Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 04.01.23

 

04-01-2023  காலைமுரளி  ஓம்சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



சாராம்சம்:

இனிய குழந்தைகளே, நீங்களே, முத்துக்களைப் பொறுக்கும் அன்னங்களாவீர்கள். உங்களுடைய கூட்டம் அன்னங்களின் கூட்டம் (ஹான்ஸ் மண்டலி) ஆகும். நீங்களே அதிர்ஷ்ட நட்சத்திரங்கள், ஏனெனில், ஞான சூரியனான தந்தையே நேரடியாக உங்களுக்குக் கற்பிக்கிறார்.

கேள்வி:

தந்தை குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் கொடுத்துள்ள, உங்கள் முயற்சியைத் தீவிரமாக்கிய ஞானோதயம் என்ன?

பதில்:

தந்தை உங்களுக்கு இந்த ஞானோதயத்தைக் கொடுத்துள்ளார்: குழந்தைகளே, இது இப்பொழுது, இந்த நாடகத்தின் முடிவாகும். நீங்கள் புதிய உலகிற்குச் செல்ல வேண்டும். நீங்கள் எவற்றைப் பெற இருக்கின்றீர்களோ, அதைப் பெறுவீர்கள் என எண்ண வேண்டாம். முதலில் முயற்சி இருக்க வேண்டும். தூய்மையாகி, ஏனையோரையும் தூய்மையாக்குவதே மிக மகத்தான சேவையாகும். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானோதயத்தைப் பெற்றவுடன், உங்கள் முயற்சிகள் தீவிரமாகின.

பாடல்:  நீங்களே அன்புக் கடல். நாங்கள் ஒரு துளிக்காக ஏங்குகின்றோம்

ஓம் சாந்தி. அன்புக் கடலும், அமைதிக் கடலும், பேரானந்தக் கடலுமான எல்லையற்ற தந்தை உங்களின் முன்னால் நேரடியாக அமர்ந்திருந்து, உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். ஞான சூரியனான தந்தையே நேரடியாக உங்களுக்குக் கற்பிக்கின்ற அத்தகைய அதிர்ஷ்ட நட்சத்திரங்கள் நீங்களே. நாரைகளின் கூட்டம் இப்பொழுது அன்னங்களின் கூட்டமாகி விட்டது. நீங்கள் முத்துக்களைப் பொறுக்கி எடுப்பவர்களாகி விட்டீர்கள். சகோதர, சகோதரிகளான நீங்கள் அனைவரும் அன்னங்கள், எனவே இதுவும் அன்னங்களின் ஒன்றுகூடல் என அழைக்கப்படுகின்றது. முன்னைய கல்பத்தைச் சேர்ந்தவர்கள் மாத்திரமே, இந்நேரத்தில் இந்தப் பிறவியில் ஒருவரையொருவர் இனங்கண்டு கொள்கின்றார்கள். அப்பாலுள்ள ஆன்மீக தாயும் தந்தையுமானவரும், சகோதர, சகோதரிகளுமே ஒருவரையொருவர் இனங்கண்டு கொள்வர். 5000 ஆண்டுகளுக்கு முன்னர், அதே பெயர்களுடனும், ரூபங்களுடனும் நீங்கள் ஒருவரையொருவர் சந்தித்தீர்கள் என்பதை நீங்கள் நினைவுசெய்கிறீர்கள். இந்நேரத்திலேயே நீங்கள் இதைக் கூற முடியும். இதை நீங்கள் வேறு எந்தப் பிறவியிலும் கூற முடியாது. பிரம்மாகுமார்களாகவும், குமாரிகளாகவும் ஆகிய அனைவரும் ஒருவரையொருவர் இனங்காண்பார்கள். பாபா, நீங்களும் அந்த அவரே. நாங்கள் உங்களுடைய அதே குழந்தைகளாவோம். சகோதர, சகோதரிகளாகிய நாங்கள் மீண்டும் ஒருமுறை எங்களின் தந்தையிடமிருந்து எங்களின் ஆஸ்தியைக் கோருகின்றோம். தந்தையும், குழந்தைகளும் இப்பொழுது நேரடியே உங்கள் முன்னால் அமர்ந்துள்ளனர். பின்னர் அவர்களின் பெயர்கள், ரூபங்கள் போன்றவை அனைத்தும் மாற்றப்படும். இலக்ஷ்மியும், நாராயணனும்; தாங்களே முன்னைய கல்பத்து அதே இலக்ஷ்மி, நாராயணன் எனக் கூற மாட்டார்கள். பிரஜைகளும் இந்த இலக்ஷ்மி, நாராயணனே முன்னைய கல்பத்து அதே இலக்ஷ்மியும், நாராயணனும் எனக் கூற மாட்டார்கள்; இல்லை, இந்நேரத்திலேயே குழந்தைகளாகிய நீங்கள் இதை அறிவீர்கள். இந்நேரத்தில் நீங்கள் பெருமளவில் அறிவீர்கள். முன்னர் நீங்கள் எதையும் அறிந்திருக்கவில்லை. நானே சங்கம யுகத்தில் வந்து, எனது அறிமுகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன். எல்லையற்ற தந்தையால் மாத்திரமே இதைக் கூற முடியும். புதிய உலகின் ஸ்தாபனையும், பழைய உலகின் விநாசமும் நிச்சயமாக இடம்பெற வேண்டும். இதுவே இரண்டினதும் சங்கமமாகும். இது மிகவும் நன்மை பயக்கின்ற யுகமாகும். சத்திய யுகமோ அல்லது கலியுகமோ நன்மை பயப்பது என அழைக்கப்பட மாட்டாது. உங்களுடைய இந்தத் தற்போதைய வாழ்க்கையே மிகவும் பெறுமதியான வாழ்க்கை என நினைவுசெய்யப்படுகின்றது. இந்தப் பிறவியிலேயே நீங்கள் சிப்பியிலிருந்து, வைரம் போன்றாக வேண்டும். குழந்தைகளாகிய நீங்களே கடவுளின் உண்மையான உதவியாளர்கள். நீங்களே இறை மீட்புப் படையினர். கடவுள் வந்து, உங்களை மாயையிடமிருந்து விடுவிக்கின்றார். அவர் குறிப்பாக உங்களையும், பொதுவாக உலகையும் மாயையின் சங்கிலியிலிருந்து விடுவிக்கின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது அது யாருடைய மகத்துவம்? மகத்தான செயற்பாடுகளைக் கொண்டவர்களே புகழப்படுகின்றனர், ஆகவே, இது பரமாத்மா பரமதந்தையின் மகத்துவமாகும். இப்பொழுது பாவாத்மாக்களின் பெரும் சுமை இந்தப் பூமியில் உள்ளது. கடுகு விதைகளைப் போன்று அதிகளவு மனிதர்கள் உள்ளனர், தந்தை வந்து, சுமையை அகற்றுகின்றார். அங்கே, சில ஆயிரக்கணக்கானவர்களே இருப்பார்கள், எனவே கால்; சதவீதம் கூட இருக்க மாட்டார்கள். ஆகவே நீங்கள் இந்த நாடகத்தை மிக நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும். கடவுள் சர்வசக்திவான் என அழைக்கப்படுகின்றார். நாடகத்தில் இதுவே அவரது பாகமாகும். தந்தை கூறுகின்றார்: நானும் நாடகத்தினால் கட்டுப்பட்டுள்ளேன். எழுதப்பட்டுள்ளது: அதர்மம் தலைவிரித்தாடும்பொழுது, நான் வருகின்றேன்…. இப்பொழுது பாரதத்தில் உண்மையில் மதங்களின் அவதூறு உள்ளது. மக்கள் என்னையும், தேவர்களையும் அவதூறு செய்கின்றனர், இதனாலேயே அவர்கள் மிகவும் பாவாத்மாக்கள் ஆகியுள்ளனர். அவர்கள் இவ்வாறாக வேண்டும். அவர்கள் சதோ, Nh, தமோ ஸ்திதிகளுக்கூடாகச் செல்ல வேண்டும். நீங்கள் இப்பொழுது இந்த நாடகத்தைப் புரிந்துகொண்டுள்ளீர்கள். உங்கள் புத்தியில் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது. தந்தை வந்து, உங்களுக்கு ஞானோதயம் அளித்துள்ளார். இப்பொழுது இது இந்த நாடகத்தின் முடிவாகும். நீங்கள் இப்பொழுது புதிய உலகிற்காக முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் எதைப் பெற இருக்கின்றீர்களோ, அதைப் பெறுவீர்கள் என எண்ணாதீர்கள். இல்லை; முயற்சியே முதலாவதாகும். தூய்மையிலேயே அனைத்துச் சக்திகளும் உள்ளன. அதுவே தூய்மையின் மகத்துவம் ஆகும். தேவர்கள் தூய்மையானவர்கள், இதனாலேயே தூய்மையற்ற மனிதர்கள், அவர்களின் விக்கிரகங்களுக்கு முன்னால் சென்று தலை வணங்குகின்றனர், அவர்கள் சந்நியாசிகளுக்கும் தலை வணங்குகின்றனர். அவர்கள் தூய்மையாக இருந்தமையால், அவர்கள் மரணித்த பின்னர் அவர்களது ஞாபகார்த்தங்கள் உருவாகக்ப்படுகின்றன. சிலர் பெருமளவு பௌதீகச் சேவை செய்கின்றனர்; அவர்கள் வைத்தியசாலைகளையும், கல்லூரிகளையும் திறக்கின்றனர், எனவே அவர்களது பெயர்களும் புகழப்படுகின்றன. அனைவரையும் தூய்மையாக்குபவரினதும், அவரது உதவியாளர்கள் ஆகுபவர்களினதும் பெயர்களே மகத்துவமான பெயர்கள் ஆகும். என்றென்றும் தூய்மையானவருடன் யோகம் செய்வதன் மூலம் நீங்கள் தூய்மையாகுகின்றீர்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகத் தொடர்ந்தும் யோகம் செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் தொடர்ந்தும் தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். அப்பொழுது உங்கள் இறுதி எண்ணங்கள்; உங்கள் இலக்கிற்கு உங்களை இட்டுச் செல்லும். நீங்கள் பின்னர் தந்தையிடம் செல்வீர்கள். அம்மக்கள் யாத்திரைக்குச் செல்கின்றபொழுது, தாங்கள் தந்தையிடம் செல்வதாக எண்ணுவதில்லை. இருப்பினும், அவர்கள் தூய்மையாக இருக்கின்றனர், இங்கே, தந்தை அனைவரையும் தூய்மையாக்குகின்றார். நாடகத்தைப் புரிந்துகொள்வது மிக இலகுவானது. அவர் தொடர்ந்தும் பல கருத்துக்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் பின்னர் கூறுகின்றார்: தந்தையையும், உங்களின் ஆஸ்தியையும் நினைவுசெய்யுங்கள். ஒருவர் மரணிக்கின்றபொழுது, அனைவரும் அவருக்குக் கடவுளை நினைவூட்டுகின்றனர், அச்சா, கடவுள் என்ன செய்வார்? பின்னர் அந்த நபர் தனது சரீரத்தை நீக்குகின்றபொழுது, அவர் சுவர்க்கவாசியாகி விட்டார் என அவர்கள் கூறுகின்றனர், அதாவது நீங்கள் கடவுளின் நினைவில் உங்கள் சரீரத்தை விட்டுச் சென்றால், சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள் என்று அர்த்தமாகும். அவர்கள் தந்தையை அறியவும் மாட்டார்கள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் தாங்கள் வைகுந்தத்திற்குச் செல்வார்கள் என்பது எவரது புத்தியிலும் இருப்பதில்லை. அவர்கள் கூறுகின்றனர்: பரமாத்மாவை நினைவுசெய்யுங்கள். ஆங்கிலத்தில் அவர்கள் கூறுகின்றனர்: தந்தையாகிய கடவுள். இங்கே, நீங்கள் கூறுகின்றீர்கள்: பரமாத்மாவான பரமதந்தை. அவர்கள் முதலில் கடவுள் என்றும் பின்னர் தந்தை என்றும் கூறுகின்றனர். நாங்கள் முதலில் பரமதந்தை என்றும், பின்னர் பரமாத்மா எனவும் கூறுகிறோம். அவரே அனைவரதும் தந்தையாவார். அனைவரும் தந்தையாக இருந்திருந்தால், தந்தையாகிய கடவுளே என அவர்கள் கூற மாட்டார்கள். அவர்களால், அத்தகைய சிறிய விடயத்தையுமே புரிந்துகொள்ள முடியாதுள்ளது! தந்தை உங்களுக்கு அனைத்தையும் விளங்கப்படுத்தி, உங்களுக்கு இலகுவாக்கி விட்டார். மக்கள் சந்தோஷமற்றிருக்கும்பொழுது, பரமாத்மாவையே நினைவுசெய்கின்றார்கள். மக்கள் சரீர உணர்வுடையவர்கள், ஆத்மாவே நினைவு செய்கின்றார். பரமாத்மா சர்வவியாபியாக இருந்திருந்தால், ஆத்மாக்கள் அவரை ஏன் நினைவு செய்வார்கள்;? ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்திற்கு உட்படாதவர்களாயின், அப்பொழுது ஆத்மாக்கள் எதை நினைவுசெய்கின்றார்கள்? பக்தி மார்க்கத்தில் ஆத்மாக்களே கடவுளை நினைவுசெய்கின்றனர், ஏனெனில் அவர்கள் சந்தோஷமற்று உள்ளனர். நீங்கள் சந்தோஷத்தைப் பெற்றுள்ள அளவிற்கு அவரை நினைவுசெய்ய வேண்டும். இது உங்களின் கல்வியாகும். உங்களின் இலக்கும், இலட்சியமும் தெளிவாக உள்ளன. இதில் குருட்டு நம்பிக்கை என்ற கேள்விக்கே இடமில்லை. நீங்கள் அனைத்து மதங்களையும் அறிவீர்கள். இந்நேரத்தில் அவை அனைத்தும் உள்ளன. தேவ தர்மத்தின் வரலாறு இப்பொழுது மீண்டும் இடம்பெற வேண்டும். இது எதுவுமே புதிதல்ல, நாங்கள் ஒவ்வொரு கல்பத்திலும் இராச்சியத்தைக் கோருகின்றோம். எவ்வாறு ஓர் எல்லைக்குட்பட்ட நாடகம் மீண்டும் மீண்டும் நடைபெறுகின்றதோ, அதேபோன்று, இது எல்லையற்ற நாடகமாகும். அரைக் கல்பத்திற்கு எங்களின் எதிரி யார்? இராவணன். நாங்கள் சண்டையிடுவதன் மூலம் இராச்சியத்தைக் கோருவதில்லை. நாங்கள் வன்முறை யுத்தத்தில் சண்டையிடுவதுமில்லை அல்லது ஒருவரை வெல்வதற்குச் சேனையை அழைத்துச் செல்வதுமில்லை. இது வெற்றி, தோல்வி பற்றிய நாடகம், ஆனால் தோல்வியும் சூட்சுமமானது, வெற்றியும் சூட்சுமமானது. மாயையினால் தோற்கடிக்கப்பட்டவர்கள் அனைத்தினாலும் தோற்கடிக்கப்படுகின்றார்கள். மாயையை வெற்றிகொண்டவர்கள் அனைத்தையும் வெற்றிகொள்கின்றனர். மக்கள்மாயைஎன்பதற்குப் பதிலாகமனம்என்ற வார்த்தையை இடுவதால், அது தவறாகி விட்டது. இந்த விளையாட்டும்; நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. தந்தையே இங்கமர்ந்திருந்து, தனது அறிமுகத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். வேறெந்த மனிதருமே படைப்பவரை அறிய மாட்டார்கள். எனவே எவ்வாறு அவரது அறிமுகத்தை அவர்களால் கொடுக்க முடியும்? ஒரேயொரு தந்தையே படைப்பவராதலால், நாங்கள் அனைவரும் படைப்புக்களாவோம், எனவே நாங்கள் எங்களுடைய இராச்சிய பாக்கியத்தைப் பெற வேண்டும். கடவுளைச் சர்வவியாபி என மக்கள் கூறுகின்றார்கள், அது அனைவரையுமே படைப்பவர் ஆக்குகின்றது; அதனால் அவர்கள் படைப்பை மறையச்; செய்து விட்டார்கள். அவர்கள் மிகவும் சந்தோஷமற்றவர்களாகவும், அவர்களின் புத்தி கல்லைப் போன்றும் ஆகி விட்டது. அவர்கள் தொடர்ந்தும் தங்களைப் புகழ்ந்து, தாங்கள் வைஷ்ணவர்கள் என்று கூறுகின்றனர். அவர்கள் அரைவாசி தேவர்கள் என்பதே அதன் அர்த்தமாகும். தேவர்களே, வைஷ்ணவர்கள் என அவர்கள் புரிந்துகொள்கின்றார்கள். உண்மையில் சைவ உணவு உண்பவராக இருப்பதன் பிரதான அர்த்தம், அகிம்சையை உங்களின் பரம தர்மமாக கொண்டிருப்பதாகும். தேவர்கள் உறுதியான வைஷ்ணவர்கள் எனக் கூறப்படுகின்றனர். இவ்வாறு வைஷ்ணவர்கள் என்று பலரும் தங்களைக் கூறிக் கொள்கின்றார்கள். எவ்வாறாயினும் இலக்ஷ்மி, நாராயணனின் இராச்சியத்தில் வைஷ்ணவ சமுதாயமும் தூய்மையாகவே இருந்தது. இப்பொழுது அந்த வைஷ்ணவ சமுதாயத்தின் இராச்சியம் எங்கே? நீங்கள் இப்பொழுது பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் பிரம்மாகுமாரர்களும்;, குமாரிகளும் ஆவீர்கள், எனவே பிரம்மாவும், நிச்சயமாக இருப்பார். இதனாலேயே பெயர் வைக்கப்பட்டுள்ளது: சிவனின் வம்சமாகிய பிரஜாபிதாவின் குழந்தைகள். சிவபாபா வந்தார் என்பது நினைவுகூரப்பட்டுள்ளது. அவர் பிராமண சமுதாயத்தை உருவாக்கினார்; அவர்கள் பிராமணர்களாகிப் பின்னர் தேவர்கள் ஆகினார்கள். நீங்கள் இப்பொழுது சூத்திரர்களிலிருந்து பிராமணர்கள் ஆகியுள்ளீர்கள். இதனாலேயே நீங்கள் பிரம்மாகுமாரர்களும், குமாரிகளும் என அழைக்கப்படுகின்றீர்கள். பல்வகை ரூபத்தின் படத்தை விளங்கப்படுத்துவதும் சிறந்ததாகும். அவர்கள் விஷ்ணுவின் பல்வகை ரூபத்தையும் காட்டியுள்ளனர், விஷ்ணுவும், அவரது இராச்சியமும் பல்வகை ரூபத்தின் சக்கரத்தில் காட்டப்பட்டுள்ளன. இவ்விடயங்கள் அனைத்தும் பாபாவின் கடைதலிலிருந்து பெறப்பட்டவை. நீங்களும் ஞானக் கடலைக் கடைந்தால், உங்களால் இரவில் உறங்க முடியாதிருக்கும். நீங்கள் தொடர்ந்தும் இவ்விடயங்கள் அனைத்தையும் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள். நீங்கள் பின்னர் அதிகாலையில் விழித்தெழுந்து, உங்கள் வியாபாரம் போன்றவற்றில் ஈடுபடுவீர்கள். கூறப்பட்டுள்ளது: “விடியலின் பிரபுநீங்கள் அமர்ந்திருந்து எவருக்காவது விளங்கப்படுத்தும்பொழுது, அவர் கூறுவார்: ஓகோ! நீங்கள் அவர்களை மனிதர்களிலிருந்து தேவர்களாக்குவதற்கும், பிச்சைக்காரர்களிலிருந்து இளவரசர்களாக்குவதற்கும் வந்துள்ளீர்கள், முதலில் அலௌகீகச் சேவையைச் செய்யுங்கள், அதன்பின்னர் பௌதீகமான சேவையைச் செய்யுங்கள். நீங்கள் அந்த ஆர்வத்தைக் கொண்டிருப்பது அவசியமாகும். குறிப்பாக, தாய்மார்களால் மிக நல்ல சேவை செய்ய முடியும்;. எவருமே தாய்மாரை நிராகரிக்க செய்ய மாட்டார்கள். நீங்கள் மரக்கறி வியாபாரிகள், சரக்கு வியாபாரிகள், வேலைக்காரர்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் முறைப்பாடு செய்யுமளவுக்கு எவருமே விடுபடக்கூடாது. சேவை செய்வதற்கு இதயத்தில் நேர்மை அவசியமாகும். நீங்கள் தந்தையுடன் முழுமையாக யோகம் செய்ய வேண்டும். அப்பொழுதே உங்களால் இதைக் கிரகிக்க முடியும். நீராவிக் கப்பலை அனைத்துக் கையிருப்புக்களாலும் நிறைத்துக் கொண்டு, பின்னர் துறைமுகத்துக்குச் சென்று, அனைத்தையும் விநியோகியுங்;கள். அத்தகைய ஆத்மாக்களால் வீட்டிலே சந்தோஷமாக இருக்க முடியாது; அவர்கள் தொடர்ந்தும் சேவை செய்வதற்குத் ஓடிச் செல்வார்கள். இந்தப் படமும் பெருமளவில் உதவுகின்றது. இது மிகத் தெளிவானது! சிவபாபா பிரம்மாவின் மூலம் விஷ்ணு தாமத்தின் ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். இது கிருஷ்ணரின் ஞான யாகம் அல்லாது, உருத்திரரின் ஞான யாகமாகும், விநாசத்தின் சுவாலைகள் இந்த உருத்திர ஞான யாகத்திலிருந்தே வெளிப்பட்டன. கிருஷ்ணரால் இந்த யாகத்தை உருவாக்க முடியாது. அவரது 84 பிறவிகளில் அவரது பெயரும், ரூபமும் தொடர்ந்தும் மாறுகின்றன. கிருஷ்ணர் வேறு எந்தப் பெயர், ரூபத்திலும் இருக்க முடியாது. அவர் மீண்டும் அந்த ரூபத்தில் இருக்கும்பொழுது மாத்திரமே, கிருஷ்ணருடைய பாகம் மீண்டும் இடம்பெறும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. கடவுளின் உண்மையான உதவியாளர்கள் ஆகுங்கள், அதாவது, இறை மீட்புப் படையினராகி, மாயையிடமிருந்து அனைவரையும் விடுவியுங்கள். இந்த வாழ்க்கையில் சிப்பியிலிருந்து வைரம் போன்றாகி, ஏனையோரையும் அவ்வாறு ஆக்குங்கள்.
  2. எவ்வாறு பாபா ஞானக் கடலைக் கடைகின்றாரோ, அதேபோன்று, ஞானத்தைக் கடையுங்கள். நன்மை பயப்பவராகி, ஆன்மீக சேவையில் ஈடுபடுபட்டிருங்கள். உங்கள் இதயத்தால் நேர்மையுடன் சேவை செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:

நீங்கள் சிறிய விடயங்களைப் பற்றிய கீழ்ப்படிவின்மையின் சுமை எதனையும் முடித்து விடுவதால், ஒரு மேன்மையான கதாபாத்திரத்தைக் கொண்டிருந்து, சதா சக்திவாய்ந்தவர் ஆகுவீர்களாக.


அமிர்த வேளையில் விழித்தெழுந்து, தியானத்தில் அமருமாறு உங்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது, எனவே நீங்கள் அதனைச் செய்கின்றீர்கள். எவ்வாறாயினும், இனிய மௌனத்துடன் உறக்கத்தின் மௌனம் கலக்கும்பொழுது, உங்களால் வெற்றியடைய முடியாது. 2. தந்தையின் வழிகாட்டல்: துன்பத்தைக் கொடுக்கவும் வேண்டாம், எந்த ஆத்மாவிடமிருந்தும் துன்பத்தைப் பெறவும் வேண்டாம். எனவே, நீங்கள் துன்பத்தைக் கொடுப்பதில்லை, ஆனால் நீங்கள் அதனை எடுக்கின்றீர்கள். 3. நீங்கள் கோபப்படுவதில்லை, ஆனால் நீங்கள் அதிகாரம் செலுத்துபவர் ஆகுகின்றீர்கள். அத்தகைய சிறிய விடயங்களில் உள்ள கீழ்ப்படிவின்மையானது உங்களைச் சுமையாக்குகின்றது. இப்பொழுது, அதனை முடித்து விட்டு, உங்கள் கதாபாத்திரத்தைக் கீழ்ப்படிவைக் கொண்டிருக்கின்ற ஒரு ரூபமாக்குங்கள், அப்பொழுது நீங்கள் சதா சக்திவாய்ந்த கதாபாத்திரத்தைக் கொண்டிருக்கின்ற ஆத்மாக்கள் என்றழைக்கப்படுவீர்கள்.

சுலோகம்:

மரியாதையைக் கேட்பதற்குப் பதிலாக, அனைவருக்கும் மரியாதையைக் கொடுங்கள், அப்பொழுது நீங்கள் தொடர்ந்தும் அனைவரினதும் மரியாதையைப் பெறுவீர்கள்.

 

---ஓம் சாந்தி---

Download PDF

 

Post a Comment

0 Comments