28-12-2022 காலைமுரளி ஓம்சாந்தி பாப்தாதா மதுபன்
Listen to the Murli audio file
சாராம்சம்:
இனிய குழந்தைகளே, நீங்கள் எல்லையற்ற தந்தையுடன் மிகவும் உயர்ந்த கல்வியைக் கற்கின்றீர்கள். நீங்கள் தூய்மையாக்குபவராகிய, தந்தையான கடவுளின் மாணவர்கள் என்பதும், நீங்கள் புதிய உலகிற்காகக் கற்கின்றீர்கள்
என்பதும் உங்கள் புத்தியில் உள்ளன.
கேள்வி:
எக்குழந்தைகள் ஆன்மீக அரசாங்கத்திடமிருந்து ஒரு பரிசைப் பெறுகின்றார்கள்?
பதில்:
ஏனைய பலரையும் தமக்குச் சமமாக்குகின்ற முயற்சியைச்
செய்பவர்கள். சேவைக்கான அத்தாட்சியைக் காட்டுபவர்களுக்கு ஆன்மீக அரசாங்கத்தினால் மிகப்பெரிய பரிசு கொடுக்கப்படுகின்றது. அவர்கள் எதிர்கால 21 பிறவிகளுக்கு ஒரு மேன்மையான அந்தஸ்திற்கான உரிமையைப் பெறுகின்றார்கள்.
ஓம் சாந்தி.
தந்தை குழந்தைகளுக்குக் கூறுகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளாகிய நீங்கள் இக்கல்வியை என்னுடன் கற்கின்றீர்கள். இக்கல்வி புதிய உலகிற்கானதாகும். தாம் புதிய உலகிற்காகக் கற்பதாக வேறு எவராலும் கூற முடியாது. நீங்கள் எந்தளவிற்குத் திறமையாகக் கற்கின்றீர்களோ, அந்தளவிற்கு
21 பிறவிகளுக்கான உங்கள் வெகுமதி சேமிக்கப்படுகின்றது. நீங்கள் எல்லையற்ற தந்தையுடன் ஓர் எல்லையற்ற கல்வியைக் கற்கின்றீர்கள். இது ஒரு மிகவும் மேன்மையான, எல்லையற்ற கல்வியாகும். ஏனைய அனைவரும் சில சதங்கள் பெறுமதி வாய்ந்த கல்வியைக் கற்கின்றார்கள். இந்த எல்லையற்ற கல்வியில் நீங்கள் மேலும் அதிக முயற்சி செய்தால், உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவீர்கள்.
உங்கள் புத்தியில் இவ்விடயங்கள் எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும்:
நாங்கள் தூய்மையாக்குபவராகிய, தந்தையான கடவுளின் மாணவர்கள், நாங்கள் புதிய உலகிற்காகக் கற்கின்றோம். ஆகவே நீங்கள் கற்பதற்காக அத்தகைய நல்ல முயற்சியைச் செய்ய வேண்டும்: நாங்கள் தந்தையிடம் சென்று பின்னர், தனிப்பட்ட முறையில் கற்றுக் கொள்வதற்கேற்ப, புதிய உலகில் ஓர் அந்தஸ்தைக் கோருவோம்.
அந்தக் கல்விகள் லௌகீகமானவை, இது பரலோகக் (ஆன்மீகக்)
கல்வி ஆகும்.
அதாவது, அப்பாலுள்ள உலகிற்கான கல்வியாகும்.
இவ்வுலகம் பழையதும்,
தூய்மையற்றதும் ஆகும்.
நீங்கள் நரகவாசிகளிலிருந்து சுவர்க்கவாசிகளாக மாறுகின்றீர்கள் என்பதை அறிவீர்கள்.
நீங்கள் இதனை மீண்டும் மீண்டும் நினைவுசெய்ய வேண்டும்,
ஏனெனில் அப்பொழுது மாத்திரமே உங்கள் புத்தியின் சந்தோஷம் அதிகரிக்கும். குழந்தைகள் திருமணம் போன்றவற்றிற்குச் செல்லும்பொழுது, மறந்து விடுகின்றார்கள். இந்தக் கல்வியை நீங்கள் ஒருபொழுதும் மறந்து விடக்கூடாது. உண்மையில்,
நீங்கள் எதிர்கால
21 பிறவிகளுக்கு உலக அதிபதிகள் ஆகுகின்றீர்கள் என்று மேலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். ஏனைய பிறரையும் தங்களுக்குச் சமமாக்குபவர்கள் நிச்சயமாக ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுவார்கள்.
இவ் இரகசியங்கள் வேறு எவரின் புத்தியிலும் இருக்க முடியாது. சேவை செய்வதற்கு விவேகம் தேவையாகும்: பல துறைகள் உள்ளன.
சிலைட்டுக்களைத் தயாரிப்பவர்கள் அவற்றை ஒரே அளவிலும், சகல புரொஜெக்டர்களுக்கும் பொருத்தமானவையாகவும் தயாரிக்க வேண்டும் என்றும் பாபா கூற வேண்டும்.
முதலாவதாகத் தயாரிக்கின்ற சிலைட், ‘பரமாத்மாவான பரமதந்தையுடனான உங்கள் உறவுமுறை என்ன?’
என்பதாக இருக்க வேண்டும். தமது தந்தை பரமாத்மாவான பரமதந்தையே என்பதை அவர்கள் அப்பொழுது புரிந்துகொள்வார்கள். அவரிடமிருந்து நீங்கள் என்ன ஆஸ்தியைப் பெறுவீர்கள்?
அதன்பின்னர் திரிமூர்த்தி பிரம்மாவினூடாக நீங்கள் சூரிய வம்ச அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள் என்பதையும் காட்டுங்கள்.
நீங்;கள் புதிய உலகிற்கான முயற்சியையும் செய்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது சங்கம யுகத்தில் இருந்தவாறு, தூய உலகை உருவாக்குகின்றீர்கள். 5000 வருடங்களின் முன்னர் நாங்கள் உண்மையிலேயே தேவர்கள் ஆகினோம் என்பதையும், பின்னர் எங்கள் இராச்சியத்தை இழந்தோம் என்பதையும் இப்பொழுது உங்கள் புத்தி நினைவுகூருகின்றது. இப்பொழுது அவர்கள் பெறுகின்ற அனைத்து இராச்சியங்களும் எல்லைக்குட்பட்ட விடயங்களாகும். உங்களுடையது எல்லையற்ற யுத்தமாகும்.
ஸ்ரீமத்திற்கு ஏற்ப,
நீங்கள் இப்பொழுது ஐந்து விகாரங்களான,
இராவணனுடன் யுத்தம் செய்கின்றீர்கள். வெற்றி,
தோல்வி என்ற பாகங்கள் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டவை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நாடகச் சக்கரம்
5000 வருடங்களுக்கு ஒருமுறை சுழல்கின்றது. ஆகவே குழந்தைகளாகிய நீங்கள் ஒவ்வொருவரும் பெறுகின்ற வழிகாட்டல்களுக்கு ஏற்ப,
ஸ்ரீமத்தைப் பின்பற்ற வேண்டும். சில குழந்தைகள் தம்மால் புரிந்துகொள்ள முடிகின்றது என்றும், ஆனால் தங்களால் பிறருக்கு விளங்கப்படுத்த முடியவில்லை என்றும் கூறுகின்றார்கள். அது நீங்கள் எதனையும் புரிந்துகொள்ளவில்லை என்று கூறுவதைப் போன்றதாகும். நீங்கள் எந்தளவிற்குப் புரிந்து கொண்டுள்ளீர்கள் என்பதற்கேற்பவே, ஓர் அந்தஸ்தைப் பெறுகின்றீர்கள். உங்கள் புத்தியில் சுயதரிசனச் சக்கரத்தைத் தொடர்ந்தும் சுழலச் செய்யுங்கள்.
நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகுகின்றீர்கள். பிறரை உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்காதுவிடின், நீங்கள் சேவை செய்பவர்கள் அல்ல.
ஆகவே நீங்கள் முழு முயற்சி செய்ய வேண்டும்.
நீங்கள் பிறருக்கும் கற்பிக்க வேண்டும்.
பிராமண ஆசிரியர்கள் அனைவருடனும் முயற்சி செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் பெருமளவு முயற்சி செய்யும்பொழுது மாத்திரமே ஒரு பரிசைப் பெறுகின்றார்கள். நீங்கள் மிகவும் மகத்துவமான அரசாங்கத்திடமிருந்து ஒரு பரிசைப் பெறுகின்றீர்கள். நீங்கள் செய்கின்ற சேவைக்கான அத்தாட்சியைக் கொடுக்க வேண்டும்.
நீங்கள் தவறுகள் செய்யக்கூடாது. இங்கே,
ஒரே வகுப்பில் அனைத்துப் பாடங்களையும் கற்கின்றீர்கள். எதிர்காலத்தில் நீங்கள் சென்று,
தேவர்கள் ஆகுவீர்கள் என்பதை அறிவீர்கள்.
விநாசம் நிச்சயமாக இடம்பெற வேண்டும்.
முன்னைய கல்பத்தில் நீங்கள் சுவர்க்கத்தின் கட்டடங்களைக் கட்டியதைப் போன்றே மீண்டும் கட்டுவீர்கள். நாடகமும் உதவுகின்றது. அங்கே,
அவர்கள் பெரிய மாளிகைகளையும், பெரிய சிம்மாசனங்களையும் கட்டுவார்கள்.
இங்கே தங்கத்திலும்,
வெள்ளியிலுமான அத்தகைய பெரிய மாளிகைகள் இல்லை. அங்கே,
வைரங்களும், இரத்தினங்களும் கற்களைப் போன்றிருக்கும். பக்தியில் பல்வேறு வைரங்களும், இரத்தினங்களும் உள்ளன, எனவே சத்திய யுக ஆரம்பத்தில் அவர்களிடம் என்னவெல்லாம் இருந்திருக்கும்? செல்வந்தர்கள் இராதை,
கிருஷ்ணர், இலக்ஷ்மி,
நாராயணன் போன்றோரின் சிலைகளை அதிகளவு அலங்கரிக்கின்றார்கள். அவர்கள் அவற்றைத் தங்க ஆபரணங்களினால் அலங்கரிக்கின்றார்கள். ஒரு தொழிலதிபர் தான் இலக்ஷ்மி நாராயணனுக்கு ஓர் ஆலயம் கட்டுவதாகவும், அந்தச் சிலைகளுக்குப் புதிய நகைகள் வேண்டும் என்றும் வினவியதை பாபா நினைவுகூருகின்றார். அந்த நேரத்தில்,
அனைத்தும் மிகவும் மலிவாக இருந்தது.
ஆகவே, சத்திய யுகத்தில் என்னவெல்லாம் இருந்திருக்கும்? பக்தி மார்க்கத்தில் பல பொக்கிஷங்கள் இருந்தன,
பின்னர் அவை அனைவராலும் கொள்ளையடிக்கப்பட்டன. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அனைத்தையும் அறிவீர்கள். இது மிகவும் மேன்மையானதொரு கல்வியாகும். நீங்கள் இதனை இளைய குழந்தைகளுக்கும் கற்பிக்க வேண்டும். லௌகீகக் கல்வியுடன், இக்கல்வியும் கொடுக்கப்பட வேண்டும்.
தொடர்ந்தும் பிறருக்குச் சிவபாபாவை நினைவூட்டுங்கள். படங்களை விளங்கப்படுத்துங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் நன்மை செய்யுங்கள். சிவபாபாவே சுவர்க்கத்தைப் படைக்கின்றார். நீங்கள் சிவபாபாவை நினைவுசெய்தால், சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள்.
இந்த அழிவற்ற ஞானம் என்றுமே அழிக்கப்படுவதில்லை. பிறருக்கு இந்த ஞானத்தில் சிறிதளவைக் கொடுத்தாலுமே அவர்கள் இராச்சியத்திற்குள் வருவார்கள். சத்திய யுகத்தில், இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமே இருந்தது. பின்னர் அது எங்கே சென்றது? நாங்கள் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றோம், அதாவது,
நாங்கள் உங்களை அந்தச் சுவர்க்கத்திற்கு அதிபதிகள் ஆக்குவோம் என்பதே அதன் அர்த்தமாகும். அதனை நீங்கள் அவர்களுக்குக் கற்பிப்பதால், அவர்கள் கற்பார்கள். நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் பயனற்ற விடயங்களில் உங்கள் நேரத்தை வீணாக்கக்கூடாது. தவறு செய்வதால், பெருமளவு மனம் வருந்த வேண்டி ஏற்படும்.
ஒரு லௌகீகத் தந்தை செல்வத்தைச் சம்பாதித்;து,
அதனைக் குழந்தைகளுக்காக விட்டுச் செல்கின்றார்.
இப்பொழுது, அனைவரும் அழிக்கப்பட உள்ளார்கள்.
இப்பொழுதும், அதிகளவு சண்டை, யுத்தமும் இடம்பெற்று, தொடர்ந்தும் மரணங்கள் இடம்பெறுகின்றன. இதில் எதுவுமில்லை.
விநாசம் பற்பல மில்லியன் கணக்கில்;
இடம்பெறும். அனைத்தும் எரிந்து, முடிவடைந்து விடும். இது ஓர் இடுகாடாகி,
அதன்பின்னர் தேவதைகளின் பூமி ஆகும்.
இடுகாடு பெரியது,
ஆனால் தேவதைகளின் பூமியோ சிறிதாகவே இருக்கும். அனைவரும் எவ்வாறு புதைக்கப்படுவார்கள் என்று இஸ்லாமியர் பேசுகின்றார்கள். குதா
(கடவுள்) வந்து,
அனைவரையும் விழித்தெழச் செய்து, பின்னர் அனைவரையும் தன்னுடன் அழைத்துச் செல்கின்றார்.
இந்த நேரத்தில்,
ஆத்மாக்கள் அனைவரும் ஏதோவொரு வடிவில் இருக்கின்றார்கள். சரீரங்கள் இடுகாட்டில் உள்ளன,
ஆனால் ஆத்மாக்கள் சென்று, வேறு சரீரங்களை எடுக்கின்றனர். இந்த நேரத்தில்,
மாயை அனைவரையும் இடுகாட்டில் இட்டுள்ளாள்;
அனைவரும் மரணித்து விட்டனர். அனைவருமே அழிக்கப்பட உள்ளதால்,
நீங்கள் எவர் மீதும் உங்கள் இதயத்தில் பற்று வைக்கக்கூடாது. உங்கள் இதயத்தை நீங்கள் ஒரேயொருவருடன் மாத்திரமே இணைக்க வேண்டும்.
இறுதியில் உங்கள் பற்று அனைத்தும் முடிவடையும். நீங்கள் ஒரேயொரு தந்தையை நினைவுசெய்ய வேண்டும்.
அவ்வளவே! உங்கள் எதிர்கால 21 பிறவிகளுக்காக, தூய்மையாக்குபவரான தந்தையுடன் நீங்கள் இக்கல்வியைக் கற்கின்றீர்கள் என்பதைப் புரிந்துகொண்டிருக்கின்றீர்கள். பரமாத்மாவான பரமதந்தையே உலகின் விதையாவார், அவர் உணர்வுள்ளவர். ஒவ்வோர் ஆத்மாவும் உணர்வுள்ளவரே.
ஓர் ஆத்மா ஒரு சரீரத்திற்குள் பிரவேசிக்கும் வரையில்,
அந்தச் சரீரம் உயிரற்றது, ஆனால் ஆத்மாவோ உயிருள்ளவர் ஆவார். இந்த ஆத்மா இப்பொழுது ஞானத்தைப் பெற்றுள்ளார்.
ஒவ்வோர் ஆத்மாவிலும் அவரது சொந்தப் பாகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் செயற்பாடும் தனிப்பட்டதாகும். நாடகம் அற்புதமானது.
அது இயற்கையின் அற்புதம் என்று கூறப்படுகின்றது. அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மாவில் அத்தகைய பெரியதொரு பாகம் பதிவுசெய்யப்பட்டுள்ளது! பரமாத்மா அமர்ந்திருந்து, உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற, இந்த ஆன்மீக விடயங்கள் அனைத்தும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டவை. அவர் உங்களை ஒரு சுற்றுலாவிற்கும் அழைத்துச் செல்கின்றார். நாடகத்தில் நிச்சயிக்கப்பட்ட அனைத்தினதும் காட்சியை அவர் தொடர்ந்தும் உங்களுக்குக் கொடுக்கின்றார். நாடகம் அநாதியாக நிச்சயிக்கப்பட்டிருப்பினும், அது அநாதியானது என்பதை மக்கள் அறியாதுள்ளார்கள். நீங்கள் அனைத்தையும் அறிந்திருக்கின்றீர்கள். எது நடந்தாலும், ஒரு விநாடிக்குப் பின்னர் அது கடந்ததாகி விடுகின்றது. கடந்தவை அனைத்துமே நாடகத்தில் இருந்தவை என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். சத்திய யுகத்திலிருந்து என்ன பாகங்கள் இருந்தன என்பதைத் தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியுள்ளார். இவ்விடயங்களை இவ்வுலகம் அறிய மாட்டாது. தந்தை கூறுகின்றார்: எனது புத்தியில் உள்ள ஞானத்தை நான் உங்களுக்குக் கொடுக்கின்றேன். நான் உங்களை எனக்குச் சமமானவர்கள் ஆக்குகின்றேன். முழு உலகமும் சீரழிந்துள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பொழுது நீங்கள் முதலில் தூய்மையாகி. அதன்பின்னர் பிறரையும் தூய்மையாக்க வேண்டும். உங்களை அன்றி, வேறு எவராலும் எவரையுமே தூய்மையாக்க முடியாது.
நீங்கள் இப்பொழுது தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். நீங்கள் மிகவும் இனிமையாகப் பேச வேண்டும்.
உங்கள் உதடுகளிலிருந்து எந்தக் கசப்பான வார்த்தைகளும் வெளிவரக்கூடாது. அனைவர் மீதும் கருணை கொண்டிருங்கள். நீங்கள் அனைவருக்கும் கடவுளின் வாசகங்களைக் கற்பிக்க முடியும்:
“மன்மனபவ”. யார் கடவுள் என்பதோ அல்லது அவர் கீதையை எப்பொழுது பேசினார் என்பதோ அவர்களுக்குத் தெரியாது.
நீங்கள் இப்பொழுது கடவுளின் வாசகங்களைப் புரிந்துகொள்கிறீர்கள்: சரீரமற்றவர்கள் ஆகுங்கள். அனைத்துச் சரீர சமயங்களையும் துறந்திடுங்கள்: நான் இஸ்லாமியன், நான் பார்சி: இவ்வாறு கூறுபவர் யார்?
ஆத்மாக்கள் அனைவரும் சகோதரர்கள், ஒரேயொரு தந்தையின் குழந்தைகள்.
ஆத்மாக்களான நீங்கள் உங்களுடைய சகோதரர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்:
தந்தை கூறுகின்றார்:
சதா என்னை மாத்திரமே நினைவுசெய்தால், நீங்கள் முக்தி தாமத்திற்குச் செல்வீர்கள்.
அனைவருமே நிர்வாணா உலகிற்குச் செல்லவுள்ளனர். நீங்கள் இவ்விரு வார்த்தைகளையும் நினைவுசெய்து,
அவற்றை அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.
அனைவரினதும் கடவுள் ஒரேயொருவரே. அவர் கிருஷ்ணராக இருக்க முடியாது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்து,
சதா என்னை மாத்திரமே நினைவுசெய்யுங்கள். ஒவ்வோர் ஆத்மாவும் சடப்பொருளின் ஆதாரத்தை எடுத்து, இங்கே ஒரு பாகத்தை நடிக்கின்றார். கிறிஸ்து இப்பொழுது ஒரு யாசகர் வடிவில் இருப்பதாகக் கிறிஸ்துவைப் பற்றிக் கூறப்படுகின்றது. அனைவரது சப்பாத்தும்
(சரீரம்) இப்பொழுது பழையதாகி உள்ளது.
கிறிஸ்துவும் நிச்சயமாக இப்பொழுது மறுபிறவி எடுத்துள்ளார்; அவர் இப்பொழுது தனது இறுதிப் பிறவியில் இருப்பார். தந்தை வந்து, அந்தத் தூதர்களையும் விழித்தெழச் செய்கின்றார். ஒரேயொரு தந்தை மாத்திரமே தூய்மையற்றவர்களைத் தூய்மையாக்குகின்றார். அனைவருமே நிச்சயமாக மறுபிறவி எடுக்கும்பொழுது, கீழிறங்க வேண்டும். இப்பொழுது இது கலியுகத்தின் இறுதியாகும். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும் பொழுது,
மக்கள் இதனை ஏற்றுக் கொள்வார்கள்.
தந்தை வந்துள்ளார் என்ற ஓசை வெளிப்படும். மகாயுத்தத்தில் கடவுளின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் அவர்கள் அப்பெயரை மாற்றி விட்டார்கள்.
விநாசமும், ஸ்தாபனையும் கடவுளின் பணி மாத்திரமே. தந்தையே வந்து, சுவர்க்க வாயில்களைத் திறக்கின்றார். நீங்கள் அவரைக் கூவியழைக்கின்றீர்கள்: பாபா,
வாருங்கள்! வந்து,
வைகுந்தத்தின் வாயில்களைத் திறந்திடுங்கள்! தந்தை வந்து, உங்களின் மூலமே வாயில்களைத் திறக்கின்றார். சிவசக்தி சேனை என்று உங்கள் பெயர் புகழப்படுகின்றது. நீங்கள் பாண்டவர்கள் என்று ஏன் அழைக்கப்படுகின்றீர்கள்? ஏனெனில்,
நீங்கள் ஆன்மீக வழிகாட்டிகள் என்பதுடன்,
நீங்களே அனைவருக்கும் சுவர்க்கத்திற்கான பாதையைக் காட்டுகின்றீர்கள். தந்தை இங்கமர்ந்திருந்து, அனைத்துச் சமயநூல்களினதும் சாராம்சத்தை விளங்கப்படுத்துகின்றார். முன்னைய கல்பத்தில் இவ்விடயங்களைப் புரிந்துகொண்டுள்ளவர்களே இப்பொழுதும் புரிந்துகொள்வார்கள். ஆத்மாக்களான நாங்களே வழிகாட்டிகள்,
நாங்கள் அனைவரையும் அமைதி தாமத்திற்கு அழைத்துச் செல்வோம்,
பின்னர் அவர்கள் சந்தோஷ தாமத்திற்குச் செல்ல வேண்டும்.
இத்துன்ப உலகம் அழிக்கப்பட வேண்டும் இதுவே அதற்கான மகாபாரத யுத்தம் ஆகும். சகல விபரங்களும் உங்கள் புத்தியில் உள்ளன.
“மன்மனபவ, மத்தியாஜிபவ”-
இதற்குள் முழு ஞானமும் அடக்கப்பட்டுள்ளது. பாபா ஞானம் நிறைந்தவராக இருப்பதைப் போல், குழந்தைகளாகிய நீங்களும் அவ்வாறே ஆகுகின்றீர்கள். பாபா தெய்வீகக் காட்சிகளுக்கான திறவுகோலைத் தன்னுடனேயே வைத்துள்ளார். உங்களுக்கு அந்தத் திறவுகோலைக் கொடுப்பதற்குப் பதிலாக,
நான் உங்களை உலக அதிபதிகள் ஆக்குகின்றேன். நான் அவ்வாறு ஆகுவதில்லை.
இதில் வேறுபாடு உள்ளது. தெய்வீகக் காட்சிகளுக்கான பாகமும் உங்களுக்குப் பயன்படுகின்றது. உங்கள் நம்பிக்கைக்கும், பக்திக்குமான பிரதிபலனைக் கடவுள் கொண்டைக் கடலை வடிவில் உங்களுக்குக் கொடுக்கின்றார். ஜெகதாம்பாளிற்கு எவ்வாறு அதிகளவு மேலாக்கள் இடம்பெறுகின்றன என்று பாபா விளங்கப்படுத்தியுள்ளார். இலக்ஷ்மிக்கு அந்தளவிற்கு மேலாக்கள் இருப்பதில்லை. அதிகளவு வேறுபாடு உள்ளது!
மக்கள் தாம் செல்வத்தைப் பெறுவார்கள் என்ற நம்பிக்கையுடன் தமது பொக்கிஷப் பெட்டிக்குள் இலக்ஷ்மியின் படத்தை வைக்கின்றார்கள். பக்தி மார்க்கத்தில் நீங்கள் கொண்டைக் கடலையைப் பெறுகின்றீர்கள், ஆனால் ஞானத்திலோ நீங்கள் வைரங்களைப் பெறுகின்றீர்கள். மக்கள் இலக்ஷ்மியிடம் செல்வத்தை வேண்டுகின்றார்கள். அவரிடம் அவர்கள் ஒரு குழந்தையையோ, நல்ல ஆரோக்கியத்தையோ வேண்டுவதில்லை. ஜெகதாம்பாளிடம் மக்கள் சகல ஆசைகளுடனும் செல்கின்றார்கள். நீங்கள் பூஜிக்கத் தகுதியானவர்களாக இருந்தீர்கள் எனவும்,
இப்பொழுது பூஜிப்பவர்களாகி விட்டீர்கள் எனவும்,
பின்னர் பூஜிக்கத் தகுதியானவர்கள் ஆகுவீர்கள் எனவும் குழந்தைகளான நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். குழந்தைகளான நீங்கள் இப்பொழுது ஞானோதயம் பெற்றுள்ளீர்கள். நீங்கள் மிகவும் தனித்துவமானவர்களாகி விட்டீர்கள்.
சற்குரு உங்களுக்கு ஞானத் தைலத்தைக் கொடுக்கும்பொழுது, உங்கள் இருள் முழுவதும் அகல்கின்றது. நீங்கள் இப்பொழுது நாடகத்தின் ஆரம்பம், மத்தி,
இறுதியை அறிவீர்கள்.
நீங்கள் எவ்வாறு இக்கல்விக்கு அதிகளவு பெறுமதி கொடுக்க வேண்டும் என்பது உங்கள் புத்தியில் பிரவேசித்துள்ளது! நீங்கள் அக்கல்விகளைப் பிறவிபிறவியாகக் கற்றிருக்கின்றீர்கள், நீங்கள் எதனைப் பெற்றீர்கள்?
கொண்டைக் கடலையை.
இக்கல்வியை நீங்கள் ஒரு பிறவியில் கற்பதால், வைரங்களையும்,
இரத்தினங்களையும் பெறுகிறீர்கள். முயற்சி செய்ய வேண்டியது குழந்தைகளாகிய உங்களின் கடமையாகும்.
நீங்கள் கற்காதுவிடின் ஆசிரியரால் என்ன செய்ய முடியும்?
இங்கே கருணை என்ற கேள்விக்கு இடமில்லை. தேவர்களின் முழு இராச்சியமும் சங்கம யுகத்தின்பொழுதே ஸ்தாபிக்கப்படுகின்றது. உங்கள் பாவங்களை நீங்கள் யோக சக்தியின் மூலமும், ஞான சக்தியின் மூலமும் அழிக்கின்றீர்கள், அதாவது,
ஞானத்தினூடாக நீங்கள் மிகவும் மேன்மையானவர் ஆகுகின்றீர்கள். ஞானக் கடலிலும், ஞான ஆறுகளிலும் நீராடுவதால்,
நீங்கள் சற்கதியைப் பெறுகின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களுக்குப் பிறருக்கு விளங்கப்படுத்துவதற்கான திறமையான வழிமுறைகள் தொடர்ந்தும் கொடுக்கப்படுகின்றன. நாடகத்தின் திட்டத்திற்கு ஏற்ப,
பாபா தான் முன்னைய கல்பத்தில் விளங்கப்படுத்திய விடயங்களை உங்களுக்குத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகள் வரிசைக்கிரமமாகத் தொடர்ந்தும் இங்கே வருகின்றார்கள். பிராமணக் குலம் வளர வேண்டும்.
குழந்தைகளாகிய நீங்கள் மகாதானிகளாக வேண்டும்.
உங்களிடம் வருகின்ற அனைவருக்கும் ஏதோ ஒன்றைத் தொடர்ந்தும் விளங்கப்படுத்துங்கள். நீங்கள் சங்கையும் ஊத வேண்டும். இங்கே உங்களால் கிரகிக்க முடிகின்ற அளவிற்கு,
உங்களால் வீட்டில் கிரகிக்க முடியாது.
மதுவனமே புல்லாங்குழல் (முரளி) வாசிக்கப்படுகின்ற இடம் என்று சமயநூல்களில் புகழப்பட்டுள்ளது. அச்சா.
இனிமையிலும் இனிமையான,
அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய்,
தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும்,
நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
- இக்கல்விக்குப் பெருமளவு மதிப்பளியுங்கள். நீங்கள் கருணை போன்றவற்றைத் தந்தையிடம் வேண்டக்கூடாது. தொடர்ந்தும் ஞான, யோக சக்திகளைச் சேமியுங்கள்.
- கருணை நிறைந்தவர் ஆகுங்கள். உங்கள் உதடுகளினூடாகக் கசப்பான வார்த்தைகளை வெளிவிடாதீர்கள். எப்பொழுதும் இனிமையாகப் பேசுங்கள். நிச்சயமாகப் பிறரை உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்குகின்ற சேவையைச் செய்யுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஓர்
உண்மையான தபஸ்வியாக
இருந்து, விகாரங்கள்
எனும் பாம்பை
உங்கள் கழுத்து
மாலை ஆக்குவீர்களாக.
மக்களுக்கு ஐந்து விகாரங்களும் நச்சுப் பாம்பைப் போன்றவை, ஆனால் யோகி, தபஸ்வி ஆத்மாக்களாகிய உங்களுக்கு இந்தப் பாம்பு உங்கள் கழுத்து மாலை ஆகுகின்றது. இதனாலேயே பிராமணர்களாகிய உங்களினதும்,
தந்தை பிரம்மாவினதும்
சரீரமற்ற, தபஸ்வி சங்கரர் ரூபத்தின் ஞாபகார்த்தத்தில்
ஒரு பாம்பைக் கழுத்து மாலையாகச் சித்தரித்துள்ளார்கள். பாம்பு நீங்கள் சந்தோஷத்தில் நடனமாடுவதற்கான மேடை ஆகுகின்றது; அவர்கள் இதனைத் தங்கியிருத்தலின் ஓர் அறிகுறியாகக்
காட்டியுள்ளார்கள். உங்கள் ஆன்மீக ஸ்திதியே (பௌதீக) மேடையாகும். விகாரங்களின் மீது நீங்கள் அத்தகைய வெற்றியை அடையும்பொழுதே, ஓர் உண்மையான தபஸ்வி ஆத்மா என்று அழைக்கப்படுவீர்கள்.
சுலோகம்:
பழைய உலகிற்கும், பழைய சம்ஸ்காரங்களிற்கும் மரணிப்பதே, மரணித்து வாழ்வதாகும்.
---ஓம் சாந்தி---
0 Comments