Header Ads Widget

Header Ads

TAMIL MURLI 29.12.22

 

29-12-2022  காலை முரளி  ஓம் சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



இனிமையான குழந்தைகளே ! ஒருவர் எவ்வளவு தான் குணவானாக இருக்கட்டும், இனிமை யானவராக இருக்கட்டும், செல்வந்தராக இருக்கட்டும், நீங்கள் அவர் பக்கம் கவரப் படக்கூடாது. உடலை நினைவு செய்யக் கூடாது.

கேள்வி:

எந்த குழந்தைகளுக்கு ஞானம் கிடைத்துள்ளதோ அவர்கள் வாயிலிருந்து தந்தைக்காக எந்தவொரு இனிமையான வார்த்தைகள் வெளிப்படுகின்றன?

பதில்:

ஆஹா! பாபா நீங்களோ எங்களுக்கு மறுவாழ்வு அளித்து விட்டீர்கள். இனிமையான பாபா, நீங்கள் எங்களுக்கு படைப்பின் முதல் இடை கடை பற்றிய ஞானம் அளித்து அனைத்து துக்கங் களிலிருந்தும் விடுவித்து விட்டீர்கள். எனவே எவ்வளவு நன்றி வெளிப்பட வேண்டும்.

கேள்வி:

கடைசி நேரத்தில் தந்தையைத் தவிர வேறு எதன் மீதும் பற்று செல்லாதிருக்க வேண்டும் என்றால் அதற்காக என்ன செய்ய வேண்டும்?

பதில்:

பாபா கூறுகிறார் - குழந்தைகளே எந்தவொரு பொருளையும் பேராசையின் வசப்பட்டு தங்களிடம் கூடுதலாக வைத்து கொள்ளக் கூடாது. கூடுதலாக (எக்ஸ்ட்ரா) வைத்திருந்தீர்கள் என்றால் அதில் பற்று போகும். தந்தையின் நினைவு மறந்து போய் விடும்.

பாடல்:  பொறுமையாக இரு மனிதா

ஓம் சாந்தி. குழந்தைகளுக்கு யார் தைரியமூட்டிக் கொண்டிருக்கிறார்? குழந்தைகளின் புத்தி சட்டென்று எல்லையில்லாத தந்தையின் பக்கம் சென்று விடுகிறது. அது கூட இந்த சமயத்தில் மட்டுமே குழந்தைகளாகிய உங்களுடைய புத்தி செல்கிறது. இவ்வாறோ அநேகரின் புத்தி எல்லை யில்லாத தந்தையின் பக்கம் செல்கிறது. ஆனால் இது சங்கமயுகம் ஆகும் என்பது அவர்களுக்குத் தெரியவே தெரியாது. தந்தை வந்து விட்டுள்ளார். அனைவருக்கும் ஒரே முறை தெரிய வந்து விட முடியாது. குழந்தைகள் தந்தையினுடையவராக ஆகும் பொழுது தான் தெரிய வரும். இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் தந்தையை அறிந்துள்ளீர் கள். பாபா வந்து விட்டுள்ளார் என்பதை அறிந்துள்ளீர்கள். 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்னதாக உங்களுக்கு கொடுத்திருந்த எல்லையில்லாத ஆஸ்தியை மீண்டும் அளித்துக் கொண்டிருக்கிறார். அவர் வருவதே குழந்தைகளுக்கு எல்லை யில்லாத சொர்க்கத்தின் ஆஸ்தியை அளிப்பதற்காக. அவர் எல்லை யில்லாத தந்தையாக இருந்தபடியே பின்னர் கற்பிக்கவும் செய்கிறார். பகவான் அதாவது தந்தை பின் பகவானுவாச அதாவது கற்பிக்கிறார். என்ன கற்பிக்கிறார்? அதையும் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துள்ளீர்கள். நாம் தந்தைக்கு முன்னால் அமர்ந்துள்ளோம். பாபா ஒன்றும் சாஸ்திரங் களை படித்திருப்பவர் அல்ல. இந்த தாதா படித்திருக்கிறார். அவருக்கு கூறப்படுவதே ஞானக் கடல், ஆல்மைட்டி அத்தாரிட்டி (சர்வ சக்திவான்) என்று. சுயம் அவரே கூறுகிறார் - நான் அனைத்து வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவற்றை நல்ல முறையில் அறிந்துள்ளேன் - இவை அனைத்தும் பக்தி மார்க்கம் சம்மந்தப் பட்டவை ஆகும். இவை என்னால் படைக்கப்பட்டவை அல்ல. இந்த சாஸ்திரங்களை எப்பொழுதிலிருந்து படித்து வந்துள்ளீர்கள் என்று கேட்கப்படுகிற போது, இது பரம்பரையாக வந்து கொண்டிருக்கிறது என்று கூறுகிறார்கள். எனக்கோ யாரும் படிப்பிப்பவர்கள் கிடையாது என்று தந்தை கூறுகிறார். எனக்கென்று தந்தையும் யாரும் கிடையாது. மற்ற அனைவரும் கர்ப்பத்தில் பிரவேசிக்கிறார்கள். தாயின் பாலனை பெறுகிறார்கள். நானோ தாயின் பாலனை பெறும் வகையில் கர்ப்பத்தில் வருவதே இல்லை. மனிதனுடைய ஆத்மா கர்ப்பத்தில் செல்கிறது. சத்யுகத்தின் இலட்சுமி நாராயணர் கூட கர்ப்பத்தினால் தான் ஜென்மம் எடுத்தார் கள். எனவே அவர்களும் மனிதர்கள் ஆகிறார்கள். நானோ நாடக திட்டப்படி முந்தைய கல்பத்தைப் போல இந்த சரீரத்தில் வந்து பிரவேசம் செய்கிறேன். இந்த வார்த்தைகள் வேறு யாருக்கும் தெரியாது. கல்பத்தினுடைய ஆயுள் பற்றியே யாருக்கும் தெரியாது. தந்தை தான் வந்து புரிய வைக்கிறார். நான் உங்களுடைய தந்தையும் ஆவேன், ஆசிரியரும் ஆவேன், சத்குருவும் ஆவேன். இந்த பாபா சொத்து அளிக்கக் கூடியவர் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பாபா சொர்க்கத்தின் அரசாட்சியை அளிக்க வந்துள்ளார். நரகத்தின் அரசாட்சியை கொடுப்பாரா என்ன? எல்லையில்லாத தந்தை நமக்கு இராஜயோகம் கற்பித்துக் கொண்டிருக்கிறார் என்பது புத்தியில் இருக்க வேண்டும். தந்தை சொர்க்கத்தை ஸ்தாபனை செய்பவர் ஆவார். எனது வழிப் படி நடவுங்கள், நான் உங்களை சொர்க்கத்தின் அதிபதியாக ஆக்குகிறேன் என்று கூறுகிறார். பிறகு துவாபர முதல் நீங்கள் இராவணனின் வழிப்படி நடக்கிறீர்கள். சத்யுகத்திலோ எந்தவொரு மனிதனின் வழி, கதி சத்கதிக் காக கிடைப்ப தில்லை. அவசியமும் இல்லை. கலியுகத்தில் எல்லோரும் கதி சத்கதிக்காக வழி வேண்டுகிறார்கள். நாம் ஏதோ ஒரு சமயத்தில் சொர்க்கத்தில் இருந்தோம், பாவனமாக இருந்தோம் என்று அறிந்திருக்கிறார்கள். அதனால் தான் ஹே பதீத பாவனரே, ஹே சத்கதி தாதா, எங்களுக்கு சத்கதி கொடுங்கள், என்று முறையிடுகிறார்கள். சத்யுகத்தில் இந்த அழுகை புலம்பல் இருக்காது. பாபா வந்து விட்டுள்ளார் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். மிகவும் சரளத் தன்மை யுடன் இராஜயோகம் மற்றும் சகஜ ஞானத்தின் வழி அளிக்கிறார். அவருடையது ஸ்ரீமத் ஆகும். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் பகவான் ஆவார். அவரை விட உயர்ந்தவர் வேறு யாரும் இல்லை. மேலும் அவர் நமது ஆன்மீகத் தந்தை ஆவார். ஆன்மீகத் தந்தையாக இருக்கும் காரணத்தால் அவர் ஆத்மாக்களுக்குத் தான் ஞானம் தருகிறார். உலகீயத் தந்தையாக இருப்பதால் குழந்தைகள் உலகாயத ஞானம் எடுக்கிறார்கள். எனவே தந்தை ஆத்ம அபிமானி ஆகுங்கள் மற்றும் தந்தையை நினைவு செய்யுங்கள் என்று கூறுகிறார். எந்தவொரு ஸ்தூல நினைவும் இருக்கக் கூடாது. நீங்கள் ஆத்மா ஆவீர்கள். மனிதர்கள் எவ்வளவு தான் நல்லவர்களாக இருந்தாலும் சரி, செல்வந்தர்களாக இருந்தாலும் சரி, இனிமையானவர்களாக இருந்தாலும் சரி, அப்பொழுது கூட தேகதாரியை நினைவு செய்யாதீர்கள். ஒரே ஒரு பரமபிதா பரமாத்மாவை மட்டுமே நினைவு செய்யுங்கள். யாராவது பணக்காரரின் பையனாக இருந்தால் தந்தையைத் தான் நினைவு செய்வார். காந்தியையோ அல்லது சாஸ்திரி ஆகியோரையோ நினைவு செய்வாரா என்ன? எல்லோரையும் விட அதிகமாக பரமபிதா பரமாத்மாவை நினைவு செய்கிறார்கள். பிறகு ஒரு சிலர் இலட்சுமி நாராயணரை, ஒரு சிலர் இராதை கிருஷ்ணரை கூட நினைவு செய்கிறார்கள். இவர்கள் வாழ்ந்து சென்றுள்ளார்கள் என்று நினைக்கிறார்கள். அவர்களுடைய சரித்திரம் பூகோளம் கூட உள்ளது. உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தந்தை ஆவார். அவர் மீண்டும் வருவார். அவசியம் உலக சரித்திரம் பூகோளம் திரும்பவும் நடைபெறும். கலியுகத்திற்குப் பிறகு மீண்டும் சத்யுகம் வரப் போகிறது. ஆனால் குழந்தைகளாகிய உங்களைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது. சரித்திரம் பூகோளம் மீண்டும் நடைபெறுகிறது என்று கூறும் அளவிற்கு மட்டுமே கூறுகிறார்கள். எதுவும் புரியாமல் உள்ளார்கள். முதலில் நீங்கள் கூட அவ்வாறே இருந்தீர்கள். உண்மையில் இலட்சுமி நாராயணருடைய இராஜ்யம் இருந்தது என்று நினைக்கிறார்கள். ஆனால் எவ்வளவு காலம் நடந்தது, என்ன ஆகியது, அவர்கள் எங்கே சென்று விட்டார்கள், எதுவுமே தெரியாமல் இருந்தது. இப்பொழுது கூட வரிசைக் கிரமமாக நல்ல முறையில் தாரணை செய்து ஸ்ரீமத் படி நடக்கிறீர்கள் - இதுவும் சரி தான். மனம் சொல் செயலால் உதவி செய்கிறீர்கள். ஞானம் மற்றும் யோகத்தின் உதவியினால் அநேகருக்கு நன்மை செய்கிறீர்கள். சக்தி சேனையாகிய நீங்கள் இரட்டை அஹிம்சகர்கள் ஆவீர்கள். உங்களிடம் எந்தவொரு இம்சையும் கிடையாது. நீங்கள் யாருக்குமே துக்கம் கொடுப்பதில்லை. ஹிம்சை என்றால் துக்கம் கொடுப்பது. குத்து விடுவது, வாளை உபயோகிப்பது அல்லது காமவாள் செலுத்துவது - இவை எல்லாமே துக்கம் கொடுப்பதாகும். நீங்கள் எந்தவொரு விதமான துக்கம் கூட கொடுப்பதில்லை. எனவே அஹிம்சா பரமோ தர்மம் என்று கூறப்படுகிறது. மனிதர்களோ எல்லோரும் ஹிம்சை செய்கிறார்கள். இருப்பதே இராவண இராஜ்யமாக. மனிதர்களோ ஸ்ரீகிருஷ்ணரின் சரித்திரங்களில் கூட ஹிம்சையைக் காண்பித்துள்ளார்கள். ஸ்ரீகிருஷ்ணரோ இராஜ குமாரராக இருந்தார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் அறிந்துள்ளீர்கள். அவருக்கு இப்பேர்ப்பட்ட சரித்திரம் அல்லது வாழ்க்கை வரலாற்றின் விஷயம் கிடையாது. சரித்திரம் இருப்பதே இறைவனினுடையது ஆகும். அவரே இரத்தினங் களை அளிப்பவர், வியாபாரி, ஞானக்கடல், மந்திரவாதி ஆவார். அட, நிராகார பரமாத்மா பின் வியாபாரம் எப்படி செய்வார்? வியாபாரியோ மனிதர்களாக இருப்பார்கள் அல்லவா? இந்த எல்லா விசயங்களையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். எப்படி அவர் வியாபாரி மற்றும் இரத்தினங் களை அளிப்பவர் ஆவார். அவரை எல்லோரும் ஏன் நினைவு செய்கிறார்கள்? ஹே பதீத பாவனரே, அனைவருக்கும் சத்கதி அளிக்கும் வள்ளல் துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவர். மகிமை கூட ஒருவருடையது ஆகும். இந்த மகிமை சூட்சும வதனவாசிக்கும் இருக்க முடியாது. ஸ்தூல வதன வாசிக்கும் இருக்க முடியாது. இந்த மகிமை மூலவதனவாசியினுடையதாகும். உயர்ந்ததிலும் உயர்ந்தவர் தந்தை ஆவார். ஆத்மாக்களாகிய நாம் அவருடைய குழந்தைகள் ஆவோம். நாம் அனைவரும் வரிசைக்கிரமமாக பாகம் நடிக்க வருகிறோம். நான் உங்களுக்குக் கூறும் இந்த ஞானம் மறைந்து போய்விடுகிறது. அந்த கீதை களோ ஏராளமாக உள்ளன. மீண்டும் பழைய கீதைகள் வெளிப்படும். உங்களுடைய தாள்கள் வெளிப்படுமா என்ன? கீதை நிறைய மொழிகளில் இருக்கின்றன. உயர்ந்ததிலும் உயர்ந்தது கீதை ஆகும். ஆனால் எல்லாமே மனிதர்கள் அமைத்துள்ளார்கள். சரியானதோ இல்லை. எனவே எல்லோரும் இருளில் இருக்கிறார்கள். எனவே தான் ஞான சூரியன் வெளிப்பட்டார்.. என்று பாடப்படுகிறது. இந்த சூரியனின் மகிமை அல்ல. ஞான சூரியனுக்கு மகிமை உள்ளது. இந்த சூரியன் வெயில் கொடுக்கிறது. கடல் தண்ணீர் கொடுக்கிறது. அவைகளுடைய பெயர் இவைகள் மீது, இவைகளுடைய பெயரை அவைகள் மீது வைத்து விட்டுள்ளார்கள். ஞானக் கடலுக்குத் தான் ஞான சூரியன் என்று கூறுகிறார்கள். நமது இருள் இப்பொழுது நீங்கி விட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். சிருஷ்டியினுடைய முதல் இடை கடை பற்றி நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். படைப்பவரின் பாகத்தை அறிவீர்கள் என்றால், மற்றவர்களுடைய பாகத்தையும் கூட அவசியம் அறிந்திருப்பீர்கள். உங்களுக்கு ஞானம் கிடைத்துக் கொண்டி ருக்கிறது. இந்த பாபா மிகவும் பிரியமானவர் ஆவார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நமக்கு மறுவாழ்வு அளிக்கிறார். துக்கத் திலிருந்து விடுவிக்கிறார். காலனின் பிடியிலிருந்து விடுவிக்கிறார். யாராவது இறப்பதிலிருந்து பிழைத்து விட்டார் என்றால், மருத்துவர் மறுவாழ்வு அளித்தார் என்பார்கள். உங்களுக்கோ ஒரே ஒரு முறை இப்பேர்ப்பட்ட மறுவாழ்வு கிடைக்கிறது. நீங்கள் ஒரு பொழுதும் நோய்வாய்ப்பட மாட்டீர்கள். பிறகு இன்னார் மறு வாழ்வு அளிப்பார் என்று கூற வேண்டி இருக்காது. இது முற்றிலும் புதிய விசயம் ஆகும்.

இப்பொழுது நீங்கள் உயிருடனிருந்தே தந்தையினுடையவராக ஆகி உள்ளீர்கள். ஒரு சிலரை மாயை என்ற இராவணன் தன் பக்கம் இழுத்துக் கொண்டு விடுகிறது. அதற்கு இராவணன் என்ற காலன் சாப்பிட்டு விட்டான் என்று கூறுவார்கள். ஈசுவரிய மடியில் வந்து பிறகு மாறி அசுர மடியில் சென்று விடுகிறார்கள். காலன் சாப்பிடவில்லை, ஆனால் உயிருடன் இருந்தே இறைவனினுடையவராக ஆனார்கள். பிறகு உயிருடனிருந்தே இராவணனினுடைய வராக ஆகி விடுகிறார்கள். இங்கு தர்மாத்மா ஆனார்கள். பிறகு அங்கு சென்று அதர்மத்தினராக ஆகி விடுகிறார்கள். இங்கு சங்கமத்தில் தர்மத்தின் இராஜ்யம் உள்ளது. அங்கு அதர்மத்தின் இராஜ்யம் ஆகும். சத்யுகத்தில் இருப்பதே ஒரு தர்மம் ஆகும். கலியுகத்தில் இருப்பது அதர்மத்தின் இராஜ்யம், கௌரவர் இராஜ்யம். பாண்டவர்களுடன் கிருஷ்ணர் இருந்தார் என்று கூறுகிறார்கள். உங்களுடனோ சிவபாபா இருக்கிறார். சூதாட்டத்தின் விஷயம் கிடையாது. இராஜ்யம் கௌரவர் களுக்கும் இல்லை, பாண்டவர்களுக்கும் இல்லை. தந்தை வந்து தர்மத்தின் இராஜ்யத்தை ஸ்தாபனை செய்கிறார். இராம இராஜ்யம் வேண்டும் என்றும் விரும்பு கிறார்கள். நாம் சொர்க்க வாசி ஆகிறோம் என்றால் இது நரகம் ஆகும். ஆனால் யாருக்காவது நேராக நரகவாசி என்று கூறினீர்கள் என்றால் கோபித்துக் கொள்வார்கள். தந்தை வந்து குழந்தை களுக்குப் புரிய வைக்கிறார். எல்லையில்லாத தந்தை நிராகாரமானவர் ஆவார். எல்லையில்லாத தந்தையைத் தான் பகவான் என்று கூற முடியும். எல்லைக்குட்பட்ட தந்தையை பகவான் என்று கூறுவார்களா என்ன? கிருஷ்ணரை ஞானக்கடல், பதீதபாவனர் என்று கூறுவார்களா என்ன? அவருடைய மகிமை பற்றி பிராமணர்களாகிய நீங்கள் மட்டும் அறிந்துள்ளீர்கள். உங்களை தந்தை வந்து தனக்குச் சமானமாக ஆக்குகிறார். தந்தையும் அறிந்திருக்கிறார். குழந்தைகளாகிய நீங்கள் அறிந்து கொண்டு விடுகிறீர்கள். ஆஸ்தி கிடைத்து விடுகிறது. எப்படி லௌகீக தந்தையிடமிருந்து குழந்தைகளுக்கு ஆஸ்தி கிடைக்கிறது.அதுவோ தனித் தனியாகும். இங்கு நாம் எல்லை யில்லாத தந்தையிட மிருந்து ஆஸ்தி பெற்றுக் கொண்டி ருக்கிறோம் என்பதைப் புரிந்துள்ளீர்கள். இது போல எல்லோருமே நாங்கள் எல்லையில்லாத தந்தையிடமிருந்து ஆஸ்தி பெற வந்துள்ளோம் என்று கூறக் கூடிய வகையில் அப்பேர்ப்பட்ட எந்தவொரு பள்ளிக் கூடம் அல்லது சத்சங்கம் இருக்க முடியாது. இங்கு தந்தை இராஜயோகம் கற்பிக்கிறார். நீங்கள் நரனிலிருந்து நாராயணர் ஆகப் போகிறீர்கள் என்று கூறுகிறார். எனவே அவசியம் சங்கமயுகம் அதாவது கலியுகக் கடைசி மற்றும் சத்யுக ஆரம்பத்தின் சங்கமமாக இருக்கும். அப்பொழுது தான் நீங்கள் புருஷார்த்தம் (முயற்சி) செய்து நரனிலிருந்து நாராயணராக ஆகி விடுவீர்கள். இந்த இராஜயோகத்தை நாம் பாபாவிட மிருந்து கற்றுக் கொள்கிறோம் - நரனிலிருந்து நாராயணர், நாரியிலிருந்து இலட்சுமியாக ஆவதற்காக. நரநாராயணரின் கோவில் கூட கட்டுகிறார்கள். அவருக்கு 4 புஜங்கள் கொடுக்கிறார் கள். ஏனெனில் கூட இருக்கிறார். நாரி இலட்சுமிக்குப் பிறகு கோவில் இல்லை. நாரி இலட்சுமியை தீபாவளியின் பொழுது அழைக்கிறார்கள். அவருக்கு மகாலட்சுமி என்று கூறுகிறார் கள். நீங்கள் இலட்சுமியின் விக்கிரகத்தை 4 புஜங்கள் இன்றி பார்க்க மாட்டீர்கள். அவருக்கு பூஜை செய்கிறார்கள். இந்த ஜோடி விஷ்ணுவின் ரூபம் ஆகும். எனவே 4 புஜங்கள் கொடுத்துள்ளார்கள். இந்த எல்லா விஷயங்களையும் தந்தை தான் வந்து புரிய வைக்கிறார். மனிதர்களோ எதுவுமே அறியாமல் இருக்கிறார்கள். பகவானை தேடிக் கொண்டே இருக்கிறார்கள். அடிவாங்கி கொண்டே இருக்கிறார்கள். பகவானோ இருப்பதே மேலே. பிறகு தேட வேண்டிய அவசியம் என்ன? கோவில்களில் இருக்கும் கிருஷ்ணரின் படத்தை வீட்டில் வைத்து ஏன் பூஜிக்கக் கூடாது. குறிப்பாக கோவிலுக்குத் தான் ஏன் போகிறீர்கள்? கோவிலுக்குச் செல்வார்கள், பைசா வைப் பார்கள், தானம் செய்வார்கள். வீட்டில் யாருக்கு தானம் செய்வார்கள்? எனவே இது எல்லாமே பக்தி மார்க்கத்தின் வழக்கங்கள் ஆகும். நீங்கள் எந்தவொரு படத்தையும் வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தந்தை கூறுகிறார். படம் வைப்பதற்கு உங்களுக்கு சிவபாபாவைத் தெரியாதா என்ன? படம் வைத்தால் தான் நினைவு செய்ய முடியுமா என்ன? பாபா உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் பின் குழந்தைகள் ஏன் படம் வைப்பார்கள்? தந்தை உங்களுக்கு ஞானம் அளித்துக் கொண்டிருக்கிறார். பின் படத்தை என்ன செய்வீர்கள்? வயோதிகர்களாக இருக்கிறார்கள். நினைவு மறந்து போய் விடுகிறது. எனவே படம் கொடுக்கப்படுகிறது. மற்றபடி வேறு எவரேனும் தேகதாரியை நினைவு செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால், கடைசி நேரத்தில் அவர் தான் நினைவிற்கு வருவார். ஏதாவது கொஞ்ச நஞ்சம் பற்று இருக்கிறது என்றால், அது உங்களை தொடர்ந்து வரும் பின் எவ்வளவு தான் சிவபாபாவின் படம் வைத்தாலும் சரி, பற்று வேறு பக்கம் உள்ளது என்றால் அது அவசியம் நினைவிற்கு வரும். எனவே குழந்தைகளே முழுமையாக (நஷ்டோ மோகா) மோகம் நீக்கியவர் ஆகி விடுங்கள் என்று தந்தை கூறுகிறார். எந்தவொரு பொருள் மீதும் பற்று இருந்தால், 2-4 ஜோடி செருப்புக்கள் இருந்தது என்றால் அவை நினைவிற்கு வரும். எனவே அதிகமாக எந்த பொருட்களையும் வைக்காதீர்கள் என்று கூறப்படுகிறது. இல்லையென்றால் புத்தி அதில் போகும். தந்தையைத் தவிர வேறு யாரையும் நினைவு செய்யாதீர்கள். நாம் நல்ல நல்ல ஆடைகள் வைக்கலாம். 2-4 செருப்புக்கள் வைக்கலாம். கடிகாரம் வைத்துக் கொள்ளலாம். கொஞ்சம் பைசா வைக்கலாம் என்று பேராசை இருக்கும் அல்லவா? வைத்தீர் கள் என்றால் அது நினைவிற்கு வரும். உங்களிடம் என்ன வைத்திருக்கிறீர்கள் என்பது தந்தைக்குத் தெரிந்திருக்க வேண்டும். உண்மையில் நீங்கள் எதையும் வைத்துக் கொள்ள கூடாது. எது கிடைக்கிறதோ அதைத் தான் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு தந்தையைத் தவிர வேறு எதுவுமே நினைவில் இருக்கக் கூடாது. அந்த அளவிற்கு பயிற்சி செய்ய வேண்டும். அப்பொழுது தான் உலகத்திற்கு அதிபதி ஆகி விடுவீர்கள். இராதை கிருஷ்ணர் உலகிற்கு அதிபதியாக இருந்தார்கள் என்பது யாருமே அறியாமல் இருக்கிறார்கள். பாரதத்தில் ஆட்சி புரிந்து சென்றுள் ளார்கள் என்று மட்டும் கூறுகிறார்கள். யமுனை கரையோரத்தில் இவர் களுடைய அரண்மனைகள் இருந்தன. ஆனால் அவர்கள் முழு உலகத்திற்கு அதிபதியாக இருந்தார்கள். இது உங்கள் புத்தியில் மட்டும் உள்ளது. எல்லையில்லாத தந்தை எல்லை யில்லாத அதிபதியாக ஆக்க வந்துள்ளார். பிரஜைகள் மற்றும் இராஜாக்களுக்கிடையே நிறைய வித்தியாசம் உள்ளது. இங்கு நீங்கள் நரனிலிருந்து நாராயணராக ஆக வந்துள்ளீர்கள். எனவே முழுமையாகப் பின்பற்றுங்கள். ஏழையிலிருந்து செல்வந்தர் ஆக வேண்டும். அந்த அளவிற்கு (புருஷார்த்தம்) முயற்சி செய்ய வேண்டும். குஷியுடன் படிக்க வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு, ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:

1. ஞான யோகத்தினால் அனைவருக்கும் உதவ வேண்டும். இரட்டை அஹிம்சகர் ஆக வேண்டும். யாருக்குமே துக்கம் கொடுக்கக் கூடாது.

2. நஷ்டோமோகா (மோகத்தை நீக்கியவர்) ஆக வேண்டும். எந்தவொரு பொருளின் மீதும் பற்று (ஆசை) வைக்கக் கூடாது. ஒரு தந்தையின் நினைவு எப்பொழுதும் இருக்க வேண்டு இந்த அப்பியாசம் செய்ய வேண்டும்.

வரதானம்:

பிராமண வாழ்க்கையில் நினைவு மற்றும் சேவையின் ஆதாரத்தின் மூலம் சக்திசாலி ஆகக்கூடிய மாயாஜீத் (மாயாவை வென்றவர்) ஆகுக.
பிராமண வாழ்க்கையின் ஆதராம் நினைவு மற்றும் சேவையாகும். ஒருவேளை நினைவு மற்றும் சேவையின் ஆதாரம் பலவீனமாக இருக்கிறது என்றால் பிராமண வாழ்க்கை சில நேரங்களில் சுறுசுறுப்பாகவும் சில நேரங்களில் சலிப்பாகவும் இருக்கும். ஏதாவது ஓத்துழைப்பு கிடைத்தால், யாருடைய துணை கிடைத்தால், ஏதாவது சூழ்நிலை அமைகிறது என்றால் விறுவிறுப்பாகவும், இல்லையென்றால் சலிப்பாகவும் இருக்கும், ஆகையால் நினைவு மற்றும் சேவை இரண்டிலும் மிக வேகமாக இருக்க வேண்டும். நினைவு மற்றும் சுயநலமற்ற சேவை செய்தால் மாயாஜீத் ஆவது மிக எளிதாகும் பிறகு ஒவ்வொரு செயலிலும் வெற்றி தென்படும்.

சுலோகன்:

யார் அனைத்து சக்திகளில் முழுமையானவராக இருந்தால், தடைகளை வென்றவர் ஆகி விடலாம்.

 Download PDF

Post a Comment

0 Comments