31-12-2022 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் சிவஜெயந்தி விழாவைப் பெரும் கோலாகலமாகக் கொண்டாட வேண்டும். இது உங்களுக்குரிய
மகா சந்தோஷமான தினமாகும். தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுங்கள்.
கேள்வி:
எக்குழந்தைகள் தங்களுக்குத்
தாங்களே தீங்கு விளைவிக்கின்றனர்? எப்பொழுது அவர்கள் ஓர் இழப்பை ஏற்படுத்துகின்றனர்?
பதில்:
முன்னேறிச் செல்லும்போது
கற்பதை நிறுத்துகின்ற
குழந்தைகள் தங்களுக்குத்
தாங்களே பெரும் தீங்கு விளைவிக்கின்றனர். பாபா தினமும் பல வைரங்களையும்,
இரத்தினங்களையும் கொடுத்து, பல ஆழமான கருத்துக்களை
உங்களுக்குக் கூறுகின்றார்.
நீங்கள் ஒழுங்காகக் கற்காவிட்டால், இழப்பையே ஏற்படுத்துவீர்கள். நீங்கள் சித்தியடையாது,
உங்களின் மேன்மையான சுவர்க்க இராச்சியத்தையும் இழந்து, உங்கள் அந்தஸ்தையும் அழித்துவிடுவீர்கள்.
பாடல்:ஓ இரவுப் பயணியே, களைப்படையாதீர்!
விடியலுக்கான இலக்கு வெகு தொலைவில் இல்லை.
ஓம் சாந்தி:
இந்த இரவும்,
பகலும் மனிதர்களுக்கானதாகும். சிவபாபாவிற்கு இரவும், பகலும் கிடையாது. அது குழந்தைகளாகிய உங்களுக்கேயாகும், அது மனிதர்களுக்கேயாகும். பிரம்மாவின் இரவும்,
பிரம்மாவின் பகலும் நினைவுகூரப்படுகின்றன. ‘சிவனின் இரவும், சிவனின் பகலும்’ என்று கூறப்படுவதில்லை. பிரம்மாவைப் பற்றி மாத்திரம் அவ்வாறு கூறப்படுவதில்லை. இது ஒருவரின் இரவு மாத்திரமல்ல.
பிராமணர்களின் இரவு என்றே நினைவுகூரப்படுகிறது. இப்பொழுது இது பக்தி மார்க்கத்தின் இறுதிக்கட்டம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
அத்துடன் காரிருளினதும் இறுதிக்கட்டம் ஆகும்.
தந்தை கூறுகிறார்:
பிரம்மாவின் இரவு வேளையிலேயே நான் வருகின்றேன். இப்பொழுது நீங்கள் காலை வேளையை நோக்கி முன்னேறிச் செல்ல ஆரம்பித்துள்ளீர்கள். நீங்கள் வந்து, பிரம்மாவின் குழந்தைகளாகும்போது, பிராமணர்கள் என அழைக்கப்படுகின்றீர்கள். பிராமணர்களின் இரவு முடிவுக்கு வந்த பின்னர்,
தேவர்களின் பகல் ஆரம்பமாகின்றது. பிராமணர்கள் பின்னர் தேவர்களாகின்றனர். இந்த யக்ஞத்தின் மூலமாக மிகப்பெரிய மாற்றம் இடம்பெறுகிறது. பழைய உலகம் மாறி, புதியதாகின்றது. கலியுகம் பழைய யுகமாகும், சத்திய யுகம் புதிய யுகமாகும். பின்னர் திரேதாயுகம் 25மூ பழையதும், துவாபர யுகம் 50மூ பழையதும் ஆகும்.
யுகத்தின் பெயரும் மாறுகிறது. கலியுகத்தைப் பழைய உலகம் என்றே அனைவரும் அழைக்கின்றனர். தந்தை ஈஸ்வரன் (கடவுள்)
என அழைக்கப்படுகின்றார். அவர் இறை இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார். தந்தை கூறுகிறார்:
நான் ஒவ்வொரு கல்பத்திலும் சங்கம யுகத்திலேயே வருகின்றேன்.
அதற்குக் காலம் எடுக்கின்றது. உண்மையில்,
இது ஒரு விநாடிக்கான விடயமாகும்.
எனினும், அரைக் கல்பத்தின் பாவங்கள் உங்கள் தலைமீது உள்ளதால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படுவதற்குக் காலமெடுக்கின்றது. தந்தை சுவர்க்கத்தைப் படைக்கின்றார், எனவே குழந்தைகளாகிய நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள்.
எவ்வாறாயினும், உங்கள் தலைமீதுள்ள பாவச் சுமையை அகற்றுவதற்குக் காலமெடுக்கின்றது. நீங்கள் யோகம் செய்யவேண்டும். நீங்கள் நிச்சயமாக உங்களை ஆத்மாக்களாகக் கருதவேண்டும். முன்னர் நீங்கள் “பாபா”
என்று கூறியபோது,
உங்கள் லௌகீகத் தந்தையையே நினைவு செய்தீர்கள். இப்பொழுது,
நீங்கள் “பாபா”
என்று கூறும்போது உங்கள் புத்தி மேல்நோக்கிச் செல்கிறது.
ஆத்மாக்களாகிய நாங்கள் ஆன்மீகத் தந்தையின் குழந்தைகள் என்பது உலகிலுள்ள வேறெவருடைய புத்தியிலும் இருக்கமாட்டாது. எங்களது தந்தை,
ஆசிரியர், குரு மூவரும் ஆன்மீகமானவர்கள். நாங்கள் அவரை நினைவு செய்யவேண்டும். அது ஒரு பழைய சரீரமாகும்.
எனவே, நீங்கள் ஏன் அதை அலங்கரிக்க வேண்டும்?
எவ்வாறாயினும், நீங்கள் இப்பொழுது எளிமை நிலையில் இருக்கின்றீர்கள் என்பதை உள்ளார்த்தமாகப் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் புதிய உலகிலுள்ள உங்களின் மாமியார் வீட்டிற்குச் செல்லவிருக்கின்றீர்கள். இறுதியில் எதுவுமே எஞ்சியிருக்காது. பின்னர் நாங்கள் உலகின் அதிபதிகள் ஆகுவோம். இந்நேரத்தில் முழு உலகமும் நாடுகடத்தப்பட்டதைப் போன்றுள்ளது.
அது எதை வழங்கவேண்டும்? எதையுமேயில்லை! உங்கள் மாமியார் வீட்டில், வைரங்களும்,
இரத்தினங்களும் பதிக்கப்பட்ட மாளிகைகள் இருந்தன.
அங்கு ஏராளமான செல்வச்செழிப்பு இருந்தது.
இப்பொழுது நீங்கள் உங்களது பெற்றோர் வீட்டிலிருந்து, உங்களது புகுந்த வீட்டிற்குச் செல்லவேண்டும். நீங்கள் இப்பொழுது யாரிடம் வந்துள்ளீர்கள்? நீங்கள் பாப்தாதாவிடம் வந்துள்ளதாகக் கூறுவீர்கள். தந்தை தாதாவில் பிரவேசித்துள்ளார். தாதா இவ்விடத்து வாசியாவார். எனவே,
பாப், தாதா இருவரும் இணைந்துள்ளனர். பரமதந்தை, பரமாத்மாவே தூய்மையாக்குபவர் ஆவார்.
அவர் ஞானத்தைக் கூறியபோது, அவரது ஆத்மா கிருஷ்ணரில் இருந்திருந்தால், கிருஷ்ணரும் பாப்தாதா என்றே அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
எவ்வாறாயினும், கிருஷ்ணரை பாப்தாதா என அழைப்பது சரியாகத் தோன்றவில்லை. பிரம்மா மாத்திரமே பிரஜாபிதா என நினைவுகூரப்படுகிறார். இது
5000 வருடங்களுக்கான சக்கரம் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். குழந்தைகளாகிய நீங்கள் கண்காட்சிகளை நடாத்தும்போது, அதில் இதையும் எழுதுங்கள்:
நாங்கள் 5000 வருடங்களுக்கு முன்னர் இக்கண்காட்சியைக் காண்பித்ததுடன், எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்களின் சுவர்க்க ஆஸ்தியை எவ்வாறு கோருவதென்றும் உங்களுக்கு விளங்கப்படுத்தினோம். நாங்கள் சரியாக 5000 வருடங்களுக்கு முன்னர் செய்தது போன்றே மீண்டும் ஒரு தடவை திரிமூர்த்தி சிவஜெயந்தியைக் கொண்டாடுகின்றோம். நீங்கள் நிச்சயமாக இவ்வார்த்தைகளை எழுதவேண்டும்.
பாபா இவ்வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார், நீங்கள் அவற்றைப் பின்பற்ற வேண்டும். நீங்கள் சிவஜெயந்திக்கான ஆயத்தங்களைச் செய்யவேண்டும். மக்கள் புதிய விடயங்களைப் பார்க்கும்போது ஆச்சரியப்படுவார்கள். நீங்கள் பெரும் கோலாகலத்தைக் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் திரிமூர்த்தி சிவஜெயந்தியைக் கொண்டாடுகின்றோம். நாங்கள் இதற்காக ஒரு விடுமுறை எடுக்கப்போகின்றோம். சிவஜெயந்திக்கான விடுமுறை உத்தியோகபூர்வமானது. சிலர் விடுமுறை எடுத்துக்கொள்கின்றனர், ஏனையோர் எடுப்பதில்லை. கிறிஸ்தவர்கள் நத்தார் தினத்தைக் கொண்டாடுவது போன்று,
உங்களுக்கு இது மிகப்பெரிய (உன்னதமான)
தினமாகும். அவர்கள் அதிக சந்தோஷத்துடன் அதைக் கொண்டாடுகின்றனர். நீங்கள் இப்பொழுது சந்தோஷத்துடன் கொண்டாட வேண்டும். நாங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து எங்களின் ஆஸ்தியைக் கோருகின்றோம் என அனைவருக்கும் கூறுங்கள்.
இதை அறிந்தவர்கள் சந்தோஷத்துடன் கொண்டாடுவார்கள். நிலையங்களில் அவர்கள் தங்களுக்குள் சந்தித்துக்கொள்வார்கள். அனைவரும் இங்கு வரமுடியாது.
நாங்கள் பிறந்ததினத்தைக் கொண்டாடுகின்றோம். சிவபாபாவிற்கு மரணம் ஏற்படமுடியாது. சிவபாபா வந்திருப்பது போன்றே, சென்றும் விடுவார். ஞானம் முடிவடைந்ததும் யுத்தம் ஆரம்பிக்கும், அவ்வளவுதான்!
அவருக்கென ஒரு சரீரம் கிடையாது.
குழந்தைகளாகிய நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதி, முற்றிலும் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகவேண்டும். இதற்கு முயற்சி தேவை.
நீங்கள் சத்திய யுகத்தில் ஆத்ம உணர்வுடையவர்களாகவே இருக்கின்றீர்கள். அங்கு அகால மரணம் இடம்பெறாது.
இங்கே, நீங்கள் அமர்ந்திருக்கும்போதே மரணம் வந்துவிடுகிறது, உங்களுக்கு இதய வழுவல் ஏற்படுகிறது. அப்பொழுது அவர்கள் அது கடவுளின் விருப்பம் எனக் கூறுவார்கள்.
எவ்வாறாயினும், அது கடவுளின் விருப்பமன்று.
அது நாடகத்தின் நியதியென, அதாவது நாடகத்தில் அதுவே அவரது பாகம் என நீங்கள் கூறுவீர்கள். இப்பொழுது இது கலியுகம் ஆகும். புதிய உலகம் சத்திய யுகமாக இருக்கும்.
சத்திய யுகத்து மாளிகைகள் பல்வேறு வைரங்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அங்கு ஏராளமான செல்வம் நிறைந்திருக்கும். எவ்வாறாயினும், அதன் முழு விபரமும் இருக்கமுடியாது. பூகம்பங்கள் போன்றவை ஏற்படும்போது, அனைத்தும் பிளவுபட்டு, கீழே செல்கின்றன. எனவே,
நீங்கள் உங்கள் புத்தியைப் பயன்படுத்தி,
இவையனைத்தையும் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
இது புத்திக்கான உணவாகும். உங்கள் புத்தி இப்பொழுது மேல்நோக்கிச் சென்றுள்ளது.
படைப்பவரை அறிந்துகொள்வதன் மூலம் நீங்கள் படைப்பையும் அறிந்துகொள்கின்றீர்கள். முழு உலகின் இரகசியங்களும் உங்கள் புத்தியில் உள்ளது. நாடகத்தில் கடவுளே அதிமேலானவர்.
பின்னர் பிரம்மா,
விஷ்ணு, சங்கரர் ஆகியோர் உள்ளனர்.
இவர்கள் மூவரினதும் பணிகளையும், இவர்களின் பாகங்கள் என்னவென்றும் எங்களால் உங்களுக்குக் கூறமுடியும். ஜெகதாம்பாளுக்கு மிகப்பெரிய மேளா இடம்பெறுகிறது. ஜெகதாம்பாளுக்கும், ஜெகத்பிதாவிற்கும் இடையிலுள்ள உறவுமுறை என்ன?
இது எவருக்குமே தெரியாது. ஏனெனில்,
இது மறைமுகமான விடயமாகும். இங்கு அமர்ந்திருப்பவரே தாய் ஆவார். அவர் தத்தெடுக்கப்பட்டார். இதனாலேயே அவரின் படங்கள் உருவாக்கப்படுகின்றன. அவர் ஜெகதாம்பாள் என அழைக்கப்படுகின்றார். அவர் பிரம்மாவின் புதல்வியான சரஸ்வதி ஆவார்.
அவருக்குத் தாய் என்ற பட்டம் கொடுக்கப்பட்டாலும், அவர் புதல்வியே ஆவார்.
அவர் வழமையாக தனது பெயர் பிரம்ம குமாரி சரஸ்வதி என்றே கையொப்பமிடுகிறார். நீங்கள் அவரை மம்மா என்று அழைப்பதுண்டு.
பிரம்மாவை ‘தாய்’
என அழைப்பது சரியாக இல்லை.
இவையனைத்தையும் புரிந்துகொள்வதற்கும், விளங்கப்படுத்துவதற்கும் மிகச்சிறந்த சீரான புத்தி தேவை. இவை ஆழமான விடயங்களாகும். நீங்கள் யாருடைய ஆலயத்திற்குச் சென்றாலும்,
உடனடியாகவே அவர்களுடைய பணியை அறிந்துகொள்ள வேண்டும். நீங்கள் குரு நானக்கின் ஆலயத்திற்குச் செல்லும்போது,
அவர் மீண்டும் எப்பொழுது வருவார் என்பதை உடனடியாகவே அவர்களுக்குக் கூறக்கூடியதாக இருக்கவேண்டும். அந்த மக்களுக்கு எதுவுமே தெரியாது. ஏனெனில்,
அவர்கள் சக்கரத்தின் காலப்பகுதியை நீண்டதாக்கிவிட்டனர். நீங்கள் இதைப்பற்றிப் பேசலாம். தந்தை கூறுகிறார்: நான் எவ்வாறு உங்களுக்குக் கற்பிக்கின்றேன் எனப் பாருங்கள்! நான் எவ்வாறு வருகின்றேன் எனப் பாருங்கள்!
இது கிருஷ்ணரைக் குறிக்கவில்லை. மக்கள் தொடர்ந்தும் கீதையைப் படிக்கின்றனர். சிலருக்கு
18 அத்தியாயங்களும் நினைவில் இருக்கின்றது, அவர்கள் அதிகளவில் புகழப்படுகின்றனர். அவர்களில் எவராவது ஒரு சுலோகத்தைக் கூறினாலே மக்கள் அவரின் புகழ் பாடி, அவரைப் போன்ற மகாத்மா வேறு எவருமேயில்லை எனக் கூறுகின்றனர்.
தற்காலத்தில், அதிக மந்திர சக்தியும் உள்ளது. அவர்கள் அதிகளவில் சூனியம் செய்கின்றனர். உலகில் அதிகளவில் ஏமாற்றுதல்கள் இடம்பெறுகின்றன. தந்தை உங்களுக்கு அதி இலகுவான கற்பித்தல்களைக் கொடுக்கின்றார், எனினும் கற்பவர்களிலேயே அனைத்தும் தங்கியுள்ளது. ஆசிரியர் அனைவருக்கும் ஒரே விடயத்தையே கற்பிக்கின்றார், எனினும் சிலர் அதைக் கற்காவிட்டால் தோல்வியடைகின்றனர். இது நிச்சயமாக நடைபெற்றாக வேண்டும். முழு இராச்சியமும் ஸ்தாபிக்கப்பட வேண்டும். நீங்கள் ஞானத்தில் நீராடி,
ஞானத்தில் மூழ்கி,
பின்னர் தேவதைகளின் பூமியில் தேவதைகள் ஆகுகின்றீர்கள். அதாவது,
சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். இரவுக்கும் பகலுக்குமிடையிலான வேறுபாடு உள்ளது. அங்கே,
தத்துவங்கள் சதோபிரதானாக உள்ளதால், சரீரங்கள் மிகச்சரியாக(சம்பூரணமாக)
உருவாக்கப்படுகின்றன. அங்கே இயற்கை அழகு உள்ளது. அது கடவுளால் ஸ்தாபிக்கப்படும் பூமியாகும். இப்பொழுது இது அசுர பூமியாகும். சுவர்க்கத்திற்கும், நரகத்திற்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. நாடகத்தின் ஆரம்பம், மத்தி,
இறுதி பற்றிய இரகசியங்கள் இப்பொழுது நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாக உங்கள் புத்தியில் உள்ளன. தந்தை கூறுகிறார்: மிகச் சிறந்த முயற்சி செய்யுங்கள். புத்திரிகள் புதிய இடங்களுக்கு விஜயம் செய்கின்றனர்.
அங்கு, சிறந்த தாய்மார் போன்றவர்கள் இருந்தால், சேவை அங்கு விருத்தியாக்கப்பட வேண்டும். சிலர் நிலையத்திற்கு வராவிட்டால்,
அவர்கள் தங்களுக்குத் தாங்களே ஓர் இழப்பை ஏற்படுத்துகின்றனர். சிலர் கற்பதற்கு வராவிட்டால், நீங்கள் அவர்களுக்கு எழுதவேண்டும்:
நீங்கள் கற்காமலிருக்கின்றீர்கள். இதனால் உங்களுக்குப் பெரும் இழப்பேற்படும். நாளுக்கு நாள் பல ஆழமான கருத்துக்கள் தோன்றுகின்றன. இவை வைரங்களும், இரத்தினங்களும் ஆகும். நீங்கள் கற்காவிட்டால், தோல்வியடைவீர்கள். நீங்கள் அதி மேன்மையான சுவர்க்க இராச்சியத்தை இழந்துவிடுவீர்கள். நீங்கள் தினமும் முரளியைச் செவிமடுக்க வேண்டும். நீங்கள் அத்தகைய தந்தையை விட்டு விலகிச்சென்றால், நீங்கள் தோல்வியடைந்து, அதிகளவில் அழுவீர்கள் என்பதை நினைவில் வைத்திருங்கள். இரத்தக் கண்ணீர் சிந்தும்.
நீங்கள் கற்பதை ஒருபோதும் நிறுத்தக்கூடாது. எத்தனை பேர் ஒழுங்காக வருகின்றனர் என பாபா பதிவேட்டில் பார்க்கின்றார். வராதவர்கள் எச்சரிக்கை செய்யப்பட வேண்டும்.
ஸ்ரீமத் கூறுகிறது:
நீங்கள் கற்காவிட்டால் உங்கள் அந்தஸ்து அழிக்கப்படும். ஓர் இழப்பு ஏற்படும்.
இவ்வாறாக அவர்களுக்கு எழுதுங்கள்: அப்பொழுதே உங்களால் உங்கள் பாடசாலையை மிக நன்றாக ஈடேற்ற முடியும். ஒருவர் வராவிட்டால், நீங்கள் அவரை அப்படியே மறந்துவிடுவதாக இருக்கக்கூடாது. தனது மாணவர்கள் பலர் சித்தியெய்தாவிட்டால், தனது கௌரவம் போய்விடும் என்பதில் ஓர் ஆசிரியர் அக்கறை செலுத்துவார். உங்கள் நிலையத்தில் அதிக சேவை இடம்பெறவில்லை என பாபா எழுதுகின்றார். நீங்கள் தொடர்ந்தும் முழு நேரமும் தூங்குவதாக இருக்கலாம். அச்சா.
இனிமையிலும் இனிமையான,
அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய்,
தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும்,
நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- அந்தப் பழைய சரீரத்தை அலங்கரிக்காதீர்கள். எளிமையாக வாழ்ந்து, உங்களின் புதிய வீட்டிற்குச் செல்வதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்.
- தினமும் ஞானத்தில் நீராடுங்கள். கற்பதை ஒருபோதும் தவறவிடாதீர்கள்.
ஆசீர்வாதம்:
பணிவாக இருப்பதனால்
மகத்துவமானவராக இருப்பதன் மூலம் சந்தோஷத்தை அருள்பவர் ஆகி, அனைவரிடமிருந்தும் மரியாதையை பெறுவீர்களாக.
மகத்துவத்தின் அடையாளம் பணிவாகும். நீங்கள் எந்தளவிற்கு
பணிவாக இருக்கிறீர்களோ
அந்தளவிற்கு மகத்துவமாக இருக்கிறீர்கள், ஏனெனில், நீங்கள் சதா நிறைந்திருக்கிறீர்கள். ஒரு மரத்தில் எந்தளவிற்கு பழங்கள் நிரம்பி இருக்கிறதோ, அந்தளவிற்கு
அது பணிவாக இருக்கும். எனவே, பணிவே சேவை செய்கின்றது, பணிவுடையவர்கள்
அனைவரிடமிருந்தும் மரியாதையை பெறுகின்றார்கள். அகங்காரமுடையவர்களுக்கு எவரும் மரியாதை கொடுப்பதில்லை, அத்தகையவர்களிடமிருந்து அவர்கள் ஓடிச் செல்கின்றார்கள். பணிவானவர்கள் சந்தோஷத்தை அருள்பவர்கள். அனைவரும் அவர்களிடமிருந்து
சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றார்கள். அனைவரும் அவர்களை நெருங்கி வர விரும்புகின்றார்கள்.
சுலோகம்:
துக்கத்தை புறந்தள்ளுவதற்கு,
சந்தோஷமெனும் பொக்கிஷத்தை
சதா உங்களுடன் வைத்திருங்கள்.
---ஓம் சாந்தி---
மாதேஷ்வரியின் இனிமையான மேன்மையான வாசங்கள்
1.
பாடல் : குருடர்களுக்கு பாதையைக் காட்டுங்கள், அன்புள்ள கடவுளே!
‘குருடர்களுக்கு பாதையைக் காட்டுங்கள்!’ என மக்கள் பாடுவதால்,
கடவுளால் மாத்திரமே பாதையைக் காட்ட முடியும் என்று அர்த்தமாகும். இதனாலேயே மக்கள் கடவுளைக் கூவி அழைக்கின்றனர். அவர்கள் ‘பிரபுவே பாதையைக் காட்டுங்கள்’
என கூறும் போது, கடவுளே பாதையைக் காட்டுவதற்காக நிச்சயமாக அவரது அசரீரியான ரூபத்திலிருந்து சரீர ரூபத்தில் வரவேண்டியுள்ளது. அப்போது மட்டுமே அவரால் எங்களுக்கு பௌதீகமாக பாதையைக் காட்ட முடியும். இங்கு வராமல் அவரால் பாதையைக் காட்ட முடியாது. அம்மக்கள் குழப்பம் அடைந்துள்ளதால், அவர்களுக்கு பாதையை காட்ட வேண்டும் என்பதாலேயே, ‘குருடர்களுக்குப் பாதையைக் காட்டுங்கள்’
என அவர்கள் கடவுளிடம் வேண்டுகிறார்கள். அவர் படகோட்டி எனவும் அழைக்கப்படுகின்றார். அதாவது அவர் பஞ்ச தத்துவங்களினால் ஆன உலகிலிருந்து அப்பாலிருக்கும் ஆறாவது தத்துவமான பேரொளியான உலகிற்கு எங்களை அழைத்துச் செல்கின்றார்.
எனவே கடவுள் அப்புறத்திலிந்து இப்புறம் வரும் போதே அவரால் எங்களை அழைத்துச் செல்ல முடியும். எனவே அவர் தனது உலகிலிருந்து வரவேண்டும்.
ஆகையாலேயே அவர் படகோட்டி என அழைக்கப்படுகின்றார். அவர் எங்கள் படகுகளை
(ஆத்மாக்கள்) கரையேற்றுகின்றார். அவர் தன்னுடன் யோகம் செய்பவர்களைக் கரையேற்றுகிறார், விட்டுச் சென்றவர்கள் தர்மராஜிடமிருந்து தண்டனையை அனுபவம் செய்த பின்னர் விடுதலையடைகிறார்கள்.
2.
முட்கள் நிறைந்த உலகை விட்டு மலர்களின் நிழலுக்குள் செல்வோம்.
இதனை கடவுளிடம் மட்டுமே பாட முடியும். மக்கள் மிகவும் சந்தோஷமற்றிருக்கும் போது கடவுளை நினைக்கின்றனர். ‘கடவுளே முட்கள் நிறைந்த உலகிலிருந்து எங்களை மலர்களின் நிழலுக்குள் எடுத்துச் செல்லுங்கள்’.
இது நிச்சயமாக இன்னுமொரு உலகம் இருப்பதைக் காட்டுகின்றது. தற்போதய உலகம் முட்கள் நிறைந்தது என்பதை மனிதர்கள் அனைவரும் அறிவார்கள்.
அதனாலேயே மக்கள் துன்பத்தையும் அமைதியின்மையினையம் அனுபவம் செய்கிறார்கள். அதனாலேயே அவர்கள் மலர்களின் உலகத்தினை நினைவு செய்கின்றனர்.
எனவே நிச்சயமாக அத்தகைய சம்ஸ்காரங்கள் நிறைந்த மனிதர்கள் உள்ள உலகம் நிச்சயமாக இருக்க வேண்டும். துன்பமும் அமைதியின்மையும் கர்ம பந்தனத்தின் கர்மக் கணக்குகள் என்பது எங்களுக்குத் தெரியும்.
அரசர்களிலிருந்து ஆண்டிகள் வரை அனைவரும் முழுமையாக இக்கணக்குகளில் சிக்குண்டிருக்கின்றர். அதனாலேயே கடவுளே சொல்கின்றார்:
தற்போதய உலகமானது கலியுகமும், அனைத்து கர்ம பந்தனங்களினாலும் ஆக்கப்பட்டது. ஆரம்ப உலகமானது மலர்களாலான தங்க யுகமாகும்.
அந்த உலகமானது கர்ம பந்தனங்களிலிருந்து விடுபட்டதாகும். அது ஜீவன் முக்தியடைந்த தேவர்களின் இராச்சியமாகும். அவர்கள் இப்போது இல்லை. நாம்
‘ஜீவன் முக்;தி’ என்று சொல்லும் போது சரீரத்திலிருந்து விடுபட்டபட்டவர்கள் என்பது அர்த்தம் அல்ல. அவர்களுக்க சரீரம் பற்றிய உணர்வு இருக்கவில்லை.
ஆனால் சரீரத்திலிருக்கும் போதே அவர்கள் துன்பத்தை அனுபவித்ததில்லை. அதாவது அங்கே எந்த கர்ம பந்தனத்திற்கான தேவையும் இருக்கவில்லை. அவர்கள் பிறப்பெடுப்பார்கள் பின் பிரிந்து செல்வார்கள்,
அதன் பின்னர் ஆரம்பத்திலிருந்து மத்தி இறுதி வரை சந்தோஷத்தை அனுபவிப்பார்கள். எனவே ‘ஜீவன் முக்தி’ என்பது உயிருடன் இருக்கும் போதே கர்மாதீத் ஆக இருப்பதாகும்.
இந்த முழு உலகும் ஐந்து விகாரங்களால் சிக்குண்டுள்ளது. அதாவது ஐந்து விகாரங்களும் இங்கே பிரசன்னமாகியிருக்கின்றன. ஆனால் இந்த ஐந்து தீய ஆவிகளையும் எதிர்கொள்வதற்கு மக்களுக்கு போதுமானளவு சக்தி இல்லை. இதனாலேயே கடவுளே வந்து எங்களை இந்த ஐந்து தீய ஆவிகளிடமிருந்தும் விடுவித்து நமது எதிர்கால வெகுமதியான தேவ அந்தஸ்தைப் பெற வைக்கின்றார். அச்சா.
0 Comments