03-01-2023
காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, இந்நேரத்தில் உலகம் துன்பம் நிறைந்ததாக உள்ளது. இவ்வுலகின் மீது உங்களுக்கு உள்ள பற்றை வென்று, புதிய யுகத்தை நினைவுசெய்யுங்கள். உங்களுடைய புத்தியின் யோகத்தை இப்பழைய உலகிலிருந்து அகற்றி, புதிய உலகுடன் அதனை இணைத்துக் கொள்ளுங்கள்.
கேள்வி:
கிருஷ்ணரின் தாமத்திற்குச்
செல்வதற்கு, குழந்தைகளாகிய
நீங்கள் என்ன ஆயத்தங்களைச் செய்வதுடன், மற்றவர்களையும்
செய்யத் தூண்டுகிறீர்கள்?
பதில்:
கிருஷ்ணரின் தாமத்திற்குச்
செல்வதற்கு, நீங்கள் உங்களுடைய இந்த இறுதிப் பிறவியில் விகாரங்கள் அனைத்தையும்
துறக்க வேண்டும். தூய்மையாகி, மற்றவர்களையும் தூய்மையாகுவதற்குத் தூண்டுங்கள். தூய்மையாகுவதே
துன்ப தாமத்திலிருந்து
சந்தோஷ தாமத்திற்குச்
செல்வதற்கு நீங்கள் செய்ய வேண்டிய ஆயத்தமாகும்.
இவ்வுலகம் அழுக்கானது, புதிய, சத்திய யுகத்து உலகிற்குச் செல்வதற்கு, அவர்கள் தமது புத்தியின் யோகத்தை இவ்வுலகிலிருந்து அகற்ற வேண்டும் என்ற செய்தியை அனைவருக்கும்
கொடுங்கள்.
பாடல்: ஆதாரமளிப்பவருக்கு இதயம் நன்றி கூறுகிறது…
ஓம் சாந்தி. இப்பாடலில், குழந்தைகள் கூறுகின்றனர்: பாபா. குழந்தைகளின் புத்தி எல்லையற்ற தந்தையிடம் செல்கின்றது. இப்பொழுது சந்தோஷத்தைப் பெறுவதுடன், சந்தோஷத்திற்கான பாதையைக் கண்டுகொண்ட குழந்தைகளாகிய நீங்கள் 21 பிறவிகளுக்கு உங்களுக்குச் சந்தோஷத்தைக் கொடுப்பதற்காகத் தந்தை உண்மையிலேயே வந்து விட்டார் என்பதையும்; புரிந்துகொள்கின்றீர்கள். இச்சந்தோஷத்தை நீங்கள் அடைவதற்கு, தந்தையே வந்து, உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கிறார். இவ்வுலகிலுள்ள மனிதர்கள் எவராலும் எதையுமே கொடுக்க முடியாதென அவர் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். அவர்கள் அனைவரும் படைப்புக்களின் பகுதி ஆவர்: அவர்கள் அனைவரும் சகோதர, சகோதரிகள் ஆவர். எவ்வாறு படைப்புக்கள் சந்தோஷம் என்ற ஆஸ்தியை ஒருவருக்கொருவர் கொடுக்க முடியும்? நிச்சயமாக, படைப்பவராகிய ஒரேயொரு தந்தையால் மாத்திரமே சந்தோஷம் என்ற ஆஸ்தியைக் கொடுக்க முடியும். எவருக்கும் சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய எந்தவொரு மனிதரும் இவ்வுலகில் இல்லை. ஒரேயொரு சற்குரு மாத்திரமே சந்தோஷத்தை அருள்பவரும், சற்கதி அருள்பவரும் ஆவார். இப்பொழுது, எந்தச் சந்தோஷத்தை நீங்கள் கேட்கின்றீர்கள்? சுவர்க்கத்தில் ஏராளமான சந்தோஷம் இருந்தது என்பதை அனைவரும் மறந்து விட்டனர். இப்பொழுது, நரகத்தில் பெருந் துன்பமே உள்ளது. எனவே, நிச்சயமாக அதிபதி மாத்திரமே குழந்தைகள் அனைவர் மீதும் கருணை கொண்டிருப்பார். உலகின் அதிபதி மீது நம்பிக்கை கொண்ட பலர் உள்ளனர், ஆனால்;, அவர் யார் என்றோ, அவரிடமிருந்து தாங்கள் எதைப் பெறலாம் என்றோ அவர்களுக்குத் தெரியாது. நாங்கள் அதிபதியிடமிருந்து துன்பத்தைப் பெறுகின்றோம் என்றில்லை. அமைதியையும், சந்தோஷத்தையும் பெறுவதற்காகவே நீங்கள் அவரை நினைவுசெய்கிறீர்கள். நிச்சயமாக, சில பேறுகளுக்காகவே பக்தர்கள் கடவுளை நினைவுசெய்கின்றனர். அவர்கள் சந்தோஷமற்றிருப்பதால், அமைதியையும், சந்தோஷத்தையும் பெறுவதற்காக அவரை நினைவுசெய்கின்றனர். ஒரேயொருவர் மாத்திரமே எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுக்கிறார். ஏனைய அனைவரும் தொடர்ந்தும் எல்லைக்குட்பட்ட, தற்காலிகமான சந்தோஷத்தையே ஒருவருக்கொருவர் கொடுக்கின்றனர். அது ஒரு பெரிய விடயமல்ல. பக்தர்கள் அனைவரும் ஒரேயொரு கடவுளையே கூவியழைக்கின்றனர். கடவுளே நிச்சயமாக அனைவரிலும் மகத்தானவராக இருக்க வேண்டும். அவரது புகழ் மிகவும் மகத்தானது, எனவே, அவரே பெருமளவு சந்தோஷத்தைக் கொடுப்பவராக இருக்க வேண்டும். தந்தை ஒருபொழுதுமே தனது குழந்தைகளுக்கோ அல்லது உலகிற்கோ துன்பம் விளைவிக்க மாட்டார். தந்தை விளங்கப்படுத்துகிறார்: சற்றுச் சிந்தித்துப் பாருங்கள்: நான் உலகை, அதாவது, புதிய யுகத்தைப் படைப்பது துன்பத்தை விளைவிப்பதற்காகவா? சந்தோஷத்தைக் கொடுப்பதற்கே நான் அதைப் படைக்கிறேன். எவ்வாறாயினும், சந்தோஷத்தையும், துன்பத்தையும் கொண்ட இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. மனிதர்கள் மிகவும் சந்தோஷம் அற்றவர்களாக உள்ளனர்! புதிய யுகத்தில், புதிய உலகம் உள்ளபொழுது, சந்தோஷம் இருக்கின்றது எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். பழைய உலகில் துன்பமே உள்ளது. அனைத்தும் பழையதாகி, முற்றிலும் சீரழிந்து விடுகிறது. நான் உருவாக்குகின்ற உலகம் முதலில் சதோபிரதான் எனப்படுகிறது. அந்நேரத்தில், மனிதர்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக உள்ளனர். அந்தத் தர்மம் மறைந்து விட்டதால், இது எவரது புத்தியிலும் இப்பொழுது இல்லை. புதிய யுகம் சத்திய யுகமாக இருந்தது என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். அது இப்பொழுது பழையதாக உள்ளதால், தந்தை உலகைப் புதிதாக்குவார் என அனைவரும் நிச்சயமாக நம்புகின்றனர். முதலில், புதிய யுகத்தில், புதிய உலகில் வெகு சிலரே இருந்தனர். அவர்களின் சந்தோஷத்திற்கு எல்லையே இல்லாத வகையில், அவர்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தனர். அதன் பெயரே சுவர்க்கம், வைகுந்தம், புதிய உலகம் என்பதாகும். எனவே, அந்த உலகில் நிச்சயமாகப் புதியவர்களே இருந்திருப்பார்கள். தேவர்களின் அந்தப் புதிய இராச்சியத்தை நிச்சயமாக நானே உருவாக்கியிருக்க வேண்டும். கலியுகத்தில் எந்த அரசர்களும் இல்லாமலும், அனைவரும் ஏழைகளாகவும் இருக்கும்பொழுது, சத்திய யுகத்தில் தேவர்களின் இராச்சியம் இருப்பது வேறு எவ்வாறுதான் சாத்தியமாகும்? எவ்வாறு இந்த உலகம் மாற்றமடைந்தது? எதையுமே புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு மக்களின் புத்தி செயலிழந்து விட்டது. தந்தை வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். மனிதர்கள் அதிபதியைக் குற்றஞ் சாட்டுகின்றனர். அவரே சந்தோஷத்தையும், துன்பத்தையும் கொடுப்பவர் என அவர்கள் கூறுகின்றனர், இருப்பினும் வந்து, தங்களுக்கு அமைதியையும், சந்தோஷத்தையும் கொடுத்து, இனிய வீட்டிற்குத் தங்களை மீண்டும் அழைத்துச் செல்லுமாறு அவர்கள் இன்னமும் கடவுளை நினைவுசெய்கின்றனர். அவ்வாறாயின், அவர் உங்களுடைய பாகங்களை நடிப்பதற்கு உங்களை நிச்சயமாக அனுப்புவார். கலியுகத்தின் பின்னர் நிச்சயமாகச் சத்திய யுகம் வரும். மனிதர்கள் இராவணனின் கட்டளைகளையே பின்பற்றுகின்றனர். மேன்மையான வழிகாட்டல்களே ஸ்ரீமத் என அழைக்கப்படுகின்றன. தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு இலகு இராஜயோகம் கற்பிக்கின்றேன். கீதையின் வாசகங்களை நீங்கள் உரைப்பது போன்று, நான் உரைப்பதில்லை. தந்தை அமர்ந்திருந்து, உங்களுக்கு கீதையைக் கற்பிப்பாரா? நான் உங்களுக்கு இலகு இராஜயோகம் கற்பிக்கின்றேன். நீங்கள் பாடசாலையில் பாடல்களை அல்லது கவிதைகளைச் செவிமடுக்கின்றீர்களா? பாடசாலையில் நீங்கள் ஒரு கல்வியையே பெறுகின்றீர்கள். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றேன். வேறு எவருமே என்னுடன் யோகம் செய்வதில்லை. அனைவரும் என்னை மறந்து விட்டனர். இவ்வாறு மறப்பதும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நான் உங்களுடைய தந்தை என்பதை நானே வந்து, உங்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். கடவுள் அசரீரியானவர், எனவே நீங்கள் அசரீரியான ஆத்மாக்களாகிய, அவருடைய அசரீரியான குழந்தைகள் என்பதை நம்புகிறீர்கள். நீங்கள் உங்கள் பாகங்களை நடிப்பதற்காகவே இங்கே வருகிறீர்கள். அசரீரியான ஆத்மாக்கள் அனைத்திலும் அதியுயர்ந்த அசரீரி உலகில் வசிக்கின்றனர். இவ்வுலகம் பௌதீகமானது, பின்னர் சூட்சும லோகமும், அதற்கு மேலே மூன்றாவது மாடியில் அசரீரி உலகமும் உள்ளன. தந்தை குழந்தைகளாகிய உங்கள் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருந்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார்: நானும் அவ்விடத்திலேயே வசிக்கின்றேன். உலகம் புதியதாக இருந்தபொழுது, ஒரு தர்மமே இருந்தது, அது சுவர்க்கம் என்றழைக்கப்பட்டது. தந்தையே தந்தையான சுவர்க்கக் கடவுள் என அழைக்கப்படுகிறார். கலியுகம் கம்சனின் பூமியும், சத்திய யுகம் கிருஷ்ணரின் பூமியும் ஆகும். எனவே, நீங்கள் அவர்களிடம் வினவ வேண்டும்: நீங்கள் இப்பொழுது கிருஷ்ணரின் பூமிக்கு வருவீர்களா? நீங்கள் கிருஷ்ணரின் பூமிக்குச் செல்ல வேண்டுமாயின், தூய்மையாகுங்கள். நாங்கள் துன்ப பூமியிலிருந்து சந்தோஷ தாமத்திற்குச் செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்வது போன்றே, நீங்களும் ஆயத்தங்களைச் செய்ய வேண்டும். இதற்கு, நீங்கள் நிச்சயமாக விகாரங்களைத் துறக்க வேண்டும். இது அனைவரதும் இறுதிப் பிறவி; அனைவரும் வீடு திரும்ப வேண்டும். 5000 வருடங்களுக்கு முன்னர், அனைத்து மதங்களும் அழிக்கப்பட்டு, ஒரு தர்மம் ஸ்தாபிக்கப்பட்டபொழுது, இந்த மகாபாரத யுத்தம் இடம்பெற்றதை நீங்கள் மறந்து விட்டீர்களா? தேவர்கள் சத்திய யுகத்திலேயே இருந்தார்கள். அவர்கள் கலியுகத்தில் இருப்பதில்லை. இப்பொழுது இது இராவணனின் இராச்சியம். மனிதர்கள் அசுர குணம் உடையவர்கள்; அவர்கள் தேவர்கள் ஆக்கப்பட வேண்டும். அதைச் செய்வதற்கு, கடவுள் அசுர உலகிற்கா அல்லது தெய்வீக உலகிற்கா வர வேண்டும்? அல்லது அவர் இரண்டினதும் சங்கமத்தில் வருவாரா? ஒவ்வொரு கல்பத்தினதும் சங்கம யுகத்திலேயே கடவுள் வருகிறார் என நினைவுகூரப்பட்டுள்ளது. தந்தை இவ்விதமாகவே எங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் அவரது ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறீர்கள். அவர் கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு, உங்களின் வழிகாட்டியாக வந்துள்ளேன். இதற்கு, நான் மகாகாலன் என்றும் அழைக்கப்படுகிறேன். எதன் மூலம் சுவர்க்க வாயில்கள் திறந்து கொண்டனவோ, அந்த மகா யுத்தம் ஒரு கல்பத்திற்கு முன்னரும் இடம்பெற்றது. எவ்வாறாயினும், அனைவரும் சுவர்க்கத்திற்குச் செல்லவில்லை. தேவர்களைத் தவிர, ஏனைய அனைவரும் மௌன தாமத்தில் இருந்தனர். சத்தத்திற்கு அப்பாற்பட்ட தாமத்தின் அதிபதியாகிய நான் அனைவரையும் சத்தத்திற்கு அப்பாற்பட்ட தாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காக இங்கே வந்துள்ளேன். நீங்கள் இப்பொழுது இராவணனின் சங்கிலிக்குள் அகப்பட்டு, விகாரமான, அசுத்தமான, அசுர குணங்களைக் கொண்டவர்களாகி விட்டீர்கள். காமமே முதலிலக்க, அசுத்தமான விகாரம் ஆகும். பின்னர் கோபமும், பேராசையும் வரிசைக்கிரமமாக அசுத்தமானவையாக உள்ளன. நீங்கள் முழு உலகின் மீதும் உள்ள பற்றை வென்றவர்களாக வேண்டும். அப்பொழுதே உங்களால் சுவர்க்கத்திற்குச் செல்ல முடியும். ஒரு தந்தை எல்லைக்குட்பட்ட வீட்டைக் கட்டும்பொழுது, புத்தி அதிலேயே மும்முரமாகுகிறது. புதிய வீட்டில் இன்ன இன்னதைக் கட்டுமாறு குழந்தைகள் தமது தந்தைக்குக் கூறுகின்றனர். அதேபோன்று, எல்லையற்ற தந்தை கூறுகிறார்: நான் எவ்வளவு அழகாகச் சுவர்க்கம் என்ற புதிய உலகை உங்களுக்காக உருவாக்குகிறேன் எனப் பாருங்கள்! எனவே, உங்கள் புத்தியின் யோகம் பழைய உலகிலிருந்து துண்டிக்கப்பட வேண்டும். இவ்வுலகில் என்ன இருக்கிறது? சரீரங்கள் பழையவை, ஆத்மாக்களில் கலப்படம் உள்ளது. நீங்கள் யோகத்தில் நிலைத்திருந்தாலே அது அகற்றப்பட முடியும். அப்பொழுது உங்களால் ஞானத்தைக் கிரகிக்கக்கூடியதாக இருக்கும். இந்த பாபா உங்களுக்கு ஒரு சொற்பொழிவாற்றுகிறார். ஓ குழந்தைகளே, ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் எனது படைப்புக்கள். ஆத்மாக்கள் என்ற ரீதியில் நீங்கள் சகோதரர்கள். நீங்கள் அனைவரும் இப்பொழுது என்னுடன் வீட்டிற்கு வரவேண்டும். அனைவரும் இப்பொழுது தமோபிரதானாகி விட்டனர்; இது இராவண இராச்சியம் ஆகும். இராவண இராச்சியம் எப்பொழுது ஆரம்பமாகியது என்பதை முன்னர் நீங்கள் அறிந்திருக்கவில்லை. சத்திய யுகத்தில் 16 சுவர்க்கக் கலைகள் உள்ளன, பின்னர் திரேதா யுகத்தில் 14 சுவர்க்கக் கலைகள் உள்ளன. நீங்கள் உடனடியாகவே இரு கலைகளை இழக்கின்றீர்கள் என்றில்லை; நீங்கள் படிப்படியாகவே கீழிறங்குகிறீர்கள். இப்பொழுது சுவர்க்கக் கலைகள் இல்லை; முழுமையான கிரகணமே உள்ளது. தந்தை கூறுகிறார்: இப்பொழுது ஒரு தானம் செய்யுங்கள், உங்கள் கிரகணம் அகற்றப்படும். ஐந்து விகாரங்களையும் தானம் செய்யுங்கள், மேலும் எப்பாவமும் செய்யாதீர்கள். பாரத மக்கள் இராவணனை எரிக்கின்றனர். நிச்சயமாக, இது இராவண இராச்சியமாகும். எவ்வாறாயினும், இராவண இராச்சியம் என்றால் என்னவென்றோ, இராம இராச்சியமென்றால் என்னவென்றோ அவர்களுக்குத் தெரியாது. இராம இராச்சியம் இருக்க வேண்டுமென்று, அதாவது, புதிய பாரதம் இருக்க வேண்டுமென்று அவர்கள் கூறுகின்றனர். எனினும், உலகமும், பாரதமும் எப்பொழுது புதியதாகின்றன என்பது அவர்களில் ஒருவருக்குமே தெரியாது. அனைவரும் மயானத்தில் உறக்கத்திலுள்ளனர். குழந்தைகளாகிய உங்களால் இப்பொழுது சத்திய யுகத்தின் மரங்களைப் பார்க்க முடிகிறது. இங்கே தேவர்கள் எவரும் இல்லை. தந்தை இங்கே வந்து, இவை அனைத்தையும் விளங்கப்படுத்துகிறார். அவரே உங்களது தாயும், தந்தையுமானவர் ஆவார். பௌதீக ரூபத்தில் இந்த இருவரும் தாய், தந்தையாக உள்ளனர். நீங்கள் அவரையே தாயாகவும், தந்தையாகவும் நினைவுசெய்கிறீர்கள். சத்திய யுகத்தில் நீங்கள் இவ்வாறு கூற மாட்டீர்கள். அங்கே ஆசீர்வாதங்கள் என்ற கேள்வியே இல்லை. இங்கே, நீங்கள் தாயும், தந்தையுமானவருக்கு உரியவராகி, தகுதியானவராகவும் ஆகவேண்டும். தந்தை உங்களுக்கு நினைவூட்டுகிறார்: ஓ பாரத மக்களே, நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள் என்பதையும், மிகுந்த செல்வந்தர்களாகவும், விவேகிகளாகவும் இருந்தீர்கள் என்பதையும் மறந்து விட்டீர்கள். இப்பொழுது நீங்கள் கடனாளிகளாகவும், விவேகமற்றவர்களாகவும் ஆகிவிட்டீர்கள். இராவணனாகிய மாயை இந்தளவிற்கு உங்களை விவேகமற்றவர்களாக்கி விட்டாள். இதனாலேயே நீங்கள் இராவணனை எரிக்கின்றீர்கள். நீங்கள் ஓர் எதிரியின் கொடும்பாவியை உருவாக்கி, அதை எரிக்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு ஞானத்தைப் பெறுகின்றீர்கள், இருப்பினும், நீங்கள் அதைக் கடைவதில்லை. உங்கள் புத்தி தொடர்ந்தும் அலைபாய்கிறது. நீங்கள் உங்களின் சொற்பொழிவுகளில் இக்கருத்துக்களைக் கூற மறக்கின்றீர்கள். நீங்கள் முழுமையாக விளங்கப்படுத்துவதில்லை. பாபா வந்து விட்டார் என்ற தந்தையின் செய்தியை நீங்கள் அனைவருக்கும் கொடுக்க வேண்டும். மகா யுத்தம் உங்கள் முன்னாலேயே உள்ளது. அனைவரும் வீடு திரும்ப வேண்டும். சுவர்க்கம் ஸ்தாபிக்கப்படுகிறது. தந்தை கூறுகிறார்: உங்கள் சரீரங்களையும், சரீர உறவினர்களையும் மறந்து, என்னை நினைவுசெய்யுங்கள். இஸ்லாமியர்கள், பௌத்தர்கள் அனைவரும் சகோதரர்கள் என்று வெறுமனே கூறாதீர்கள். அவை அனைத்தும் சரீர மதங்களாகும். ஒவ்வொருவரது ஆத்மாவும் தந்தையின் ஒரு குழந்தையே. தந்தை கூறுகிறார்: சரீர மதங்கள் அனைத்தையும் துறந்து, என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். நாங்கள் தந்தையின் செய்தியை உங்களுக்குக்; கொடுப்பதற்காக, சிவனின் பிறப்பைக் கொண்டாடுகிறோம். பிரம்மாகுமாரர்களும், குமாரிகளுமாகிய நாங்கள் சிவனின் பேரக் குழந்தைகள் ஆவோம். அவரிடமிருந்தே நாங்கள் சுவர்க்க இராச்சியம் என்ற ஆஸ்தியைப் பெறுகிறோம். தந்தை எங்களுக்குக் கொடுக்கும் செய்தி: மன்மனாபவ! இந்த யோக அக்கினி மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். சரீரமற்றவர் ஆகுங்கள்! அச்சா.
இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
இரவு வகுப்பு:
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது பௌதீக உலகையும், சூட்சும உலகையும், அசரீரி உலகையும் மிகவும் நன்றாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள். தேவர்களுக்கு இது தேவையில்லை. இப்பொழுது முழு உலகினதும் ஞானமும் உங்களிடம் உள்ளது. முன்னர், நீங்கள் சூத்திர குலத்திற்குரியவர்களாக இருந்தீர்கள். நீங்கள் இப்பொழுது பிரம்மாகுமார்களாகி விட்டதால், உங்களுக்கு இந்த ஞானம் கொடுக்கப்படுகின்றது, அதன்மூலம் உங்கள் தேவ வம்சமானது ஸ்தாபிக்கப்பட முடியும். தந்தை வந்து, பிராமணக் குலத்தையும், சூரிய வம்ச, சந்திர வம்சங்களையும் ஸ்தாபிக்கின்றார், இந்தச் சங்கம யுகத்திலேயே அவர் அதனைச் செய்கின்றார். ஏனைய சமயத்தவர்கள் உடனடியாக ஒரு வம்சத்தை ஸ்தாபிப்பதில்லை. அவர்கள் குருமார்கள் என்று அழைக்கப்படுவதில்லை. தந்தை மாத்திரமே வந்து, ஒரு தர்மத்தை ஸ்தாபிக்கின்றார். தந்தை கூறுகின்றார்: தந்தையின் நினைவைக் கொண்டிருக்கின்ற அக்கறை உங்கள் புத்தியில் இப்பொழுது உள்ளது. நீங்கள் இதனை மீண்டும் மீண்டும் மறந்து விடுகின்றீர்கள். முயற்சி செய்யும்பொழுது, உங்கள் வியாபாரம் போன்றவற்றைத் தொடர்ந்தும் செய்வதுடன், ஆரோக்கியமாக இருக்கும்பொருட்டு, தொடர்ந்தும் நினைவையும் கொண்டிருங்கள். தந்தை உங்களை ஒரு வருமானத்தைச் சம்பாதிக்கச் செய்வதற்கு விசையுடன் தூண்டுகின்றார், அதில் நீங்கள் அனைத்தையும் மறக்க வேண்டும். ஆத்மாவாகிய நான், செல்கின்றேன்: நீங்கள் இதனைப் பயிற்சி செய்யுமாறு செய்யப்படுகின்றீர்கள். நீங்கள் உண்ணும்பொழுது, உங்களால் தந்தையை நினைவுசெய்ய முடியாதா? ஆடைகளைத் தைக்கும்பொழுதும், தந்தையின் நினைவில் உங்கள் புத்தியின் யோகம் இருக்கட்டும். அனைத்துக் குப்பைகளும் அகற்றப்பட வேண்டும். பாபா கூறுகின்றார்: உங்கள் சரீரங்களின் ஜீவனோபாயத்திற்காக நீங்கள் எந்த வேலையையும் செய்யலாம். இது மிகவும் இலகுவானது. 84 பிறவிகளின் சக்கரம் இப்பொழுது முடிவடைகின்றது என்பதை நீங்கள் புரிந்துகொண்டுள்ளீர்கள். தந்தை இப்பொழுது உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பதற்கு வந்து விட்டார். இந்நேரத்தில் உலகின் வரலாறும், புவியியலும் மீண்டும் மீண்டும் நிகழ்கின்றன் ஒரு கல்பத்தின் முன்னர் நிகழ்ந்ததைப் போலவே, அது மீண்டும் மீண்டும் நிகழ்கின்றது. தந்தை மாத்திரமே மீண்டும் மீண்டும் நிகழ்வதன் இரகசியத்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். கூறப்பட்டுள்ளது: ஒரே கடவுளும், ஒரே தர்மமும். அங்கே அமைதி இருக்கும்: அதுவே பிரிவினையற்ற இராச்சியமாகும். “பிரிவினை” என்றால், இராவணனின் அசுர இராச்சியமாகும். அவர்கள் தேவர்களும், இவர்கள் அசுரர்களும் ஆவர். அசுர இராச்சியத்தையும், தெய்வீக இராச்சியத்தையும் பற்றிய நாடகமானது பாரதத்தை அடிப்படையாகக் கொண்டது. பாரதத்தில் ஆதி சனாதன தேவிதேவதா இராச்சியம் இருந்தது, அது தூய இல்லறப் பாதையாக இருந்தது. தந்தை வந்து, தூய இல்லறப் பாதையை மீண்டும் உருவாக்குகின்றார். நாங்கள் தேவர்களாக இருந்தோம், பின்னர் எங்கள் கலைகள் தொடர்ந்தும் குறைவடைந்தன. பின்னர் நாங்கள் சூத்திர வம்சத்தினுள் சென்றோம். ஆசிரியர்கள் கற்பிக்கின்ற அதேமுறையிலேயே தந்தை கற்பிக்கின்றார், மாணவர்களும் செவிமடுக்கின்றார்கள். சிறந்த மாணவர்கள் முழுக் கவனமும் செலுத்துகின்றார்கள், அவர்கள் எதனையும் தவற விட மாட்டார்கள். நீங்கள் ஒழுங்கான முறையில் கற்க வேண்டும். அத்தகைய இறை கல்லூரிக்கு நீங்கள் சமுகமளிக்காமல் இருக்கக்கூடாது. பாபா தொடர்ந்தும் உங்களுக்கு ஆழமான விடயங்களைக் கூறுகின்றார். அச்சா. இரவு வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு நம்ஸ்தே உரித்தாகட்டும்.
தாரணைக்கான சாராம்சம்:
- சரீரத்தின் சமயங்கள் அனைத்தையும் துறந்து விடுங்கள். ஒரு சரீரமற்ற ஆத்மாவாகி, தந்தையை நினைவுசெய்யுங்கள். யோகத்தினால் ஆத்மாவைத் தூய்மையாக்குவதுடன், ஞானத்தையும் கிரகியுங்கள்.
- தந்தை கொடுக்கின்ற ஞானத்தைக் கடைந்து, அனைவருக்கும் தந்தையின் செய்தியைக் கொடுங்கள். உங்களின் புத்தி அலைபாய்வதை அனுமதிக்காதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் கீழ்ப்படிவானவராக
இருந்து, தந்தையின்
பாதச் சுவடுகளில்
உங்கள் அடிகளை
வைப்பதால், கடவுளின்
ஆசீர்வாதங்களைப் பெறுவீர்களாக.
கீழ்ப்படிவு என்றால் பாப்தாதாவின் பாதச் சுவடுகளில் உங்கள் அடிகளை வைப்பதாகும்,
அதாவது, அவரது கட்டளைகளைப் பின்பற்றுவதாகும். அத்தகைய கீழ்ப்படிவான குழந்தைகள் மாத்திரமே சகல உறவுமுறைகளிலும் கடவுளின் ஆசீர்வாதங்களைப் பெறுகின்றார்கள். இதுவும் ஒரு நியதி ஆகும். சாதாரணமான முறையிலும் ஒரு நபரின் வழிகாட்டல்களுக்கேற்ப, நீங்கள் ஒரு பணியை மேற்கொள்ளும்பொழுது, நீங்கள் யாருடைய பணியை மேற்கொள்கின்றீர்களோ, நிச்சயமாக அந்த நபரிடமிருந்து ஆசீர்வாதங்களைப்
பெறுகின்றீர்கள். இங்கே, இவை கடவுளின் ஆசீர்வாதங்கள்,
இவை கீழ்ப்படிவான
ஆத்மாக்களைச் சதா இலேசானவர்களாகவும், ஒளியாகவும் ஆக்குகின்றன.
சுலோகம்:
தெய்வீகத்தையும், ஆன்மீகத்தையும்
உங்கள் வாழ்வின் அலங்காரம் ஆக்குங்கள், அப்பொழுது சாதாரணமானவை முடிவடையும்.
---ஓம் சாந்தி---
0 Comments