Header Ads Widget

Header Ads

ILNAGAI TAMIL MURLI 30.12.22

 

30-12-2022  காலைமுரளி  ஓம்சாந்தி  பாப்தாதா  மதுபன்

 



Listen to the Murli audio file



சாராம்சம்:

இனிய குழந்தைகளே, ஒரு தர்மத்தையும், ஓர் இராச்சியத்தையும் ஸ்தாபிப்பதற்குத் தந்தை தொலைதூர தேசத்திலிருந்து வந்துள்ளார். தேவ தர்மம் இருந்தபொழுது, அது தேவர்களின் இராச்சியமாக இருந்தது. அந்நேரத்தில் வேறு சமயமோ அல்லது இராச்சியமோ இருக்கவில்லை.

கேள்வி:

சத்தியயுகத்தில், அனைவரும் புண்ணியாத்மாக்கள்; அங்கே பாவாத்மாக்கள் இல்லை. அதன் அடையாளம் என்ன?

பதில்:

அங்கே, தத்தமது செயல்களுக்கு நோயின் வடிவில் எவரும் வருந்துவதில்லை. ஆத்மாக்கள் தங்கள் பாவத்துக்காகக் கர்ம வேதனையின் வடிவில் தண்டனையை அனுபவம் செய்கிறார்கள் என்பதை இங்கேயுள்ள நோய்கள் போன்றவை நிரூபிக்கின்றன. அது கடந்த காலத்தின் கர்மக் கணக்கு என அழைக்கப்படுகிறது.

கேள்வி:

தொலைநோக்குடைய குழந்தைகள் மாத்திரமே புரிந்துகொள்கின்ற தந்தையின் சமிக்ஞைகள் எவை?

பதில்:

தந்தையின் சமிக்ஞைகள்: குழந்தைகளே, இங்கே அமர்ந்திருக்கும்பொழுது, உங்கள் புத்தியின் யோகத்தை விரைந்தோடச் செய்து, தந்தையை நினைவுசெய்யுங்கள். நீங்கள் அவரை அன்புடன் நினைவு செய்தால், தந்தையின் கழுத்து மாலை ஆகுவீர்கள். உங்கள் அன்புக் கண்ணீர் மாலையின் மணிகள் ஆகுகின்றன.

பாடல்:  இறுதியில் நாங்கள் காத்திருந்த அந்த நாளும் வந்து விட்டது… 

ஓம் சாந்தி. குழந்தைகளாகிய நீங்கள் பாடலைக் கேட்டு, அதன் அர்த்தத்தைப் புரிந்து கொண்டீர்கள். பாரதம் மிகவும் பெரியதாகும். முழு பாரதத்துக்கும் கற்பிக்க முடியாது. இது ஒரு கல்வி ஆகும். கல்லூரிகள் தொடர்ந்தும் திறக்கப்படும். இது எல்லையற்ற தந்தையின் பல்கலைக்கழகம் ஆகும். இது பாண்டவ அரசாங்கம் என அழைக்கப்படுகிறது. ஆட்சியுரிமையே அரசாங்கம் என அழைக்கப்படுகிறது. இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தர்மமும் இராச்சியமும் என்றால் ஆன்மீக-அரசியல் ஆகும். தேவ தர்மமும் ஸ்தாபிக்கப்படுகிறது. ஏனைய சமயங்களில் எதுவும் ஓர் இராச்சியத்தை ஸ்தாபிப்பதில்லை. அவர்கள் ஒரு சமயத்தை மாத்திரமே ஸ்தாபிக்கிறார்கள். பாபா கூறுகிறார்: நான் ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்தையும் இராச்சியத்தையும் ஸ்தாபிக்கிறேன். இதனாலேயே அது ஆன்மீக-அரசியல் என அழைக்கப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் மிகவும் தொலைநோக்குப் புத்தியுடையவர்கள் ஆகவேண்டும். தந்தை தொலைதூர தேசத்திலிருந்து வந்துள்ளார். உண்மையில், ஆத்மாக்கள் அனைவரும் தொலைதூர தேசத்திலிருந்தே வருகிறார்கள். நீங்களும் தொலைதூர தேசத்திலிருந்தே வந்துள்ளீர்கள். ஒரு புதிய சமயத்தை ஸ்தாபிப்பதற்காக வருபவர்களின் ஆத்மாக்கள் தொலைதூரத்திலிருந்தே வருகிறார்கள். அவர்கள் ஒரு சமயத்தின் ஸ்தாபகர்கள், ஆனால் அந்த ஒரேயொருவர் ஒரு தர்மத்தையும் இராச்சியத்தையும் ஸ்தாபிப்பவர் என அழைக்கப்படுகிறார். பாரதத்தில் ஆட்சியுரிமை இருந்தது. சக்கரவர்த்தியும் சக்கர்வர்த்தினியும் இருந்தார்கள்: சக்கரவர்த்தி ஸ்ரீ நாராயணனும், சக்கரவர்த்தினி ஸ்ரீ இலக்ஷ்மியும். நீங்கள் இப்பொழுது ஸ்ரீமத்தைப் பின்பற்றுகிறீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் கூறுவீர்கள். பாரத மக்களாகிய நாங்கள் அனைவரும் பாபாவைக் கூவியழைத்;தோம்: வந்து, பழைய உலகை மாற்றி, புதிய சந்தோஷ உலகைப் படையுங்கள். ஒரு பழைய வீட்டுக்கும், புதிய வீட்டுக்கும் இடையில் வேறுபாடு உள்ளது. நீங்கள் உங்கள் புத்தியில் உங்கள் புதிய வீட்டை மாத்திரமே வைத்திருக்கிறீர்கள். இந்நாட்களில், அவர்கள் மிகவும் நாகரிகமான வீடுகளைக் கட்டுகிறார்கள். அவர்கள் தொடர்ந்தும் சிந்திக்கிறார்கள்: நாங்கள் அத்தகைய வீடுகளைக் கட்ட வேண்டும். நாங்கள் எங்கள் தர்மத்தையும், இராச்சியத்தையும் ஸ்தாபிக்கிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். சுவர்க்கத்தில், நாங்கள் வைரங்களும் இரத்தினங்களும் பதிக்கப்பட்ட மாளிகைகளைக் கட்டுவோம். கிறிஸ்து, கிறிஸ்தவ சமயத்தை ஸ்தாபிப்பதற்கு வந்தார் என்பதை ஏனைய சமயத்தவர்கள் புரிந்துகொள்வதில்லை. அந்நேரத்தில் அவர்கள் இதனைப் புரிந்துகொள்ளவில்லை. அது வளர்ந்த பின்பே, அவர்கள் அதனைக் கிறிஸ்தவ சமயம் என அழைக்கிறார்கள். (அந்நேரத்தில்) இஸ்லாமியர்களினதோ அல்லது வேறெந்தச் சமயங்களினதோ பெயரோ அல்லது சுவடோ கிடையாது. உங்கள் அடையாளங்கள் ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரை தொடர்கின்றன. இலக்ஷ்மி நாராயணனின் உருவங்கள் உள்ளன. சத்தியயுகத்தில் அது அவர்களின் இராச்சியமாக இருந்தது என்பதை நீங்களும் அறிவீர்கள். அது கடந்த காலத்தில் யாருடைய இராச்சியமாக இருந்தது அல்லது எதிர்காலத்தில் அது யாருடைய இராச்சியமாக இருக்கும் என்னும் அறிவு அங்கே உங்களுக்கு இருக்க மாட்டாது. அந்நேரத்தில் நீங்கள் நிகழ்காலத்தை மாத்திரம் அறிவீர்கள். நீங்கள் இப்பொழுது கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் அறிவீர்கள். எல்லாவற்றுக்கும் முதலில், எங்கள் தர்மம் இருந்தது, பின்னர் ஏனைய சமயங்கள் வந்தன. சங்கமயுகத்தில் மாத்திரமே தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகிறார். இப்பொழுது நீங்கள் திரிகாலதிரிசிகள் ஆகிவிட்டீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் திரிகாலதரிசியாக இருக்க மாட்டீர்கள். அங்கே, நீங்கள் தொடர்ந்தும் இராச்சியத்தை ஆட்சி செய்வீர்கள். அங்கே வேறெந்தச் சமயங்களினதும் பெயரோ அல்லது சுவடோ கிடையாது. நீங்கள் தொடர்ந்தும் மகிழ்ச்சியுடன் இராச்சியத்தை ஆட்சிசெய்வீர்கள். நீங்கள் இப்பொழுது முழுச் சக்கரத்தையும் அறிவீர்கள். உண்மையில் தேவ தர்மம் இருந்தது என்பதை மக்கள் அறிவார்கள், ஆனால் அது எவ்வாறு ஸ்தாபிக்கப்பட்டது அல்லது அது எவ்வளவு காலத்துக்கு நீடித்தது என்பதை அவர்கள் அறியார்கள். நீங்கள் இதனை அறிவீர்கள். நீங்கள் சத்தியயுகத்தில் இத்தனை பிறவிகளுக்கு ஆட்சி செய்தீர்கள், பின்னர் திரேதாயுகத்தில் இத்தனை பிறவிகளை எடுத்தீர்கள். அவர்களும் இதனைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும். உண்மையில் எல்லையற்ற தந்தையே எங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். இது கிருஷ்ணரின் ஆத்மாவின் பல பிறவிகளின் இறுதிப் பிறவி என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் வந்து, அவரினுள் பிரவேசித்துள்ளேன். அவர் நிச்சயமாக பிரம்மா எனப் பெயரிடப்பட வேண்டும். பிரம்மா விஷ்ணு ஆகுகிறார், விஷ்ணு பிரம்மா ஆகுகிறார். திரிமூர்த்தியின் இந்த ஞானம் மிகவும் இலகுவானதாகும். இவர் அசரீரியான தந்தை சிவனும், இது நீங்கள் அவரிடமிருந்து பெறுகின்ற ஆஸ்தியும் ஆகும். நீங்கள் எவ்வாறு அசரீரியானவரிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெற்றீர்கள்? பிரஜாபிதா பிரம்மாவினூடாக, நீங்கள் பிராமணர்களிலிருந்து தேவர்களாக மாறுகிறீர்கள். 84 பிறவிகளின் பின்னர், அதே தேவர்கள் பிராமணர்கள் ஆகுவார்கள். நீங்கள் உங்கள் புத்தியில் இச்சக்கரத்தை வைத்திருக்க வேண்டும். பிராமணர்களாகிய நாங்கள் பிரம்மாவின் குழந்தைகளும், உருத்திரரின் (சிவன்) குழந்தைகளும் ஆவோம். ஆத்மாக்களாகிய நாங்கள் அசரீரியான குழந்தைகள் ஆவோம். நாங்கள் தந்தையை நினைவு செய்கிறோம். இப்படங்களைப் பயன்படுத்தி விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானதாகும். நாங்கள் தபஸ்யா செய்கிறோம், பின்னர் சத்தியயுகத்துக்குச் செல்வோம். நாங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுகிறோம் என்பது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். பின்னர் நாங்கள் தேவ தர்மத்தின் சக்கரவர்த்திகளாகி, இராச்சியத்தை ஆட்சிசெய்வோம். யோகத்தினூடாக மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் இப்பொழுது தொடர்ந்தும் பாவம்செய்தால், என்னவாக ஆகுவீர்கள்? மக்கள் யாத்திரை செல்லும்பொழுது, பாவம் செய்வதில்லை; அவர்கள் நிச்சயமாகத் தூய்மையாக இருக்கிறார்கள். தாங்கள் தேவர்களிடம் செல்வதாக அவர்கள் நம்புகிறார்கள். ஓர் ஆலயத்துக்குச் செல்வதற்கு முன்னர் எப்பொழுதும் மக்கள் முதலில் நீராடுகிறார்கள். அவர்கள் ஏன் முதலில் நீராடுகிறார்கள்? முதலில், அவர்கள் விகாரத்தில் ஈடுபடுகிறார்கள், இரண்டாவதாக, அவர்கள் மலசலகூடத்துக்கும் சென்றிருப்பார்கள். ஆகவே, அவர்கள் சுத்தமாகி, பின்னர் தேவர்களின் ஒரு கணப் பார்வையைப் பெறுவதற்குச் செல்கிறார்கள். அவர்கள் யாத்திரை செல்லும்பொழுது, தூய்மையற்றவர்கள் ஆகுவதில்லை. நான்கு இடங்களுக்கும் யாத்திரை செல்லும்பொழுது, அவர்கள் தூய்மையாக இருக்கிறார்கள். ஆகவே, தூய்மையே பிரதான விடயமாகும். தேவர்களும் தூய்மையற்றவர்களாக இருந்திருப்பின், என்ன வேறுபாடு இருக்க முடியும்? தேவர்கள் தூய்மையானவர்கள், நாங்கள் தூய்மையற்றவர்கள். பிரம்மாவினூடாக, பாபா எங்களைத் தத்தெடுத்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். உண்மையில், ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் எனது குழந்தைகள், ஆனால் நான் எவ்வாறு உங்களுக்குக் கற்பிப்பேன்? நான் எவ்வாறு உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பேன்? நான் எவ்வாறு இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குவேன்? பாபா புதிய உலகைப் படைக்கிறார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆகவே, கடவுள் நிச்சயமாகக் குழந்தைகளை அதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்கி, அவர்களுக்கு ஓர் ஆஸ்தியைக் கொடுப்பார். அவர் எப்பொழுது உங்களைத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குவார்? சங்கமயுகத்தில் ஆகும். தந்தை கூறுகிறார்: நான் சங்கமயுகத்தில் வருகிறேன். இடையிலுள்ள இந்தப் பிராமண தர்மம் வேறுபட்டதொன்றாகும். கலியுகத்தில், சூத்திர சமயம் உள்ளது. சத்தியயுகத்தில், தேவ தர்மம் உள்ளது. இது பிராமண தர்மம் ஆகும். நீங்கள் பிராமண தர்மத்துக்கு உரியவர்கள். இச்சங்கமயுகம் மிகவும் குறுகியது. நீங்கள் இப்பொழுது முழுச் சக்கரத்தையும் அறிவீர்கள். நீங்கள் தொலைநோக்குடையவர்கள் ஆகியுள்ளீர்கள். இது பாபாவின் இரதம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இது நந்திகன் (எருது) எனவும் அழைக்கப்படுகிறது. அவர் நாள்முழுவதும் எருதை ஓட்ட மாட்டார். ஓர் ஆத்மா நாள் முழுவதும் ஒரு சரீரத்தில் அமர்ந்திருக்கிறார். அவர் பிரிந்து சென்றிருப்பின், சரீரம் எஞ்சியிருக்க மாட்டாது. பாபாவினால், தான் விரும்பியவாறு வந்து செல்ல முடியும், ஏனெனில் அந்த ஆத்மா அவருக்குரியதாகும். அவர்; கூறுகிறார்: நான் சதா இவருக்குள் இருப்பதில்லை. ஒரு விநாடியில் என்னால் வந்து செல்ல முடியும். நான் ஒரு ரொக்கட்டைப் போன்று வேகமாக இருப்பதைப் போன்று வேறு எவராலும் இருக்க முடியாது. இந்நாட்களில், அவர்கள் பல்வேறு ரொக்கட்டுக்களையும், ஆகாய விமானங்கள் போன்றவற்றையும் கண்டுபிடித்துள்ளார்கள். எவ்வாறாயினும், ஆத்மாவே அனைத்திலும் வேகமாகச் செல்லக்கூடியவர். தந்தையை நினைவு செய்யுங்கள், அவர் வருவார். ஓர் ஆத்மா தனது கர்மக் கணக்குகளுக்கேற்ப, இலண்டனில் பிறக்க வேண்டியிருப்பின், அவர் ஒரு விநாடியில் அங்கே சென்று ஒரு கருப்பையில் பிரவேசிக்கிறார். ஆகவே, ஆத்மாவே அதிவேகமாக ஓடுகிறார். இப்பொழுது ஆத்மாக்களினால் தங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாதுள்ளது, ஏனெனில் அவர்களுக்கு இப்பொழுது அந்தச் சக்தி கிடையாது. அவர்கள் பலவீனமானவர்கள் ஆகியுள்ளார்கள். அவர்களால் பறக்க முடியாதுள்ளது. ஆத்மாவில் பெரும் பாவச்சுமை உள்ளது. சரீரத்தின் மீது சுமை இருந்திருப்பின், அது தீயின் மூலம் தூய்மையாக்கப்படும், ஆனால் ஆத்மாவிலேயே கலப்படம் கலக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஆத்மாவே தன்னுடன் தனது கர்மக் கணக்குகளைச் சுமந்து செல்கிறார். இதனாலேயே அது அவருடைய கடந்த காலத்தின் வேதனை எனக் கூறப்படுகிறது. ஆத்மா தன்னுடன் தனது சம்ஸ்காரங்களைச் சுமந்து செல்கிறார். சிலர் பிறப்பிலிருந்து முடவர்களாக இருக்கிறார்கள், ஆகவே அவர்கள் தங்களுடைய கடந்த காலத்தில் அத்தகைய செயல்களைச் செய்திருக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. வேதனையினூடாகத் தீர்க்கப்பட வேண்டிய பல பிறவிகளின் செயல்கள் உள்ளன. சத்தியயுகத்தில் புண்ணியாத்மாக்கள் மாத்திரமே உள்ளார்கள். அங்கே இவ்விடயங்கள் இருப்பதில்லை. இங்கே, அனைவரும் பாவாத்மாக்கள் ஆவார்கள். சந்நியாசிகளுக்குப் பாரிசவாதம் ஏற்பட்டால், அது அவர்களுடைய கர்மவேதனை எனக் கூறப்படும். , ‘ஸ்ரீ ஸ்ரீ 108 ஜெகத்குருபோன்ற மகாத்மாவுக்கும் ஏன் அந்த நோய் உள்ளது? அது அவருடைய கர்மவேதனை எனக் கூறப்படும். இது தேவர்களையிட்டுக் கூறப்பட மாட்டாது. ஒரு குரு மரணிக்கும்பொழுது, அவருடைய சிஷ்யர்கள் நிச்சயமாகத் துன்பத்தை உணர்வார்கள். குழந்தைகள் தங்களுடைய தந்தையின் மீது அதிகளவு அன்பைக் கொண்டிருக்கும்பொழுது, அவர்கள் அழுகிறார்கள். ஒரு மனைவி தனது கணவனை அதிகளவு நேசி;த்து, அவன் மரணிக்கும்பொழுது, அவள் அழுது புலம்புகிறாள். கணவன் அவளை வேதனைப்படச் செய்திருப்பின், அவள் அழுது புலம்ப மாட்டாள். பற்று இல்லாதிருப்பின், அதுவே நியதி என்பதை அவள் புரிந்துகொள்வாள். நீங்கள் தந்தையை அதிகளவு நேசிக்கிறீர்கள். இறுதியில் பாபா சென்று விடுவார், நீங்கள் கூறுவீர்கள்: ! எங்களுக்கு அதிகளவு சந்தோஷத்தைக் கொடுத்த பாபா சென்று விட்டார். இறுதியில், பலர் பின்தங்கிவிடுவார்கள். நீங்கள் பாபாவின் மீது அதிகளவு அன்பைக் கொண்டிருக்கிறீர்கள். இறுதியில், பாபா சென்று விடுவார், “எங்களுக்கு இராச்சியத்தைக் கொடுத்த பின்னர் பாபா சென்று விட்டார்என நீங்கள் கூறுவீர்கள். நீங்கள் அன்புக் கண்ணீரைச் சிந்துவீர்கள், ஆனால் துன்பத்தினால் அல்ல. இங்கேயும், ஒரு நீண்ட காலத்துக்குப் பின்னர் குழந்தைகள் வந்து தந்தையைச் சந்திக்கிறார்கள், ஆகவே அவர்கள் அன்புக்கண்ணீரைச் சிந்துகிறார்கள். அந்த அன்புக்கண்ணீர் பின்னர் மாலையின் மணிகள் ஆகும். பாபாவின் கழுத்து மாலையாக ஆகுவதே எங்கள் முயற்சி ஆகும். இதனாலேயே நாங்கள் தொடர்ந்தும் பாபாவை நினைவு செய்கிறோம். பாபாவின் கட்டளை: தொடர்ந்தும் நினைவு யாத்திரையில் நிலைத்திருங்கள். ஓர் ஓட்டப் பந்தயம் இருக்கும்பொழுது, அவர்களுக்கு ஓர் இலக்கை நோக்கி ஓடிச் சென்று. அதனைத் தொட்டுவிட்டு, திரும்பி வருமாறு கூறப்படுகிறது. இது வரிசைக்கிரமம் ஆகும். இங்கேயும், பாபாவை அதிகளவு நினைவுசெய்து, முன்னணியில் ஓடுபவர்கள் முதலில் சுவர்க்கத்துக்குச் சென்று, இராச்சியத்தை ஆட்சிசெய்வார்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் உங்கள் புத்தியின் யோகத்தின் மூலம் ஓட்டப் பந்தயத்தில் ஓடுகிறீர்கள். நீங்கள் இங்கமர்ந்திருந்து, அங்கே வேகமாக ஓடிச் செல்கிறீர்கள். நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள் ஆவோம். பாபா எங்களுக்கு ஒரு சமிக்ஞையைக் கொடுக்கிறார்: என்னை நினைவு செய்யுங்கள். தொலைநோக்குடையவர்கள் ஆகுங்கள். நீங்கள் தொலைதூர தேசத்திலிருந்து இங்கே வந்துள்ளீர்கள். இப்பொழுது இந்த அந்நிய இராச்சியம் அழிக்கப்படவுள்ளது. இந்நேரத்தில், நீங்கள் இராவணனின் தேசத்தில் இருக்கிறீர்கள். இது இராவணனின் தேசம் ஆகும். பின்னர் நீங்கள் எல்லையற்ற தந்தையின் தேசத்துக்குச் செல்வீர்கள். அங்கே, இராம இராச்சியம் உள்ளது. தந்தை இராம இராச்சியத்தை ஸ்தாபிக்கிறார். பின்னர், பாதி வழியில், நாடகத்துக்கேற்ப, இராவண இராச்சியம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இவ்விடயங்கள் அனைத்தையும் அறிவீர்கள். அதனாலேயே, நீங்கள் அவர்களிடம் வினாக்களை வினவும்பொழுது, எவராலும் அவற்றுக்குப் பதிலளிக்க இயலாதுள்ளது. தந்தையாகிய கடவுளே ஆத்மாக்களின் தந்தை என அவர்கள் கூறினால், அப்பொழுது, நீங்கள் அவரிடமிருந்து பெற வேண்டிய ஆஸ்தி என்ன? இது தூய்மையற்ற உலகாகும். தந்தை தூய்மையற்ற உலகைப் படைக்கவில்லை. எவருக்கேனும் விளங்கப்படுத்துவது மிகவும் இலகுவானதாகும். நீங்கள் படங்களைக் காட்ட வேண்டும். திரிமூர்த்தியின் படம் மிகவும் சிறந்ததாகும். திரிமூர்த்தி சிவனின் அத்தகைய மிகச்சரியான படம் வேறெங்கும் கிடையாது. அவர்கள் பிரம்மாவைத் தாடியுடன் காண்பிக்கிறார்கள். விஷ்ணுவையோ அல்லது சங்கரரையோ தாடியுடன் அவர்கள் காண்பிப்பதில்லை, ஏனெனில் அவர்களைத் தேவர்களாக அவர்கள் கருதுகிறார்கள். பிரம்மா மக்களின் தந்தையான, பிரஜாபிதா ஆவார். சிலர் அவரை ஒரு விதமாகக் காண்பிக்கிறார்கள், ஏனையோர் அவரை இன்னொரு விதமாகக் காண்பிக்கிறார்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இவ்விடயங்கள் அனைத்தும் உள்ளன. இவ்விடயங்கள் வேறு எவருடைய புத்தியிலும் பிரவேசிப்பதில்லை. அது அவர்களுக்குப் பித்துப் பிடித்ததைப் போன்று உள்ளது. அவர்கள் ஏன் இராவணனின் கொடும்பாவியை எரிக்கிறார்கள்? அவர்கள் எதனையும் அறியார்கள். இராவணன் யார்? அவன் எப்பொழுது வந்தான்? தாங்கள் அவனுடைய கொடும்பாவியை அநாதியாக எரித்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள். அவன் அரைக்கல்பத்துக்கு எதிரியாக உள்ளான் என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உலகில் பல்வேறு கட்டளைகள் உள்ளன. எதனையேனும் விளங்கப்படுத்தியவர்களின் பெயர்களையெல்லாம் அவர்கள் வைத்துள்ளார்கள். சிலர் மகாவீரர் என்னும் பெயரை வைத்தார்கள். அவர்கள் அனுமனை மகாவீரராகக் காண்பித்துள்ளார்கள். அவர்கள் ஏன் மகாவீரர் ஆதிதேவர் என்னும் பெயரை வைத்துள்ளார்கள்? ஆலயத்தில், மகாவீரரும், மகாவீரினியும் (பெண் மகாவீரர்), குழந்தைகளாகிய நீங்களும் அமர்ந்திருக்கிறீர்கள். அவர்களே மாயையை வென்றவர்கள், இதனாலேயே அவர்கள் மகாவீரர்கள் என அழைக்கப்படுகிறார்கள். சந்தர்ப்ப வசத்தினால், நீங்களும் உங்களுடைய சொந்த இடத்துக்கு வந்துள்ளீர்கள். அது உங்களுடைய ஞாபகார்த்தம் ஆகும். அவர் உயிரற்றவர் ஆவார். எவ்வாறாயினும், அவர்கள் உயிருள்ளவரிடம் வந்து, புரிந்துகொள்ளும்வரை, நீங்கள் நிச்சயமாகப் படங்களை மாட்டி வைக்க வேண்டும். உங்களால் தில்வாலா ஆலயத்தின் இரகசியங்களை மிகவும் நன்றாக விளங்கப்படுத்த முடியும். நீங்கள் இதனைக் கற்றுள்ளீர்கள், அதனாலேயே பக்தி மார்க்கத்தில் இந்த ஞாபகார்த்தம் உருவாக்கப்பட்டுள்ளது. உங்கள் இராச்சியத்தை ஸ்தாபிப்பதற்கு அதிகளவு முயற்சி தேவையாகும். நீங்களும் அவமதிப்புக்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும், ஏனெனில் நீங்கள் காலாங்கிதார் (கிருஷ்ணரின் அவதூறு செய்யப்பட்ட, அவதூறைப் பெற்ற ரூபம்) ஆகவேண்டும். நீங்கள் அனைவரும் இப்பொழுது அவமதிக்கப்படுகிறீர்கள். நான் அதிகளவுக்கு அவதூறு செய்யப்பட்டேன். அவர்கள் பிரஜாபிதா பிரம்மாவையும் அவமதிக்கிறார்கள். நண்பர்கள், உறவினர்கள் அனைவரும் குழப்பம் அடைகிறார்கள். விஷ்ணுவையோ அல்லது சங்கரரையோ அவர்கள் அவமதிக்க மாட்டார்கள். தந்தை கூறுகிறார்: நான் அவமதிக்கப்படுகிறேன். நீங்கள் எனது குழந்தைகள் ஆகியுள்ளீர்கள், ஆகவே நீங்களும் அதன் பங்கைப் பெற வேண்டும். இல்லாவிட்டால், இவர் தனது சொந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அவமதிப்பு என்னும் கேள்விக்கே இடமில்லை. நானே அதிகளவுக்கு அவமதிக்கப்பட்டவன் ஆவேன். மக்கள் தங்களுடைய தர்மத்தையும், கர்மத்தையும் மறந்து விட்டார்கள். பாபா அதிகளவுக்கு விளங்கப்படுத்துகிறார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. தொலைநோக்குடையவர்கள் ஆகுங்கள். நினைவு யாத்திரையின் மூலம் உங்கள் பாவங்களை அழித்துக் கொள்ளுங்கள். யாத்திரையில் இருக்கும்பொழுது, ஒருபொழுதும் பாவச்செயல்களைச் செய்யாதீர்கள்.
  2. ஒரு மகாவீரர் ஆகி, மாயையை வெற்றிகொள்ளுங்கள். அவதூறையிட்டு அச்சம் அடையாதீர்கள். காலாங்கிதார் ஆகுங்கள்.

ஆசீர்வாதம்:

சகல சக்திகளையும் அனுபவம் செய்கின்ற வேளையில், வெற்றியின் உத்தரவாதத்தைக் கொண்டிருந்து, ஒவ்வொரு கணமும் வெற்றியீட்டுவீர்களாக.
சகல சக்திகளையும் கொண்டிருக்கின்ற, நிறைந்த நம்பிக்கையுள்ள புத்;தியுடைய குழந்தைகளுக்கு வெற்றியின் உத்தரவாதம் உள்ளது. மக்களுக்கு செல்வத்தின் சக்தி, விவேகத்தின் சக்தி அல்லது உறவுமுறையினதும் தொடர்பினதும் சக்தி இருக்கும் போது, அவர்கள் எதுவுமே பெரிய விடயம் அல்ல என்ற நம்பிக்கையை கொண்டிருக்கின்றார்கள். உங்களிடம் சகல சக்திகளும் இருக்கின்றன. நீங்கள் சதா மகத்தான, அழியாத செல்வத்தை உங்களிடம் வைத்திருக்கிறீர்கள். ஆகையால் உங்களிடம் செல்வத்தின் சக்தியும் அத்துடன் விவேகத்தினதும்; ஸ்தானத்தினதும் சக்திகள் உள்ளன. நீங்கள் இவற்றை உங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளவே வேண்டும். இவற்றை உங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்ளும் போது, நீங்கள் சரியான நேரத்தில் வெற்றியீட்டுவீர்கள்.

சுலோகம்:

வீணான எதனையும் பார்க்கின்ற, கேட்கின்ற சுமையை முடிப்பதே ஒளியாகவும் இலேசாகவும் (டபிள் லைட்) ஆகுவதாகும்.

 

---ஓம் சாந்தி---

Download PDF

 

Post a Comment

0 Comments