Header Ads Widget

Header Ads

ILANGAI TAMIL MURLI 29.12.22

 

29-12-2022  காலைமுரளி  ஓம்சாந்தி  பாப்தாதா  மதுபன்

 


Listen to the Murli audio file



சாராம்சம்:

இனிய குழந்தைகளே, ஒருவர் எவ்வளவு நற்குணங்கள் உடையவராகவோ, இனிமையானவராகவோ அல்லது செல்வந்தராகவோ இருப்பினும், நீங்கள் எவராலும் கவரப்படக் கூடாது. நீங்கள் சரீரத்தை நினைவு செய்யக் கூடாது.

கேள்வி:

ஞானத்தைப் பெற்ற குழந்தைகளின் வாயிலிருந்து தந்தையையிட்டு வெளிப்படுகின்ற இனிமையான வார்த்தைகள் என்ன?

பதில்:

பாபா! நீங்கள் வாழ்க்கை என்ற தானத்தை எங்களுக்குக் கொடுத்திருக்கின்றீர்கள். இனிய பாபா, உலக ஆரம்பம் மத்தி இறுதியின் ஞானத்தை எங்களுக்குக் கொடுத்திருப்பதன் மூலம், எங்களைச் சகல துன்பத்திலிருந்தும் நீங்கள் விடுவித்துள்ளீர்கள். அவ்வாறாயின் நாங்கள் எவ்வளவு நன்றியை உங்களுக்குத் தெரிவிக்க வேண்டும்!

கேள்வி:

இறுதியில் தந்தையை அன்றி வேறு எவராலும் ஈர்க்கப்படாதிருப்பதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

பதில்:

பாபா கூறுகின்றார்: குழந்தைகளே, பேராசையினால் உங்களிடம் மேலதிகமாக எதனையும் வைத்திருக்காதீர்கள். நீங்கள் மேலதிகமாக எதனையும் வைத்திருந்தால், அது உங்களை ஈர்ப்பதால் நீங்கள் தந்தையை நினைவு செய்ய மறந்து விடுவீர்கள்.

பாடல்:  மனமே, பொறுமையாயிரு! உனது சந்தோஷ நாட்கள் வரவுள்ளன

ஓம் சாந்தி. குழந்தைகளாகிய உங்களுக்குப் பொறுமையைக் கொடுப்பது யார்? குழந்தைகளின் புத்தி விரைவில் எல்லையற்ற தந்தையிடம் செல்கின்றது. இந்த நேரத்தில் மாத்திரமே குழந்தைகளாகிய உங்கள் புத்தி அவரிடம் செல்கின்றது. உண்மையில், பலரது புத்தியும் எல்லையற்ற தந்தையிடம் செல்கின்றது. ஆனால் இது சங்கமயுகம் என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள். தந்தை வந்திருந்தாலும், இந்த நேரத்தில் அனைவருமே அதனை அறிவார்கள் என்றில்லை. குழந்தைகள் தந்தைக்குச் சொந்தமாகியிருந்தால், அவர்களால் அதனைப் புரிந்து கொள்ள முடியும். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்பொழுது தந்தையைத் தெரியும். பாபா வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் 5000 வருடங்களின் முன்னர் உங்களுக்குக் கொடுத்த உங்கள் எல்;லையற்ற ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற சுவர்க்கம் என்ற ஆஸ்தியைக் கொடுக்கவே வருகின்றார். அவர் எல்லையற்ற தந்தையாக இருப்பதுடன், அவர் உங்களுக்கு கற்பிக்கவும் செய்கின்றார். கடவுள் அதாவது தந்தை பேசுகின்றார், அதாவது, அவர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் உங்களுக்கு என்ன கற்பிக்கின்றார்? நீங்கள் இப்பொழுது தந்தையின் நேர்முன்னிலையில் அமர்ந்திருப்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். பாபா சமயநூல்கள் போன்ற எதனையும் கற்கவில்லை. இந்த தாதாவே அவற்றைக் கற்றிருக்கின்றார். அவர் சர்வசக்திவானான ஞானக்கடல் என்று அழைக்கப்படுகின்றார். அவரே கூறுகின்றார்: நான் வேதங்களையும், சமயநூல்களையும் மிக நன்றாக அறிந்துள்ளேன். அவை அனைத்தும் பக்தி மார்க்கச் சம்பிரதாயங்கள் ஆகும். அவை என்னால் உருவாக்கப்பட்டவை அல்ல. அந்த சமயநூல்கள் போன்றவற்றை எப்பொழுதிலிருந்து கற்கின்றீர்கள் என நீங்கள் அவர்களிடம் வினவினால், அவர்கள் கூறுகின்றார்கள்: அவை தொன்றுதொட்ட காலத்திலிருந்து தொடர்ந்துள்ளன. தந்தை கூறுகின்றார்: எனக்கு எவரும் கற்பிப்பதும் இல்லை, எனக்கு ஒரு தந்தையும் இல்லை. ஏனைய அனைவரும் தமது தாயின் கருப்பையிற்குள் பிரவேசித்து ஒரு தாயின் பராமரிப்பைப் பெறுகின்றார்கள். நான் ஒரு தாயின் பராமரிப்பைப் பெறுவதற்கு, ஒரு தாயின் கருப்பைக்குள் பிரவேசிப்பதில்லை. மனித ஆத்மாக்களே ஒரு கருப்பைக்குள் பிரவேசிக்கின்றார்கள். சத்தியயுகத்தைச் சேர்ந்த இலக்ஷ்மி நாராயணனனுமே ஒரு கருப்பைக்குள் பிரவேசித்தே பிறப்பெடுத்தார்கள். ஆகையால், அவர்களும் மனிதர்களே. மிகச்சரியாக முன்னைய கல்பத்தைப் போன்றே, நான் வந்து, இச் சரீரத்திற்குள் பிரவேசிப்பது நாடகத்தின் திட்டமாகும். வேறு எவரும் இவ்விடயங்களை அறிய மாட்டார்கள். வேறு எவருக்கும் சக்கரத்தின் காலயெல்லையேனும் தெரிய மாட்டாது. தந்தை இங்கமர்ந்திருந்து விளங்கப்படுத்துகின்றார்: நான் உங்கள் தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவேன். இந்த பாபாவே தனது சொத்தை உங்களுக்குக் கொடுப்பவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். பாபா சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்கவே வந்துள்ளார். அவர் உங்களுக்கு நரக இராச்சியத்தைக் கொடுக்க மாட்டார். எல்லையற்ற தந்தை உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார் என்பது உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும். தந்தையே சுவர்க்கத்தைப் படைப்பவர் ஆவார். அவர் கூறுகின்றார்: எனது வழிகாட்டல்களைப் பின்பற்றுங்கள். நான் உங்களைச் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆக்குகின்றேன். பின்னர், துவாபரயுகத்திலிருந்து நீங்கள் இராவணனின் கட்டளைகளைப் பின்பற்றுகின்றீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் முக்திக்காக அல்லது சற்கதிக்காக மனித வழிகாட்டல்களைப் பெற மாட்டீர்கள். அதற்கான தேவையும் அங்கிருக்க மாட்டாது. கலியுகத்திலேயே மனிதர்கள் முக்திக்காகவும் சற்கதிக்காகவும் வழிகாட்டல்களைக் கேட்கின்றார்கள். தாம் எப்பொழுதோ சுவர்க்கத்தில் இருந்தோம் என்பதையும், அப்பொழுது தூய்மையாக இருந்தோம் என்பதையும் மக்கள் அறிந்திருப்பதாலேயே அவர்கள் கூவியழைக்கின்றார்கள்: தூய்மையாக்குபவரே! சற்கதியை அருள்பவரே! எங்களுக்குச் சற்கதி அருளுங்கள்! சத்தியயுகத்தில் மக்கள் இதற்காக அழுவதில்லை. பாபா இப்பொழுது வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் இராஜயோகத்திற்காகவும், இலகு ஞானத்திற்காகவும் மிக எளிமையான வழிகாட்டல்களை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவரிடமிருந்து வருகின்ற வழிகாட்டல்களே ஸ்ரீமத்தாகும். கடவுளே அதிமேலானவர். அவரைவிட மேலானவர் எவரும் இல்லை. அவர் எங்கள் ஆன்மீகத் தந்தையாவார். அவர் எங்கள் ஆன்மீகத் தந்தை என்பதால், அவர் ஆத்மாக்களுக்கு மாத்திரமே ஞானத்தைக் கொடுக்கின்றார். லௌகீகக் குழந்தைகளுக்குத் தமது லௌகீகத் தந்தையிடமிருந்து பௌதீகப் பொருட்களைப் பற்றிய அறிவே கிடைக்கின்றன. ஆகையால் தந்தை கூறுகின்றார்: ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகி, தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் பௌதீகமான எதனையும் நினைவு செய்யக் கூடாது. நீங்கள் ஆத்மாக்கள். மனிதர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும், அவர்கள் செல்வந்தராக இருந்தாலும், இனிமையாக இருந்தாலும் நீங்கள் சரீரதாரிகளை நினைவு செய்யக் கூடாது. நீங்கள் ஒரேயொரு பரமாத்மாவான பரமதந்தையை மாத்திரமே நினைவு செய்ய வேண்டும். செல்வந்தர் ஒருவரின் குழந்தை, தனது லௌகீகத் தந்தையை மாத்திரமே நினைவு செய்வார். அவர் காந்திஜியையோ, சாஸ்திரிஜியையோ நினைவு செய்ய மாட்டார். மக்கள் பெரும்பாலும் பரமாத்மாவான பரமதந்தையையே நினைவு செய்கின்றார்கள். அடுத்ததாக, சிலர் இலக்ஷ்மி நாராயணனை நினைவு செய்கின்றார்கள். ஏனையோர் இராதை கிருஷ்ணரை நினைவு செய்கின்றார்கள். அவர்கள் முற்காலத்தில் வாழ்ந்தவர்கள் என்றும், அவர்களின் வரலாறும் புவியியலும் உள்ளது என்றும் அவர்கள் புரிந்து கொண்டிருக்கின்றார்கள். அதிமேலானவர் தந்தையே ஆவார். அவர் நிச்சயமாக மீண்டும் வருவார். உலக வரலாறும், புவியியலும் மீண்டும் இடம்பெறும். கலியுகத்தின் பின்னர் சத்தியயுகம் வரும். எவ்வாறாயினும், குழந்தைகளாகிய உங்களை அன்றி, வேறு எவருக்கும் இது தெரியாது. மக்கள் கூற வேண்டும் என்பதற்காக வெறுமனே வரலாறும் புவியியலும் மீண்டும் இடம்பெறும் என்று கூறிய போதிலும் அவர்கள் எதனையும் புரிந்து கொள்ளவில்லை. முன்னர், நீங்களும் அவ்வாறே இருந்தீர்கள். உண்மையிலேயே இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியம் இருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருந்தீர்கள், ஆனால் எவ்வளவு காலத்திற்கு அது நீடித்தது, அதற்கு என்ன நடந்தது அல்லது அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. இப்பொழுது நீங்கள் அனைத்தையும் வரிசைக்கிரமமாக மிக நன்றாகக் கிரகித்து, ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றீர்கள். அதுவும் நல்லதே. உங்கள் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்களினால் நீங்கள் உதவுகின்றீர்கள். நீங்கள் ஞானத்தினாலும் யோகத்தினாலும் பலருக்கும் நன்மை செய்து உதவுவீர்கள். சிவசக்தி சேனையாகிய நீங்கள் இரட்டை அகிம்சைவாதிகள். உங்களுக்குள் எந்த வன்முறையும் இல்லை. நீங்கள் எவருக்கும் துன்பம் விளைவிப்பதில்லை. வன்முறை என்றால் துன்பம் விளைவிப்பதாகும். ஒருவரைத் தள்ளுதல், வாளைப் பயன்படுத்துதல் அல்லது காமவாளைப் பயன்படுத்துதல் அனைத்துமே துன்பம் விளைவித்தலாகும். நீங்கள் எத்தகைய துன்பத்தையும் விளைவிக்காததாலேயே, அகிம்சையே அதிமேலான தர்மம் என்று கூறப்படுகின்றது. மனிதர்கள் அனைவரும் வன்முறையைப் பிரயோகிக்கின்றார்கள். இது இராவண இராச்சியமாகும். ஸ்ரீகிருஷ்ணரின் செயற்பாடுகளில் அவர்கள் வன்முறையைச் சித்தரித்துள்ளார்கள். ஸ்ரீகிருஷ்ணர் ஓர் இளவரசராக இருந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். ஸ்ரீகிருஷ்ணர் அத்தகைய நடத்தையைக் கொண்டிருத்தல் அல்லது அத்தகைய வாழ்க்கைச் சரிதத்தைக் கொண்டிருத்தல் என்ற கேள்விக்கே இடமில்லை. தெய்வீகச் செயற்பாடுகள் கடவுளுடையவை ஆகும். அவர் இரத்தின வியாபாரியும், வியாபாரியும், ஞானக்கடலும், மந்திரவாதியும் ஆவார். ஆஹா அவ்வாறாயின், அசரீரியான பரமாத்மாவினால் எவ்வாறு பேரம் பேச முடியும்? மனிதர்களே வியாபாரிகளாக இருக்க முடியும். அவர் ஒரு வியாபாரியாகவும் ஓர் இரத்தினவியாபாரியாகவும் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அனைவருமே அவரை ஏன் நினைவு செய்கின்றார்கள்? தூய்மையாக்குபவரே! அனைவருக்கும் சற்கதி அருள்பவரே, துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவரே - இப்புகழ் அனைத்தும் ஒருவருக்கே உரியதாகும். இப்புகழ் சூட்சும உலகைச் சேர்ந்த எவருக்குமோ அல்லது பௌதீக உலகைச் சேர்ந்த எவருக்குமோ உரியதாக இருக்க முடியாது. இப் புகழ் அசரீரி உலகைச் சேர்ந்தவருக்கே உரியது. தந்தையே அதிமேலானவர், ஆத்மாக்களாகிய நாங்கள் அவருடைய குழந்தைகள். நாங்கள் அனைவரும் எங்கள் பாகங்களை நடிப்பதற்கு வரிசைக்கிரமமாக இங்கே வருகின்றோம். தந்தை கூறுகின்றார்: நான் உங்களுக்குக் கொடுக்கின்ற அந்த ஞானம் பின்னர் மறைந்துவிடுகின்றது. அவ்வாறான கீதைகள் பல உள்ளன. இருப்பினும், பழைய கீதை மீண்டும் வெளிப்படும். நீங்கள் பயன்படுத்துகின்ற தாள் மீண்டும் தோன்ற மாட்டாது. கீதை பல மொழிகளில் உள்ளது. அனைத்திலும் அதிமேலானது கீதையாகும். ஆனால் அவை அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. அவை மிகச்சரியானவை அல்ல. ஆகையாலேயே அவர்கள் அனைவரும் காரிருளில் உள்ளனர். ஆகையாலேயே ஞான சூரியன் உதிக்கும் போது, இருள் அகல்கின்றது என்று கூறப்படுகின்றது. இது பௌதீக சூரியனுக்கான புகழ் அல்ல, இது ஞான சூரியனுக்கான புகழாகும். இந்தச் சூரியன்; சூரிய ஒளியைக் கொடுக்கின்றது, கடலானது, நீரைக் கொடுக்கின்றது. அவர்கள் பெயர்களைக் கலந்துள்ளார்கள். ஞானக்கடலே ஞானசூரியன் என்றும் அழைக்கப்படுகின்றார். உங்கள் இருள் எவ்வாறு அகற்றப்படுகின்றது என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நீங்கள் மாத்திரமே உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிவீர்கள். படைப்பவரின் பாகத்தை நீங்கள் அறிந்திருப்பதால், நீங்கள் ஏனையோரின் பாகத்தையும் அறிந்திருக்க வேண்டும். நீங்கள் இப்பொழுது ஞானத்தைப் பெறுகின்றீர்கள். இந்த பாபா மிகவும் அன்பானவர் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர் எங்களுக்கு வாழ்க்கை என்ற தானத்தைக் கொடுத்து எங்களைத் துன்பத்திலிருந்து விடுவிக்கின்றார். அவர் எங்களை மரணத்தின் பிடியிலிருந்து பாதுகாத்துள்ளார். ஒரு நபர் மரணிப்பதிலிருந்து பாதுகாக்கப்படும் போது, வைத்தியர் அவருக்கு வாழ்க்கை என்ற தானத்தைக் கொடுத்துள்ளார் என்று அவர்கள் கூறுகின்றார்கள். நீங்கள் வாழ்க்கை என்ற தானத்தை ஒருமுறை மாத்திரமே பெறுகின்றீர்கள். உங்களுக்கு இன்னார் வாழ்க்கை என்ற தானத்தைக் கொடுத்தார் என்று கூறுமளவிற்கு நீங்கள் என்றுமே நோய்வாய்ப்பட மாட்டீர்கள். இது முற்றிலும் புதியதொரு விடயமாகும். நீங்கள் இப்பொழுது உயிருள்ள போதே தந்தைக்கு உரியவர்களாக இருக்கின்றீர்கள். மாயையான இராவணன் சிலரைத் தன்பால் ஈர்க்கின்றான். அவர்களுக்கு, இராவணன் என்ற வடிவில் மரணம் அவர்களை தின்று விட்டது என்று கூறப்படுகின்றது. அவர்கள் கடவுளின் மடிக்கு வருகின்றார்கள், பின்னர் மாறி, அசுரனின் மடிக்குச் சென்று விடுகின்றார்கள். மரணம் அவர்களை உண்ணவில்லை, அவர்கள் உயிருள்ள போதே கடவுளுக்கு உரியவர்கள் ஆகிய பின்னர் உயிருள்ள போதே அசுரனுக்கும் உரியவர்கள் ஆகுகின்றார்கள். அவர்கள் இங்கே தர்மம் நிறைந்தவர்கள் ஆகுகின்றார்கள், ஆனால் அங்கே சென்று அதர்மம் நிறைந்தவர்கள் ஆகுகின்றார்கள். இங்கே, சங்கமயுகத்தில், இது தர்மம் நிறைந்த இராச்சியமாகும், ஆனால் அங்கே, அது அதர்மம் நிறைந்த இராச்சியமாகும். சத்தியயுகத்தில் ஒரேயொரு தர்மம் மாத்திரமே உள்ளது. கலியுகத்தில், கௌரவர்களின் இராச்சியமான அதர்ம இராச்சியமே உள்ளது. பாண்டவர்களுடன் கிருஷ்ணரும் இருந்தார் என்று கூறப்படுகின்றது. உங்களுடன் சிவபாபா இருக்கின்றார். சூதாடுதல் என்ற கேள்விக்கு இடமில்லை. இராச்சியம் கௌரவர்களுடையதும் அல்ல, பாண்டவர்களுடையதும் அல்ல. தந்தை வந்து தர்மம் நிறைந்த இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார். மக்கள் இராம இராச்சியம் வேண்டும் என்று விரும்புகின்றார்கள். ‘நாங்கள் சுவர்க்க வாசிகள் ஆகவேண்டும்ஆயின், இது நரகம் என்றே அர்த்தமாகும். எவ்வாறாயினும், மக்களிடம் நீங்கள் நரகவாசிகள் என்று நேரடியாகக் கூறினால், அவர்கள் குழப்பம் அடைவார்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். எல்லையற்ற தந்தை அசரீரியானவர். எல்லையற்ற தந்தை மாத்திரமே கடவுள் என்று அழைக்கப்படுகின்றார். எல்லைக்குட்பட்ட தந்தையர்களைக் கடவுள் என்று அழைக்க முடியாது. கிருஷ்ணரைத் தூய்மையாக்குபவரான ஞானக்கடல் என்று அழைக்க முடியாது. பிராமணர்களாகிய உங்களுக்கு மாத்திரமே அவருடைய புகழ் தெரியும். தந்தை வந்து உங்களைத் தனக்குச் சமமானவர் ஆக்குகின்றார். தந்தைக்கும் தெரியும், குழந்தைகளாகிய உங்களுக்கும் தெரியும். லௌகீகக் குழந்தைகள் தமது ஆஸ்தியை லௌகீகத் தந்தையிடமிருந்து பெறுவதைப் போன்று, நீங்களும் உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அவை அனைத்தும் வித்தியாசமானவை. இங்கே, நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து உங்கள் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள் என்பதைப் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். தாம் அனைவரும் எல்லையற்ற தந்தையிடமிருந்து தமது ஆஸ்தியைப் பெறுவதற்காக வந்திருக்கின்றோம் என்று கூறுகின்ற ஒரு பாடசாலையோ அல்லது ஓர் ஆன்மீக ஒன்றுகூடலோ இல்லை. தந்தை இங்கே உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கின்றார். அவர் கூறுகின்றார்: நீங்கள் சாதாரண மனிதரில் இருந்து நாராயணன் ஆகுவீர்கள். அது நிச்சயமாகச் சங்கமயுகத்திலேயே இடம்பெறும். அதாவது, அது கலியுக இறுதியும், சத்தியயுக ஆரம்பமுமான சங்கமத்தின் போதாகும். அதன் பின்னர் நீங்கள் முயற்சி செய்து, சாதாரண மனிதரில் இருந்து நாராயணன் ஆகுவீர்கள். நாங்கள் ஒரு சாதாரண மனிதரில் இருந்து நாராயணன் ஆகுவதற்கும், ஒரு சாதாரண பெண்ணிலிருந்து இலக்ஷ்மி ஆகுவதற்காகவுமே பாபாவுடன் இவ் இராஜயோகத்தைக் கற்கின்றோம். அவர்கள் நரன் (சாதாரண மனிதர்), நாராயணன் இருவருக்குமே ஆலயங்கள் கட்டுகின்றார்கள். அவர்கள் அவருக்கு நான்கு கரங்களைக் காட்டியுள்ளார்கள், ஏனெனில், அவர்கள் (இலக்ஷ்மியும் நாராயணனும்) இணைந்திருக்கின்றார்கள். பெண்ணான இலக்ஷ்மிக்கு ஆலயம் இல்லை. அவர்கள் பெண்ணான இலக்ஷ்மியைத் தீபாவளியன்று அழைக்கின்றார்கள். அவர்கள் அவரை மகாலக்ஷ்மி என்று அழைக்கின்றார்கள். நான்கு கரங்கள் இல்லாது இலக்ஷ்மியின் சிலையை உங்களால் காண முடியாது. அவர்கள் வழிபடுவது விஷ்ணுவின் இணைந்த வடிவமாகும். ஆகையாலேயே அவர்கள் நான்கு கரங்களைக் காட்டியுள்ளார்கள். தந்தை மாத்திரமே இவ்விடயங்கள் அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். மக்கள் எதனையும் அறிய மாட்டார்கள். அவர்கள் தொடர்ந்தும் கடவுளைத் தேடி அலைந்து தடுமாறித் திரிகின்றார்கள். கடவுள் மேலே இருக்கும் போது, அவரை இங்கே தேடித்திரிந்து அலைவதில் என்ன பயன்? ஆலயத்தில் உள்ள கிருஷ்ணரின் படத்தை அவர்கள் ஏன் தமது வீடுகளில் வைத்து வழிபடுவதில்லை? அவர்கள் விசேடமாக ஏன் ஆலயங்;களுக்குச் செல்கின்றார்கள்? அவர்கள் ஆலயங்களுக்குச் செல்கின்றார்கள், அங்கு பணம் கொடுக்கின்றார்கள், தானம் செய்கின்றார்கள். அவர்கள் தமது சொந்த வீடுகளில் யாருக்குத் தானம் செய்ய முடியும்? அந்தச் சம்பிரதாயங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கானதாகும். தந்தை கூறுகின்றார்: படங்கள் எதனையும் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. சிவபாபாவின் படத்தை வைத்தால் மாத்திரமா உங்களால் அவரை அறிந்து கொள்ள முடியும்? அவரின் படத்தை வைத்தால் மாத்திரமா உங்களால் அவரை நினைவு செய்ய முடியும்? ஒரு லௌகீகத் தந்தை உயிருடன் இருக்கும் போது, அவரது குழந்தைகள் அவரது படத்தை ஏன் வைத்திருக்க வேண்டும்? தந்தை உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கும் போது, நீங்கள் படத்தை வைத்து என்ன செய்யப் போகின்றீர்கள்? வயதான சிலர் பாபாவை நினைவு செய்ய மறந்து விடுவதால், அவர்களுக்குப் படம் கொடுக்கப்படுகின்றது. எவ்வாறாயினும் நீங்கள் தொடர்ந்தும் சரீரதாரிகளை நினைவு செய்தால், இறுதியிலும் அவர்களையே நினைவு செய்வீர்கள். அங்கே ஈர்ப்பு இருந்தால், அவர்கள் உங்களைத் துரத்திக் கொண்டிருப்பார்கள். அப்பொழுது நீங்கள் எத்தனை சிவபாபாவின் படங்களை வைத்திருந்தாலுமே, நீங்கள் வேறொன்றினால் ஈர்க்கப்பட்டால், நீங்கள் நிச்சயமாக அதனையே நினைவு செய்வீர்கள். ஆகையாலேயே தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, முற்றிலும் பற்றை வென்றவர்கள் ஆகுங்கள். நீங்கள் எதன் மீதாவது பற்றுக் கொண்டிருந்தால், நீங்கள் இரண்டு அல்லது நான்கு சோடிச் சப்பாத்துக்களை வைத்திருந்தால், நீங்கள் அவற்றையே நினைவு செய்வீர்கள். ஆகையாலேயே, அளவுக்கு அதிகமாகப் பொருட்களை சேர்க்காதீர்கள் என்று உங்களிடம் கூறப்படுகின்றது. அவ்வாறாயின், உங்கள் புத்தி அப்பொருட்களினால் ஈர்க்கப்படும். ஒரேயொரு தந்தையை அன்றி வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள். சிலர் நல்ல ஆடைகள், இரண்டு அல்லது நான்கு சோடிச் சப்பாத்துகள், ஒரு கைக்கடிகாரம், பணம் போன்றவற்றிற்காக பேராசை கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் அவற்றை வைத்திருந்தால் அவற்றையே நீங்கள் நினைவு செய்வீர்கள். உங்களிடம் என்ன உள்ளது என்பதை பாபா அறிந்திருக்க வேண்டும். உண்மையில், நீங்கள் எதனையுமே வைத்திருக்கக் கூடாது. உங்களுக்குக் கொடுக்கப்பட்டவற்றை மாத்திரமே உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாபாவை அன்றி வேறு எதனையும் நீங்கள் நினைவு செய்யக்கூடாது. இந்தளவிற்கு நீங்கள் பயிற்சி செய்தால் மாத்திரமே உங்களால் உலக அதிபதிகள் ஆக முடியும். இராதையும் கிருஷ்ணரும் உலக அதிபதிகளாக இருந்தார்கள் என்பதை எவருமே புரிந்து கொள்ளவில்லை. அவர்கள் முன்னர் பாரதத்தை ஆட்சி செய்தார்கள், அதாவது யமுனை நதிக் கரையில் அவர்களுடைய மாளிகைகள் இருந்தன என்று மட்டுமே அவர்கள் கூறுகின்றார்கள். எனினும், அவர்கள் முழு உலகினதும் அதிபதிகளாக இருந்தார்கள். இது உங்கள் புத்தியில் மாத்திரமே உள்ளது. எல்லையற்ற தந்தை உங்களையும் எல்லையற்ற அதிபதிகள் ஆக்கவே வந்துள்ளார். பிரஜைகளுக்கும் அரசர்களுக்கும் இடையில் அதிகளவு வேறுபாடு உள்ளது. நீங்கள் சாதாரண மனிதரில் இருந்து நாராயணன் ஆகுவதற்கே இங்கே வந்திருக்கின்றீர்கள். ஆகையால் நீங்கள் முழுமையாகப் பின்பற்ற வேண்டும். நீங்கள் யாசிப்பவரில் இருந்து செல்வந்தராக மாற வேண்டும். நீங்கள் அந்தளவிற்கு முயற்சி செய்ய வேண்டும். சந்தோஷமாகக் கற்றிடுங்கள். அச்சா

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:

  1. அனைவருக்கும் ஞானத்தினாலும் யோகத்தினாலும் உதவுங்கள். இரட்டை வன்முறை அற்றவர்கள் ஆகுங்கள். எவருக்கும் துன்பம் விளைவிக்காதீர்கள்.
  2. பற்றை வென்றவர்கள் ஆகுங்கள். உங்கள் புத்தி எதனாலும் ஈர்க்கப்படக்கூடாது. சதா ஒரேயொரு தந்தையின் நினைவில் நிலைத்திருக்க பயிற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:

நினைவு செய்வதையும், சேவை செய்வதையும் அத்திவாரமாகக் கொண்டிருந்து, சக்திமிக்கவர்கள் ஆகி, மாயையை வென்றவர்கள் ஆகுவீர்களாக.
உங்கள் பிராமண வாழ்வின் அத்திவாரம் நினைவு செய்வதும் சேவை செய்வதுமாகும். நினைவு செய்தல் மற்றும் சேவை செய்வது என்ற அத்திவாரம் பலவீனமாக இருந்தால், உங்கள் பிராமண வாழ்க்கை சிலவேளைகளில் விரைவாகவும், சில வேலைகளில் மெதுவாகவும் இருக்கும். நீங்கள் ஒத்துழைப்பைப் பெறும் போதும், உங்களுக்கு சகவாசம் இருக்கும் போதும், சரியான சூழ்நிலை அமையும் போதும், நீங்கள் தொடர்வீர்கள், தவறினால் நீங்கள் பின்வாங்குவீர்கள். ஆகையாலேயே உங்கள் நினைவிலும், நீங்கள் செய்யும் சேவையிலும் விரைவான வேகம் இருக்க வேண்டும். நினைவும், சுயநலமற்ற சேவையும் இருக்கும் போது, மாயையை வெற்றி கொள்பவர் ஆகுவது மிக இலகுவாகும் அத்துடன் ஒவ்வொரு செயலிலும் நீங்கள் வெற்றி ஈட்;டுவீர்கள்.

சுலோகம்:

சகல சக்திகளும் நிறைந்தவர்கள் மாத்திரமே தடைகளை வென்றவர்கள் ஆகுகிறார்கள்.

 

---ஓம் சாந்தி---

Download PDF

Post a Comment

0 Comments