Header Ads Widget

Header Ads

TAMIL MURLI 30.12.22

 

30-12-2022  காலை முரளி  ஓம் சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



இனிமையான குழந்தைகளே! தூரதேசத்தில் இருந்து பாபா வந்துள்ளார், தர்மம் மற்றும் இராஜ்யம் இரண்டின் ஸ்தாபனை செய்வதற்காக. எப்போது தேவதா தர்மம் உள்ளதோ, அப்போது இராஜ்யமும் கூட தேவதைகளினுடையதாக இருக்கும். வேறு தர்மமோ இராஜ்யமோ கிடையாது.

கேள்வி:

சத்யுகத்தில் அனைவரும் புண்ணியாத்மாக்கள், எந்த ஒரு பாவாத்மாவும் இல்லை. அதன் அடையாளம் என்ன?

பதில்:

அங்கே எந்த ஒரு கர்ம போகம் (நோய்) முதலிய எதுவும் நடைபெறுவதில்லை. ஆத்மாக்கள் பாவங்களுக்கான தண்டனையைக் கர்மபோகத்தின் ரூபத்தில் அனுபவித்துக் கொண்டுள்ளனர் என்பதை இங்கே நோய்கள் முதலியவை உறுதிப் படுத்துகின்றன. இது தான் கடந்த காலத்தின் கணக்கு-வழக்கு எனச் சொல்லப் படுகின்றது.

கேள்வி:

பாபாவின் எந்த சமிக்ஞையை தூராதேசிக் குழந்தைகள் மட்டுமே புரிந்துக் கொள்ள முடியும்?

பதில்:

பாபா சமிக்ஞை தருகிறார் - குழந்தைகளே, நீங்கள் புத்தியோகத்தின் ஓட்டப் பந்தயத்தில் செல்லுங்கள். இங்கே அமர்ந்தவாறே பாபாவை நினைவு செய்யுங்கள். அன்போடு நினைவு செய்வீர் களானால் நீங்கள் பாபாவின் கழுத்துக்கு மாலை ஆகி விடுவீர்கள். உங்கள் அன்பின் கண்ணீர்த் துளிகள் மாலையின் மணிகளாக ஆகி விடும்.

பாடல்:  கடைசியில் அந்த நாள் இன்று வந்தே விட்டது..... 

ஓம் சாந்தி. குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள். பாடலின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டீர்கள். பாரதமோ மிகப் பெரியது. முழு பாரதத்திற்கும் கற்பிக்கப் படுவதில்லை. இது படிப்பாகும். கல்லூரி கள் திறக்கப்பட்டுக் கொண்டே போகும். இது எல்லையற்ற தந்தையின் பல்கலைக் கழகமாகும். இது பாண்டவ கவர்ன்மென்ட் எனச் சொல்லப் படும். ஆட்சி உரிமை (சாவரென்ட்டி) தான் கவர்ன்மென்ட் எனச் சொல்லப்படுகிறது. இப்போது குழந்தைகள் நீங்கள் அறிவீர்கள், இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. தர்மம் மற்றும் இராஜ்யம் தர்மத்துடன் கூடிய இராஜ்யம். தேவி-தேவதா தர்மமும் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. வேறு எந்த ஒரு தர்மத்தினரும் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வதில்லை. அவர்கள் தர்மத்தை மட்டுமே ஸ்தாபனை செய் கின்றனர். பாபா சொல்கிறார், நான் ஆதி சநாதன தேவி-தேவதா தர்மம் மற்றும் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறேன். அதனால் ரிலிஜியோ-பொலிட்டிக்கல் (தர்மம் சார்ந்த அரசியல்) எனச் சொல்லப் படுகிறது. குழந்தைகள் மிகவும் தூராதேச (தொலை நோக்கு) புத்தி உள்ளவர்களாக ஆக வேண்டும். பாபா தூரதேசத்தில் இருந்து வந்துள்ளார். தூரதேசத்தில் இருந்தோ ஆத்மாக்கள் அனைவருமே வரத் தான் செய்கின்றனர். நீங்களும் தூரதேசத்தில் இருந்து வந்திருக் கிறீர்கள். புதிய தர்மத்தை ஸ்தாபனை செய்ய யார் வருகின்றனரோ - அவர்களின் ஆத்மா தூர தேசத்தில் (மூலவதனம்) இருந்து வருகிறது. அவர்கள் தர்ம ஸ்தாபகர்கள். மற்றும் இவர் தர்மம் மற்றும் இராஜ்யத்தின் ஸ்தாபகர் எனச் சொல்லப் படுகிறார். பாரதத்தில் (தேவ, தேவதைகளின்) இராஜ்யம் இருந்தது. மகாராஜா-மகாராணி இருந்தனர். மகாராஜா ஸ்ரீநாராயணர், மகாராணி ஸ்ரீலட்சுமி. ஆக, இப்போது குழந்தைகள் நீங்கள் சொல்வீர்கள், நாங்கள் ஸ்ரீமத்படி நடந்து கொண்டிருக் கிறோம். அவரை (சிவபாபாவை) பாரதவாசிகளாகிய நாம் அனைவரும் வாருங்கள், வந்து பழைய உலகத்தை மாற்றிப் புதிய சுகம் நிறைந்த உலகத்தை ஸ்தாபனை செய்யுங்கள் -- என்று அழைத்தே வந்துள்ளோம். பழைய வீடு மற்றும் புதிய வீட்டுக்கிடையில் வேறுபாடோ உள்ளது இல்லையா? புத்தியில் புதிய வீடு தான் நினைவிருக்கிறது. தற்சமயத்திலோ வீட்டை மிகவும் ஃபேஷன் நிறைந்ததாகவே கட்டுகின்றனர். சிந்தனை செய்து கொண்டே இருக்கின்றனர் - இப்படி-இப்படி வீடு கட்ட வேண்டும். நீங்கள் அறிவீர்கள், நாம் நம்முடைய தர்மம் மற்றும் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம். சொர்க்கத்தில் நாம் வைர-வைடூரியங் களால் ஆன மாளிகை கட்டுவோம். மற்ற தர்மத்தைச் சேர்ந்தவர்கள் இதுபோல் புரிந்து கொள்ள மாட்டார்கள். எப்படி கிறிஸ்து கிறிஸ்தவ தர்மத்தை ஸ்தாபனை செய்வதற்காக வந்தார், இதை அந்தச் சமயம் புரிந்து கொள்ளவில்லை. எப்போது விருத்தியாகிறதோ, அப்போது கிறிஸ்தவ தர்மம் எனப் பெயரிடுகின்றனர். இஸ்லாம் முதலான தர்மங்களின் எந்த ஓர் அடையாளமோ பெயரோ இருப்பதில்லை. உங்களுடைய அடையாளம் ஆரம்பத்தில் இருந்து இது வரையிலும் நடந்து வந்துள்ளது. லட்சுமி-நாராயணரின் சித்திரம் உள்ளது - இதையும் அறிவீர்கள், என்றால் இவர் களின் இராஜ்யம் சத்யுகத்தில் இருந்தது. உங்களுக்கு இந்த ஞானம் அங்கே இருக்காது. அதாவது கடந்த காலத்தில் யாருடைய இராஜதானி இருந்தது, வருங்காலத்தில் யாருடைய இராஜதானி இருக்கும்? நிகழ்காலத்தை மட்டுமே அறிந்திருப்பீர்கள். அவ்வளவு தான். இப்போது நீங்கள் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் வருங்காலம் பற்றி அறிவீர்கள். முதல்-முதலில் நமது தர்மம் இருந்தது. பிறகு இந்த தர்மங்கள் வந்துள்ளன. சங்கமயுகத்தில் தான் பாபா அமர்ந்து இவற்றைப் புரிய வைக்கிறார். இப்போது நீங்கள் திரிகாலதரிசி ஆகியிருக்கிறீர்கள். சத்யுகத்தில் திரிகால தரிசியாக இருக்க மாட்டீர்கள். அங்கோ இராஜ்யம் (ஆட்சி) செய்து கொண்டே இருப்பீர்கள். தர்மங் களின் பெயர்-அடையாளம் எதுவும் இருக்காது. தங்களின் மகிழ்ச்சி போதையில் இராஜ்யம் செய்து கொண்டே இருப்பீர்கள்.

இப்போது நீங்கள் சக்கரம் முழுவதையும் அறிந்திருக்கிறீர்கள். மனிதர்கள் இதையோ அறிந்திருக்க வில்லை - நிச்சயமாக தேவி-தேவதா தர்மம் இருந்தது. ஆனால் அது எப்படி ஸ்தாபனை ஆனது, எவ்வளவு காலம் நடைபெற்றது - இதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. நீங்கள் அறிவீர்கள், சத்யுகத்தில் இத்தனைப் பிறவிகள் இராஜ்யம் செய்தனர். பிறகு திரேதாவில் இத்தனைப் பிறவிகள் எடுத்தனர். இவர்களும் கூட அறிந்து கொள்ள வேண்டும். குழந்தைகள் அறிவார்கள். நிச்சயமாக எல்லையற்ற தந்தை நமக்குப் படிப்பு சொல்லித் தருகிறார். நீங்கள் அறிவீர்கள், கிருஷ்ணருடைய ஆத்மாவின் அநேகப் பிறவிகளின் கடைசிப் பிறவியில் இவருக்குள் தான் வந்து பிரவேசமாகி யிருக்கிறார். இவருடைய பெயர் பிரம்மா இவர் அவசியம் இருக்க வேண்டும். இந்த திரிமூர்த்தி யின் ஞானம் மிகவும் எளிமையானது. இவர் நிராகார் தந்தை சிவன், இவரிடமிருந்து இந்த ஆஸ்தி கிடைக்கிறது. நிராகாரிடம் இருந்து ஆஸ்தி எப்படிக் கிடைத்தது? இந்தப் பிரஜாபிதா பிரம்மா மூலம் பிராமணரிலிருந்து தேவதை ஆகிக் கொண்டிருக்கிறோம். பிறகு அதே தேவதைகள் 84 பிறவிகளுக்குப் பிறகு பிராமணர் ஆகின்றனர். இந்தச் சக்கரம் புத்தியில் இருக்க வேண்டும். பிராமணர்களாகிய நாம் தான் பிரம்மாவின் குழந்தைகளாக இருப்பதுடன் ருத்ரனின் (சிவன்) குழந்தைகளாகவும் இருக்கிறோம். ஆத்மாக்கள் நாம் நிராகாரியின் குழந்தைகள். தந்தையை நினைவு செய்கிறோம். இந்தச் சித்திரங்கள் பற்றிப் புரிய வைப்பது மிகவும் சுலபம். தபஸ்யா செய்து கொண்டிருக்கிறோம். பிறகு சத்யுகத்தில் வருவோம். உங்கள் புத்தியில் இருக்க வேண்டும் - நாம் மனிதரில் இருந்து தேவதை ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று. பிறகு தேவதா தர்மத்தின் சக்கரவர்த்தி ஆகி இராஜ்யம் செய்வோம். யோகத்தின் மூலம் தான் உங்களுடைய விகர்மங்கள் விநாசமாகும். இப்போதும் கூட பாவம் செய்து கொண்டே இருந்தால் என்னவாக ஆவீர்கள். யாத்திரையில் செல்லும் போது பாவம் செய்வ தில்லை. தூய்மையாகக் கண்டிப்பாக இருக் கின்றனர். தேவதை களிடம் செல்கிறோம் எனப் புரிந்து கொண்டுள்ளனர். கோவில்களுக்கும் கூட எப்போதுமே குளித்து விட்டுச் செல்கின்றனர். ஏன் குளிக்கின்றனர்? ஒன்று, விகாரத்தில் செல்கின்றனர். இரண்டாவது கழிவறைக்குச் செல்கின்றனர். பிறகு சுத்தம் செய்து கொண்டு தேவதைகளின் தரிசனம் செய்வதற்காகச் செல்கின்றனர். யாத்திரையில் ஒரு போதும் அசுத்த மானவர்களாக ஆவதில்லை. நான்கு தாம்களைச் சுற்றி வருவது, தூய்மையாகி செய்கின்றனர். ஆக, தூய்மை தான் முக்கியமானது. தேவதைகளும் தூய்மை இல்லாதவர்களாகி விட்டால் என்ன வேறுபாடு இருக்க முடியும்? தேவதைகள் தூய்மையாக உள்ளனர். நாம் தூய்மையின்றி உள்ளோம். நீங்கள் அறிவீர்கள், பாபா நம்மை பிரம்மா மூலமாக மடியில் எடுத்துக் கொண்டுள்ளார். அவ்வாறே நீங்கள் அனைவரும் என் குழந்தைகள். ஆனால் எப்படி உங்களுக்குப் படிப்பு சொல்லித் தருவேன்? இராஜயோகம் எப்படிக் கற்பிப்பேன்? இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களை சொர்க்கத்தின் எஜமானர்களாக எப்படி ஆக்குவேன்? நீங்கள் அறிவீர்கள், பாபா புது உலகத்தை ஸ்தாபனை செய்கிறார். ஆக, பகவான் நிச்சயமாகக் குழந்தைகளைத் தகுதி உள்ளவர்களாக ஆக்கி ஆஸ்தி தருவார். எப்போது தகுதியுள்ளவராக ஆக்குவார்? சங்கமயுகத்தில். பாபா சொல்கிறார், நான் சங்கமயுகத்தில் வருகிறேன். இந்த இடையிலுள்ள பிராமண தர்மம் தான் தனியாகி விடுகிறது. கலியுகத்தில் இருப்பது சூத்திர தர்மம். சத்யுகத்தில் இருப்பது தேவதா தர்மம். இது பிராமண தர்மம். நீங்கள் பிராமண தர்மத்தைச் சேர்ந்தவர்கள். இந்த சங்கமயுகம் மிகவும் சிறியது. இப்போது நீங்கள் சக்கரம் முழுவதையும் அறிந்து கொண்டு விட்டீர்கள். தூராதேசி (தொலை நோக்கு பார்வை உடையவர்) ஆகி விட்டீர்கள்.

நீங்கள் அறிவீர்கள், இது பாபாவின் இரதம். இவரை நந்திகணம் என்றும் சொல்கின்றனர். நாள் முழுவதும் சவாரி செய்வதில்லை. ஆத்மா சரீரத்தின் மீது நாள் முழுவதும் சவாரி செய்கிறது. தனியாக ஆகி விடுமானால் சரீரம் இருக்காது. பாபாவோ வந்து செல்ல முடியும். ஏனென்றால் அவருக்குத் தம்முடைய ஆத்மா உள்ளது. ஆக, நான் இவருக்குள் சதா இருப்பதில்லை. ஒரு விநாடியில் வரவும் போகவும் முடியும். என்னைப் போல் வேகமான ராக்கெட் எதுவும் இருக்க முடியாது. தற்போது ராக்கெட், ஏரோப்ளேன் முதலிய எவ்வளவு பொருள்களை உருவாக்கி யுள்ளனர்! ஆனால் அனைத்திலும் வேகமாகச் செல்வது ஆத்மா. நீங்கள் தந்தையை நினைவு செய்யுங்கள் - இவர் வந்திருக்கிறார். ஆத்மாவின் கணக்கு-வழக்கின் அனுசாரம் லண்டனில் பிறவியெடுக்க வேண்டும் என்று இருக்குமானால் ஒரு விநாடியில் அங்கே சென்று பிரவேசமாகும். ஆக, அனைத்தையும் விட வேகமாக ஓடக் கூடியது ஆத்மா. இப்போது ஆத்மா தன்னுடைய வீட்டுக்குச் செல்ல முடியாது. ஏனென்றால் அந்த சக்தியே இப்போது ஆத்மாவுக்கு இல்லை. பலவீனமாக ஆகி விட்டுள்ளது. பறக்க முடியவில்லை. ஆத்மா மீது பாவங்களின் சுமை அதிகம் உள்ளது. சரீரத்தின் மீது சுமை இருக்குமானால் நெருப்பினால் தூய்மையாகி விடும். ஆனால் ஆத்மாவில் தான் கறை படிகின்றது. ஆக, ஆத்மா தான் தன்னுடைய கணக்கு- வழக்கை எடுத்துச் செல்கிறது - கடந்த காலத்தின் கர்ம போகம். ஆத்மா சம்ஸ்காரங்களைத் தன்னுடன் எடுத்துச் செல்கிறது. யாராவது பிறவி யிலிருந்தே உடல் ஊனமுடன் இருந்தால் முந்தைய பிறவிகளில் இது போல் கர்மம் செய்துள்ளார் எனச் சொல்லப்படுகிறது. ஜென்ம-ஜென்மாந்தரத்தின் கர்மங்கள் உள்ளன, அவற்றை அனுபவிக்க வேண்டி உள்ளது. சத்யுகத்தில் இருப்பவர்கள் புண்ணியாத்மாக்கள். அங்கே இந்த விஷயங்கள் இருப்பதில்லை. இங்கே இருப்பவர்கள் அனைவரும் பாவாத்மாக் கள். சந்நியாசிகளுக்கும் பக்கவாதம் வந்து விட்டால் கர்மபோகம் எனச் சொல்வார்கள். அட, மகாத்மா ஸ்ரீஸ்ரீ 108-க்கு இந்த நோய் ஏன்? கர்மபோகம் எனச் சொல்வார்கள். தேவதைகளுக்கு இது போல் சொல்ல மாட்டார்கள். குரு இறந்தால் சீடர்களுக்கு நிச்சயமாக துக்கம் ஏற்படும். தந்தை மீதும் கூட அதிக அன்பு இருக்குமானால் அழுகின்றனர். மனைவிக்குக் கணவர் மீது அதிக அன்பு இருக்குமானால் அழுவார்கள். கணவர் துக்கம் கொடுப்பவராக இருந்தால் அழ மாட்டார்கள். மோகம் இல்லை என்றால் விதி அது போல் உள்ளதெனப் புரிந்து கொள்வார்கள். உங்களுக்கும் கூடத் தந்தை மீது மிகுந்த அன்பு உள்ளது. கடைசியில் பாபா சென்று விடுவார்- நீங்கள் சொல்வீர்கள், ஓஹோ! இவ்வளவு சுகம் கொடுத்த பாபா சென்று விட்டார்! கடைசியில் அநேகர் இருப்பார்கள். தந்தையிடம் அதிக அன்பு உள்ளது. நீங்கள் சொல்வீர்கள், பாபா நமக்கு இராஜ்யத்தைக் கொடுத்து விட்டுச் சென்று விட்டார். அன்பின் கண்ணீர் வரும், துக்கத் தினுடையதல்ல. இங்கேயும் குழந்தைகள் அதிக சமயத்திற்குப் பின் வந்து பாபாவுடன் சந்திக் கின்றனர் என்றால் அன்பின் கண்ணீர் வருகிறது. இந்த அன்பின் கண்ணீர் பிறகு மாலையின் மணியாக மாறி விடும். நம்முடைய புருஷார்த்தமே நாம் பாபாவின் கழுத்துக்கு மாலை ஆக வேண்டும் என்பது தான். அதனால் பாபாவை நினைவு செய்து கொண்டே இருக்கிறோம்.

பாபாவின் கட்டளையாவது - நினைவின் யாத்திரையைச் செய்து கொண்டே இருங்கள். எப்படி குறிப்பிட்ட இடத்தைப் போய்த் தொட்டு விட்டு ஓடி வாருங்கள் என்று ஓட வைக்கப் படுகிறார்கள். பிறகு வரிசைக்கிரமம் ஆகிறது. இங்கேயும் கூட எவ்வளவு பாபாவை அதிகமாக நினைவு செய் கின்றனரோ, யார் முதலில் ஓடிச் சென்று விடுகின்றனரோ, அவர்கள் தான் முதலில் சொர்க்கத் திற்குத் திரும்பி வந்து இராஜ்யம் செய்வார்கள். ஆத்மாக்கள் நீங்கள் அனை வரும் புத்தியோகத் தின் மூலம் ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். இங்கே அமர்ந்தவாறே அங்கே ஓடிக் கொண்டிருக்கிறீர்கள். நாம் சிவபாபாவின் குழந்தைகள். பாபா சமிக்ஞை தருகிறார் -- என்னை நினைவு செய்யுங்கள், தூராதேசி (சாந்தி தாம வாசி) ஆகுங்கள். நீங்கள் தூரதேசத்தில் இருந்து வந்திருக்கிறீர்கள். இப்போது இந்த அன்னிய தேசம் அழிந்து விடப் போகிறது. இச்சமயம் நீங்கள் இராவணனின் தேசத்தில் இருக்கிறீர்கள். இந்த பூமி இராவணனுடையது. பிறகு நீங்கள் எல்லையற்ற தந்தையின் பூமியில் வருவீர்கள். அங்கே இருப்பது இராம ராஜ்யம். இராம ராஜ்யத்தை பாபா ஸ்தாபனை செய்கிறார். பிறகு பாதியில் இராவண இராஜ்யம் டிராமா அனுசாரம் விதிக்கப் பட்டுள்ளது. இந்த அனைத்து விசயங்களும் குழந்தைகள் நீங்கள் தான் அறிவீர்கள். அதனால் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள், யாராலும் சொல்ல முடியாது. ஆத்மாவின் தந்தை காட் ஃபாதர் எனச் சொல்கிறார்கள் என்றால் நல்லது, உங்களுக்கு அவரிடம் இருந்து என்ன ஆஸ்தி கிடைக்க வேண்டும்? இது அசுத்தமான உலகம். பாபா இந்த அசுத்தமான உலகத்தையோ படைக்கவில்லை இல்லையா? யாருக்கும் இதைப் புரிய வைப்பது சுலபம். சித்திரத்தைக் காட்டிப் புரிய வைக்க வேண்டும். திரிமூர்த்தியின் சித்திரம் எவ்வளவு நன்றாக உள்ளது! இது போல் விதிமுறைப்படியான திரிமூர்த்தி சிவனின் சித்திரம் வேறெங்கும் இல்லை. பிரம்மாவுக்கு தாடி காட்டுகின்றனர். விஷ்ணு மற்றும் சங்கருக்குக் காட்டுவதில்லை. அவர்களை தேவதை என நினைக்கின்றனர். பிரம்மாவோ பிரஜாபிதா ஆவார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உருவாக்கியுள்ளனர். இப்போது குழந்தைகள் உங்களுடைய புத்தியில் இந்த அனைத்து விசயங்களும் உள்ளன. வேறு யாருடைய புத்தியிலும் வராது. புத்தியற்றவர் போல் உள்ளனர். இராவணனை ஏன் எரிக்கின்றனர்? எதுவும் தெரியாது. இராவணன் யார்? எப்போதிருந்து வந்தான்? அநாதி காலமாக எரிக்கிறோம் என்கின்றனர். நீங்கள் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் - இவன் அரைக்கல்பத்தின் விரோதி. உலகத்தில் அநேக வழி முறைகள் உள்ளன. யார் என்ன மாதிரி புரிய வைத்தாரோ, அந்தப் பெயரை வைத்து விட்டுள்ளனர். யாரோ மகாவீர் என்ற பெயரைப் போட்டு விட்டனர். இப்போது மகாவீராக அனுமானைக் காட்டுகின்றனர். இங்கே ஆதி தேவ் மகாவீர் என்ற பெயர் ஏன் வைக்கப்பட்டுள்ளது? கோவிலில் மகாவீர், மகாவீரணி மற்றும் குழந்தைகள் நீங்கள் அமர்ந்திருக் கிறீர்கள். அவர்கள் மாயா மீது வெற்றி கொண்டுள்ளனர். அதனால் மகாவீர் எனச் சொல்லப்படுகிறது. நீங்களும் எந்த சிரமமும் இல்லாமல் வந்து உங்கள் இடத்தில் வந்து அமர்ந்திருக்கிறீர்கள். அது உங்களுடைய நினைவுச்சின்னம். அது ஜடம். பிறகும் கூட சித்திரங்களை வைக்க வேண்டி உள்ளதுசைதன்ய மானவரிடம் வந்து புரிந்து கொள்ளும் வரை. தில்வாடா கோவிலின் ரகசியத்தை நீங்கள் மிக நன்றாகப் புரிய வைக்க முடியும். இதைப் படித்து விட்டுச் (புரிந்து கொண்டு) சென்றுள்ளனர். அதனால் தான் பக்தி மார்க்கத்தில் இந்த நினைவுச் சின்னம் உருவாகியுள்ளது. உங்களுடைய இராஜதானி ஸ்தாபனை ஆவதில் அதிக உழைப்பு இருக்கிறது. நிந்தனைகளும் பெற வேண்டி உள்ளது. ஏனென்றால் களங்கீதர் (கிருஷ்ணர்) ஆக வேண்டும். இப்போது நீங்கள் அனைவரும் நிந்தனை பெறுகிறீர்கள். எல்லா வற்றையும் விட அதிகமாக என்னை நிந்தனை செய்துள்ளனர். பிறகு பிரஜாபிதா பிரம்மாவுக்கும் கூட நிந்தனை செய்கின்றனர். உற்றார் உறவினர் முதலான அனைவரும் கோபித்துக் கொள் கின்றனர். விஷ்ணு அல்லது சங்கருக்கு நிந்தனை செய்ய மாட்டார்கள். பாபா சொல்கிறார் - நான் நிந்தனை செய்யப்படுகிறேன். நீங்கள் குழந்தைகளாக ஆகியிருக்கிறீர்கள் என்றால் நீங்களும் அந்த நிந்தனையில் பங்கு பெற வேண்டும். இல்லையென்றால் அவர் (பிரம்மா) அவருடைய தொழிலில் இருந்தார். நிந்தனையின் விஷயமே இல்லை. அனைவரைக் காட்டிலும் அதிகமான நிந்தனை எனக்குச் செய்கின்றனர். தங்களின் தர்மம்-கர்மத்தை மறந்து விட்டுள்ளனர். எவ்வளவோ புரிய வைக்கிறார். நல்லது.

இனிமையிலும் இனிமையான தேடிக் கண்டெடுக்கப் பட்ட குழந்தைகளுக்கு தாய்-தந்தையாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மிகக் குழந்தைகளுக்கு ஆன்மிகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. தூராதேசி (தொலை நோக்கு பார்வை உடையவர்) ஆக வேண்டும். நினைவு யாத்திரை மூலம் விகர்மங்களை விநாசம் செய்ய வேண்டும். யாத்திரையில் எந்த ஒரு பாவ கர்மமும் செய்யக் கூடாது.

2. மகாவீர் ஆகி மாயா மீது வெற்றி கொள்ள வேண்டும். நிந்தனைக்குப் பயப்படக் கூடாது. (களங்கீதர்) மயில் தோகை அணிந்த கிருஷ்ணர் ஆக வேண்டும்.

வரதானம்:

சர்வசக்திகளையும் அனுபவம் செய்து சரியான நேரத்தில் வெற்றியை பலனாக அடையக் கூடிய நிச்சயிக்கப்பட்ட வெற்றியாளர் ஆகுக.


சர்வசக்திகள் நிறைந்த நிச்சய புத்தியுடைய குழந்தைகளுக்கு வெற்றி நிச்சயிக்கப் பட்டதாகும். சிலரிடம் செல்வம், புத்தி அல்லது சம்பந்தம்-தொடர்பின் சக்தி இருப்பது போன்று அவர்களிடம் இது என்ன பெரிய விசயம் என்ற நிச்சயம் இருக்கும். உங்களிடம் அனைத்து சக்திகளும் இருக்கிறது. அனைத்தையும் விட மிகப் பெரிய செல்வம் சதா கூடவே இருக்கிறது. எனவே செல்வத்தின் சக்தி இருக்கிறது, புத்தி மற்றும் பதவியின் சக்தியும் இருக்கிறது. இவை களை பயன்படுத்தினால் போதும். தனக்காக காரியத்தில் பஸ்ன்படுத்தும் போது சரியான நேரத்தில் புத்தியின் மூலம் வெற்றி பலனாக கிடைக்கும்.

சுலோகன்:

வீணானவைகளை பார்ப்பது மற்றும் கேட்பது என்ற சுமைகளை அழித்து விடுவது தான் டபுள் லைட் ஆவதாகும்.

 Download PDF

 

Post a Comment

0 Comments