Header Ads Widget

Header Ads

TAMIL MURLI 01.01.23

 

01-01-2023  காலை முரளி  ஓம் சாந்தி  "அவ்யக்த பாப்தாதா" ரிவைஸ் 26.03.1993


Listen to the Murli audio file



அவ்யக்த வருடத்தில் லட்சியம் மற்றும் லட்சணத்தை சமமாக்குங்கள்

இன்று நிராகாரி மற்றும் ஆகாரி பாப்தாதா அனைவரிலும் உயர்ந்த பிராமண ஆத்மாக்களை ஆகார ரூபத்தில் மற்றும் சாகார ரூபத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். சாகார ரூபத்தில் ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் (மதுபனில் அவ்யக்த பாப்தாதாவின்) முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள். ஆகார ரூபதாரிக் குழந்தைகளும் (வெளியில் அவரவர் இருப்பிடத்தில் இருந்தாலும் கூட) முன்னிலையில் தான் இருக்கிறார்கள். இருவரையும் பாப்தாதா பார்த்துப் புன்சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். அனைவரின் மனதிலும் ஒரே சங்கல்பம் உள்ளது, ஊக்கம் உள்ளது நாம் அனைவரும் பாபாவுக்கு சமமாக சாகாரி ஸோ ஆகாரி மற்றும் ஆகாரி ஸோ நிராகார் பாப்-சமான் ஆகவேண்டும் - பாப்தாதா அனைவரின் இந்த லட்சியம் மற்றும் லட்சணத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன காணப்பட்டது? பெரும்பாலோரின் லட்சியம் மிக நல்ல உறுதியாக உள்ளது. ஆனால் லட்சணம் சில நேரம் உறுதியாகவும், சில நேரம் சாதாரணமானதாகவும் உள்ளது, லட்சியம் மற்றும் லட்சணத்தில் சமநிலை வருவது தான் சமமாவதற்கான அடையாளம். லட்சியத்தை தாரணை செய்வதில் 99 சதவிகிதம் கூட சிலர் உள்ளனர். மற்றவர்கள் நம்பர்வார் உள்ளனர். ஆனால் சதா சகஜமாக மற்றும் இயற்கை யான இயல்பில் லட்சணத்தை தாரணை செய்வதில் எதுவரை உள்ளனர் - இதில் பெரும்பாலானவர்கள் 90 சதவிகிதம் வரை உள்ளனர். மற்றவர்கள் இன்னும் நம்பர்வார் உள்ளனர். ஆக, லட்சியம் மற்றும் லட்சணத்தில், லட்சணத்தையும் கூட இயற்கையானதாக மற்றும் இயல்பானதாக ஆக்குவதில் ஏன் வித்தியாசம் உள்ளது? சமயத்தின்படி, சூழ்நிலைக் கேற்றவாறு, பிரச்சினைகளுக்கு ஏற்றவாறு அநேகக் குழந்தைகள் புருஷôர்த்தத்தின் மூலம் தங்கள் லட்சியம் மற்றும் லட்சணத்தை சமமாகவும் ஆக்குகின்றனர். ஆனால் இது இயற்கை யாக, இயல்பாக ஆகவேண்டும் என்பதில் இன்னும் கவனம் தேவை. இந்த வருடத்தை அவ்யக்த ஃபரிஸ்தா ஸ்திதியில் நிலைத்திருப்பதற்கான வருடமாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறீர்கள். இதைப்பார்த்து பாப்தாதா குழந்தைகளின் அன்பு மற்றும் புருஷôர்த்தம் -இரண்டையும் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள். ஆஹா குழந்தைகளே, ஆஹா! என்ற பாடலையும் பாடு கிறார்கள். அதோடு இப்போது மற்றும் இனிமேலும் அனைத்துக் குழந்தைகளின் லட்சியம் மற்றும் லட்சணத்தில் சமநிலையைப் பார்க்க விரும்புகின்றனர். நீங்கள் அனைவரும் கூட இதையே தான் விரும்புகிறீர்கள் இல்லையா? பாபாவும் விரும்புகிறார், நீங்களும் விரும்பு கிறீர்கள், பிறகு இடையில் என்ன உள்ளது? அதையும் நல்லபடியாக அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள் கருத்தரங்கு நடத்துகிறீர்கள் இல்லையா?

பாப்தாதா லட்சியம் மற்றும் லட்சணத்திற்கிடையில் வித்தியாசம் இருப்பதற்கு விசேஷமாக ஒரே ஒரு விஷயம் இருப்பதைப் பார்த்தார். ஆகாரி ஃபரிஸ்தாவாக இருந்தாலும் சரி, நிரந்தர நிராகாரியாக இருந்தாலும் சரி, இயற்கையான இயல்பாக ஆகிவிட வேண்டும் - இதற்கான மூல ஆதாரம் நிரகங்காரி ஆவதாகும். அகங்காரம் அநேக விதமாக உள்ளது. அனைத்திலும் விசேஷமாகச் சொல்வதென்றால் ஒருசொல் - தேக அபிமானம். ஆனால் தேக-அபிமானத்தின் விஸ்தாரம் அநேகம் உள்ளது. ஒன்று வெளிப்படையான ரூபத்தில் தேக அபிமானம். அது அநேகக் குழந்தைகளிடம் இல்லை. தனது தேகமாக இருந்தாலும் சரி, மற்றவர்களின் தேகத் தினுடைய கவர்ச்சி இருந்தாலும் கூட, அதுவும் தேக-அபிமானம் தான். அநேகக் குழந்தை களுக்கு இந்த வெளிப்படையான ரூபத்தில், தேகத்தின் உருவத்தில் பற்றுதல் அல்லது அபிமானம் இல்லை. ஆனால் இதோடு கூடவே தேகத்தின் சம்பந்தத்தில் தனது சம்ஸ்காரம் விசேஷமானது, புத்தி விசேஷமானது, குணங்கள் விசேஷமானவை, சில கலைகள் விசேஷமாக உள்ளன, ஏதாவது சக்தி விசேஷமாக உள்ளது - அதன் அபிமானம், அதாவது அகங்காரம், போதை, செருக்கு - இவை சூட்சும தேக அபிமானமாகும். இந்த சூட்சும அபிமானத்தில் ஏதாவது ஓர் அபிமானம் இருந்தாலும், ஆகாரி ஃபரிஸ்தாவாக இயற்கையாக, நிரந்தரமாக ஆகவும் முடியாது, நிராகாரி ஆகவும் முடியாது. ஏனென்றால் ஆகாரி ஃபரிஸ்தா விடமும் தேக அபிமானம் கிடையாது. டபுள் லைட்டாக இருப்பார்கள். தேக அகங்காரம் நிராகாரி ஆகவிடாது. அனைவரும் இந்த வருடம் நன்றாக கவனம் வைத்துள்ளனர். ஊக்கம்- உற்சாகமும் உள்ளது. விருப்பமும் மிக நன்றாக உள்ளது. விரும்பவும் செய்கின்றனர். ஆனால் இனி வருங்காலத்தில் தயவு செய்து மிக கவனமாக இருங்கள். சோதித்துப்பாருங்கள்- எந்த விதமான அபிமானம் அல்லது அகங்காரம் இயற்கையான சொரூபத்தில் முயற்சி செய்பவர் சொரூபமாக ஆக்கி விடாமல் உள்ளதா? எந்த ஒரு சூட்சும அபிமானமாவது அம்ச ரூபத்தில் கூட மிஞ்சியிருக்க வில்லை தானே? மேலும் சேவைக்கேற்றவாறும் கூட இமர்ஜ் ஆகிவிடு கிறதா? ஏனென்றால் அம்ச-மாத்திரம் தான் சமயத்தில் ஏமாற்றி விடும். எனவே இந்த வருடம் என்ன லட்சியம் வைத்தீர்களோ, பாப்தாதா இதையே விரும்புகிறார் - லட்சியம் நிறைவேறியே ஆக வேண்டும்.

போகப்போக சிலர் விசேஷமாக ஸ்தூல ரூபத்தில் அந்த நாள், அந்தச் சமயம், எந்த ஒரு தவறும் கூடச்செய்ததில்லை. ஆனால் சில நேரம் இதை அனுபவம் செய்கிறீர்கள் - அதாவது இன்று அல்லது இப்போது எந்த மாதிரி குஷி இருக்க வேண்டுமோ, அது இருப்பதில்லை - இது ஏனென்று தெரியவில்லை. இன்று தனிமை அல்லது அவநம்பிக்கை அல்லது வீண் சங்கல்பங் களின் புயல் திடீரென்று ஏன் வருகிறது? தெரியவில்லை. அமிர்தவேளையும் செய்தாயிற்று, முரளி வகுப்பும் கேட்டாயிற்று, சேவையும் செய்தாயிற்று, தொழிலையும் செய்தாயிற்று. ஆனால் இவை ஏன் இதுபோல் நடைபெறுகின்றன? காரணம் என்னவாக இருக்கும்? வெளிப்படை யான ரூபத்தையோ, சோதித்துவிடுகிறீர்கள். அதில் புரிந்து கொள்ளவும் செய்கிறீர்கள் - எந்தத்தவறும் நடைபெறவில்லை. ஆனால் சூட்சும அபிமானத்தின் சொரூபத் தினுடைய அம்சம் சூட்சுமத்தில் வெளிப்படுகிறது. எனவே எந்த ஒருகாரியத்திலும் மனம் ஈடுபடுவ தில்லை. வைராக்கியம், மனச்சோர்வு ஃபீல் ஆகிறது. அல்லது யோசிக்கிறீர்கள் - ஏதாவது தனிமையான இடத்திற்குச் சென்றுவிடலாமா, அல்லது தூங்கி விடலாமா, ஓய்வெடுக் கலாமா, அல்லது கொஞ்ச நேரத்துக்கு பரிவாரத்திலிருந்து விலகியிருக்கலாமா? இந்த அனைத்து ஸ்திதிகளுக்குமான காரணம் அம்சத்தின் அற்புதமாக உள்ளது. கமால் (அற்புதம்) எனச்சொல்லா தீர்கள். தமால் (குழப்பம்) என்றே சொல்லுங்கள். ஆக, சம்பூர்ண நிர்விகாரி ஆவதென்றால் ஆகாரி-நிராகாரி சகஜமாக ஆவது. எப்படி சிலநேரம் மனம் ஈடுபடுவதில்லை - சதா ஒரே மாதிரி யான தினசரி அட்டவணைப்படி நடக்க வேண்டுமா? மாற்றமோ வேண்டும் தான் இல்லையா? விரும்பாமலே கூட இந்த ஸ்திதி வந்து விடுகிறது.

எப்போது நிரகங்காரி ஆகிவிடுகிறீர்களோ, அப்போது ஆகாரி மற்றும் நிராகாரி ஸ்திதி யிலிருந்து கீழே வருவதற்கு மனம் இருக்காது. அதிலேயே மூழ்கிய அனுபவம் செய்வீர்கள். ஏனென்றால் உங்கள் ஒரிஜினல், அநாதி ஸ்டேஜோ நிராகாரி தான் இல்லையா? நிராகார் ஆத்மா இந்த சரீரத்தில் பிரவேசமாகியுள்ளது. சரீரம் ஆத்மாவுக்குள் பிரவேசிக்கவில்லை. ஆத்மா சரீரத்தினுள் பிரவேசமாகியிருக்கிறது. ஆக, அநாதி ஒரிஜினல் சொரூபமோ நிராகாரி தான் இல்லையா? அல்லது சரீர தாரியா? சரீரத்தின் ஆதாரம் எடுத்தீர்கள். ஆனால் எடுத்தது யார்? ஆத்மாவாகிய நீங்கள். நிராகார், சாகார சரீரத்தின் ஆதாரம் எடுத்திருக்கிறீர்கள். ஆக, ஒரிஜினல் எது? ஆத்மாவா, சரீரமா? ஆத்மா. இது பக்காவா? ஆகவே ஒரிஜினல் ஸ்திதியில் நிலைத்திருப்பது சகஜமா அல்லது ஆதாரம் எடுக்கக்கூடிய ஸ்திதியில் சகஜமா?

அகங்காரம் வருவதற்கான வாசல் ஒரே சொல் தான். அது என்ன? நான் ஆகவே இந்த அப்பியாசம் செய்யுங்கள் - எப்போதெல்லாம் நான் என்றசொல்வருகிறதோ, அப்போது ஒரிஜினல் சொரூபத்தை முன்னால் கொண்டு வாருங்கள் - நான் யார்? நான் ஆத்மாவா, அல்லது இன்னார்-இன்னாரா? மற்றவர்களுக்கு ஞானம் கொடுக்கிறீர்கள் இல்லையா? நான் என்ற சொல் தான் மறக்க வைப்பது. நான் என்ற சொல் தான் கீழே கொண்டு வருவது. நான் என்று சொல்வதால் ஒரிஜினல் நிராகார் சொரூபம் நினைவு வருவது இயற்கையாக ஆகிவிட வேண்டும் - இந்த முதல் பாடம் சுலபம் தான் இல்லையா? ஆக, இதையே சோதித்துப் பாருங்கள், பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் - நான் என்று நினைத்ததும் நிராகாரி சொரூபம் நினைவில் வந்துவிட வேண்டும். எத்தனை தடவை நான் என்ற சொல்லைச் சொல்கிறீர்கள்! நான் இதைச் சொன்னேன், நான் இதைச் செய்வேன் அநேக தடவை நான் என்ற சொல்லைப் பயன்படுத்து கிறீர்கள். அப்போது நிராகாரி அல்லது ஆகாரி ஆவதற்கான சகஜ விதி இதுதான்எப்போ தெல்லாம் நான் என்ற சொல்லைச் சொல்கிறீர்களோ, உடனே ஆத்மா, நிராகாரி ஒரிஜினல் சொரூபம் முன்னால் வந்துவிடவேண்டும். இது கஷ்டமா அல்லது சுலபமா? பிறகோ லட்சியம் மற்றும் லட்சணம் சமமாகவே ஆகிவிட்டது. நிரகங்காரி ஆவதற் கான சகஜ சாதனத்தைத் தன்னுடையதாக ஆக்கிப்பாருங்கள். இந்த தேக உணர்வின் நான் என்பது முடிந்து போக வேண்டும். ஏனென்றால் நான் என்ற சொல் தான் தேக அகங்காரத்தில் கொண்டு வருகிறது. மேலும் நான் நிராகாரி ஆத்மா சொரூபமாக இருக்கிறேன் என்பதை ஸ்மிருதியில் கொண்டு வருகிறீர்கள் என்றால் இந்த நான் என்ற சொல் தான் தேக உணர்வி லிருந்து அப்பால் கொண்டுசென்று விடும். சரிதான் இல்லையா? நாள் முழுவதிலும் 25-30 தடவை சொல்லிக் கொண்டு தான் இருப்பீர்கள். சொல்லவில்லை என்றால் யோசித்துக் கொண்டிருப்பீர்கள் -நான் இதைச்செய்வேன், நான் இதைச் செய்ய வேண்டும். பிளானும் கூட தயார் செய்கிறீர்கள் என்றால், யோசிக்கிறீர்கள் இல்லையா? ஆக, இத்தனைத் தடவை செய்யப்படும் அப்பியாசம், ஆத்மா சொரூபத்தின் ஸ்மிருதி என்னவாக ஆக்கிவிடும்? நிராகாரி. நிராகாரி ஆகி, ஆகாரி ஃபரிஸ்தா ஆகி, காரியம் செய்து, பிறகு நிராகாரி ஆகிவிடவேண்டும். கர்ம சம்பந்தத்தின் சொரூபத்துடன் சம்பந்தத்தில் வாருங்கள். சம்பந்தத்தை பந்தனத்தில் கொண்டு வராதீர்கள். தேக அபிமானத்தில் வருவது என்றால் கர்மபந்தனத்தில் வருவதாகும். தேக சம்பந்தத்தில் வருவது என்றால் கர்ம சம்பந்தத்தில் வருவதாகும். இரண்டுக்கும் வேறுபாடு உள்ளது. தேக ஆதாரத்தை எடுப்பது, தேகத்தின் வசமாக ஆவது இரண்டுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. ஃபரிஸ்தா அல்லது நிராகாரி ஆத்மா தேகத்தின் ஆதாரத்தை எடுத்து தேகத்தின் பந்தனத்தில் வருவதில்லை. சம்பந்தம் வைத்திருக்கும், ஆனால் பந்தனத்தில் வராது. ஆக, பாப்தாதா மீண்டும் இதே வருடத்தில் ரிசல்ட்டைப் பார்ப்பார் - நிரகங்காரி, ஆகாரி ஃபரிஸ்தாக்கள் மற்றும் நிராகாரி ஸ்திதியில் லட்சியம் மற்றும் லட்சணம் எந்த அளவு சமமாக ஆயின?

சம நிலையின் அடையாளம் பணிவு. எவ்வளவு பணிவோ அவ்வளவு அனைவருடைய மனதிலும் மகானாகத் தானாகவே ஆவீர்கள். பணிவு இல்லாமல் அனைவருக்கும் மாஸ்டர் சுகம் கொடுப்பவராக ஆகமுடியாது. பணிவு சுலபமாக நிரகங்காரி ஆக்கிவிடும். பணிவின் விதை மகான் தன்மை என்ற பழத்தைத் தானாகவே அடையச்செய்யும். பணிவு என்பது அனைவரின் மனதிலும் ஆசிர்வாதங்களை அடையச்செய்வதற்கான சகஜ சாதனமாகும். பணிவு அனைவரின் மனதிலும் பணிவான ஆத்மாவுக்காக சுலபமாக அன்பின் இருப்பிடமாக ஆக்கிவிடும். பணிவு மகிமைக்குத் தகுதியுள்ளவராகத்தானாகவே ஆக்கிவிடும். ஆக. நிரகங்காரி ஆவதற்கான விசேஷ அடையாளம் - பணிவு. உள்ளுணர்விலும் பணிவு, பார்வையிலும் பணிவு, வார்த்தையிலும் பணிவு, சம்பந்தம்- தொடர்பிலும் பணிவு. என்னுடைய உள்ளுணர்வில் இருந்ததில்லை, ஆனால் வார்த்தை வெளிப்பட்டுவிட்டது - அப்படி இருக்கக்கூடாது. உள்ளுணர்வு என்னவாக உள்ளதோ, அது பார்வையாக இருக்கும், எது பார்வையாக உள்ளதோ, அது வார்த்தையாக இருக்கும். அதே தான் சம்பந்தம்-தொடர்பிலும் வரும். நான்கிலும் இருக்க வேண்டும். மூன்றில் உள்ளது. ஒன்றில் இல்லை என்றாலும் அகங்காரம் வருவதற்கான மார்ஜின் உள்ளது. இதைத்தான் ஃபரிஸ்தா எனச்சொல்வது. ஆக, புரிந்துகொண்டீர்களா, பாப்தாதா எதை விரும்புகிறார் மற்றும் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்பதை? விருப்பம் இருவருக்குமே உள்ளது. இப்போது செயல் என்ற ஒன்றையும் மேற்கொள்ளுங்கள். நல்லது.

இனி சேவைக்கான புதுப்புதுபிளான்கள் என்ன உருவாக்குவீர்கள்? கொஞ்சம் உருவாக்க வேண்டும். கொஞ்சம் உருவாக்குவீர்கள். இந்த வருடம் அல்லது இனி வரும் வருடத்தில் எப்படி மற்ற பிளான்கள் யோசிக் கிறீர்கள் - சொற்பொழிவும் செய்வோம், சம்பந்தம்-தொடர்பையும் அதிகரிப்போம். பெரிய புரோகிராமும் செய்வோம், சிறிய புரோகிராமும் செய்வோம் - இதையோ யோசிக்கவே செய்கிறீர்கள். ஆனால் இப்போதைய வேகத்தின்படி இப்போது சேவையின் வேகமும் கூட அதிகரிக்க வேண்டும். கொஞ்ச சமயத்தில் சேவையின் வெற்றி அதிகரிக்க வேண்டும். வெற்றி என்றால் ரிசல்ட். அதற்கான விதி - வாய் மொழியுடன் கூடவே முதலில் தனது ஸ்திதி மற்றும் இடத்தின் வைப்ரேஷன்களை சக்திசாலி ஆக்குங்கள். எப்படி உங்கள் ஜடசித்திரங்கள் என்ன சேவை செய்து கொண்டிருக்கின்றன. வைப்ரேஷன்கள் மூலம் எத்தனை பக்தர்களை மகிழ்விக்கின்றன! இரட்டை வெளிநாட்டினர் கோவில்களைப் பார்த்திருக்கிறீர்களா? உங்களுடைய கோவில்கள் தாம் இல்லையா? உங்களுடைய சித்திரங்கள் சேவை செய்து கொண்டிருக்கின்றன இல்லையா? ஆக, வாய்மொழி மூலம் சேவை செய்யுங்கள், ஆனால் இப்போது அந்த மாதிரி பிளானிங் செய்யுங்கள். வாய்மொழியுடன் கூடவே வைப்ரேஷனுக்கான அந்த மாதிரி விதியை உருவாக்குங்கள், அது வாய்மொழி மற்றும் வைப்ரேஷன் என்று இரட்டைக்காரியம் செய்ய வேண்டும். வைப்ரேஷன் நீண்டகாலம் இருக்கும். வாய் மொழியில் கேட்டது அவ்வப்போது அநேகருக்கு மறந்தும் போகலாம். ஆனால் வைப்ரேஷன்களின் முத்திரை அதிக சமயம் நடைபெறுகிறது. எப்படி நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அனுபவியாக இருக்கிறீர்களோ - யாருடைய தலைகீழான வைப்ரேஷனாவது உங்கள் மனதில் அல்லது புத்தியில் அமர்ந்து கொள்கிறது என்றால் தலைகீழானது எவ்வளவு காலம் செல்கிறது. வைப்ரேஷன் உள்ளே அமர்ந்து கொள்கிறது இல்லையா? மற்றும் வார்த்தையோ அந்தச் சமயமே மறந்து போகும். ஆனால் வைப்ரேஷன் ரூபத்தில் மனம் மற்றும் புத்தியின் முத்திரை பதிந்து விடுகிறது. மேலும் எவ்வளவு சமயம் அதே வைப்ரேஷன் வசமாகி, அந்த மனிதரோடு விவகாரத்தில் வருகிறீர்கள்? தலைகீழாக இருந்தாலும் சரி, நேராக இருந்தாலும் சரி வைப்ரேஷன் அகல்வது கடினம். ஆனால் ஆன்மீக வைப்ரேஷனைப் பரப்புவதற்காக முதலில் தனது மனதில், புத்தியில் வீணான வைப்ரேஷனை முடித்து விடுவீர் களானால், அப்போது ஆன்மீக வைப்ரேஷன் பரவ முடியும். யாருக்காகவும் வீணான வைப்ரேஷன்களை தாரணை செய்திருந்தால் ஆன்மீக வைப்ரேஷனைப் பரப்ப முடியாது. வீணான வைப்ரேஷன், ஆன்மீக வைப்ரேஷனுக்கு முன்னால் ஒருசுவராகி விடுகிறது. சூரியன் எவ்வளவு தான் பிரகாசமயமாக இருந்தாலும், முன்னால் சுவர் வந்து விட்டால் சூரியனின் பிரகாசத்தை ஒளிரவிடாது. எதுபக்கா வைப்ரேஷனாக உள்ளதோ, அது சுவர் மற்றும்எது லேசான வைப்ரேஷனாக உள்ளதோ, அது லேசான மேகம் அல்லது கறுப்புமேகம். அவை ஆன்மீக வைப்ரேஷன்களை ஆத்மாக்கள் வரை சென்று சேர விடாது. எப்படி சிலர் கடலில் வலை விரித்து அநேகப் பொருள்களை ஒரே தடவையில் சேர்த்துவிடுகின்றனர். அல்லது எங்கேயாவது தங்கள் வலையை விரித்து ஒரே நேரத்தில் அநேகரைத் தங்களுடையவர்களாக ஆக்கிவிடுகிறார்கள். எனவே வைப்ரேஷன்கள் ஒரே சமயத்தில் அநேக ஆத்மாக்களைக் கவர முடியும். வைப்ரேஷஷன்கள் வாயுமண்டலத்தை உருவாக்குகின்றன. ஆக, இனி வருங்காலத்திற்கான சேவையில் உள்ளுணர்வு மூலம் ஆன்மீக வைப்ரேஷன்களாலும் கூட சேவை செய்யுங்கள், அப்போது வேகமாக நடைபெறும். வைப்ரேஷன் மற்றும் வாயுமண்டலத் தோடு கூடவே வாய் மொழி சேவையும் செய்வீர் களானால் ஒரே சமயத்தில் அநேக ஆத்மாக்களுக்கு நன்மை செய்ய முடியும்.

மற்றப்படி நிகழ்ச்சிகளுக்காக ஏற்கனவே உருவாக்கப்பட்டுத் தயாராக இருக்கும் ஸ்டேஜை இன்னும் அதிகம் பயன்படுத்துங்கள். தொடர்பில் வருபவர்கள் மூலம் இந்த உதவியைப் பெற்று இந்த சேவையில் வளர்ச்சி பெற முடியும். சகயோகிகளின் சகயோகத்தை எந்த ஒரு விதி மூலமாவது அதிகரித்துக்கொண்டே செல்வீர்களானால் தானாகவே சேவையில் சகயோகி ஆவதன் மூலம் சகஜமாகவே யோகி ஆகிவிடுவார்கள். அந்த மாதிரி அநேக ஆத்மாக்கள் உள்ளனர் -- நேரடியாக சகஜயோகி ஆகமாட்டார்கள், ஆனால் சகயோகம் பெற்றுக்கொண்டே செல்லுங்கள், சகயோகிகளை உருவாக்கிக்கொண்டே செல்லுங்கள். ஆக, சகயோகத்தில் முன்னேறி- முன்னேறியே சகயோகம் அவர்களை யோகி ஆக்கிவிடும். ஆகவே சகயோகி ஆத்மாக்களை இன்னும் அதிகமாக ஸ்டேஜில் கொண்டு வாருங்கள். அவர்களின் சகயோகத்தைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். என்ன செய்ய வேண்டும் எனப்புரிந்ததா? யாரேனும் ஓர் ஆத்மா கூட சகயோகி ஆகிவிட்டால், அந்த ஆத்மா நடைமுறையில் சகயோகம் பெறுவதன் மூலம், தருவதன் மூலம் உடனடி ஆசிர்வாதங்களால் சகஜமாக முன்னேறிச் செல்வார். மேலும் அநேகரின் சேவைக்கு நிமித்தமாவார்.

அதனுடன் கூடவே ஒரு வருடத்தின் சீசன் முடிவடைகிறது. முடியும்போது என்ன செய்யப் படுகிறது? முடியும் போது ஒன்று, நிறைவுவிழா கொண்டாடப்படுகிறது. இரண்டாவது ஆன்மீக விஷயங்களில் ஸ்வாஹா செய்யப்படுகிறது. ஆக, இப்போது எதை ஸ்வாஹா செய்வீர்கள்? ஒரு விஷயத்தை மனம்-புத்தியால் ஸ்வாஹா செய்யுங்கள். வாயினால் அல்ல, வெறுமனே படித்து விட்டீர்கள் - அது இல்லை. மனம்-புத்தியால் ஸ்வாஹா செய்யுங்கள். பிறகு பாருங்கள், சுயம் மற்றும் சேவையில் தீவிர வேகம் எப்படி இருக்கிறது என்று. ஆக, இன்றைய அலை - எந்த ஓர் ஆத்மாவுக்காகவும் வீண் வைப்ரேஷனை ஸ்வாஹா செய்யுங்கள். ஸ்வாஹா செய்ய முடியுமா? அல்லது கொஞ்சம்-கொஞ்சம் மிச்சம் இருக்குமா? இவர் இப்படித் தான் இருக்கிறார் என்றால் வைப்ரேஷனோ இருக்கும் இல்லையா என்று அந்த மாதிரி நினைக்க வேண்டாம். நீங்கள் எத்தகையவராக இருந்தாலும் சரி, ஆனால் நீங்கள் நெகட்டிவ் (எதிர்மறை) வைப்ரேஷனை மாற்றி பாஸிட்டிவ் (நேர்மறை) வைப்ரேஷன் வைப்பீர்களானால் அந்த ஆத்மாவும் நெகட்டிவில் இருந்து பாஸிட்டிவ்-இல் வந்துவிடுவார். வந்து தான் ஆக வேண்டும். ஏனென்றால் எதுவரை இந்த வீண் வைப்ரேஷன் மனம்-புத்தியில் உள்ளதோ, அதுவரை வேகமான சேவை நடைபெற முடியாது.

உள்ளுணர்வு மூலம் வைப்ரேஷன்களைப் பரப்ப வேண்டும். உள்ளுணர்வு என்பது ராக்கெட். அதை இங்கே அமர்ந்தவாறு எங்கே விரும்பினாலும் எவ்வளவு சக்திசாலி மாற்றத்தைச் செய்ய விரும்பினாலும் செய்ய முடியும். இது ஆன்மீக ராக்கெட். எதுவரை எத்தனைப்பேரை சென்றடைய வைக்க விரும்புகிறீர்களோ, அவ்வளவு சக்திசாலி உள்ளுணர்வு மூலம் வைப்ரேஷன், வைப்ரேஷன் மூலம் வாயுமண்டலத்தை உருவாக்க முடியும். உண்மையில் அது தவறாகவும் இருக்கலாம். ஆனால் நீங்கள்அதனுடைய தவற்றை தாரணை செய்யாதீர்கள். தவற்றை நீங்கள் ஏன் தாரணை செய்கிறீர்கள்? இது ஸ்ரீமத்தா என்ன? புரிந்து கொள்வது என்பது வேறு விஷயம். சக்திசாலியாக நீங்கள் ஆகுங்கள். ஆனால் ஞானம் நிறைந்தவர் என்பதோடு சக்திசாலியாகவும் ஆகி அதை முடித்து விடுங்கள். புரிந்துகொள்வது வேறு விஷயம். உள்ளுக்குள் நிறைத்துக் கொள்வது வேறு விஷயம். முடித்துவிடுவது மற்றொரு விஷயம். இதுதவறு, இதுசரி, இது அப்படி உள்ளது என்பதைப் புரிந்து கொள்கிறீர்கள். ஆனால் யாருக்கு புரிந்து கொள்வதும் வருகிறது, நீக்கிவிடுவதும் வருகிறதோ, மாற்றம் செய்வதும் வருகிறதோ, அவர் தாம் புத்திசாலி எனச்சொல்லப்படுவார்.

இந்த வருடத்தில் மனம்-புத்தியை வீண் விஷயங்களில் இருந்து விடுவித்து விடுங்கள். இந்த வீண் விஷயம் தான் அதிவேகத்தை சாதாரண வேகத்தில் கொண்டு வருகிறது. எனவே இந்த நிறைவு விழாவைக் கொண்டாடுங்கள், அதாவது ஸ்வாஹா செய்யுங்கள். முற்றிலும் க்ளீன். எத்தகையவராக இருந்தாலும் மன்னியுங்கள். சுபபாவனை, சுபவிருப்பத்தின் உள்ளுணர்வு மூலம் சுப வைப்ரேஷன்களை தாரணை செய்யுங்கள். ஏனென்றால் கடைசியில் முன்னேறும் போது உள்ளுணர்வு-வைப்ரேஷன் உங்கள் சேவையை அதிகரிக்கும். அப்போது விரைவிலும் விரைவாக குறைந்தது 9 லட்சத்தை உருவாக்க முடியும். எதை ஸ்வாஹா செய்ய வேண்டும் என்பது புரிந்ததா? வீணான உள்ளுணர்வு, வீணான வைப்ரேஷன் ஸ்வாஹா! பிறகு பாருங்கள், இயற்கையான யோகி மற்றும்இயல்பில் ஃபரிஸ்தா ஆகியே இருக்கிறீர்கள். இந்த அனுபவத்தின் மீதுரிட்ரீட் செய்யுங்கள். ஒர்க்ஷாப் செய்யுங்கள். எப்படி ஆகும் என்று அப்படி இல்லை. இப்படி ஆகும். நல்லது.

சதா தன்னை அடிக்கடி ஒரிஜினல் சொரூபம் நான் நிராகாரியாக இருக்கிறேன் - இது போல் நிச்சயம் மற்றும் நஷôவில் பறக்கக்கூடிய, சதா பணிவு மூலம் மகான் தன்மையின் பிராப்தியினுடைய அனுபவி ஆத்மாக்கள், அத்தகைய பணிவு, சதா மகான், மற்றும் சதா ஆகாரி நிராகாரி ஸ்திதியை இயல்பாக மற்றும் இயற்கையாக ஆக்கக் கூடிய சர்வ சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு பாப்தாதாவின் மிக -மிக- மிக அன்பு நினைவு மற்றும் நமஸ்தே.

வரதானம்:

இந்த மர்ஜீவா வாழ்க்கையில் சதா திருப்தியாக இருக்கக்கூடிய இச்சாமாத்ரம் அவித்யா (ஆசை என்பது என்னவென்றே தெரியாத நிலை) ஆகுக.


குழந்தைகள் நீங்கள் மர்ஜீவா ஆகியிருப்பது சதா திருப்தியாக இருப்பதற்காக. எங்கே திருப்தி உள்ளதோ, அங்கே சர்வ குணங்கள், சர்வ சக்திகள் இருக்கும். ஏனென்றால் படைப்பவரைத் தம்முடையவராக ஆக்கிக்கொண்டீர்கள். எனவே தந்தை கிடைத்ததால் அனைத்தும் கிடைத்தன. அனைத்து ஆசைகளையும் ஒன்று சேருங்கள், அவற்றை விடவும் பலகோடி மடங்கு அதிகமாகக் கிடைத்துள்ளன. அதற்கு முன்னால் இச்சைகள் என்பவை சூரியனுக்கு முன்னால் தீபம் போலத்தான். இச்சை வைப்பதற்கான விஷயத்தை விடுங்கள். ஆனால் இச்சை இருக்கவும் செய்கிறது - இந்தக் கேள்வியும் கூட எழ முடியாது. அனைத்துப் பிராப்திகளும் நிறைந்துள்ளன. அதனால் இச்சாமாத்ரம் அவித்யா ஆசை என்றால் என்னவென்று அறியாத நிலை), சதா திருப்திமணியாக இருக்கிறீர்கள்.

சுலோகன்:

யாருடைய சம்ஸ்காரங்கள் ஈஸியாக உள்ளனவோ, அவர்கள் எந்த ஒரு பரஸ்திதியிலும் தன்னை மாற்றிக்கொள்வார்கள் (மோல்டு செய்வார்கள்).

 Download PDF

Post a Comment

0 Comments