Header Ads Widget

Header Ads

ILNGAI TAMIL MURLI 01.01.23

 

01-01-2023  ஓம் சாந்தி  அவ்யக்த பாப்தாதா  மதுவனம் 26/03/1993


Listen to the Murli audio file



இந்த அவ்யக்த வருடத்தில் உங்களின் இலட்சியத்தையும் அதற்கான தகைமைகளையும் ஒத்தவை ஆக்குங்கள்.

இன்று, அசரீரியான மற்றும் சூட்சுமமான பாப்தாதா, அதிமேன்மையான பிராமண ஆத்மாக்களை அவர்களின் சூட்சுமமான மற்றும் பௌதீக ரூபங்களில் பார்க்கிறார். ஆத்மாக்களான நீங்கள் எல்லோரும் உங்களின் பௌதீக ரூபங்களில் தந்தையின் முன்னால் தனிப்பட்ட முறையில் இருக்கிறீர்கள். சூட்சும ரூபங்களில் இருக்கும் குழந்தைகளும் பாபாவின் முன்னால் இருக்கிறார்கள். இருவரையும் பார்க்கும்போது பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். உங்கள் எல்லோருக்கும் உங்களின் இதயங்களில் ஒரேயொரு எண்ணமும் உற்சாகமும் உள்ளன: அதாவது நீங்கள் எல்லோரும் தந்தைக்குச் சமமானவர்கள் ஆகுவீர்கள். பௌதீகத்தில் இருந்து சூட்சுமமாகவும் சூட்சுமத்தில் இருந்து அசரீரியாகவும் ஆகுவீர்கள். பாப்தாதா இந்த இலட்சியத்தையும் அதற்கான தகைமைகளையும் எல்லோரிடமும் பார்க்கிறார். என்ன புலப்படுகிறது? பெரும்பாலானோரின் இலட்சியம் மிகவும் நன்றாக உள்ளது. திடசங்கற்பமும் உள்ளது. ஆனால் அதற்கான தகைமைகள் சிலவேளைகளில் திடசங்கற்பமானதாகவும் சிலவேளைகளில் சாதாரணமானவையாகவும் உள்ளன. இலட்சியத்திலும் தகைமைகளிலும் சமமான தன்மையைக் கொண்டு வருவதே, தந்தையைப் போன்றவர் ஆகுவதன் அடையாளமாகும். தமது இலட்சியத்தில் 99 சதவீதத்தைக் கிரகித்துள்ள சிலர் இருக்கிறார்கள். ஏனைய அனைவரும் வரிசைக்கிரமமாக இருக்கிறார்கள். எவ்வாறாயினும், எந்தளவிற்கு நீங்கள் தகைமைகளை எப்போதும், இலகுவாகவும் இயல்பானதொரு முறையில் கிரகித்து, அதை உங்களின் சுபாவம் ஆக்கியுள்ளீர்கள்? இதில், உங்களில் சிறுபான்மையினர் 90 சதவீதம் வரை செய்துள்ளீர்கள். ஏனைய அனைவரும் வரிசைக்கிரமமாகவே இருக்கிறார்கள். எனவே, இலட்சியத்திலும் அதன் தகைமைகளிலும், அத்துடன் அந்தத் தகைமைகளை இயல்பானதாகவும் உங்களின் சுபாவமாகவும் ஆக்குவதில் ஏன் இந்த வேறுபாடு? காலத்திற்கேற்ப, சூழ்நிலைகளுக்கேற்ப, பிரச்சனைகளுக்கேற்ப, சில குழந்தைகள் முயற்சி செய்து தமது இலட்சியத்தையும் அதற்கான தகைமைகளையும் ஒத்ததாக ஆக்கியுள்ளார்கள். ஆனால், அவற்றை இயல்பானதாகவும் உங்களின் சுபாவமாகவும் ஆக்குவதற்கு இப்போது பெரும் கவனம் தேவை. நீங்கள் இந்த வருடத்தை, உங்களை ஓர் அவ்யக்த தேவதை ஸ்திதியில் ஸ்திரமாக்கும் வருடமாகக் கொண்டாடுகிறீர்கள். பாப்தாதா குழந்தைகளின் அன்பையும் முயற்சிகளையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். அத்துடன் அவர், ‘ஆஹா குழந்தைகளே! ஆஹா!’ என்ற பாடலையும் பாடுகிறார். இத்துடன்கூடவே, குழந்தைகள் எல்லோருடைய இலட்சியத்திற்கும் அவர்களின் தகைமைகளுக்கும் இடையில் சமமான தன்மையையும் அவர் பார்க்க விரும்புகிறார். உங்களுக்கும் இதுதானே வேண்டும்? தந்தை இதையே விரும்புகிறார். நீங்களும் இதையே விரும்புகிறீர்கள். அப்படியென்றால் இடையில் என்ன வருகிறது? உங்களுக்கும் இது மிக நன்றாகத் தெரியும். நீங்கள் உங்களுக்கிடையே பட்டறைகளை நடத்துகிறீர்கள்தானே?

இலட்சியத்திற்கும் அதன் தகைமைகளுக்கும் இடையே ஒரு வேறுபாடு ஏற்படுவதற்கு ஒரு விசேடமான விடயத்தை பாப்தாதா கண்டார். நீங்கள் ஒரு சூட்சுமமான தேவதையாகவோ அல்லது அசரீரியானவராகவோ ஆகினாலும், இதை எப்போதும் உங்களின் இயல்பான சுபாவம் ஆக்குவதற்கான பிரதானமான அடிப்படை என்னவென்றால், அகங்காரமற்றவர் ஆகுவதாகும். பல வகையான அகங்காரங்கள் உள்ளன. நீங்கள் பேசும்போது, ஒரு பிரதானமான வசனம் வருகிறது. அது சரீர உணர்வு என்பதாகும். ஆனால் சரீர உணர்விலும் அதிகளவு விரிவாக்கம் உள்ளது. ஒன்று, புற நிலையில் உள்ள சரீர உணர்வு. இது பல குழந்தைகளிடம் இல்லை. சரீரங்களிடம் கவர்ச்சி இருக்குமாயின், அது உங்களின் சொந்த சரீரத்திற்கோ அல்லது மற்றவர்களின் சரீரத்திற்கோ இருக்குமாயின், அதுவும் சரீர உணர்வேயாகும். எவ்வாறாயினும், சில குழந்தைகள் அந்தப் புற நிலையில் சித்தி அடைந்துள்ளார்கள். அவர்களுக்குச் சரீரதாரிகளிடம் புற நிலையில் பற்றோ அல்லது அகங்காரமோ இல்லாதிருக்கலாம். ஆனால், தமது சரீரங்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு விசேடமான சம்ஸ்காரங்கள், விசேடமான புத்திகள், விசேடமான நற்குணங்கள், விசேடமான திறமைகள் அல்லது விசேடமான சக்திகள் உள்ளன. அவற்றின் அகங்காரம், அதாவது, அகங்காரம், போதை, அதிகாரதோரணை போன்றவை சரீரத்தின் சூட்சுமமான அகங்காரமாகும். அந்தச் சூட்சும வகையான அகங்காரங்களில், ஏதாவதொரு வகையான அகங்காரம் இருக்குமாயின், உங்களால் இயல்பாகவும் எப்போதும் சூட்சும தேவதைகள் ஆகவும் முடியாது. உங்களால் அசரீரியானவராகவும் முடியாது. ஏனென்றால், சூட்சும தேவதைகளுக்கு எந்தவிதமான சரீர உணர்வும் இருக்காது. அவர்கள் இலேசாகவும் ஒளியாகவும் இருப்பார்கள். உங்களின் சரீர அகங்காரம் உங்களை அசரீரியானவர் ஆக அனுமதிக்காது. நீங்கள் எல்லோரும் இந்த வருடத்தில் மிக நல்ல கவனம் செலுத்தினீர்கள். ஊக்கமும் உற்சாகமும் காணப்பட்டன. மிக நல்ல விருப்பம் இருந்தது. நீங்கள் இதை விரும்பினீர்கள். ஆனால் தயவுசெய்து மேலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். சோதித்துப் பாருங்கள்: எந்த வகையான ஆணவமோ அல்லது அகங்காரமோ உங்களின் இயல்பான ரூபத்தை முயற்சியாளரின் ரூபமாக மாற்றுகிறதா? இன்னமும் சூட்சுமமான அகங்காரத்தின் ரூபத்தின் சுவடேனும் எஞ்சியுள்ளதா? இது நேரத்திற்கேற்பவும் சிலவேளைகளில் நீங்கள் செய்யும் சேவைக்கேற்பவும் வெளிப்படுகின்றதா? அது ஒரு சுவடாக மட்டும் இருக்கக்கூடும். ஆனால், அந்தக் குறிப்பிட்ட வேளையில் அது உங்களை ஏமாற்றிவிடும். ஆகவே, நீங்கள் இந்த வருடம் கொண்டிருக்கும் உங்களின் இலட்சியத்தை நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என்பதே பாப்தாதாவின் ஆசையாகும்.

நீங்கள் தொடர்ந்து செயல்படும்போது, குறிப்பிட்ட தினத்தில் அல்லது குறிப்பிட்ட வேளையில் ஒரு குறிப்பிட்ட தவறைச் செய்யாவிட்டாலும், சிலவேளைகளில் அந்தத் தினத்தில் அல்லது அந்தக் கணத்தில் இருக்க வேண்டிய சந்தோஷத்தை ஏன் அனுபவிப்பதில்லை என அறியாதவர்களாக இருக்கிறீர்கள். சில வேளைகளில் ஏன் தனிமையும் நம்பிக்கை இழந்த நிலையும் அல்லது சடுதியாக வீணான எண்ணங்களின் புயலும் அடிக்கின்றன என உங்களுக்குத் தெரிவதில்லை. நீங்கள் அமிர்த வேளை செய்தீர்கள். நீங்கள் வகுப்பிற்குச் சென்றீர்கள். நீங்கள் சேவை செய்தீர்கள். நீங்கள் உங்களின் பணியைச் செய்தீர்கள். அப்படியிருந்தும் அது ஏன் நடக்கிறது? இதற்கான காரணம் என்ன? புற விடயங்களைச் சோதிப்பதன் மூலம், தவறு நிகழவில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆனால் அகங்காரத்தின் சூட்சும ரூபத்தின் சுவடு வெளிப்படுகிறது. இதனாலேயே, உங்களால் எந்தவொரு பணியிலும் உங்களின் இதயத்தை ஈடுபடுத்த முடியாமல் உள்ளது. விருப்பமின்மை மட்டுமே ஏற்படுகிறது. அத்துடன் உங்களுக்குள் சோகம் ஏற்படுகிறது. அதன்பின்னர், நீங்கள் தனிமையான ஓர் இடத்திற்குச் செல்ல விரும்புகிறீர்கள். அல்லது தூங்கலாம் என நினைக்கிறீர்கள். நீங்கள் ஓய்வெடுக்கச் செல்ல விரும்புகிறீர்கள் அல்லது சிறிது காலத்திற்குக் குடும்பத்திடமிருந்து விலகிச் செல்ல விரும்புகிறீர்கள். இந்த நிலைகளுக்கெல்லாம் காரணம், ஏதோவொன்றின் சுவட்டின் அதிசயமேயாகும். அதை அதிசயம் (கமால்) என்று அழைக்காதீர்கள். ஆனால் அதைக் குழப்பம் (தமால்) என்று அழையுங்கள். சம்பூரணமாக அகங்காரமற்றவராக இருத்தல் என்றால், இலகுவாகச் சூட்சுமமானவராகவும் அசரீரியானவராகவும் ஆகுதல் என்று அர்த்தம். சிலவேளைகளில், எதையும் செய்வதற்கு உங்களுக்கு எந்தவிதமான விருப்பமும் இருப்பதில்லை. எல்லா நேரமும் இதுதான் எங்களின் நேர அட்டவணையாக இருக்கப் போகிறதா? ஏதாவது மாற்றம் நிகழ வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள். உங்களின் விருப்பத்திற்கு மாறாக நீங்கள் இந்த நிலையை அடைகிறீர்கள்.

நீங்கள் அகங்காரமற்றவர் ஆகும்போது, சூட்சுமமான மற்றும் அசரீரி ஸ்திதிகளில் இருந்து கீழே வர விரும்ப மாட்டீர்கள். நீங்கள் அவற்றில் திளைத்திருப்பதை அனுபவம் செய்வீர்கள். ஏன்? உங்களின் ஆதி ஸ்திதி அசரீரியானதுதானே? அசரீரி ஆத்மா அந்தச் சரீரத்தில் பிரவேசித்துள்ளார். அந்தச் சரீரம் ஆத்மாவிற்குள் பிரவேசிக்கவில்லை. ஆனால், ஆத்மாவே அந்தச் சரீரத்திற்குள் பிரவேசித்துள்ளார். எனவே, உங்களின் ஆதியான, அநாதியான ரூபம் அசரீரி, அப்படித்தானே? அல்லது, அது சரீரதாரியினுடையதா? சரீரத்தின் ஆதாரம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் யார் அந்த ஆதாரத்தை எடுத்திருப்பவர்? அசரீரி ஆத்மாவான நீங்களே ஒரு பௌதீகச் சரீரத்தின் ஆதாரத்தை எடுத்துள்ளீர்கள். எனவே, எது ஆதியானது: ஆத்மாவா அல்லது சரீரமா? ஆத்மாவே. உங்களுக்கு இது நிச்சயமாக உள்ளதா? உங்களை உங்களின் ஆதி ஸ்திதியில் ஸ்திரப்படுத்துவது இலேசாக உள்ளதா? அல்லது ஆதாரத்தை எடுக்கும் ஸ்திதியில் ஸ்திரப்படுத்துவது இலேசாக உள்ளதா? எது இலேசாக உள்ளது?

அகங்காரம் பிரவேசிக்கும் கதவு ஒரேயொரு வார்த்தையே ஆகும். அந்த வார்த்தை என்ன? அதுநான்என்ற வார்த்தையாகும். பயிற்சி செய்யுங்கள்: ‘நான்என்ற வார்த்தை பயன்படுத்தும் தருணங்களில், உங்களின் முன்னால் ஆதி ரூபத்தைக் கொண்டுவாருங்கள். நான் யார்? அது ஆத்மா என்றிருக்க வேண்டுமா? அல்லது, ‘நான் இன்னார்என்றிருக்க வேண்டுமா? ‘நான்என்ற வார்த்தை எவ்வாறு உங்களைப் பறக்கச் செய்கிறது என்றும் அதேநான்என்ற வார்த்தை எவ்வாறு உங்களை விழச் செய்கிறது என்றும் நீங்கள் மற்றவர்களுக்கு ஞானம் கொடுக்கிறீர்கள். ‘நான்என்ற வார்த்தையைக் கூறும்போது, உங்களின் ஆதியான, அசரீரியான ரூபம் நினைவுசெய்யப்படுமாயின், அது இயல்பானதாக இருந்தால், இந்த முதலாவது பாடம் இலகுவானதுதானே? எனவே, இதைச் சோதித்துப் பாருங்கள். இந்தப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ‘நான்என நினைத்தவுடனேயே, அசரீரியான ரூபம் உங்களின் விழிப்புணர்வில் வரவேண்டும். நீங்கள் எத்தனை தடவைகள்நான்எனச் சொல்கிறீர்கள்? ‘நான் இப்படிச் சொன்னேன். நான் இதைச் செய்வேன். நான் இப்படி நினைக்கிறேன்’. ‘நான்என்ற வார்த்தையை நீங்கள் பல தடவைகள் பயன்படுத்துகிறீர்கள். எனவே, இதுவே அசரீரியாகவும் சூட்சுமமாகவும் வருவதற்கான இலகுவான வழிமுறையாகும். ‘நான்என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தும் போதெல்லாம், உங்களின் அசரீரியான மற்றும் ஆதியான ரூபம் உடனடியாக உங்களின் முன்னால் தோன்ற வேண்டும். இது கஷ்டமா அல்லது இலகுவானதா? அப்போது உங்களின் தகைமைகள் நிச்சயமாக உங்களின் இலட்சியத்திற்குச் சமமானவை ஆகும். அகங்காரம் அற்றவர் ஆகுவதற்கு இந்த இலகுவான வழிமுறையைப் பயன்படுத்திப் பாருங்கள். உங்களின் சரீரத்தின்நான்என்ற இந்த அகங்காரம் முடிவடைய வேண்டும். ‘நான்என்ற வார்த்தையே உங்களைச் சரீர அகங்காரத்திற்குள் எடுத்துச் செல்கிறது. ‘நான் அசரீரியான ஆத்மாஎன்ற ரூபத்தின் விழிப்புணர்வில் நீங்கள் இருந்தால், இந்தநான்என்ற வார்த்தை உங்களைச் சரீரத்தின் எந்தவிதமான அகங்காரத்திற்கும் அப்பால் எடுத்துச் செல்லும். இது சரிதானே? நாள் முழுவதும், ‘நான்என்ற வார்த்தையை நீங்கள் 25 இலிருந்து 30 தடவைகள் வரை பயன்படுத்தக்கூடும். நீங்கள் அதைச் சொல்லாமல் இருக்கலாம். ஆனால் அவ்வாறு நினைப்பீர்கள். ‘நான் இதைச் செய்வேன், நான் அதைச் செய்வேன்’. நீங்கள் திட்டங்களைச் செய்யும்போதும், என்ன நினைக்கிறீர்கள்? பல தடவைகள் எதையாவது செய்து உங்களுக்குப் பழக்கப்பட்டிருந்தால், ஆத்மா என்ற உங்களின் ரூபத்தின் விழிப்புணர்விற்கு என்ன நிகழும்? அது உங்களை அசரீரியாக்கும். அசரீரியானவர் ஆகுங்கள். சூட்சுமமான தேவதை ஆகுங்கள். உங்களின் பணியைச் செய்துவிட்டுப் பின்னர் மீண்டும் அசரீரியானவர் ஆகுங்கள். உங்களின் கர்ம உறவுமுறைகளுடன் ஓர் உறவுமுறையைப் பேணுங்கள். ஓர் உறவுமுறையில் எந்தவிதமான பந்தனத்தையும் கொண்டிராதீர்கள். சரீரத்தின் அகங்காரத்தைக் கொண்டிருத்தல் என்றால், ஏதாவது கர்ம பந்தனத்தைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். சரீரத்துடன் ஓர் உறவுமுறையைக் கொண்டிருத்தல் என்றால், கர்ம உறவுமுறையைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம். இரண்டுக்கும் இடையில் ஒரு வேறுபாடு உள்ளது. அந்தச் சரீரத்தின் ஆதாரத்தை எடுத்துக் கொள்வதற்கும் அந்தச் சரீரத்தின் ஆதிக்கத்திற்கு உட்படுவதற்கும் இடையில் ஒரு வேறுபாடு உள்ளது. சரீரத்தின் ஆதாரத்தை எடுத்துக் கொள்ளும்போது, தேவதை மற்றும் அசரீரியான ஆத்மா சரீரத்தின் எந்தவொரு பந்தனத்திற்கும் உட்பட மாட்டார். அவர்கள் ஓர் உறவுமுறையைக் கொண்டிருப்பார்களே அன்றி, எந்தவிதமான பந்தனமும் இருக்காது. இந்த வருடம், பாப்தாதா பெறுபேற்றைப் பார்ப்பார்: அகங்காரமற்றவராகவும் சூட்சும தேவதைகளாகவும் அசரீரியானவராகவும் ஆகுகின்ற உங்களின் இலட்சியமும் தகைமைகளும் எந்தளவிற்குச் சமமானவை ஆகுகின்றன.

மகத்துவத்தின் அடையாளம் பணிவாகும். எந்தளவு அதிகமாகப் பணிவு இருக்கிறதோ, அந்தளவிற்கு ஓர் ஆத்மா இயல்பாகவே எல்லோருடைய இதயத்திலும் மகானாக இருப்பார். பணிவு இல்லாமல், உங்களால் எல்லோருக்கும் மாஸ்ரர் சந்தோஷத்தை அருள்பவர் ஆகமுடியாது. பணிவானது இலகுவாக உங்களை அகங்காரமற்றவர் ஆக்குகிறது. பணிவெனும் விதையானது இயல்பாகவே நீங்கள் மகத்துவத்தின் பலனைப் பெறச் செய்கிறது. எல்லோருடைய இதயபூர்வமான ஆசீர்வாதங்களை இலகுவாகப் பெறுவதற்கான வழிமுறை பணிவேயாகும். பணிவானதோர் ஆத்மா, இலகுவாக எல்லோருடைய இதயத்திலும் அன்பானதோர் இடத்தைப் பிடிப்பார். பணிவானது, இயல்பாகவே உங்களைப் புகழத் தகுதிவாய்ந்தவர் ஆக்குகிறது. நீங்கள் அகங்காரமற்றவர் ஆகுவதன் விசேடமான அடையாளம், உங்களின் பணிவேயாகும். உங்களின் மனோபாவத்தில் பணிவு இருக்கும். உங்களின் திருஷ்டியில் பணிவு இருக்கும். உங்களின் வார்த்தைகளில் பணிவு இருக்கும். அத்துடன் உங்களின் தொடர்புகளிலும் உறவுமுறைகளிலும் பணிவு இருக்கும். ‘அது எனது மனோபாவம் இல்லை, ஆனால் அந்த வார்த்தைகள் வெளிவந்துவிட்டனஎன நீங்கள் சொல்வதாக இருக்கக்கூடாது. இல்லை. உங்களின் மனோபாவத்தில் என்ன இருக்கிறதோ, அதற்கேற்பவே உங்களின் திருஷ்டியும் இருக்கும். உங்களின் திருஷ்டியில் என்ன உள்ளதோ, அதற்கேற்பவே உங்களின் வார்த்தைகள் இருக்கும். உங்களின் வார்த்தைகளில் என்ன உள்ளதோ, அது உங்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் இருக்கும். நான்கு விடயங்களிலும் பணிவு இருக்க வேண்டும். மூன்றில் பணிவு இருந்து, ஒன்றில் பணிவு இல்லாவிட்டால், அகங்காரம் உங்களுக்குள் பிரவேசிப்பதை அனுமதிப்பதற்கான ஒரு வாய்ப்பு அங்கு ஏற்படும். இது ஒரு தேவதையாக இருத்தல் எனப்படுகிறது. எனவே, பாப்தாதா எதை விரும்புகிறார் என்றும் நீங்கள் எதை விரும்புகிறீர்கள் என்றும் புரிந்து கொண்டீர்களா? இருவருடைய விருப்பங்களும் ஒன்றேயாகும். இப்போது, அதற்கான செயல்களும் ஒன்றாக இருக்க வேண்டும்.

எதிர்காலத்திற்காக நீங்கள் என்ன புதிய சேவைத்திட்டங்களைச் செய்யப் போகின்றீர்கள்? நீங்கள் ஏற்கனவே சில திட்டங்களைச் செய்து விட்டீர்கள். மேலும் அதிக திட்டங்களைச் செய்ய வேண்டியுள்ளது. எதிர்காலத்திற்கோ, இந்த வருடத்திற்கோ அல்லது எதிர்காலத்தில் வருகின்ற வருடங்களுக்கோ, எதிர்காலத்திட்டங்களாக நீங்கள் சொற்பொழிவுகள் ஆற்றுவீர்கள், தொடர்புகளையும் உறவுமுறைகளையும் அதிகரிப்பீர்கள், பெரிய மற்றும் சிறிய நிகழ்ச்சிகளை நடத்துவீர்கள் எனச் சொல்கிறீர்கள். நீங்கள் இதைப் பற்றி நினைக்கிறீர்கள். எவ்வாறாயினும், தற்போதைய காலத்தின் வேகத்திற்கேற்ப, சேவையின் வேகமும் அதிகரிக்க வேண்டும். இது எப்படி நடக்கும்? நீங்கள் வார்த்தைகளால் சேவை செய்கிறீர்கள். உறவுமுறைகளாலும் தொடர்புகளாலும் சேவை செய்கிறீர்கள். உங்களின் மனதாலும் நீங்கள் சேவை செய்கிறீர்கள். எவ்வாறாயினும், இப்போது என்ன தேவைப்படுகிறதென்றால், குறுகிய காலத்தில் சேவையில் மகத்தான வெற்றி ஏற்பட வேண்டும். வெற்றி என்றால் பெறுபேறுகள் என்று அர்த்தம். இதை அடைவதற்கான வழிமுறை, வார்த்தைகளுடன்கூடவே, முதலில் உங்களின் ஸ்திதியையும் உங்களின் இடத்தின் அதிர்வலைகளையும் சக்திவாய்ந்தவை ஆக்குங்கள். உதாரணமாக, உங்களின் உயிரற்ற விக்கிரகங்கள் என்ன சேவை செய்கின்றன? அவை தமது அதிர்வலைகளால் பல பக்தர்களைத் திருப்தி அடையச் செய்கின்றன. அவை இப்படிச் செய்கின்றனதானே? இரட்டை வெளிநாட்டவர்கள் தமது ஆலயங்களைப் பார்த்திருக்கிறார்களா? அவை உங்களின் ஆலயங்கள்தானே? அல்லது, அவை பாரதவாசிகளின் ஆலயங்கள் மட்டுமா? அவை உங்களுடையவையும் ஆகும். உங்களின் விக்கிரகங்கள் சேவை செய்கின்றன. எனவே, வார்த்தைகளால் சேவை செய்யுங்கள். ஆனால், வார்த்தைகளுடன்கூடவே, அதிர்வலைகளால் சேவை செய்யும் வழிமுறையையும் உருவாக்கும் வகையில் திட்டங்களைச் செய்யுங்கள். அப்போது அதிர்வலைகளும் வார்த்தைகளும் இரட்டைப் பணியைச் செய்யும். அதிர்வலைகள் நீண்ட காலம் நிலைத்திருக்கும். மக்கள் வார்த்தைகளைக் கேட்கும்போது, பலர் அவற்றை மறந்து விடுவார்கள். ஆனால் அதிர்வலைகளின் தாக்கம் நீண்ட காலம் நிலைத்திருக்கும். உங்களின் வாழ்க்கைகளிலும் ஏதாவது பிழையான அதிர்வலைகள் உங்களின் மனங்களிலும் புத்திகளிலும் நீண்ட காலத்திற்குத் தங்கியிருப்பதை நீங்கள் அனுபவம் செய்திருப்பீர்கள். அந்தத் தவறான அதிர்வலைகள் எவ்வளவு காலத்திற்கு நிலைத்திருக்கும்? அவை உங்களுக்குள்ளேயே தங்கியிருக்கின்றன, அப்படித்தானே? அந்த வேளையில், சொற்களை மறந்து விடுவீர்கள். ஆனால் அவற்றின் தாக்கம் உங்களின் மனங்களிலும் புத்திகளிலும் அதிர்வலைகளின் வடிவில் தங்கியிருக்கும். எவ்வளவு காலத்திற்கு நீங்கள் மற்றவர்களின் அந்த அதிர்வலைகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்து, அதன் அடிப்படையில் அவர்களுடன் பழகுவீர்கள்? இது நடக்கிறதுதானே? அவை பிழையோ அல்லது சரியோ, அதிர்வலைகளை மிகுந்த கஷ்டத்துடனேயே நீக்க வேண்டியுள்ளது.

எவ்வாறாயினும், ஆன்மீக அதிர்வலைகளைப் பரப்புவதற்கு, முதலில் உங்களின் மனங்களிலும் புத்திகளிலும் உள்ள வீணான அதிர்வலைகளை முடியுங்கள். அப்போது மட்டுமே உங்களால் ஆன்மீக அதிர்வலைகளைப் பரப்ப முடியும். யாராவது ஒருவரைப் பற்றி உங்களுக்குள் வீணான அதிர்வலைகள் இருந்தால், உங்களால் ஆன்மீக அதிர்வலைகளைப் பரப்ப முடியாது. வீணானவற்றின் அதிர்வலைகள், ஆன்மீக அதிர்வலைகளின் முன்னால் ஒரு சுவர் போல் ஆகிவிடுகிறது. சூரியன் எவ்வளவு சக்திவாய்ந்தாக இருந்தாலும், அதன் முன்னால் ஒரு சுவர் இருக்கும்போது அல்லது முகில்கள் இருக்கும்போது, சூரிய ஒளி அவற்றினூடாக வர முடியாது. எனவே, கடுமையான அதிர்வலைகள் ஒரு சுவரைப் போன்றவை. இலேசான அதிர்வலைகள் இலேசான முகில்கள் அல்லது கரும் முகில்களைப் போன்றவை. அவை ஆன்மீக அதிர்வலைகளை ஆத்மாக்களிடம் வர அனுமதிப்பதில்லை. மனிதர்கள் ஒரு வலையைக் கடலில் வீசும்போது ஒரே நேரத்தில் பலவற்றை அவர்களால் பிடிக்க முடிகிறது. சில மனிதர்கள் தமது வலைகளை வீசி, ஒரே நேரத்தில் பல மனிதர்களைத் தமக்குச் சொந்தமானவர்கள் ஆக்குகிறார்கள். அதேபோல், அதிர்வலைகளாலும் ஒரே நேரத்தில் பல ஆத்மாக்களைக் கவர முடியும். அதிர்வலைகள் ஒரு சூழலை உருவாக்குகின்றன. எனவே, எதிர்காலத்தில் சேவை செய்யும்போது, உங்களின் மனோபாவத்துடன்கூடவே, உங்களின் அதிர்வலைகளாலும் சேவை செய்யுங்கள். அப்போது வேகம் துரிதமாகிவிடும். அதிர்வலைகளுடனும் சூழலுடனும் சேர்த்து, நீங்கள் வார்த்தைகளாலும் சேவை செய்தால், ஒரே நேரத்தில் உங்களால் பல ஆத்மாக்களுக்கு நன்மையை ஏற்படுத்த முடியும்.

நிகழ்ச்சிகளுக்கு, ஏற்கனவே தயாரிக்கப்பட்ட மேடையை அதிகளவில் பயன்படுத்துங்கள். அந்த வகையான சேவையை அதிகரியுங்கள். தொடர்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பைப் பெறுவதன் மூலம், உங்களால் இந்த வகையான சேவையை விரிவாக்க முடியும். எந்த முறையிலும் ஒத்துழைப்பவர்களின் ஒத்துழைப்பை அதிகரியுங்கள். பின்னர், சேவையில் ஒத்துழைப்பதன் மூலம், அவர்கள் இயல்பாகவே இலகு யோகிகள் ஆகுவார்கள். நேரடியாகவே இலகு யோகிகள் ஆகாத ஆத்மாக்கள் இருக்கிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் அவர்களிடமிருந்து ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்களை ஒத்துழைக்கச் செய்யுங்கள். ஒத்துழைப்பைக் கொடுப்பதனால் அவர்களை முன்னேறச் செய்வதன் மூலம், அவர்களின் ஒத்துழைப்பானது அவர்களை யோகிகள் ஆக்கும். எனவே, ஒத்துழைக்கும் ஆத்மாக்களை சேவை மேடையில் கொண்டு வாருங்கள். அவர்களின் ஒத்துழைப்பைத் தகுதிவாய்ந்த முறையில் பயன்படுத்துங்கள். நீங்கள் என்ன செய்ய வேண்டும் எனப் புரிகிறதா? ஓர் ஆத்மாவேனும் ஒத்துழைப்பைக் கொடுத்தால் அல்லது பெற்றால் அந்த ஆத்மா உடனடி ஆசீர்வாதங்களால் இலகுவாக முன்னேறி, ஏனைய பலருக்குச் சேவை செய்வதற்குக் கருவி ஆகுவார்.

அத்துடன்கூடவே, இந்த வருடத்தில், உங்களுக்கு விசேடமான முயற்சியைப் பயிற்சி செய்து, மேன்மையான சக்தியை விருத்தி செய்வதற்கான மாதங்களை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இதைத் தபஸ்யா, ஒரு ரிட்ரீட் அல்லது ஒரு பத்தி என்று அழைக்கிறீர்கள். ஆகவே, ஒவ்வொரு நாட்டிற்கும் ஏற்ப, பருவகாலத்திற்கேற்ப இதற்கு இரண்டு மாதங்களை ஒதுக்குங்கள். தபஸ்யாவிற்கு இரண்டு மாதங்கள். சிறிய நிகழ்ச்சிகளுக்கு இரண்டு மாதங்கள். பெரிய நிகழ்ச்சிகளுக்கு இரண்டு மாதங்கள். இந்த முறையில் திட்டமிடுங்கள். 12 மாதங்களும் சேவை செய்வதில் நீங்கள் மிக மும்முரமாக ஈடுபட்டு, சுய முன்னேற்றத்திற்கு நேரம் இல்லை என்று இருக்கக்கூடாது. நாட்டிற்கும் அந்த நாட்டின் பருவகாலத்திற்கும் ஏற்ப, உங்களின் சொந்த முன்னேற்றத்திற்கு விசேடமான நேரம் ஒதுக்கப்பட வேண்டும். ஏனென்றால், வெளிச் சேவை செய்வதற்குச் சாத்தியமில்லாத வேளைகளும் இருக்கும். வருடம் முழுவதும் சேவை செய்யாமல் இருப்பதென்பதும் சாத்தியமில்லை. வருடம் முழுவதும் தபஸ்யா செய்வதும் சாத்தியமில்லை. ஆகவே, இரண்டையும் உங்களின் இலட்சியத்தில் வைத்திருங்கள். ஒவ்வொரு நாட்டிற்கும், பாரதமோ அல்லது வெளிநாடுகளோ, உங்களின் இடத்திற்கேற்ப ஒரு நேரத்தை நீங்கள் நிச்சயம் செய்து கொள்ளுங்கள். சேவையும் சுய முன்னேற்றமும் ஒரே நேரத்தில் இடம்பெறக்கூடிய ஒரு நேரத்தை நிச்சயம் செய்யுங்கள்.

இந்த வருடப் பருவகாலத்தின் நிறைவு இதுவாகும். நிறைவு பெறும்வேளையில் ஒரு விழா கொண்டாடப்படுகிறது. இரண்டாவதாக, ஆன்மீக விடயங்களில், ஒரு பலி கொடுக்கப்படுகிறது. எனவே, நீங்கள் எதைப் பலி கொடுப்பீர்கள்? உங்களின் மனங்களாலும் புத்திகளாலும் ஒரு விசேடமான விடயத்தைப் பலி கொடுங்கள். உங்களின் வார்த்தைகளால் அல்ல. அதை வெறுமனே வாசிக்காதீர்கள். ஆனால் உங்களின் மனதாலும் புத்தியாலும் அதைப் பலி கொடுங்கள். அப்போது சுயத்திலும் சேவையிலும் எப்படித் துரித கதியில் முன்னேற்றம் நிகழ்கிறது எனப் பாருங்கள். எனவே, எந்தவோர் ஆத்மாவிற்குமான வீணான அதிர்வலைகளைப் பலி கொடுப்பதே இன்றைய அலையாகும். உங்களால் இவற்றைப் பலி கொடுக்க முடியுமா? அல்லது சிறிதளவு எஞ்சியிருக்குமா? ‘இந்த நபர் இப்படித்தான், எனவே அந்த அதிர்வலைகள் இருக்கும்என நினைக்காதீர்கள். அந்த நபர் எப்படிப்பட்டவராக இருந்தாலும், உங்களின் எதிர்மறையான அதிர்வலைகளை சாதகமான அதிர்வலைகளாக மாற்றுவீர்களாயின், அந்த ஆத்மா நிச்சயமாக எதிர்மறையை சாதகமாக மாற்றுவார். ஏனென்றால், சேவை செய்யும்போது மனதிலும் புத்தியிலும் அந்த வீணான அதிர்வலைகள் இருக்கும் வரைக்கும் சேவையைத் துரித கதியில் செய்ய முடியாது.

உங்களின் ஆன்மீக அதிர்வலைகளாலும் மனோபாவத்தாலும், எங்கேயாவது இருந்தவண்ணம், உங்களால் நீங்கள் விரும்பிய அளவு சக்திவாய்ந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஏனென்றால், ஒருவரின் மனோபாவம் ஒரு ஏவுகணையைப் போன்றது. இது ஓர் ஆன்மீக ஏவுகணையாகும். உங்களின் சக்திவாய்ந்த மனோபாவம், அதிர்வலைகள், சூழலால் உங்களால் நீங்கள் விரும்பிய தொலைவிற்கும் சென்றடைய முடியும். நீங்கள் விரும்பியளவு ஆத்மாக்கள் பலரையும் சென்றடைய முடியும். அவர்கள் உண்மையில் பிழை செய்திருந்தாலும், நீங்கள் அவர்களின் பிழையை உள்ளெடுக்கக்கூடாது. அது பிழை என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அப்படியென்றால், பிழையான ஒன்றை நீங்கள் ஏன் உள்ளே எடுத்துக் கொள்கிறீர்கள்? இது ஸ்ரீமத்தா? அதைப் புரிந்து கொள்வது ஒரு விடயம். எல்லா வழிமுறைகளிலும் ஞானம் நிறைந்தவராக இருங்கள். ஆனால், ஞானம் நிறைந்தவராக இருப்பதுடன்கூடவே, சக்திவாய்ந்தவராகவும் இருங்கள். அதை உங்களுக்குள் கிரகிக்காதீர்கள். ஆனால் அதை முடித்துவிடுங்கள். அதைப் புரிந்து கொள்வது ஒரு விடயம். ஆனால் அதைக் கிரகிப்பது இன்னொரு விடயம். அதை முடித்துவிடுவது வேறொரு விடயம். எனவே, அது பிழை, இதுவே சரி, இவர் இப்படிப்பட்டவர் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். ஆனால் அதை உங்களுக்குள் கிரகிக்காதீர்கள். அதை எப்படி உங்களுக்குள் கிரகிப்பது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆனால் அதை எப்படி முடிப்பது என்பது உங்களுக்குத் தெரியவில்லை. ஞானம் என்றால் புரிந்துணர்வு என்று அர்த்தம். எவ்வாறாயினும், விவேகி என்றால் எப்படி ஒன்றைப் புரிந்து கொள்வது என்பதையும் அறிவார். ஏதாவதொன்றை எப்படி அழிப்பது என்பதையும் அறிவார். அத்துடன் அதை எப்படி மாற்றுவது என்பதையும் அறிவார்.

எனவே, இந்தப் பருவகாலத்தில், இந்த வருடம் முழுவதும், உங்களின் மனங்களையும் புத்திகளையும் முற்றிலும் வீணானவற்றில் இருந்து விடுபடச் செய்யுங்கள். இதுவே துரித கதியை சாதாரண கதிக்கு மாற்றுகிறது. ஆகவே, இந்த வருடம் இதை முடிப்பதற்கான விழாவைக் கொண்டாடுங்கள். அதாவது, இதைப் பலி கொடுங்கள். முற்றிலும் சுத்தமானவர் ஆகுங்கள். அவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், அவர்களைப் புரிந்து கொண்டு, மன்னித்து விடுங்கள். நல்லாசிகள் மற்றும் தூய உணர்வுகள் என்ற உங்களின் மனோபாவத்தால் தூய அதிர்வலைகளை உருவாக்குங்கள். முடிவை நோக்கி நீங்கள் செல்லும்போது, இந்த மனோபாவமும் அந்த அதிர்வலைகளும் உங்களின் சேவையை அதிகரிக்கும். அப்போது உங்களால் மிக விரைவில் ஒன்பது இலட்சம் பேர்களை உருவாக்க முடியும். எதைத் தியாகம் செய்ய வேண்டும் எனப் புரிந்து கொண்டீர்களா? வீணான மனோபாவமும் வீணான அதிர்வலைகளும். அதன்பின்னர் எப்படி நீங்கள் இயல்பான யோகியாகவும் உங்களின் சுபாவத்தில் ஒரு தேவதையாகவும் ஆகுகிறீர்கள் எனப் பாருங்கள். இந்த அனுபவத்திற்கு ஒரு ரிட்ரீட் நடத்த வேண்டும். ஒரு பட்டறை நடத்த வேண்டும் - ‘எப்படி அது நடக்கும்?’ என்றல்ல, ஆனால், ‘இப்படியே அது நடக்கும்என்பதாகும்.

நான் ஓர் அசரீரி ஆத்மாஎன்ற நம்பிக்கையுடனும் போதையுடனும் மீண்டும் மீண்டும் சதா பறந்து கொண்டிருப்பவர்களுக்கும், தமது நிலையான பணிவினூடாக மகத்துவத்தை அடையும் பணிவான ஆத்மாக்களுக்கும் தமது சூட்சுமமான மற்றும் அசரீரி ஸ்திதிகளை இயல்பானதாகவும் தமது சுபாவமாகவும் ஆக்குகின்ற சகல மேன்மையான மற்றும் பணிவான ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவிடமிருந்து மிக, மிக, மிக அன்பும் நினைவும் நமஸ்காரங்களும் உரித்தாகட்டும்.

ஆசீர்வாதம்:

நீங்கள் ஆசையின் எந்தவொரு அறிவும் அற்றவராகி, இந்த மரணித்து வாழும் வாழ்க்கையில் சதா திருப்தியாக இருப்பீர்களாக.


குழந்தைகளான நீங்கள் சதா திருப்தியாக இருப்பதற்கே மரணித்து வாழ்கிறீர்கள். எங்கு திருப்தி இருக்கிறதோ, அங்கு சகல நற்குணங்களும் சகல சக்திகளும் இருக்கும். ஏனென்றால், நீங்கள் படைப்பவரை உங்களுக்குச் சொந்தமாக்கி உள்ளீர்கள். தந்தையைக் கண்டடைந்திருப்பதனால், நீங்கள் எல்லாவற்றையும் கண்டடைந்துள்ளீர்கள். நீங்கள் உங்களின் ஆசைகள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தாலும், அவற்றை விடப் பலமில்லியன் மடங்கு அதிகமாக நீங்கள் பெற்றுள்ளீர்கள். இதனுடன் ஒப்பிடும்போது, ஆசைகள் சூரியனின் முன்னால் உள்ள ஒரு விளக்கைப் போன்றவை. ஏதாவது ஆசைகள் தோன்றுகின்ற கேள்விக்கே இடமில்லை. அதுமட்டுமல்ல, உங்களால் ஆசையைப் போன்றதொன்றைக் கொண்டிருக்கும் கேள்விக்கே இடமில்லை. நீங்கள் சகல பேறுகளாலும் நிறைந்துள்ளீர்கள். இதனாலேயே, நீங்கள் ஆசை என்ற எந்தவொரு அறிவும் அற்றவர்களாகவும் சதா திருப்தி இரத்தினமாகவும் இருக்கிறீர்கள்.

சுலோகம்:

இலகுவான சம்ஸ்காரங்களைக் கொண்டிருப்பவர்களால் எந்தவொரு சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களை வளைத்துக் கொள்ள முடியும்.

 

--ஓம் சாந்தி---

Download PDF

Post a Comment

0 Comments