Header Ads Widget

Header Ads

TAMIL MURLI 31.12.22

 

31-12-2022  காலை முரளி  ஓம் சாந்தி  பாப்தாதா  மதுபன்


Listen to the Murli audio file



இனிமையான குழந்தைகளே ! நீங்கள் சிவஜெயந்தி பண்டிகையை மிக விமரிசையாக என்று கொண்டாட வேண்டும். இது உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான நாளாகும், அனைவருக்கும் தந்தையினுடைய அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும்"

கேள்வி:

எந்த குழந்தைகள் தங்களுக்கு மிகவும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்? நஷ்டம் எப்போது ஏற்படுகிறது?

பதில்:

எந்த குழந்தைகள் போகப்-போக படிப்பை விட்டுவிடுகிறார்களோ, அவர்கள் தங்களுக்கு மிகவும் நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். பாபா தினமும் இவ்வளவு வைரங்களையும் ரத்தினங்களையும் தருகின்றார், ஆழமான கருத்துக்களைச் சொல்கின்றார், இதை யார் தொடர்ந்து கேட்கவில்லையோ அவர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. தேர்ச்சி அடைவதில்லை, சொர்க்கத்தின் உயர்ந்த இராஜ்ஜியத்தை இழந்து விடுகிறார்கள். பதவி கீழானதாகி விடுகிறது.

பாடல்:  இரவு பிரயாணிகளே களைப்படையாதீர்கள் ....

ஓம் சாந்தி: மனிதர்களுக்குத் தான் இரவும் பகலும் உண்டு. சிவபாபாவிற்கு இரவும் பகலும் இல்லை. இது குழந்தைகளாகிய உங்களுக்காக ஆகும், மனிதர்களுக்காக ஆகும். பிரம்மாவின் இரவு மற்றும் பிரம்மாவின் பகல் என்று பாடப்படுகிறது. சிவனுடைய பகல் சிவனுடைய இரவு என்று ஒருபோதும் சொல்லப் படுவதில்லை. ஒரேயொரு பிரம்மா என்றும் சொல்லப்படுவதில்லை. ஒருவருக்காக இரவு என்பது கிடையாது. பிராமணர்கüன் இரவு என்று பாடப்படுகிறது. இப்போது இது பக்தி மார்க்கத்தின் இறுதி, என்பது உங்களுக்குத் தெரியும், கூடவே காரிருüன் இறுதியும் கூட. நான் வருவதே பிரம்மாவின் இரவு ஏற்படும் போது தான், என்று பாபா கூறுகின்றார். நீங்கள் இப்போது விடியலை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறீர்கள். எப்போது நீங்கள் வந்து பிரம்மாவின் குழந்தைகளாக ஆகின்றீர்களோ, அப்போது தான் பிராமணர்கள் என்று சொல்லப் படுகிறீர்கள். பிராமணர்கüன் இரவு முடிந்து பிறகு தேவதைகüன் பகல் ஆரம்பமாகிறது. பிராமணர்கள் சென்று தேவதைகளாக ஆவார்கள். இந்த யக்ஞத்தின் மிகப்பெரிய மாற்றம் நிகழ்கிறது. பழைய உலகம் மாறி புதியதாக ஆகிறது. கலியுகம் பழைய யுகமாகும், சத்யுகம் புதிய யுகமாகும். பிறகு திரேதா யுகம் 25 சதவீதம் பழையதாகும், துவாபரயுகம் 50 சதவீதம் பழையதாகும். யுகத்தின் பெயரே மாறிவிடுகிறது. கலியுகத்தை அனைவரும் பழைய உலகம் என்று சொல்வார்கள். பாபாவிற்குத் தான் ஈஸ்வர் என்று சொல்லப்படுகிறது, அவர் தான் ஈஸ்வரிய இராஜ்ஜியத்தை ஸ்தாபனை செய்கிறார். நான் ஒவ்வொரு - கல்பத்திலும் சங்கமயுகத்தில் வருகின்றேன், என்று பாபா கூறு கின்றார். நேரம் ஆகிறது அல்லவா? ஒரு வினாடியின் விஷயம் தான் என்றாலும், விகர்மங்கள் வினாசம் ஆவதற்கு நேரமாகிறது, ஏனென்றால், அரைகல்பத்தினுடைய பாவம் தலையில் இருக் கிறது. பாபா சொர்க்கத்தைப் படைக்கின்றார் என்றால், குழந்தைகளாகிய நீங்களும் சொர்க்கத்திற்கு எஜமானர்கள் ஆவீர்கள் அல்லவா? ஆனால் தலையில் இருக்கும் பாவங்கüன் சுமை என்ன இருக்கிறதோ, அதை இறக்குவதற்கு நேரம் ஆகிறது. கஷ்டப்பட்டு யோகம் செய்ய வேண்டி யுள்ளது. கண்டிப்பாக தன்னை ஆத்மா என்று புரிந்து கொள்ள வேண்டும். முன்பெல்லாம் தந்தை என்று சொல்லும் போது உடலின் (உலகீய) தந்தை நினைவிற்கு வந்தார். இப்போது பாபா என்று சொல்லும் போது புத்தி மேலே சென்று விடுகிறது. உலகத்தில் வேறு யாருடைய புத்தியிலும், நான் ஆத்மா ஆன்மீக தந்தையினுடைய குழந்தை, என்பது வராது. நம்முடைய தந்தை, டீச்சர், சத்குரு மூவருமே ஆன்மீகமானவர்கள். அவரைத் தான் நினைவு செய்கிறார்கள். இது பழைய சரீரம், இதற்கு என்ன அலங்காரம் செய்வது. ஆனால் நாம் வனவாசத்தில் இருக் கிறோம், என்று உள்ளுக்குள் புரிந்து கொள்ளப்படுகிறது. மாமியார் வீட்டிற்கு புதிய உலகத்திற்குச் செல்லக் கூடியவர்கள். கடைசியில் எதுவுமே இருக்காது. பிறகு நாம் சென்று உலகத்திற்கு எஜமானர்கள் ஆகிறோம். இந்த சமயத்தில் முழு உலகமும் வனவாசத்தில் இருப்பது போலவே ஆகும், இந்த உலகத்தில் என்ன தான் இருக்கிறது, எதுவுமே இல்லை. மாமியார் வீடு இருக்கும் போது, வைரம் வைடூரியங்களால் ஆன மாüகைகள் இருந்தது. செல்வம் குவிந்து இருந்தது. இப்போது தந்தை வீட்டிலிருந்து மாமியார் வீட்டிற்குச் செல்ல வேண்டும். இப்போது நீங்கள் யாரிடத்தில் வந்துள்ளீர்கள்? பாப்தாதாவிடம் வந்திருக்கிறோம் என்று சொல்வார்கள். பாபா தாதாவிற்குள் பிரவேசம் ஆகியுள்ளார், தாதா இங்கேயே வசிக்கக் கூடியவர். பாப்தாதா இருவரும் சேர்ந்து இருக்கின்றார்கள். பரமபிதா பரமாத்மா தூய்மை யற்றவர்களை தூய்மை யாக்குபவர் ஆவார். அவருடைய ஆத்மா ஒருவேளை கிருஷ்ணருக்குள் இருந்தால், அவர் ஞானம் சொன்னார் என்றால், கிருஷ்ணர் கூட பாப்தாதா என்று தான் சொல்லப்படுவார். ஆனால் கிருஷ்ணரை பாப்தாதா என்று சொல்வது அழகாக இல்லை. பிரம்மா தான் பிரஜாபிதா என்று பாடப்பட்டுள்ளார். இது 5 ஆயிரம் வருடங்கüன் சக்கரம் என்று பாபா புரிய வைத்துள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் கண்காட்சி வைக்கும் போது, அதில் இதையும் எழுதுங்கள், இன்றிலிருந்து 5000 வருடங்களுக்கு முன்பு கூட நாங்கள் இந்த கண்காட்சியை வைத்திருந்தோம், மேலும் எல்லையற்ற தந்தையிடமிருந்து எப்படி ஆஸ்தி எடுப்பது என்று புரிய வைத்திருந்தோம். இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு போலவே மீண்டும் நாம் திருமூர்த்தி சிவஜெயந்தி கொண்டாடுகிறோம். இந்த வாக்கியம் கண்டிப்பாக போட வேண்டும். இந்த பாபா டைரக்ஷ்ன் கொடுத்துக் கொண்டிருக்கின்றார், அதன்படி நடக்க வேண்டும். சிவஜெயந்திகாக தயார் செய்ய வேண்டும். புதுப்புது விஷயங்களைப் பார்த்து மனிதர்கள் அதிசயப்படுவார்கள். நன்றாக ஷோவுடன் பிரமாதமாய் பண்ண வேண்டும். நாங்கள் திருமூர்த்தி சிவஜெயந்தி கொண்டாடுகிறோம். விடுப்பு எடுக்கின்றோம். சிவஜெயந்திக்கு அதிகாரப் பூர்வமான விடுமுறையாகும். சிலர் செய்கிறார்கள், சிலர் செய்வதில்லை. உங்களுக்கு இது மிகப்பெரிய நாளாகும். கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடுவது போலாகும். மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடுகிறார்கள்.இப்போது நீங்கள் இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டும். நாங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து ஆஸ்தி அடைந்து கொண்டிருக்கிறோம், என்பதை அனைவருக்கும் சொல்ல வேண்டும். யார் தெரிந்திருக்கிறார்களோ அவர்கள் தான் மகிழ்ச்சியைக் கொண்டாடுவார்கள். கிளை நிலையங்கüல் தங்களுக்குள் சந்தித்துக் கொள்வார் கள். இங்கே அனைவரும் வரமுடியாது. நாம் பிறந்த தினம் கொண்டாடு கிறோம். சிவபாபாவிற்கு மரணம் ஏற்பட முடியாது. சிவபாபா எப்படி வருகிறாரோ அப்படியே சென்றுவிடுவார். ஞானம் முடிந்துவிடும், சண்டை ஆரம்பமாகி விடும், அவ்வளவு தான். இவருக்கு தனக்கென்று சரீரம் இல்லை. குழந்தைகளாகிய நீங்கள் தன்னை ஆத்மா என்று புரிந்து முழுமையாக ஆத்ம அபிமானி யாக ஆக வேண்டும், அதற்குத் தான் உழைப்பு தேவைப்படுகிறது. சத்யுகத்திலோ ஆத்ம அபிமானியாக இருக்கிறார்கள். அங்கே அகால மரணம் நிகழ்ந்து விடுகிறது. இங்கே அமர்ந்து கொண்டிருக்கும் போதே மரணம் வந்து விடுகிறது, இதயம் நின்று விடுகிறது. ஈஸ்வரனால் விதிக்கப் பட்டது என்று சொல்வார்கள். ஆனால் ஈஸ்வரனால் விதிக்கப்பட்டது கிடையாது. நீங்கள் நாடகத்தின் விதி என்று சொல்வீர்கள். நாடகத்தில் இவருடைய நடிப்பு அப்படி இருந்தது. இப்போது இருப்பதோ கலியுகமாகும், புதிய உலகம் சத்யுகமாக இருந்தது. சத்யுகத்தின் மாüகைகள் எவ்வளவு வைரங்கüனால் அலங்கரிக்கப் பட்டிருக்குமோ அளவில்லாத செல்வம் நிறைந்திருக்கும். ஆனால் அதைப் பற்றிய முழு விவரமும் இல்லை. ஏதாவது பூகம்பங்கள் ஏற்பட்டால் தேய்ந்து நலிந்து விடுகிறது, கீழே சென்று விடுகிறது என்றால், புத்தியின் மூலம் சிந்திக்க வேண்டும். இது புத்திக்கான உணவாகும். உங்களுடைய புத்தி மேலே சென்று விட்டது. படைப்பவரை தெரிந்து கொள்வதின் மூலம் படைப்பையும் தெரிந்து கொள்கிறீர்கள். முழு சிருஷ்டியின் இரகசியம் புத்தியில் இருக்கிறது. நாடகத்தில் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் ஆவார். நாங்கள் பிரம்மா-விஷ்ணு-சங்கர் இந்த மூவருடைய வேலை, என்னென்ன நடிப்பு இருக்கிறது என்று சொல்ல முடியும். ஜகதம்பாவிற்கு எவ்வளவு பெரிய விழா நடக்கிறது. ஜகதம்பா மற்றும் ஜகத்பிதாவிற்கும் இடையே என்ன உறவு? இதை யாரும் தெரிந்திருக்கவில்லை, ஏனென்றால், இது ரகசியமான (குப்தமான) விஷயமாகும். அம்மா இவர் (பிரம்மா) அமர்ந்திருக்கிறார், அவர் (ஜகதம்பா) தத்தெடுக் கப்பட்ட தாய் ஆவார். ஆகை யினால் தான் அவருடைய சித்திரம் உருவானது. அவரை ஜெகதம்பா என்று சொல்லப்படுகிறது. பிரம்மாவின் மகள் சரஸ்வதி ஆவார். அம்மா என்று சொன்னாலும் அவர் மகள் ஆவார். பிரம்மா குமாரி சரஸ்வதி சரியாக செய்வார். நீங்கள் அவர்களை மம்மா என்று அழைத்தீர்கள். பிரம்மாவை அம்மா என்று சொல்வது அழகாக இல்லை. இதைப் புரிந்து கொள்வதற்கு மேலும் புரிய வைப்பதற்கு மிகவும் தூய்மையான புத்தி தேவை. இவை ஆழமான விஷயங்களாகும். நீங்கள் யாருடைய கோவிலுக்குச் சென்றாலும் உடனே அவர்களுடைய தொழிலைத் தெரிந்து கொள்வீர்கள். குருநானக்கினுடைய கோவிலுக்கும் சென்றீர்கள் என்றால், மீண்டும் அவர் எப்போது வருவார் என்று உடனே சொல்லி விடுவீர்கள். அந்த மக்களுக்கு எதுவுமே தெரிவதில்லை, ஏனென்றால், கல்பத்தின் ஆயுளை அதிகமாக்கி விட்டார்கள். நீங்கள் வர்ணனை செய்ய முடியும். நான் உங்களுக்கு எப்படி படிப்பிக்கின்றேன் பாருங்கள், என்று பாபா கூறுகின்றார். எப்படி வருகின்றேன்? கிருஷ்ணருடைய விஷயம் இல்லை. கீதை படித்துக் கொண்டே இருக் கிறார்கள், சிலர் 18 அத்தியாயங்களையும் நினைவு செய்கிறார்கள் என்றால் அவர்களுக்கு எவ்வளவு மகிமை ஏற்படுகிறது! ஒரு சுலோகன் சொல்லி விட்டால் ஆஹா! ஆஹா! இவரைப் போல மகாத்மா யாரும் இல்லை என்பார்கள். இன்றைக்கு ரித்து-சித்துக்களும் நிறைய இருக்கிறது. மந்திர விளையாட்டுகளை நிறைய காட்டுகிறார்கள். உலகத்தில் ஏமாற்றுவது நிறைய இருக்கிறது. பாபா எவ்வளவு சகஜமாகப் புரிய வைக்கின்றார், ஆனால் அனைத்தும் படிப்பவர்கüடம் தான் இருக்கிறது. டீச்சர் அனைவருக்கும் ஒரே மாதிரி தான் கற்பிக்கின்றார். யாராவது படிக்கவில்லை என்றால் தேர்ச்சி பெற மாட்டார்கள். இதுவும் கண்டிப்பாக நடக்கத் தான் வேண்டும். முழு இராஜ்யமும் ஸ்தாபனை ஆக வேண்டும். நீங்கள் இந்த ஞானக் குளியல் செய்து, ஞானத்தின் முழுக்கு போட்டு சொர்க்கத்தின் தேவதைகளாக அதாவது சொர்க்கத்தின் எஜமானர்களாக ஆகி விடுகின்றீர்கள். இரவு-பகலுக்கு உண்டான வித்தியாசமாக இருக்கிறது. அங்கே தத்துவங்களும் சதோபிர தானமாக இருப்பதனால் சரீரமும் கூட துல்லியமானதாக உருவாகிறது. இயற்கையான அழகு இருக்கிறது. அது ஈஸ்வரனால் ஸ்தாபிக்கப்பட்ட பூமியாகும். இப்போது இது அசுர பூமியாகும். சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கிறது. இப்போது உங்களுடைய புத்தியில் வரிசைக்கிரமமாக முயற்சியின் படி நாடகத்தின் முதல்-இடை-கடைசி யினுடைய இரகசியம் இருக்கிறது.

நன்றாக முயற்சி செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். குழந்தைகள் புதிய புதிய இடங்களில் சுற்றுவதற்குச் செல்கிறார்கள். நல்ல தாய்மார்கள் இருந்தார்கள் என்றால், சேவையில் ஈடுபடுத்த வேண்டும். ஒருவேளை செண்டருக்கு யாரும் வரவில்லை என்றால், தனக்கு நஷ்டத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள் என்பதாகும். யாராவது படிப்பதற்கு வரவில்லை என்றால், "நீங்கள் படிப்பதில்லை. இதனால் உங்களுக்கு நிறைய நஷ்டம் ஏற்படும், என்று கடிதம் எழுத வேண்டும். தினம்-தினம் மிகவும் ஆழமான பாயிண்டுகள் வருகிறது. இவை வைரங்கள் மற்றும் ரத்தினங்களாகும், நீங்கள் படிக்கவில்லை என்றால், தேர்ச்சி பெற மாட்டீர்கள். இவ்வளவு பெரிய சொர்க்கத்தின் இராஜ்ஜியத்தை இழந்து விடுவீர்கள். தினமும் முரளியைக் கேட்க வேண்டும். அதேபோல் பாபாவை விட்டுவிட்டீர்கள் என்றால் தேர்ச்சி பெற மாட்டீர்கள், என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், பிறகு அதிகம் அழ வேண்டி வரும். இரத்தக் கண்ணீர் வடிப்பீர்கள். படிப்பை ஒருபோதும் விட்டு விடக் கூடாது. எவ்வளவு பேர் தொடர்ந்து வருகிறார்கள், என்று பாபா வருகைப் பதிவேட்டைப் பார்க்கின்றார். வராதவர்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும். ஸ்ரீமத் சொல்கிறது - படிக்கவில்லை என்றால், பதவி கீழானதாகி விடும். மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுவிடும். எழுதுங்கள்- படியுங்கள் அப்போது தான் பள்ளியை நன்றாக உயர்த்த முடியும். அப்படி யாராவது வரவில்லை என்றால் அப்படியே விட்டுவிடக் கூடாது. நம்முடைய மாணவர்கள் அதிகம் தேர்ச்சி பெறவில்லை என்றால் மரியாதை போய் விடும் என்ற கவலை டீச்சருக்கு இருக்கிறது. உங்களுடைய சென்டரில் குறைவாக சேவை நடக்கிறது, என்ன தூங்கிக் கொண்டிருக்கின்றீர்களா என்று பாபா கடிதம் எழுதுகின்றார். நல்லது.

இனிமையிலும் இனிமையான செல்லமான குழந்தைகளுக்கு, தாய் தந்தையான பாப் தாதாவின் அன்பு நினைவும், காலை வணக்கமும் உரித்தாகுக. ஆன்மீகத் தந்தையின் ஆன்மீகக் குழந்தைகளுக்கு வணக்கம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

(1) இந்த பழைய சரீரத்தை அலங்காரம் செய்யக் கூடாது. வனவாசத்தில் இருந்து கொண்டு புதிய வீட்டிற்குச் செல்வதற்குத் தயாராக வேண்டும்.

(2) தினமும் ஞான நீராட வேண்டும். ஒரு போதும் படிப்பைத் தவற விடக்கூடாது.

வரதானம்:

மகான் தன்மையின் கூடவே பணிவை தாரணை செய்து அனைவருடைய மரியாதையை அடையக்கூடிய சுகமானவர் ஆகுக.


மகான் தன்மையின் அடையாளம் பணிவு ஆகும். எந்தளவு மகான் தன்மை உள்ளதோ, அந்தளவு பணிவு இருக்கும். ஏனென்றால், அப்பேற்பட்டவர்கள் சதா நிறைந்து இருப்பார்கள். எவ்வாறு மரமானது எந்தளவு நிறைந்திருக்குமோ, அந்தளவு தணிந்து இருக்கும். எனவே, பணிவு தான் சேவை செய்கிறது மற்றும் யார் பணிவாக இருக்கின்றார்களோ, அவர்கள் அனைவரின் மூலமும் மரியாதையை அடைகின்றார்கள். யார் அபிமானத்தில் இருக்கின்றார்களோ, அவர்களுக்கு எவரும் மரியாதை கொடுப்பதில்லை, அவர்களிடமிருந்து தூரமாக ஓடி விடுவார்கள். யார் பணிவாக இருக்கின்றார்களோ, அவர்கள் சுகமானவர்களாக இருப்பார்கள். அவர்கள் மூலம் அனைவரும் சுகத்தின் அனுபவம் செய்வார்கள். அனைவரும் அவர்களுடைய அருகாமையில் வர விரும்புவார்கள்.

சுலோகன்:

துயரத்திற்கு விவாகரத்து கொடுப்பதற்காக குஷிகளின் பொக்கிஷத்தை சதா கூடவே வைத்துக் கொள்ளுங்கள்.

 

மாதேஷ்வரி அவர்களின் இனிமையான மகாவாக்கியம்

1.பாடல்: கண்ணிழந்தவர்களுக்கு வழிகாட்டுங்கள் பிரபு . . .

கண்ணிழந்தவர்களுக்கு வழி சொல்லுங்கள் என்று இப்பொழுது மனிதர்கள் பாடுகிறார்கள் என்றால் வழி காண்பிக்கக் கூடியவர் ஒரே ஒரு பரமாத்மா ஆவார் என்பது அர்த்தமாகிறது. ஆகையினாலேயே, பரமாத்மாவை அழைக்கின்றார்கள் மற்றும் பிரபு வழி சொல்லுங்கள் என்று எந்த சமயம் சொல்கின்றார்களோ, அப்பொழுது மனிதர்களுக்கு வழி காண்பிப்பதற்காக சுயம் பரமாத்மா நிராகார ரூபத்தில் இருந்து சாகார ரூபத்திற்கு அவசியம் வரவேண்டி இருக்கிறது. அப்பொழுதே ஸ்தூலத்தில் வழி சொல்லுவார், வராமல் வழி சொல்ல முடியாது. இப்பொழுது மனிதர்கள் யார் குழம்பி இருக்கிறார்களோ, அந்தக் குழம்பி இருப்பவர்களுக்கு வழி தேவை. ஆகையினால், பரமாத்மாவிடம் கண் இழந்தவர்களுக்கு வழி சொல்லுங்கள் பிரபு என்று சொல்கின்றார்கள். இவரையே பிறகு படகோட்டி என்றும் சொல்லப்படுகிறது, அவர் அக்கரை அதாவது இந்த 5 தத்துவங்களால் உருவாக்கப்பட்ட சிருஷ்டியைக் கடந்து அக்கரை அதாவது 5 தத்துவங்களைக் கடந்த ஆறாவது தத்துவமான அகண்ட ஜோதி மகதத்துவத்திற்கு அழைத்துச் செல்வார், எனில், பரமாத்மாவும் அக்கரையில் இருந்து இக்கரைக்கு வந்தால் தானே அழைத்துச் செல்வார். எனவே, பரமாத்மாவும் தன்னுடைய இருப்பிடத்தை விட்டு வரவேண்டியதாக உள்ளது, ஆகையினாலேயே, பரமாத்மாவை படகோட்டி என்று அழைக் கின்றோம். அவரே படகாகிய நம்மை (ஆத்மா என்ற படகை) அக்கரைக்கு அழைத்துச் செல்கிறார். இப்பொழுது யார் பரமாத்மாவிடம் யோகத்தை இணைக்கின்றார்களோ, அவர்களை தன்னுடன் அழைத்துச் செல்வார். மற்றபடி, யார் எஞ்சி இருப்பார்களோ, அவர்கள் தர்மராஜருடைய தண்டனைகளை அடைந்த பிறகு முக்தி அடைவார்கள்.

2. முட்களின் உலகத்தில் இருந்து மலர்களின் நிழலுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று இப்பொழுது பரமாத்மாவிற்காக மட்டுமே இந்த அழைப்பு கொடுத்துக் கொண்டு இருக் கின்றார்கள். எப்பொழுது மனிதர்கள் அதிக துக்கமானவர்களாக இருக்கின்றார்களோ, அப்பொழுது, பரமாத்மாவே! இந்த முட்களின் உலகத்தில் இருந்து மலர்களின் நிழலுக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று பரமாத்மாவை நினைவு செய்கின்றார்கள். இதிலிருந்து அப்பேற் பட்ட ஒரு உலகம் உள்ளது என்பது நிரூபணம் ஆகிறது. இப்பொழுது இருக்கும் உலகம் முட்களால் நிரம்பி உள்ளது என்பதை இப்பொழுது அனைத்து மனிதர்களும் அறிவார்கள். இதன் காரணத்தினாலேயே மனிதர்கள் துக்கம் மற்றும் அசாந்தியை அடைந்து கொண்டு இருக்கின்றார்கள் மற்றும் பிறகு மலர்களின் உலகத்தை நினைவு செய்கின்றார்கள். எனவே, அப்பேற்பட்ட ஒரு உலகம் அவசியம் இருக்கும், அந்த உலகத்தின் சமஸ்காரம் ஆத்மாவில் நிறைந்து உள்ளது. துக்கம், அசாந்தி, இவை அனைத்தும் கர்மபந்தனத்தின் கணக்கு வழக்காகும் என்பதை இப்பொழுது நாம் அறிந்துள்ளோம். இராஜாவிலிருந்து ஏழை வரை ஒவ்வொரு மனிதரும் இந்தக் கணக்கில் முழுவதுமாக சிக்கிக் கொண்டு இருக்கின்றார்கள். ஆகையினால், இப்போதைய உலகம் கலியுகம் ஆகும், ஆகையினால், அது முழுவதும் கர்மபந்தனத்தால் உருவாகியுள்ளது மற்றும் சத்யுகம் முந்தைய உலகமாக இருந்தது, அதை மலர்களின் உலகம் என்று சொல்கின்றோம் என்று சுயம் பரமாத்மா கூறுகின்றார். அதுவோ, கர்மபந்தனமற்ற ஜீவன் முக்தி அடைந்த தேவி, தேவதைகளின் இராஜ்யம் ஆகும், அது இப்பொழுது இல்லை. இப்பொழுது ஜீவன்முக்தி என்று எதை சொல்கின்றோமோ, அதன் அர்த்தம் தேகத்திலிருந்தே நாம் விடுபட்டு இருந்தோம் என்பது கிடையாது. அவர்களுக்கு தேகத்தின் உணர்வு இல்லாமல் இருந்தது. அவர்கள் தேகத்தில் இருந்த போதிலும் துக்கத்தை அடையவில்லை, எனில், அங்கு எந்தவித கர்மபந்தனத்தின் வழக்கும் கிடையாது. அவர்கள் பிறப்பெடுக்கின்றார்கள், சரீரத்தை விடுகின்றார்கள், ஆதி, மத்திமம், அந்திமத்தில் சுகத்தை அடைந்தார்கள். எனவே, ஜீவன்முக்தி என்றால் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே கர்மாதீத நிலையில் இருப்பது என்பதாகும். இப்பொழுது இந்த முழு உலகமும் 5 விகாரங்களில் முழுமையாக சிக்கிக்கொண்டு இருக்கிறது, 5 விகாரங்களின் முழுமையிலும் முழுமையான உறைவிடமாக உள்ளது. ஆனால், மனிதர்களுக்குள் இந்த 5 பூதங்களை வெல்வதற்கான சக்தி இல்லை. அப்பொழுதே பரமாத்மா சுயம் அவரே வந்து நம்மை 5 பூதங்களில் இருந்து விடுவிக்கின்றார் மற்றும் எதிர்கால பலனான தேவி தேவதா பதவியை அடைய வைக்கின்றார். நல்லது. ஓம்சாந்தி.

Download PDF

Post a Comment

0 Comments