06-01-2023 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, கோபம் அதிகளவு துன்பத்தை விளைவிக்கின்றது. அது உங்களுக்கும்
பிறருக்கும் வேதனையை ஏற்படுத்துகின்றது. ஆகையால், ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் இந்தத் தீய ஆவியை வெற்றி கொள்ளுங்கள்.
கேள்வி:
ஒவ்வொரு கல்பத்திலும்
எக்குழந்தைகள் தம்மீது கலப்படத்தைக் கொண்டிருக்கின்றார்கள்? அவர்களின் இலக்கு என்ன?
பதில்:
தம்மை மிகவும் திறமைசாலிகள் எனக் கருதி ஸ்ரீமத்தை முற்றாகப் பின்பற்றாதவர்கள்.
ஏதோ ஒரு விகாரம் அவர்களில் மறைமுகமாகவோ
அல்லது வெளிப்படையான
வடிவிலோ உள்ளது. அதனை அவர்கள் அகற்றுவதில்லை.
மாயை தொடர்ந்தும்
ஆத்மாவைச் சுற்றி வருகின்றாள். ஒவ்வொரு சக்கரத்திலும்
அத்தகைய குழந்தைகளில்
கலப்படம் உள்ளது. இறுதியில் அவர்கள் அதிகளவு வருந்த வேண்டி ஏற்படும். அவர்கள் பேரிழப்பை ஏற்படுத்துகின்றார்கள்.
பாடல்: இன்றைய மனிதர்கள் காரிருளில் உள்ளார்கள்......
ஓம் சாந்தி. தந்தையான சுவர்க்கக் கடவுள் என்றும் அழைக்கப்படுகின்ற எல்லையற்ற தந்தையே அனைவரதும் தந்தை ஆவார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர் குழந்தைகளாகிய உங்கள் நேர்முன்னிலையிலிருந்து விளங்கப்படுத்துகின்றார். தந்தை இக் கண்களால் குழந்தைகள் அனைவரையும் பார்க்கின்றார். குழந்தைகளைப் பார்ப்பதற்கு அவருக்குத் தெய்வீகப் பார்வை தேவையில்லை. தந்தை புரிந்து கொள்கின்றார்: நான் பரந்தாமத்திலிருந்து குழந்தைகளிடம் வந்துள்ளேன். இக் குழந்தைகள் இங்கே சரீரதாரிகள் ஆகி, தங்கள் பாகங்களை நடிக்கிறார்கள் என்பதால், நான் இக் குழந்தைகளுக்கு நேரடியாகக் கற்பிக்கிறேன். சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவராகிய எல்லையற்ற தந்தை மீண்டும் ஒருமுறை பக்தி மார்க்கத்தில் தடுமாறித் திரிவதிலிருந்து எங்களை விடுவித்து, எங்கள் ஒளியை ஏற்றுகின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் இறை குலத்திற்கு உரியவர்கள் என்பதால், இதுவே பிராமண குலம் என்பதை அனைத்து நிலையங்களில் உள்ள குழந்தைகளும் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். பரமாத்மாவான பரமதந்தையே உலகத்தைப் படைப்பவர் என்று அழைக்கப்படுகின்றார். உலகம் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது என்பதைத் தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். தாயும் தந்தையும் இல்லாது மனித உலகம் உருவாக்கப்படவே முடியாது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். தந்தையே உலகத்தைப் படைத்தார் என்று கூற முடியாது. இல்லை. ‘நீங்களே தாயும் தந்தையும்’ எனக் கூறப்படுகின்றது. இந்தத் தாயும் தந்தையுமே, புதிய உலகைப் படைத்து குழந்தைகளை அதற்குத் தகுதியானவர்கள் ஆக்குகின்றார். இதுவே அவரது சிறப்பியல்பாகும். கிறிஸ்து மேலிருந்து கீழ் இறங்கி வந்து கிறிஸ்தவ சமயத்தை ஸ்தாபித்ததைப் போன்று, தேவர்கள் தமது தர்மத்தை ஸ்தாபிப்பதற்கு மேலிருந்து கீழ் இறங்குவதில்லை. கிறிஸ்தவர்களும் கிறிஸ்துவைத் தங்கள் தந்தையென்றே அழைக்கின்றார்கள். தந்தை இருப்பாராயின் நிச்சயமாகத் தாயும் தேவையாகும். அவர்கள் மேரியைத் தாய் என்று அழைக்கின்றார்கள். ஆனால் மேரி யார்? கிறிஸ்து என்ற புதிய ஆத்மா இன்னொருவரின் சரீரத்திற்குள் பிரவேசித்தார். எனவே அவர் யாருக்குள் பிரவேசித்தாரோ அவரின் வாயினூடாகவே கிறிஸ்தவர்கள் உருவாகினார்கள். அத்துடன் அந்த ஆத்மா எந்தத் துன்பத்தையும் அனுபவிக்கும் வகையில் அவர் எத்தகைய செயல்களையும் செய்யவில்லை என்பதும் விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அவர் அப்பொழுது வருகின்ற தூய ஆத்மா ஆவார். பரமாத்மாவான பரமதந்தை துன்பத்தை அனுபவம் செய்ய முடியாது. இச்சரீரதாரியே துன்பத்தையும், அவதூறையும் அனுபவம் செய்கின்றார். ஆகையால், கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டப் போது, அவர் எவரது சரீரத்தில் பிரவேசித்தாரோ அவரே அந்த வேதனையை அனுபவம் செய்கின்றார். கிறிஸ்துவாகிய தூய ஆத்மா வேதனையை அனுபவம் செய்திருக்க மாட்டார். கிறிஸ்து தந்தையாயின், தாய் எங்கிருந்து வந்திருக்க வேண்டும்? அவர்கள் மேரியைத் தாயாக ஆக்கியுள்ளார்கள். கன்னியான மேரி கிறிஸ்துவைப் பிரசவித்தார் என்று அவர்கள் காட்டுகின்றார்கள். அவை அனைத்தும் சமயநூல்களிலிருந்து இருந்து பெறப்பட்டவையாகும். அவர்கள் குந்திதேவியைக் கன்னியாகவும், கர்ணன் அவருக்குப் பிறந்தவர் என்றும் சித்தரித்துள்ளார்கள். இப்பொழுது, இது தெய்வீகப் பார்வை சம்பந்தமான விடயமாகும். ஆனால் அவர்கள் அதனைப் பிரதி செய்துள்ளார்கள். அவ்வாறே, இந்தப் பிரம்மாவே தாயாவார், அவரின் வாயினூடாகவே குழந்தைகளாகிய நீங்கள் பிறப்பெடுத்தீர்கள். அதன் பின்னர் அனைவரையும் பராமரிப்பதற்குப் பொறுப்பாக மம்மா நியமிக்கப்பட்டார். கிறிஸ்துவிற்கும் அவ்வாறே நிகழ்கின்றது. கிறிஸ்து வேறொருவருக்குள் பிரவேசித்து அச்சமயத்தை ஸ்தாபித்தார். அவரைப் பின்பற்றுவோர் கிறிஸ்துவின் வாய்வழித்தோன்றல்களான சகோதர சகோதரிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். கிறிஸ்தவர்களின் தந்தை கிறிஸ்து ஆவார். அவர் எவரின் சரீரத்திற்குள் பிரவேசித்து, குழந்தைகளை உருவாக்குகின்றாரோ, அவரே தாய் ஆவார். பின்னர், அவர்களைப் பராமரிப்பதற்குப் பொறுப்பாக மேரி நியமிக்கப்பட்டார். எனவே அவர்கள் மேரியைத் தாயாகக் கருதுகின்றார்கள். இங்கே, தந்தை கூறுகின்றார்: நான் இவருக்குள் பிரவேசித்து அவரின் வாயினூடாகக் குழந்தைகளாகிய உங்களைப் படைக்கின்றேன். எனவே இந்த மம்மாவும் வாய்வழித்தோன்றிய ஒரு குழந்தையே. இவை விபரமாகப் புரிந்து கொள்ளப்பட வேண்டிய விடயங்கள் ஆகும். இரண்டாவதாக, தாவர உணவைப் பற்றி போதிப்பதற்காக இன்று அபுவிற்கு ஒரு குழுவினர் வருகின்றனர் எனத் தந்தை கூறுகின்றார். ஆகையால், எல்லையற்ற தந்தை சுத்த, சைவ உணவை உண்பவர்களின் தேவ தர்மத்தை ஸ்தாபிக்கின்றார் என்று அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். வேறு எச்சமயத்தைச் சோந்தவர்களும் அத்தகைய உறுதியான சைவ உணவை உண்பவர்களாக இருக்க முடியாது. அவர்கள் வைஷ்ணவர்கள் ஆகுவதனால் ஏற்படும் நன்மையைப் பற்றி பேசவுள்ளார்கள். எனினும் அனைவராலும் அவ்வாறு ஆக முடியாது, ஏனெனில் அவரவர் தத்தமது உணவு முறையின் வழக்கத்தில் இருப்பதால் அவர்களுக்கு அவற்றைக் கைவிடுதல் சிரமமாகவிருக்கும். எனவே, எல்லையற்ற தந்தையினால் உருவாக்கப்பட்ட சுவர்க்கத்திலுள்ள வைஷ்ணவர்கள் அனைவருமே விஷ்ணுவின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். தேவர்கள் முற்றிலும் விகாரமற்றவர்கள். ஆனால் இப்பொழுது சைவ உணவை உண்ணுபவர்களும் விகாரமுடையவர்கள். கிறிஸ்துவிற்கு 3000 வருடங்களின் முன்னர், பாரதம் சுவர்க்கம் ஆகியது. இவ்வாறாக விளங்கப்படுத்துங்கள். குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு எவருமே சுவர்க்கம் எவ்வாறிருந்தது, அது எப்பொழுது ஸ்தாபிக்கப்பட்டது, அங்கே ஆட்சி செய்பவர்கள் யார் என்பதைப் புரிந்து கொண்டிருப்பதில்லை. அவர்கள் இலக்ஷ்மி நாராயணன் ஆலயத்திற்குச் செல்கின்றார்கள். பாபாவும் அங்கு செல்வதுண்டு, ஆனால் அவர்கள் எவருக்குமே இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் சுவர்க்கத்தில் இருந்தது என்பது தெரியாது. அவர்கள் அவர்களுடைய புகழை மாத்திரமே பாடுகின்றார்கள். ஆனால் அவர்களுக்கு இராச்சியத்தைக் கொடுத்தது யார்? அவர்களுக்கு முற்றாக எதுவுமே தெரியாது. இப்பொழுதுகூட, இலக்ஷ்மியே தமக்கு செல்வத்தைக் கொடுத்தார் என்று அவர்கள் எண்ணுவதால், தொடர்ந்தும் பல ஆலயங்களைக்; கட்டுகின்றார்கள். ஆகையாலேயே தீபாவளியின் போது வியாபாரிகள் இலக்ஷ்மியை வழிபடுகின்றார்கள். இவ் ஆலயங்களைக் கட்டுபவர்களுக்கு நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். அவ்வாறே நீங்கள் வெளிநாட்டவருக்கும் பாரதத்தின் புகழை விளங்கப்படுத்த வேண்டும். கிறிஸ்துவிற்கு 3000 ஆண்டுகளின் முன்னர் பாரதம் சைவ உணவை உண்ணும் பழக்கத்தைக் கொண்டிருந்தது. அவ்வாறாக வேறு எங்குமே இருக்க முடியாது. அந்த நேரத்தில், அதிகளவு சக்தி நிறைந்திருந்தது. அது இறைவன், இறைவிகளின் இராச்சியமாகும். இப்பொழுது, மீண்டும் ஒருமுறை அதே இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. இப்பொழுது அதே காலப்பகுதியே நிலவுகின்றது. சங்கரரின் மூலம் விநாசம் என்பதும் நினைவு கூரப்பட்டுள்ளது. அதன் பின்னர் விஷ்ணுவின் இராச்சியம் மீண்டும் வரும். நீங்கள் தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டுமாயின், அதனை நீங்கள் வந்து பெற்றுக் கொள்ளலாம். ரமேஷ், உஷா இருவருமே சேவை செய்வதில் மிகவும் ஆர்வம் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் மிகவும் சிறந்த தம்பதியினர். அவர்கள் மிகவும் நன்றாகச் சேவை செய்பவர்கள். புதியவர்கள் வந்து, பழையவர்களை எவ்வாறு முந்திச் செல்கின்றார்கள் என்று பாருங்கள். பாபா பல வழிகளை உங்களுக்குக் காட்டுகின்றார். எனினும் உங்களுக்கு எந்த விகாரங்களின் அகங்காரமும் இருக்குமாயின், மாயை உங்களை வளர விட மாட்டாள். சிலருக்குச் சிறிதளவு காமம் உள்ளது, ஆனால் பலருக்கும் கோபம் உள்ளது. இன்னமும் எவருமே முற்றிலும் முழுமை அடையவில்லை. நீங்கள் அவ்வாறு ஆகுகின்றீர்கள். மாயை தொடர்ந்தும் உள்ளிருந்து துன்புறுத்துகின்றாள். இராவண இராச்சியம் ஆரம்பமான பின்னரே இவ் எலிகள் கடிக்க ஆரம்பிக்கின்றன. பாரதம் இப்பொழுது முற்றிலும் ஏழ்மையாகியுள்ளது. மாயை அனைவரது புத்தியையும் கல்லாக்கியுள்ளாள். தாம் எடுக்கின்ற ஒவ்வொரு அடியிலும் தாம் பின்னால் தள்ளப்படுகின்றோம் என்பதை அறியாத வகையில் மாயை நல்ல குழந்தைகளையும் கூடச் சூழ்ந்து விடுகின்றாள். எனினும் அவர்களுக்கு உயிர் காக்கும் மூலிகை கொடுக்கப்பட்டு அவர்கள் நினைவு திரும்பச் செய்யப்படுகின்றார்கள். கோபமும் அதிகளவு துன்பத்தை விளைவிக்கின்றது. அது தம்மையும் சந்தோஷம் இழக்கச் செய்து, பிறரையும் சந்தோஷம் இழக்கச் செய்கின்றது. சிலரிடம் இது மறைமுகமாகவே இருப்பினும் பிறரிடம் அது மிகவும் புலப்படும் வகையில் உள்ளது. அவர்களுக்கு நீங்கள் எவ்வளவு விளங்கப்படுத்தினாலும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் இப்பொழுது தம்மை மிகவும் திறமைசாலிகள் என்று கருதுகின்றார்கள். பின்னர் அவர்கள் வருந்த நேரிடும். அத்துடன் அந்த மாசு ஒவ்வொரு கல்பத்திலும் அவர்களுக்குள் இருக்கும். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதில் அதிகளவு நன்மையுள்ளது. அல்லது அதிகளவு இழப்பிருக்கும். ஸ்ரீமத்தினதும், பிரம்மாவினதும் வழிகாட்டல்கள் மிகவும் பிரபல்யமாகும். பிரம்மாவே மேலிருந்து கீழே இறங்கி வந்தாலும் அவர் கூறுவதை இவர் கேட்கமாட்டார் என ஒருவரைப் பற்றி அவர்கள் கூறுகின்றார்கள். கிருஷ்ணரின் பெயர் இவ்வாறாகக் குறிப்பிடப்படவில்லை. இப்பொழுது பரமாத்மாவாகிய பரமதந்தையே வழிகாட்டல்களைக் கொடுக்கிறார், அவரிடமிருந்தே பிரம்மாவும் வழிகாட்டல்களைப் பெறுகிறார். தந்தை குழந்தைகளாகிய உங்கள் மீது அதிகளவு அன்பு வைத்திருக்கின்றார். அவர் உங்களைத் தனது தோளிலும் பின்னர் தலையின் மீதும் சுமக்கின்றார். தந்தை தனது குழந்தைகள் மிகவும் உயர்வடைந்து, குலத்தின் பெயரை போற்ற வேண்டும் என்ற இலக்கைக் கொண்டிருக்கின்றார். எவ்வாறாயினும், குழந்தைகள் தந்தை அல்லது தாதா கூறுவதைக் கேட்காத போது, அவர்கள் மூத்த தாய் கூறுவதையும் செவிமடுப்பதில்லை என்பதே அதன் அர்த்தமாகும். அவர்களின் நிலைமை என்னவாகும் என்று பாருங்கள். கேட்கவும் வேண்டாம்;! எவ்வாறாயினும், சேவை செய்யும் குழந்தைகள் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் ஏறுகின்றார்கள். பாபாவே அவர்களைப் புகழ்கின்றார், எனவே இதே பாரதமே விஷ்ணுவின் குலமாக இருந்தது என்றும், அது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது என்றும் அவர்கள் பிறருக்கு விளங்கப்படுத்த வேண்டும். பாபா அதே பாரதத்தை மீண்டும் விஷ்ணு பூமியாக ஆக்குகிறார். எனவே நீங்கள் பெருமளவு போதையைக் கொண்டிருக்க வேண்டும். அம்மக்கள் வெறுமனே தமது பெயர் போற்றப்படுவதற்காக தலையில் அடித்துக் கொள்கிறார்கள். அவர்களின் செலவுகள் அரசாங்கத்தால் செலுத்தப்படுகின்றன. சந்நியாசிகளும் பெருமளவு பணத்தைப் பெறுகிறார்கள். இப்பொழுது கூட, தாம் பாரதத்தின் புராதன யோகத்தைக் கற்பிக்கிறோம் எனக் கூறும் போது, மக்கள் மிக விரைவாக அவர்களுக்குப் பணம் கொடுக்கிறார்கள். பாபாவிற்கு எவருடைய பணமும் தேவையில்லை. பொக்கிஷக் களஞ்சியத்தின் கள்ளங்கபடமற்ற பிரபுவான அவரே முழு உலகிற்கும் உதவுபவர். அவர் குழந்தைகளிடமிருந்தே உதவியைப் பெறுகிறார். குழந்தைகளுக்குத் தைரியம் இருக்கும் போது, தந்தை அவர்களுக்கு உதவி செய்கிறார். வெளியிலிருந்து வரும் மக்கள் ஓர் ஆச்சிரமத்திற்கு ஏதாவது கொடுப்பது வழக்கமாகும். எவ்வாறாயினும், நீங்கள் இங்கே எதற்காகக் கொடுக்கிறீர்கள், நீங்கள் எந்த ஞானத்தையும் கேட்கவில்லை, உங்களுக்கு எதுவும் தெரியாதே என நீங்கள் அவர்களிடம் வினவ வேண்டும். நாம் சுவர்க்கத்திலே பலனைப் பெறுவதற்காக இங்கே ஒரு விதையை விதைக்கிறோம். எவ்வாறாயினும், அவர்கள் ஞானத்தைப் புரிந்து கொள்ளும் போது அவர்களே அறிவார்கள். இவ்விதமாக மில்லியன் கணக்கானோர் வருவார்கள். பாபா மறைமுகமாக வந்திருப்பது நல்லதே. அவர் கிருஷ்ணரின் வடிவிலே வந்தால், எல்லோரும் மட்குவியல் போல் குவிந்து, மிக விரைவாக அவரைப் பற்றிக் கொள்வார்கள். எவராலுமே வீட்டிலிருக்க முடியாது. நீங்களே கடவுளின் குழந்தைகள். இதை மறந்துவிடாதீர்கள்! குழந்தைகளாகிய நீங்கள் முழு ஆஸ்தியையும் எடுக்க வேண்டும் என்பது பாபாவின் இதயத்திலே இருக்கிறது. பலர் சுவர்க்கத்திற்கு வருவார்கள், ஆனால் எவ்வாறாயினும், பல மில்லியன் கணக்கானோரில், ஒரு கைப்பிடி அளவினரே சுவர்க்கத்தில் உயர்ந்த அந்தஸ்தைக் கோருவதற்குத் தைரியத்தைக் கொண்டிருக்கிறார்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
இரவு வகுப்பு -15ஃ06ஃ1968
கடந்தகாலத்தில் நடந்தவை அனைத்தையும் மீட்டுப் பார்ப்பதனால், பலவீனமான இதயத்தைக் கொண்டிருக்கின்றவர்களின் இதயத்தில் உள்ள பலவீனங்களும் மீட்டல் செய்யப்படுகின்றன. ஆகையாலேயே குழந்தைகள் நாடகத்தின் பாதையில் தம்மை ஸ்திரப்படுத்தும்;படி செய்யப்படுகின்றார்கள். நினைவினூடாகவே பிரதானமான நன்மை பெறப்படுகிறது. நினைவு செய்வதனாலேயே உங்கள் ஆயுள் அதிகரிக்கின்றது. குழந்தைகள் நாடகத்தைப் புரிந்து கொள்வதாயின் அவர்கள் என்றுமே வேறு எதனைப் பற்றிய சிந்தனைகளும் இல்லாதிருப்பார்கள். நாடகத்தில் இந்த நேரத்தில், ஞானத்தைக் கற்றலும் கற்பித்தலுக்குமான பாகமாகும். பின்னர், இப்பாகம் முடிவடையும். தந்தையின் பாகமோ அல்லது எங்கள் பாகமோ எஞ்சியிருக்க மாட்டாது. கொடுக்கின்ற அவரின் பாகமோ அல்லது பெறுகின்ற எங்கள் பாகமோ இருக்க மாட்டாது. எனவே, அனைத்தும் ஒன்றாகி விடும். அதன் பின்னர் எங்கள் பாகம் புதிய உலகிலேயேயாகும். பாபாவின் பாகம் மௌன தாமத்தில் இருக்கும். பாகங்களின் சுருள், பதிவு செய்யப்படுகின்றது: எங்கள் வெகுமதியான எங்கள் பாகங்களும், மௌன தாமத்தில் பாபாவின் பாகமும் ஆகும். கொடுக்கின்ற பாகமும் பெறுகின்ற பாகமும் பதிவு செய்யப்படுகின்றது. அதன் பின்னர் ஆட்சிபுரிய வருகின்ற எங்கள் பாகங்கள் மாற்றமடையும். ஞானம் நிறுத்தப்படும். நாங்கள் அதுவாக ஆகியிருப்போம். பாகம் முடிவடையும் போது, எந்த வேறுபாடும் இருக்க மாட்டாது. குழந்தைகளினதும் தந்தையினதும் பாகங்கள் இருக்க மாட்டாது. இவரும் முழுமையாக ஞானத்தைப் பெற்றிருப்பார். அவரிடமும் எதுவும் எஞ்சியிருக்க மாட்டாது. கொடுப்பவரிடம் எதுவும் எஞ்சியிருக்க மாட்டாது. பெறுபவர்களிடம் எக்குறைபாடும் இருக்க மாட்டாது. எனவே இருசாராரும் ஒருவருக்கொருவர் சமமாக இருப்பார்கள். இதற்கு, உங்களுக்குக் கடையக்கூடிய புத்தி தேவையாகும். நினைவு யாத்திரையே பிரதான முயற்சியாகும். தந்தை அமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார். அது கூறப்படும் போது, பொதுவான ஒன்றாகவே உள்ளது, எனினும் அது புத்தியில் உள்ள சூட்சுமமான ஒன்றாகும். சிவபாபாவின் வடிவம் என்னவென்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அது விளங்கப்படுத்தப்படும் போது, பொதுவான ஒன்றாகி விடுகின்றது. பக்தி மார்க்கத்தில், அவர்கள் பெரிய லிங்க வடிவத்தை உருவாக்கியுள்ளார்கள். ஓர் ஆத்மா சின்னஞ்சிறிய புள்ளி ஆவார். இது இயற்கையின் அற்புதமாகும். எவ்வளவு காலத்திற்கு நீங்கள் இதன் ஆழத்திற்குச் செல்வீர்கள்? எனவே, இறுதியாக அவர்கள் அது முடிவற்றது என்று கூறுகின்றார்கள். முழுப் பாகமுமே ஆத்மாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று பாபா விளங்கப்படுத்தியுள்ளார். இது இயற்கையின் அற்புதமாகும். எவராலும் அதன் எல்லையை அடைய முடியாது. உலகச் சக்கரத்தின் எல்லையை உங்களால் அடைய முடியும். உங்களுக்கு மாத்திரமே படைப்பவரினதும் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையும் தெரியும். பாபா ஞானம் நிறைந்தவர். இருப்பினும், நாங்களும் நிறைவடைகின்றோம். அதனை விட அடைவதற்கு வேறெதுவும் இருக்க மாட்டாது. தந்தை இவருக்குள் பிரவேசித்து எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் ஒரு புள்ளியே. ஆத்மாவினதோ பரமாத்மாவினதோ காட்சியைக் காண்பதால் சந்தோஷம் அடைய முடியாது. தந்தையை நினைவு செய்வதற்கு முயற்சி எடுக்க வேண்டும். அப்பொழுது உங்கள் பாவங்கள் அழியும். தந்தை கூறுகின்றார்: என் மூலம் ஞானத்தைக் கொடுப்பது நிறுத்தப்படுவதுடன், அது உங்களிலும் நிறுத்தப்படும். நீங்கள் ஞானத்தைப் பெற்று மேன்மையடைகின்றீர்கள். நீங்கள் அனைத்தையும் பெற்ற போதிலும், தந்தை தந்தையே. ஆத்மாக்களாகிய நீங்கள் ஆத்மாக்களாகவே இருப்பீர்கள். நீங்கள் தந்தையாக மாட்டீர்கள். இது ஞானம் ஆகும். தந்தை தந்தையாவார், குழந்தைகள் குழந்தைகளாகவே இருப்பார்கள். இவை நீங்கள் ஆழமாகச் சென்று கடைய வேண்டிய விடயங்களாகும். அனைவரும் வீடு திரும்ப வேண்டும் என்பதை நீங்களும் அறிவீர்கள். அனைவரும் வீடு திரும்ப உள்ளனர். ஆத்மாக்கள் மாத்திரமே எஞ்சியிருப்பார்கள். முழு உலகமும் முடிவடைந்திருக்கும். இதில் நீங்கள் பயமற்றவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் பயமற்றவர்களாக இருக்க முயற்சி செய்ய வேண்டும். சரீர உணர்வு எதுவும் எஞ்சியிருக்க மாட்டாது. அந்த ஸ்திதியுடன் நீங்கள் வீடு திரும்ப வேண்டும். தந்தை உங்களைத் தனக்குச் சமம் ஆக்குகின்றார். குழந்தைகளாகிய நீங்களும் பிறரை உங்களுக்குச் சமம் ஆக்குகின்றீர்கள். தந்தையின் நினைவில் மாத்திரம் இருப்பதற்கே நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். இதற்கு உங்களுக்கு இன்னமும் காலம் உள்ளது. நீங்கள் தீவிர ஒத்திகைகளைச் செய்ய வேண்டும். நீங்கள் பயிற்சி செய்யாதிருந்தால், நீங்கள் ஸ்தம்பிதம் அடைந்து, நின்று விடுவீர்கள். உங்கள் கால்கள் தடுமாறி, உங்களுக்குத் திடீரென இதயவழுவல் ஏற்படும். தமோபிரதான் சரீரத்திற்கு, இதயவழுவல் ஏற்பட அதிகக் காலம் எடுக்க மாட்டாது. நீங்கள் எந்தளவிற்குச்; சரீரமற்றவர்கள் ஆகி, தந்தையின் நினைவில் நிலைத்திருக்கின்றீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் தொடர்ந்தும் நெருங்கி வருவீர்கள். யோகம் செய்பவர்கள் மாத்திரமே பயமற்றவர்களாக இருப்பார்கள். நீங்கள் யோகத்தினூடாகச் சக்தியையும், ஞானத்தினூடாகச் செல்வத்தையும் பெறுகின்றீர்கள். குழந்தைகளுக்குச் சக்தியே தேவையாகும். சக்தியைப் பெற்றுக் கொள்வதற்கு, தந்தையைத் தொடர்ந்தும் நினைவு செய்யுங்கள். பாபாவே அநாதியான சத்திரசிகிச்சை நிபுணர். அவர் ஒருபோதும் நோயாளி ஆகுவதில்லை. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: தொடர்ந்தும் உங்கள் அழியாத மருந்தை எடுங்கள். நாங்கள் எவரும் என்றுமே நோய்வாய்ப்படாத வகையில், உயிர் கொடுக்கும் மூலிகைகளைக் கொடுக்கின்றோம். தூய்மையாக்குகின்ற தந்தையைத் தொடர்ந்தும் நினைவு செய்து கொண்டிருந்தால், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். தேவர்கள் சதா நோயிலிருந்து விடுபட்டிருப்பவர்களும் தூய்மையானவர்களும் ஆவார்கள். நீங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் இந்த ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்ற நம்பிக்கையைக் குழந்தைகள் கொண்டிருக்கின்றார்கள். தொன்று தொட்டகாலமாக வருவதைப் போன்று தந்தை இப்பொழுதும் வந்துள்ளார். பாபா உங்களுக்குக் கற்பித்து விளங்கப்படுத்துபவை அனைத்தும் இராஜயோகமாகும். கீதை போன்ற அனைத்தும் பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவை ஆகும். தந்தை மாத்திரமே ஞான மார்க்கத்தைக் காட்டுகின்றார். தந்தை உங்களைக் கீழிருந்து மேலே தூக்கிவிடுகின்றார். புத்தியில் உறுதியான நம்பிக்கையைக் கொண்டிருப்பவர்கள் மாலையின் மணியாகுகின்றார்கள். பக்தி செய்யும் வேளையில் நீங்கள் கீழ் இறங்குகின்றீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். தந்தை வந்து நீங்கள் உண்மையான வருமானத்தை ஈட்ட உங்களைத் தூண்டுகின்றார். லௌகீகத் தந்தை பரலோகத் தந்தையைப் போன்று அந்தளவிற்கு வருமானம் ஈட்டத் தூண்டுவதில்லை. நல்லது. குழந்தைகளுக்கு இரவு வந்தனமும், நமஸ்தேயும். அச்சா.
தாரணைக்கான சாராம்சம்:
- சேவை செய்பவர்கள் ஆகுவதற்கு, விகாரத்தின் அனைத்து சுவடுகளையும் அகற்றிவிடுங்கள். சேவை செய்வதற்கு அதிகளவு ஆர்வம் கொண்டிருங்கள்.
- நாங்கள் கடவுளின் குழந்தைகள். ஸ்ரீமத்தின் அடிப்படையில், நாங்கள் பாரதத்தை, விஷ்ணுதாமமாக மாற்றுகின்றோம். அங்கு அனைவரும் உறுதியான வைஷ்ணவர்கள் (சுத்த சைவ உணவு உண்பவர்கள்) ஆவார்கள். இப் போதையைப் பேணுங்கள்.
ஆசீர்வாதம்:
சுயதரிசன சக்கரத்தைச்
சுழற்றுபவராக இருந்து, எந்த ஒரு துன்ப சுழற்சியிலுமிருந்து (துன்பத்தில்
சிக்கிக் கொண்டிருத்தல்)
சதா நீங்களும் விடுபட்டு பிறரையும் விடுபடச் செய்வீர்களாக.
சில குழந்தைகள் தமது பௌதீகப் புலன்களின் ஆதிக்கத்தில் இருக்கும் போது, ‘இன்று, எனது கண்கள், எனது வாய் அல்லது எனது பார்வை என்னை ஏமாற்றிவி;ட்டது’ எனக் கூறுகின்றார்கள். இவ்வாறாக ஏமாற்றப்படுவது
என்றால், துன்பத்தை அனுபவம் செய்தல் என்றே அர்த்தமாகும். உலக மக்கள் கூறுகின்றார்கள்: அவ்வாறு நடப்பதை நான் விரும்பவில்லை, நான் அந்த சுழற்சியில் சிக்கிக் கொண்டேன். சுயதரிசன சக்கரத்தை சுழற்றுகின்ற குழந்தைகள் என்றுமே ஏமாற்றமடைதல் என்ற சுழற்சியில்
(வலையில்) சிக்க முடியாது. அவர்கள் அனைத்து விதமான துன்ப சுழற்சிகளில்
இருந்து தாமும் விடுபட்டு ஏனையோரையும் விடுபடச் செய்பவர்கள். அவர்கள் தமது பௌதீக புலன்கள் அனைத்தையும்
தமக்குக் கீழ் பணியாற்ற செய்யும் அதிபதிகள் ஆவார்.
சுலோகம்:
உங்கள் அமரத்துவ சிம்மாசனத்தில் நிலைத்திருந்து, உங்கள் மேன்மையான கௌரவத்தை பேணி பாதுகாத்துக் கொண்டால், நீங்கள் எப்பொழுதுமே குழப்பம் அடைய மாட்டீர்கள்.
---ஓம் சாந்தி---
0 Comments