைகள் ஆகுபவர்கள் ஆரம்பத்திலோ அல்லது பின்னரோ நிச்சயமாக இளவரசர்களும், இளவரசிகளும் ஆகுவார்கள். உங்கள் முயற்சிகள் சிறந்தவையாக இருந்தால், நீங்கள் சூரிய வம்சத்துக்கு உரியவர்கள் ஆகுவீர்கள், இல்லாவிட்டால், சந்திர வம்சத்துக்கு உரியவர்கள் ஆகுவீர்கள். ஓர் இளவரசரைப் பார்ப்பதனால் மாத்திரம் சந்தோஷமடையாதீர்கள். இவை அனைத்தும் உங்கள் முயற்சிகளிலேயே தங்கியுள்ளது. பாபா அனைத்தையும் மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துகிறார்; இதில் குருட்டு நம்பிக்கை என்னும் கேள்வியே கிடையாது. இது இறை குடும்பம். எவ்வாறாயினும், இந்த ரீதியில், அனைவரும் கடவுளின் குழந்தைகள், ஆனால் அவர்கள் கலியுகத்தில் இருக்கிறார்கள், நீங்களோ சங்கமயுகத்தில் இருக்கிறீர்கள். நீங்கள் யாரிடம் சென்றாலும் அவர்களுக்குக் கூறுங்கள்: நாங்களே பிரம்மாவின் வாய்வழித்தோன்றல்களாகிய, சிவனின் குலத்தினர். பிராமணர்களால் மாத்திரமே சுவர்க்க ஆஸ்தியைக் கோர முடியும். நீங்கள் இதனை அனைவருக்கும் மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் 100 முதல் 150 பேருக்கு விளங்கப்படுத்தும் பொழுது, அவர்களிலிருந்து ஒருவர் மாத்திரமே வெளிப்படுவார். பல மில்லியன் கணக்கானோரில் ஒரு சிலருக்கு மாத்திரமே வெளிப்படுகின்ற பாக்கியம் உள்ளது. ஏனையோரை உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்குவதற்குக் காலம் எடுக்கிறது. செல்வந்தர்களின் குரல்கள் அதிக சக்தியைக் கொண்டுள்ளன. நீங்கள் அமைச்சர்களிடம் செல்லும்பொழுது, “உங்களிடம் ஏனைய அமைச்சர்களும் வருகிறார்களா?” என அவர்கள் வினவுகிறார்கள், நீங்கள்ஆம், அவர்கள் வருகிறார்கள்எனக் கூறும்பொழுது, “சரி, நானும் வருவேன்என அவர்கள் கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் முற்றிலும் சாதாரணமானவர், ஆகவே அரிதாகவே செல்வந்தர்கள் எவரேனும் வருகிறார்கள். அவர்கள் நிச்சயமாக வருவார்கள், ஆனால் இறுதியிலேயே வருவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் எங்கள் மனம், சரீரங்கள், செல்வத்தின் மூலம் பாரதத்துக்குச் சேவை செய்கிறோம் என நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். பாரதத்துக்குச் சேவை செய்வதற்காக, நீங்கள் உங்களை அர்ப்பணித்துள்ளீர்கள். வேறு எவரும் அத்தகைய தர்மவான் இல்லை. அம்மக்கள் பணத்தைச் சேகரித்து, கட்டடங்களைக் கட்டுகிறார்கள். இறுதியில், அனைத்தும் மண்ணோடு மண்ணாகி விடும். நீங்கள் பாபாவுக்கு அனைத்தையும் அர்ப்பணிக்க வேண்டும். பாரதத்துக்குச் சேவை செய்வதற்கு, அதனைச் சுவர்க்கமாக்குவதற்கு நீங்கள் அனைத்தையும் பயன்படுத்த வேண்டும். அப்பொழுது நீங்கள் ஆஸ்தியைக் கோருபவர்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் சர்வசக்திவானின் குழந்தைகள், நீங்கள் அவருடன் உங்களைப் பதிவு செய்துள்ளீர்கள் என்னும் போதை உங்களுக்கு இருக்க வேண்டும். பாபாவுடன் உங்களைப் பதிவு செய்வதற்கு அதிக முயற்சி தேவையாகும். நீங்கள் முற்றிலும் விகாரமற்றவர்களாக ஆகி, பின்னர் அதனை நிரூபிப்பீர்கள் என்னும் சத்தியத்தைச் செய்யும் பொழுது, பாபா உங்களைப் பதிவு செய்கிறார். நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கமாக மாற்றுகிறீர்கள், அதாவது, நீங்கள் அதனை அரசர்களின் பூமி (இராஜஸ்தான்) ஆக்குகிறீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் போதையுற்றிருக்க வேண்டும். பின்னர் நீங்கள் அங்கே ஆட்சிசெய்வீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. நாங்கள் ஒரேயொரு கடவுளின் குடும்பமாகிய, கடவுளின் குழந்தைகள். நாங்கள் இப்பொழுது கடவுளின் வழிகாட்டல்களைப் பெறுகிறோம். இந்த ஆன்மீகப் போதையில் நிலைத்திருங்கள். தவறான வழிகாட்டல்களைப் பின்பற்றாதீர்கள்.
  2. பாரதத்துக்குச் சேவை செய்வதற்கு, பிரம்ம பாபாவைப் போன்று, உங்களை முழுமையாக அர்ப்பணியுங்கள். பாரதத்தைச் சுவர்க்கமாக மாற்றுவதற்கு, உங்கள் சரீரம், மனம், செல்வத்தை நன்றாகப் பயன்படுத்துங்கள். ஒரு முழுமையான தர்மவான் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:

சதா தந்தையின் அன்பெனும் பாதுகாப்புக் குடையின் கீழ் இருப்பதனால், துன்ப அலைகள் அனைத்திலிருந்தும் விடுபடுவீர்களாக.


ஒரு தாமரை, சேற்று நீரின் மேல் இருந்த போதிலும், அதிலிருந்து விடுபட்டிருக்கின்றது. அது எவ்வளவு அழகாக உள்ளதோ, அந்தளவிற்கு பற்றற்றும் உள்ளது. அதே போல குழந்தைகளாகிய நீங்களும், துன்ப உலகிலிருந்து விடுபட்டு, தந்தையினால் நேசிக்கப்படுகின்றீர்கள். கடவுளின் இந்த அன்பானது உங்களுடைய பாதுகாப்புக் குடையாகியுள்ளது. கடவுளின் பாதுகாப்புக் குடையின் கீழிருக்கின்ற ஒருவருக்கு, யாரால் என்ன செய்ய முடியும்? அதனால் கடவுளின் பாதுகாப்புக் குடையின் கீழ் இருக்கின்ற உங்கள் ஆன்மீக போதையை கொண்டிருக்கும் போது, துன்ப அலைகள் உங்களைத் தொடக் கூட முடியாது.

சுலோகம்:

தமது மேன்மையான நடத்தையினால், பாப்தாதாவினதும் பிராமண குலத்தினதும் பெயர்களை போற்றச் செய்பவர்களே குல விளக்குகள் ஆவார்கள்.

---ஓம் சாந்தி--- 

Download PDF

Post a Comment

0 Comments