05-01-2023 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, பக்தர்கள் கஷ்டங்களையும், அனர்த்தங்களையும்
அனுபவம் செய்யும் போதே ஞானத்தைக் கொடுத்து, அவர்களுக்கு சற்கதியையும் முக்தியையும்
அருள்வதற்காகத் தந்தை வருகின்றார்.
கேள்வி:
யாரால் பாவச் செயல்களை வெற்றி கொள்பவர்கள்
ஆக முடியும்? பாவச் செயல்களை வெற்றி கொண்டவர்களின் அடையாளங்கள் என்ன?
பதில்:
கர்ம தத்துவத்தை அதாவது செயல்கள், நடுநிலைச் செயல்கள், பாவச் செயல்களைப் புரிந்து கொண்டவர்களும், மேன்மையான செயல்களைச் செய்பவர்களும் பாவச் செயல்களை வெற்றி கொண்டவர்கள்
ஆகுகின்றார்கள். பாவச் செயல்களை வெற்றி கொண்டவர்கள்
தமது சொந்தச் செயல்களுக்காக என்றுமே வருந்த வேண்டியதில்லை. அவர்களின் செயல்கள் பாவச் செயல்கள் ஆகுவதில்லை.
கேள்வி:
இந்த நேரத்தில் தந்தை செய்கின்ற இரட்டைச் சேவை என்ன?
பதில்:
தந்தை ஆத்மாக்கள், சரீரங்கள் ஆகிய இரண்டையும் தூய்மையாக்குகின்றார். அவர் ஆத்மாக்களாகிய உங்களை வீட்டிற்கும்
அழைத்துச் செல்கின்றார்.
இந்தத் தெய்வீகச் செயற்பாடு மனிதர்களால் அன்றி தந்தையால் மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றது.
பாடல்: ஓம் நமசிவாய.
ஓம் சாந்தி. குழந்தைகளாகிய நீங்கள் பாடல்களைக் கேட்டீர்கள். பக்தி மார்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் அத்தகைய பாடல்களைப் பாடுகின்றார்கள். அவர்கள் காரிருளில் இருந்து ஒளிக்குச் செல்ல விரும்புவதால், அவர்கள் துன்பத்தை நீக்குபவரைக் கூவியழைக்கின்றார்கள். நீங்கள் பிரம்மாகுமார் பிரம்மாகுமாரிகளாகிய சிவனின் குலத்தினர் ஆவீர்கள். இது புரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். குழந்தைகளாகிய நீங்கள் பாவத்தினூடாகப் பிறக்க முடியாது. எனவே நிச்சயமாக நீங்கள் வாய்வழித்தோன்றியவர்களே. கிருஷ்ணர் பல இராணிகளைக் கொண்டிருக்கவோ அல்லது பல குழந்தைகளைக் கொண்டிருக்கவோ இல்லை. கீதையின் கடவுள் இராஜயோகத்தைக் கற்பித்தார். ஆகையால், நீங்கள் அனைவருமே வாய்வழித்தோன்றல்களே. ‘மக்களின் தந்தை’ என்ற கூற்று மிகவும் பிரபல்யமானது. தந்தை வந்து, பிராமண தர்மத்தை அவரின் வாயினூடாக ஸ்தாபிக்கின்றார். ‘பிரஜாபிதா’ என்ற பெயர் தந்தைக்கே (பிரம்மபாபா) பொருத்தமாகும். நீங்கள் இப்பொழுது நடைமுறை ரீதியாகத் தந்தைக்கு உரியவர்கள். அவர்கள் கிருஷ்ணர் கடவுள் என்றும் சிவனும் கடவுளே என்றும் கூறுகின்றார்கள். ‘உருத்திர கடவுள்’ என்று கூறுவதற்குப் பதிலாக, அவர்கள் கிருஷ்ணரின் பெயரை இட்டுள்ளார்கள். அவர்கள் ‘சங்கரரும் பார்வதியும்’ என்ற கூற்றையும் பயன்படுத்துகின்றார்கள். அவர்கள் ‘உருத்திரனும் பார்வதியும்’ என்று கூறுவதில்லை. இருப்பினும், ‘சிவசங்கரனே, மகாதேவா’ என்றே கூறுகின்றார்கள். இப்பொழுது, கிருஷ்ணர் எங்கிருந்து வந்தார்? அவரை ‘உருத்திரன்’ என்றோ அல்லது ‘சங்கரர்’ என்றோ அழைக்க முடியாது. பக்தர்கள் கடவுளின் பெயரைப் போற்றிய போதிலும் அவரை அவர்களுக்குத் தெரியாது. உண்மையில், பாரதத்திலுள்ள உண்மையான பக்தர்களே பூஜிக்கத்தகுதியானவர்களாக இருந்தார்கள். அவர்கள் இப்பொழுது பூஜிப்பவர்கள் ஆகியுள்ளார்கள். ஆனால் அவர்கள் வரிசைக்கிரமமாகவே இருக்கின்றார்கள். உங்கள் மத்தியிலும், நீங்களும் வரிசைக்கிரமமாகவே இருக்கின்றீர்கள். நீங்கள் பிராமணர்கள், அவர்களோ சூத்திரர்கள். தேவ தர்மத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவு துன்பத்தை அனுபவம் செய்கின்றார்கள், ஏனெனில், அவர்களே அதிகளவு சந்தோஷத்தையும் அனுபவம் செய்துள்ளார்கள். உங்களின் வாசல் தோறும் தேடித்திரிதல் இப்பொழுது அரைக்கல்பத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளது. பிராமணர்களாகிய நீங்கள் இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். ஆனால் அதுவும் வரிசைக்கிரமமாகவே உள்ளது. முன்னைய கல்பத்தில் நீங்கள் எத்தகைய முயற்சியைச் செய்தீர்களோ அதே முயற்சியையே நீங்கள் மீண்டும் இப்பொழுது செய்கின்றீர்கள். ‘நாடகத்தில் உள்ளதைப் போன்றே’ என்று எதுவும் இல்லை. ஏனெனில் நீங்கள் எவ்வாறாயினும் முயற்சி செய்யவே வேண்டும். நாடகம் உங்களை முயற்சி செய்யத் தூண்டும். உங்கள் முயற்சி எதுவோ அதற்கேற்ற அந்தஸ்தையே நீங்கள் பெறுவீர்கள். நாங்கள் முன்னைய கல்பத்திலும் அத்தகைய முயற்சியைச் செய்தோம் என்பதைப் புரிந்து கொண்டிருக்கின்றோம். அத்தகைய வன்முறை இடம்பெற்றது, யக்ஞத்திற்கும் தடைகள் உருவாக்கப்பட்டன. பாபா மீண்டும் ஒருமுறை வந்துள்ளார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். முன்னைய கல்பத்திலும் அவர் பிரித்தானியரின் ஆட்சியின் போதே வந்தார். காங்கிரஸ் கட்சி அரசாங்கத்தை அவர்களிடமிருந்து ஏற்ற போது பாக்கிஸ்தான் உருவானது. இது ஒரு கல்பத்தின் முன்னரும் இடம்பெற்றது. இவ்விடயங்கள் கீதையில் குறிப்பிடப்படவில்லை. இது அதே காலம் என்பதை அவர்கள் நாளடைவில் புரிந்து கொள்ளும் காலம் வரும். கடவுள் வந்துவிட்டார் என்பதைச் சிலர் ஏற்கனவே புரிந்து கொண்டுள்ளார்கள். மகாபாரத யுத்தம் இடம்பெற்ற போதே கடவுள் வந்தார். அவர்கள் மிகச்சரியாகப் பேசுகின்றார்கள், ஆனால் அவர்கள் பெயரையே மாற்றியுள்ளார்கள். அவர்கள் உருத்திரனின் பெயரைப் பயன்படுத்துவதாயின், அது சரியானது என்று புரிந்து கொள்ளப்படும். உருத்திரன் ஞானயாகத்தை உருவாக்குகின்றார் அதனூடாகவே உலகக் கஷ்டங்கள் அனைத்தும் அகற்றப்பட்டது. உங்கள் மூலமாக அவர்கள் இதனைப் படிப்படியாகப் புரிந்து கொள்வார்கள். கிருஷ்ணர் கடவுள் அல்ல என்பதையும் அவர்கள் கூறுவார்கள். ஆனால் அதற்கு இன்னமும் சிறிது காலம் உள்ளது. இல்லாவிடின், நீங்கள் கற்க முடியாத அளவில் பெருமளவு கூட்டம் இங்கே கூடிவிடும். இங்கே கூட்டம் கூட வேண்டும் என்பது நியதி அல்ல. மறைமுகமாகவே பணி தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். இங்கே ஒரு முக்கியஸ்தர் வருவாராயின், அவருக்குப் பித்து பிடித்துள்ளது என்று மக்கள் கூறுவார்கள். இங்கே தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். கடவுள் தேவ தர்மத்தை ஸ்தாபிக்கவே வருகின்றார். அவர் இப்பொழுது பக்தர்களின் கஷ்டங்களை அகற்றி, புதிய உலகை ஸ்தாபிக்கவே வந்துள்ளார். விநாசத்தின் பின்னர் இங்கே எக்கஷ்டங்களும் இருக்க மாட்டாது. சத்தியயுகத்தில் பக்தர்களோ துன்பத்தை விளைவிக்கக் கூடிய எந்த செயல்களுமோ இருக்க மாட்டாது. (பம்பாயிலிருந்து ரமேஷ்பாய் தொலைபேசியில் அழைத்தார்) பாப்தாதா சென்ற பின்னர், குழந்தைகள் கவலையடைகின்றார்கள். வெளிநாட்டுக்குச் சென்ற கணவனின் மனைவி அவரை நினைவு செய்து அழுவதுண்டு. அது பௌதீக உறவுமுறையாகும், ஆனால் பாபாவுடன் கொண்டிருக்கும் இந்த உறவுமுறை ஆன்மீகமானதாகும். நீங்கள் பாபாவிடமிருந்து பிரியும் போது அன்புக்கண்ணீர் சிந்தப்படுகின்றது. சேவை செய்கின்ற குழந்தைகள் பாபாவை அதிகளவு பாராட்டுகின்றார்கள். தகுதிவாய்ந்த குழந்தைகளும் பாபாவை அதிகளவு மதிக்கின்றார்கள். சிவபாபாவுடன் கொண்டிருக்கும் உறவுமுறையே அனைத்திலும் அதி மேலானது. அதனைவிட மேலான ஓர் உறவுமுறையும் இல்லை. சிவபாபா உங்களைத் தன்னைவிட உயர்வடையச் செய்கின்றார். நீங்கள் தூய்மையாகிய போதிலும், உங்களால் தந்தையைப் போன்று என்றென்றும் தூய்மையாக இருக்க முடியாது. ஆம், நீங்கள் தூய தேவர்கள் ஆகுகின்றீர்கள். தந்தை ஞானக்கடல் ஆவார். நீங்கள் எவ்வளவு செவிமடுத்தாலும், உங்களால் ஞானக்கடல் ஆக முடியாது. பாபாவே ஞானக்கடலும், பேரானந்தக்கடலும் ஆவார். அத்துடன் அவர் குழந்தைகளையும் பேரானந்தமிக்கவர் ஆக்குகின்றார். ஏனையோர் பெயரளவிற்கே அப்பெயரைக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நேரத்தில், உலகில் பக்தர்களின் மிகவும் பெரியதொரு மாலை உள்ளது. உங்களுடையது 16,108 எண்ணிக்கையினரைக் கொண்டதாகும். மில்லியன் எண்ணிக்கையான பக்தர்கள் உள்ளனர். இங்கே, பக்திக்கான கேள்விக்கு இடமில்லை. நீங்கள் ஞானத்தினூடாகச் சற்கதியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் இப்பொழுது பக்தி என்ற சங்கிலியிலிருந்து இருந்து விடுதலையடைந்துள்ளீர்கள். பாபா கூறுகின்றார்: பக்தர்கள் அனைவரும் கஷ்டத்தை அனுபவம் செய்யும் பொழுது, நான் அவர்களுக்குச் சற்கதியையும் முக்தியையும் அருள்வதற்காக வரவேண்டும். நிச்சயமாக, சுவர்க்கத்தின் தேவர்கள் தாம் உயர்வான அந்தஸ்தைக் கோருமளவிற்கு அத்தகைய செயல்களைச் செய்திருக்க வேண்டும். அங்கிருக்கும் மக்களும் தொடர்ந்தும் செயல்களைச் செய்த போதிலும், தாம் வருத்தப்பட வேண்டிய அவசியம் இருக்க மாட்டாது. இங்கே மாயை இருப்பதால், செயல்கள் பாவம் நிறைந்துள்ளன. அங்கே மாயை இருப்பதில்லை. நீங்கள் பாவச் செயல்களை வெற்றி கொண்டவர்கள் ஆகுகின்றீர்கள். செயல்கள், நடுநிலைச் செயல்கள், பாவச் செயல்களின் ஆழமான தத்துவத்தை இப்பொழுது புரிந்து கொண்டுள்ளவர்களே பாவச் செயல்களை வெற்றி கொள்கின்றார்கள். குழந்தைகளாகிய உங்களுக்கு முன்னைய கல்பத்திலும் இராஜயோகம் கற்பிக்கப்பட்டது. நான் இப்பொழுது மீண்டும் உங்களுக்கு இதனைக் கற்பிக்கின்றேன். காங்கிரஸ் கட்சி வெளிநாட்டவரை வெளியேற்றி, அரசர்களிடமிருந்து இராச்சியத்தைக் கைப்பற்றியது. அவர்கள் ‘அரசர்’ என்ற பெயரை மறையச் செய்தனர். 5000 வருடங்களின் முன்னரும், பாரதம் பேரரசர்களின் இராச்சியமாக இருந்தது. அது இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமாக இருந்தது. அது தேவர்களின் இராச்சியமாக இருந்த போது, அது தேவதைகளின் உலகமாக இருந்தது. நிச்சயமாக, கடவுளே அவர்களுக்கு இராஜயோகம் கற்பித்திருக்க வேண்டும். ஆகையாலேயே அவர்கள் இறைவன், இறைவிகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். இப்பொழுது எங்களிடம் ஞானம் இருப்பதால், எங்களை இறைவன் இறைவிகள் என்று நாங்கள் அழைக்க முடியாது. இல்லாவிடின், அரசன், அரசி, பிரஜைகள் அனைவருமே இறைவன், இறைவிகள் என்று அழைக்கப்பட வேண்டும். எனினும் அது சாத்தியமில்லை. ‘இலக்ஷ்மி நாராயணன்’ என்ற பெயர் எந்தப் பிரஜைகளுக்கும் வழங்கப்பட மாட்டாது. அது நியதி அல்ல. வெளிநாடுகளிலும் தனக்குத் தமது அரசரின் பெயரை இடுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் தமது அரசருக்கு அதிகளவு மதிப்பளிக்கின்றார்கள். ஆகையால், தந்தை 5000 வருடங்களின் முன்னர் வந்தார் என்பதையும், தெய்வீக உலகை ஸ்தாபிப்பதற்காக மீண்டும் ஒருமுறை வந்துள்ளார் என்பதையும் நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். சிவபாபா இந்த நேரத்தில் வந்துள்ளார். அவரே பாண்டவர்களின் வழிகாட்டி, ஸ்ரீகிருஷ்ணர் அல்ல. உங்களை வீட்டிற்கு அழைத்துச் சென்று, புதிய உலகான சுவர்க்கத்தை ஸ்தாபிக்கவே தந்தை வழிகாட்டியாக வந்துள்ளார். ஆகையால், பிராமணர்கள் நிச்சயமாக பிரம்மாவினூடாகவே உருவாக்கப்பட வேண்டும். இதனை கிருஷ்ணரின் ஊடாகச் செய்ய முடியாது. அவர்கள் கீதையைச் சீர்கெடச் செய்ததே பிரதான விடயமாகும். தந்தை இப்பொழுது விளங்கப்படுத்துகின்றார்: நான் கிருஷ்ணர் அல்ல. நான் உருத்திரன் என்றோ சோமநாதர் என்றோ அழைக்கப்படலாம். நான் ஞானாமிர்தத்தைப் பருகக் கொடுக்கின்றேன். ஆனால் யுத்தம் போன்ற எக் கேள்விக்கும் இடமில்லை. நீங்கள் யோகசக்தியினூடாக இராச்சியம் என்ற வெண்ணெயைப் பெறுகின்றீர்கள். கிருஷ்ணர் நிச்சயமாக வெண்ணெயைப் பெறுகின்றார். இந்தக் கிருஷ்ணரின் ஆத்மா அவரின் இறுதிப்பிறவியில் உள்ளார். இந்த பிரம்மாவும் சரஸ்வதியும் தமது எதிர்காலத்தில் இலக்ஷ்மியும் நாராயணனும் ஆகுவதற்குத் தகுதியான செயல்களைத் தந்தை அவர்களுக்குக் கற்பிக்கின்றார். அவர்களின் குழந்தைப் பருவத்தில், இலக்ஷ்மியும் நாராயணனும் இராதையும் கிருஷ்ணருமாக இருந்தார்கள். ஆகையாலேயே இலக்ஷ்மி நாராயணனின் படத்துடன் இராதை கிருஷ்ணரின் படங்களும் காட்டப்படுகின்றன. எவ்வாறாயினும், ஒருவர் மற்றவரை விட சிறந்தவர் அல்ல. கீதையின் ஒரேயொரு கடவுளின் தெய்வீகச் செயற்பாடுகளே புகழப்படுகின்றன. சிவபாபா குழந்தைகளாகிய உங்களுக்குப் பலவகையான காட்சிகளைக் காட்டுகின்றார். மனிதர்களின் தெய்வீகச் செயற்பாடுகள் என எதுவும் இல்லை. கிறிஸ்து போன்றோர் வந்து ஒரு சமயத்தை ஸ்தாபித்தார்கள். அவர்கள் வந்து தமது பாகங்களை நடிக்கின்றார்கள். ஆகையால் அவர்கள் தெய்வீகச் செயல்களைச் செய்கின்றார்கள் என்ற கேள்விக்கே இடமில்லை. அவர்களால் எவருக்கும் சற்கதியை அருள முடியாது. எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இரட்டைச் சேவை செய்ய வந்திருக்கின்றேன். அதனால் உங்கள் சரீரம், ஆத்மா இரண்டுமே தூய்மையாகுகின்றன. நான் அனைவரையும் முக்திதாமமான வீட்டிற்கு அழைத்துச் செல்கின்றேன். அதன்பின்னர் நீங்கள் அங்கிருந்து கீழே இறங்கி வந்து உங்கள் பாகங்களை நடிக்கின்றீர்கள். பாபா குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார்! இலக்ஷ்மி நாராயணனின் படத்தை விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவாகும். திரிமூர்த்தி மற்றும் சிவபாபாவின் படங்களும் உள்ளன. கிருஷ்ணரின் படத்தில் 84 பிறவிச் சக்கரத்தின் கதை இருக்கக் கூடாது என்று கூறுவதைப் போன்று, சிலர் திரிமூர்த்தி இருக்கக் கூடாது என்றும் கூறுகின்றார்கள். கிருஷ்ணரும் 84 பிறவிகளை எடுக்கின்றார் என்றும், அவரும் தூய்மையற்றவர் ஆகுகின்றார் என்றும் கூறும் போது அவர்கள் பயப்படுகின்றார்கள். முதலாவதாக பிறவி எடுக்கின்ற ஸ்ரீகிருஷ்ணரே அதிகபட்ச பிறவிகளை எடுக்க வேண்டும் என்று நாங்கள் அவர்களுக்கு நிரூபிக்கின்றோம். நாளுக்குநாள் புதிய கருத்துக்கள் வெளிப்படுகின்றன. ஆனால் அவை கிரகிக்கப்பட வேண்டும். இலக்ஷ்மி நாராயணனின் படம் விளங்கப்படுத்துவதற்கு மிகவும் இலகுவான ஒன்றாகும். மனிதர்கள் எப்படங்களினது அர்த்தமும் புரியாதுள்ளார்கள். அவர்கள் அர்த்தமற்ற படங்களையே உருவாக்குகின்றார்கள். அவர்கள் நாராயணனை இரு கரங்களுடனும், இலக்ஷ்மியை நான்கு கரங்களுடனும் காட்டுகின்றார்கள். சத்தியயுகத்தில் அவர்களுக்கு அத்தனை கரங்கள் இருப்பதில்லை. சூட்சும உலகில், பிரம்மாவும் விஷ்ணுவும் சங்கரரும் மாத்திரமே உள்ளனர். அவர்களுமே அத்தனை கரங்களைக் கொண்டிருப்பதில்லை. ஆத்ம உலகில், அசரீரியான ஆத்மாக்கள் மாத்திரமே உள்ளனர். அவ்வாறாயின், எட்டு, பத்து கரங்களுடன் இம்மனிதர்கள் எங்கு வசிக்கின்றார்கள்? இலக்ஷ்மியும் நாராயணனுமே மனித உலகில் வாழ்கின்ற முதலாமவர்கள், அவர்களுக்கு இரு கரங்களே உள்ளன, ஆனால் மக்கள் அவர்களை நான்கு கரங்களுடன் சித்தரித்துள்ளார்கள். அவர்கள் நாராயணனைக் கருநீலநிறத்திலும், இலக்ஷ்மியை வெள்ளை நிறமாகவும் காட்டியுள்ளார்கள். அவர்களின் குழந்தைகள் எவ்வாறிருப்பார்கள், அவர்களுக்கு எத்தனை கரங்கள் இருக்கும்? அவர்களுடைய மகனுக்கு நான்கு கரங்களும், மகளுக்கு இரண்டு கரங்களும் உள்ளது என்பதா அதன் அர்த்தம்? நீங்கள் அவர்களிடம் அத்தகைய கேள்விகளைக் கேட்கலாம். சிவபாபா மாத்திரமே உங்களுக்கு முரளி வாசிக்கின்றார் என்றே நீங்கள் எப்பொழுதும் கருத வேண்டும் என்று உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. சிலவேளைகளில் இந்த பிரம்மாவும் விளங்கப்படுத்துகின்றார். சிவபாபா கூறுகின்றார்: நான் வழிகாட்டியாக வந்துள்ளேன். இந்த பிரம்மா எனது மூத்த மகனாவார். அவர்கள் கூறுகின்றார்கள்: திரிமூர்த்தி பிரம்மா. திரிமூர்த்தி சங்கரர் என்றோ, திரிமூர்த்தி விஷ்ணு என்றோ கூறமுடியாது. சங்கரர் மகாதேவன் எனப்படுகின்றார். அவ்வாறாயின், அவர்கள் ஏன் ‘திரிமூர்த்தி பிரம்மா’ என்று கூறுகின்றார்கள்? பாபா மக்களை உருவாக்கினார். எனவே இவர் அவருடைய மனைவி ஆகுகின்றார். சங்கரரையோ விஷ்ணுவையோ மனைவி என்று அழைக்க முடியாது. இவை புரிந்து கொள்ளப்பட வேண்டிய மிகவும் அற்புதமான விடயங்கள் ஆகும். இங்கே, தந்தையும் ஆஸ்தியுமே நினைவு செய்யப்பட வேண்டியவையாகும். இதற்கே முயற்சி தேவையாகும். குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் விவேகமானவர் ஆகியுள்ளீர்கள். நீங்கள் எல்லையற்ற தந்தையினூடாக எல்லையற்றவற்றிற்கு அதிபதிகள் ஆகுகின்றீர்கள். வானம், பூமி அனைத்துமே உங்களுக்கு உரியதாகும். பிரம்மாந்தமும் உங்களுக்கே உரியதாகும். அதன்பின்னர் சர்வசக்திவானின் இராச்சியம் நிலவும். ஒரேயொரு அரசாங்கமே உள்ளது. சூரிய வம்ச அரசாங்கம் இருக்கும் போது, சந்திரவம்சம் இருக்கவில்லை. பின்னர், சந்திரவம்சம் இருக்கும் போது, சூரியவம்ச இராச்சியம் இருக்க மாட்டாது. அப்பொழுது அது கடந்து சென்றிருக்கும். நாடகம் மாற்றமடைகின்றது. இவை மிகவும் அற்புதமான விடயங்களாகும். ஆகையால், குழந்தைகளாகிய உங்களுடைய சந்தோஷ பாதரசம் உயர்வடைய வேண்டும். எங்கள் எல்லையற்ற ஆஸ்தியை நாங்கள் நிச்சயமாக எல்லையற்ற தந்தையிடமிருந்து பெறுவோம். ஒரு மனைவி தனது கணவனை அதிகளவு நினைவு செய்கின்றார், ஆனால் அவரோ (சிவபாபா) உங்களுக்கு எல்லையற்ற இராச்சியத்தைக் கொடுக்கின்றார். ஆகையால் கணவர்களுக்கெல்லாம் கணவரான அவரை நீங்கள் எவ்வளவு நினைவு செய்ய வேண்டும்? இது மிகவும் பெரிய பேறாகும்! அங்கே, நீங்கள் எவரிடமும் தானம் கேட்க மாட்டீர்கள். அங்கே எவருமே ஏழைகளாக இருக்க மாட்டார்கள். எல்லையற்ற தந்தை பாரதத்தின் புத்தியை நிரப்புகின்றார். இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் சத்தியயுகம் என்று அழைக்கப்படுகின்றது. இப்பொழுது, இது கலியுகமாகும். எனவே வேறுபாட்டைப் பாருங்கள்! தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன். நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள், அதன்பின்னர் நீங்கள் சத்திரியர்களாகவும், வைசியர்களாகவும், சூத்திரர்களாகவும் ஆகினீர்கள். நீங்கள் மீண்டும் ஒருமுறை இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள், இப்பொழுது, நீங்கள் தேவர்கள் ஆகவுள்ளீர்கள். எனவே, இந்த 84 பிறவிச்சக்கரத்தை நினைவு செய்யுங்கள். படங்களை விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவாகும். தேவர்களின் இராச்சியம் இருந்த போது, வேறு எவரும் எந்த இராச்சியத்தையும் கொண்டிருக்கவில்லை. ஒரேயொரு இராச்சியம் மாத்திரமே இருந்தது. அங்கே மிகச்சிலரே வாழ்ந்தனர். அது சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. அங்கே தூய்மையும், அமைதியும், சந்தோஷமும் இருந்தன. ஆத்மாக்கள் மறுபிறவிகள் எடுத்து, தொடர்ந்தும் கீழ் இறங்குகின்றார்கள். அந்த ஆத்மாக்கள் 84 பிறவிகளை எடுத்து, தமோபிரதான் ஆகியுள்ளார்கள், அவர்களே மீண்டும் சதோபிரதான் ஆக வேண்டும். தந்தை அன்றி, வேறு எவராலும் உங்களுக்கு இதனைக் கற்பிக்க முடியாது. இவரின் பல பிறவிகளில் இறுதிப் பிறவியின் போது இவருக்குள் சிவபாபா பிரவேசித்தார் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். அவர் மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார்! அச்சா.
இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- ஒரேயொரு தந்தையுடன் மாத்திரம் அனைத்து ஆன்மீக உறவுமுறைகளையும்; கொண்டிருங்கள். சேவை செய்கின்ற குழந்தைகளைப் பாராட்டுங்கள். பிறரை உங்களுக்குச் சமமாக ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள்.
- எல்லையற்ற தந்தையிடமிருந்து, எல்லையற்ற உலக இராச்சியம் என்ற பாக்கியத்தை நீங்கள் பெறுகிறீர்கள். பூமி, வானம், அனைத்திற்கான உரிமையையும் நீங்கள் கொண்டிருப்பீர்கள் என்ற சந்தோஷத்தையும் போதையையும் பேணுங்கள். தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
ஒரு குழந்தையும்
அதிபதியும் என்பதன்
சமநிலையை கொண்டிருப்பதன்
மூலம், உங்கள்
முயற்சியிலும் நீங்கள்
செய்கின்ற சேவையிலும்
சதா வெற்றி
சொரூபம் ஆகுவீர்களாக.
சதா போதை கொண்டிருங்கள்: நான் எல்லையற்ற தந்தைக்கும் மற்றும் எல்லையற்ற ஆஸ்திக்கும் உரிய குழந்தையும்
அதிபதியும் ஆவேன். எவ்வாறாயினும், ஓர் அறிவுரை வழங்க வேண்டிய போதும், எந்த ஒரு பணியை மேற்கொள்ளும் போதும் அதனை ஒரு அதிபதியாக செய்யுங்கள்.
அதன் பின்னர் பெரும்பான்மையினரால் அல்லது கருவி ஆத்மாக்களினால் அனைத்தும் முடிவெடுக்கப்பட்ட பின்னர், அந்த நேரத்தில் ஒரு குழந்தை ஆகிவிடுங்கள். எப்பொழுது ஓர் ஆலோசகராக இருக்க வேண்டும், எப்பொழுது ஓர் ஆலோசனையை பின்பற்றுபவராக இருக்க வேண்டும் என்பதன் கலையை கற்றிடுங்கள், அப்பொழுது நீங்கள் உங்கள் முயற்சி, நீங்கள் செய்கின்ற சேவை இரண்டிலும் வெற்றியீட்டுவீர்கள்.
சுலோகம்:
ஒரு பணிவான கருவியாக இருக்க வேண்டுமாயின்,
உங்கள் மனதையும் புத்தியையும் கடவுளிடம் அர்ப்பணியுங்கள்.
---ஓம் சாந்தி---
0 Comments